“பிளீஸ் ஆன் பண்ணாதிங்க. அப்பறம் நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சுடும்” என்று உளறியவள் சட்டென்று வாயை மூடிக் கொள்ள,

“வாட்? என்ன சொன்ன? திரும்ப சொல்லு” என்றான் தீரன்.

“இல்ல..அது..வந்து” என்று திணறியவளுக்கு, அவன் மேல் தான் கோபம் வந்தது.

“மொபைலைக் குடுக்க முடியுமா முடியாதா?” என்றாள் சற்று கோபமாய்.

“தர்றேன் தர்றேன்” என்றவன், அங்க சின்ன ஷெட் மாதிரி இருக்கே? அது என்னாது?” என்றான்.

“அது ரூம் தான்” என்றாள்.

“அங்க வா தர்றேன்” என்றவன் இருளில் அவளையும் இழுத்துக் கொண்டு செல்ல, எலிவேஷனுக்காக அமைக்கப்பட்டிருந்த அந்த சிறிய கண்ணாடி அறை மிக அழகாக இருந்தது. கிரானைட் கல்லில் சிட்டிங் பென்ச் போட்டு வெளியே இருந்து படர்ந்திருந்தது அழகுக்காக வைக்கப்பட்டிருந்த கொடிகள். அவை கண்ணாடியை மறைத்து ஒரு பச்சைப் போர்வை போல் இருக்க, அவன் ரசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த அறையின் லைட்டை அவள் பட்டென்று ஆப் செய்திருந்தாள்.

அவள் செய்கையில் எரிச்சல் அடைந்தவன்,

“அங்கிள் ரொம்ப ரசனையான ஆளு தான்” என்று எண்ணிக் கொண்டான்.

“ஆமா..! இன்னைக்கு பௌர்ணமி. ஆனா உங்க வீட்டு மொட்டை மாடி மட்டும் ஏன் இருட்டா இருக்கு?” என்றான்.

“சுத்தி இவ்வளவு மரம் இருந்தா எப்படி இருக்கும்?” என்றவளுக்கு நோக்கமெல்லாம் அவன் கையிலிருந்த போனில் தான் இருந்தது.

“இப்போ ஏன் லைட் ஆப் பண்ண?” என்றவனின் குரல் மாற்றத்தில் அதிர்ந்தவள்,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. யாராவது பார்த்துட்டா. பிளீஸ் என் போனை குடுங்க” என்றாள்.

“சரி தர்றேன். பட் ஒன் கண்டிஷன். ஒரு ஐ லவ் யு சொல்லிட்டு வாங்கிக்க” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“என்ன விளையாடுறிங்களா?” என்றாள் இயலாமையுடன்.

“விளையாடனும்னு ஆசை தான். எங்க நீதான் ஆட்டத்துக்கு வர மாட்டேங்குறியே?” என்று மார்க்கமாய் உரைத்தவனின் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு நிதானம் இருக்கவில்லை அவளுக்கு.

“ஜஸ்ட் ஒரு ஐ லவ் யு சொல்லிட்டு வாங்கிக்கோ” என்றான்.

அவனை முறைத்தபடி பட்டென்று அவன் கையிலிருந்த போனை பிடுங்கியவள்,

“நான் எப்படி சொல்ல முடியும். நான் தான் தாரிக்கை” என்று அவள் முடிக்கவில்லை. அவளின் இதழ்களை தனக்குள் இழுத்து முற்றுகையிட்டிருந்தான் அதி தீரன். உயிரைக் குடிக்கும் அந்த ஒற்றை முத்தம் அவன் அன்பின் வெளிப்பாடு. அவன் தவிப்பின் வெளிப்பாடு. அவன் அக்கறையின் வெளிப்பாடு. அவள் மேல் கொண்ட காதலின் வெளிப்பாடு. உணர்வின் பிடியில் நின்றிருந்தவனுக்கு சுவாசத்திற்கு ஏங்கியவளின் நிலை புரிய அவளை விடுவித்தவன்,

“இன்னொரு தடவை உன் வாயில இருந்து பேச்சுக்  கூட தாரிக் பேர் வரக் கூடாது. நீ வேணும்னா முட்டாளா இரு. ஆனா என்னையும் சேர்த்து முட்டாளாக்கப் பார்க்காத” என்றான் இறுகிப் போன குரலில்.

அவள் கண்ணீருடன் அதிர்ந்து நிற்க, தன்னிடமிருந்த போர்டப்பில் ஜாமரை எடுத்தவன் அதை ஆன் செய்துவிட்டு அவளிடம் மொபைலுக்காக கையை நீட்டினான்.

அவள் பயத்துடன் பார்க்க,

“எல்லா சிக்னலும் கட் ஆகிடும். சோ யாருக்கும் எதுவும் தெரியாது. போனை குடு” என்றான். அவனிடம் கொடுத்தவள் அவன் முகம் பார்க்க விரும்பாது திரும்பிக் கொண்டாள்.

போனை ஆன் செய்து ஆராய்ந்தவன், வாட்சப்பில் வந்திருந்த வீடியோவைப் பார்க்க, பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததும் அவள் கூனிக் குறுகி விட்டாள்.

அன்று ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. ஏற்கனவே வெளியான வீடியோவிற்கு பிறகான இரண்டு நிமிட வீடியோ தான் அது. அதில் ரூபனின் முகமும் தெளிவாக தெரிய, வந்த கோபத்தை அடக்கிக் கொண்டான் தீரன். சிறிதும் பிளர் இல்லாமல் தெளிவாக இருந்தது வீடியோ. ரூபனும், மொழியும் தெரிந்தே ஒரு உறவுக்குத் தயாராவதைப் போல் இருந்தது வீடியோ. உண்மையும் அது தானே. அவர்கள் தான் செயற்கையாய் தூண்டப்பட்டிருந்தார்களே!

வேகமாய் துடித்த இதயத்தை நிதானித்து சரி படுத்தியவன் மொழியைப் பார்க்க அவளோ அவனுக்கு முதுகு காட்டி கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஒரு யோசனையுடன் வேகமாய் அவள் போனை அக்கு வேறாய் ஆணி வேறாய் பார்த்து முடித்திருந்தான். ஜாமரை ஆப் செய்தவன், அனைத்தையும் தன் செல்லுக்கு அனுப்பி விட்டு, தனக்கு அனுப்பிய தடம் தெரியாமல் அழித்து விட்டான். அந்த வீடியோக்களை அனுப்பியிருந்த எண்ணையும் குறித்துக் கொண்டான். அவளின் போனை அணைத்து வைத்தவன், நிதானமாய் யோசிக்கத் துவங்கினான்.

தனக்கு முகம் காட்ட மறுத்து அமர்ந்திருந்தவள் அழுகையில் கரைவது புரிந்தது அவனுக்கு.

“மொழி” என்றவனின் குரலுக்கெல்லாம் அவள் அசையவே இல்லை. அந்த அறையின் விளக்கைப் போட்டவன்,

“இப்போ நிமிரப் போறியா இல்லையா?” என்றான் ஒரு அதட்டலுடன்.

அழுது வீங்கிய முகத்துடன் நிமிர்ந்தவள் வேகமாய் லைட்டை ஆப் செய்ய, அவனோ மீண்டும் ஆன் செய்தான்.

“பிளீஸ்” என்றாள் கலங்கிய கண்களுடன்.

“இங்க வா” என்றவன் கைகளை நீட்ட,

“மாட்டேன்” என்று தலையை ஆட்டியவளை,

“வாடின்னா” என்று அசால்ட்டாய் இழுத்தவன் தனக்குள் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“நீ இப்படி அழுது வடிஞ்சுட்டே இருந்தா, இது மாதிரி இன்னும் பத்து வீடியோ அனுப்புவான். அப்போ என்ன பண்ணுவ?” என்றான் பொறுமையான குரலில்.

“உங்களுக்கு என்னோட பீலிங்ஸ் புரியாது. என்னோட பயம் புரியாது. ஏன்னா நீங்க போலீஸ்” என்றாள் கமரிய குரலில்.

“ஏன்? போலீஸ்னா பீலிங்க்ஸ் இருக்காதா என்ன? அதுக்காக நானும் உன்கூட சேர்ந்து அழனுமா இப்போ?” என்றான்.

“உங்களுக்கு என்னோட நிலைமை புரியாது?” என்றாள் கோபமாய்.

“இசிட்? அப்படியா? வாஸ்தவம் தான். உன்னோட நிலைமை எனக்கு புரியாது” என்று அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“எனக்குப் புரியலை சரி, உனக்கு உன்னோட நிலைமை புரியுதா?” என்றான் கேள்வியாய்.

அவள் எதுவும் பேசாமல் தரையைப் பார்க்க,

“சொல்லுடி..! புரியுதான்னு கேட்டேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“என் நிலைமை புரிஞ்சதால தான் உயிரோடவே இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணேன். அதையும் நீங்க தான் கெடுத்திங்க” என்றாள் கண்ணீருடன்.

“அடிச்சேன்னா பல்லெல்லாம் பேந்துடும்..இன்னொரு தடவை நினைப்புல கூட அந்த எண்ணம் வரக் கூடாது” என்று திமிறியவளை மீண்டும் அணைத்துக் கொண்டவன்,

“என்னதான் படிச்சு இன்டிபெண்டன்ட்டா,தைரியமா இருந்தாலும் பெண்கள் டிராப் ஆகுற ஒரே விஷயம் இது தான். தைரியமா காட்டிகிட்டாலும்  கேரக்டர் அசாசினேஷன்ன்னு வரும் போது அதை ஓவர் கம் பண்ணி வர்ற லேடிஸ் ரொம்ப கம்மி தான். எப்பேர் பட்ட புத்திசாலி பொண்ணுங்களும் முட்டாளாகுற ஒரே இடம் இது தான். நீயும் இதுக்கு விதிவிலக்கு இல்ல” என்று ஆற்றாமையுடன் பேசியவன்,

“எனக்கு புரியுமான்னு கேட்ட தானே? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ மொழி, கண்டிப்பா நீ ஒரு பிளாக் மெயிலர் கிட்ட மாட்டியிருக்கேன்னு எனக்கு எப்பவோ தெரியும். எந்த பக்கமும் நீ எதுவும் செய்ய முடியாம அவன் உன்னை லாக் பண்ணியிருக்குறதும் எனக்கு நல்லாவே தெரியும். இவ்வளவு ஏன்? இன்னைக்கு நான் கேட்டப்போ சொன்னியே? உங்கப்பா போன்ல பேசவும் தான் ஹோட்டலுக்கு போனேன்னு. அதுவும் பொய்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ தாரிக்கை லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து, கடைசியா மேரேஜ் பண்ணனும்னு கமிஷனர் ஆபீஸ் வந்தது வரைக்கும் நீயா எதுவும் செய்யலை, செய்ய வைக்கப்பட்டிருக்கன்னு எனக்கு தெளிவா தெரியும். சொல்லு எனக்கா உன்னை புரியாது?” என்றான் அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து.

அவனின் வார்த்தைகளில் உறைந்து நின்றவள்,”நீங்க என்ன சொல்றிங்க? எனக்கு புரியலை” என்றாள் தடுமாற்றத்துடன்.

“மொழிக்கே நான் பேசுன மொழி புரியலையோ? இல்ல வேற மாதிரி பேசித் தான் புரிய வைக்கணுமா?” என்றவன் அவள் இதழ்களை வருட, அவளுக்கோ அதெல்லாம் கவனத்தில் இல்லை.

“தீரா” என்றவளின் அழைப்பில் சிலிர்த்தவன்,

“பர்ஸ்ட் டைம் மேடம் என் பேரை சொல்றிங்க? வேற லெவல் பீலிங்கா இருக்கே எனக்கு?” என்றான் சற்று இலகு மனநிலையுடன்.

“நீங்க சொன்னதெல்லாம் உங்க கற்பனை. நான் உங்களுக்கு ஆப்ட்டான பொண்ணு கிடையாது. நா..நான் எல்லாத்துக்கும் பயப்படுற ஒரு சாதரணமான பொண்ணு. எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியாத ஒரு கோழை” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள முயற்சி செய்ய, அவளால் அது முடியவில்லை. அவளின் முகத்தை இறுகப் பற்றியிருந்தான் தீரன்.

“அப்படியா? ஆனா மேடம் செஞ்சதெல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே? கொஞ்சம் புத்திசாலி மாதிரியும் தெரிஞ்சதே?” என்றான் சிரிப்புடன்.

அவள் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க,

“என்னடி நான் என்ன பிட் அடிச்சா ஐபிஎஸ் பாஸ் பண்ணேன்னு நினைக்கிற? என்று சிரித்தவன்,

“அந்த ஹோட்டலுக்கு நீ தெரிஞ்சே தான் போனேன்னு எனக்குத் தெரியும். என் கணிப்பு கரெக்ட்டுனா, சென்னையில இருந்து கிளம்பும் போதே உனக்கு அங்க போறதுக்கான ஆர்டர் வந்திருக்கும். அதனால தான் கார்ல வரும் போது நீ எதையோ பறிகொடுத்த மாதிரியே வந்தேன்னும் எனக்குத் தெரியும். இன்பேக்ட் நான் எப்படியும் உன்னை தேடி ஹோட்டலுக்கு வந்துடுவேன்னும் உனக்குத் தெரியும். நான் வரணும்னு தான பர்சையும் போனையும் டாக்டர் தாரா ரூம்லயே விட்டுட்டு வந்த?” என்றான் புருவத்தை உயர்த்தி.

அவள் விழிகளை விரித்தபடி இருக்க,

“சென்னையில இருந்து கோயம்புத்தூர் போகும் போது உன் மொபைல் பாஸ்வேர்ட் எனக்குத் தெரியனும்னு தான என் முன்னாடி அத்தனை தடவை லாக் பண்ணி பண்ணி அன்லாக் பண்ண? வாயைத் திறக்க முடியாத உன்னோட சூழ்நிலையிலையும் சின்ன சின்ன விஷயம் மூலமா நீயே தான் எனக்கு க்ளூ குடுத்தன்னு எனக்கு நல்லாத் தெரியும் மொழிமா” என்றவனின் கண்களில் வழிந்த காதலைக் கண்டு கொண்டவளுக்கு மீண்டும் கண்ணீர் வர, அதைத் துடைத்து விட்டவன்,

“ஆனா அங்க உனக்கு ட்ரக்ஸ் இன்ஜெக்ட் பண்ணுவாங்கன்னு நீயே எதிர்பார்க்கலை. அதுக்கு மேல நடந்த எதையும் உன்னால தாங்க முடியலை. அதான் உன்னோட டிப்ரஷன் எல்லாம் சேர்ந்து உன்னை இப்படி பேச வைக்குது. உனக்கு இப்பவும் என் மேல நம்பிக்கை இல்லை. அதான் என்கிட்ட ஷேர் பண்ண அவ்வளவு பயம்?” என்றான் அமைதியான குரலில்.

“ஏசிபி அது நான்” என்றவளின் இதழ்களை மூடியவன்,

“நீ என்கிட்ட எதுவும் சொல்லனும்னு அவசியம் இல்லை. இப்ப வரைக்கும் நீ சொல்லியா இவ்வளவு விஷயம் கண்டு பிடிச்சேன். சோ இனியும் நீ எதுவும் சொல்லத் தேவையில்லை மொழி. யாருக்குமே புரியாத புதிரா இருக்குற இந்த மொழியை எனக்குப் புரியும். உனக்கு இன்னும் தெரிய வராத பல விஷயங்கள் எனக்குத் தெரியும். அது தெரியும் போது நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு தான் தெரியலை.

ஆனா, இனி எதுக்காகவும் யாருக்காகவும் பயப்படத் தேவையில்லை. இந்த வீடியோ விஷயத்தை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். அது வரைக்கும் இப்ப எப்படி இருக்கியோ அப்படியே மெயின்டெயின் பண்ணு” என்றவனுக்கு அவள் அறையில் இருந்த நபரைப் பற்றி அவளுக்குத் தெரியவில்லை என்பது புரிந்திருந்தது. இல்லை என்றால் இன்னமும் பயந்திருப்பாளே! அதை சொல்லி அவளைக் கலவரப் படுத்த விரும்பாதவன்,

“எனக்கு ஒருமணி நேரமாவது தூங்கனும். சோ தூங்கலாமா?” என்றான் சாவகாசமாய்.

“எதே” என்ற ரீதியில் அவள் பார்த்திருக்க,

“எப்பவும் யோசிச்சுட்டே இருந்தா மண்டை சூடாகிடும்டி. கொஞ்சமாவது ரிலாக்சேஷன் வேண்டாம்?” என்றவனை,

“நீங்க கிளம்புங்க. நான் என்னோட ரூம்க்கு போறேன்” என்றாள்.

“கெடுத்தா காரியத்தை” என்று எண்ணியவன்,

“நீ இருந்தா தான் தூக்கம் வரும். நீயும் இங்கயே என்கூடவே தூங்கு” என்று தரையில் மல்லாந்தவன் அவளையும் இழுத்து தன் மேல் போட்டுக் கொள்ள,

“விடுங்க தீரா” என்று பதறி விலகினாள்.

“ஹேய்..! அன்னைக்கு கிட்டத் தட்ட பதினஞ்சு மணி நேரம் நீ இப்படி தான் தூங்குன. இன்னைக்கு ஓவரா பண்ற மொழி” என்றவுடன் முகம் கசங்கியவள்,

“பார்த்திங்களா! நீங்களே இப்படி சொல்லிக் காட்டுறிங்க? அன்னைக்கு நான் தெரிஞ்சா அப்படி இருந்தேன்” என்றவள் பார்வையை எங்கோ திருப்பிக் கொள்ள, அவளை இழுத்து மீண்டும் தன் மேல் போட்டுக் கொண்டவன்,

“நான் அப்படி சொன்னா, அப்படித்தான்டா தூங்குவேன்னு நீ சட்டமா சொல்லியிருந்தா நிஜமா சந்தோஷப்பட்டிருப்பேன் மொழி. நீ என்ன சூழ்நிலையில இருந்தேன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா நான் என்ன நிலையில இருந்தேன்னு உனக்குத் தெரியுமா? மனசு முழுக்க நிறைஞ்சிருக்க ஒருத்தி, அவளே என்னை கட்டிக்கிட்டு அவளே எனக்கு முத்தம் குடுத்துகிட்டு அவளே என் மேல ஏறிப் படுத்துகிட்டு என்னை டார்ச்சர் பண்ணா என்ன பண்ண முடியும் என்னால? என்னை கண்ட்ரோல் பண்ணி, உன்னையும் கண்ட்ரோல் பண்ணி உன்னை தூங்க வைக்க முன்ன நான் பட்ட பாடு எனக்குத் தான்டி தெரியும். உனக்கு குடுத்திருந்த ட்ரக்ஸ்சோடா பவர் அப்படி. இனி எந்த சூழ்நிலையிலையும் இப்படி பேசிடாத மொழி. ஐ பீல் கில்ட்டி” என்றான்.

“தீரா”

“இங்கயே தூங்கு. நான் போக சொல்லும் போது போ!” என்றவன் அவளை விலக்கி விட்டு படுத்துவிட்டான். கண்கள் தீயாய் எறிய கண்களை மூடிய ஐந்தாவது நிமிடத்தில் தூங்கிப் போனான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு உறக்கம் வருவேனா என்றது. தான் எதுவும் சொல்லாமலேயே தன் பாதி பிரச்சனைகளை தெரிந்து கொண்டவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குள் ஏதோ ஓர் உணர்வு உடையத் தொடங்கியிருந்தது.

அவன் அருகில் இருப்பதே அவளுக்கு ஒரு தைரியத்தை கொடுத்திருக்க, இப்போது தானாகவே அவனைக் கட்டிக் கொண்டு படுத்துவிட்டாள்.

“இதைத்தான் நான் அப்பவே சொன்னன்” என்றான் கண்களைத் திறக்காமல்.

சட்டென்று விலகப் போனவளை விடாமல் பிடித்துக் கொண்டவன்,

“தூங்குடி” என்றபடி உறக்கத்தைத் தொடர்ந்தான்.

பாவம் இனி அவனுக்கு உறங்க நேரம் கிடைக்குமோ என்னமோ?