மனசு 1

ஆதவனின் பொற்கரங்கள் கண்ணாடி வழியே ஊடுருவி அப்பங்களாவை பிரகாசிக்க, வெளிர்நிற படுக்கையிலிருந்து விழிகளை கசக்கி…

“ப்பா..” அழைத்தாள் ஜான்வி. ஒரு வயதே வரவிருக்கும் குட்டி தேவதை.

கைகளை நெட்டி முறித்து உடலை நெளித்து, “குட் மார்னிங் பட்டு..” குழந்தையை தூக்கினான் விதார்த். ஜான்வியின் சித்தப்பா..

“சித்தா…ப்பா….” குழந்தை அவ்விடத்தை ஆராய்ந்தாள்.

அப்பா இம்பார்டன்ட் வொர்க்கா வெளிய போயிருக்கார். நாளை வந்துருவார்..

குழந்தை முகம் சுருக்கி விதார்த்திடமிருந்து தாவி குதித்து குடுகுடுவென கதவை நோக்கி ஓட, எழுந்து ஓடி வந்து மகளை தூக்கினான் விதார்த்..

“சித்தா,…அடி அடி…” என சொல்லி அவன் முகத்தில் தன் கைகொண்டு அடித்தது குழந்தை.

பட்டு பட்டு பட்டு…வலிக்குது ஆவ் ஆவ்வ்….. விதார்த் கத்தினான்.

அவன் கத்தவும் உதடு பிதுக்கி விதார்த் கன்னத்தில் முத்தமிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ஜான்வி. குழந்தையுடன் கீழே வந்தான் விதார்த்.

அவன் தந்தை ராமநாதன். பெரிய கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி வைத்திருக்கிறார். அவர் பெயரில் நான்கைந்து இடங்களில் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

ராமநாதன் கம்பெனி செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். மகனையும் பேத்தியையும் கண்டு அவர் அவர்களிடம் வர, ஜான்வியை கீழே இறக்கி விட்டு “சித்ராக்கா” அழைத்தான் விதார்த்.

ராமநாதன் மகனிடம் பேச வர, அவரை கண்டு கொள்ளாமல் சோபாவில் அமர்ந்தான் விதார்த். குழந்தையும் தளிர் நடையுடன் அவனருகே வந்தது. ஜான்வியையும் அமர வைத்தான்.

“வந்துட்டே தம்பி” திருமணமாகாத முப்பத்து நான்கு வயதுடைய பெண் சித்ர    லேகா, கையில் தேனீர் கோப்பையும் பாலும் எடுத்து வந்தார்.

தேனீரை விதார்த்திடம் கொடுத்து, பாப்பாவிற்கு பருக கோப்பையில் வைத்திருந்த பாலை கொடுத்தார்.

“ஜானு குட்டி தாத்தாட்ட வாங்க….” பாசமாக பிள்ளையை தூக்க வந்தார் ராமநாதன்.

“சித்ராக்கா பட்டு பால் குடிக்கிறா தெரியலையா உங்க சார்கு????” சீறினான் விதார்த். சித்ரா கையை பிசைந்து நின்றிருந்தார்.

விரக்தியுடன் மகனை பார்த்து அமர்ந்து கொண்டார் ராமநாதன்.

தேனீரை முடித்து, அக்கா பாப்பாவ குளிக்க வச்சி தயார் படுத்துங்க. இன்று ஆபிஸூக்கு நேரத்துக்கு போகணும். அண்ணாவும் இல்லை…

“சரிங்க தம்பி” சித்ரா தயக்கமுடன் ராமநாதனை பார்த்தாள்.

அவர் தலையசைக்க, குழந்தையின் பால் வடிந்திருந்த வாயை துடைத்து தயார் படுத்த அழைத்து சென்றார் சித்ரா.

சற்று நேரத்தில் விதார்த், ஜான்வி இருவரும் தயாராகி வர, ராமநாதன் குழந்தைக்காக காத்திருந்தார் போலும்..

ஜானும்மா…

“தா…த்தா…” தத்தி தத்தி நடந்து ராமநாதனிடம் வந்தது குழந்தை.

குழந்தையின் மழலை குரலில் தன்னை மறந்து குழந்தையுடன் ஆசையாக பேசினார் ராமநாதன்.

சற்று நேரம் பொறுத்த விதார்த், “அக்கா சாப்பிடணும் நேரமாகுது…” கடுகடுத்தான்.

“எடுத்து வைக்கிறேன் தம்பி” உணவு மேசையில் உணவுகளை அடுக்கினார்.

ஜான்வியை அமர வைத்து, “தாத்தா வாரேன் குட்டி” குழந்தை கன்னத்தில் முத்தமிட்டு, “கவனமா இருங்க” பொதுவாக சொல்லி அவர் நகர,

“எங்கள பாத்துக்க எங்களுக்கு தெரியும். உங்க அக்கற எங்களுக்கு தேவையில்ல” பட்டென சொல்லி முகம் திருப்பி குழந்தைக்கு விதார்த் உணவை கொடுத்து அவனும் உண்டு குழந்தையுடன் அவர்களது கம்பெனிக்கு சென்றான்.

விதார்த் தன் அண்ணனுடன் சேர்ந்து மென்பொருள் நிறுவத்தை கவனித்துக் கொள்கிறான்.

உடலுக்கேற்ற எடையும், கம்பீரமும் மென்மையும்  ஒருங்கே கலந்த உருவமும், பார்ப்பவர்களை ஈர்க்கும் விழிகளும், அவனின் மென்மை குணத்திற்கேற்ற மீசையும், நல்ல உயரமும்.. கண்ணாடி அணிந்திருக்கும் நம் கதையின் நாயகன் உதய்கிருஷ்ணா..  இலக்கணத்தின் ஆண்மகனாய் திகழ்பவன்.

உதய்கிருஷ்ணாவின் காதலியை பிரித்து விருப்பமில்லாமல் அவரின் அத்தை மகள் பிரியங்காவை குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்கவே மொத்தமாக குடும்பத்தினரிடம் அமைதியாகிப் போனான்.

பிரியங்காவோ தினமும் உதய்கிருஷ்ணாவை சந்தேகப்பட்டு அவள் வாழ்க்கையையும் கெடுத்து அவன் வாழ்க்கையையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டாள். குழந்தை பிறந்தவுடன் இதற்கு மேல் தாங்க முடியாதவனாக அவளை தனியே அழைத்து காரில் செல்லும் போது, அவளிடம் பைல் ஒன்றை நீட்டி கையெழுத்து போட்டு தரச் சொன்னான்.

அவன் கார் டிரைவ் செய்து கொண்டிருக்க, விவாகரத்து பத்திரத்தில் உதய்கிருஷ்ணா சைன் கேட்கவும் கொதித்து அவனிடம் சண்டையை ஆரம்பித்தாள் பிரியங்கா.

வாய்ப்பேச்சில் தொடங்கிய சச்சரவு அவன் எதிர்பாரா நேரத்தில் பிரியங்கா ஸ்டியரிங்கை திருப்ப, அவனும் திருப்ப அவர்களின் சண்டை விபத்தாகியது. அவ்விடத்திலே பிரியங்கா உயிர் பிரிய, அவசர சிகிச்சை பிரிவில் உதய் கிருஷ்ணா சேர்க்கப்பட்டான். அப்பொழுது குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது..

விதார்த்தும் அப்பொழுது இருந்த வயதான பெண்மணியும் குழந்தையை பார்த்துக் கொண்டனர். வீட்டில் நடந்த அனைத்தும் விதார்த்தை கோபமேற்றி இருந்தது. அதனால் அவர்களின் பாட்டி தாத்தா யாரிடமும் குழந்தையை அவன் விடவில்லை. இரு மாதத்தில் குணமாகி உதய்கிருஷ்ணா வெளியே வந்த போது பிரியங்காவின் பெற்றோர் அவனிடம் சண்டைக்கு வந்தனர் குழந்தைக்காக.

முதல் முறையாக தன் மகளுக்காக குரல் உயர்த்தினான் உதய் கிருஷ்ணா.

“உங்க மகளுக்கும் எனக்கும் பிறந்த குழந்தை  தான் ஜான்வி. நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். இப்ப உங்க பொண்ணு உயிரோட இல்ல ஆனா நான் இருக்கேன். நான் இருக்கும் வரை எம் பொண்ணு எங்கிட்ட தான் இருப்பா. முடிஞ்சத பாருங்க…” சத்தமிட்டு கண்டுகொள்ளாமல் சென்று விட்டான்.

கோர்ட்டு வரை இவ்விசயம் சென்று குழந்தை தகப்பனிடம் தான் இருக்கணும் என்று கோர்ட்டு ஆர்டர் கொடுத்து விட, மொத்தமாக பிரியங்கா வீட்டினரை வீட்டிற்கு வர விடாமல் செய்து விட்டான். ஆனால் அவனையும் ஜான்வி பாப்பாவையும் அவர்கள் தொந்தரவு செய்து கொண்டு தான் இருந்தனர். ராமநாதனோ தன் மகன் வாழ்வு எண்ணி காலம் தாழ்ந்து கவலை கொண்டிருக்கிறார்.

காதலியை பிரிந்து ஐந்து வருடங்களாக உதய்கிருஷ்ணா வீட்டில் அதிகம் தங்காமல் ஆபிஸ் வேலை என்று இருந்ததில் “யூ கே இ மென்பொருள் நிறுவனத்தை” நான்கு மடங்காக பெருக்கி இருந்தான். மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்று கூட எண்ணமில்லாமல் உழைப்பை கையிலெடுத்து உயர்ந்து நிற்கின்றான். ஜான்வி கைக்கு வந்த பின் தான் அவனுக்கென்ற ஒரு விடியல் புதிதாக பிறந்திருந்தது.

மகிழ்ச்சி, கவலை, வேதனை, வலி எதையும் யாருக்கும் காட்டாத உத்தமன். தற்பொழுது கோவையில் நடந்து கொண்டிருக்கும் மென்பொருள் நிறுவன கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தான்.

அவர்கள் கம்பெனிக்கு நியூ பிராஜெக்ட் ஒன்று வந்திருந்தது. அதே பிராஜெக்ட்டை பல கம்பெனிகளும் செய்கின்றனர். யாருடைய பிராஜெக்ட் சிறப்பாக உள்ள தோ அதையே தேர்ந்தெடுப்பதாக மெயில் வந்திருந்தது. அதனை தன் தமையனை கவனிக்க சொல்லி கோவை வந்திருந்தான்.

அக்கூட்டத்தில் பெரிய பெரிய பிஸினஸ் ஆட்களும் வந்திருந்தனர்.

அதில் “ஹனி சாப்ட்வேர் சொல்யூசன்” என்ற கம்பெனி பற்றி பேச்சு எழ, அதிர்ந்து பின் புன்னகைத்தான் உதய்கிருஷ்ணா.

“சிரிக்கிறாரா?” அவனது உதவியாளர் ஷோபனா வியந்தாள். மேலும் ஒரு நாளுக்கு பின் வீட்டிற்கு திரும்பினான் உதய்கிருஷ்ணா.

இரவு வீட்டிற்கு வந்தவனிடம் பேசவென காத்திருந்தார் ராமநாதன்.

காரிலிருந்து இறங்கியவன் வீட்டினுள் நுழையும் போதே கோர்ட்டை கழற்றி தோளில் போட்டு சமையலறை சென்று பார்த்தான்.

சித்ரலேகா சுவற்றில் சாய்ந்து அமர்ந்த வாக்கிலே உறங்கிக் கொண்டிருந்தாள்.

“அக்கா…” அழைத்தான்.

“அய்யோ தம்பி! கொஞ்சம் அசந்துட்டேன். மன்னிச்சிரு” பதறி எழுந்தார்.

நோ பிராபிளம்கா. நா குளிச்சுட்டு வாரேன். சாப்பாடு எடுத்து வைங்க..பாப்பா சாப்பிட்டாளா? தூங்கிட்டாளா?

பாப்பா சாப்பிட்டுச்சு. தம்பி உறங்க வச்சுக்கிறேன்னு சொல்லீட்டாங்க..

விது சாப்பிட்டானாக்கா?

ம்ம்! சாப்பிட்டாங்க தம்பி. மணியாச்சு. சீக்கிரம் வாங்க…

உதய்கிருஷ்ணா நகர,

“உதய்” அழைத்தார் ராமநாதன்.

“சொல்லுங்க?” திரும்பாமல் நின்றான்.

பேசலாமா?

என்ன விசயம்?

ஒரு வரன் வந்துருக்கு..

விதுட்ட சொல்லாம என்ட சொல்றீங்க?

உனக்கு தாம்பா..

எனக்கா? ஏன் எம் பொண்ணையும் என்ட இருந்து பிரிக்கப் போறீங்களா?

எத்தன நாளு தனியா இருப்பப்பா?

“இப்ப தான் நிம்மதியா எம் பொண்ணோட இருக்கேன். உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கும் நீங்க அத பாருங்க. இல்லைன்னா உங்க குடும்பத்துல யாருக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு யோசிங்க…” வார்த்தையால் அவரை குத்தி கிழித்து நிற்காமல் சென்று விட்டான்.

உதய்கிருஷ்ணாவின் காதலி இவர்கள் வீட்டிற்கு எதிர்வீடு தான். அவள் குழந்தையாக இருந்த போதே அவளை பார்த்து வளர்ந்தவன் உதய்கிருஷ்ணா. உதய்கிருஷ்ணாவை விட விதார்த்தும் அ ப்பெண்ணுடன் நெருக்கம்.

விதார்த்தும் அப்பெண்ணும் ஒரே வயதினர். ஒரே பள்ளி கல்லூரி என சேர்ந்தே வளர்ந்தவர்கள். உதய்கும் அவளுக்குமான காதலில் அதிக விருப்பம் காட்டியது விதார்த் தான். கல்லூரி படிப்பின் போது தான் அவளுக்கு உதய் மீது காதல் வந்திருக்கும்.

நல்ல பெண். படுசுட்டி… உதய்கிருஷ்ணாவிற்கு அப்படியே எதிர்மாறானவள். ஓரிடத்தில் நிற்கவே மாட்டாள். அவளது குறும்புத்தனமும் இடைவிடாத பேச்சும் உதய்கிருஷ்ணா மனதை வெகுவாக ஈர்த்தது.

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பார்களே! அது போல…

காதலை பகிர்ந்து கொண்டார்களே தவிர வெளிய ஊர் சுற்றுவது, கொஞ்சல் பேச்சு எதுவும் இருந்ததில்லை. ராமநாதனுக்கும் அப்பெண்ணை பிடிக்கும்.

அன்று ஏதோ ஒரு உணர்வு மிகுதியில் அவள் உதய்கிருஷ்ணா கன்னத்தில் முத்தமிட்டு ஓட, அவன் அவளை இழுத்து முத்தமிட்டான்.

அந்நேரம் உத ய்கிருஷ்ணாவின் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என அனைவரும் வந்தவர்கள் இவர்களை கண்டு,

அவள் மத்திய வகுப்பை சேர்ந்த பெண் என்பதை வைத்து தன் மகள் வாழ்க்கை போய் விடுமோ என்று அச்சத்தில் பிரியங்காவின் தாய் அவள் முடியை பற்றி இழுத்து தெருவினர் முன் வைத்து தவறாக பேச, ஆண்கள் உதயை சூழ்ந்து அவனை அடித்து, திட்டி…ராமநாதனையும் ஏற்றி விட்டு மகனுக்கும் அப்பாவிற்கும் இடையேயான  உறவை தடுத்திருப்பர்.

ராமநாதனும் கோபத்தில் விடக்கூடாத வார்த்தையை விடவே அன்பின் உருவமாய் இருக்கும் உதய்கிருஷ்ணா மனதை சாட்டையால் அடித்து ஒதுக்கி விட்டது.

அதிர்ச்சியில் இருந்த உதய்கு தாத்தா, சித்தப்பா, மாமாவின் வார்த்தைகள் வலிக்க வைத்தது என்றால் தந்தையின் வார்த்தைகள் அவனை கொன்றே விட்டது.. இதிலும் அவன் மனம் அவளை தான் தேடியது.

வீட்டின் வெளியே அவளையும் அவள் குடும்பத்தையும் அவதூறாக பேசி தெருவே தூற்றும்படி செய்த எதுவும் முதலில் உதய்கு தெரியாது. பெரியவர்களை தடுத்தும் அவர்கள் ஆட்டம் அதிகமாக, செய்வதறியாது தன் தோழியை தேற்றவும் முடியாமல் வேதனையில் நின்றிருந்தான் விதார்த்.

அம்மா இல்லாத விதார்த்திற்கு அவளின் அம்மா தான் எல்லாம். அவர்கள் வீட்டில் இவனும் ஒருவனாக இருந்திருந்தான். அம்மா, அப்பாவாக நினைத்தவர்கள் அடுத்தவர் முன் கூனிக் குறுகி நிற்பதை பார்க்க முடியாமல் கண்ணீருடன் அமர்ந்து விட்டான்..

அப்பெண்ணுக்கு இரத்தமே வந்திருந்தது. அவள் பெற்றோர் நிலை எப்படி இருந்திருக்கும்..???? அனைத்தையும் பார்த்த விதார்த்தால் வீட்டினுள் செல்ல முடியவில்லை. அவன் அத்தை பேசிய பேச்சில் நாம் இன்னும் இங்கிருந்தால் பாதிக்கப்போவது அவர்கள் தான் என்பதை உணர்ந்து வேகமாக அண்ணன் அறைக்கு ஓடினான்.

தந்தையின் வார்த்தையில் ஒடுங்கிய இருந்த உதய்கிருஷ்ணாவிற்கு தன் தம்பி கூறும் எதுவும் காதில் ஏறவில்லை. தந்தை தன் அம்மா இலவஞ்சியையும் தவறாக பேசி, தன்னையும் தான் உயிராய் நேசித்தவளையும் கொச்சையாக பேசியதே அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது..

பளார் பளாரென விதார்த் தன் அண்ணனை அடிக்கவும் சுயம் வந்தவன் அதிர்ந்து தம்பியை பார்க்க, அண்ணன் சுயநினைவுக்கு வந்து விட்டான் என்று நடந்த அனைத்தையும் விதார்த் கூற,

“அமைதியாவா இருந்தா விது?” கேட்டான் உதய்கிருஷ்ணா.

பேசுனா அண்ணா. உன்னை தான் எதிர்பாத்தா. உன் மீதுள்ள காதலை சொன்னா. உங்க பணம் சொத்து எதுவும் வேண்டாம். உதய் தான் வேணும்னு கடைசி வரை நின்னா.

ஆனா அத்த,  விச்சு அங்கிள் சட்டையை பிடிச்சு, அவள கூட்டி கொடுத்ததா அசிங்கமா பேசிட்டாங்க தயங்கினான்.

அப்படியொரு கோபம் வந்தது உதய்கிருஷ்ணாவிற்கு.

விதார்த்தை நகர்த்தி வேகமாக வெளியே வந்தவனை வீட்டினர் முறைத்து பார்க்க,

“அங்கிள் உங்கள என்ன செஞ்சார்? இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்ல…???” பிரியங்கா தாயிடம் கேட்டான்.

மாப்பிள்ள, உங்களுக்காக பிரியா காத்துட்டு இருக்கா. ஏதோ உடம்புக்கு ஆசப்பட்டீங்கன்னு சொல்லி அவர் முடிக்கவில்லை. சமையலறையிலிருந்த பொருட்களை தட்டி விட்டு…கத்தியை எடுத்தான் உதய்கிருஷ்ணா.

உதய், கத்திய கீழ போடு….பாட்டி பதற,

“என்னடா பண்ணுவ? உன்னோட குடும்பத்தையே அந்த பொண்ணுக்காக கொல்லப் போறீயா? அவள வீட்டுக்குள்ள விட்டதே தப்பா போச்சு…”  ராமநாதன் எகிறினார்

கதவ திறந்து வச்சிருந்தா கண்ட நாயெல்லாம் வரத் தான் செய்யும் அண்ணா. நீ விரட்டி இருக்கணும்…

“இப்ப நீங்க தான் நாய் மாதிரி கதவ தட்டாம கூட வந்துருக்கீங்க” கத்தினான்.

“உதய்…..” ராமநாதன் உதய்கிருஷ்ணா கன்னத்தில் மாறி மாறி அறைய, அவன் பட்டென அவன் கையில் கத்தியால் வெட்டினான்.

“அண்ணா….” அழுது கொண்டே விதார்த் உதய்கிருஷ்ணாவிடம் வர, மேலும் அவனை பதட்டத்தில் அடித்தார் ராமநாதன்.

“ராமா…” தாத்தா சத்தமிட,

பிரியங்காவின் தந்தை மருத்துவர். மருத்துவமனை வைத்திருக்கிறார். உடனடியாக உதய்கிருஷ்ணாவிற்கு வீட்டிலே சிகிச்சை அளித்தனர்.

மறுநாள் தான் எழுந்தான் உதய்கிருஷ்ணா.

எழுந்தவுடன் விதார்த்தை பார்த்து, விது..ஹனி..

“இல்லை” தலையாட்டியவன், வீட்ட விட்டு ஒரேதா போயிட்டாங்க..

“இப்ப கூட அவள பத்தி தா கேக்குறான்? பெத்தவன் தவிச்சு இருக்கேன்”  ராமநாதன் காய்ந்தார்.

அன்று விழிகளை மூடியவன் தான். இதனை பயன்படுத்தி செய்யக் கூடாத எல்லாம் செய்து பிரியங்கா உதய்கிருஷ்ணாவை திருமணம் என்ற பெயரில் ஏதோ செய்து உடும்பு போல ஒட்டிக் கொண்டாள்.

நடந்த அனைத்தையும் எண்ணியவாறு சவரில் நின்றிருந்தான் உதய்கிருஷ்ணா. அவனுள் அவன் ஹனி எண்ணம் சுழன்று கொண்டிருந்தது.

குளித்து கீழே வந்தான். ராமநாதன் அமர்ந்திருந்தார். அவரை கடந்து உணவுமேசை சென்று உணவை முடித்து தன்னறைக்கு சென்றான்.

அவன் மகள் ஜான்வி அழகாக தன் சித்தப்பாவின் மீது படுத்திருந்தாள். விதார்த்தும் குழந்தையை அணைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.

தன் கண் கண்ணாடியை அதற்கான உறையில் வைத்து இருவரையும் அணைத்து  படுத்துக் கொண்டான் உதய்கிருஷ்ணா. அவன் ஹனி நினைவில் வரும் போதெல்லாம் அவனால் உறங்க முடியாது. அது போல அன்று அவளை எண்ணியவாறே படுத்திருந்தான். அதிகாலை நேரத்தில் தான் உறங்கினான்.

காலை எழுந்த ஜான்வி, “ப்பா…” தந்தை மீது ஏறி அவன் கன்னத்தை இழுத்து அவனை விழிக்க வைக்க முயன்றாள்.

விதார்த் தன் அண்ணனை பார்த்தவன் அவனருகே இருக்கும் பில்லோவை பார்த்து பெருமூச்சுடன் அதனை அவனுடன் வைத்து, குழந்தையை தூக்கி எழுந்தான்..

ஐந்து வருடங்களானாலும் அவள் கொடுத்த கிப்ட் பில்லோ அருகே இல்லாமல் தூங்க மாட்டான் உதய்கிருஷ்ணா. இப்பொழுதும் அதனை கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

ராமநாதன் அடிக்கடி உதய்கிருஷ்ணா அறையை பார்க்க, சற்று நேரத்திலே ஆபிஸிற்கு தயாராகி வந்து விட்டான் உதய்கிருஷ்ணா.

அண்ணா, நீ ஓய்வெடு. நான் பாத்துக்கிறேன்..

இல்ல விது, முக்கிய பிராஜெக்ட் இருக்குல்ல? எப்படி போய்ட்டு இருக்கு?

டுடே ஃபினிஸ்டு த பிராஜெக்ட்…

ப்பா…உணவுமேசையிலிருந்து குழந்தை இறங்க,

“ஜானு இறங்காத…” குழந்தையருகே அமர்ந்தான். அப்பாவும் மகளும் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.

பின் ஜான்வியை பார்த்துக் கொள்ள சித்ரலேகாவையும் ஆபிஸூக்கு வரச் சொல்லி அவன் சென்றான். உதய்கிருஷ்ணாவிற்கு அவன் வீட்டினர் மீது நம்பிக்கையில்லை. தன் மகளை அவனது கண்காணிப்பிலே வைத்திருந்தான்.

    காரில் செல்லும் போது…

கிருஷ் நானும் சொந்த காசுல கார் வாங்கணும். அம்மா, அப்பா, விது, உன்னோட பயணிக்கணும். வாழ்க்கை முழுக்க..உன்னோட கைய இப்படி பிடிச்சிட்டு உன்னோட தோள்ல சாஞ்சிட்டு சந்தோசமா பயணிக்கணும்..சூப்பரா இருக்கும்ல..அவன் ஹனி பேசியதும் மேலும் அவள் நினைவிலே மகளுடன் பயணித்தான்.

அவள் ஆசைப்பட்டது போல விதார்த் அருகே இருந்த குழந்தையின் தலையை தன் தோளில் சாய்த்துக் கொள்ள, குட்டியோ தந்தை மீது ஏறி மார்பில் சாய்ந்து கொண்டது. பெருமூச்சுடன் பயணத்தை தொடர்ந்தான்..

        “தங்கப்பூவே!

உன் கண்ணாலதான் நின்னேன் நானே!

     ஹே தங்கப்பூவே!

ஒரு தேவதை வந்தது என் வழி தானே..ஏ…

      வண்ண மானே!

உன் பின்னாலத்தான் வந்தேன் நானே!

      வண்ண மானே!

என் தாய்மடியாகுது உன்னிழல் தானே…ஏ….”