சூரியன் 9

ஒரு நிமிசம் இருங்க என்ற இனியவன்… “அம்மா, இதுல கையெழுத்து போட்டு இன்னும் பக்கத்து வீட்டினர் சிலரிடமும் கையெழுத்து வாங்கி வாங்க” என்றான்.

“என்ன இது?” தயக்கமுடன் மகனை பார்த்தார் நெடுங்குழலி.

பிரியசகி நிலையை நாம நேரில் பார்த்த சாட்சிக்காக தான். வாங்கி தருவீங்களா? நான் பார்த்துக் கொள்ளவா?

“கோவிச்சுக்காத யவா, நான் வாங்கிட்டு வாறேன்” அவர் கையெழுத்திட்டு வாங்கி வந்து மகன் கையில் கொடுக்க,

“மாமா கையில கொடுங்க” சத்தமிட்டான்.

மாமா, லெவனுக்கு மேல தான? நானும் முடிந்தால் வாரேன் என்றான்.

ம்ம்! நாங்க கிளம்புகிறோம்..

“நில்லுப்பா” குழலி அழைத்தார்.

சஞ்சய் பொறுமையாக, “சொல்லுங்க?” என்றான்.

“கோபத்துல்ல நிலையில்லாமல் பேசிட்டேன். இந்துகிட்ட பேசலாமா? அவளோட எண் கூட இல்லை” குழலி வருத்தமுடன் கேட்க,

“சாரி ஆன்ட்டி…அவ எங்களை மாதிரி சட்டுன்னு பேசிற மாட்டா. அதுவும் அவளுக்கு எல்லாமே கேசவன் சித்தப்பா தான். நீங்க பேசியது அதிகப்படி…அவளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினம். இதுக்கு மேல இனி உங்க வீட்டுக்கு நாங்களும் வர மாட்டோம்” சஞ்சய் கூறி நகர்ந்தான்.

இந்து என்ன செய்வாளோ? என இருந்த இனியவனுக்கு சஞ்சயின் பேச்சில் நம்பிக்கை போனது. தன் அன்னை மீது தான் சினம் அதிகமானது. தானாவது கூறி இருக்கலாம்…அதுவும் இல்லை என தன்னை தானே மனதில் கடிந்தவாறு பைக்கில் ஏற, விஷ்ணு வண்டிச்சாவியை எடுத்தான்.

“விச்சு, விளையாடாத” சினமுடன் சத்தமிட்டான்.

அண்ணா கோபத்தை உணவில் காட்டக் கூடாதுன்னு நீ தான சொல்வ? சாப்பிட்டு அம்மா மேல நல்லா கோபப்படு…

“பசிக்கலன்னு சொல்றேன்ல. சாவியை கொடு” சினந்தான்.

“யவா…” கண்கலங்க குழலி அழைக்க, பைக்கிலிருந்து இறங்கி அவன் நடக்க விஷ்ணு இனியவன் கரத்தில் அவனது சாவியை திணித்து, “உனக்கு இந்துவை பிடிச்சிருக்குன்னு எனக்கு புரிய வச்சுட்ட அண்ணா” என்றான்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” சாவியுடன் பைக்கில் ஏறினான். குழலி அதிர்ந்து தன் மகன்களை பார்த்தார்.

அதான அம்மா மேல கோபம். சாப்பிடாமல் போற. இந்து சென்றதிலிருந்து நீ சரியில்லை.

ராக்கியை மிஸ் பண்றேன்..

ஆமா நான் இல்லைன்னு சொல்லவில்லை. உன்னறையை திறந்தேன். ராக்கியின் ஆடையும் அதன் மேல இந்துவின் ஆடையும் இருந்தது..

“எனக்கு தெரியாமல் இந்த வேலையெல்லாம் ஏன் பாக்குற?” சீறினான் இனியவன்.

“யவா, இந்துவை உனக்கு பிடிச்சிருக்கா?” குழலி கேட்க, பதிலளிக்காமல் வீட்டினுள் சென்று அறையை பார்த்தான். பூட்டு உடைந்து இருந்தாலும் அறையை தாழிட்டு தான் வைத்திருந்தான் விஷ்ணு.

“இனி இந்த அறைக்குள் என்னை தவிர யாரும் செல்லக் கூடாது” தன் அன்னைக்கு தெளிவாக கேட்குமாறு கூறி உணவை அவனே போட்டு அமர்ந்தான்.

“யவா, நான் வைக்கவா?” ஆசையுடன் கேட்டார்.

எனக்கு போட்டுக்க தெரியும். இனி வாழ்நாள் முழுவதும் நானாக தான போட்டுக்கணும். பழகிக்கிறேன் என்றான்.

“உனக்கு இது தேவை தான்” தன் அன்னையை முறைத்தவாறு விஷ்ணு சோபாவில் அமர்ந்தான்.

“விச்சு, நான் கிளம்புகிறேன்” இனியவன் செல்ல, தன் மகனை கண்ணீருடன் பாவமாக பார்த்தார் குழலி. அவன் யாரையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.

“விச்சு…” குழலி அழைக்க, “நானும் கிளம்புகிறேன்” எழுந்தான்.

நிஜமாகவே யவாவுக்கு இந்துவை புடிச்சிருக்கா?

“ஆமா…அவன் செயலில் சந்தேகமுடன் தான் பூட்டை உடைத்தேன். அண்ணா இந்து விசயத்தில் சீரியசாக இருக்கான். உனக்கு மூத்த மருமகளா இந்து தான் வருவா இல்லை உன் பிள்ளை காலம் முழுக்க இப்படியே தான் இருப்பான்…” குழலி நெஞ்சு பற்றுமாறு அழுத்தி கூறி சென்றான்.

ரக்சனாவை காண நேராக மருத்துவமனைக்கு சென்றனர் சஞ்சயும் பிரசாத்தும்.

ரக்சனா அவளது அண்ணன் மருத்துவமனையின் சிறந்த மருத்துவச்சி.

“ஹலோ, நீங்க கொஞ்சம் வெளிய இருங்க” பிரசாத்திடம் கூறினாள் ரக்சனா.

நானும் இங்கே தான் இருப்பேன்.

“சார், உங்களுக்கு ரிப்போர்ட் வேணுமா? வேண்டாமா?” சஞ்சயை பார்த்தாள்.

பிரசாத் வெளிய இரு.

மாமா, நான் இருந்தால் என்ன? ரிப்போர்ட் தான குடுக்க போறாங்க..

ப்ளீஸ்டா, என்னை நீ மேலும் சோர்வாக்காதே!……

தன்னை விட பிரியசகியின் நிலை குறித்து சஞ்சய் மனம் பாதிக்கப்பட்டதை உணர்ந்து அவன் கூறுவதை கேட்டு அமைதியாக வெளியே சென்றான் பிரசாத்.

சொல்லு?

சார், அந்த பொண்ணை நீங்க காதலிக்கிறீங்களா?

இதையும் உங்க ரிப்போர்ட்ல சொல்லணுமா?

எனக்கு உங்க வேதனை கண்ணில் தெரியுது சார்..

நான் ரிப்போர்ட் வாங்க தான் வந்தேன்.

சார், அவங்கள நீங்க திருமணம் செய்யணும்னா முடியாது. அவங்களால…

“செட் அப். உங்கிட்ட கேட்டதை மட்டும் கொடு முடியாதுன்னா சொல்லு. நான் ரக்சன் வரவும் பார்த்துக்கிறேன்” சத்தமிட்டான்.

சிறுபுன்னகையுடன் அமைதியாக செல்லும் சஞ்சய் சத்தமிடவும் ரக்சனாவிற்கு கண்கள் கலங்கியது.

நான் அவளை பார்க்க போகணும். உங்களால இப்ப கொடுக்க முடியும்னா கொடுங்க. முடியாதுன்னா வெளிய லீக் பண்ணாம மட்டும் இருங்க. நான் அந்த சரணை என்ன செய்யணும்னு பார்த்துக்கிறேன்..

அமைதியாக ரக்சனா தயாரித்த ரிப்போர்ட்டை அவன் முன் வைத்து, “சாரி..நான் தெரிந்து கொள்ள தான் கேட்டேன். செருப்பால அடித்ததை போல எனக்கு பதில் கிடைத்து விட்டது. தேங்க்யூ சஞ்சய்…” என்றாள்.

பெருமூச்சுடன் சாரி ரக்சி, நான் ஏற்கனவே மனஉளைச்சலில் இருக்கேன்.

அந்த பொண்ணு அவ்வளவு முக்கியமா?

ஆமா.. அவ சந்தோசமா இருக்கணும்னு தான் என் காதலை கூறாமல் விட்டேன். ஆனால் இன்று இந்த நிலையில் அவளை காணுவேன் என தெரிந்தால் முன்பே  அவளை யாருக்கும் விட்டு கொடுத்திருக்க மாட்டேன்..

எத்தனை வருசக் காதல்னு தெரிஞ்சுக்கலாமா?

பதினைந்து வயதில் ஏற்பட்ட காதல் இன்னும் மாறவில்லை. அவள் இடத்தை யாரும் என் மனதில் பிடித்ததில்லை. பிடிக்க போவதும் இல்லை..

ஓ!…

“ம்ம்! சும்மா காதல்னு என் பின்னாடி சுத்துறத விட்டு உங்க அப்பா சொல்றதை கேட்டு நடந்துக்கோ” அறிவுறுத்தி அவன் எழுந்தான்.

ஒன்று மட்டும் கடைசியாக கேட்கவா?

கேளு…

செக்ஸ் வாழ்க்கை அவங்களால கிடைக்காது என்றாலும் அவங்கள திருமணம் செஞ்சுப்பீங்களா?

எனக்கு அவள் மனதை தான் பிடிக்கும். உடலை அல்ல..சிறு சிறு தொடுகை போதாதா வாழ்நாள் மகிழ்ச்சிக்கு? அவன் கேட்க, இன்னும் சஞ்சயை ரக்சனாவிற்கு பிடிக்க தான் செய்தது.

“அதுக்காக அவளை திருமணம் செய்யும் எண்ணமில்லை. அவள் எண்ணம் போல எல்லாம் நடக்கட்டும். இப்பொழுதைக்கு அவள் உடலும் மனதும் சரியாகணும். அது தான் எனக்கு தேவை” சஞ்சய் ரக்சனாவை பார்த்து, “உதவ முடியாதுன்னா சொல்லுங்க” என்றான்.

“நான் தினமும் வந்து அவங்கள கவனிச்சுக்கிறேன். ஆல் தி பெஸ்ட்” கையை நீட்டினாள். அவன் கரம் கொடுத்து அங்கிருந்து பிரசாத்துடன் வீட்டிற்கு சென்றான்.

“ஜா எங்க நவீன்?” பிரசாத் கேட்டான்.

நவீன் பிரியசகி இருக்கும் அறையை பார்த்தான். இருவரும் அவ்வறையை நோக்கி சென்றனர். அழுகையை கட்டுப்படுத்தி இறுக்கமாக அமர்ந்திருந்தாள் இந்துஜா.

பிரியசகி ஏதோ கூற, பிரசாத் சஞ்சயை இழுத்து மறைவாக நிற்க வைத்து அவனும் நின்றான்.

பேச வந்த சஞ்சய் வாயை அடைத்து கண்ணாலே கவனிக்க கூறினான். இருவரும் கவனிக்க தொடங்கினர்.

“மேம், அதிகம் பேசாதீங்க” செவிலியர் கூற, பிரியசகி வழிந்த கண்ணீருடன், “ஜா ஒரு முறையாவது சரணுக்கு கால் பண்ணி இருக்கலாமே!” சோர்வுடன் மெதுவாக பேசினாள்.

“ப்ளீஸ், நான் பேசணும்” இந்துஜா கரத்தை அழுந்த பிடித்தாள்.

“பேசலாம் பிரியா. இப்பொழுது நீ ஓய்வெடுக்கணும்” இந்துஜா கூற,

உனக்கு என்னோட நினைவே இல்லாமல் போச்சுல ஜா. அவனால உடம்புல இருக்கிற காயத்தை விட மனசுல தான் காயம் அதிகம். யாரிடமும் பேச கூட விட மாட்டாங்க…அவனோட அம்மா என்னை எப்போதும் ஏளனமாக தான் பார்ப்பாங்க…

சரண் என்னிடம் நேரடியாகவே சொல்லீட்டான். அவனுக்கு நான் செத்தாலும் பரவாயில்லையாம். என் உடல் தான் அவனுக்கு வேண்டுமாம்” பிரியசகி அழுகை கூட, இந்துஜாவிற்கு கண்ணீர் வரத் தொடங்கியது.

“ஜா, உன்னோட அண்ணா அழைச்சிட்டு வரலைன்னா இப்பொழுதும் என்னை பார்க்க வந்திருக்க மாட்டேல்ல. செத்தாலும் அங்க தான நான் கிடந்துருக்கணும்” அவள் அழ,

“சாரிடி” இந்துஜா அழுது கொண்டே அவளது கரத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

பிரசாத், சஞ்சய் விழிகளிலும் நீர் தொட்டு சென்றது.

கட்டுப்படுத்திய பிரசாத், “நீ கால் பண்ணி இருக்க வேண்டியது தான?” சினமுடன் கேட்டுக் கொண்டே அறையினுள் வந்தான்.

பிரியசகியிடமிருந்து பதில் இல்லை. அமைதியாகி விட்டாள்.

“இப்ப பேச சொல்லு?” சினமுடன் கேட்க, அவ தான் தெளிவா சொன்னால்லடா. கைபேசி இல்லைன்னு..

இல்லைன்னா அவனுக்கு தெரியாமல் அவனுடைய கைபேசியிலாவது மிஸ்டு கால் செய்திருக்கலாம்ல? அவன் கேட்க, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“பதில் சொல்ல சொல்லு ஜா?” சத்தமிட்டான்.

“சார், ஏற்கனவே அவங்க எவ்ளோ பெயின்ல இருக்காங்க தெரியுமா? இப்படி கத்திட்டு இருக்கீங்க? வெளிய போங்க” செவிலியர் சத்தமிட்டார்.

“இவ்வளவு நேரம் பேசினால சொல்ல சொல்லுங்க போறேன்” கத்தினான்.

பிரசாத் சத்தம் கேட்டு அனைவரும் அங்கு வந்தனர்.

நிற்காமல் வழிந்த கண்ணீரை துடைக்க திராணியில்லாது துவண்ட தன் மகனை கண்டு அவனருகே சென்று அவன் தோளில் கை வைத்தார் நாகேந்திரன். அவன் அவரை கட்டிக் கொண்டு உடல் குலுங்க சத்தமில்லாது அழுதான்.

நவீன் சஞ்சயை பார்த்துக் கொண்டே உள்ளே சென்று, “அண்ணா வெளிய வா” அழைத்தான்.

எனக்கு பதில் சொல்ல சொல்லு. நான் வாரேன்..

தந்தையிடமிருந்து நகர்ந்து முகத்தை அழுந்த துடைத்த சஞ்சய், அறையினுள் வந்தான்.

“வெளிய வாடா..” இந்துஜாவும் நவீனும் பிரசாத்தை இழுத்து அவனுடன் போராடிக் கொண்டிருந்தனர். சுவர்ணலதா பிரியசகியின் கரம் பற்ற, அவள் கண்ணீருடன் பிரசாத்தை பார்த்தாள்.

என்ன தான் பிரிந்திருந்தாலும் அவர்களின் பழைய காதல் இன்னும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருந்தது. அதை புரிந்தவனாக இருவரையும் பார்த்தவாறு அறையினுள் வந்தான் சஞ்சய்.

“எல்லாரும் வெளிய போங்க” சஞ்சய் பிரசாத் கரத்திலிருந்து பைல்லை பிடுங்கி, “வெளிய போறீயா?” சத்தமிட்டான்.

மாமா..அவ..

“அவ சொன்னது எப்பொழுது தான் உன் காதில் சரியா விழுந்திருக்கு. வெளிய போ” சீறினான் சஞ்சய்.

அவன் கூறுவதும் சரி தான். அவள் நிலையை சிந்திக்காமல் நிதானமாக பிரசாத் என்றும் சிந்திக்கவில்லை இந்து எண்ணியவாறு, “எல்லாரும் வாங்க” வெளியே அழைத்து சென்றாள்.

எல்லாரும் வாயிலில் நின்று இருவரையும் பார்த்தனர்.

சஞ்சயின் வார்த்தையில் திகைத்து, “இவர் எங்களை கவனித்து இருக்கிறாரா?” சஞ்சயை பார்த்தாள் பிரியசகி.

நாற்காலியை இழுத்து அவளருகே போட்டு அமர்ந்து செவிலியரை பார்த்தான்.

“இவங்கள நிமிர்ந்து அமர வை ரதி..”

செவிலியர் ரதி சஞ்சயை காண,

அதெல்லாம் தாங்கிப்பா. பொம்மை மாதிரி அசராமல் இருந்தால் எவ்வாறு விரைவில் குணமாகும்? பிரியசகியை பார்த்தான். அவள் செவிலியரை பார்த்தாள்.

பதில் பேசாது, “கையை மட்டும் அசைக்காதீங்க மேம்” செவிலியர் கூறி அவளை நகர்த்த, இடது கரத்தில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. வலது கரத்தை படுக்கையில் அழுந்த பிரியசகி பற்ற, அவளது கரத்திலிருந்த காயம் வலித்தது.

ஷ்ஷ்ஆ…என்றாள்.

“பார்த்து மெதுவா” என்றான் சஞ்சய்..

இரு பெண்களும் அவனை பார்த்தனர்.

பெயின் அதிகமா தான் இருக்கும்னு டாக்டர் சொன்னாங்க. அவங்க சொல்ற மாதிரி படுத்தே இருக்காத. அவ்வப்போது அமர்ந்துக்கோ…

“சார், என்னோட விவாகரத்து விசயம்???” மெதுவாக கேட்டாள்.

பைல்லை அவளிடம் காட்டினான். உன் சார்பாக குறிப்பிட்டுள்ள வக்கீல் எனக்கு தெரிந்தவர் தான். ஆதாரம் இருக்கு. மருத்துவரும் ரிப்போர்ட் தந்துருக்காங்க..

இனியவன் சார் பதினொரு மணிக்குன்னு சொன்னாங்க. கிளம்பணும் சார்….

நீ வர வேண்டாம். நானும் பிரசாத்தும் பார்த்துக்கிறோம்..

நான் இல்லாமல் எப்படி சார் விவாகரத்து தருவாங்க..???

வீடியோவில் பார்த்துக்கலாம்…

இல்ல சார், நானும் வரணும். அவனோட பெயர் கெட்டு போவதை நான் பார்த்தே ஆகணும். இதுக்காக தான் இத்தனை வருசமா சிரமமுடன் துன்பத்தை அனுபவித்தேன்…

“நாங்க பார்த்துக்கிறோம்” அவன் அழுத்தி கூற, ஜாவும் என்னோட வரட்டும். ப்ளீஸ் சார்..

தாடையை தேய்த்து அவன் சிந்தனையில் இருக்க, “ரக்சிக்கு தெரிந்தால் கோபப்படுவா. என்னையும் திட்டுவா” ரதி சஞ்சயை காண, அவன் பிரியசகியை கண்டான்.

“முடியாதும்மா. முதல்ல உன்னோட உடல்நிலையை தான் சரி செய்யணும்..” நாகேந்திரன் உள்ளே வந்தார்.

அங்கிள், நான் அவனை பார்க்கணும்..

“அப்பா சொல்றது சரி தான். நீ இந்த அறையை விட்டு வெளியே வர வேண்டாம். இந்து உனக்கு கோர்ட்டில் நடப்பதை நேரலையாக்குவாள்” பிரியசகியை பார்த்தான்.

ம்ம்! என்று அவனிடம், என்னோட திங்க்ஸ் சார்? கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன்..

சஞ்சய் தன் தாயை பார்த்தான். அவர் எடுத்து கொடுத்தார்.

சார், முன் பக்கத்தில் ஒரு கைபேசி இருக்கும். அதை எடுங்களேன் என்று சொல்ல, “கைபேசி இல்லைன்னு இப்ப தான சொன்ன?” பிரசாத் சினமுடன் உள்ளே வந்தான்.

சஞ்சய் திரும்பி அவனை முறைக்க, “சார் இந்த கைபேசியை இனியவன் சார் தான் கொடுத்தார். ஆதாரம் சேகரிக்க…” பிரசாத்தை கண்டு கொள்ளாமல் சஞ்சயை பார்த்து கூறினாள்.

என்ன ஆதாரம் இருக்கு?

“பாருங்க சார்” சோர்வுடன் விழிகளை மூடினாள்.

ஏற்கனவே நேரமாகிடுச்சு. நாங்க கிளம்புகிறோம்.

எல்லாரையும் பார்த்து, “தேவையில்லாமல் யாரும் சகியிடம் ஏதும் பேசக் கூடாது. பழையவாறு நன்றாக பேசுவதாக இருந்தால் பேசுங்கள். இல்ல அமைதியா இருங்க” என்று அவளை விழிகளால் தீண்டி பிரசாத்தை பார்த்தான்.

பிரசாத் வெளியே செல்ல, “இந்து எங்களுடன் நீயும் வா” அவளையும் அழைத்து சென்றான் சஞ்சய்.

                           ******

இனியவன் கல்லூரிக்கு செல்லும் வழியில் சரண் காரிலிருந்து இறங்கி ஒரு சிறிய தெருக்குள் நுழைவதை கண்டு இவனும் அவனை பின் தொடர்ந்தான்.

பிரியசகிக்காக கோர்ட்டில் பேசவிருக்கும் வக்கீல் ராமதாஸ் நின்று கொண்டிருந்தார்.

இரு பெரிய சூட்கேஸை அவரிடம் கொடுத்தான் சரண்.

பல்லை காட்டி அவர் வாங்கியதை பார்த்து உடனடியாக அதனை வீடியோ எடுத்தான் இனியவன்.

“பிரியசகி என்னை ஏமாற்றி வேறொருவருடன் கள்ளக்காதலில் இருப்பதாக வீடியோ தயார் செய்துடீயா? காட்டு” என அதனை பார்த்தவன் மனம் குளிர்ந்து,

“அவளை நான் காயப்படுத்தவில்லை. அவளை அவளே காயப்படுத்திக் கொண்டதாக வீடியோவை நான் தயார் செய்து வைத்திருக்கேன். அதை காட்டி நான் தப்பித்துக் கொள்வேன். என்ன நடந்தாலும் என்னோட பெயர் கெடக் கூடாது புரியுதா?” சினமுடன் கேட்டான்.

சார், அந்த பொண்ணு நேர்ல வந்துறாதே! அந்த பொண்ணை புகைப்படத்தில் பார்க்கவுமே அவளை அவளே காயப்படுத்தினான்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான். நேர்ல வந்தா என்னோட லைசன்ஸ் போயிரும். நீங்களும் தப்ப முடியாது..

கண்டிப்பாக பிரியசகி வர மாட்டாள். அவளால் நகர கூட முடியாது. ஆதாரம்னு தான் அந்த சஞ்சய் எதையாவது எடுத்துட்டு வருவான். சஞ்சயும் இனியவனும் என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் எனக்கு எல்லாம் நன்றாக இருந்திருக்கும்.

இனியவனா? அது யார் சார்?

அது உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் பேசும் விதத்திலும் வீடியோவிலும் தான் எல்லாம் உள்ளது. அதை வைத்து தான் உங்களுக்கு இன்னும் பணம் கொடுக்கலாமா? வேண்டாமா? என தீர்மானிப்பேன் என்றான் சரண்.

சார், உங்க அம்மா?

அவங்க உடல்நலமில்லைன்னு ஏதாவது டிராமா பண்ணிக்கலாம் என்றான்.

“தேங்க்யூ சார்” ராமதாஸ் சரணுடன் கை குலுக்கி விட்டு நகர, விரைந்து பைக்கை எடுத்த இனியவன் சரணுக்கு எதிர் திசையில் சென்று சஞ்சயை அழைத்தான்.

“அண்ணா, இந்த மொபைல்ல ஒண்ணுமே இல்லை” பிரியசகி கொடுத்த கைபேசியை ஆராய்ந்த படி கூறினாள் இந்துஜா.

“ஒன்றுமில்லாமல் எப்படி தருவா? என்னிடம் கொடு” காரை நிறுத்தி அவனும் பிரசாத்தும் பார்க்க, அதில் எந்த ஆதாரமும் இல்லை.

“என்ன இது?” சிந்தனையுடன் காரை எடுத்தான் சஞ்சய். அவன் மனதில் பிரியசகி உறுதியாக கூறியது ஓடிக் கொண்டே இருந்தது.

அவன்  கைபேசி ஒலிக்க, ஸ்பீக்கரில் போட்டான் சஞ்சய்.

“மாமா…” பதட்டமுடன் இனியவன் அழைக்க, அவன் குரலில் அதிர்ந்த இந்துஜா தன் சகோதரனை பார்த்தாள்.

“என்ன இனியவா?” மேலும் சிந்தனை வலுக்க, சகோதரியின் அதிர்ந்த விழிகளையும், பிரசாத்தின் முறைப்பையும் வாங்கி அவன் சொல்வதை கேட்டு சீற்றமுடன் காரை நிறுத்தினான்.

“நீ எங்க இருக்க?” சஞ்சய் கேட்க, நான் என்று இனியவன் அவன் இருக்கும் இடத்தை கூறி, “நாம சந்திக்கலாம்” ஓர் இடத்திற்கு வர சொன்னான்.

இனியவன் மீண்டும் அழைத்து பிரியசகிக்கு அவன் வாங்கித் தந்த  கைபேசியை கேட்டான்.

“நாங்க தான் வச்சிருக்கோம்” சஞ்சய் கூறி இனியவன் முன் காரை நிறுத்தினான்.

“மாமா, நேரமில்லை காரை எடுங்கள்” அவன் பின்னே ஏற, இந்துஜாவை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை காணவும் மூச்சடைத்தது.

சிரமப்பட்டு அவளை தவிர்த்து கைபேசியை வாங்கி, அவனது கைரேகையை வைக்கவும் திரை அவ்வலைபேசியில் ஒளிர்ந்தது.

இந்துஜாவும் பிரசாத்தும் அவனை அதிர்ந்து பார்க்க, அவ்வலைபேசியில் உள்ள வீடியோக்களை மட்டும் மளமளவென ஏதோ செய்தான். பின் அவ்வலைபேசியில் இருக்கும் அனைத்தையும் அழித்து அவனது பாக்கெட்டில் வைத்தான்.

“என்ன வீடியோ தான் அதில் இருந்தது?” சஞ்சய் கேட்க, “கோர்ட்டுல தெரியும் மாமா” என்று இந்துஜாவை பார்த்து புன்னகைத்தான். அவள் அவனை முறைத்து நகர்ந்து அமர்ந்தாள்.

சஞ்சய் கண்ணாடி வழியே இனியவனை பார்க்க, அவன் கெஞ்சலாக முகத்தை வைத்து இந்துஜாவை பார்க்க, அவள் முறைத்தவாறு விரல் நீட்டி எச்சரித்தாள். முகம் மாற வெளியே பார்வையை பதித்தான் இனியவன்.