சூரியன் 30
ராக்கி ஒருவனை கடிக்க, ஷ்ஷ்ஷ்ஆஆ…. அவன் அலறினான்.
“ஒரு குழந்தையை பார்த்துக்க முடியாதாடா?” தன் ஆட்களிடம் சத்தமிட்ட ஹர்சவர்தன், “ஓ! மாம்…உன்னோட மாம்மா? சஞ்சய் மகனா நீ?”
ஆமாடா பரதேசி..
உங்கள் இருவரையும் தான் சஞ்சய் தத்து எடுத்துருக்கானா? பசங்க இப்ப தான் சொன்னாங்க..
திமிருடனான பார்வையை ஹரிஹரன் அவனை நோக்கி வீசினான்.
உன்னை கட்டிப் போட்டு வச்சும் எவ்வளவு திமிரு உனக்கு? அப்படியே அப்பனை போல…சஞ்சய் பயாலஜிக்கல் பாதரா இல்லைன்னாலும் அவனோட இருந்திருக்கேல்ல அதான் இந்த திமிரு…இதை எப்படி அடக்குறேன் பாரு என்று ஆட்களிடம் கண்ணை காட்டினான் ஹர்சவர்தன்.
பிரியசகியின் கட்டை கழற்றி விட, அவள் வேகமாக ராக்கியை நோக்கி செல்ல, அவள் முடியை பற்றி இழுத்து ஓங்கி அறைந்தான் ஹர்சவர்தன். அவள் சுழன்று கீழே விழுந்தாள்.
மாம்ம்ம்ம்ம்ம்ம்ம்….கத்தினான் ஹரிஹரன். ராக்கி கத்தி அழுதான்.
என்னடா மாம்? என்று பிரியசகியை விடாமல் இழுத்து அவளை அணைத்தான். அவள் திமிறி விடுபட முயன்றாள்.
வேண்டாம். அவங்க மேல கை வைக்காத சீறினான்.
கன்னத்தோடு கன்னம் உரசி அவன் நாக்கை அவளது கன்னத்தில் ஊர விட, அருவருப்புடன் முகத்தை திருப்பி அவனிடமிருந்து அழுது கொண்டே தப்ப முயன்றாள் பிரியசகி.
ராக்கியும் மாம்…மாம்…சொல்லி சொல்லி அழ, அதை கவனிக்கும் நிலையில் இருவரும் இல்லை.
ஏய்ய்ய்….ஹரிஹரன் கத்த, வேகமாக அவளை நகர்த்தி பிரியசகி முந்தானையை பிடித்து ஹரிஹரனை பார்த்துக் கொண்டே ஹர்சவர்தன் இழுக்க, அவள் சுழன்று சுழன்று தன்னிலை படுத்தி நிற்க புடவை அவன் கைக்கு செல்ல, மார்பை இரு கைகளாலும் மறைத்து அப்படியே அமர்ந்து கதறி அழுதாள்.
ஹரிஹரனும் அவனின் தாயை தரண் கற்பழித்து கொன்றது நினைவுக்கு வந்து கட்டை அவிழ்க்க போராடிக் கொண்டிருந்தான்.
உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுல்ல? எனக்கு நீ ஒருத்தி போதும் நான் இழந்ததை பிடிக்க. எவ்வளவு அழகு. உன்னை விற்றால் நான் கோடிக்கணக்கில் சம்பாதித்து என் பழைய இடத்தை அடைந்து விடுவேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. எதையும் டெஸ்ட் செய்து தான் விற்பேன் என்றவன் அவளை நெருங்கினான். அவள் ஓட…அவன் ஆட்கள் அவளை மறித்தனர்.ஹரிஹரன் கத்திக் கொண்டிருக்க, ராக்கியோ அழுது கொண்டே அவளிடம் கை நீட்டிக் கொண்டிருந்தான்.
ஏய்ய்…மூச்ச்ச்…ஒருவன் சத்தமிட, ராக்கி கோபத்தில் மீண்டும் அவனை கடித்து விட்டான். அவன் ராக்கியை கீழே விட, கை நீட்டி அழுது கொண்டே ராக்கி பிரியசகி நோக்கி வந்தான். ஏற்கனவே பொறுத்திருந்த அவன் இம்முறையும் ராக்கி கடிக்கவும் வலியை பொறுத்து அவனை இழுத்து அடிக்க ராக்கி மயங்கி விட்டான்.
“பொட்ட மாதிரி கட்டிப் போட்டிருக்க? ஆம்பளையா இருந்தா அவுத்து விடுடா” சீற்றமுடன் உரக்க கத்தினான் ஹரி.
உரக்க சிரித்த ஹர்சவர்தன், உன்னை கொல்ல ரொம்ப நேரம் ஆகாது அவன் ஹரி பக்கம் செல்ல, கண்ணீருடன் அவன் காலை பிடித்தாள் பிரியசகி.
அவளை எத்தி தள்ளி ஹரிஹரனை அவிழ்த்து ஹர்சன்வர்தன் அடிக்க, அவனிடமிருந்து லாவகமாக தப்பி அவனை அடித்தான் ஹரிஹரன்.
வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்த ஹர்சவர்தன், ஹரி எதிர்பார்க்காத நேரம் அவனை தள்ளி அவன் ஆட்களிடம் கண்ணை காட்ட, அவர்களை சமாளிக்க ஹரியால் முடியவில்லை.
“அவனை விட்ருங்க” கையெடுத்து கும்பிட்ட பிரியசகி தன் இரு மகன்களையும் பார்த்து கதறி அழுதாள்.
முகத்தில் பலகாயத்துடன் மூக்கு வாயிலிருந்து இரத்தம் வழிய இருந்த ஹரிஹரனை கீழே தள்ளி விட்ட அவன் ஆட்கள் ராக்கியை பார்க்க, “அந்த குழந்தையையும் கொல்லுங்கடா” என்ற வார்த்தையில் எழுந்து அவனை அடித்தாள் பிரியசகி.
அவள் அடி ஹர்சாவிற்கு சுகவதை கொடுத்தது. அவன் இன்பமாக அனுபவிக்க, அவளை கீழே தள்ளி அவள் மீது படர்ந்தான்.
அடிப்பட்டு மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்த ஹரிஹரன் கரம் நீட்டி…மாம்…அழைத்து பிரியசகியை நெருங்க முயற்சிக்க ஒருவன் ஹரியை நகர விடாமல் பிடிக்க மற்றவன் அவனது இருகரத்தையும் மிதித்துக் கொண்டிருந்தான்.
பைக்கின் சத்தம் விரைவாக கேட்க அனைவர் கவனமும் கதவின் பக்கம் செல்ல, டமாரென்ற சத்தமுடன் கதவை உடைத்து பைக்கை விட்டு இறங்கினான் சரண். அவனை காணவும் பிரியசகி உள்ளம் மேலும் பதைத்தது. அவன் உருவம் இன்னும் அவளை பயமுறுத்தியது.
“அவனை முடிங்கடா” ஹர்சவர்தன் சத்தமிட, சரணை கண்டவாறே இமைகளை மூடினான் ஹரிஹரன்.
சரண் நேராக ஹர்சனிடம் வர, அவன் ஆட் கள் நால்வரும் அவனை நகர விடாமல் பிடிக்க, ஹர்சவர்தனின் செயலில் துடித்து கதறினாள் பிரியசகி. கண்ணீர் நிற்காமல் வர அவனை தடுக்க முயன்று தோற்று தோற்று மீண்டும் முயன்று கொண்டிருந்தாள்.
அனைவரையும் ஒரே தள்ளாக தள்ளியவன் ஹர்சவர்தனின் சட்டையை பிடிக்க, ஜிம்பாடி ஒருவன் சரணை இழுத்து அடிக்க, இருவருக்கும் சண்டை நடக்க, இனியவனும் சஞ்சயும் அவ்விடம் வந்தனர்.
சஞ்சயை காணவும் சஞ்சய்…சஞ்சய்…பிரியசகி அழுகை அதிகமாக அவளது நிலைகண்டு துடித்து போனான் அந்த காவலன். அவன் நேராக ஹர்சவர்தனை இழுத்து அடிக்க, ராக்கி கன்னத்தை அடித்து எழ வைக்க முயன்று கொண்டிருந்தான் இனியவன்.
“இனியவா….” சஞ்சய் கண்ணை சரணிடம் காட்டினான். அங்கே சரண் அந்த ஜிம்பாடியுடன் அடி வாங்கி போராடிக் கொண்டிருந்தான். இனியவன் ராக்கியை தன்னுடன் சேர்த்து கட்டி சரணுடன் சேர்ந்து அந்த ஜிம்பாடியுடன் அவனை வீழ்த்தி விட்டு ஹர்சவர்தன் ஆட்களை அடித்து போட்டனர்.
கீழே கிடந்த தன் புடவையை எடுத்து உடுத்தி அவர்களை பார்த்தாள் பிரியசகி.
சஞ்சயும் ஹர்சவர்தனும் கட்டிக் கொண்டு உருள, சஞ்சய்க்கு அவனது காயம் மேலும் காயமாகிப் போனது. போலீஸார் அவ்விடம் சூழ்ந்து ஹர்சவர்தனையும் அவன் ஆட்களையும் கைது செய்து அழைத்து சென்றனர்.
“சஞ்சய்…” கதறியவாறு பிரியசகி அவன் மார்பில் புதைய, ஏதோ வழவழப்பாக அவள் முகத்தில் படுவது போல இருக்க நகர்ந்து அவனை பார்த்தாள்.
அடிபட்ட சஞ்சயின் காயத்திலிருந்து இரத்தம் குபுகுபுவென வர அவள் மீதே சரிந்தான் சஞ்சய்..
மாமா…ராக்கியுடன் இனியவன் அதிர,
சஞ்சய் சஞ்சய்…இதழ்களும் கரங்களும் நடுங்க அவன் மீதிருந்த சஞ்சய் முகத்தை நிமிர்த்தி பார்த்த பிரியசகி அவன் விழிக்காமல் இருக்க கதறி தீர்த்தாள்.
சரண் ஹரிஹரனை தூக்க, ஆம்புலன்ஸிற்கு ஏற்கனவே ஆட்கள் அழைத்திருக்க, அதில் அனைவரும் ஏறினார்கள். சஞ்சய் மீதான பிரியசகியின் காதலை உணர்ந்தான் சரண்.
ராக்கியை விழிக்க வைத்த இனியவனை பார்த்த அவன், சித்தா..மாம்…அண்ணா என்றவன் சஞ்சயை காணவும் ….இதுவரை அவன் அழைக்காத டாட் என்ற வார்த்தை வந்தது. பிரியசகி இடிந்து இருக்க, அவள் கரத்தில் ராக்கியை திணித்தான் இனியவன். அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.
மருத்துவமனையில் சந்திரசேகருக்கு சிகிச்சை முடிந்து அவர் மயக்கத்தில் இருக்க, ரக்சன் தலையில் கட்டுடன் அங்கங்கு மருந்திட்டு தந்தை அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். இவர்களை அந்நிலையில் பார்க்கவுமே வரவேற்பறை பெண் ரதியை அழைத்திருக்க, அவ்விடம் வந்திருந்தாள். பின் அனைவரும் பதறி வந்திருக்க, ரக்சனை பார்த்து…அண்ணா என்று ரக்சனா ஓடி வந்து அவனை அணைத்தாள்.
ரக்சனுக்கு சஞ்சய் நிலை பற்றி விவரம் தெரிந்து அதிர்ந்து கைபேசியை விட்டிருந்தான்.
அண்ணா என்னாச்சு? தேஜ் கேட்க, ரதியும் ரக்சனாவும் அவனிடம் வந்தனர்.
அண்ணா…அண்ணா…தேஜ் ரக்சனை உலுக்க, சுயம் பெற்றவன்…நர்ஸ் ஆப்ரேசன் தியேட்டருக்கு ஏற்பாடு பண்ணுங்க..சத்தமிட்டான். கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்தது.
ரதியை பார்த்து தயங்கியவாறு… சஞ்சய்…என்றான்.
அ…அ..அண்ணா..அண்ணாவுக்கு என்னாச்சு? மூச்சு விட்டு திணறினாள் ரதி.
அடிபட்ட இடத்துல அதிகமா ப்ளீட் ஆகுதாம். மயக்கீட்டான். கிரிட்டிகல்னு நினைக்கிறேன் ரக்சன் சொல்ல, ரதிக்கு சிறுவன் ஒருவன் மூழ்கி கையை அவளிடம் நீட்டுவதுமாகவும், சஞ்சயின் அடிபட்ட இடத்தில் குருதி வழிய அவன் உயிருக்கு போராடுவது போல எண்ணம் தோன்ற, அவள் நெஞ்சுக்கூடு ஏறி ஏறி இறங்கியது.
டாக்டர்…சஞ்சய் சார்…என்று செவிலியர் ஒருவர் கூற, சுயம் வந்து ரதியும் ரக்சனும் சென்றனர்.
சஞ்சயை அவசர பிரிவில் சேர்க்க, பிரியசகி தேற்றுவார் இல்லாது கையில் ராக்கியுடன் உடைந்திருந்தாள். ராக்கி அழுது அழுது உறங்கி இருந்தான்.
ரக்சனாவும் ரதியும் பிரியசகியிடம் வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.
சார்…அவரு..ப்ளீஸ் ரக்சனின் கரம் பற்றி அழுதாள் பிரியசகி..
கண்ணை மூடி திறந்து அவள் கரம் நகர்த்தி சிகிச்சை அறைக்கு சென்றான். ஹரிஹரனை மருத்துவப்பெண் ஒருவர் பார்த்தார். சரணுக்கு கைகளில் பட்ட அடியால் கட்டு போட்டு விட்டனர். இனியவன் ராக்கியை வாங்கி தோளில் போட்டு இருந்தான்.
சற்று நேரத்தில் நவீனும், சஞ்சயின் குடும்பத்தினரும் வந்தனர். சுவர்ணலதாவும் நாகேந்திரனும் பிரியசகியிடம் விசாரிக்க, அவள் பதில் கூறாமல் அழுது தீர்த்தாள். அதில் இருவருக்கும் பயம் தான் அதிகமானது.
“ஆன்ட்டி எல்லாரையும் பார்த்துக்கோங்க” என ரக்சனா அவளை தன் அண்ணன் அறைக்கு அழைத்து சென்று ஒரு ஆடை கொடுக்க, ரதி சஞ்சய் குடும்பத்தினருடன் இருந்தாள்.
அழுகையை கட்டுப்படுத்தி ஆடையை மாற்றி அவளை சரி செய்து பிரியசகி வெளியே வர, அவள் கரம் பற்றினாள் ரதி.
ஹரிஹரனுக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அவனுக்கு விசயம் தெரிய அவன் எழவும் அவ்விடம் வந்த நவீன் அவனை நகர விடாமல் பிடித்துக் கொண்டான்.
சிக்னல் இல்லாததால் நடக்கும் எதுவும் பிரசாத் இந்துவிற்கு தெரியவில்லை. சிகிச்சை முடித்து சீஃப் டாக்டருடன் ரக்சனும் வெளியே வந்தான். எல்லாரும் அவர்களிடம் சென்றனர்.
சஞ்சய் ரெஸ்ட்ல இருக்கட்டும். நாளை அவனை பார்க்கலாம்.. என்றான் ரக்சன்.
அண்ணா, ப்ளீஸ் அவரை ஒரு முறை பார்த்துட்டு மட்டும் வரவா? என்ற பிரியசகியிடம் தலையசைத்து சோர்ந்து சுவர்ணலதா அருகே அமர்ந்து விட்டான் ரக்சன்.
சஞ்சய் அண்ணா…என்று ஏக்கமுடன் ரக்சனை பார்த்தாள் ரதி.
சஞ்சய்கு ஒன்றுமில்லை. சிகிச்சை முடிந்தது. அவன் நன்றாக ஓய்வெடுக்கணும். அதான் நாளை பார்க்க சொன்னேன். மணி மூன்றை காட்டியது.
ரதியின் தாயும் தந்தையும் அவளருகே இருந்தனர். முதலில் அவர்களை கவனிக்காதவன் கவனித்து பின் அவர்களிடம் தலையசைத்து நகர்ந்து ரதியை பார்த்தான் ரக்சன்.
சஞ்சய் அறைவாயிலில் சுவர்ணலதாவுடன் கண்ணீருடன் அவனை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள் பிரியசகி .
இனியவன் விடாமல் பிரசாத் இந்துஜாவை அழைக்க, பிரசாத் அழைப்பை எடுக்க, அவனிடம் விசயத்தை கூறவும் அவர்கள் இருவரும் பதறி வந்து விட்டனர்.
(ஒரு மாதம் கழித்து)
சஞ்சய்கு உடல் நிலை சரியான பின் ராக்கி மற்றும் ஹரிஹரனை அவர்கள் ஆசைப்பட்டது போல பள்ளியில் சேர்ந்தனர். ராக்கியும் ஹரியும் சஞ்சய் பிரியசகியை மாம், டாட் என்று அழைக்க ஆரம்பித்து இருந்தனர். சஞ்சய் இருவருடனும் நெருக்கமானான். ஹரி சைக்கிளில் பள்ளிக்கு சென்று வர, ராக்கியை சஞ்சய் தான் விட்டு அழைத்து வந்தான். தன் தாய் தந்தையுடனும் நேரம் செலவழித்தான்.
அன்றிரவு அனைவரும் உணவை முடித்து உறங்க சென்றிருக்க சஞ்சய் அடுக்கலைக்குள் சென்றான். பிரியசகி பாத்திரம் விலக்கிக் கொண்டிருந்தாள்.
சொருகிய புடவையினூடே வெளிர்நிற அவளது இடை அவன் கண்ணில் படவும் பின்னிருந்து அவளது இடையில் கையிட்டு அவன் மார்போடு அழுந்த அணைத்தான்.
முதலில் பயந்த பிரியசகி, என்ன சார் திடீர்ன்னு?
கிறக்கமுடன் “சகி” அழைத்தான். அவள் திரும்பி அவனை பார்க்க, அவளை இழுத்து அவன் உடலோடு நெருக்கி நின்றான். அவளுக்கு மூச்சடைத்தது.
சஞ்சய்…மோகனக் குரலில் அழைத்தாள்.
ம்ம்!!! சொல்லு சகி முணுமுணுப்பாக பேசினான்.
வேலையை முடிச்சிட்டு வாரேனே!
“சீக்கிரம் வா” அறைக்கு சென்றான்.
காலையிலிருந்து தன் மகனின் மருமகள் மீதான பார்வையில் ராக்கியை தங்கள் அறைக்கு முன்னதாகவே அழைத்து சென்றிருந்தார் நாகேந்திரன்.
படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த சஞ்சய் மனம் பரபரக்க ஆர்வமுடன் காத்திருந்தான். அறைக்கு வந்த பிரியசகி,
சஞ்சய் நா குளிச்சிட்டு வாரேன். கசகசன்னு இருக்கு என்று பேசிக் கொண்டே குளியலறை பக்கம் செல்ல, எட்டி அவள் கரம் பற்றி இழுத்தான்.
“சஞ்சய்…” பிரியசகி நெளிய,
அவளை தன் மடியில் அமர வைத்து, “குளிக்கலாம் வேண்டாம்” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இதுவரை காணாத சஞ்சயின் காதலுடனான மோகப்பார்வை அவளை நாணச் செய்ய, முகத்தை அவன் மார்பினுள் புதைத்தாள். அவளது தாடையை நிமிர்த்தி சஞ்சய் பிரியசகியின் விழிகளை பார்த்தான். அவளின் வெட்கமுடனான காதல் பார்வையில் அவனை அவள் விழிகளுக்குள் இழுத்துக் கொண்டாள். அவள் முகம் முழுவதும் சஞ்சய் முத்தமிட்டான்.
அவள் கழுத்தில் சஞ்சய் இளைப்பாற அவன் தலையை அவளுள் அழுத்தினாள். அவன் மேலும் அவளுள் சிக்குண்டான். அவன் விரல்கள் சென்ற இடம் முழுவதும் இதழ் தீண்டல் நிகழ்த்த பெண்ணவள் மயங்கிப் போனாள். ஏதோ நினைவு வந்தவனாக விலகி அவள் முகம் பார்க்க, அவளின் மயக்கத்துடனான முகம் பார்த்து புன்னகைத்து அவள் இதழில் மென் முத்தத்தை பதித்து அவளை அணைத்து படுத்து விட்டான்.
பிரியசகியின் கிளர்வுற்ற உணர்வுகள் மொத்தமாக வடிய இமை பிரித்து அவனை கண்டாள். கைகளை தலைக்கு பின் கொடுத்து யோசனையில் இருந்தான்.
தரணுனான கூடலில் ஒரு முறை கூட விருப்பமுடன் நடந்ததில்லை. செல்ல சிணுங்கள், கொஞ்சல் மொழிகள் எதையும் கேட்டதில்லை. ஆனால் சஞ்சயின் கொஞ்சலிலும் அவன் விரல், இதழ் தீண்டலிலும் சொல்லொனா உணர்வுகளை அடைந்திருந்தாள்.
“என்னாச்சு சஞ்சய்?” குரல் இன்னும் மயக்கத்தில் ஒலிக்க,
“சகி டாக்டர் கூறியது போல ஆறு மாதங்கள் கடந்து விட்டது தான். இருந்தாலும் உனக்கு வலிக்குமோ? பழையவாறு உன் உடல்நிலை மாறிடுமோன்னு பயமா இருக்குடா” அவள் கன்னம் வருடினான்.
இப்பொழுது கூட அவன் உணர்வுகளை மறைத்து தன் உடல்நலனை கருத்தில் வைத்து விலகுகிறானே! என்று அவ்வளவு மகிழ்ச்சி பிரியசகியினுள். ஆனால் அவனுக்கு இதுவரை தான் என்ன செய்தோம்? எதுவும் செய்யவில்லை. மனைவி என்று அவன் தனக்காக செய்ததில் தான் ஒரு பங்கு கூட அவனுக்கு ஏதும் செய்யவில்லை. என்னை ஒப்படைத்தே ஆக வேண்டும். வலி நமக்கு பழக்கம் தானே! என்று எண்ணினாள்.
எனக்கு பிரச்சனையில்லை சஞ்சய். எனக்கு என்னோட சஞ்சய் பற்றி தெரியும். திகட்ட திகட்ட என்னை காதலிக்கும் என் சஞ்சயின் விருப்பத்தை கூட நிறைவேற்ற முடியவில்லைனு எவ்வளவு வருத்தப்பட்டுட்டு இருக்கேன். இந்த ஆறு மாதங்களில் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி எனக்கே எனக்காக எவ்வளவு செஞ்சுருக்கீங்க….. பேசும் போதே அவளுக்கு கண்ணீர் வந்தது.
சகி, என்ன பேச்சுடா இது? எனக்கு உன்னை விட எதுவும் பெரியதில்லை. இன்று கொஞ்சம் எமோஸ்னல் ஆகிட்டேன். சாரிடா…
அவன் மார்பில் சாய்ந்து சஞ்சயின் விரல்களை ஆராய்ந்தவாறு, “எமோஸ்னலை கன்ட்ரோல் பண்ணாதீங்க சஞ்சய்” என்று அவன் இடை சுற்றி இறுக கட்டிக் கொண்டாள்.
எனக்கு பயமா இருக்கு சகி. இதுக்கு மேல உனக்கு ஏதாவது ஆனால் என்னால தாங்க முடியாது. உனக்காக ஆறு மாதம் இல்லை வாழ்நாள் முழுக்க அவன் சொல்லும் முன் வாயை கையால் மூடி..
“ப்ளீஸ் சஞ்சய், உங்களோட இந்த காதல் ஏன் எனக்கு தெரியாமல் போனது. முன்பே தெரிந்திருந்தால் நாம எத்தனை வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்” அழுதே விட்டாள் பிரியசகி.
சகிம்மா…எதுக்கு அழுற? எனக்கு கஷ்டமா இருக்கு.
ஏன் சஞ்சய் என்னை உங்களுக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு? நான் உங்களுக்காக முன்பும் எதுவும் செய்யவில்லை. இப்பொழுதும் எதுவும் செய்யவில்லை. நான் உங்கள் காதலுக்கு அருகதை இல்லாதவள்…அழுதாள்.
பிரியசகியை தன் மீது போட்டு, “இனி இப்படி பேசுன நான் உன்னுடன் பேசமாட்டேன் சகி” இறுக்கமான குரலில் கூறினான். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
நீ என்னோட உயிர் சகி. நாம உடலாலும் உள்ளத்தாலும் ஒருவர் தான். எனக்கு செய்ததை நானே பேசலாமா? கேட்க, அவன் மீது ஏறி அமர்ந்து அவன் இதழ்களை சிறை செய்திருந்தாள். வேண்டாம் சகி என அவன் தடுக்க இருந்த அவன் கைகள் அவள் கரத்தினுள் பின்னி பிணைந்து இருந்தது என்றால் அவன் இதழ்கள் அவள் இதழ்களில் சுகமாக இன்பவதை அனுபவித்தது.
பிரியசகி மேலும் முன்னேற, அவளை தடுத்து “சகி” அதட்டி அவளை படுக்கையில் நகர்த்தி கீழே விரித்து படுத்து விட்டான். அவன் செயலில் திகைத்து விழித்து பின் சினமாகி கோபமாக படுக்கையின் மறுபக்கம் படுத்துக் கொண்டாள் பிரியசகி. கூடல் தொடங்கும் முன்னே ஊடலாகிப் போனது.
நாட்கள் நகர்ந்தது.
மாமா..அழைத்துக் கொண்டே பிரசாத் வீட்டினுள் நுழைந்தான்.
“என்னடா இந்து எங்க?” நாகேந்திரன் கேட்க,
இனியவா அண்ணன்கிட்ட தான் பேசிட்டு இருக்கா அங்கிள்
மாப்பிள்ள வந்துருக்காரா? உள்ள வர சொல்லுடா…
அழைத்தேன் அங்கிள். அவர் வேலையா இந்த பக்கம் வந்தாராம். நாங்க இடையிலே பார்த்துட்டோம். இருவரும் ஐஸ்கிரீம் கடையில் இருக்காங்க..
ஓ! சரி…நீ என்ன திடீர்ன்னு சொல்லாம வந்துருக்க?
மாமா உங்ககிட்ட சொல்லலையா? முக்கியமான விசயம் எங்களை வரச் சொன்னாங்க..
என்னிடம் கூறவில்லையே! மனைவியையும் மருமகளையும் பார்க்க, அவர்களும் தெரியவில்லை என்று பாவனை செய்ய, ஹரி பிரசாத்திடம் சென்று அவன் பாக்கெட்டில் கை விட்டான். பட்டென அவன் கையில் அடித்த பிரசாத்…
“இங்க இருக்குடா” என்று நூறு ரூபாயை பேண்டு பாக்கெட்டிலிருந்து ஹரிக்கு கொடுத்தான்.
“ஹரி என்ன பண்ற?” கரண்டியுடன் அவர்களை நோக்கி வந்தாள் பிரியசகி..
அங்கிள், மாம் அடிக்கிறாங்க. நீங்க எனக்கு பணம் கொடுக்கக் கூடாதா? கேளுங்க…என்றான்.
“நில்லுறா” பிரியசகி கரண்டியை ஓங்க, இருவரும் பிரசாத்தை சுற்றி சுற்றி வந்தனர். இந்துஜாவும் உள்ளே வந்தாள்.
“சித்து…” ராக்கி அவளிடம் ஓடி வந்து தாவினான். இருவரும் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
நாகேந்திரன் அர்த்தமுடன் தன் மருமகளை பார்க்க, அவள் நின்று பின் புரிந்து அவளறைக்கு சென்றாள்.
சஞ்சயும் பிரியசகியும் அதிகம் பேசவில்லை. முக்கிய விசயமென்றால் மட்டும் பேசுவார்கள். நாகேந்திரனுக்கு இது வருத்தத்தை கொடுத்தது. விசயம் தான் புரியவில்லை. இருவரிடமும் பேச தயக்கமாக இருந்தது. சுவர்ணலதாவிடம் இதை பற்றி விசாரிக்க சொல்ல அவருக்கு பயம். எங்கே அவர் பழையவாறு மகன், மருமகளை பிரித்து விடுவாரோ என்று… இருவரையும் கவனித்தவாறு அமைதியாக இருந்தார்.