இவர்கள் பேசிக் கொண்டிருக்க வெளியே அனைவரையும் அடித்து தள்ளி சஞ்சயும் ராகவனும் வீட்டிற்குள் வந்தனர். இந்து ராக்கியுடன் ஒருவன் பிரியசகி அறையிலிருந்து வந்தான்.
“விடுடா பொறுக்கி..” இந்துஜா அவள் கரம் பிடித்து இழுத்து வந்தவனை திட்டிக் கொண்டே வந்தாள்.
“இங்க பாரு சஞ்சய் நீயும் உன்னோட மாமனும் சேர்ந்து நல்லா ஆட்டம் காட்டுனீங்க? எங்க ஆட்டம் எப்படி இருக்கு?” அவன் கேட்க, விசில் சத்தம் பலமாக கேட்டது..
மாடியில் சஞ்சய் அறைக்கு வெளியே வெளிர்நிற ஆடையில் கண்கள் இதழ்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மறைத்தாற்போல ஒருவன் நின்றிருந்தான்.
“யாருடா நீ?” லதாவை பிடித்து வைத்திருந்தவன் கேட்க, அவன் பதில் அளிக்கவில்லை. இதழ்கள் சிரிப்பில் விரிய சஞ்சயின் துப்பாக்கியை அவர்கள் முன் நீட்டினான் அவன்.
இவர்களின் சிந்தனை கலைவதற்குள் பட்டு பட்டென என துப்பாக்கி சத்தம் கேட்டது. இந்துஜா பயந்து ராக்கியை விட, தோட்டாக்கள் துளைக்க வீட்டினுள் நுழைந்த ரௌடிகள் இரத்தத்துடன் சரிந்தனர்.
மாடியிலிருந்து கீழே குதித்த ஹரிஹரன் தனித்து நின்று கொண்டிருந்த ராக்கியை இழுத்து அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அவனோட விழுந்தான்.
“ஓஹோ! அப்ப நான்?” ஹரிஹரன் கேட்க, அனைவரும் அதிர்ந்தனர்.
ஆம்..ஹரிஹரன் பதினாறு வயதையொத்த சிறுவன். தன் தாயை சரணிடம் பறி கொடுத்தவன்..
“மாமா, இவன் என்ன சொல்கிறான்? பள்ளி படிக்கும் சிறுவனா இவன்?” நவீன் அதிர்ந்து கேட்டான்.
“ஷ்ஷ்…யாரும் பேசக் கூடாது. நான் தான் பேசுவேன்” என்ற ஹரிஹரன் சஞ்சயை பார்த்து, உங்க யாரையும் கொல்ல நான் வரலை. எனக்கு வேண்டியது கிடைத்தால் போயிடுவேன்.
“உன்னை போக விடுவேன்னு நீ நினைக்கிறியா?” சஞ்சய் அசால்ட்டாக கேட்டான்.
போக மாட்டேன்னு நினைக்கிறீங்களா மிஸ்டர் அசிஸ்டென்ட் கமிஷ்னர் சார்..?
புன்னகைத்த சஞ்சய், என்ன வேணும்னாலும் பேசிக்கலாம். நீ சரணடைந்து விடு..
நான் சொல்றதை நீங்க கேக்கணும்னு தான் இங்க வந்தேன். நான் செய்யவேண்டியது நிறைய இருக்கு. அதை முடிச்சிட்டு உங்களை தான் சஞ்சய் சார் பார்க்க வருவேன்..
“இவன் கிட்ட என்ன பேசிட்டு இருக்கிற சஞ்சய்?” ராகவன் சினமுடன் துப்பாக்கியை அவனிடம் நீட்ட, அவன் ராக்கி கழுத்தை பிடித்தான். அனைவரும் பதறினார்கள்.
மாமா இருங்க. நான் பேசிக்கிறேன் என்ற சஞ்சய், “அவன விடு. உனக்கு என்ன பேசணும்?” அமைதியாக கேட்டான்.
ராக்கியின் கழுத்தை ஹரி விட, அவனை தன் பக்கம் இழுத்தாள் பிரியசகி.
ஹரி சினமுடன் பிரியசகியை இழுத்து துப்பாக்கியை நெற்றியில் வைத்தவன் சஞ்சயின் முகம் பார்த்தவாறு அவளது வயிற்றில் துப்பாக்கியை பதித்தான். பிரியசகிக்கு ஹரிஹரனின் செய்கையில் வியர்த்து ஊற்றியது. மரணம் வரை தொட்டு மீண்டவளை பயம் தொற்றியது.
“யாராவது லேசாக நகர்ந்தால் கூட இவங்கள பார்க்க முடியாது” என்று சஞ்சயிடம், “இவங்ககிட்ட தான் பேசணும்” அவனுடன் நெருக்கமாக இருந்த பிரியசகியை பார்த்தான். அவன் கரங்கள் லேசாக தளர்ந்தது.
சஞ்சய்கு வியப்பாக இருந்தது. அமைதியாக அவர்களை வேடிக்கை பார்த்தான்.
“உனக்கு என்னை தெரியுமா?” பயம் தெளிந்து பிரியசகி கேட்டாள்.
ஹரியின் இதழ்கள் இறுக, இமைப்பதை மறந்தவன் போல பிரியசகியை பார்த்தான். அவன் இதயதுடிப்பின் சத்தம் பிரியசகிக்கு கேட்டது. அவள் அவனது கருமை கலந்த நீல விழிகளை கண்டு, “எங்கோ பார்த்தது போல இருக்கே!” அவனையே பார்த்தாள்.
நீதிமன்றத்தில் நீங்க கொடுத்த விவரத்தை தவிர சரண் பற்றி வேற எதையும் நீங்க மறைக்கிறீங்களா?
“என்ன?” விழிவிரித்து அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
உங்கள தான் கேக்குறேன்..
பட்டென விழித்துக் கொண்டவள், “இல்லை” என்றாள்.
“இல்லையா? சரண் மீது உங்களுக்கு காதல் இருக்கோ?” அவன் கேட்க, எல்லாரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
“உனக்கு எப்படி அவனை தெரியும்? மாமா இவனுக்கும் சரணுக்கும் என்ன சம்பந்தம்?” நவீன் சினமுடன் கேட்டான்.
“ஷ்ஷ்…எதுக்கு இப்படி கேக்குற?” சஞ்சய் பிரியசகியை பார்த்தான்.
முக்கியமான பைல் ஒன்று இவங்களிடம் இருந்திருக்கணுமே! இவங்க சரணுக்காக அதை கொடுக்கவில்லை.
முறைத்த பிரியசகி அவனை ஏறிட்டு, இல்ல எதுவும் இப்பொழுது என்னிடம் இல்லை..
சிரித்த ஹரிஹரன், இப்பொழுது இல்லை. முன்னாடி வச்சிருந்தீங்களோ?
விழிகளை உயர்த்தி ஒவ்வொருவராக பார்த்த பிரியசகி சஞ்சயின் கோபப்பார்வையில், “ஆமா அதை யாரோ திருடீட்டாங்க..” தலையை தாழ்த்தினாள்.
“என்னடி சொல்ற?” இந்துஜா ஹரிஹரனிடம், “தம்பி கொஞ்சம் அவளவிடு. நான் என்னன்னு கேக்குறேன்?” அருகே சென்றாள்.
இடக்கரத்தில் இருந்த துப்பாக்கியை வலக்கரத்திற்கு மாற்றி இடக்கரத்தை பிரியசகி இடையில் பதித்து அவளை நகர விடாமல் பிடித்துக் கொண்டான். அவளுக்கு ஏதோ அவன் தன்னை பாதுகாப்பது போல உணர்ந்தாள். ஆனால் முழுதாக என்ன விதமான உணர்வு கூற முடியவில்லை..
வலக்கரத்தில் இருந்த துப்பாக்கி இந்துஜா முன் நீட்டினான்.
சொல்லுங்க? அந்த பைல்ல என்ன இருந்தது?
தெரியல. அது கைக்கு வரவும் என்னோட அலமாரியின் மறைவான இடத்தில் வைத்தேன். அதை மாலை பார்ப்பதற்குள் அங்கு அது இல்லை..
அது என்னவென்று தெரியுமா?
அமைதியாகி விட்டாள்.
சொல்லுங்க…???
அது ராஜன் மருத்துவமனையின் இல்லீகல் பைல்ஸ்..
“இதெல்லாம் நீ சொல்லவேயில்லை” சஞ்சய் சினமுடன் கேட்டான்.
“ஷ்…பேசிட்டு இருக்கேன்ல?” என்ற ஹரிஹரன் சஞ்சய் பிரியசகியை ஏதும் சொல்லக் கூடாது என்று சத்தமிட்டான்.
அதை யாரு உங்ககிட்ட கொடுத்தது?
மிஸஸ் டாக்டர் கார்த்திகா மேம்..
ராகவனும் சஞ்சயும் ஹரிஹரனை பார்த்தனர். அவனும் இருவரையும் பார்த்தான்.
“சரி, அவங்க உங்ககிட்ட வேற என்ன சொன்னாங்க?”
“அந்த பைல்லை பத்திரமா வச்சுக்க சொல்லி என்னிடம் கொடுத்தாங்க. அது உன் வீட்டினர் கைக்கும் போகக் கூடாது. எனக்கு எதுவும் பிரச்சனைன்னா அதை உடனே காவல் ஆய்வாளர் சந்திரசேகரிடம் ஒப்படைக்க கூறினார்” கண்கலங்கினாள்.
அப்புறம்?
அவங்க பைல்லை கொடுத்த மறுநாள் இரவு சரண்….என்று அனைவரையும் கண்கலங்க பார்த்து, அவங்கள கற்பழிக்க முயலும் போது நான் அவங்கள காப்பாற்ற முயன்றேன். ஆனால் என்னை கட்டிப் போட்டு என் முன் அவரை…அழுகை வந்தது பிரியசகிக்கு.
சரண் அவனது தனிப்பட்ட அறைக்கு அவரை இழுத்து சென்ற போது அவரோட மகன் என் கட்டை அவிழ்த்து விட்டான். நாங்கள் அவ்வறைக்கு சென்று பார்த்த போது சரண் கார்த்திகா மேம் உடலை கூறு போட்டு வைத்திருந்தான். பாட்டில்களில் அவரது அனைத்து உறுப்புகளையும் வைத்திருந்தான்.
அவரது மகன் சத்தமிட்டு அழுதான். அதை கேட்டு சரண் அவனை விரட்டினான். அவனையும் கொன்று விட்டான்..மடிந்து அழுதாள் பிரியசகி.
விழிகலங்க ஹரிஹரன் அவளை பார்த்தான்.
“அந்த பையனை உங்களுக்கு முன்னமே தெரியுமா?” அவன் கேள்வியில் அவனை பார்த்தாள்.
ம்ம்! நல்லா தெரியும். திருமணம் முடிந்து ஆறுமாதத்திலே கர்ப்பம் தரித்து விட்டது. சரண் தான் படிக்க வேண்டும். குழந்தை இப்பொழுது வேண்டாம்னு படிப்பை காரணம் காட்டி கலைக்க அழைத்து சென்றார். எனக்கு பிரச்சனையில்லை. பார்த்துக்கிறேன்னு சொன்னதுக்கு எல்லாரும் அவரை தப்பா நினைப்பாங்கன்னு சொல்லி தான் கருவை கலைக்க மருத்துவமனை அழைத்து சென்றார்.
கார்த்திகா மேம், சரண் அவரிடம் கூறியதை என்னிடம் கூறினார். அப்பொழுதே என்னுடைய கர்ப்பப்பையை அகற்ற சொல்லி இருந்திருக்கான் அவன். ஆனால் அவருக்கு மனமில்லை. சிசுவை அழிப்பதே தவறு. இதில் கர்ப்பப்பையை எடுக்கணும் என்பது அவருக்கு உடன்பாடில்லை. எனக்கும் சிறுவயது எனவும் என்னிடம் கூறி அகற்றாமல் இருந்து சரணை ஏமாற்றி விட்டோம்…அன்று தான் முதலாவதாக அவனை சந்தித்தேன்..
பிரியசகி கூறிய டாக்டர் கார்த்திகா ஹரிஹரனின் தாய். அவரின் கொலைக்காக தான் அவர்களுக்கான தண்டனையை கொடுக்க எண்ணி கொல்ல காத்துக் கொண்டிருக்கிறான் ஏற்கனவே சஞ்சய் அறிந்தது தான்.
பிரியசகி நிறுத்தவில்லை. அவளுக்கு அவளின் இறந்த கருக்கள் எண்ணத்தில் வந்தது.
அடிக்கடி கார்த்திகா மேமுடன் பார்த்திருக்கேன். என்னை சரண் கஷ்டப்படுத்தினால் தேனு அக்கா மேமிற்கு கூறி விடுவார். அவர் என்னை வந்து முதலில் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வரும் போதெல்லாம் சிட்டியும் வருவான்.
கார்த்திகா ஹரிஹரனை அவ்வாறு தான் அழைப்பார். ஓ! அதான் சகியிடம் அவன் கண்கள் பாசத்தில் நனைகிறதோ? சஞ்சய் எண்ணினான்.
“அந்த பையனை விடு பிரியா” ராகவன் கூற, ஹரிஹரன் அவரை முறைத்தான்.
அந்த பைல்ல ஆர்கன் கடத்துவது பற்றி ஏதாவது கிடைத்ததா?
இல்ல அண்ணா, எனக்கு தெரியாது. பழக்கம் என்பதால் உதவினேன். ஆனால் அவன் அவங்கள…கண்கலங்கினாள்.
“தேங்க்ஸ்” பிரியசகியை கண்டு கூறி மாடி ஏற, ராகவன் அவனை பிடிக்க அவனது காலில் சுட, அவன் தப்பி ஓர் அறைக்குள் சென்றான். இவர்கள் சென்று பார்க்க அவன் அங்கு இல்லை…
“தப்பிச்சுட்டான்..” ராகவன் சத்தமிட, “மாமா இந்த பையன் நல்லது செய்வது போல இருக்கே!” நவீன் கேட்டான்.
என்ன இருந்தாலும் கொலை செய்ய முயன்றிருக்கான்..
கொலையா? யாரை? சுவர்ணலதா கேட்டார்.
ரக்சன் முன் வொர்க் செய்த ராஜன் மருத்துவமனை உரிமையாளரை தான் என்றார் ராகவன்.
“என்ன? அவரை கொலை செய்ய போனானா?” பிரியசகி திகைத்து கேட்டாள்.
சஞ்சய் அவளது கரம் பற்றி தனியே அழைத்து செல்ல, “அண்ணா…” இந்துஜா கண்ணை காட்டினாள். அவர்கள் பின் அவன் தாயும் வந்தார்.
அம்மா, பேச தான் போறேன்…
“சும்மா பார்க்க தான… நானும் வாறேன்” முகத்தை தோளில் இடித்தார்.
“நீ வா…” பிரியசகியை அவன் இழுத்து செல்ல, ராகவனும் பின்னே சென்றார்.
சொல்லுங்க அண்ணா. கார்த்திகா மேம்மை உங்களுக்கு முன்பே தெரியுமா?
“தெரியும்” அமர்ந்தார் ராகவன்.
மாமா…
சஞ்சய், எனக்கு அந்த பைல் பள்ளிப்பையில் இருந்து கிடைத்தது. திருடன் ஒருவனை பிடிக்க போன சமயம் கீழே அப்பையை பார்த்து எடுத்தேன். அதில் சிறுவன் ஒருவனின் அடையாள அட்டையும் இந்த பைல்லும் இருந்தது. அதிலுள்ள விசயத்தை கண்டு அதிர்ந்தேன்..
மாமா, அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சே எதுக்கு ஹரிகிட்ட இப்படி கேட்டீங்க?
சஞ்சய் சார்…தயக்கமுடன் அழைத்தாள் பிரியசகி.
அந்த பையனை பற்றி உங்களுக்கு தெரியுமா? சொல்றீங்களா?
“எதுக்கு?” தெரியாதது போல சஞ்சய் கேட்டான்.
அவன் என்னை தெரிந்தது போல பேசுறான். எனக்கும் அவனை எங்கோ பார்த்தது போல இருக்கு.
“எங்க பார்த்தது போல இருக்கு” ராகவன் அவளை கவனித்தார்.
“தெரியல அண்ணா. ஆனால் பார்த்தது மட்டுமல்ல பழகியது போல இருக்கு. இங்க எனக்கு யாருடனும் பழக்கமில்லை. எனக்கு ஏன் அப்படி தோணுதுன்னு தெரியல…” சஞ்சயை பார்த்தாள்.
“உன்னை கொல்ல வருவான்னு உனக்கு பயமா இருக்கா?”
விரக்தியுடன் அவரை பார்த்து, நான் என்னை இழந்து பல வருசமாச்சு அண்ணா. நவீனுடன் இருக்கும் போது மட்டும் தான் என்னால பழையவாறு இருக்க முடியுது. அதுவும் அவனது கேலி கிண்டலில்…
ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டுமோ அது எதுவும் என்னிடம் இல்லை…. குழந்தையை எண்ணி கண்ணீர் வந்து விட்டது பிரியசகிக்கு.
சஞ்சய்கு சீற்றம் பிறந்தாலும் அதனை கட்டுப்படுத்தி அவளிடம், “ஒரு பொண்ணுக்கு குழந்தை மட்டும் முக்கியமில்லை. அதை தாண்டி பெண்களுக்கு கிடைக்கவேண்டிய மகிழ்ச்சி குவிந்து இருக்கிறது. யாரும் அதை தேடி செல்வதில்லை” என்றான் நிதானமாகவே!
அவன் முகத்தில் என்ன கண்டாளோ பேசாமல் இருந்தாள்.
ஹரி பற்றி இப்பொழுது நீ அறிந்து கொள்ள வேண்டாம். உனக்கு தெரியும் போது தெரிந்து கொள். மாமா நீங்க சொல்லுங்க? விடாக்கொண்டனாக பிடித்தான் ராகவனை.
புத்தகப்பையில் எடுத்ததில் குழந்தைகள் முதற்கொண்டு அவர்கள் உடலுறுப்பு கடத்தியவர்களின் பட்டியலும் அவர்களின் குடும்ப விவரங்களும் இருந்தது. ராஜன் சாரை கண்டறிந்து பேச அவர் மருத்துவமனை சென்ற போது தான் அவ்விசயம் கண்ணில் பட்டது..
திடீரென மயங்கிய குழந்தை இறந்து விட்டது என்ற செய்தியில் அக்குழந்தையின் குடும்பத்தினர் அழுகை சத்தம் அம்மருத்துவமனையை அடைத்து இருந்தது.
நான் அவர்களிடம் விசாரித்த போது காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை என தெரிந்து கொண்டேன். எனக்கு அந்த குழந்தையின் இறப்பு சாதாரணமாக தெரியவில்லை. ஆனால் இவர்கள் தான் அக்குழந்தையை ஏதோ செய்திருக்கிறார்கள் என புரிந்தது.
“அண்ணா..அந்த குழந்தை இறப்பதற்கு முன்னும் அந்த மருத்துமனையில் மருத்துவம் பார்த்தார்களா?” பிரியசகி கேட்டாள்.
ஏன்? சஞ்சய் கேட்டான்.
திடீரென காய்ச்சல் அதிகமாகி குழந்தை இறக்க வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக குழந்தைக்கு ஒவ்வாத ஏதாவது மருந்தை கலந்திருக்க வாய்ப்புள்ளது. குழந்தையின் ரிப்போர்ட் கிடைக்குமா அண்ணா?
இல்லையே!
வாங்க முடியுமா?
ம்ம்! நாளை பார்த்துட்டு வாங்கி வாரேன். இப்பொழுதைக்கு அந்த குழந்தையின் விவரம் மட்டும் இருக்கு என்று ராகவன் கைபேசியை பிரியசகியிடம் கொடுத்தார்.
“மாமா, சும்மா இருங்க” என்ற சஞ்சய், “இதுல நீ தலையிடாத சகி” என்றான்.
சார், நான் காரணம் மட்டும் கண்டுபிடித்து சொல்றேன். ஆதாரத்தை நீங்க பார்த்துக்கோங்க என்றாள்.
நாற்காலியை சினமுடன் நகர்த்தி, பிரியசகி கரத்திலிருந்த ராகவனின் கைபேசியை பிடுங்கி அவன் நகர, “சார் அதை குடுங்க” அவன் பின்னாலே ஓடி வந்தாள்.
லதாவோ கழுகு போல அவ்விடத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார்.
“நீ உன்னோட அறைக்கு போ” அவளை கடந்து சஞ்சய் நகர, “என்னால முடியாதுன்னு நினைக்கிறீங்களா சார்” கத்தினாள். உறங்காமல் வெளியே இருந்த அனைவரும் இருவரையும் பார்த்தனர்.
சஞ்சய் நின்று பிரியசகியை பார்த்தான்.
“குடுங்க சார்” அவனை நெருங்கினாள். ராகவன் அவர்கள் பின் வந்தார்.
“சரி..எடுத்துக்கோ” கைபேசியை நீட்டினான் சஞ்சய்.
பிரியசகி எடுக்க வரும் நேரம் கைபேசியை உயர்த்தி, “முடிந்தால் முதல்ல இதை எடுத்து காட்டு” என்றான். அவள் அவனை முறைக்க, “முடியாதுல்ல…நீ எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும்..” என்றான்.
“இல்ல, நான் எடுப்பேன்” கைபேசியை பிடிக்க குதித்தாள். அவளது குறி முழுவதும் கைபேசியில் மட்டுமே இருந்தது. சஞ்சயை உரசி, இடித்து தான் முயன்றாள்.
சுவர்ணலதா பொசுபொசு கோபமுடன் அவர்களிடம் வர, “அண்ணா…” சத்தமிட்டாள் இந்துஜா. அவள் சத்தத்தில் கைபேசியை பிடித்த பிரியசகி பதறி கைபேசியை இழுத்து கீழே குதிக்கும் போது உடல்கள் உராய அவளது இதழ்கள் சஞ்சய் கன்னத்தில் பதிந்தது.
சஞ்சயும் பிரியசகியும் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, புடவையை இழுத்து சொருகிய சுவர்ணலதா பிரியசகியை இழுத்து அறைந்தார். அதிர்ச்சியிலிருந்து அவள் மீண்டு கண்ணீர் வந்தது.
இதுக்கு தான் இவ வீட்டுக்கு வேண்டாம்னு சொன்னேன். அவ புருசன் புத்தி இவளுக்கும் இருக்கும் தானே! கேட்டு விட,
“லதா…” சத்தமிட்ட நாகேந்திரன் தன் மனைவியை தன் பக்கம் இழுத்தார். அழுது கொண்டே பிரியசகி அவளறைக்கு ஓடினாள்.
தாயின் பேச்சில் சுயம் வந்த சஞ்சய் பிரியசகி அழுது கொண்டே செல்லவும் செய்வதறியாது நின்றான்.
“ஏன்டா சஞ்சய்? அந்த கைபேசியை கொடுத்தால் தான் என்னவாம்?” லதாவின் பேச்சு பிடிக்காமல் சத்தமிட்டார் ராகவன்.
“மாமா, இது சரண் சம்பந்தப்பட்ட விசயம். எப்பொழுது வேண்டுமானாலும் சகி பக்கம் திரும்பும். முதலில் பாதிக்கப்படப் போவது சகி தான். அதான் இதுல தலையிடாதன்னு சொல்றேன்…” தன் அன்னையை முறைத்து இந்துஜாவை பார்த்தான்.
“இதுவரை எப்படியேனும் சமாளித்து விடலாம்” என எண்ணியிருந்த நவீன், இந்துஜாவிற்கு சரியாக படவில்லை. தன் தோழிக்காக வீட்டை விட்டு செல்ல முடிவெடுத்தனர்.