சூரியன் 11

சீற்றத்தை மனதில் வைத்திருந்த நீதிபதி, “நீ என்னம்மா சொல்ற?” பிரியசகியிடம் கேட்டார். அப்பொழுதும் பிரியசகி சரணிடமிருந்து பார்வையை திருப்பவில்லை.

“விருப்பமில்லாமல் கணவனாலும் தொடுவது குற்றமே. பெண்களை இனி எவனும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் பயப்படணும். இவனுக்காக தண்டனை அவ்வாறு இருக்க வேண்டும் உடன் அவனது தாய்க்கும் தண்டனை அவசியம். அவருக்கு எல்லாம் தெரியும்”  திணறி பேச முடியாமல் பேசினாள்..

இவனோட உன்னால் வாழ முடியாதுன்னு நான் விவாகரத்தை கொடுக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்க, குற்றவியல் பிரிவில் இருக்கும் நீதிபதி அங்கே வந்தார் இனியவனை பார்த்தவாறு…

குடும்ப நல நீதிபதி அவருக்கு வழி விட வெளியே ரிப்போர்ட்டஸ் அனைவரும் குவிந்தனர்.

வழக்கு பற்றிய வீடியோ வாதம் அனைத்தையும் கேட்ட அந்நீதிபதி சரண் தரப்பு வக்கீலை அருவருப்பு பார்வை பார்த்து, மக்கள் முன்னிலையில் சரணுக்கு மரண தண்டனையும், கமலாவிற்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படும் என அறிவித்தார். நிம்மதியுடன் அனைவரும் சென்றனர்.

அம்மிருகத்தை கொல்ல ஒரு மாதம் தள்ளி வைத்து விட்டனரே! என்ற எண்ணம் தான் ரக்சனாவிற்கு.

“லோகேஷ் இந்துவை வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நாங்க வாரோம்” அவர்களை காரில் அனுப்பி விட்டு இனியவனை தேடினான் சஞ்சய்.

முகம் சிவக்க தணியாத சினமுடன் இனியவன் அருகே அமர்ந்திருந்தாள் ரக்சனா. அவள் அருந்த நீர் எடுத்து கொடுத்தான் இனியவன்.

இவர்களை பார்த்தவாறே மிகவும் அமைதியாக இந்துஜா காரில் சென்றாள். சஞ்சயும் ரக்சனாவிடம் வந்தான்.

“இப்ப நீ கோபப்பட்டு என்ன ஆகப் போகுது?” சஞ்சய் கேட்டான்.

அவனை உறுத்து பார்த்து, “என் கோபம் ஏன்னு உங்களுக்கு தெரியாதா?” சீறினாள்.

“ரக்சி, அதான் அவனை பிடிச்சாச்சுல்ல விடு” இனியவன் கூற, முடியாது. நான் ஒரு அடியாவது அவனை அடிக்கணும்..

ம்ச்ச்…எழுந்த இனியவன், நீ இப்படியே இரு. எனக்கு வேலை இருக்கு..

“ரக்சி நீ வீட்டிற்கு கிளம்பு. நானும் வீட்டிற்கு போகணும்…” சஞ்சய் கூற, அவனுக்கு அழைப்பு வந்தது.

“கமலா எங்குமே இல்லை. அவரை கைது செய்ய முடியவில்லை. அவர் தலைமறைவாகிட்டார்.  இப்பொழுது என்ன செய்வது?” கேட்டார் ஒரு போலீஸ்.

“சரண் ஹாஸ்பிட்டல், வீடு பிராப்பர்டீஸ் வேற எந்த ஊர்லயும் இருக்கான்னு பாருங்க” கைபேசியை துண்டித்தான்.

என்னாச்சு மாமா?

சரண் அம்மா தப்பிச்சுட்டாங்க. எங்க இருக்காங்கன்னே தெரியலையாம். வீட்டில் நிலைமை சரியாக இருக்கும்னு தோணலை. இவங்க வேற தப்பிச்சிருக்காங்க. எங்க போறது? தலையை பிடித்தான் சஞ்சய்.

“மாமா, நீங்க வீட்டுக்கு போங்க. நானும் தேடுகிறேன்” இனியவன் கூற, “நானும் வருகிறேன்” என்றாள் ரக்சனா.

“நீ வீட்டுக்கு போ. ரக்சன் வருவான்” சஞ்சய் கூற, “முடியாது” அவள் பிடிவாதமாக இனியவனருகே வந்து நின்றாள்.

கார் ஒன்று படுவேகமாக வந்தது.

“அண்ணா…” முணுமுணுக்க கார் நிற்கவும் காரை நோக்கி வந்தாள் ரக்சனா.

ரக்சன் மருத்துவமனையின் உரிமையாளன் ரக்சன் காரிலிருந்து இறங்கினான்.

“அண்ணா…” ஓடிச் சென்று ரக்சனா ரக்சனை அணைத்து அழுதாள்.

ரக்சன் தன் தங்கையை நகர்த்தி நண்பன் சஞ்சயை நெருங்கி அவனை கட்டிக் கொண்டான் கண்ணீருடன்.

“தேங்க்ஸ் இனியவா…” இனியவனின் கரம் பற்றினான்.

ரொம்ப எமோஸ்னல் ஆகாதடா. நீ சொல்லும் போதே நான் கவனித்து இருந்தால் அந்த சரணை எப்பொழுதோ பிடித்திருக்கலாம். ஆனால்….நிறுத்தி சஞ்சயும் கண்கலங்கினான்.

“மாமா, என்ன சொல்றீங்க?” இனியவன் கேட்க, ரக்சனாவும் இருவரையும் அதிர்ந்து பார்த்தாள்.

“பிரியசகி கணவன் இவ்வாறு செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் தான் அன்று பெரியதாக எண்ணவில்லை. என்னை மன்னிச்சிருடா” சஞ்சய் ரக்சனிடம் மன்னிப்பு வேண்டினான்.

அன்று நமக்கு எந்த ஆதாரமும் இல்லை சஞ்சய். நாம் சரணிடம் அன்று சென்றிருந்தால் அவன் புகழ், பெயரை வைத்து நம்மை ஒன்றுமில்லாமல் செய்திருப்பான்.

இன்று உன் சகி கொடுத்த ஆதாரத்தில் எல்லாம் நன்றாக முடிந்தது. என் மனைவி ஆத்மாவும் சாந்தி அடையும் மனம் உருக பேசினான் ரக்சன்.

“உன் சகியா?” மனதில் எண்ணி, “மாமா உங்களுக்கும் முன்னதாகவே இவன் மீது சந்தேகம் இருந்ததா?” இனியவன் கேட்டான்.

ம்ம்…சகி எப்போதும் எந்த நிலையிலும் நேர்மையாக இருப்பாள். அதான் அவன் ஏதும் செய்திருக்க மாட்டான்னு நினைத்திருந்தேன். ஆனால் அவன்…பல்லை கடித்து கையை முறுக்கினான் சஞ்சய்.

“கோபம் வேண்டாம்னு என்னை சொல்லீட்டு நீங்க கோபப்படுறீங்க?” புருவம் உயர்த்தி பார்த்தாள் ரக்சனா.

போன வேலை உனக்கு என்னாச்சு அண்ணா?

நல்ல படியா முடிந்தது. அப்பா என்ன செய்றார்? இன்னும் கோபமா இருக்காரா? ரக்சன் கேட்க, அவர் பிஸியாக இருக்கிறார் சஞ்சயை பார்த்தாள். அவனும் சஞ்சயை பார்த்தான்.

கமிஷ்னர் சாருக்கு ஒரு முக்கியமான கேஸ். அதான்… நீ அவரருகே அமர்ந்து பொறுமையாக பேசு..என்ற சஞ்சய், இனியவனை பார்த்தான்.

“நான் அந்த கமலாவை தேட கிளம்புறேன் மாமா. நீங்க வீட்டுக்கு போங்க. ஆன்ட்டி, அங்கிள் அவங்களால தான் பிரியசகி வாழ்க்கை இப்படி ஆகிடுச்சுன்னு வருத்தமா இருப்பாங்க” சொல்லி கிளம்பினான்.

“அவன் மனம் தான் இங்கில்லையே!” சஞ்சயை ஆழ்ந்து பார்த்தான் ரக்சன்.

“நாம போகலாம் ரக்சி. வாரோம்டா” ரக்சனும் சென்றான்.

காரில் பயணித்தவாறு, “ரக்சி சஞ்சய்கிட்ட பேசுனியா?” ரக்சன் கேட்டான்.

அவரு இப்ப கூட பிரியசகியை தான் மனதில் வைத்திருக்கார். அவர் சரணை தவிர்த்த காரணம் பிரியசகி வாழ்க்கைக்காக கூட இருக்கலாம்…

காரை பிரேக்கிட்டு நிறுத்தி, “ரக்சி அந்த பொண்ணுக்கு ரொம்ப ஹெவியா?”

ஆமாம் அண்ணா. பெண்ணிருப்பில் ப்ளீடு ஆகிட்டே இருந்திருக்கு. அவன் அடியில் மயங்கி எழுந்த பின் தான் அதை பார்த்திருக்கா. அவளும் மருத்துவம் தானே படித்திருக்காள். மருந்து போட கூட விடாமல் மேலும் அவளை அடிச்சிருக்கான்.

இவனெல்லாம் மனுசனே இல்லை அண்ணா…கொடூர மிருகம்..

முதல்ல அவளுக்கு காயம் குணமாகட்டும். சஞ்சய் வீட்ல இனி அவளை தனியே விட மாட்டாங்க. அண்ணா மரணவலியிலும் இவள் மீண்டு வந்திருக்கான்னா இவள் சாதாரண பெண்ணில்லை தான்..

அண்ணீயை போல தைரியமான பொண்ணு தான். என்ன அண்ணீயால் தப்பிக்க முடியவில்லை. காப்பாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ரக்சனா சொல்ல, ரக்சன் கரங்கள் ஸ்டியரிங்கை அழுத்தியது.

“அண்ணா…” தன் அண்ணன் தோள் சாய்ந்து அழுதாள் ரக்சனா.

ரக்சன் அமைதியை கண்டு, சாரி அண்ணா. முதலில் டாடிடம் பேசணும் என்றாள்.

ம்ம்! காரை செலுத்தினான் ரக்சன்.

பிரசாத்தும் சஞ்சயும் காரில் வீட்டிற்கு வந்தனர்.

பிரியசகியின் அறைக்கு வெளியே இந்துஜா சுவற்றில் சாய்ந்து கண்ணீர் தடத்துடன் அமர்ந்திருந்தாள். நவீன் முகம் இறுக அமர்ந்திருந்தான்.

பிரசாத்தும் சஞ்சயும் இவர்களை பார்த்துக் கொண்டே பிரியசகி அறை முன் வந்தனர்.

விழிகளை மெதுவாக விரித்து அவள் கரம் பற்றியிருந்த சுவர்ணலதாவையும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த நாகேந்திரனையும் பார்த்து, லதா கையை விலக்கினாள் பிரியசகி.

“பிரியா, எங்களை மன்னிச்சிரும்மா. நாங்கள் அவனை பற்றி முழுவதுமாக விசாரித்து இருக்கணும்” அழுது கொண்டே அவளது கரத்தை பிடித்தார்.

“எதுக்கு ஆன்ட்டி?” சோர்வுடன் கேட்க, விரைந்து இந்துஜா எழ, நவீனும் அறையருகே வந்தான்.

உன்னோட பாட்டி அவனை பற்றி பெருமையாக பேசவும் நாங்களும் சிந்திக்காமல் போயிட்டோம். இளா கூட சொன்னாள். ஆனால் உன் பாட்டி தான்…எங்களை மன்னிச்சிரும்மா..

நீங்க எதுக்கு ஆன்ட்டி மன்னிப்பு கேக்குறீங்க? கிரகிக்க முடியாத வலியுடன் மெதுவாக நிறுத்தி நிறுத்தி பேசத் தொடங்கினாள்.

“உங்களுக்கு என்னை கண்டாலே ஆகாது. வந்துட்டியான்னு தான கேட்பீங்க? புதுசா மன்னிப்பு கேக்குறீங்க? நான் எனக்காக உங்களிடம் வரலை ஆன்ட்டி…” நிறுத்தி விழிகளை மூடினாள்.

“உன்ன புடிக்காதுன்னு யாரும்மா சொன்னா?” அவர் கேட்க, அவள் அதற்கு பதிலளிக்காமல் தொடர்ந்து பேசினாள்.

“இறந்து போன பெண்களுக்கு குடும்பம் இருப்பாங்க. ஒரு பெண் பேசியதில் தான் இவனை விடவே கூடாதுன்னு எண்ணினேன். அதுவரை இவனிடமிருந்து தப்பிக்க வீடியோவை பயன்படுத்தலாம்னு தான் எண்ணினேன். அந்த பொண்ணு அரைமயக்கத்தில் இருந்தாள். அவளுக்கு கைக்குழந்தை இருக்குன்னு சொன்னா ஆன்ட்டி. அப்படி இருக்கும் பொண்ணுடன் என் புருசன்…ச்சே அப்படி சொல்லவே நா கூசுது. அவங்க எல்லாருக்கும் நீதி கிடைக்கணும்னு தான் வந்தேன்” மீண்டும் விழிகளை மூடி திறந்தாள்.

எனக்கு நன்றாக தெரியும் எச்சிலை விழுங்கி, உங்களது மகனை தொலைக்காட்சியில் பார்த்தேன். பேச முடியாது…எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவசரமாக அதனை தவிர்த்தேன்.

ஒரு முறை சரணும் அவரும் ஒரு கட்சி மீட்டிங்கில் சந்தித்து கை குலுக்கி ஏதோ பேசினார்கள்.

“அன்று அதே இடத்தில் சரண் காரில் நானும் இருந்தேன் காயத்துடன்” விரக்தியுடன் லதாவை பார்த்தாள்.

காரின் அருகில் தான் இருந்தார். நான் எண்ணியிருந்தால் உடனே அழைத்திருப்பேன். என்னால அவரை பார்க்க முடிந்தது. அழைக்க மனம் தடுத்தது. காரணம்…என்று லதாவை பார்க்க, அவருக்கு மேலும் தான் அழுகை வந்தது.

உங்களுடன் அந்த சிறுவயதில் எதிர்த்து வாயாடினாலும் உங்களது பேச்சு என்னை மிகவும் பாதித்து இருந்தது. உங்கள் எல்லாரையும் போல…எனக்கு தான் யாருமில்லையே! யாரிடமாவது கூறி மனதை தேற்றி இருந்திருந்தால் உங்கள் மீதுள்ள தவறான எண்ணம் இல்லாமல் போயிருக்கும்னு நினைக்கிறேன். பாட்டி இருந்தாலும் இல்லாதது போல தான் இருந்தது.  அதான் உங்கள் மகனை பார்த்தும் உதவி கேட்கவில்லை.

தேமலுடன் முந்தானையை வாயில் அடக்கி அழுதார் லதா.

 ப்ளீஸ் அழாதீங்க ஆன்ட்டி. எனக்கு யார் மீதும் கோபமில்லை. என்னால இதுக்கு மேல வலியை அனுபவிக்க முடியவில்லை.

நாகேந்திரனை பார்த்து, அங்கிள் என்னால முடியாத நேரம் ஆறுதலா பேசி இருக்கீங்க. தேங்க்ஸ் அங்கிள்.

எனக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம். நான் இதுக்கு மேல யாருக்காக வாழணும்? எனக்கு வாழும் விருப்பமும் இல்லை. என்னை கருணைக்கொலை செய்ய சொல்லுங்க. என்னால வலியை தாங்க முடியல அழுதாள்.

“என்னம்மா பேசுற?” வீட்டின் பெரியவர் அவரே மனமுடைந்தார்.

அங்கிள்…வேண்டாம்…

அழுது கொண்டே இந்துஜா, “என்னடி பேசிட்டு இருக்க? உன்னை கவனிக்காமல் விட்டது தவறு தான். சந்தோசமா இருப்பன்னு தான் யாரும் உன்னை கவனிக்கவில்லை. தவறு தான்….” இதழ்கள் துடிக்க பிரியசகி படுக்கையின் அருகே மடிந்து அமர்ந்து கதறி அழுதாள்.

என்னால முடியலடி…ரொம்ப வலிக்குது. இந்த வலியை தாங்குறதுக்கு செத்து போயிடலாம்.

வெளியே சென்றிருந்த செவிலியர் அவளது கூற்றில் அதிர்ந்து பார்த்தார்.

மனம் சில்லு சில்லாய் நொருங்கியது சஞ்சய்கு. பிரசாத் இடிந்து அமர்ந்தான். நவீன் மட்டும் அவள் முன் வந்து அவளை வெறித்து பார்த்தான்.

என்னால பேச முடியல. ஆனால் பேசாமல் இருக்க முடியலடா. வலிக்குது. ரொம்ப வலிக்குது. தாங்க முடியல…

நவீன் அவளது கரம் பற்றி, “உனக்கு யாருமில்லைன்னு யாரு சொன்னா? நாங்க இருக்கோம்டி. உன்னோட உடலில் ஏற்பட்ட வலி சாதாரணமில்லைனு புரியுது. அதுக்காக நீயும் செத்து போகணும்னு சொல்ற. வரிசையாக ஒவ்வொருவரையா இழந்துட்டோம் பிரியா. உன்னோட இழப்பை எங்களால் தாங்க முடியாது. இதுவரை அந்த பெண்களுக்காக தாங்கிய வலிகளை எங்களுக்காக கொஞ்ச நாள் எப்படியாவது தாங்கிக்கோ. ப்ளீஸ்…” கெஞ்சலுடன் அவனும் பிரியசகி கரத்தை அவன் கண்ணில் ஒற்றினான்.

சினமுடன் வந்த சஞ்சய், “வலியை பொறுத்துக்கணும்னு உனக்கு யாரு சொல்லிக் கொடுத்தா? இந்து உன்னோட தோழி தான! சொல்லி இருக்கலாமே!” பிரியசகியிடம் சத்தமிட்டு செவிலியரிடம் சினமுடன் திரும்பினார்.

ரதி பயத்துடன் அவனை பார்த்தார்.

இவளுக்கு காயம் ஆறும் வரை இவள் விழிக்கவே வேண்டாம். இன்ஜெக்சன் போடு…தூங்கட்டும்..

அண்ணா, அது அவங்களை இதை விட பாதிக்கும்.

“செத்துற மாட்டால” சஞ்சய் சினமுடன் கேட்க, லதா அவனை அடித்து விட்டார்.

தனக்காக இவ்வளவு பேசுறாங்க எல்லாரும்? மனதினோரம் மகிழ்ச்சி இருந்தாலும், நான் யாருக்காக வாழ்வது? என்ற எண்ணத்தை கேட்டும் விட்டாள்.

எங்களுக்காக….பிரசாத் கூறினான்.

ஆமா பிரியா, எங்களுக்காக நீ வாழணும். நானும் நவீனும் இவங்க குடும்பத்து பசங்க இல்லையே! அப்புறம் ஏன் பேசுகிறோம்? இல்லாத உறவை இல்லை இல்லைன்னு எண்ணுவதை விட, நம்முடன் இருக்கும் நல்லவர்களை உறவாக்க பழகிக்கணும். அதான புத்திசாலித்தனம்…இதை யாரு எனக்கு சொன்னது? சினமுடன் கேட்டான்.

பள்ளி படிக்கும் போது பிரசாத்திடம் ஆறுதலாக பிரியசகி தான் கூறி இருப்பாள்.

“மேம், உங்களுக்கு ஒன்றும் ஆகாது. சீக்கிரம் எல்லா பெண்களை போலவும் வாழ முடியும்” செவிலியர் கூறவும் விரக்தியுடன் அவரை பார்த்தாள்.

நிஜமாக தான் கூறுகிறேன். முதலில் உங்கள் உடல்நிலை சரியான பின் எல்லாம் பார்த்துக்கலாம். மகிழ்ச்சியாக நீங்கள் வாழலாம்..

ம்ம்…

“இதுக்கு மேல சாகப் போறேன்னு சொல்லாத” இந்துஜா அழ, அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாள் பிரியசகி. அனைவரும் ஓரளவு சமாதனமானார்கள். சஞ்சயால் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதில் வெறுமையுடன் வெளியே சென்றான்.

“என்ன பேசி விட்டாள்? சாகணுமாம்” விழிகள் நீரில் நனைய வாயிலில் புலம்பியவாறு அமர்ந்திருந்தான் சஞ்சய்.

“மாமா..” எதிர்வீட்டிலிருந்து ராக்கி ஓடி வந்தான்.

நிமிர்ந்த சஞ்சய் விழிகளிலிருந்து பட்டென துளிகள் அவன் கன்னத்தில் விழுந்தது.

எதிர்வீட்டு காமாட்சி ராக்கியின் பின்னே வந்தவர் சஞ்சயின் கண்ணீரில் திகைத்து அவனை பார்த்தாள்.

கம்பீரமாக விறைப்புடன் காக்கி உடையில் காட்சியளிக்கும் சஞ்சய் கண்ணீர் அப்பெண்மணியை உலுக்கியது.

சஞ்சய்…

ராக்கியை பார்த்துக்கிட்டதுக்கு “தேங்க்ஸ்” என்று எழுந்தான்.

நாகேந்திரன் அவ்விடம் வந்து, அவரும் உதவிக்கு நன்றி கூறி தன் மகனை ஆரத்தழுவினார். அவர்களை பார்த்தவாறே சென்றார் காமாட்சி.

“அப்பா…” குரல் தழுதழுக்க சஞ்சய் அழைக்க, “உள்ளே போகலாம்” என்று இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்றார்.

அந்த டாக்டர் பொண்ணுக்கு போன் போட்டு கொடு சஞ்சய்…..

அப்பா…

“கொடு” அவர் கூறிய விதத்தில் சஞ்சய் உடனே ரக்சனாவை அழைத்தான்.

வீட்டிற்கு சென்ற ரக்சன், ரக்சனாவும் அவரின் தந்தை கமிஷ்னர் சந்திரசேகர் முன் நின்றனர்.

ராஜன் ஹாஸ்பிட்டலில் தான் சரண் மருத்துவம் பார்த்து வந்தான் என்பதால் அவர் மருத்துவமனையில் உடலுறுப்பு திருடப்படுகிறதா? என்ற சோதனை நடந்து கொண்டிருக்கிறது டாட் என்றான் ரக்சன்..

தெரியும். நான் சொல்வதை கேட்காமல் பாரின் சென்று மருத்துவ கிளை ஒன்றை தொடங்கி வச்சிட்டு வந்துருக்க? கேட்கவே கூடாதுன்னு இருக்கிறாயா?  சினமுடன் தன் மகனை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தார் கமிஷ்னர் சந்திரசேகர். வருத்தமுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் ரக்சனா.

சஞ்சயின் அழைப்பு வர, அதை கட் செய்து தன் தந்தையை பார்த்தாள். மீண்டும் அழைப்பு வந்தது. இருவரும் அவளை பார்த்தனர். மீண்டும் அவள் துண்டித்தாள். சந்திரசேகரன் அர்ச்சனையை தொடங்க எண்ணி வாயை திறந்த நிமிடமே அழைப்பு மீண்டும் வந்தது.

யாரு ரக்சி?

சஞ்சய் டாட்…

அவர் தாடையை தேய்க்க, ரக்சன் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டான்.

ஹலோ…இவள் அழைக்கவும்,

“அம்மாடி கொஞ்சம் வீடு வரை வர முடியுமா?” தன்மையுடனும் குரலில் வேதனையுடன் நாகேந்திரன் கேட்டார்.

“என்னாச்சு அங்கிள்? பிரியசகிக்கு ஏதும் பிரச்சனையா?”

“வாம்மா…பேசணும்…” சோர்வுடன் பேசினார்.

தன் தந்தையை ரக்சனா பார்க்க, அவர் தலையசைக்கவும் “ஓ.கே அங்கிள்” என்று அழைப்பை துண்டித்தாள்.

அந்த பொண்ணோட நிலை ரொம்ப மோசமோ ரக்சிம்மா?

“எஸ் டாட்…” விழிகளை உயர்த்தி தந்தையை பார்த்தாள்.

இந்த பொண்ணு தானம்மா அந்த பொண்ணு? சஞ்சயின் காதலை மனதில் வைத்து கேட்டார்.

ம்ம்! கண்கள் குளம் கட்டியது ரக்சனாவிற்கு. ரக்சன் அவள் கரம் பற்றினான்.

வேற யாரையாவது ஏற்பாடு பண்ணிடும்மா. நீ போக வேண்டாம்…

நோ டாட். நான் தான் போவேன். சஞ்சய்கு என் மீது துளியும் விருப்பமில்லை. இன்னும் அவர் அவளை தான் நேசிக்கிறார். எனக்கு அவர் மகிழ்ச்சி தான் முக்கியம்…

“என் பொண்ணோட நிலை?” சினமுடன் கேட்டார்.

உங்க பொண்ணுக்கு என்னப்பா? அவரருகே சென்று நாற்காலியின் விளிம்பில் அமர்ந்து, மாப்பிள்ள பாருங்க. உங்களுக்கும் அண்ணாவுக்கும் பிடிச்சிருந்தா நான் திருமணம் செய்து கொள்கிறேன்.

ஆச்சர்யமுடன் இருவரும் அவளை பார்த்தனர்.

“பிடிவாதம் செய்யும் என் தங்கக்கட்டி எங்க போனா?” சந்திரசேகர் கேட்க, “அவ போயிட்டா” தந்தையை அணைத்து, “டாட் அண்ணீயை இந்த சரண் தான் கொன்றிருக்கான்” அழுதாள்.

சஞ்சய் சொன்னான்மா. தன் மகளின் கண்ணீரை துடைத்து,

“அம்மா இல்லாமல் செல்லமா வளர்த்துட்டேன்னு பயந்துட்டு இருந்தேன். ஆனால் இன்று நீ நினைத்தால் சஞ்சயை உன் பக்கம் திருப்ப அந்த பெண்ணின் நிலையை காட்டி இருந்திருக்கலாம். இல்லை அப்பெண்ணை சிகிச்சை என்ற பெயரில் ஏதாவது செய்திருக்கலாம். எம் பொண்ணு தன் காதலை விட்டு கொடுத்திருக்கா. சொல்லவே கர்வமா இருக்குமா. உனக்கு நல்ல மாப்பிள்ளையை நான் தேர்வு செய்கிறேன்மா…”

ம்ம்!

“ரக்சி நானும் வாரேன்” ரக்சன் தன் சகோதரியுடன் சஞ்சய் வீட்டிற்கு கிளம்பினான்.

 சஞ்சய் நாகேந்திரன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான் பிரசாத்.

“ராக்கியை தூக்கிட்டு போ” பிரசாத்திடம் கொடுத்தார் நாகேந்திரன். பிரசாத் இருவரையும் கவனித்தவாறு இருக்க, “சித்து…” இந்துஜாவை தேடினான் ராக்கி.

“அறையினுள் இவனை அழைத்து செல்லவா?” எண்ணத்தில் இருந்தவனுக்கு பிரசாத்திற்கு பிரியசகியின் கரு கலைந்தது சிந்தையில் வர மனம் ரணமாய் வலித்தது. இதை எவ்வாறு இவள் தாங்கிக் கொண்டாள்? சிந்தனையுடன் பிரியசகி அறைக்கு சென்றான்.

கண்ணீர் கன்னத்தை தாண்டி வழிந்தோட வலியில் அழுது சோர்ந்து கண்ணை மூடி இருந்தாள் பிரியசகி.