அனல்7

மதியை நோக்கி கோபமாகத் திரும்பியவன் அவன் சட்டையைப் பிடித்து

“ கலர் கலரா ஊத்தி குடிக்கத் தெரியுது, சாப்பாடு சாப்பிட்டு குடிக்கத் தெரியாத டா உனக்கு “

அதை கேட்டு உதட்டைப் பிதுக்கியவன் “ வீனோ…. சரக்கு மட்டும் தான் வாங்கித் கொடுத்தான் “

“ ஏன் உன் கிட்ட கார்டு இல்ல, ஆர்டர் பண்ணி சாப்பிட வேண்டியது தான? அவன் வாங்கித் கொடுத்தா தான் சாப்பிடுவியா “

“ அது…. டா….. அப்போ…. பசிக்கலையே…. “

“ ஆமா, அவன் எப்பவும் உன் கூட ஒட்டிகிட்டே தான இருப்பான், உன்ன குடிக்க வச்சிட்டு எங்க போனான் அவன் “

“ ஒருத்தி வந்தா…. எழுந்து போயிட்டான் “ இதை கேட்டு எரிச்சலடைந்த த்ரூவ் “ சரியான பொம்பள பொருக்கி…” என்று முணுமுணுத்துக் கொண்டவன்.

“ டிரைவர் கிட்ட சொல்லி ஹோட்டல்ல வாங்கித் கொடுக்கச் சொல்றேன் நீ கிளம்பு “ என்றதும்

“ ஏன் இவ்வளோ பெரிய வீட்டுல என் ஒருத்தனுக்கு சாப்பாடு இல்லையா டா “ என்றவனை மேலிருந்து கீழ் அளந்தவன் டிரைவர் பக்கம் திரும்பி

“ கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க “ என்றபடி மதி அருகே சென்றவன் அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

அவனை ஹோபாவில் அமர வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தான்.

நேரம் ஒன்பதைத் தாண்டி இருக்கும் போலும் அந்த ஹாலைத் தவிர மற்ற அனைத்து இடங்களும் இருட்டாகத்தான் இருந்தது.

இன்னேரம் அவன் அம்மா அமுதா மாத்திரை சாப்பிட்டு விட்டு உறங்கி இருப்பார். வீட்டில் சமைக்கும் பெண்ணும் கிளம்பி இருப்பாள்.

மற்ற நேரம் தாமதமாக இப்படி வரும் நேரம் எல்லாம் ஏதாவது இவனுக்கு இவனே செய்து சாப்பிட்டுக்கொள்வான்.

இவனுக்கு மட்டும் என்றால் இருப்பதை உண்டுவிட்டு கூடப் படுத்துவிடுவான், ஆனால் கூடவே இன்று ஒரு தொள்ளையையும் சேர்த்து அழைத்துக்கொண்டு வந்திருக்க

என்ன செய்ய என்று யோசித்தவன் யோசனையாக மதியை பார்க்க, அவன் ஹோபாவில் மல்லாக்கப் படுத்தபடி உளறிக்கொண்டிருந்தான்.

“ விட்டா இவன் இங்கயே ஸ்டே பண்ணிருவான் போல, சீக்கிரம் ஏதாவது செஞ்சி கொடுத்து இவன அனுப்பனும் “ என்று முடிவு எடுத்தவன் அவன் சட்டையின் மேல் இருந்த பட்டனை அவிழ்த்தபடி சமையல் அறைக்கு சென்றவன்

சட்டை கையை மடித்துவிட்டபடி கிச்சனில் என்ன இருக்கிறது என்று பார்த்தான்.

தோசை மாவும் சிறிது தக்காளித் தொக்கும் இருக்க, மாவை எடுத்துப் பார்த்தவன் அடுப்பை பற்ற வைத்து கல் வைத்து தோசை சுடத் தயாரானான்.

தோசை கல் சூடானதை அதன் மேலே சற்று கையை உயர்த்திப் பார்த்து உறுதிப்படுத்தியவன், மாவை குழிக் கரண்டியால் எடுத்து அதை அழகாக வட்ட வடிவில் ஊற்றி, அதன் மீதி முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி சிறிது பெப்பர் மேலே தூவி விட்டு, எண்ணெயை ஊற்றி அது தயாராகக் காத்திருந்தவன் ஏதோ தோன்றத் திரும்பிப் பார்த்தான்.

சமையலறை வாசலில் சாய்ந்தபடி பல்லைக் காட்டி நின்றிருந்த மதியை பார்த்துத் திக் என்று இருக்க.

“ இங்க என்னடா பண்ற? போய் ஹால்ல இரு, நான் சுட்டு எடுத்து வர்றன் “

“பிரனாவ் இப்பவும் உன் பாடிய செமையா மெயிட்டென் பண்ணி வச்சிருக்க டா “ என்று சொல்லிய படி அவனை மேலிருந்து பார்த்தவன் பார்வையில் முகத்தை சுளித்தவன்.

“ஒழுங்க போய்டு டா என்ன டென்ஷன் பண்ணாத,  முதல்ல அப்படி பாத்து வைக்காத”

“ நோ…. டா பிரனாவ், நீயே பாவம் வொர்க் முடிச்சிட்டு வந்து குக் வேற பண்ற….எனக்காக நீ நடந்த கால் வலிக்காது. சோ ஐ வில் ஹெல்ப் யூ டா……“ அதை கேட்டு புருவம் உயர்த்தி நின்ற த்ரூவ்

“ சோ…. ” என்று சொல்லவும் உள்ளே வந்தவன் கையோடு ஒரு சேரையும் இழுத்துக்கொண்டு வந்திருந்தான்.

நடு சமையல் அறையில் சேரை போட்டு அதில் அமர்ந்தவன் மீண்டும் த்ரூவை நிமிர்ந்து பார்த்து

“ பசிக்குதுடா பிரனாவ்…. “ என்கவும், இத்தனை நேரம் அவன் செயலை பார்த்து கடுப்பாய் இருந்தவன் கவனம் கலைந்து தோசை பக்கம் திரும்பியது

தோசையை சுட்டு தக்காளித் தொக்கு வைத்து த்ரூவ் நீட்டவும், அதை வாங்கி கண் இமைக்கும் நேரத்தில் சாப்பிட்டு முடித்தவன்.

“ உன்ன மாதிரி….. நீ…. மட்டும் தான்டா… எல்லாத்துலயும் செமடா நீ…. ஐ லைக் யூ டா……பிரனாவ் ”

என்றவனை முறைத்தபடியே அடுத்த தோசையை வைக்கவும், அதை பிய்த்து த்ரூவ்க்கு ஊட்டச் செல்ல

“ ஏ…. என்ன பண்ற “ என்று பின்னோக்கி நகர்ந்து நின்ற த்ரூவை பார்த்து

“ சாப்பிடுடா…. உனக்கும் பசிக்கும் ல “ என்று அழுத்தமாக அவன் வாயில் உணவை திணிக்கவும் தலையில் அடித்துக்கொண்ட த்ரூவ்

“ இங்க இந்த இடத்துல இந்த டைம்ல எப்படி பட்ட சீன்லாம் இருக்கு, அதெல்லாம் விட்டிட்டு உன் கூட இப்படி ஒரு சீன் ன வச்ச அந்த விதியா….“ என்று தலையில் அடித்துக்கொள்ள, அதில் நன்றாக சிரித்த மதி

“ இல்ல, சார்க்கு எப்படிப்பட்ட சீன் வேணுமா…. இப்போ, இங்க, அவ லவ்வா….உன்ன ரசிச்சி பாத்து அப்படியே… வெட்க பட்டுட்டே…..உனக்கு ஊட்டி விட்டுருந்தா சரியா இருந்திருக்கும்ல “ என்றதற்கு த்ரூவ் இடமிருந்து பதில் வராமல் போகவும்

“என்ன உன்ன ரிஜெக்ட் பண்ணிடல பிரனாவ் ”

“ ம்ஹூம்…. இல்ல நான் அவ கிட்ட சொல்லவே இல்ல “

“ஏன் சொல்லிருக்க வேண்டியது தானடா….”

“அது நான் சொல்ல ரெடியா இல்ல” என்றபடி முதுகை காட்டி நின்றவன் மீது இவன் முதுகு வைத்து சாய்ந்து கொண்ட மதி.

“எப்பவும் எல்லாம் ஒரே மாதிரியே இருக்காதுடா பிரானாவ்! இப்படி ஆகிடுமோன்னு பயப்படாம போய் தைரியமா சொல்லுடா…. அப்புறம் என்ன மாதிரி தான் தனியாவே நீயும் சுத்த வேண்டியதா ஆகிடும்…” என்று பேசியவனை முதுகை உலுக்கி தள்ளிவிட்டவன்.

அதன் பிறகு எதுவுமே பேசவில்லை. மதியும் என்னென்னமோ பேசி த்ரூவை பேச வைக்க முயன்றான், ஆனால் அவை அனைத்தும் தொல்லையிலேயே வந்து முடியவும்.

இவனும் அமைதியாகி விட்டான். பின் இருவரும் உண்டு முடித்து, மதி கைகளை ஆட்டி பாய் சொன்னபடி காரில் ஏறி சென்றவன்

“ ஒழுங்க ஸ்டெல்லா கிட்ட உன் லவ்வ சொல்லுடா….சொல்லாம அவள மிஸ் பண்ணிறாத…” என்று கத்தியபடி சென்றவனை அமைதாயாக நின்று பார்த்தவன்.

மூச்சை இழுத்து விட்டபடி அவன் அறைக்கு சென்று குளித்து உடையை மாற்றியவன். உருண்டு உருண்டு பார்த்தும் தூக்கம் என்பது வராமல் போக, எழுந்து பால்கனி அருகே சென்றான்.

இங்கே மதியின் அப்பார்ட்மென்ட் முன்னே காரை நிறுத்திய டிரைவர் அவன் பக்கம் வந்து கதவை திறந்து கைதாங்கலாக அவனை தூக்க போக, அதை கை நீட்டி தடுத்தவன் தடுமாற்றம் இன்றி எழுந்து நின்று,

“கீ…..” என்று கைகளை நீட்ட அந்த டிரைவரும் அவனை புரியாது பார்த்து சாவியை கொடுத்தார்

சாவியை வாங்கிய மதி தள்ளாட்டம் இன்றி நடந்து அவன் அப்பார்ட்மெண்டிற்கு சென்றவன்.

நேராக குளியல் அறை சென்று குளித்து விட்டு தலையைத் துடைத்தபடி பால்கனியில் நின்றபடி அந்த இருளை வெறித்து கொண்டிருந்தான்.

“நான் வமிட் பண்ணிட்டா போதை எனக்கு இறங்கிடும்டா, அதை கூட உனக்கு நியாபகம் இல்லையா“

“பேதையில இருக்க மாதிரி நல்லாவே நடக்கிற மதி ஏன் என் கிட்ட இப்படி நீ நடிக்கிற டா?“ என்று ஒரே நேரத்தில் இருவரும் அவர் அவர் மனதோடு பேசிக்கொண்டு நின்றிருந்தனர்.

மறக்க முடியாத பல சந்தோஷமான நிகழ்வுகள் இப்போது நினைக்கையில் முள்ளாக தைக்க, இருந்தும் அதை கண்களை மூடி இருவரும் மீண்டும் உணரவே முயன்றனர்.

வலித்தாலும் அந்த நினைவுகள் வேண்டும் என்று தான் இருவருமே நினைத்தனர். பதிமூன்று வருடம் கழிந்தும் நேற்று நடந்தது போல தான் அனைத்தும் தோன்றியது.

பெங்களூர் பணக்காரர்கள் மத்தியில் புகழ்பெற்ற கல்லூரி அது, அங்கு தான் த்ரூவை அவன் தாத்தா ஹாஸ்டலில் தங்கி படிக்கச் சேர்த்திருந்தார்.

தாத்தாவிற்கு பின் அனைத்தையும் இவன் தான் பார்க்க வேண்டும் என்ற நிலையில் பிசினஸ் குரூப்பில் சேர்ந்திருந்தான்.

கல்லூரியில் நுழையும் நேரம் படிப்பு அதை முடித்து பிசினஸ் என்று இதையையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு வந்தவனுக்கு நண்பர்கள் என்று யாரையும் அருகில் சேர்க்கும் எண்ணம் இல்லை.

ரேகிங், ஆவுட்டிங் விளையாட்டு என்றிருந்தவர்கள் மத்தியில் ஏதோ ஒன்றை யோசித்த படியே வலம் வருவான் த்ரூவ் பிரனாவ்.

அதற்கு என்று யாரிடமும் பேசாமல் இருப்பான் என்றும் இல்லை, கல்லூரி நேரம் பேசுவான் ஆனால் யாரிடமும் நெருங்கி பழக மாட்டான்.

இப்படியே ஒரு செமஸ்டர் அவனுக்கு அமைதியாக சென்று விட, அடுத்த செமஸ்டர் தொடங்கிய நேரம் அது.

“காய்ஸ் இந்த செம் உங்க எல்லாருக்கும் குரூப் ப்ராஜெக்ட் இருக்கு, அதவச்சி தான் உங்களுக்கு இன்டர்னல் மார்க் கொடுக்க போறேன்.

ஒரு குரூப்ல மினிமம் அஞ்சு பேரு இருக்கனும், யார் யார் குரூப்னு நேம் கொடுத்துருங்க “ என்று விட்டு புரொபஸர் சென்று விட அந்த ஹால் முழுக்க ஒரே சலசலப்பு தான்.

புரொபஸர் சொல்லி சென்றதை கேட்ட த்ரூவ் சுற்றி யாருடன் சேரலாம் என்றபடி பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் தோளில் ஒரு கை வந்து விழுந்தது,