“அந்த கலர் இல்ல , புதுசா காட்டுங்க…” என்று அன்வீதா ஒரு கலரைத் பார்க்க
“இது வேனாக்கா? நிறைய ஸ்டோன் இருக்கு” என்று எடுத்து புடவையை கீழே வைத்துவிட்டு வேறு புடவை பார்த்தாள் ரூத்.
“ஜோசப், இந்த கலர் பாரு, உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கு”
என்று ஸ்டெல்லா ஒரு ஒரு கலராக ரூத்திற்கு மாற்றி மாற்றி வைத்துப் பார்க்க என்று மூன்று பெண்களும் கடையைத் தலைகீழாகத் தான் புரட்டிப் போட்டுக்கொண்டு இருந்தனர்.
என்னும் ஒரு மாதத்தில் ரூத்தின் திருமணம் என்ற நிலையில், திருமணத்திற்கு உடை எடுக்க வந்திருந்தனர்.
அன்று ஆதிஷிடம் பேசிய பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து ரூத்தை பெண் பார்த்துவிட்டு, ஆறு மாதத்தில் திருமணம் என்று முடிவும் செய்திருந்தனர்.
திருமண நாளை ஆறு மாதம் தள்ளி வைத்ததே ஸ்டெல்லா விற்காகத்தான்; அவள் இந்த நிலையில் திருமணத்திற்கு எதுவும் செய்து அழைய விட முடியாது என்று முடிவு எடுத்தவர்களாக, குழந்தை பிறந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர்.
அதன்படி ஸ்டெல்லாவிற்கு ஒன்பதாவது மாதம் சீமந்தம் நல்லபடியாக நடத்தி, அவளைப் பழைய வீட்டிற்கு அழைத்துச் சென்று நான் தான் பிரசவம் பார்ப்பேன் என்று அடம் பிடித்த மணியம்மாளை வீட்டுக்குச் சென்று தூக்கி வந்து இங்கே தங்க வைத்து, கலகலப்பாகச் சீமந்தத்தை நடத்தி முடித்தான் த்ரூவ்.
அதில் மணியம்மாள் தான் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு ஒரு வாரம் திருந்தார்.
பின் சரியாக டாக்டர் குறித்துக் கொடுத்த தேதியில் ஸ்டெல்லா சுகப்பிரசவத்தில் த்ரூவின் ஜாடையில் ஒரு அழகான இளவரசியைப் பெற்று எடுத்தாள்.
முதல் முறை அவன் இளவரசியைக் கையில் உடல் சிலிர்க்கப் பெற்றபோது, கண்கள் கலங்க மிக மென்மையாக நெற்றியில் முத்தம் பதித்து “வெல்கம் மை பிரின்சஸ்” என்று நெகிழ்ந்து கூறியிருந்தான்.
இவர்கள் இருவரையும் கண்கள் கலங்கப் பார்த்த அமுதா தன் பேத்தியை ஆர்வமாக வாங்கியதும், குழந்தையை பார்த்துச் சொன்ன வார்த்தையில் மேலும் உணர்ச்சி வசப்பட்டான் த்ரூவ்.
இத்தனை நாள் அவனின் தந்தை செய்த தவறுகளுக்குத் தவறே செய்யாத இவன், அவர் முகஜடையில் பிறந்த பாவத்திற்காகத் தாயைத் தூரத்தில் இருந்து பார்த்தே வளர்ந்திருந்தவன்.
அவன் முகத்தை வெறுத்து பல நாள் கஷ்டப்பட்டவனுக்கு விமோச்சனம் கிடைத்த விதமாக, அமுதா குழந்தையின் நெற்றியில் முத்தம் பதித்து,
“அப்படியே என் பையன் மாதிரியே அழகா இருக்கா டா தங்கம்” என்றவரின் வார்த்தையில் உணர்ச்சி குவியலான த்ரூவ், அமுதா தோளில் முதல் முறையாக சாய்ந்து,
“அம்மா….” என்று கூறி அழுது இருந்தான்.
இப்படிப் பிறந்தவுடன் அப்பாவுக்கு மட்டும் இன்றி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்து வந்தவளுக்கு “மகிழினி” என்று பெயர் வைத்து இருந்தனர்.
அதன்படி மகிழினி பிறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், உடை எடுக்க ‘நான் ரொம்ப பிஸி’ என்று சீன் போட்ட மதியையும் தூக்கிக்கொண்டு கடைக்கு வந்தவர்கள், இப்போது பெண்கள் செய்யும் ஷாப்பிங்கிள் சோர்ந்து,
‘தெரியாம வந்து சிக்கிடோமோ’ என்ற ரேஞ்சில் தான் அமர்ந்திருந்தனர்.
அமுதா மணியம்மாளுடன் மகிழினியைப் பார்த்துக்கொள்ள வீட்டில் இருந்துவிட வாணி, கண்ணப்பன், ஆதிஷ், மதி, த்ரூவ் என்று மீதம் அனைவரும் இவர்களை வேடிக்கை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தனர்.
“அக்கா.. நீங்க போலயா..” என்று மதி வாணியைப் பார்த்து கேட்க, அவர் முட்டியைப் பிடித்து அமர்ந்தபடி,
“நீங்க வேற தம்பி, நானும் சேர்ந்து தான் பார்த்துட்டு இருந்தேன். எதையாவது எடுப்பாங்கன்னு பார்த்தா, பார்த்துட்டே தான் இருக்காங்களே தவிர எடுக்க காணோம். அதான் வந்துடன் நிற்க முடியாம…”,
“அது சரி,” என்று ஆதிஷ் புறம் திரும்பியவன் அவனைப் பார்க்க, அவன் ரசனையாகக் கன்னத்தில் கை வைத்தபடி ரூத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதில் தலையை அடித்தவன் அவனைத் தோளில் தட்டி, “நீயாவது போய் புடவைய சீக்கரம் செலக்ட் பண்ண வேண்டியது தானடா, இங்க இருந்து ஜெல்லு ஊத்துறதுக்கு பதிலா?”,
“அது அவளே அவளுக்குப் பிடிச்ச மாதிரி எடுக்கட்டும்னு விட்டேன் சார்,”
“ப்ச்… சார்னு கூப்பிடாதன்னு சொன்னேன் தானடா” என்று இவன் முறைக்கவும், சிரித்தவன்
“சாரிண்ணா, இதோ நானே போறேன்” என்று அங்கு சென்று நின்றவனை, ஸ்டெல்லா முறைத்துப் பார்த்தே அவனைத் திருப்பி அனுப்பிவிட,
“போங்கண்ணா, இந்த ஸ்டெல்லா என்ன அங்க நிக்கயே விட மாட்டிக்கிறா” என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது, த்ரூவ் அலுவலக வேலையாகப் போனில் பேசிக்கொண்டு இருக்கவும்.
அவனைப் பார்த்த மதி அவன் போனைப் பிடுங்கி, “என்ன வேலை பாக்க விடாம இங்க என்ன உக்கார வச்சிட்டு, நீ உன் வேலையைப் பார்த்துட்டு இருக்கியாடா?”
என்றவன் தலையில் அடித்துவிட்டு, போனைப் பிடுங்கிப் பேசிவிட்டு வைத்தான்.
“இப்போ என்ன மதி, உனக்கு புலம்பிட்டே இருக்க?”
“என்னால முடியலடா, ஒரே இடத்துல உட்கார்ந்து போர் அடிக்குது,” என்றவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.
திரும்பி ஸ்டெல்லாவை எட்டிப் பார்த்தான்; அனைவரும் புடவையைத்தான் எடுத்துக்கொண்டு இருந்தனர். வாணியும் கூட டயட்டாகத்தான் இருந்தார்.
நேரத்தைத் திருப்பிப் பார்த்தபோது அது இரண்டைத் தொட்டுக்கொண்டு இருந்தது.
“இது நம்ம கடைதான்ம்மா, நீங்க ரூம்ல இருங்க. அவங்க பார்த்துப்பாங்க, நாங்க துணி எடுத்து முடிச்சிட்டு உங்கள கூப்பிடுறோம்,” என்று மதியை நோக்கி,
“பசங்களுக்கு அப்புறம் பெரியவங்களுக்கு மத்த டிரஸ் நம்ம எடுத்துடலாம்,” என்று சொன்னதற்கு அனைவரும் தலையசைத்தனர்.
ஆதிஷ் அவனின் அம்மா அப்பாவை மேனேஜர் அறையில் விட்டுவிட்டு, அவர்களுக்கு அங்கே உணவு ஆர்டர் செய்து கொடுத்துவிட்டு மாடி ஏறினான்.
அங்கே மூவருமாகத் துணியைச் சேர்ந்து பார்க்கும்போது மதி, “அழகா வீட்டுல இருந்தபடியே சாப்பிங் பண்ணிருக்கலாம், இங்க வந்து ப்பூ…” என்று சலித்துக் கொள்ள.
“எங்கடா! என் வைஃப் கேட்டா, துணிலாம் நேர்ல பார்த்துதான் வாங்கணும்னு சொல்லிடா!”
என்று புலம்பிக் கொண்டே இரண்டு மணி நேரம் கழித்து இவர்கள் துணியை எடுத்துக்கொண்டு கீழே பெண்களைப் பார்க்க இறங்கி வந்தபோது, அங்கே யாரையும் காணவில்லை.
“இங்கதான இருந்தாங்க, புடவை எடுத்து முடிச்சிட்டாங்கங்களா என்ன?”
என்று மதி சுற்றிப் பார்க்க, ஆதிஷ் அங்கிருந்த சேல்ஸ் பெண்ணிடம், “இங்க புடவை எடுத்துட்டு இருந்த மூணு பொண்ணுங்க எங்க போனாங்க?” என்று கேட்டான்.
“அவங்களா? புடவை ஆர்டர் கொடுத்துட்டு அங்க ரெஸ்ரூம் கிட்டதான் போனாங்க,” எனவும், த்ரூவ் ஸ்டெல்லாவை அழைக்க, அவள் ஃபோன் எடுக்கப் படாமல் போக.
“அம்மு போனை எடு…” என்று முனங்கியவன்,
“மேனேஜர் ரூம்ல இருக்காங்களான்னு பார்த்துட்டு வா ஆதிஷ்,”
என்று அவனை அனுப்பி வைக்க, இவன் கடை முழுவதும் தேடினான்.
மதி பாத்ரூம் சென்று தேட, மூவரையும் எங்கு தேடியும் காணவில்லை.
அதில் பதறிய , உடனே அந்த ஏரியா இன்ஸ்பெக்டரைத் தொடர்பு கொண்டவன் அங்கே அவரை வரவழைத்தான்.
அதற்குள் சீசிடிவியின் மூலம் மூவரும் எங்கே சென்றனர் என்று பார்க்க, கடைசியாகச் சிரித்துப்பேசிக் கொண்டே மூவரும் வாஷ்ரூம் சென்றது அதன் பின் இவர்கள் திரும்பி வெளியே வரவில்லை.
அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வந்திருந்தார்.
வந்தவர் அவரை அருமுகம் செய்து கொண்டவர்,
“வெளியே மத்த கடையில செக் பண்ணிங்களா? ஒருவேளை அங்க போயிருந்தா?” என்றவருக்கு த்ரூவ்
“வெளியே என் பாடிக்காட்ஸ் இருக்காங்க சார், அவங்கள மீறி யாரும் போகல ,”
பின் அவர் அந்த சீசிடிவியைப் பார்த்து விட்டு நேராகக் கழிவறையை நோக்கிச் சென்றார்.
அவர் பின்னாலேயே மூவரும் சென்றனர். உள்ளே நுழைந்தவர் ஒருமுறை உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அங்கே சுற்றிப் பார்த்தார்.
கழிவறையின் கடைசியில் ஒரு கதவு ஒன்று இருக்க, அதை இவன் திறந்து பார்க்க, அந்த வழி கடையின் பின் புற பார்க்கிங் இடத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
“சார், அது எமர்ஜென்சி எக்சிட் டோர் சார், எப்பவும் பூட்டியே தான் இருக்கும்,” என்று அங்கே கூட வந்த வேலையாள் ஒருவன் சொல்லியதைக் கேட்டு விஸ்வா கோபமடைந்து
“கக்கூஸ்ல என்னடா எமர்ஜென்சி டோர்ரு? எவன்டா இந்த பில்டிங் டிசைனர் ” என்று எகிறுபவன், பின் நிதானித்து
“எப்பவும் மூடி தான் இருக்கும்னு சொன்ன, இங்க திறந்து இருக்கு”
“அதான் சார், எனக்கும் தெரியல” என்றவனின் குரல் பயந்து ஒழிக்க, நேராக அந்த கதவு வழியே வெளியே சென்றவன், சுற்றிப் பார்த்து அங்கு எங்கே கேமரா இருக்கிறது என்று நோட் செய்தான்.
“இந்த கேமரா ஃபூட்டேஜ், அன்ட் அந்த கடை, இந்த கடை, அடுத்த கடை ன்னு எல்லாத்தோட டூ அவர் ஃபூட்டேஜையும் வாங்கிட்டு வாங்க ஏட்டு”
என்று போலீஸை அணுப்பி வைத்தவன், அந்த கடை கேமரா பதிவை பார்த்தபோது அதில் கார்கள் செல்வது மட்டும் தான் பதிவாகியிருந்தது.
வேறு எதுவும் தெரியாமல் போகவும், மற்ற ஃப்ளோர் வீடியோவையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.
அப்போது இரண்டு மூன்று பென்டிரைவுடன் வந்த ஏட்டு அதை விஸ்வாவிடம் கொடுக்கவும், அதையும் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்தான்.
அதில் ஒரு கடையின் கேமராவில் முகத்தை மறைத்தபடி இருவர் இந்த கதவின் வழியாக பெண்கள் மூவரையும் ஒரு காரில் ஏற்றுவது தெரியவர, அந்த காரின் வண்டி நம்பரை வேறு ஒரு கடையின் கேமரா மூலம் கண்டுபிடித்தார் அவர்.
அதன் பின் அனைத்தும் அவசரம் தான், ஒரு புறம் த்ரூவ், அவர் ஆட்களை விட்டுத் தேட, மற்றொரு புறம் மதி, ஆதிஷ் என்று அனைவரும் எங்கெங்கோ தேடி அழைத்தனர்.
அதே நேரம் இங்கு மூவரும் ஒரு இருட்டு பங்களாவில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தனர்.
அன்று முப்பத்து மூன்று உயிர்களைக் கொன்ற அதே ஜெய்யின் பங்களாவில் தான் இவர்களை அடைத்து வைத்திருக்கின்றனர்.
இவர்கள் மூவரும் இங்கே தான் இருக்கிறார்கள் என்று கண்டிபிடித்து வருவதற்குள் இவர்களின் நிலை என்னவாக மாறப்போகிறதோ!
இங்கு போலீஸ் மூலம் அந்த வண்டி சென்ற இடம், அந்த வண்டியின் தற்போதைய ஓனர் என்று அனைத்தையும் அலசிப் பார்த்ததில் கிடைத்த பெயர் தான் வினோ.
அந்தப் பெயரை கேட்டு மூவரும் வெறி பிடிக்காத குறையாகத்தான் அவனைத் தேடித் திரிந்தனர். இப்போது மட்டும் அவன் இவர்களின் கையில் கிடைத்தாள் அவன் உயிர் அவன் உடலில் இருக்காது.
இங்கு மயக்கத்தில் இருந்த பெண்களில் முதலில் கண் திறந்த அன்வீதா, சுற்றி இருந்த இருளைப் பார்த்து பயந்தவளாக
“அ….. யாரு….. நான் இங்க என்ன பண்றேன்?” என்று பயந்து அவள் கத்தியதில் மற்ற இருவரும் மயக்கத்திலிருந்து எழுந்தனர்.
கடைசியாக மூவருக்கும் அங்கிருந்த எந்தப் புடவையும் பிடிக்காமல் போக, அங்கு இவர்களுக்கு பிடித்த படி புடவைக்கு டிசைன் சொல்லி நெய்து எடுத்து வரும்படி ஆர்டர் செய்து முடித்துவிட்டு மற்றவர்களைத் தேட, அப்போதுதான் ஸ்டெல்லா அவளின் போனையே எடுத்துப் பார்த்தாள்.
த்ரூவ் அணுப்பி இருந்த மெசேஜைப் படித்தவள், “சரி அப்போ நீங்க ரெண்டு பேரும் மேல போங்க, நான் வாஷ்ரூம் போயிட்டு வந்திரேன்”
“ஸ்டெல்லா நானும் வரேன்” என்று அன்விதாவும் அவளோடு இணைந்து கொள்ள, ரூத்தும் கூடவே சென்றாள்.
அங்கு உள்ளே கழிப்பறையைப் பயன்படுத்தி விட்டு வெளியே வந்தது மட்டுமே நினைவு இருக்க, ஒன்றும் புரியாமல் தான் மூவரும் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தனர்.
“ஸ்டெல்லா…. இது என்ன இடம்? நம்மள கடத்திட்டாங்கங்களா?” என்று ரூத்தின் நடுங்கிய குரலைக் கேட்டு, ஸ்டெல்லா பேசும் முன்
“சரியா சொன்ன பாப்பா…. கடத்த தான் சென்ஞிடோம்” என்று சிரித்தபடி சாதிக் வர, அவனுடன் ஸ்டெல்லாவை கொடுறமாகப் பார்த்தபடி வினோவும் வந்தான்.
“அவன் உள்ள தூக்கிப் போட்டா? எனக்கு வெளிய வரத் தெரியாத என்ன?”
என்று வினோ அவளை நக்கலாகப் பார்த்தவன்,
“உன் சேப்டர் மதி கூட முடிஞ்சதுன்னு நினைச்சா, அவன் உருவத்துல புள்ளைய தூக்கிட்டு வந்திருக்க. அது எப்படி எங்க கூடயே தான இருந்தான் அவன்? அப்பறம் எப்போ வந்து உனக்கு புள்ளைய கொடுத்துட்டுப் போன?”
என்று சாதிக்கின் கேள்வியிலும் அவனின் பார்வையிலும் கூசிப்போய் தலையை அவள் திருப்ப, இவற்றை எல்லாம் ஒரு முறைத்தப் பார்வையுடன் ஸ்டெல்லா பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பார்வையில் வீனா போன வினோவிற்கு கோபம் ஏற, அவளை ஓங்கி வயிற்றில் மிதித்து கீழே தள்ளிவிட, சேரோடு முகம் கசங்கி கீழே விழுந்தாள் ஸ்டெல்லா.
அதில் ரூத் பயந்து “ஸ்டெல்லா…” என்று அலறி துடிக்க, அப்பவும் கலங்காமல் முறைப்புடன் தான் பார்த்தாள் ஸ்டெல்லா.
“என்னடி மிதிக்கிறன், கத்தாம முறைச்சிட்டு இருக்க?”
என்றவன் கூறியது போல வலிதான், உயிர் போகும் வலிதான்; ஆனால் அதை அவன் முன் எதையும் காட்டிவிடக் கூடாது என்று அத்தனை பிடிவாதமாக மறைத்துக் கொண்டு முறைத்தபடியே இருந்தாள் ஸ்டெல்லா.
“அவனுக்கு ஏத்த அழுத்தமான ஆளு தான் போல நீ. சரியாத்தான் ஜோடி சேர்ந்திருக்கிங்க.
நீ அந்த த்ரூவ் அவனோட ஆளுன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, சிங்கப்பூர்ல உனக்கு போதை மருந்து மட்டும் கலந்திருக்க மாட்டேன்.
அப்போவே உன்னை முடிச்சிட்டு அந்தத் த்ரூவப் பைத்தியமா அழைய வச்சிருப்பேன்”
என்றவனின் பேச்சில் ஒரு நிமிடம் திகைத்தவள், அன்று நடந்த விஷயத்தை நினைவுபடுத்திப் பார்த்தாள்.
டீயை பாதி குடித்துவிட்டுத் த்ரூவ் அறைக்குச் சென்றவளுக்குத் தலைசுற்றியது அவளின் தடுமாற்றம் ஏன் என்ற வினாவிற்கு இன்று பதில் தெரிந்துவிட, அவனைத்தான் கொன்றுவிடும் நோக்கில் பார்த்தவள்
“அப்போ எனக்கு மட்டும் இல்ல, த்ரூவுக்கும் நீ தான் போதை கலந்தியா?” என்றவளின் பேச்சில் நக்கலாகச் சிரித்தவன்,
“அன்னைக்கு நான் ஒரு பிளானோட தான், அவனோட மானத்தை வாங்கி இங்க அவன் லூசு அம்மா கையால சாக வைக்கலாம்னு மது, மாதுன்னு ரெண்டையும் அனுப்பி வச்சேன்.
மதுல சிக்கினவன் மாதுல இருந்து தப்பிச்சிட்டான்.
நடுவுல எவனோ ஒருத்தன் வந்து கெடுத்துட்டான். எவனன்னு தான் தெரியல, அவன் மட்டும் மாட்டடும் அவனுக்கு இருக்கு” என்று இவன் பேசுவதைக் கேட்ட அன்வீதா,
“ஏன்டா இப்படி பண்றீங்க? பிரண்ட்ஸா தானடா இருந்தீங்க?” என்றவளின் கழுத்தைப் பிடித்த சாதிக்,
“பிரண்ட்ஸ்…. நாங்க பிரண்ட்ஸா இருந்தத நீ பாத்தியா? சொல்லு பாத்தியா?” என்று அவள் கழுத்தை நெறித்து அதில் அவள் மூஞ்சிக்கு திணறவும் அவளை விட்டவன்.
பைத்தியம் போல இங்கும் அங்கும் நடந்தபடி, “எல்லாத்துக்கும் இந்தத் த்ரூவ் அவன் இருக்கானே உன் புருஷன்” என்று ஸ்டெல்லா அருகில் வந்து அவள் முடியைப் பிடித்தவன்,
“அவன் தான் காரணம்” என்று அவள் முடியை இழுக்க, அதை பார்த்த ரூத் “அண்ணா…. விடுங்கண்ணா, ஸ்டெல்லா பாவம் அண்ணா….” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
“அழுங்க, நல்லா அழுங்க. நாங்க எத்தன நாள் எங்க போதை இல்லாம அழுதுருப்போம், அழு….அழுடி!” என்று சிரித்தவன், அவன் போதையை உட் கோள்ள, வினோ,
“நாங்க பாட்டுக்கு ஜாலியா போதை பிசினஸ் மதி பேருல பண்ணிட்டு சந்தோஷமா இருந்தோம். அதை கெடுத்து எங்களை ஜெயில்ல அனுப்பிட்டு, அவன் மட்டும் பொண்டாட்டி பிள்ளைன்னு சந்தோஷமா இருப்பானா?
நெவர்! உங்க மூணு போரோட உடம்ப பிணமா நடுரோட்டுல தூக்கிப் போடுறதுல அவனுங்க கதறி அழணும். என்ன அதைப்பார்த்து ரசிக்கத்தான் நாங்க இங்க இருக்க மாட்டோம் பிட்ச்” என்று தோள்களை உலுக்கியவன், சாதிக் தோளில் கை போட்டு,
“அந்த கிழவனுக்கு இவ தான் வேணும்னு சொல்லிடான்”
என்று ரூத்தை நோக்கி கை காட்டியவன்,
“பேலன்ஸ் ரெண்டு பேருல எனக்குத் த்ரூவ் பொண்டாட்டி தான் வேணும்னு நாடி நரம்பு எல்லாம் கேக்குதுடா. சோ நீ அன்விய எடுத்துக்கோடா”
என்று சிரித்தவன்; சிரிப்பில் மூவருக்கும் நெஞ்சில் நீர் வற்றிப்போகும் அளவு பயம் வந்து அழுத்த கடவுளிடம் தான் இங்கு இருந்து காப்பாற்ற வேண்டி கொண்டிருந்தனர்.
சாதிக் “எங்கடா அந்த கிழவன் போனா ? பாட்டில் வாங்கிட்டு வந்திறேன்னு சொன்ன வன் எங்கடா ” என்று சாதிக் கத்த, தோடங்க,
“இதோ வந்துட்டேன் பாஸ்! பக்கத்துல கடை எங்கயும் இல்ல, அதான் லேட் ஆகிடுச்சு” என்று ஒற்றை காலை இழுத்து இழுத்து நடந்தபடி இருளில் வந்தது அந்த உருவம்.
அனைத்தும் முடிந்து விட்டது என்ற நேரத்தில் பாம்பாக மூவர் வந்திருக்க, இவர்களிடம் இருந்து பெண்கள் எப்படித் தப்பிப்பார்கள்?