குளிரூட்டப் பட்ட அறையில் நன்றாகப் போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஸ்டெல்லாவின் இடது தோள் பாறமாக இருக்க, அதில் தூக்கம் கலைந்தவளாகக் கண் விழித்துப் பார்த்தாள்.
கண் முன் த்ரூவின் முகமே அழகாகக் காட்சியளிக்கவும், தானாக உதடு புன்னகைக்க விரிந்தது.
ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தவனை அப்படியே சிறிது நேரம் ரசித்து பார்த்தவளுக்கு, இரவு நடந்த கூடல் நினைவு வர முகம் சிவந்து கீழ் உதட்டை கடித்தவள்.
“ஃப்ராடு…” என்று அவனைச் செல்லமாகத் திட்டி அவன் கன்னம் கிள்ளியவள், அவனை நகர்த்தி விட்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
நேற்று இரவு கூடலில் உடலில் களைப்பு மட்டுமே இருக்க, இரவு த்ரூவின் மென்மையில் திரும்பி அவனை காதலாக பார்த்தாள்.
அத்தனை ஆசையுடன் நெருங்கியவன், ஸ்டெல்லாவுக்குக் கஷ்டம் இருக்கக் கூடாது என்று அவன் உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, அவள் கண் பார்த்து அவள் முகம் காட்டும் சின்ன மாற்றத்தையும் கவனித்து அத்தனை மென்மையாக அவளைக் கையாண்டிருந்தான்.
இவை அனைத்தையும் நினைத்தபடி அவனைப் பார்த்தவளுக்கு, ஓவியம் ஒன்று கண் முன் வந்து போகவும் சிரித்த முகமாக எழுந்து வரையச் சென்றாள்.
இங்கு ஆதிஷ் வீட்டில் அவன் ரூத்துக்கு என்ன ஆகியிருக்குமோ என்று தவித்தவனாக, இரவும் சரியாக உண்ணாது, காலை நேரமாக எழுந்து அவள் போனிற்காகக் காத்திருந்தான்.
ஆதிஷ் இப்படிச் சோர்வாகப் போனையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த கண்ணப்பன், வாணியை அழைத்து,
“என்ன ஆச்சு! ஏன் ஆதி போனை இப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்கான்?”
“அதுவா…” என்று நேற்று அமுதா மூலமாக மணியம்மாளுக்குக் கிடைத்த விஷயத்தை அறிந்தவளாக அங்கு நடந்த அனைத்தையும் கண்ணப்பன் இடம் கூறி முடித்தவர்.
“அவங்க பையன் நம்பிக்கையாவே பேசிட்டுப் போயிருக்காராம், சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்னு சொல்லியிருக்காங்க” என்றவரைப் புரியாமலேயே பார்த்த கண்ணப்பன்.
“அதுக்கு ஏன்டி உன் பையன் இப்படி இருக்கான்? அவன் சந்தோஷமாகத்தான இருக்கணும்”
“அந்த ரூத் பொண்ணு போன…, அவ அக்கா வாங்கி வச்சிட்டா லாம், அதான் அவ கூடப் பேச முடியலைன்னு இவன் இப்படி இருக்கான்”
“அப்போ நீ சொல்றதைப் பார்த்தா சீக்கிரம் எல்லாம் ஓகே ஆகிடும் போல”
“நான் என்னடி உன் கிட்ட சொன்னேன்?” என்றவரை “என்னங்க சொன்னீங்க?” என்று ஒன்றும் புரியாமல் இவர் பார்க்கவும்,
கோபத்தில் மீசையை முறிக்கிய கண்ணப்பன், “அங்க அந்தப் பொண்ண இவனுக்கு கொடுக்க ஒத்துக்கிட்டாளும், இவன டாக்டர் கிட்ட காமிச்சு டாக்டர் எல்லாம் சரின்னு சொல்ற வரை நான் ஒத்துக்க மாட்டேன்னு சொன்ன தானடி!”
என்றவரை மேலும் முறைத்தவர் , “நம்ம பையன் வாழ்க்கை மட்டும் இல்ல, அந்தப் பொண்ணு வாழ்க்கையும் இதுல இருக்கு,
இவன் காதல் முத்தி போய் அந்த புள்ளைய எதாவது பண்ணிடானா ?
சுயநலமா யோசிச்சு என்கிட்ட அடிவாங்காதடி, ஒழுங்கா அவனை டாக்டர் கிட்ட போக இன்னைக்கு கிளம்பி இருக்கச் சொல்லு”
என்று அவர் கோபமாக உள்ளே சென்று விடவும், வாணி தான் முழித்து நின்றார்.
பின் கண்ணப்பன் சொல்வதிலும் நியாயம் இருப்பது தெரிந்து மெல்ல ஆதிஷ் அருகே சென்றார்.
இவர் வந்தது கூடத் தெரியாது, ஆதிஷ் அந்த போனையே பார்த்தபடி சோபாவில் அமர்ந்து இருக்க,
வாணி தயங்கியபடியே அவன் அருகே அமர்ந்தவர், “ஆதி…. என்னப்பா பண்ற?” என்று பேச்சைத் தொடங்க, அவன் அவர் குறளில் கண்களை மூடித் திறந்து போனை அருகில் வைத்து நிமிர்ந்தவன்.
“சொல்லுங்கம்மா, என்ன பேசணும்? அப்பா என்ன சொல்லி அனுப்புனாங்க?” என்று விஷயத்திற்கு வர, வாணி அதில் ஒரு நிமிடம் முழித்து பின் தெளிந்து
“என்னையா? ஆஸ்பிட்டல்க்கா? எதுக்கு?” என்றவனுக்கு எப்படி விஷயத்தைச் கூறுவது என்று தெரியாது அவர் தடுமாறவும், அவர் தடுமாற்றத்தைக் கண்டு ஏதோ பெரிதாக வரப் போகிறது என்று யூகித்தவன்.
அதற்கு அவன் மனதைத் தயாராக்கி கொண்டு, “என்னன்னு சொல்லுங்கம்மா” என்று அவரைப் பேச வைக்க, வாணியும் தயங்கியபடியே
“அன்னைக்கு நீ உன்னோட லவ் பத்தி எங்ககிட்ட சொன்னலப்பா,….. அதுல உங்க அப்பா கொஞ்சம் பயந்துட்டாரு.
அதான் டாக்டர் கிட்ட உன்னக் காட்டி ஏதோ பேசணும்னு சொன்னாருப்பா” என்றவர் ஆதிஷ் முகத்தைப் பார்த்து
“நீ பயப்படாத ஆதி…. அம்மா நான் உன் கூட வரேன், நான் பார்த்துக்கிறேன். சும்மா போயிட்டு உடனே வந்துடுவோம்” என்று அவனுக்குத் தைரியம் சொன்ன அம்மாவைப் லேசாகச் சிரித்தபடி பார்த்தவன்.
அவன் இருக்கையை விட்டு எழுந்து நெட்டி முறித்தபடி, “தாராளமா போலாமேம்மா…. சரி, எந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகலாம்னு முடிவு பண்ணிருக்கீங்க?”
என்றவனுக்கு உள்ளே இருந்து வந்த கண்ணப்பன், “மேரி, அப்படின்னு ஒரு டாக்டர் இருக்காங்க, நல்ல டாக்டராம். எந்த விதப் பிரச்சனையும் சரி பண்ணிடுவாங்களாம், அவங்ககிட்ட தான் போகணும்”
என்றவரைத் தலையை திருப்பிப் பார்த்த ஆதிஷ், “யாரு? டவர் பக்கத்துல இருக்க டாக்டர் மேரியா? பரவாயில்லை, நல்ல டாக்டர் தான். அவங்ககிட்ட போகணும்னா அப்பாயிண்ட்மென்ட் முன்னாடியே வாங்கி இருக்கனுமே வாங்கினீங்களா?”
என்று இருவரையும் மாற்றி மாற்றிப் பார்க்க கண்ணப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை,
“இல்ல, எனக்கு அப்பாயிண்ட்மென்ட் வாங்கணும்னு முன்னாடியே தெரியாதே!”
என்றவரைத் தாடை தடவி ஏதோ யோசித்த படி பார்த்தவன்,
“சரி விடுங்க, நெக்ஸ்ட் டைம் கரெக்ட்டா அப்பாயிண்ட்மென்ட் போட்டுடுங்க. இன்னைக்கு நான் போட்ட அப்பாயிண்ட் மென்ட்லயே பார்த்துட்டு வந்துருவோம். சீக்கிரம் கிளம்பி இருங்க”
என்று சொல்லிவிட்டு அவன் மாடி ஏறிவிட, இருவரும் பேந்த பேந்த தான் விழித்து நின்றனர்.
“இப்போ என்ன சொல்லிட்டுப் போறான் இவன்? ஏற்கனவே அப்பாயிண்ட்மென்ட் போட்டுருக்கான்னா, நமக்கு முன்னாடியே இவனே டாக்டரைப் பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தானா?” என்ற கண்ணப்பனைப் பார்த்து உதடு பிதுக்கிய வாணி
“எனக்கும் ஒன்னும் தெரியலங்க.”
“சரி கிளம்புங்கன்னு சொல்லிட்டுப் போயிருக்கான் தானே? வா அங்க போய் டாக்டர் கிட்டயே கேட்டுருவோம்” என்று இருவரும் வேகமாக கிளம்பி வர, மூவருமாக கேப்பில் ஆஸ்பிட்டலுக்குச் சென்றனர்.
அங்கு மருத்துவமனையில் ஆதிஷ் புதிதாக வந்த இடம் போல் இல்லாமல், நேராக எங்கு செல்ல வேண்டும், எங்கே பேர் சொல்லிவிட்டு காத்திருக்க வேண்டும் என்று அனைத்தையும் சரியாகச் செய்துவிட்டு, அவன் அப்பா அம்மாவுடன் காத்திருப்பு இடத்தில் அமர்ந்தான்.
இவன் செயலில் குழம்பிப்போன வாணி
“ஆதி… இதுக்கு முன்ன இங்க வந்திருக்கியாப்பா?” என்று கேள்வியாக அவனைப் பார்க்கவும், அவர்களுக்குப் பதில் எதுவும் சொல்லாது சிரித்தவன் அமைதியாகவே இருக்கவும்,
அங்கு வந்த நர்ஸ் இவன் பெயரை அழைத்து உள்ளே போகச் சொல்ல, மூவருமாக எழுந்து நிற்கவும், அந்த நர்ஸ்
“நீங்க வெயிட் பண்ணுங்க, பேஷன்ட் பார்த்துட்டு டாக்டர் கூப்பிடுவாங்க, அப்போ உள்ள போங்க” என்று அவர் சொல்லிவிட்டுச் சென்றார்.
பின் ஆதிஷ் மட்டும் இருவரிடமும் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான். ஆதிஷ் சென்று பத்து நிமிடம் மேலானதும், வாணி பயந்துதான் போனார்.
“என்னங்க இவ்ளோ நேரம் ஆகுது? நம்ம பையனுக்கு ஏதாவது இருக்குமோ? உள்ள என்ன பண்ணிட்டு இருப்பாங்க? இவனுக்கு ஒன்னும் இல்ல தான?
அப்பா முருகா! என் பையனை பத்திரமா என் கிட்ட திருப்பி கொடுத்துடுப்பா, நான் உனக்கு அலகு குத்துறேன்!”
என்று பலவாறு பேசி, கூட இருந்த கண்ணப்பனையும் சேர்த்து பயமுறுத்திக் கொண்டு இருந்தார்.
கடைசியாக பதினைந்து நிமிடம் கழித்து நர்ஸ் ஒருவர் வந்து இருவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, இருவரும் டாக்டர் சொல்லப்போவதைக் நினைத்து ஒரு வித பயத்துடன் தான் சென்று டாக்டர் எதிரே அமர்ந்தனர்.
அறையில் டாக்டர் எதிரே அமர்ந்தாவர்கள் ஆதிஷை அந்த அறையில் இருவரும் சுற்றித் தேட, அவர்களைப் புரிந்தவராக மேரி,
“ஆதிஷ் வெளிய வெயிட் பண்றாங்க, அவங்களோட செக்ஷன் முடிஞ்சது. நீங்க சொல்லுங்க, ஏதோ சந்தேகம் கேட்கணும் னு சொன்னிங்களா ம் கேளுங்க ” என்று அவர் புன்னகை முகத்துடன் பேசவும், தான் இருவருக்கும் சற்று தைரியமே வந்தது.
“அது டாக்டர், என் பையன் இங்க இதுக்கு முன்னாடி வந்திருக்கானா?” என்றதற்கு அவர் போட்டிருந்த கண்ணாடிச் சட்டத்தைச் சரி செய்தபடி, டாக்டர் மேரி,
“இது தான் உங்க பையனோட லாஸ்ட் செக்ஷன். அவர் இங்க என்கிட்ட ட்ரீட்மென்ட்க்கு வந்து மூணு மாசம் ஆகுது” என்றதைக் கேட்டு அதிர்ச்சியில்,
“என் பையனுக்கு ஏதாவது பெரிய பிரச்சனையாங்க?” என்று ஒரு பயத்துடன் கண்ணப்பன் கேட்க,
“நீங்க நினைக்கிற மாதிரி பெரிய பிரச்சனை எல்லாம் இல்ல, உங்க பையனுக்குக் காதல அளவா பண்ணத் தெரியாம கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க, அதுக்குத்தான் இந்த மூணு மாசம் ட்ரீட்மென்ட்,”
“அப்போ இப்போ என் பையனுக்கு ஒன்னும் இல்ல தான டாக்டர்? திரும்பி இங்க அவன் வர வேணாம் தான?” என்ற வாணியைப் சிரித்த முகமாகப் பார்த்தவர்,
“கவலைப்படாம போங்க, உங்க பையனுக்கு ஒன்னும் இல்ல, இப்போ அவருக்கு நீங்க நம்பி கல்யாணம் பண்ணி வைக்கலாம்”
என்று நம்பிக்கை கூறி இருவரையும் அனுப்பி வைக்க, வெளியே வந்த இருவரும் முதலில் ஆதிஷைத் தான் தேடினர்
அவன் காத்திருந்த இடத்தில் இல்லாது போகவும் இருவரும் பயந்து அவனைச் சுற்றித் தேட, அந்நேரம் சிரித்த முகமாக ஆதிஷ் வாசலில் இருந்து உள்ளே வந்தான்.
வந்தவனிடம் வேகமாக விரைந்த வாணி, “எங்கடா போன?” என்று பயந்து கேட்க, அவன் அதே மகிழ்ந்த முகத்துடன்,
“ரூத் கால் பண்ணிருந்தா, அதான் பேசிட்டு வந்தேன்” என்றவனைச் சந்தேகமாகப் பார்த்த வாணி,
“நீ இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தத அவ கிட்ட சொல்லிட்டியா?”
என்று அவர் கேட்டதற்கு இவன் சொல்லியிருப்பான் என்று உள்மனம் சொன்ன போதும், இல்லை இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர் தன் பையனின் மரியாதையை நினைத்து யோசித்தபடி பதறிக்கொண்டு கேட்க,
ஆதிஷோ இவர் பதட்டம் எதுவும் உணராமல், “ம்ம்ம்…. நான் முதல் தடவை இங்க வரும் போதே அவ கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்” என்றவனை வெட்டாவா என்பது போலத்தான் அவர் பார்த்து வைத்தார்.
அவர் பார்வை ஆதிஷ்க்குப் புரிந்ததோ இல்லையோ, அவர் கணவர் கண்ணப்பனுக்குப் புரிந்துவிட, வாணியைச் சமாதானம் செய்யும் விதமாக,
“நம்ம வீட்டுப் பொண்ணு ரூத் அவளுக்குத் தானம்மா தெரிஞ்சது” என்று மளுப்பி அவரை அழைத்துக்கொண்டு மூவருமாக வீடு திரும்பினர்.
என்று ஆதிஷ் ரூத்தின் கதையைத் தெரிந்து கொண்டானோ, அன்றோ அவளை இனி எதற்கும் காயப்படுத்தக் கூடாது என்று முடிவு எடுத்தவன், முதலில் செய்த செயலே டாக்டரைப் பார்க்கச் சென்றது தான்.
அவனுக்கு அவனைப் பற்றியும் அவன் ரூத் மீது வைத்திருந்த வெறித்தனமான காதல் பற்றியும் நன்றாக தெரியும்.
எங்கு அவன் வைத்திருக்கும் காதலே ஒரு நாள் ரூத்தை காயப்படுத்தி விடுமோ என்று பயந்தவனாக, ரூத்திடமும் இவனைப் பற்றி எடுத்துக்கூறி டாக்டரைப் பார்க்கச் சென்றான்.
ஆதிஷ் இவள் மேல் கொண்டிருந்த காதலைப் பற்றி கேட்டு முதலில் ரூத் பயப்படத்தான் செய்தாள்; ஒரு வாரம் நேரம் கேட்டு மிகவும் யோசிக்கவே செய்தாள்.
எவ்வளவு யோசித்தும் இவளுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. அதுவும் இன்றி அவனே இவளுக்காக டாக்டரைப் பார்க்கச் செல்கிறேன் என்று கூறும் போது அவனை வெறுக்க எங்கே தோன்றியது, அவன் மீது வைத்திருந்த காதல் தான் அதிகம் ஆனாது .
எப்படியே இவனின் பிரச்சனை நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து விட சந்தோஷமே.
இங்கு எப்போதும் காலை நேரமாக முழுக்கும் த்ரூவ், இன்று காலை ஒன்பது மணி வரை தூங்கிக் கொண்டு இருக்க அமுதா தான் பயந்து போனார்.
நேற்று நடந்த பிரச்சனையில், ஏதாவது பெரிய பிரச்சனையாக ஆகியிருக்குமோ என்று பயந்தவராக த்ரூவுக்கு ஃபோனில் அழைக்க, அந்த போன் சத்தத்தில் தான் மெல்லக் கண் திறந்தான் த்ரூவ்.
சோம்பல் முறித்து எழுந்தவன் போனை எடுத்து காலை அட்டென்ட் செய்தவன்,
“ம்ம்ம்… சொல்லுங்க ம்மா..” என்று சாதாரணமாகப் பேசவும் தான் அவருக்கு மூச்சே வந்தது,
அவருக்கு அவர் கஷ்டம் எதவது சின்ன விஷியம் என்றாலும் பயப்படும் சுபாவம் உடையவர் இல்லை அப்படி பயப்படும் படி பல இன்னல்களை கடந்து வந்தவர்.
அதனாலேயே இத்தனை பயம் பயந்தார்.
“இல்ல காலைல சாப்பிட நீங்க யாரும் வரலையேப்பா அதான் கால் பண்ணேன்” என்றதும் தான் இவன் திரும்பி நேரத்தையே பார்த்தான்.
“இவ்வளவு நேரமா தூங்கியிருக்கேன” என்று இவன் அதிரவும் அமுதா,
“பரவாயில்லைப்பா நீங்க பொறுமையா சாப்பிட வாங்க நான் டிபன் சூடு பண்ணி வைக்கிறேன்” என்று அவர் போனை வைத்து விடவும்,
இவன் சுற்றி ரூமைப் பார்க்க ரூமே அலங்கோலமாக இருந்தது, அதில் முகத்தை மூடி வெட்கியவன்,
“ப்ச்…. இப்போ புரியுது ஏன் அன்னைக்கு ஹோட்டல் ரூம் அப்படி இருந்திச்சின்னு” என்று முகம் சிவந்தவன் சுற்றி ஸ்டெல்லாவைத் தேட, பாத்ரூமில் இருந்து தண்ணீர் சத்தம் கேட்டது.
அதில் அவள் குளிக்கிறாள் போலும் என்று தலைகோதியவன், எழுந்து அவன் கையிலா பனியன் ஒன்றை அணிந்து கொண்டு எழுந்தபோது தான் அவன் தோளைப் பார்க்கவே செய்தான்.
வண்ணங்களால் ஏதோ வரைந்திருப்பது தெரிந்து, என்னவென்று பார்க்க கண்ணாடி முன் சென்று நின்று திரும்பி அவன் இடது தோளைப் பார்த்தவன் கண்கள் வியப்பில் விரிந்து கொண்டன.
த்ரூவின் தோளில் அலர்ந்த நிலையில் தாமரை மலர் மேலே நெருப்பு எரிந்து கொண்டு இருக்க, அந்த நெருப்பில் ஒரு ஆண் பெண் அணைத்து நிற்பது போல மிக அழகாக ஒரு ஓவியம் வரைந்து இருந்தது.
அதை ரசித்து பார்த்து நின்றவனின் வயிற்றை வந்து ஸ்டெல்லா அணைத்து நிற்கவும்.
அவளை முன் புறம் இழுத்து அனைத்தவன், அவள் ஈற முடியில் வாசம் பிடித்தபடி,
“ஹாலோ!… நான் நேத்து சொன்னது தான் இப்பவும் சொல்றேன். ஆர்ட்லாம் தோணும் போது தான் வரும், இன்னைக்கு உங்கல பாத்ததும் தோணுச்சு அதான் வரைச்சேன் “
என்றவளை மேலும் அவனோடு சேர்த்து அணைத்தவன் “அதுக்கு கையிலயா டி வரைஞ்சு வைப்ப, இப்போ குளிச்சா அழிஞ்சிடுமே” என்றவனைப் பார்த்து சிரித்தவள்,
“அப்போ குளிக்காதீங்க..” என்று அவனை தள்ளி விட்டு இவள் கீழே சென்று விட, த்ரூவ் தான் அடுத்து என்ன செய்ய என்று தெரியாது அந்த ஓவியத்தைப் பார்த்த படி அப்படியே நின்று விட்டான்.
சற்று நேரம் கழித்து த்ரூவை காணாது மீண்டும் வந்த ஸ்டெல்லா, அவன் அந்த ஓவியத்தையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டு விட்டு,
“நான் அதை ஃபோட்டோ எடுத்து வச்சிட்டேன், நீங்க போய் குளிங்க “ என்றவளைக் கண்ணாடி வழியே பார்த்தவன்,
“இந்த படத்துக்கு என்ன அர்த்தம் அம்மு “ என்றவனைத் தலையைச் சாய்த்துப் பார்த்தவள்,
“ஏன், பார்த்தா தெரியலையா “ அதற்கு இவன் தெரியவில்லை என்பது போலத் தலையசைக்கவும், குறும்பாகச் சிரித்தவள்,
“இப்போ எனக்கு விளக்கம் சொல்ல மூட் இல்ல, அந்த மூட் வரும் போது சொல்றேன். நீங்க இப்போ கீழ சீக்கிரம் வாங்க, எனக்கு பசிக்குது “ என்று அவள் மீண்டும் சென்று விட, த்ரூவுக்கு தான் அந்த ஓவியத்தை அழிக்கவே மனம் இன்றிப் போனது.
அதனால் முடிவு எடுத்தவனாக நேராக வெளியே குளிக்காமல் சென்றவன், அந்த ஓவியம் மேலேயே அது போலவே பச்சை குத்திக்கொண்டான் , என்றும் அவனுடனே அவள் வரைந்த ஓவியமும் அதனுடன் சேர்ந்து இவர்களின் அழகிய தருணத்தின் நினைவும் இருக்க வேண்டும் என்று நினைத்தவனாக அதை போட்டுக்கொண்டான்.