தனது ஏழு மாத வயிற்றை வருடிக்கொண்டே, மற்றொரு கையில் ஒரு கதைப் புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா.
கண்கள் அடிக்கடி வாசற்கதவைப் பார்த்துக்கொண்டே இருந்து, முழுமையாக அந்த கதைக்குள் மூழ்கிப் போக விடாமல் அவளை தடுத்து கொண்டு இருந்தது.
“ப்ச் த்ரூவ்…. இன்னைக்குமா…” என்று சலித்துக்கொண்டவள் நேரத்தைப் பார்க்க
அது இரவு ஒன்பது மணி என்று காட்டியது; ஒரு பக்கம் கண்கள் தூக்கத்திற்கு ஏங்க, அதை தூங்க விடாமல் அடமாக திறந்து வைத்திருந்தாள்.
பின் நேரம் செல்ல செல்ல பொறுமை இழந்து அருகில் இருந்த அவளின் கைபேசியை எடுத்து த்ரூவுக்கு அழைக்க, உடனே அழைப்பு ஏற்கப்பட்டது.
போன் எடுத்ததும் ஸ்டெல்லா “த்ரூவ் எங்க இருக்கீங்க…” என்று அதட்டலாகக் அவள் குரல் கொடுக்க, மறுமுனையில் இருந்து தயங்கியபடி தருண்,
“மேம்! நான் தருண், சார்! ஒரு வேலையா இருக்கார்” என்றதும், கண்களை மூடி சிறிது அவளை அமைதிப்படுத்தியவள்
“உங்க சார் வர எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டுச் சொல்லுங்க” என்றவளுக்கு,
“சரியா அரை மணி நேரத்துல வீட்டுக்கு வந்துருவாங்க மேம்” என்றதும், இவள் போனை கட் செய்து கீழே வைத்துவிட்டு கண்களை மூடிச் சாய்ந்து கொண்டாள்.
இது இன்று நேற்று நடப்பவை அல்ல; கடந்த மூன்று மாதங்களாக அதவது இவர்கள் திருமணம் முடிந்த நாளில் இருந்து இது தான் நடக்கிறது.
ஸ்டெல்லா நன்றாக உறங்கிய பிறகே வீட்டிற்கு வரும் பழக்கத்தை த்ரூவ் வைத்திருந்தான்.
காலை ஒன்பது மணி வரை இவளுடனேயே இருப்பவன், அதற்கு மேல் வேலைக்கு என்று கிளம்பி செல்பவன் பின் இரவு ஸ்டெல்லா உறங்கிய பிறகு தான் வீட்டிற்கு வருவான்.
இவளும் அவன் வரும் வரை எத்தனை நாளோ முழித்திருக்க முயன்று பின் அது முடியாது அவளை மீறி தூங்கி விடுவாள்.
அதன் பின் மீண்டும் இரவு இவன் எப்போது, எப்படி வருவான் என்று ஒன்றும் தெரியாது; இரவு இவள் தூங்கிய பிறகு வருபவன், இவளை அணைத்தபடி உறங்கியிருப்பதைத்தான் காலை எழுந்து பார்ப்பாள் அவள்.
முதலில் இவன் வேலை பழு அதிகம் போல, அதான் இப்படி போலும் என்று அவனுக்காக வருந்தியவள், வீட்டிலிருந்தே அவனுக்கு உதவ நினைத்து.
இங்கிருந்தே மடிக்கணினி உதவியுடன் இவளின் பழைய வேலையைப் பார்க்கத் தொடங்கினால். ஆனால் அதன் பிறகும், இவன் இதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கவும்; நேராகவே அவனிடம் கேட்டுவிட்டாள் ஸ்டெல்லா.
அதற்கு அவன் சொன்ன பதிலில் இவள் கோபம் குறைவதற்குப் பதில் மேலும் அதிகரிக்கவே செய்தது.
“திருமணம் முடித்து உன்னை அருகில் வைத்துப் பார்த்துக்கொண்டே மட்டும் இருக்க முடியல ஸ்டெல்லா” என்று சிறு நாணத்துடன் கூறிய அவனது பதிலில்,
பல்லைக் கடித்த ஸ்டெல்லா “உங்களை யார் பார்த்துக்கிட்டே இருக்கச் சொன்னா?” என்றவளின் பதிலில் என்ன சொல்வதென்று தெரியாமல் இவன்
எங்கு அவனால் இவளுக்கு ஏதேனும் சிரமம் ஆகிவிடுமோ என்று அவன் பயப்படுகிறான் என்று புரிந்தவளாக, அடுத்த செக்கப் டேட்டில் டாக்டரிடம் அவனை வைத்துக்கொண்டு இதைப்பற்றித் தெளிவாகப் பேசிவிட்டாள்.
அதில் “என்னது?” என்று அதிர்ச்சியுடன் அவளைப் த்ரூவ் பார்க்க. அதற்கு அந்த டாக்டரும், இது பிரச்சனை இல்லை என்று சொல்லி , இது கணவன் மனைவி உறவில் இயல்பு தான் என்பது போல பேசவும், த்ரூவ் தான் முழித்து நின்றான்.
ஆனால் அதன் பின்பும் இவன் ஸ்டெல்லாவிடம் கண்ணாமூச்சி தான் விளையாடிக் கொண்டிருந்தான்.
இன்றும் த்ரூவ் அவ்வாறே தாமதமாக வீடு திரும்பவும், அதில் எப்போதும் போல பத்து மணி வரை அவனுக்காக விழித்து காத்திருந்தவள்;
ஒரு கட்டத்தில் அவளை மீறி உறங்கிப் போனால், ஸ்டெல்லா தூங்கி நள்ளிரவு தாண்டி சிறிது நேரம் கழித்தே வீடு வந்த த்ரூவ்.
சத்தம் எழுப்பாமல் அறைக்குள் நுழைந்தவன், நேராகக் குளியல் அறை சென்று குளித்து முடித்துவிட்டு வேறு உடை அணிந்து வந்தான்.
ஸ்டெல்லா அருகே சென்று அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி ஒரு ஓரமாக வைத்தவன், சிறிது நேரம் அவள் முகத்தைப் பார்த்து நின்றான்.
பின் எப்போதும் அவளுக்குக் கொடுக்கும் நெற்றி முத்தத்தைக் கொடுத்துவிட்டு மெல்ல அவள் அருகே படுத்தான்.
பின் அவளை அணைத்தபடி உறங்கிப்போனான். இதுவே தினமும் த்ரூவுக்கு வழக்கமானது.
என்னதான் பழய விஷியம் அனைத்தயும் மறந்து விட்டான் என்று வெளியில் இவன் காட்டி கொண்டளும் உள்ளே ஒரு ஓரத்தில் அவனை நினைத்து அவனுக்கே பயம் இருக்க தான் செய்தது.
எங்கே இவனின் அப்பா அவனை போல இவன் அறியாது ஸ்டெல்லாவை துன்புறுத்தி விடுவோமோ என்று பயம் எழ, அதுவும் ஸ்டெல்லா இப்போது இருக்கும் நிலை என்று அனைத்தையும் நினைத்தே அவளை விட்டு ஒதுங்கி நின்றான் த்ரூவ்.
இப்படி இருந்தவனின் பயம் முடிவுக்கு வரும் நாளும் வந்தது.
அன்று மாலை போல் ஸ்டெல்லா, எப்போதும் போல த்ரூவின் அலுவலக அறையில் இவளின் வேலையை பார்த்துக்கொண்டிருக்க, அப்போது அவளின் போன் சத்தம் போட்டது.
யார் என்று எடுத்துப் பார்த்தவள் அது ரூத்தின் பாட்டு ஆசிரியர் என்றதும், வேகமாகப் போனை எடுத்து அவருக்கு வணக்கம் சொல்லி நலம் விசாரித்தாள் ஸ்டெல்லா.
பதிலுக்கு அவரும் அவள் நலனை விசாரித்துவிட்டு நேராக விஷயத்திற்கு வந்தவர், ரூத்திற்கு பாட்டு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக ஒரு வேலை வந்திருப்பதாக கூறிவிட்டு, அது இவர்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு அருகில் என்றும் சொல்லிவிட்டுத் போனை வைத்தார்.
அதில் ஸ்டெல்லாவிற்கு அத்தனை மகிழ்ச்சி; ரூத் மூணு மாதங்களாகப் பாடல் கற்றுத் தரும் ஆசிரியருக்கான வேலை தேடி அழைந்து கொண்டு இருக்கிறாள்.
ஓரிரண்டு வேலைகளும் கிடைக்கவே செய்தன தான், ஆனால் அவை அனைத்தும் தொலைவில் இருந்ததால் ஸ்டெல்லா மறுத்துவிட்டாள்.
தற்போது ரூத்தின் ஆசிரியர் சொல்லியிருக்கும் இடம் இவர்கள் இடத்தில் இருந்து மிக அருகில் இருப்பதால் அத்தனை மகிழ்ச்சி ஸ்டெல்லாவிற்கு.
அந்தச் சந்தோஷத்தில் ரூத்தைத்தேடி இவள் கீழே இறங்கி, அவள் எப்போதும் இருக்கும் இடங்கள் அனைத்தையும் இவள் தேட, அமுதா
“யாரம்மா தேடுற?” என்றவரிடம் “ஜோசப் எங்க அத்தை?” என்று இவள் கேட்டு நிற்கவும் அவர்,
“ரூம்க்குத் தான் போனா ம்மா, அங்க தான் இருப்பா பாரு” என்றதும், அவளும் அவளைத் தேடி அறைக்கு அருகில் சென்றவளின் காதில் ரூத் பேசும் குரல் தெளிவாகக் கேட்டது.
“என்னும் கொஞ்சம் நாள் வெயிட் பண்ணு ஆதி…. பாப்பா வந்ததும் பொறுமையா நம்ம விஷயத்தைப் பத்தி பேசுறேன், அது வரை எங்கயும் என்னால வர முடியாது ப்ளீஸ்.”
“போடி! பொம்ம!, நான் என்ன டெய்லியா டி கூப்பிடுறேன்? உன்ன நேர்ல பார்த்து ரொம்ப நாள் ஆகுது, ஒரு ஃபைன் மினிட்ஸ் வந்துட்டு போடி.”
“என்னன்னு சொல்லிட்டு வர ஆதி, அக்கா தனியா விட மாட்டா.”
“வேலை விஷயமா போறேன்னு சொல்லிட்டு வா ” என்ற சத்தம் என்னவோ மெதுவாகத்தான் கேட்டது, இருந்தும் அவளுக்கு அவர்கள் பேசியது தெளிவாகப் புரியவும்,
கண்கள் சிவந்து கோபமான ஸ்டெல்லா வேகமாக கதவைத் திறந்து கொண்டு
“ரூத்!” என்றவளின் சத்தத்தில், உடல் தூக்கிப் போடப் போனை கீழே போட்டவள் பயத்துடன் “ஸ்டெல்லா!” என்று எழுந்து நின்றுவிட,
உள்ளே வேகமாக நடந்து வந்த ஸ்டெல்லா அவள் போனை எடுத்துப் பார்த்தாள்; போனை கட் செய்துவிட்டு இருந்தாள் ரூத்.
உடனே போனை ஓப்பன் செய்து அது யார் என்று பார்த்தவள், அது ஆதிஷ் என்றதும் அத்தனை கோபம் வர ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தவள்.
“ஜோ…ஜோசப்!”
என்று மூச்சு வாங்கப் பேச முடியாமல் திணறி நின்றவளை, அங்கு சத்தம் கேட்டு வந்த அமுதா அவள் நின்ற நிலையில் பயந்து அவளைப் பிடித்து,
“அச்சோ ஸ்டெல்லா…” என்று அவளை அமர வைக்க
ஸ்டெல்லாவின் நிலையைப் கண்டு பயந்து போன ரூத், அவளுக்குத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்;
தண்ணீரை அருந்தி அமைதியாக முயன்ற ஸ்டெல்லாவால் சுத்தமாக முடியவில்லை.
கோபம், கோபம், கோபம் மட்டும் தான்; அந்த ஆதிஷை கொன்று போடும் ஆத்திரம் வரத் தலையைப் பிடித்து அமர்ந்து கொண்டாள்.
“ஸ்டெல்லா! என்ன ஆச்சு?” என்று அவள் கையைப் பிடித்த ரூத்தின் கையை உதறிவிட்ட ஸ்டெல்லா, அமுதாவைப் பார்த்து,
“இவ… இவள அமைதியா இருக்கச் சொல்லுங்க” என்று திணறியபடி பேசியவள், ரூத்தின் போனை எடுத்துக்கொண்டு அந்த அறையில் இருக்க முடியாது என்று நினைத்து.
இவள் வேகமாக எழவும் அதில் இவளுக்கு தலைசுற்றுவது போல தள்ளாட்டவும், அமுதா அவள் நிலையை பார்த்து அவள் கையைப் பிடித்துக்கொண்டார்,