அனல்– 40

அன்று அறைக்குள் ஸ்டெல்லாவை அழைத்துச் சென்ற அமுதா.

“சொல்லு ஸ்டெல்லா , எதுக்கு என் பையனை வேண்டாம்னு சொல்ற ம்மா? நீயும் அவன காதலிச்சத்தானே?” என்று நேராக அவர் விஷயத்திற்கு வந்து விட

அதை கேட்டு விரக்தியான சிரிப்பைச் சிந்தியவள்.

“உங்க பையன் மத்த ஆம்பளைங்க மாதிரி இருக்க மாட்டான்னு நினைச்சு தான் காதலிச்சேன். ஆனா அவர் நானும் ஒரு சராசரி ஆம்பளதான்னு நிரூபிச்சிட்டாரே!”

“சராசரியா… அப்படி அவன் என்ன பண்ணான்?”

என்றவருக்கு சிங்கப்பூரில் இருந்து இங்கு வந்து அவன் இவளைக் கண்டுகொள்ளாமல் இருந்ததை அனைத்தயும் சொல்லியவள்,

“இப்போ அவர் குழந்தைக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாரு. இப்படி இருக்க ஒருத்தர் கூட நான் எப்படி நம்பி என் வாழ்க்கையைச் கொடுக்க ?”

என்றவளின் கையை மென்மையாகப் பிடித்த அமுதா, “என் பையன் கண்டிப்பா இப்படி பண்ணிருக்க மாட்டான்ம்மா.” என்றவரை முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது நிமிர்ந்து பார்த்தவள்

“நீங்க அவன் அம்மா, அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க” என்றவளுக்கு மறுப்பாகத் தலையை அசைத்தவர்,

“அவன் பொண்ணுங்க விஷயத்துல தப்பு பண்ணிருந்தா அவன நானே என் கையால கொன்னுருப்பேன்ம்மா, அது அவனுக்கும் தெரியும். அதுக்காகன்னு இல்ல

அவன் என் பையன். இந்த அமுதாவோட பையன் தப்பு என்னைக்கும் பண்ண மாட்டான்.”

என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியவரின் நிலையைப் பார்த்து பயந்தவளாக அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தவள்,

அவர் குடித்து முடித்ததும், “ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுறீங்க ஆண்டி?

எனக்கு புரியுது, உங்க பையன் தப்பு பண்ணத ஏத்துக்க உங்களுக்கு முடியலைன்னு தெரியுது, அன அதுதான் உண்மை.”

என்றவளை நிமிர்ந்து பார்த்தவர், அவள் கையை பிடித்தவராக

“அவன் ஏன் உன்னைப் பார்க்க வரலன்னு என்கிட்ட சொல்லிட்டான்ம்மா. அவன் நீ சொன்ன மாதிரி தப்பு பண்ணல, அவன் என்னைக்கும் ஒரு பொண்ணுக்கு தப்பு பண்ண மாட்டான்ம்மா.”

“அது எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க ஆண்டி? தப்பு பண்ண மாட்டார்னு.

 இந்த உலகத்துல பெத்த அப்பாவ கூட நம்ம முடியாது அப்படி இருக்க உங்க பையன நான் எப்படி நம்ப “

கண்களில் அனல் பறக்க கேட்டவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, அவர் போட்டிருந்த முழு கை ப்லவுஸை (Full sleeve blouse) தூக்கி அவர் கையை காட்டினார். அதில் முழுக்க நெருப்பால் காயம் பட்ட தழும்பு இருந்தது; அதை பார்த்துப் பதறிய ஸ்டெல்லா,

“அச்சோ ஆண்டி, என்ன ஆச்சு…” என்று அவர் கையைப்பிடித்துக் கொள்ள, அமுதா எங்கோ வெறித்தபடி,

“இது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டவன் எனக்குக் கொடுத்த பரிசு” என்றவரை ஸ்டெல்லா புரியாமல் பார்க்க, அவர்

“இந்த காயத்தை பார்த்து என்னோட சேர்ந்து என் கண்ணீரை துடச்சி வழந்த என் பையன் என்னோரு பொண்ணுக்கு காயம் தரமாட்டான் ம்மா “ என்றவரை இவள் புரியாமல் பார்க்கவும் , அவளை அருகில் அமர வைத்த அமுதா

“எனக்குன்னு யாரும் இல்லை, சொந்தக்காரங்க வீட்டுல வேலை பார்த்து தான் வளர்ந்தேன். அங்க கூட எனக்கு ஒரு நிம்மதி இருந்துச்சு, அதைத் அழிக்கவே என்ன தேடி வந்தாரு த்ரூவ் ஓட தாத்தா, என் மாமா.”

“அப்போ எனக்கு இருபது வயசு தான், எங்கயாவது வரதட்சணை இல்லாம வரன் வருதான்னு பார்த்துட்டு இருந்தாங்க.

அப்போ தான் த்ரூவ் தாத்தா வந்து ‘என் பையனுக்கு இந்த பொண்ணு தான் வேணும்னு சொல்லிட்டான், பணம் காசுன்னு எதுவும் வேணாம், பொண்ணு மட்டும் போதும்’னு சொல்லவும், என் சொந்தக்காரங்களும் சுமை குறையட்டும்னு அவன பத்தி தெரிஞ்சும் ஒத்துகிட்டாங்க.”

“எனக்கு அவர பத்தி எதுவும் சொல்லல, மாப்புள யாரு ? அவன், என்ன பண்றான்னு நானும் நிறைய கணவோட நமக்குன்னு ஒரு வீடுன்னு தான் அங்க போனேன்.”

“நான் நினைச்சிட்டு போனதுக்கு மேல என்ன அங்க வச்சி தாங்குனாங்க.

த்ரூவ் பிறக்குற வரை என்ன அப்படி வச்சு பாத்துகிட்டான் அவன். அந்த ஒரு வருஷம் அத்தன சந்தோஷமா இருந்திச்சு,” என்று கண்களை மூடி கண்ணீர் வடித்தவர்.

“பூனை கண்ண மூடிட்டா உலகம் இருண்டு ரோம்னு  நினைக்குமாம், நானும் அவன் கூட அப்படி தான் இருந்திருக்கேன் .”

“அவன் யாரு, எப்படிப்பட்டவன்னு எதுவும் தெரியாம ஏமாந்து போய்,” என்று கண்களை திறந்தவர்.

“த்ரூவ் பிறந்து ஹாஸ்பிட்டல்ல என்ன பாக்கவே வரல அவன், என் மாமனார் மட்டும் வந்துட்டு, அவர் பங்குக்கு பொய் மேல பொய்யா அடுக்கி என்ன அவங்க சொந்தக்கார பாட்டி வீட்டுல விட்டுட்டு போயிட்டாரு.”

“ஏன்..” என்ற ஸ்டெல்லாவை பார்த்து சிரித்தவர், “அவர் பையன் கிட்ட இருந்து என்ன காப்பாத்த தான்,”

“அவனுக்கு எனக்கு முன்னாடி மூணு பொண்ணோட கல்யாணம் ஆயிருக்கு. மொத பொண்ண அடிச்சு கொடுமை படுத்தியே தொறத்தி விட்டுருக்கான், இரண்டாவது பொண்ணு இவன் டார்ச்சர் தாங்காம ஓடி போயிட்டாங்க.”

“மூணாவது பொண்ண கொன்னே போட்டுட்டாான் பாவி,” என்றவர் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள்.

“என்ன ஆண்டி சொல்றீங்க?” என்று அவர் கரம் பற்றவும்

“அந்த பொண்ணு அவன் கொடுமை தாங்காம தூக்கு மாட்டி இறங்கிடுச்சு ம்மா.

அவர் அப்பாவும் ஒரே பையன்னு அவன போலீஸ் கிட்ட மாட்டி கொடுக்காம, அவன் கிட்ட டீல் போட்டுருக்கார் “

“என்னது டீல்லா..” என்றவளுக்கு தலையை அசைத்தவர்

“‘எனக்கு பேரன் இல்ல பேத்தி வேணும், இல்லனா சொத்துல உனக்கு பங்கு இல்லை’ன்னு மிரட்டவும் தான் என்ன கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் நடிப்பு ம்மா.”

“ச்சீ  இப்படியும் ஒரு மனிஷனால இருக்க முடியுமா…”

“ அவர் குடும்பத்து வழி இவரோட முடிஞ்சிர கூடாதுன்னு சுயநலமா அவர் பையன் பத்தி தெரிஞ்சும் என்ன இந்த நகரத்துல மாட்ட விட்டுருக்காரு “

என்றதை கேட்டு ஸ்டெல்லாவுக்கு இதுவரை பார்த்திராத அமுதா மாமா மீது தான் அத்தனை கோபம் வந்தது.

“எனக்கு இந்த உண்மை எதுவும் தெரியாம, நானே…ஒரு வருஷம் கழிச்சு அவன் கிட்ட போய் மாட்டிட்டேன் ம்மா. பாக்காத கொடுமை இல்ல, காலையில வீட்டுல இருக்க மாட்டான் அப்போ தான் எனக்கு கோஞ்சம் நின்மதி இருக்கும் ,

 நைட் சரியா வந்துருவான். வந்து அவன் என்ன அடிச்சு கொடும  படுத்துவது ல எனக்கு சாக தோணும், சாகவும் முயற்சி பண்ணிருக்கேன்.”

என்றவர் கையை ஸ்டெல்லா ஆறுதலாக பிடிக்கவும், அமுதா மேலும் தொடர்ந்தார்.

“என்ன என் மாமா தான் காப்பாத்துனாரு. என் கிட்ட மன்னிப்பு கேட்டு கால்ல விழுந்தவரை என்ன சொல்ல? என் பையன் த்ரூவ் காக என்ன வாழ சொன்னாரு, இங்க இருந்து அவர் பையனுக்கு தெரியாத இடத்துல தங்க வைக்கிறேன்னு சொன்னாரு.”

“அது படி தான் த்ரூவ் ஏழாவது படிக்குற வரை நாங்க மதுரையில பாதுகாப்பா இருந்தோம். அன அத விட என்னோரு பிரச்சனையா என் பையன் வந்து நின்னான்,” என்றவரை இவள் புரியாமல் பார்க்கவும்.

“நாளுக்கு நாள் அவனோட உருவம் எனக்கு அந்த ஆளத்தான் நினைவுபடுத்தும்.

அவன் வளர வளர அவன் பக்கத்துல போகக் கூட எனக்கு பயம் வந்திருச்சு.

அவனத் தள்ளி வச்சு வளர்க்க ஆஸ்டல்ல சேர்த்தன், அவனும் என்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம போனா.

அடுத்த அஞ்சு வருஷம் லீவுல மட்டும் தான் வருவான், அப்போ கூட அவனப் பக்கத்துல விட மாட்டேன். சரியா த்ரூவ் ஏழாவது படிக்கும் போது என் மாமா என்ன தேடி வந்தாரு.

அவன் என்ன சொல்லி அவரைக் கூப்பிட்டு வந்தான் தெரியல, எங்க ரெண்டு பேரையும் அவன் இனி அடிக்க மாட்டேன்னு சொல்லி கூட்டிட்டுப் போனான்.

ஆனா அங்க நடந்ததே வேற, முன்ன விட மோசமா அடிக்க ஆரம்பிச்சான். வெளிய நாங்க தப்பிச்சுப் போகாதபடி ஆளுங்கல வீட்ட சுத்தி போட்டு கொடுமைப்படுத்தினான்.

சுடுதண்ணிய மூஞ்சில ஊத்துறது, சிகரெட்டால சுடு, சாராயப் பாட்டில வச்சு அடிக்கிறதுன்னு நிறைய பண்ணான். இதை பார்த்துத் த்ரூவ் தடுக்கப் போனா அவனுக்கு அடி விழும்.

மூணு வருஷம் நரகம் முடிவுக்கு வர நாளும் வந்திச்சு.

குடிச்சிட்டு சிக்கன் வறுவல் கேட்டான், அதைச் செய்யும்போது என்ன இத்தனை நேரம் ஆகுதுன்னு சட்டிய என் மேலயே ஊத்திட்டான்.  என் மேல பாதி வெந்து நான் துடிக்கிறதப் பார்த்துட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்.

எப்படியோ அங்க வேலை பாக்குறவங்க என்னைப் பாவம்னு பார்த்து ஆஸ்பத்திரியில சேர்த்து காப்பாத்துனாங்க.

ஒரு வாரம் முழுக்க ஆஸ்பத்திரியில தான் இருந்தேன். என் பையன் கிட்ட எனக்கு இப்படி ஆனதச் சொல்ல விடாம, அவன் கிட்டயே அவன வச்சிகிட்டான்.

எங்க அவன விட்டா நான் திருப்பி ஓடிப் போய்டுவேனோன்னு பயந்து, அந்த ஒரு வாரம் ‘அம்மா எங்க?’ன்னு கேட்டு அத்தன அடி வாங்குனான் த்ரூவ்.

அந்தப் படுபாவி நினைச்ச மாதிரி த்ரூவ்காகத் திரும்பி நான் காட்டோட வந்தேன். மாடியில அவன் குடிச்சிட்டு என்னப் பார்த்து நக்கலாக, ‘பரவாயில்லை, என்ன பண்ணாலும் நல்லாத் தாங்குற’

ன்னு பேசும் போது தான் என் பையன் த்ரூவ் என்னப் பார்த்தான். நான் நின்னுட்டு இருந்த கோலம் என்ன அப்படி பாக்க முடியல  அவனால கோபத்தைத் தடுக்கவும் முடியல, அவன் வேற நல்லா குடிச்சிருந்தான்.” என்று சொல்லாமல் நிறுத்தியவர் ஸ்டெல்லாவை நிமிரிந்து பார்த்து, எச்சிலைகூட்டி விழுங்கியவர்

“அவன மாடியில இருந்து பிடிச்சு அடிச்சு ஒரு வெறியோட தள்ளிவிட்டான் ” என்று அவர் சொல்லியதை கேட்டு ஸ்டெல்லா அதிரவெல்லாம் இல்லை அதற்கு மாறாக இவள் சிரிக்கவும் அமுதா மேலும் தொடர்ந்தார்.

“அன்னைக்கு தான் அத்தன வருஷம் தண்டனைக் காலம் முடிஞ்ச மாதிரி ஒரு சந்தோஷம். ஒருத்தன் என் முன்னாடி ரத்தம் வழிய உயிருக்கு போறாடியும் அப்போ கூட எனக்கு இறக்கம் வரல, சந்தோஷம் தான் வந்திச்சு.

ரத்தம் வழிய அவன் கீழே விழுந்து கிடந்த அப்படியே நான் மாடியப் பார்த்தேன், த்ரூவ் சிரிச்ச முகமா என்னைத்தான் பார்த்துட்டு இருந்தான்.”

என்று ஸ்டெல்லாவை நிமிரிந்து பார்த்தவர், “என் வலி, கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவன் என் பையன். அவன் போய் இன்னொரு பொண்ணுக்குக் கஷ்டத்தைக் கொட்க்கவே மாட்டான், நம்பு ஸ்டெல்லா”

என்றவரை யோசனையோடு பார்த்தவள், “அப்போ இந்த பெண்கள் ஆசிரமம், ட்ரஸ்ட் எல்லாம் உங்களுக்காகவா?”

என்றதற்கு மறுப்பாகத் தலையசைத்தவர், “அது எல்லாம் அவனுக்காக. அவன் அந்த ஆளு மாதிரி இல்லன்னு அவனுக்கு அவனே சொல்லிக்கிற சமாதானம்”

“சமாதானம்?”

“ம்ம்ம்….த்ரூவ பாக்க அந்த ஆளு மாதிரியே இருப்பான்மா, என்ன தான் அவன் என் பையன்னு பார்த்தாலும், அவன் முகம் அது அவனோட பையன்றத நினைவு படுத்திட்டே இருக்கும்.

எப்போலாம் அவன் கண்ணாடி பார்க்கிறானோ அப்போலாம் அவனுக்கு அவன் முகம் தெரியாது மாறா அந்த கொடுறன் முகம் தான் தெரியும்.

அது அவனுக்கு சுத்தமா பிடிக்காது; அவன் முகத்தை ஏதாவது பண்ணிடலாமான்னு வரை யோசிச்சி இருக்கும் போது தான்.

எங்க மாமா அவன் கிட்ட போய், ‘நீ என் பையன் மாதிரி இல்லன்றத, நீ பண்ற காரியத்தை வச்சி வித்தியாசம் காட்டு, உன் முகத்தை வச்சி இல்ல’ன்னு சொன்னார்.

ஏன்னா, ‘இந்த முகத்துல எனக்கு என் பையன் தெரியறதை விட உங்க அம்மா தான் தெரியுறாங்க’ன்னு அவன பேசி பேசி சரி பண்ணாங்க.

இப்போ கூட உன் கிட்ட ஏன் இது எல்லாம் சொல்றன நீயும் என்ன மாதிரி எதோ காயப்பட்டு தான் இப்படி பேசுறன்னு எனக்கு புரியுது.

அதுனால தான் சொல்றன் என் பையன் எப்பவும் உன்ன காய படுத்த மாட்டான் நம்பு ஸ்டெல்லா “

“ நம்புறேன் அத்தை”

என்றவளின் அழைப்பில் அமுதா மகிழ்ந்தவறாக,

“அப்போ கல்யாணத்துக்கு உனக்கு சம்மதமா ம்மா?” என்றதற்குச் சரி என்று தலையசைத்து இருந்தாள்.

இவற்றை யோசித்து பார்த்தவள், கீழே சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்து,

 “இதுக்கு தான் நீங்க உங்க அம்மா கிட்ட இருந்து தள்ளி இருக்கிங்களா த்ரூவ்?

எங்க திரும்பி அவுங்களுக்கு அவுங்க பழைய நினைவு வந்துறோமோ ன்னு பயப்படுறிங்கலா”

என்றவள் மெல்ல இறங்கி கீழே சென்றவள், இவர்களின் இடையே இருந்த இடத்தை நிரப்ப அமர்ந்தாள்.

சாதாரணமாக இருவரிடமும் பேசத் தொடங்கினாள். அவள் மனதில், “இந்த உலகத்துல நமக்கு மட்டும் தான் இத்தன கஷ்டம்னு நினைச்சோம், ஆனா நமக்கு மேலயும் வேதனையைச் சுமந்துட்டு மனுஷங்க இருக்கத்தான் செய்றாங்க.”

என்று நினைத்தவளாக இருவரிடமும் இலகுவாகப் பேசிக்கொண்டு இருந்தாள்.

ஒரு காயப்பட்ட உள்ளத்தின் வழி இன்னொரு காயப்பட்ட உள்ளம் அறியும் என்பது போல, இவர்களின் வலியை உணர்ந்து அவர்களின் காயத்தை ஆற்ற இவள் முயல, இவளின் காயத்தை மறக்க வைக்க இவன் உதவ இந்த அலரை அணைத்தது இந்த அனல்.