அனல்– 39

த்ரூவின் கடுமையான பார்வையில் மேலோட்டமாக நடந்ததை சுருக்கமாகச் சொல்லி முடித்தான் மதி.

அவன் சொன்னதைக் கேட்டு அவனைப் ஓங்கி பலார் என்று அறைந்தான் த்ரூவ்.

“வீட்டில்ல சண்டை போட்டுட்டு , யாரும் தெரியாத ஊர்ல நண்பன் ன்னு உன்னை நம்பி, உன் கூட வந்து தங்கின பொண்ணை இப்படிப் பேசித் தான் கஷ்டப்படுத்துவியா மதி?”

என்று ரூத்ரமூர்த்தியாக நின்றவனைப் பார்த்து, கன்னத்தில் கை வைத்தபடி எச்சிலை விழுங்கியவன்,

“அது…. ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு தான், லைட்டா குடிச்சிருந்த டா அந்த நேரமா பாத்து, இவளும் நான் குடிச்சிருக்கறது தெரியாம லவ் ப்ரோப்போஸ் பண்ணிட்டாடா“

“ஏன் குடிச்சிருந்தா வார்த்தையை இஷ்டத்துக்கு விடலாம்னு யாராவது சொல்லியிருக்காங்களாடா?

அதென்ன என் நண்பனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிட்டு என் கிட்ட லவ் ப்ரோப்போஸ் பண்றன்னு கேட்டுருக்க?

நீயும் தானே உன் நண்பனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்ட பெண்ணை, இப்போ வர லவ் பண்ணிட்டு இருக்க, அது எந்த ஊரு கணக்கு டா?  பொண்ணு ண்ணா… மட்டும் தனி கணக்கா?”

“அது இல்லடா, அன்னைக்கு ஏதோ யோசனையில பேசிட்டேன், தப்பு தான். கொஞ்சம் அவ கிட்ட முழுசா பேசி என் கூட சேர்த்து வைடா“

என்று கெஞ்சியவனை முறைத்துப் பார்த்தவன்,

“அன்வீயே, உன்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டாலும் நான் அவளை உன் கூட சேர விடமாட்டேன்டா“ என்று கோபமாகப் பேசியவன் எழுந்து சென்றுவிட்டான்.

பயந்து அவன் சென்ற திசையைப் பார்த்தவன், “மேலோட்டமா சொன்னதுக்கே இப்படி கோபமா போறானே, முழுசா சொன்னா அவ்ளோதான் போலயே“

என்று புலம்பியபடி இவனும், அவன் பின்னாலேயே சென்றான்.

கீழே மண்டபத்தில் ஆதிஷ், மணியம்மாள், ஆதிஷ் அப்பா என்று வாணியைத் தவிர மூவரும், அது அவர்கள் வீட்டு கல்யாணம் போல தான் ஸ்டெல்லா சார்பில் அனைவரையும் வரவேற்று அமர வைத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் வாணி மட்டும்  தனியாக முன்னே உள்ள சேரில் ஒரு ஓரமாக அமர்ந்தபடி, இவர்கள் மூவரையும் கோபமாகப் பார்த்தபடி இருந்தார்.

அவரைப் பொறுத்தவரை இது பக்கத்து வீட்டு விசேஷம், அவ்வளவு தான். எட்டி நின்று வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுப் போவதை விட்டுவிட்டு, இவர்கள் அனைத்திற்கும் இப்படி முன்னே போய் நிற்பதில் சுத்தமாக விருப்பம் இன்றி தான் அமர்ந்து கொண்டிருந்தார் வாணி.

இதற்கே இவர் இப்படி இருந்தாள்; நாளை அந்த வீட்டுப் பெண்ணைத் தான் தன் மகன் திருமணம் செய்யப் போகிறான் என்று தெரிந்தால் என்ன செய்வாரோ!

த்ரூவ் திருமணத்திற்கு மிக நெருக்கமான நபர்களையே அழைத்திருந்தான்; மறுநாள் ரிசப்ஷனுக்கு இவனுடன் தொழில் செய்பவர்கள்  என்று மற்ற அனைவரையும் அழைத்திருந்தான்.

அதனால் கூட்டம் அதிகம் இன்றி நெருக்கமானவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

திருமண மேடையில் வேட்டி சட்டையில் கம்பீரமாக ஐயர் சொன்னதைச் செய்து கொண்டிருந்தவனின் கண்கள் எல்லாம் ஸ்டெல்லாவின் வரவையே எதிர் பார்த்துக் கொண்டிருந்தன.

அவனை வெகு நேரம் அவள் காக்க விடாமல், ஸ்டெல்லாவும் த்ரூவ் எடுத்து கொடுத்த தங்க நிறப் பூக்களால் புடவை முழுக்க வேலைப்பாட்டுடன் இருந்த அந்த சிவப்பு வர்ண புடவையில்,

அதற்குப் பொருத்தமான நகைகளுடன் தேவதை போல அசைந்து முகம் பிரகாசிக்க வந்தவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

எப்போதும் தலைநிமிர்ந்து உணர்ச்சியற்ற முகத்துடன் சிரிக்க தெரியாதது  போல வருபவள், இன்று முகம் முழுக்கப் புன்னகையுடன், அதே நிமிர்ந்த நடையுடன் வருபவளை அனைவரும் வியந்து தான் பார்த்தனர்.

“ஸ்டெல்லா….. மேம்மா இவங்க? இவுங்க இப்படிலாம் சிரிப்பாங்களா?“ என்பது போல தான் அனைவரும் பார்த்தனர்.

அனைவரின் பார்வையையும் பார்த்த பாட்டி

“அச்சோ, என்ன இப்படி எல்லாம் பார்த்து வைக்கிறாங்க? முதல்ல ரெண்டு பேருக்கும் சுத்திப் போடனும்” என்று முடிவு எடுத்தவராக, இருவரின் ஜோடி பொருத்தத்தைப் அகமகிழ்ந்துதான் பார்த்தார்.

ஸ்டெல்லா மேடையில் த்ரூவ் அருகே அமர்ந்ததும், அவளைக் கண்ணெடுக்காமல் பார்த்த த்ரூவின் தோளில் இடித்த ஸ்டெல்லா.

“முன்னாடி பாருங்க” என்று அவள் சொன்ன  பிறகு தான், இத்தனை நேரம் அவளையே   பார்த்திருப்பது உணர்ந்து , வெட்கப்பட்டபடி திரும்பி அமர்ந்தான்.

ஸ்டெல்லாவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்தவன், அவனுக்குள்ளேயே ஒரு முடிவும் எடுத்து கொண்டான்

“இன்னைக்கு அவ முகத்துல நான் பார்க்கிற சந்தோஷம் என்னைக்கும் குறையாம பார்த்துக்கணும்”

என்று உறுதி எடுத்தவனாக, அவள் கழுத்தில் ஐயர் எடுத்து கொடுத்த தாலியைக் கட்டினான்.

தாலியைத் தலைகுனிந்து பெற்றுக்கொண்ட ஸ்டெல்லா, தாலிக்குத் த்ரூவ் பொட்டு வைக்கும் போதுதான் அதில் சிலுவை மற்றும் லட்சுமி என இரு மதங்களையும் இணைந்திருந்ததைக் கவனிக்கவே செய்தால்.

அதைப் பார்த்த அதிர்ச்சியில் கண்களை விரித்தவள், சிறிது நேரம் அதைப் பார்த்தபடியே இருந்தாள்;

காதல் என்றாள் இருவரின் அனைத்தையும் முழுமையாக  ஏற்று வாழ்வதே. அது நிறையோ குறையோ, மதமோ சாதியோ எத்தனை வேறு பாடு இருப்பினும் அதை கடந்து காதலில் திளைத்து வாழ்வது தானே காதல்.

அதேபோல அவளை அவளாக இருக்க விடுவதும்  காதல் தான் என்பதை உணர்ந்தவனாக த்ரூவ் இதை செய்திருந்தான்.

எதையும் தவறி கூட இது இப்படி செய்திருக்கலாமே என்று எதிர்காலத்தில் ஸ்டெல்லா வருந்தி விட கூடாது என்று அனைத்தயும் பார்த்து பார்த்து செய்திருந்தான் த்ரூவ்.

இது வரை த்ரூவிடம் திருமணம் அதன் பின் வாழ்க்கை என்று எதை பற்றியும் ஸ்டெல்லா  பேசிருக்க வில்லை. எப்படி இந்த வாழ்க்கை இருக்கும் என்று லேசாக ஒரு பயம் மனதில் இருந்தது  அவளுக்கு மெய்யே .

 ஆனால் இன்று இந்த நிமிடம் அந்த சிறு பயமும் இவளை விட்டு விலகி போயிருக்க

“நான் சரியான இடத்துல தான் வந்து சேர்ந்திருக்க “ என்று மனதில் நினைத்து கோண்டாள்.

த்ரூவ் இவள் நெற்றியில் குங்குமம் வைத்த பிறகே உணர்வுக்கு வந்தவளாக , காதலும் கண்ணீரும் ஒருங்கே கசிந்து உருகும் கண்களால் அவனை நிமிர்ந்து பார்த்தவள்.

அவன் முகத்தை ஆசையாகப் பார்த்து உதடு விரித்து சிரித்தாள். ஸ்டெல்லாவின் புன்னகை அவன் உதட்டிலும் ஒட்டிக்கொள்ள, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, ஸ்டெல்லா த்ரூவின் ஸ்டெல்லாவாக மாறிய தருணம் அழகாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இவற்றை கையில் இருந்த பூக்களை அவர்கள் மீது முகம் மலர்ந்து தூவிய படி, கண்ணில் ஓரம் ஈரம் துளிர்க்கப் நின்றிருந்தாள் ரூத்.

இவள் பள்ளி படிக்கும் வரையிலும் ஸ்டெல்லா மட்டுமே உலகமாக கொண்டிருந்தவளுக்கு, மற்ற எதுவும் கருத்தில் படவில்லை.

ஸ்டெல்லா வயதில் இருக்கும் பெண்கள் திருமணம் முடிந்து கையில் குழந்தையுடன் இருக்கும் போது, இவள் ரூத்தின் கையைப் பிடித்துக்கொண்டு சுற்றி வந்தது ரூத்திற்கு வித்தியாசமாகத் தோன்றவில்லை.

ஆனால் கல்லூரியில் பிறையின் நட்பிற்குப் பிறகு , அவள் அவளின் அக்கா அண்ணன் திருமணம், குழந்தைக்குக் காது குத்தும் விசேஷம் என்று அவள் லீவ் போட்டுச் சொல்லும் போதெல்லாம்,

மனதின் ஓர் ஓரத்தில் ஒரு பயம் உருவாக தொடங்கியது; ஸ்டெல்லா, அவளுக்கு ஏன் திருமணம் என்னும் ஆகவில்லை?

அவளுக்கு கல்யாணம் முடிந்தால் நமக்கு என்ன ஆகும் என்று பல கேள்விகள் துளிர்விடத் தொடங்கி இருக்க,  அதேசமயம் தன் அக்கா குழந்தை குடும்பம் என்று சந்தோஷமாக இருப்பதை  பார்க்கவும் ஆசை பட்டால்.

அவற்றை ஸ்டெல்லாவிடம் கேட்கத்தான் பயமாக இருக்கும்; என்னதான் பெயர் சொல்லி ஸ்டெல்லாவை இவள் அழைத்தாலும், அவளை அக்காவிற்கும் மேலாகவே இவள் பார்த்து வருகிறாள்.

அப்படி இருக்க எப்படிப் பேசுவது என்று யோசித்து, பின் முடிவு எடுத்தவளாக அவள் பாட்டியிடம் பேசி, மேலும் ஸ்டெல்லாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையைத் தீவிரப்படுத்தினாள்.

இப்படி வருட கணக்கில் காத்திருந்த திருமணம் இன்று நடைபெறுவது அவளுக்கு மட்டுமல்ல, பாட்டிக்கும் அத்தனை சந்தோஷம்.

பாட்டியுடன் நின்று மகிழ்ச்சியாகப் பூவைத் தூவிக்கொண்டிருந்த ரூத்தை ஏக்கமாகப் பார்த்தவன், அவனையே அதிர்ந்து போய் பார்க்கும் வாணியைக் கவனிக்க மறந்தான்.

அப்போது அடுத்த பஞ்சாயத்துக்குச் சம்பவத்தை அவனுக்கு தெரியாமலேயே உருவாக்கித் கொண்டிருந்தான் ஆதிஷ்.

அனைவருடைய ஆசிர்வாதத்துடன் திருமணம் நன்றாக முடிந்தது.

பின் த்ரூவ் ஸ்டெல்லாவின் கையைப் பிடித்துக்கொண்டு உணவு உண்ணும் இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.

அங்கு ஸ்டெல்லா  உள்ளே நுழையவும், அவளுக்கு உணவு மனம் குமட்டி  கொண்டு வர, ஸ்டெல்லா வாயில் கை வைத்தபடி அப்படியே நின்றுவிட்டாள்.

“என்ன ஆச்சு ஸ்டெல்லா? ஃபுட் ஸ்மெல் பிடிக்கலையா?” என்று த்ரூவ் கேட்க, அதற்கு  பாவமாகத் தலையை ஆட்டினாள்.

உடனே த்ரூவ் அவளை அங்கிருந்த கை பிடித்து மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

“நான் வேணா வாமிட்டிங் டேப்லெட் போட்டுட்டு வரட்டா?” என்றவளை முறைத்துப் பார்த்தான் த்ரூவ்.

“ஸ்டெல்லா… டாக்டர் அதை போடாம இருக்குறது தான் நல்லதுன்னு சொன்னாங்க தான,

எமர்ஜென்சினா தான போட சொன்னாங்க. இப்போ அத போடுற அளவு எமர்ஜென்சி எதுவும் இல்ல நீ அமைதியா இரு” என்று அவளை கட்டிலில் அமர வைத்தான்.