அனல் – 37

“ஜோசப், ஸ்டெல்லான்னு ரெண்டு பேரையும் ஒன்றரை வருஷம் ஸ்கூலுக்கு அனுப்பாம, அங்க சென்னையில பாட்டி வீட்டுக்கு போய் படிக்கப் போயிருக்காங்கன்னு, பொய் சொல்லி ஸ்கூல்ல டீசி வாங்கிட்டு, பக்கத்து வீட்டுல இருக்கவங்களுக்கும் அதையே சொல்லி நம்ப வச்சிருக்கான்.

அவங்களும் பெண் பிள்ளை அதான் பார்க்க முடியல போலன்னு நினைச்சு இருக்காங்க.

இவன் அந்த வீட்டுக்குள்ளேயே ஜோசப்ப தனியா இவன் அறையில அடைச்சு வச்சி, இவன் அந்த புள்ளைய அத்தன மாசமா….” என்று சொல்ல முடியாமல் முகத்தை மூடி கதறுயவர்  , முகத்தை மூடிக்கொண்டே அழுகையுடன்

“இந்த ஸ்டெல்லா புள்ளைய வேற ரூம்னு வச்சிருக்கான். நாள் போகப் போக ஜோசப் புள்ள வயிறு பெருசு ஆகவும் இவனுக்கு சந்தேகம் வந்திருக்கு, ஆனாலும் அவ தான் என்னும் பெரிய பொண்ணா ஆகலையேன்னு கண்டுக்காம விட்டுருக்கான்.

அது அப்பறம், புள்ள வயித்துல நகரவும் தான் உறுதி பண்ணி பயந்திருக்கான். அதுக்கு அப்பறம் கூட ஒரு அலட்சியம், புள்ள தான பெத்து போடட்டும், எதாவது சொல்லி சமாளிச்சிடலாம்னு விட்டுருக்கான் அவன்.

நாள் கணக்கு, மாசம்னு எதுவும் தெரியாம ஆஸ்பிட்டலுக்கும் போகாம வீட்டுலயே வச்சிருக்கான்.

சரியா நாங்க அங்க போய் சேர முன்ன தான் ஜோசப் வலியில துடிச்சிருக்கா, அந்த சத்தம் கேட்டு பயந்த ஸ்டெல்லா அந்த கதவை அவ கைய வச்சி தட்டி அடிச்சு உடைக்கப் பாத்துருக்கா புள்ள.

அதுல அவ கை எலும்பு உடைஞ்சு போனது கூட தெரியாம அந்த கதவை தள்ளி உடைச்சு உள்ளே போயிருக்கா.

அங்க ஜோசப் இருந்த நிலைல அவள மெதுவா இழுத்து வெளிய கொண்டு வந்து கதவை திறக்க முயற்சி பண்ணி அது திறக்கலன்னதும் கடைசில அவ்ளோதான்னு ஜோசப்ப மடியில வச்சிட்டு அழுதிருக்கா. அப்போ தான் கதவை தட்டுற சத்தம் கேட்டு,

அத்தன சத்தமா உதவி கேட்டு கத்தியிருக்கா தம்பி….”

என்றவர் இதற்கு மேலே முடியாது என்பது போல கண்கள் மூடி சாய்ந்து விடவும்.

“இவங்க உள்ள இருக்குறது எப்படி அங்க இருக்க யாருக்குமே தெரியாம போச்சு பாட்டி! யாருக்குமே ஒரு சின்ன சத்தம் கூட கேட்கலயா?”,

“அந்த படுபாவி பசங்க ரூம்ல சத்தம் வெளியே கேட்காத மாதிரி எதோ பண்ணி வச்சிருந்தானா. அதை மீறி ரெண்டு பேரும் சத்தம் போட்டா ஸ்டெல்லாவ ஜோசப் முன்ன போட்டு அடிச்சிருக்கான், அப்படி சத்தம் போடுவியா போடுவியான்னு அதுக்கு பயந்தே ஜோசப் அடங்கிப் போய்டுவாலாம், ஸ்டெல்லாவையும் கத்த கூடாதுன்னு சொல்லிடுவாலாம்.

ஜோசப ஒவ்வோரு வாட்டியும் ஸ்டெல்லாவ வச்சு மிரட்டி தான் எல்லாம் பண்ணியிருக்கான். அவளும் ஸ்டெல்லாக்கு அவ அனுபவிக்கிற கொடுமை வேணாம்னு அமைதியா இருந்திருப்பா  போல தம்பி

அதை மீறியும் சில சமயம் ஸ்டெல்லா மேலயும் கை வைக்கப் போயிருக்கான் நாயி, அப்போலாம் ஜோசப் தான் வீட்டுல இருக்க பொருளெல்லாம் உடச்சி கத்தி அவள காப்பாத்தி விட்டுருக்கா…. அவ எங்க சாமி….ப்பா.

அந்த வயசுலேயே தங்கச்சிய காப்பாத்தி “

என்று ஜோசப்பை நினைத்து கைகூப்பி வேண்டியவர்

“போலீஸ் டாக்டர் சொன்னத கேட்டு உடனே அவன கைது பண்ணி விசாரிச்சதுல அவ சொன்னது தான் இது எல்லாம். ஜோசப் ரூத்த பெத்துட்டு இறந்து போய் கிடக்க, அவ கைய விடாம பிடிச்சிட்டு எதையோ வெறிச்சுப் படி ஸ்டெல்லா பேசவே இல்லை தம்பி ,

நாங்க எவ்வளவு முயற்சி பண்ணியும் பேசாம இருந்த புள்ளைய பாத்து பயந்து அங்க இருந்த ஆஸ்பிட்டலயே காட்டுனோம்.

அவங்க அக்கா இறந்த அதிர்ச்சியில இருக்கா, கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிடுவாங்கன்னு சொன்னாங்க.”

ஒரு கையில பிறந்த பச்சப் புள்ள, இன்னொரு கையில ஸ்டெல்லான்னு திக்கு தெரியாம தவிச்சு நின்னோம்.

அப்பறம் ஜோசப் உடம்ப ஊருக்கு எடுத்துட்டு போயிட்டோம், இங்க சென்னையில யாருக்கும் எதுவும் தெரிய வேணாம்னு.

அங்க ஊர்ல ஸ்டெல்லாவ பாத்துட்டு எல்லாம் சந்தேகமா அவகிட்ட விசாரிக்கவும், சொந்தமே வேணாம்னு சென்னைக்கு வந்துட்டோம்.

மூணு மாசம் ஆகியும் ஸ்டெல்லா ஒரு வார்த்தை பேசல, ஏதோயோ  வெறிச்ச படியே இருக்கவும் ஆஸ்பிட்டலுக்கு அவள கூட்டிட்டு போனோம்.

அங்க அவள பாத்த டாக்டர், அவ அக்கா போன அதிர்ச்சியில இருக்கா, அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா தான் வெளிய கூட்டிட்டு வரணும்னு சொல்லிட்டாங்க.

நாங்களும் அவள ஹாஸ்பிட்டல் வீடுன்னு கூட்டிட்டு வந்து, இங்கயே தெரிஞ்ச ஸ்கூல்ல பேசி சேர்த்தும் விட்டோம்.

கொஞ்சம் கொஞ்சமா ஸ்டெல்லா படிக்குறதுல கவனம் கொண்டு வந்தா, நாங்களும் எல்லாம் மாறிடும்னு நம்பத் தொடங்குன நேரம் எதுவும் மாறலன்னு சொல்ற விதமா ஆதிஷ்-அ ஸ்டெல்லா போட்டு அடிச்சா “

என்று நிமிர்ந்து அமர்ந்தவர்,

“ரூத்க்கு மூணு வயசு இருக்கும் ஆதிஷ் கூட விளையாடிட்டு இருக்கும் போது, குழந்தை கன்னத்துல முத்தம் கொடுத்துருக்கா. அத பாத்துட்டு இருந்த ஸ்டெல்லா அவன பிடிச்சி வெளிய தள்ளி போட்டு அடிச்சின்னு பெரிய ரகளை பண்ணிட்டா.

அது வரை ஸ்டெல்லாவ நாங்க இப்படிப் பார்த்ததே இல்ல, எப்பவும் சிரிச்ச முகமா துள்ளி விளையாடிட்டு இருந்த பொண்ணு, ஆதிஷ ரத்தம் வர்ற அளவு அடிச்சி, ‘என் ஜோசப் கிட்ட வராதன்னு’ மிரட்டுனா.

எங்களுக்கு அப்போ சுத்தமா புரியல, ஜோசப்பா! இவ என்ன பேசுறான்னு பயந்து அவகிட்ட பேசினோம், அதுக்கு அவ ரூத்-அ கை காட்டி அவள ஜோசப்னு சொல்லவும் எங்களுக்கு அத்தன பயம்.

என்ன பேசுறா இவன்னு டாக்டர் கிட்ட போய் காட்டுனோம்.”

“என்ன சொல்றீங்க பாட்டி? அப்போ அந்தப் பொண்ணு பேரு ரூத் ஜோசபின் இல்லையா?” என்று த்ரூவ் அதிர்ச்சியாக கேட்க, பாட்டி மறுப்பாகத் தலையசைத்து,

“இல்ல தம்பி, அவளுக்கு வெறும் ரூத்னு தான் கனி பேர் வச்சா, இந்த ஸ்டெல்லா தான் அவ என் ஜோசப் தான்னு ரூத் ஜோசப்பின்னு அவ பேரை மாத்துனா.”

“என்னது… ஜோசப்பின் ரூத் பேரு இல்லையா?” என்று ஆதிஷ் அதிர்ந்து முனக, மணியம்மாள்,

“டாக்டர் கிட்ட காட்டுனதுக்கு, அவங்க ரூத்தையும் அவ அக்காவையும் ஒன்னா பாக்குறாங்க, அதான் அவ அக்காவுக்கு ஆன மாதிரி ஏதாவதும் ஆகிடுமோன்னு பயப்படுறா ன்னு சொன்னாங்க.

நாங்களும் ஸ்டெல்லா கிட்ட எல்லாம் எடுத்து சொல்லி ரூத் கு ஒன்னும் ஆகாதுன்னு சமாதானம் படுத்துனோம்.

அதுக்கு அப்பறம் ஸ்டெல்லாவும் அமைதியா ரூத் கூட விளையாடுறது, அவ கூட ஸ்கூல் போறதுன்னு சந்தோஷமா இருந்தா, அத பாத்துட்டு எல்லாம் சரியாயிடுச்சுன்னு நிம்மதி ஆனப்ப தான், ஸ்டெல்லா என்னும் நான் அப்படியே தான் இருக்கன்னு எங்களுக்கு காட்டுனா தம்பி…

ரூத்தோட எட்டு வயசுல அவ அவளோட அம்மா மாதிரி டேன்ஸ் ஆட கிளாஸ்க்கு போனத பாத்துட்டு, கத்தி…. வீட்டுல இருந்த பொருளெல்லாம் உடைச்சு பெரிய ரகளை பண்ணிட்டா.”

“டேன்ஸ் தான அதுல என்ன இருக்கு பாட்டி..” என்று த்ரூவ் யோசனையாக பாட்டியிடம் கேட்க

“நாங்களும் அதே தான் சொன்னோம் அவ கிட்ட டேன்ஸ் தான ஸ்டெல்லா ஆடட்டுமே ன்னு சொன்னதுக்கு, ஸ்டெல்லா

‘ ஜோசப் அந்த ட்ரெஸ் போட்டு டேன்ஸ் ஆடுன அப்பறம் தான் அவள என்ன விட்டு பிரிச்சு அவன் கிட்ட வச்சிகிட்டான் , அதே மாதிரி இவளுக்கும் ஆகணுமா பாட்டி…’ ன்னு அவ கத்துன கத்தலல, ரூத்குக்கு ஜூரமே வந்திருச்சு.

அதுல இருந்தே ஸ்டெல்லா ஒவ்வொரு வாட்டியும் அவ பண்ணற எல்லாத்திலயும் நான் இன்னும் எதுவும் மறக்கலன்னு எங்களுக்கு சொல்லாம சொல்லிட்டு இருந்தா.

அவளுக்கு பிடிச்ச ஓவிய க்ளாஸ விட்டுட்டு சண்டை கத்துக்கிட்டதுல இருந்து, யாரையும் அவ கூட சேர்த்துக்காம ரூத்தோடவே இருக்குறதுன்னு எல்லாத்துலயும் அவ எதையும் எண்ணும் மறக்கலன்னு சொல்லிட்டே தான் இருந்தா தம்பி.”

என்று மணியம்மாள் பேசியதை, கைகளை மடக்கி உணர்வுகளை அடக்கி கொண்டு கேட்டு முடித்தவன், ஒரு முறை கண்களை இறுக மூடி அவனை நிதானமாக்கியவனுக்கு  ஸ்டெல்லா ஏன் இப்படி இருக்கிறாள் என்று காரணம் புரிந்தது.

என்னும் பழைய  நினைவுகளில் இருந்து வெளி வர முடியாமல் ரூத்தை நினைத்து தினமும் பயப்படுகிறாள் என்பது தெளிவாக தெரிய, ஒரு முடிவுடன் கண்களை திறந்தான்.

இவன் முகத்தையே அடுத்து இவன் சொல்ல போகும் வார்த்தைகாக காத்திருந்த மணியம்மாளை ஏமாத்தாது த்ரூவ்.

“என் கிட்ட சொல்லிடிங்கல பாட்டி, ஸ்டெல்லாவ இனி நான் பாத்துக்குறேன். அவள பழையபடி சந்தோஷமா நான் மாத்தி அவள பத்திரமா பாத்துக்குறேன் பாட்டி” என்றவனின் பேச்சில் மகிழ்ந்து.

“அப்பறம் தம்பி….. இதை யார் கிட்டயும் சொல்லிடாதிங்க. நாங்களே இந்த எந்த விஷயமும் ரூத்குக்கு தெரிய கூடாதுன்னு தான் பார்த்துக்கிட்டோம். அந்த பொண்ணு பாவம், அவளுக்கு விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா தாங்க மாட்டா”.

என்றவர் கைகளில் அழுத்தம் கொடுத்து, “இது யாருக்கும் தெரியாம, நான் பாத்துக்குறேன் பாட்டி, நீங்க பயப்படாதிங்க” என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தான்.

அப்போது வெளியில் நின்று இவற்றை கேட்ட ஆதிஷும், “ இந்த விஷியம் என்னைக்கும் என் பொம்மைக்கு தெரிய வராம நான் பாத்துக்குறன் பாட்டி ப்ராமிஸ் “ என்று உறுதி எடுத்தவனாக

அவன் முகத்தை கைகளை கொண்டு அழுத்தி துடைத்துக் கொண்டவன்.

முகத்தை இயல்பாக வைத்து கொண்டு கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.

 “எங்க பாட்டி சொல்லாம கோல்லாம போன?  உன்ன எங்கலாம் தேட…

உன்ன அங்க தான வண்டி நிறுத்திட்டு  வரேன்னு நிக்க சொன்ன பாட்டி இங்க என்ன பண்றீங்க”

என்று கத்திக்கொண்டு வந்த ஆதிஷை இருவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து பார்க்க, அவர்களின் பார்வையை கண்டு கொள்ளாதது போல ஆதிஷ் த்ரூவிடம் திரும்பி,

“நீங்களாவது கால் பண்ணிருக்கலாம்ல சார், நான் எங்கலாம் தேடுனேன் தெரியுமா?”

என்று இருவரையும் மாற்றி மாற்றி பார்க்கவும், ஒரு நிமிடம் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. பின் முதலில் சுதாரித்த த்ரூவ்,

“அது சாரி ஆதிஷ், பாட்டி கூட பேசிட்டு இருந்ததுல உங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ண மறந்துட்டேன்.”

“அப்போ பாட்டி கிட்ட பேசி முடிச்சிட்டீங்களா சார்?”

என்றவனுக்கு ஆமாம் என்பது போல தலையை அசைத்தவன்,

“மேரேஜ் பத்தி தான் ஆதிஷ், பேச கூப்பிடிருந்தேன். எங்க வழக்கம் படியே பண்ணிக்கிட்டா, ஸ்டெல்லா எதாவது நினைச்சு பாலோன்னு  கேட்க கூப்பிட்டேன்.”

என்று சமாளித்தவன் இந்த பேச்சை மாற்ற, ஆதிஷை மணியம்மாளிடம் கோர்த்து  விட்டான்

“நீங்க பாட்டி கிட்ட நான் சொன்னத பத்தி பேசிட்டீங்களா ஆதிஷ்?” என்றவனது திடீர் பேச்சில், முதலில் எதை பற்றி பேசுகிறான் என்று புரியாமல் முழித்தவன், பின் நினைவு வந்தவனாக.

“சார்….. நான் என்னைப் பத்தி என்னும் பேச ஆரம்பிக்கவே இல்ல சார், இப்போ வேணா சார்! நான் அப்புறமா பொறுமையா பேசிக்கிறேன்.”

என்று பதறுபவனை சந்தேகமாகப் பார்த்த பாட்டி.

“என்னடா? எதைப் பத்தி பேச வேணாம்னு பதறுற?”

என்றவருக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆதிஷ் நினைக்கும் போதே த்ரூவ்,

“ரூத்த ஆதிஷ் லவ் பண்றான் பாட்டி, அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான்” என்று அவன் உடைத்து விடவும் , ஆதிஷ்

“ஆபிஷ்ல சார் முன்னாடியே செருப்படி வில போது” என்று பயந்து ஓடத் தயாராக அவன் இருக்க, மணியம்மாளோ

“ஓ…. இதைப்பத்தியா….” என்று சாதாரணமாகப் பேசியவரை அதிர்ச்சியுடன் பார்த்த ஆதிஷ்.

“என்ன பாட்டி ஷாக் ஆகல?”

“நான் ஏன்டா சாக்கு ஆகணும்? அதான் நீ அவள லவ் பண்றது தான் ஊருக்கே தெரியுமே, அப்பறம் உன் பாட்டி எனக்குத் தெரியாதாடா?”

“என்ன பாட்டி சொல்றீங்க? அப்போ வீட்டுல எல்லாருக்கும் தெரியுமா என் விஷயம்?”

“உன் அம்மா, அப்புறம் ஸ்டெல்லா ரெண்டு பேரத் தவிர தெருக்கே தெரியும்.

ஊருக்கே தெரியுற மாதிரி அவ பின்னடி உட்கார்ந்து போன பின்ன தெரியாம இருக்குமா என்ன?” என்றவரை வியந்து பார்த்தவன்.

“அப்போ உங்களுக்கு ஓகேவா பாட்டி ரூத்த எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல?”

“நான் ஒத்துக்கிட்டு என்னடா, அவ அக்கா ஸ்டெல்லா ஒத்துக்கணும். நீ தான் அவ கிட்டயே போய் சண்டை போட்டு வச்சிருக்கியே…. முதல்ல அவ ஒத்துக்கணும், ரூத்தும் அத தான் சொல்லுவா. அக்கா சம்மதம் இல்லாம அவ உன் பக்கம் கூட வர மாட்டா, பார்த்துக்கோ.”

என்று பேசியவர் தொண்டயை  தேய்த்தபடி,

“ரொம்ப பேசிட்ட போல தம்பி, சோடா கிடைக்குமா?” என்றவரை கோபமாகப் பார்த்த ஆதிஷ்.

“பேரன் வாழ்க்கையே இங்க மூழ்கிகிட்டு இருக்க, உனக்கு சோடா கேக்குதா பாட்டி?”

“அட இவன் ஒருத்தன், அவன் தாத்தா மாதிரியே லூசுத்தனமா பேசிகிட்டு….

நீ ஸ்டெல்லாவப் பாக்க தான செய்யுற, அவ கிட்ட ரூத்த தவிர வேற யாராளையாவது  பேச முடியுமா?”

“அனா பாட்டி…. ரூத்….” என்று சோர்ந்து போய் நின்றவனைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருக்கிறது, ஆனால் ஸ்டெல்லாவை மீறி இவரால் என்ன செய்ய முடியும்?

இவர்கள் பேசியதை கேட்ட த்ரூவ் யோசனை வந்தவனாக, “ஆதிஷ்… கொஞ்சம் பாட்டிக்கு போய் சோடா வாங்கிட்டு வாங்கல, இங்க சோடா இல்லையாம்.”

என்ற த்ரூவை “இப்போ சோடா தான் ரொம்ப முக்கியமா?” என்று கண்களால் அவனிடம் கேள்வி கேட்க, த்ரூவ் அவனை கண்களால் சமாதானம் செய்து அவனை அனுப்பி வைத்தான்.

அவன் சென்றதை உறுதி செய்துவிட்ட பின்,

“நீங்க ஏன் ஸ்டெல்லா கிட்ட அவங்க அக்காவ வச்சி ரூத் கல்யாணத்த பேச கூடாது?” என்ற த்ரூவை புரியாமல் பார்த்தவர்,

“எனக்கு புரியல தம்பி” எனவும் த்ரூவ் அவர் அருகில் அமர்ந்து,

“ரூத் ஆதிஷ் கல்யாணம் பண்ணா நீங்க அவ கூட இருந்தே பார்த்துப்பீங்கன்னு சொல்லுங்க.

எப்படியும் அவளுக்கு கல்யாணம் பண்ணத்தான போற, அதை இவனா இருக்கட்டும், நானும் அவள பக்கத்துல இருந்து பார்த்துப்பேன்ல, நீயும் தைரியமா இருக்கலமேன்னு பேசுங்க.”

“அனா இப்போ ஸ்டெல்லாக்கு உடம்பு சரியில்லையே தம்பி, இப்போ எப்படி பேச? இப்போ பேச போய் திரும்பி மயங்கி விழுந்துட்டானா ”

“இப்போவே பேசாதீங்க பாட்டி, என்னும் ஒரு வாரத்துல ஸ்கேன் பார்த்துட்டு டாக்டர் சரின்னு சொன்ன பிறகு இல்லனா எங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு அவ கிட்ட பேசுங்க”

என்றவன் பேச்சை கேட்டு சம்மதமாக அவர் தலையசைத்து அதைப்பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தார்.

இங்கு அதே சமயம் ஜெயிலில் வினோ மற்றும் சாதிக் எப்படி இங்கிருந்து வெளியேறுவது என்று தீவிரமாகத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.