அனல் – 36

ஆதிஷ் அலுவலகத்தையே சுற்றிச் சுற்றி வந்தவன் மூச்சிரைக்க, “இந்த பாட்டி எங்க… நிக்கச் சொன்ன இடத்துல நிக்காம எங்க போனாங்க?” என்று புலம்பினான்.

“ஒருவேளை நான் வர்றதுக்குள்ள உள்ள போயிட்டாங்க போலயே” என்று எண்ணியவன் அலுவலகம் உள்ளே சென்று ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் விசாரிக்க, அந்தப் பெண்

உள்ளே த்ரூவ் அவரை அழைத்துச் சென்றிருப்பதாகச் சொல்லவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது

“அப்பா, இந்த பாட்டி பத்திரமா தான் இருக்காங்க” என்று உள்ளே த்ரூவ் இருக்கும் அறையை நோக்கிச் சென்றவன், கதவைத் திறக்கச் சென்ற போதுதான் அவன் காதில்

“இப்போ நீங்க என்கிட்ட சொல்றது என்ன தாண்டி எங்கேயும் போகாது, நம்பிச் சொல்லுங்க பாட்டி” என்ற த்ரூவின் குரல் கேட்டது. உடனே கதவைத் திறக்காமல் அப்படியே நின்ற ஆதிஷ்,

“அப்படி என்ன சிதம்பர ரகசியம் பேசுறாங்க?” என்று நினைத்தபடி அனைத்தையும் கேட்க தொடங்கினான்.

பாட்டி சொன்னதைக் கேட்டு முகம் வெளிர நின்றவனுக்கு, ஸ்டெல்லாவை நினைத்துத் பாவமாக தான் இருந்தது. அவளுக்கு மனதார மன்னிப்பு கேட்டவன், மேலும் பாட்டி பேசுவதைக் கேட்கத் தொடங்கினான்.

“ஜோசப்க்கு நாலு வயசு இருக்கும் போது தான் ஸ்டெல்லா பொறந்தா. அதுக்கப்புறம் ஆறு வருஷம் எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்திச்சு, அப்படி தான் நாங்களும் நம்புனோம் தம்பி” என்று த்ரூவின் முகத்தைப் பார்த்து சிறிது தயங்கியவர்,

“திட்டி அடிச்சு கொடுமைப்படுத்துறது தான் கொடுமைன்னு இல்ல தம்பி, மனைவியோட  உடல் உறவு மூலமா  கூட கொடுமைப்படுத்த முடியும்னு அந்த சிலுவையப் பார்த்து தான் தம்பி தெரிஞ்சிகிட்டேன்” என்று வேறு பக்கம் திரும்பிய மணியம்மாள்.

“அந்த மரியா பொண்ண அவன் இங்க அணுப்பாததுக்கு இதுதான் காரணம் போல தம்பி. அவளும் இதை எதையும் எங்ககிட்ட சொல்லாம மனசுலயே வச்சி, கடைசியா ஜோசப் ஓட பத்தாவது வயசுல செத்தே போயிட்டா தம்பி அவ” என்று கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தவர்.

“நாங்க எல்லாம் போய் பார்த்தோம் தம்பி, அவன் அப்படி அழுது என்னா நடிப்பு நடிச்சான்! எங்ககிட்ட உடம்பு சரியில்லாம விஸ ஜுரம் வந்து செத்துட்டான்னு…. அப்படிப் பொய் சொன்னா….. நல்லா இருப்பானா அவன்?” என்று இன்று அது நடந்தது போல அவனைச் சபித்த மணியம்மாள்,

“அப்போ கூட ரெண்டும் போம்பல பிள்ளைய தானியா…, நீங்க எப்படிப் பார்த்துப்பீங்கன்னு கனி கேட்டா,

அதுக்கு ஏதோ பெரிய ஓக்கியன் மாதிரி என் பொண்ணு, அவங்கள எனக்குப் பார்த்துக்கத் தெரியும்னு விடவே மாட்டேன்னு சொல்லிட்டான்.

அப்பவும் மனசு கேக்காம நாங்க தான் ஒரு மாசம் பிள்ளைங்க கூட அங்கேயே தங்கி அவங்கள தேத்தப் பார்த்தோம்” என்றவர் திடீரென்று த்ரூவை நிமிர்ந்து பார்த்து

“நல்லா அம்மா கூட வளந்த பிள்ளைங்க, அம்மா இறந்துட்டாங்கன்னா எப்படி தம்பி இருப்பாங்க? நீங்களே சொல்லுங்க. அதுவும் பெண் பிள்ளைங்க அம்மா இல்லாம எப்படி இருந்திருப்பாங்கன்னு சொல்லுங்களேன்?.”

என்று அவனிடம் கேள்வியைக் கேட்க, அவன் “ரொம்ப அழுவாங்க, அம்மா இல்லாம எல்லாத்துக்கும் கஷ்டப்படுவாங்க” என்று கூறினான்.

“ஹ்ம்… அப்படித் தான தம்பி இருந்திருக்கணும்!. அன ஜோசப் புள்ளையும் ஸ்டெல்லா புள்ளையும் எப்படி இருந்தாங்க தெரியுமா தம்பி?”

என்றவரை, ‘எப்படி?’ என்பது போல அவன் கேள்வியாகப் பார்க்க, அதே கேள்வியோடு வெளியே ஆதிஷும் கவனித்தான்.

“அந்த ரெண்டு பிள்ளைங்களும் அம்மா செத்த அன்னைக்கு அழுதது தான், அடுத்த நாளே நல்லா படுத்துத் தூங்கி, தனியா எழுந்து கிளம்பி, தனியாவே குழிச்சி சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்பி வந்து நின்னாங்க தம்பி,” என்றவரைப் புரியாமல் பார்த்தவன்

“என்ன சொல்லிறிங்க பாட்டி? அது எப்படி அம்மா இல்லாத கஷ்டம் எதுவும் இல்லாம கிளம்புனாங்க?”

“அந்த அளவுக்குத் தான் மரியாவ பசங்க கூட அவன் விட்டுருக்கான் தம்பி. தாய் பாசம்னு ஒன்னு கிடைக்க விடாமலேயே பார்த்துருக்கான் தம்பி அவன்.

நான் பசங்க கிட்ட, ‘என்னடி இது, அம்மா போன வருத்தம் இல்லாம இருக்க?’ ன்னு ஸ்டெல்லா கிட்ட கேட்டதுக்கு அவன் ஒன்னு சொன்னா பாரு தம்பி, இப்போ கூட நெஞ்சிலயே நிக்குது தம்பி!” என்று நெஞ்சில் அடித்தவர்

“ ‘அம்மா போனது கஷ்டம் தான், ஆனா அவங்க தான் இப்போ போயிட்டாங்களே, அதுக்கு இனி என்ன பன்ன ‘ ன்னு பேசியதைக் கேட்டுத் திகச்சி போய் நின்னேன். என் தோழி கனி, “அம்மா இல்லாம கஷ்டம் இல்லையாம்மா? இப்போ உங்கள அம்மா இல்லாம யார் பார்த்துப்பா?” ன்னு கேட்டா

அதுக்கு அவ சாதாரணமாகச் சிரிச்சிட்டே…, ‘அதான் ஜோசப் இருக்காளே, அவன் என்ன பார்த்துப்பா? அம்மா எப்பவும் அப்பாவத் தான பார்த்துப்பாங்க, எனக்கு ஜோசப் போதும்’ ன்னு போன போதே நாங்க சந்தேகம் பட்டுருக்க வேனா “ ன்னு தலையில் அடித்து கொண்டவர்

“அப்போ!… பெத்த அம்மாவையே பொண்ணுங்க கிட்ட விடாம வச்சிருக்கான் அவன். ஏன் பாட்டி, நீங்க அதுக்கு அப்புறம் கூட அவன் கிட்ட இதைப்பத்தி கேக்கலையா?”

“கேட்டேனே… ‘என்ன இது இப்படி பசங்க பேசுறாங்க?’ ன்னு கேட்டதுக்கு, அவளுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போய்டும்

, அதான் பசங்கள்ள அவங்களயே பார்த்துக்க மாதிரி வளர்த்தன் அதுல என்ன தப்பு இருக்குன்னு பேசுனது மட்டும் இல்லாம, ‘அவங்கள அவங்களே பார்த்துப்பாங்க, வேற எதாவதனா பார்த்துக்க நான் இருக்கேன்’னு எங்களையும் அனுப்பி வச்சிட்டான் பாவி!”

என்றவருக்கு அடுத்துச் சொல்லப் போவதை எண்ணி முகம் எல்லாம் வியர்க்க, அதை கவனித்த அவன், அவருக்குக் குடிக்கத் தண்ணீரை எடுத்து கொடுத்து அவரை ஆசுவாசம் செய்தான்.

அதில் சிறிது அமைதியானவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

“மூணு மாசத்துக்கு ஒரு முறைன்னு ரெண்டு பிள்ளையையும் பார்த்துட்டு வந்துருவா கனி. ஒரு வருஷம் அப்படித் தான் போச்சு. எப்பவும் கனி அங்க மும்பைக்குப் புறப்படுறதுக்கு முன்ன அவனுக்கு கால் பண்ணி கேட்டுட்டு தான் போவா.

அப்படி தான் அடுத்த வருஷமும் கால் பண்ணா, ஆனா அடுத்த வருஷம் கால் பண்ணும் போது ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொரு காரணம் சொல்லி கனியை அங்கு வர விடாம பண்ணான் அவன்.

முதல்ல கனியும் பிள்ளைங்க படிப்பு க்காக தான சொல்றாருன்னு விட்டுட்டா, அப்புறம் ஒன்றரை வருஷம் புள்ளைய பாக்காம போனதுக்கப்புறம் இதுக்கு மேல முடியாதுன்னு அவனுக்கு கால் பண்ணி, நாங்க வரத பத்தி சொல்லாமலயே போனோம்.

பாவம் புள்ளைங்க நாங்க வருவோம் வருவோம்னு அந்த நகரத்துல காத்துட்டு இருந்திருக்காங்க பிள்ளைங்க”

என்றுவர் நெஞ்சில் கை வைத்து கண்களை மூடியவர், அன்று ஜோசப் மற்றும் ஸ்டெல்லா இருந்த நிலையை கண் முன் கொண்டு வந்தார்.

கனி அவர் கனவருடன் மணியம்மாளையும் அழைத்துக்கொண்டு பிள்ளைகளை பார்க்க துணி, விளையாட்டு ஜாமான்கள், தின்பண்டங்கள் மற்றும் ஸ்டெல்லாவுக்கு வரைய தேவையான பொருட்கள்.

ஜோசப் பரதம் ஆட தேவையான மேக்கப் பொருட்கள் என்று கைநிறைய பைகளுடன், முகம் முழுக்க பேரப்பிள்ளைகளை பார்க்க போகும் பூரிப்பில் ரயிலில் மும்பையில் வந்து இறங்கினர்.

அங்கிருந்த காரில் இவர்கள் கையில் வைத்திருந்த முகவரி விலாசத்தை காட்டி, அங்கு அழைத்து செல்லும் படி சைகை மொழியில் பேசி, ஒரு வழியாக வண்டியிலும் ஏறிவிட்டனர்.

“அப்பா…. என்ன கூட்டம் இந்த ஊருல? இங்க மட்டும் எப்படி மதியம் பண்ணண்டு மணி ஆகியும் ரயில் கூட்டமா இருக்கோ? எல்லாம் எங்க தான் போவாங்களோ?” என்ற மணியம்மளை சிரித்தபடி பார்த்த கனி.

“எதாது சோலி இருக்கும் டி, நம்மள மாதிரியா டி? எல்லாம் வெளியில நாளு இடம் போய் வேலை பாத்தா தான பொலப்பு ஓடும்?”

“அதுவும் சரி தான், இங்க நாளு தேருவ தாண்டி போறதுக்கே ஐந்நூறு ரூபா கேக்குறான், எல்லாத்துக்கும் சாமளிக்க வேணும் தான்” என்று பேசி சிரித்தபடி இருவரும் சிலுவை வீட்டிற்கு வந்து இறங்கினர்.

அது ஒரு தனி வீடு. அந்த வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே செல்ல, வீடு பெரிய பூட்டு ஒன்று போட்டு பூட்டப்பட்டிருந்தது.

அதை பார்த்த கனி, “அச்சோ மதியமா வந்தது தப்பா போச்சே… புள்ளைங்க ஸ்கூலுக்கு போய்ருக்கும், மாப்பிளை வரவும் சாயங்காலம் ஆகுமே”.

“ப்ச்…. சரி விடு, பொலம்பாத. இங்க பக்கத்துல அந்த பஞ்சாப் பொண்ணு ஒன்னு நல்லா, நம்ம இங்க வரப்பலாம் எதோ புரியாத மொழில சிரிச்சி பேசுமே, அவங்க வீட்டுல வேணா சாயங்காலம் வர இருப்போமா?”

“தெரியாதவங்க வீட்டுல எப்படி…. டி மணி சிரமமா இருக்காது?” என்று கனி மற்றும் அவரின் கனவர் தயங்க.

“அட வாங்க, அந்த புள்ள அப்படிலாம் நினைக்காது” என்று பக்கத்து வீட்டுக்கு அழைத்து சென்ற மணியம்மாள் அந்த வீட்டு கதவை தட்டவும், கதவை திறந்து கொண்டு வந்த பெண்,

அந்த பெண்ணின் மொழியில் எதோ சிரித்த முகமாக பேசி, இவர்கள் பின்னே எட்டி எட்டி பார்த்து எதோ கேட்கவும்,

“என்ன ம்மா யார தேடுற ம்மா… ஒன்னும் புரியல” என்று கனி வினவவும், அந்த பெண் எப்படி இவர்களுக்கு புரிய வைக்க என்று யோசித்து,

“ஜோசப், ஸ்டெல்லா…. வேர்… நாட் கம்…” என்று அவர்கள் பின்னே கை காட்டி கேள்வியாக கேட்டு நிற்கவும்.

அதை கேட்ட மணியம்மாளுக்கு ஏதோ தவறாகப் பட்டது போல்,

“பிள்ளைங்க… அதான் ஜோசப், ஸ்டெல்லா…. ஸ்கூல்… போல… இங்க வீட்டுல இல்லையா?” என்று கையை அசைத்து இவர் கேட்டதற்கு

அவரை வினோதமாகப் பார்த்த அப்பெண், “இயர் நோ…. ஜோசப்… நோ ஸ்டெல்லா நோ…“

என்றதைக் கேட்டு, “என்னம்மா, பிள்ளைங்க இங்க இல்லைன்னு இந்த பொண்ணு சொல்லுது” என்று கனி கனவர் பயந்து போய் கேட்க, கனி

“என்னது, பிள்ளைங்க இங்க இல்லையா… அச்சோ….” என்று பயந்தவராக, என்ன செய்கிறோம் என்று கூட அறியாது வேகமாக மூடியிருந்த வீட்டை நோக்கி ஓடியவர்

“ஜோசப்….. ஸ்டெல்லா….” என்று அந்த கதவை வேகமாகத் தட்டவும், அவர் பின்னாலே வந்த மணியம்மாள், கனி கனவர் மற்றும் அந்தப் பெண் என்று வந்து நிற்க

“என்னடி கனி, பங்களா உள்ள யாரும் இல்ல..” என்று அவர் அந்த வாக்கியத்தை முடிக்கக் கூட இல்லை, அந்த மூடியிருந்த வீட்டின் உள்ளே இருந்து ஸ்டெல்லா

“பாட்டி……” என்று அவள் தொண்டை கிழியும் வண்ணம் அத்தனை சத்தமாக கத்தியிருந்தாள்.

அவளின் சத்தம் கேட்டு வெளியில் நின்றிருந்த அனைவரும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள்.

அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு இது ஏதோ தவறாகப் பட்டதால், உடனே அந்த ஊர் போலீஸை அழைத்துவிட்டாள்.

பேத்தியின் குரல் கேட்ட தாத்தா, அந்த கதவை இருமுறை இடித்துத் திறக்கப் பார்க்க, அது திறந்துவிடவில்லை.

உள்ளே இருந்து ஸ்டெல்லாவின் குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்க, வெளியே கனி, மணியம்மாள் என்று இருவரும் அவளுக்குக் குரல் கொடுத்தபடி பதறித்தான் நின்றார்கள்.

அதற்குள் ஸ்டெல்லாவின் தாத்தா அங்கிருந்த ஒரு பெரிய கல்லைக்கொண்டு அந்த கதவை உடைத்துத் திறக்க முயல, தெருவில் சத்தம் கேட்டு அனைவரும் கூடத் தொடங்கினர்.

ஒரு வழியாக அந்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மூவரும் கண்ட காட்சியில் அலறியே விட்டனர்.

“அய்யோ…. என் பிள்ளை….” என்று மூவரும் உள்ளே செல்ல, அவர்கள் கண்டது

இரத்தத்தின் நடுவில் ஸ்டெல்லா மடியில் பேச்சு மூச்சி இன்றிப் படுத்திருந்த ஜோசப்பைத்தான்.

இவர்கள் உள்ளே வந்தது கூட அறியாது, தன் தமக்கையை கையில் ஏந்தியபடி ஸ்டெல்லா கத்தி கொண்டே இருக்க, கனி, மணியம்மாள் இருவரும் விரைந்து இருவரையும் ஆளுக்கு ஒருவராகத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடித்தான் வந்தார்கள்.

அதற்குள் அந்த ஊர் போலீஸும் அங்கு வந்துவிட, இவர்களின் நிலைமையை பார்த்து வேகமாக அருகில் இருந்த மருத்துவமனைக்குத் தான் முதலில் அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியெல்லாம் ஜோசப்பின் கையைப் பிடித்தபடி “ஜோசப்…ஜோசப்…” என்று முனகியபடி ஸ்டெல்லா வர, அவள் கையில் இருந்தும் இரத்தம் வழியத்தான் செய்தது.

ஜோசப், ஸ்டெல்லா என்று இருவரின் நிலையையும் பார்த்து மணியம்மாள் பேச்சு மூச்சி இன்றி அதிர்ந்து போய் இருந்தார் என்றார்; அந்த குழந்தைகளின் தாத்தா, பாட்டி உடைந்து அழவே செய்தனர்.

இதற்கு மேலே சொல்ல முடியாது, மணியம்மாள் அழுகவும் அவர் கையை பிடித்து சமாதானம் செய்த த்ரூவ்

“ஆஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க பாட்டி?“ என்ற கேள்விக்கு சிறுபிள்ளை போல அழுதபடி மணியம்மாள்

“சின்னப் பிள்ளை… ஜோசப்…. தம்பி, என்ன வயசு இருக்கும்? பதிமூனு வயசு தான், அந்தப் பிள்ளைய போய் தூ….. அவன்லாம் மனுஷன் இல்ல தம்பி… அரக்க ஜென்மம்…” என்று அவனைத் திட்டித் தீர்த்தவர்

“ஜோசப் புள்ள ஒன்பது மாசம் புள்ளைய வயித்துல சுமந்து இருந்து, பிரசவ வலியில துடிச்சிருக்கு, கடைசில வலி தாங்க முடியாம கத்தி, அதுல தான் மயங்கி விழுந்து கடைசில செத்தே போய்டுச்சு….” என்று வாய் விட்டு அலறுபவரைப் பார்க்க, இவனுக்கே கண்கள் எல்லாம் கலங்கத்தான் செய்தது.

உள்ளே இவர்கள் இருவரும் இப்படி இருக்க, வெளியே ஆதிஷின் நிலை; கண்கள் சிவந்து நரம்பு புடைக்க, அந்த கதவின் பிடியை கையில் நெரித்தபடி அந்த கேவலமானவனை கொல்லும் வெறியில் இருந்தான்.