“ஸ்டெல்லா….” என்று வேகமாக நிமிர்ந்தவன், கையில் இருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு, புகையை காற்றில் கைகளை ஆட்டி கலைத்து விட்டபடி.
“அது வொர்க்கிங் அவர்ஸ் ஓவர் அதான்” என்று திருடன், மேலே முழித்து நின்றவனைப் பார்த்து சிரிப்பு வந்திருக்க வேண்டும், அதை மறைக்கும் விதமாகத் தலையைக் குனிந்து அவள் டேபிளில் போட்ட ஃபைலை எடுத்துவள்
என்று சொல்லிச் சென்றவளைத் தடுக்க முடியாதுதான் என்று நின்று பார்த்தான்.
“நான் இப்போ என்ன கேட்டேன், இவன் என்ன சொல்றா? ஓ…. காட்!” என்று நெற்றியைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டான்.
அவளை அவனுக்குப் பிடிக்கும், மிகவும் பிடிக்கும்; இருந்தும் அவளிடம் அதைச் சொல்லத்தான் இவன் தயாராக இல்லை. இவன் கையை இவனே சங்கிலிகளால் கட்டிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்கும் நிலை.
பல நாட்கள் அவளை அவனுடனே வைத்துக்கொள்ள பலவாறு யோசித்துத் பரிதவித்தவன், இன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.
“இப்படியே நீ என் கூட இருந்தா போதும், தள்ளி நின்னு நான் பார்த்துப்பேன் டி” என்றவன், அவன் அறைக்குச் சென்று முதல் வேலையாக அந்த சிகரெட்டைத் தூக்கி குப்பையில் போட்டான்.
“என்ன டென்ஷன் ஆனாலும் இது இனிமே பிடிக்கக் கூடாது” என்றவன், கண்ணாடி வழியே கீழே எட்டிப் பார்த்தான்.
இதுநாள் வரை இவன் புகைப்பதை ஒரு பார்வை பார்த்து மட்டும் கடந்து போறவள் இப்படி சொல்லி சென்றாள் இனி அதை தொடுவானா என்ன.
இங்கு அலுவலகத்தை வீட்டுக்குக் கீழே வந்த ஸ்டெல்லா, ஒரு முறை த்ரூவின் ஆபிஸை நிமிர்ந்து பார்த்தவள்,
மறுப்பாகத் தலையசைத்துவிட்டு ஆபிஸ் காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.
*********
“ வானில்… போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ…….
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ…..
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ…..
திருநாளும் கூடட்டும்……
சுகம் தேடி ஆடட்டும்..
இவைகள் இளமாலை பூக்களே……
புதுமாலை பூக்களே…..”
என்ற பாட்டின் வரியில் கண்களை மூடி ரசித்தபடி இருந்தவள் தலையில் நச் என்று கோட்டிய மணியம்மாள்
“கொசு, ஈ… மாதிரி மொச்சிட்டு இருக்கு, அது கூட தெராயாத அளவு என்ன பாட்டு கேக்குதுடி உனக்கு?”
“பாட்டி….. நீ இப்படி என்ன கொட்டி கொட்டியே என்ன வளர விடாம ஆக்கிட்ட பாட்டி!”
என்றபடி காதில் இருந்த ப்ளூ டூத் ஹெட் செட்டை கழற்றிவிட்டு நின்ற ரூத்தை மேலும் கீழுமாகப் பார்த்தார் மணியம்மாள்.
உச்சித் தலையில் ஏற்றிப் போடப்பட்டிருந்த சைனிஸ் கொண்டை கல்லூரியில் வந்து முகத்தைக் கூடக் கழுவாத வாடிய முகம், முகம் வாட்டத்திற்கு எதிராக அலைபாயும் துருத் துருக் கண்கள் என்று டாப் மற்றும் மிடியோடு கையில் பேனாவுடன் தலையைச் சொறிந்து கொண்டு நின்ற ரூத்தை முறைத்த மணியம்மாள்
“கிறுக்காச்சி கிறுக்காச்சி, கையில மை இருக்குடி, அதொட தலையைச் சொறியாத, முடியெல்லாம் கொட்டப் போகுது” என்று மீண்டும் அவள் தலையில் கோட்டவும்
“இதோ பாரு பாட்டி, என்னோரு அடி தலையில போட்ட இன்னைக்கு அந்த டீவில நாடகம் போட்டு விட மாட்டேன் பாத்துக்கோ!”
“அடியே ரூத்து… நல்ல பிள்ளைல… அப்படிலாம் பாட்டியப் பார்த்து நீ சொல்லலாமா? உள்ள போவோம் வாடி…. நேரம் ஆயிடுச்சு, அந்த கல்யாணம் அண்ணனுக்கு நடக்குதா இல்ல தம்பிக்கான்னு பார்க்கணும்.”
“அப்படியே அந்த நாடகத்துல உடனே காட்டிடாலும் மூணு வாரமா இழுத்துத் தொலையுறான் பாட்டி, பாரு இன்னைக்கும் கட்ட மாட்டானுங்க.”
மணியம்மாள், ரூத் இருவருமாக சோபாவில் அமர்ந்து மும்முரமாகத் டிவியைப் பார்த்தபடி இருக்க
“நான் அப்பவே சொன்ன பாத்திய பாட்டி, பாரு தொடரும் போட்டான் இவனுங்க, இந்த ஜென்மத்துல கல்யாணத்தை நடத்தி முடிக்க மாட்டாங்க” என்று எழுந்து செல்ல
“ஏ…. நில்லுடி…. முருகன் ஸ்டோர் பார்த்துட்டுப் போடி!”
“அ… அதை நீயே பாரு, நான் போன்ல அப்புறமாப் பார்த்துக்கிறேன், இப்போ மூட் இல்ல” என்றபடி கிட்சன் சென்றவள் அங்கிருந்த இறால் தொக்கை பார்த்துவிட்டு புன்னகை முகமாக
“என்ன பாட்டி, இன்னைக்கும் இறாவா”
“அதுவா…டி, என் பேரன் தான் திரும்பவும் வாங்கிட்டு வந்துட்டான். எந்த இரா பேய் பிடிச்சதோ, அதை வாரத்துக்கு ரெண்டு வாட்டி வாங்கி வந்துறான்.”
“பறவால நல்லா பேய்தான் பிடிச்சிருக்கு போல, இப்படியே இருக்க சொல்லு, எனக்கு வசதியா இருக்கு.”
“மும்.. உனக்கென்னா, இறாள்னா அக்காக்கும் தங்கச்சிக்கும் உஷாரு தினமும் நாளும் சாப்பிடுவிங்க, ஆனா எனக்கு அப்படியாடி? இந்த பல்லு கொண்டு கடிக்க முடியலடி.”
“என் கூட வா பாட்டி, பால் ஆஸ்பத்திரி போய் அந்த பல்ல கட்டிட்டு வரலாம்னு சொன்னா கேக்குறியா? பாரு, சாப்பிட கஷ்டப்படுற.”
“அய்யா, அந்த கருமலாம் எனக்கு வேணாம், அதை கட்டுனா என் வாய் நாரி போய்டும்டி.”
“ப்ச்… பாட்டி, உனக்கு இப்படி யார் தப்பு தப்பா சொல்லி தரா?”
“அது…. நம்ம தெரு முனை சாந்தி இருக்காளே, அவ கட்டிட்டு வந்த நாள்ல இருந்து ஒரே நத்தமா, அவ புருஷன் அதுல இருந்து தான் அவ கூட பேசாம போயிட்டானா?”
“என்ன பாட்டி சொல்ற?”
“அட அம்மாடி, சாத்தி புருஷன் இப்போலாம் அவ கூட பேசுறதே இல்லையாம், சாயங்காலம்னா மனுஷன் எங்கயோ போய்டுவாராம், நேரம் போய் தான் வராராம்.”
“அச்சோ, அந்த தாத்தாவா? அவர் நல்ல தாத்தா ஆச்சே!”
“வெளில நல்லா தான் சிரிச்சி பேசுவான், உள்ள எப்படின்னு சாந்திக்கு தான தெரியும்.”
“ம்ம்ம்….ம்ம்ம்… கரெக்ட் தான் பாட்டி,” என்றபடி கோதுமை மாவை ஹோபாவில் வைத்து பிசைந்து கொண்டிருந்த ரூத்தை, மேலும் கீழும் பார்த்த மணியம்மாள்.
“நீ என்னடி இங்க உக்காந்து மாவு பிசையுர, உள்ள போய் மாவு பிசை மாவு கொட்ட போது?”
“கொட்டுனா பறவால, இங்க உக்காந்து பிசைஞ்ச என்ன தப்பு பாட்டி? நீ மேல சொல்லு, அப்புறம் அந்த தாத்தா எங்க தான் போனாரு?”
“ஊர் கதை கேக்குறதுனா போதுமே, வாய புலந்துட்டு வந்து உக்காந்துருவியே, என்ன பழக்கமோ இது,” என்று ரூத்தின் குமட்டில் மணியம்மா குத்த, வலியில் முகத்தை சுருக்கிய ரூத்.
“சின்ன பிள்ளைல ஜாலியா விளையாடிட்டு இருந்த என்ன கூப்பிட்டு வச்சி, ஊர் கதை பேசி பலக்கி விட்டுட்டு, இப்போ என்ன கொரை சொல்ற நீ?”
“நீ தான்டி பாட்டி, கதை சொல்லுன்னு என்ன நச்சரிச்சிட்டு இருப்ப, அதான் எனக்கு தெரிஞ்ச கதைய சொன்னேன்.”
“எப்படி பக்கத்து வீட்டுல இன்னைக்கு இந்த சண்டை நடந்துச்சு, எதிர் வீட்டுல வெளிய போனாங்க, அடுத்த தெருல கடன் வாங்கிட்டு ஓடி போயிட்டாங்கன்னு கதை சொல்லுவியா பாட்டி?
எனக்கு யாரு அந்த சாந்தி, யாரு அந்த கீதா, யாரு அந்த வனிதான்னு ஒருத்தரையும் நேர்ல பார்த்தது இல்ல, ஆனா அவங்க குடும்பத்துல வளருற பூனை பேர் வரை எனக்கு தெரியும். இப்படி அத்தனையும் சொல்லி பலக்கி விட்டுட்டு இப்போ பேசுறத பாரு!”
“சரி சரி, என் தப்புதான், அதை பிறகு பேசுவோம், நாடகம் போட்டுட்டான் அமைதியா இரு,” என்று டீவியில் மணியம்மா ஆழ்ந்து விட, ரூத்தும் மாவு பிசைந்தபடி டீவியை தான் பார்த்து இருந்தாள்.
அடுத்த விளம்பரம் போடும் வரை இருவருமே டீவியில் இருந்த கண்ணை நகர்த்தாமல் இருந்தனர்.
ரூத் சிறுவயதில் இருந்து தன் பாட்டி மடியில் வளர்ந்ததை விட மணியம்மா மடியில் விளையாடியது தான் அதிகம். ஸ்டெல்லா அடுத்து உனக்கு யாரை பிடிக்கும்? என்று கேட்டால், கண்களை மூடி மணியம்மாவைக் காட்டி விடுவாள்.
மணியம்மாவுக்கும் அப்படித்தான் ரூத் மீது பாசம் அதிகம்; எப்போதும் மடியிலேயே இருக்கும் பிள்ளையை பிடிக்காமல் போனால் தான் அதிசயம்.
“சரி சில்லாட்ட, அந்த போன்ல உங்க அக்கா எங்கேன்னு பார்த்து சொல்லுடி.”
“பாட்டி….. என்ன அப்படி கூப்பிடாத!” என்று கத்தவும், மணியம்மா அவள் கத்தியதை கண்டுகொள்ளவில்லை.