சுற்றிலும் வெண் வர்ண உடையை போர்த்திக்கொண்டு உயர்ந்து நிற்கும் மலைமகள், அதன் நடுவில் சிறு சிறு குடில் அமைப்பில் சில வீடுகள், அதன் பின்னே வற்றாமல் ஓடும் பாஸ்பா ஆறு என்று சென்னை போல் புகை, தூசி, வண்டிகளின் சத்தம் என்று எதுவும் இன்றி, நல்ல குளிர்ந்த காற்றுடன் அந்த இடமே அங்கு இருப்பவர்களின் மனதை அமைதி ஆக்கும் விதமாகத்தான் இருந்தது.
அப்படிப்பட்ட இடத்தில் ஒருவன் மட்டும் ரூமுக்குள் அமர்ந்து கொண்டு வஞ்சகமாக யோசித்தபடி ஒருவனை அழிக்க முயன்று கொண்டிருந்தான்.
வாயில் வந்த கேவலமான வார்த்தைகளைச் சொல்லி திட்டியவன், வாயில் சிகரெட்டை வைத்துப் பிடித்தபடி அந்தச் சிறு குடிசையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு,
“என்ன இப்படி ஓடி ஒளிய வச்சிட்டியே த்ரூவ், உன்ன சும்மா விட மாட்டேன் டா . இன்னைக்கு எப்படியாவது இந்த டேட்டாஸ் எல்லாத்தையும் ரிலிஸ் பண்ணி வேற கம்பெனிக்கு வித்துட்டு, உன்ன முதல்ல ஜெயிலுக்கு அனுப்பிட்டு தான்டா, நான் போவேன் ஜெயிலுக்கு!”
என்றபடி வாயில் தீர்ந்து இருந்த சிகரெட்டைத் தூக்கிப் போட்டவன், மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து உடனே பற்றவைத்தான். கீழே அவன் போட்டிருந்த சிகரெட்டின் மிச்சங்கள் குவியலாக இருக்க, அந்த அறையே இவன் விட்ட புகையில் நிறைந்து இருந்தது.
“என் போதை எல்லாத்தையும் முடக்கிட்டியே டா! அய்யோ…… பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கே…. என் போதை… அது வேணுமே…” என்று தலைமுடியைப் பிய்த்துக் கொண்டவன்.
“உன்ன ஜெயிலுக்கு முதல்ல அனுப்பிட்டு, அங்கேயே உன்ன என் கையாலயே கொல்றேன் டா!” என்று கத்திக்கொண்டு இருந்தான் வினோ.
அப்போது அந்த குடிசையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டவன், மெல்லக் கதவு அருகே சென்று காதை கதவில் ஒட்டி வைத்து,
“யாரு…?” என்று ஆங்கிலத்தில் கேட்க,
“நான் தான் சார், சுதிப்” என்றதும் வேகமாக கதவைத் திறந்து அவனை உள்ளே இழுத்தவன், மீண்டும் கதவைப் பூட்டிக்கொண்டு,
“நான் கேட்டது எங்க ?கிடைச்சதா….” என்று அவனிடம் வெறி பிடித்தவன் போலக் கேட்டவனைப் பார்க்க பயமாக இருந்தாளும் சுதிப்.
“இதோ சார், கொஞ்சம் தான் கிடைச்சது” என்று அந்தப் பொட்டலத்தைக் எடுத்து கொடுக்க, அதைத் கையில் வாங்கிய வினோ வேகமாக அதை உட்கொண்டு கண்களை மூடி அனுபவித்தான்.
வெகு நேரமாக அப்படியே அசையாமல் ஒரே இடத்தில் நின்றவனைப் பார்த்துப் பயந்த சுதிப், “சார்…. சார்….” என்று அழைத்துச் சோர்ந்து போய் நிற்க, சிறிது நேரம் கழித்து வினோவே,
“இவ்வளவு தான் இருக்கா சுதிப்…” என்றவனுக்கு, சுதிப் என்ற அந்த இருபது வயது வாலிபன் தலையாட்டவும்,
“ப்ச்…. என்னடா நீ, இது கூட உனக்கு வாங்கத் தெரியல? உன்ன போய் எனக்கு வேலைக்குச் சேர்த்து விட்டுருக்கான் பாரு அவனச் சொல்லணும்” என்று சலித்து கொண்ட வினோ அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.
இதை கேட்ட சுதிப், “நல்ல வேலையா?, நிறைய காசு கிடைக்கும்னு உன்ன மாதிரி ஒரு பைத்தியக்கார போதை ஆசாமி கிட்ட சேர்த்து விட்டான் பாரு என் ஓனரு, அவனச் சொல்லணும்” என்று மனதில் திட்டியபடி அமைதியாகக் கைகட்டி நின்று கொண்டிருந்தான்.
“சரி அதை விடு, இந்த பென்ட்ரைவை வாங்க, ஒருத்தன கூட்டிட்டு வந்தியே அவன் என்ன சொன்னான்? எல்லாம் ஓகேவா?”
“அவன் சரின்னு சொல்லிடான் சார், அனா அவன் இங்க வரமாட்டானா? நாம தான் டெல்லிக்கு போய் இதை கொடுக்கணுமா? அவன் பார்த்து கன்பார்ம் பண்ணிட்டு தான், காசு நீங்க சொன்ன அக்கவுண்ட்டுக்கு அனுப்புவானா சார்?”
என்று இவன் சொன்னதைக் கேட்டு தலையைப் பிடித்துக்கொண்டவன், சிறிது நேரம் யோசனைக்கு பிறகு “உனக்கு எத்தனை மொழி தெரியும்?” என்று அவனைப் பார்க்க, அவன்
“எனக்கு இங்க பேசுற ரக்ஷம், இந்தி, இங்கிலீஷ், உருதுன்னு நாலு மொழி தெரியும் சார்” என்றவனை புருவத்தை உயர்த்திப் பார்த்தவன்,
“எவ்ளோ படிச்சிருக்க நீ?” என்றதற்குத் தலையைக் குனிந்து கொண்ட சுதிப், “இரண்டு வரை படிச்சிருக்கேன் சார், என் பேரை எழுதத் தெரியும் அவ்வளவுதான் சார்” என்றான். அவனது பேச்சில் இவன் அதற்குச் சரியா இருப்பான் என்று எண்ணியவன்.
இவனிடம் இருந்த இரு பென்டிரைவ்களில் ஒன்றை அவனிடம் கொடுத்து, “நீயே போய் அவன் கிட்ட காட்டிட்டு டீல ஓகே பண்ணிட்டு வா” என்றதைக் கேட்டு அதிர்ந்தவன்,
“சார் நான் இது வரை இந்த ஊரை விட்டு போனதே இல்ல சார்!”
“இது வரை தானே போனது இல்ல, இப்போ போ!” என்று விட்டு அவனைப் பார்க்க, அதற்கும் அவன் தயங்கியபடி,
“இது வேறயா நம்ம கிட்டயே காசு கம்மியா தான் இருக்கு” என்று முனகியபடி பாக்கெட்டில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து நீட்டியவன்,
“நான் சொன்னத மட்டும் சரியா பண்ணிடினா நான் நிறைய காசு தரேன்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.
வினோ மிக பத்திரமாக இந்தியாவின் கடைகோடியில் இமாச்சல பிரதேசத்தில் டவர் இல்லாத சிட்குள் என்ற கிராமத்தில் தான் ஒழிந்து கொண்டு இருக்கிறான். இது தெரியாத த்ருவோ அவனை ஆந்திராவில் தேடிக்கொண்டு இருக்கிறான்.
அலுவலகம் சென்று இரண்டு மாதங்கள் ஆகிறது. போலீஸுடன் சேர்ந்து இவனும் அந்த பென்டிரைவிற்காக ஊர் ஊராக அழைந்து வருகிறான்.
இது போக பல வேலைகள் இவனுக்கு அலுவலகத்தில் இருக்க, அதையும் சென்று பார்த்துவிட்டு வருகிறான்.
இவனிடம் இருந்த ஆட்களை விட்டு அனைத்து இடமும் தேடிக்கொண்டு இருக்கிறான்; மற்றொரு பக்கம் இவனுக்கு கிடைக்க இருக்கும் மிக பெரிய கவர்மென்ட் ப்ராஜெக்ட் வேறு.
இவற்றை மாற்றி மாற்றிப் பார்த்தவனுக்கு நேரம் இன்றிப் போக, தலையைப் பிடித்துக் கொண்டு காரில் அமர்ந்து விட்டான். சென்னைக்கு இன்று தான் வந்து இறங்கினான். இரவு மணி பத்து இருக்கும், இன்றாவது ஸ்டெல்லாவைப் பார்க்கலாம் என்று தனியே காரை எடுத்து வந்தவனுக்குப் பெரிய ஏமாற்றம்; ஸ்டெல்லா வேலை முடித்து வீட்டுக்குச் சென்றிருந்தாள்.
இவன் அனுப்பிய மெசேஜைப் பார்க்காமல் கிளம்பிச் சென்றிருந்தாள். கடைசியாக சிங்கப்பூரில் அவன் அறையில் அவளை பார்த்தது தான்.
“என்னடா வாழ்க்கை இது….” என்று வாய் விட்டுப் புலம்பியவன் சீட்டில் சாய்ந்தபடி வெளியே பார்த்தான்.
அந்தச் சாலையே வெறுமையாகத்தான் இருந்தது. அதைப்பார்த்தவனுக்கு அவன் வாழ்க்கையைப் பார்ப்பது போலத் தோன்ற, கண்களை மூடியவன்.
“அம்மு…” என்று முனகியபடி அவன் போனை வெளியில் எடுத்தான். அவன் போனில் படங்கள் பக்கத்திற்குச் சென்று ஒரு வீடியோவைத் திறந்து ஓடவிட்டான்.
அதில் ஸ்டெல்லாவின் கண்ணில் கோபம் மின்ன, கோபமாக நடந்து செல்வது தெரிந்தது. அதைப்பார்த்து லேசாக உதட்டை விரித்து சிரித்தவன்,
“எனக்குக் கஷ்டமா இருக்க மாதிரி உனக்குக் கஷ்டமா இல்லையா ஸ்டெல்லா?” என்று அந்தப் போனில் இருந்தப் படத்தைப் பார்த்துப் பேசி, சிரித்தும் கொண்டான்.
இப்படி ஒருத்தி மீது பைத்தியமாகி அவள் படத்துடன் பேசிச் சிரிக்கும் நிலைக்கு வருவான் என்று இவன் நினைத்தது கூட இல்லை. ஆனால் அவன் இப்போது நினைத்து பார்த்திராதது கூட நடக்கிறதே.
என்று அவள் யோசனையில் மூழ்கிப் போனவன், திரும்பி காரை எடுத்து கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
இங்கு ஸ்டெல்லா இரவு நேரத்தில் ஒரு பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள். ஏனோ இன்று காரில் செல்ல விருப்பம் இல்லாமல் போனது.
கூட்டமான இடத்தில் மக்களுடன் மக்களாக இருக்க தோன்றியது. தனியாக இருந்தாள் அவன் நினைப்பில் பைத்தியம் பிடிப்பது போல இருக்க பஸ்ஸில் ஏறிவிட்டால்.
இப்படி அவனை காணாது இவளும், அவளை காணாது அவனும்; தவித்து இருப்பது எதற்காக? காதல் இருந்தும் இவள் ஏன் அவனை விட்டு விலகிச் செல்கிறாள்?
உண்மையில் அவள் அப்பா அம்மாவைப் பிரிந்து சென்றது மட்டும் தான் காரணமா இவளின் தனிமைக்கு?
அவளாக வாய் திறந்தால் தான் பதில் தெரியும்.
இப்படியே இருவருமாக சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், த்ரூவிற்கு டெல்லியில் இவனது பென்ட்ரைவை யாரோ விற்கப் டீல் பேசி இருப்பது தெரிந்து, விமானத்தில் டெல்லிக் கிளம்பினான்.
அங்கு இவனுக்குத் தகவல் சொல்லியிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தவன் கண்டது, மதி ஒரு சிறு பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருப்பதைத்தான்.
அதைப் பார்த்து அதிர்ந்தவன், “டேய்… மதி…. அவனை விடுடா…. அவனை ஏன்டா இப்படி அடிக்கிற?” என்று இருவரையும் விலக்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
“என்ன விடுடா பிரணவ், அவனை இன்னைக்கு சும்மா விடப் போறது இல்ல” என்று மீண்டும் பாயப் போனவனைத் தடுத்துப் பிடித்தவன்,
“மதி…. கொஞ்சம் எதுக்கு அடிக்கிறன்னு சொல்லிட்டு அவது அடிடா….” என்று த்ரூவ் கத்தியது; வேலை செய்ய அமைதியான மதி, அங்கு பயத்தில் தரையில் சுருண்டு கிடந்தவனைப் பார்த்து,
“இதோ இவன் இருக்கானே, இவன் அந்த வினோவோட ஆளு தான். அவன் எங்க இப்போ இருக்கான்னு இவனுக்குத்தான் தெரியும்.”
“இவனுக்குத்தான் தெரியும்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற நீ?”
“ம்ம்ம்… உனக்கு ஒருத்தன் இங்க வினோ இருக்கான்னு சொன்னா பாத்தியா , அவன் தான் எனக்கும் சொன்னான்” என்றதும் அவனைப் பார்த்து முறைத்த த்ரூவ்,
“என்ன வாட்ச் பண்ணிட்டு இருந்தியா மதி?”
“ஆமா, அப்புறம் எப்படி அந்த வினோவ கண்டு பிடிச்சி, அவன என் கையால அடிக்க? என்ன தைரியம் இருந்தா என்ன கெடுக்க ஒரு பொண்ணை அனுப்பிருப்பான்?” என்று பேசியவனை சந்தேகமாகத் த்ரூவ் பார்த்து நிற்கவும்.
“ம்க்கும்… இந்த விஷயத்துல நான் அப்படியே தான் இருக்கேன், என் வாழ்க்கையில எப்பவும் ஒரு பொண்ணு தான்” என்று எங்கோ பார்த்துப் பேசியவன்
“இப்போ இது முக்கியம் இல்ல, அந்த பையன என்னும் நாளு போடு போட்டா போதும், உண்மையச் சொல்லிடப் போறான்” என்று கையை முறுக்கி கொண்டு சென்றவனைப் பிடித்து நிறுத்திய த்ரூவ்.
“டேய் நில்லுடா! அவனே பாக்க நரம்பு மாதிரி தான் இருக்கான், நீ அடிக்கிற அடில ஏதாவது ஆகிருச்சினா என்னடா பண்ணுவ?”
என்று அதட்டி, அவனைத் தள்ளிவிட்டு முன்னே சென்ற த்ரூவ், சுதிப் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன்.