அனல் – 24

சிந்து அந்த கடற்கரை மாளிகையைப் பயத்துடன் பார்த்தவள், எச்சிலை கூட்டி விழுங்கியபடி தைரியத்தை வர வழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

உள்ளே ஒரு சிறிய வெளிச்சம் மட்டும் செல்லும்  வழியில்  இருக்க, மற்ற இடங்கள் எல்லாம் கும் இருட்டாக இருந்தன. அதில் கால்கள் இடத்தை விட்டு அசைய மறுத்தது போல நின்று விடவும்.

“ஹே…. சிந்து… அங்கேயே ஏன் நின்னுட்டு இருக்க, உள்ள வா. இந்த ரூம்ல தான் இருக்கான் மதி” என்று ஒரு அறைக்குள் நுழைந்தான் வினோ.

அவன் பின்னாலேயே சென்றவளுக்கு, அந்த அறையைப் பார்த்ததும் தான் சற்று மூச்சே வந்தது. அந்த அறையில் அனைத்து விளக்குகளும் போடப் பட்டிருந்ததால் அந்த அறை ஓரளவு நன்றாகவே இருந்தது; அதைச் சுற்றிப் பார்த்தபடி உள்ளே வந்தவள்

“சார்… இந்தாங்க பென் டிரைவ், இதுல அந்த கம்பெனி டேட்டா முழுக்க இருக்கு” என்று அதை அவனிடம் கொடுத்துவிட்டாள்.

அதற்கு அவன் இவள் அக்காவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்த, மறு நிமிடம் அங்கிருந்து புறப்பட்டு இருந்தாள் சிந்து.

“என்ன இடம் இது! இப்படிப்பட்ட இடத்துல போய் சார் இருக்காரு” என்று புலம்பியபடி அவள் சென்றுவிட்டாள்.

சிந்து சென்றவுடன் மதி, “இப்போ எதுக்குடா என்ன இங்க கூட்டிட்டு வந்து உக்கார வச்சிருக்க வினோ?” என்று எரிச்சலாக  கேட்க

“டேய் மதி…. கூல்… டா… காரணம் இல்லாம நான் பண்ணுவேனா? இப்போ த்ரூவுக்கு மட்டும் நீ தான் பண்ணு னன்னு தெரிஞ்சதுனா, கண்டிப்பா  உன் அப்பார்ட்மென்ட் தேடி தான் முதல்ல வருவான். அதான் அவன் கண்ணுல படக்கூடாதுன்னு இந்த ஏற்பாடு”

என்றவனை எரிச்சலாகப் பார்த்தவன், “அதுக்கு உனக்கு வேற இடமே கிடைக்கலையாடா ,நீங்க பார்ட்டி பண்ற இடத்துக்குக் போய் கூட்டிட்டு வந்திருக்க”

மதிக்கு இவர்கள் பண்ணும் களவு முழுதாகத் தெரியாது, ஆனால் அடிக்கடி பார்ட்டி என்ற பெயரில் பெண்களுடன் இங்கே இவர்கள் கூத்தடிப்பது மட்டும் தெரியும்.

பணம் அதிகம் இருக்கும் இடத்தில் இது சகஜமான ஒன்று என்றாலும், இவனுக்கு மட்டும் இது எதுவும் பிடிக்காது; அதுனாலயே அந்த ரூமில் அமரக்கூட யோசித்து நின்று கொண்டிருந்தான்.

“இப்போ எதுக்கு நின்னுட்டு இருக்க, வா வந்து ஸோபால உக்காரு” என்று அவன் கையைப் பிடித்து அமர வைத்த வினோ.

“அடுத்து என்ன பண்ணப் போற? மதி, அந்த டேட்டாவ வேற கம்பெனி கிட்ட வித்துடலாமா டா, அப்போ நமக்கும் ப்ராஃபிட் கிடச்ச மாதிரியும் இருக்கும் , த்ரூவ் ஜெயிலுக்கு போன மாதிரியும் இருக்கும் ” என்று ஆர்வமாகப் பேசியவனைப் கண்டு கொள்ளாமல், ஒருவித சங்கடத்துடன் நெளிந்த மதி.

“இது கெஸ்ட் ரூம் தானடா, நீங்க இதை யூஸ் பண்ண மாட்டீங்க தான?” என்றவனைப் பார்க்க கோபம் கொபமாக வந்தாலும், அதை வெளியில் காட்டாமல்

“டேய், இது யூஸ் பண்ணாத ரூம் தான்டா, நெளியாம ப்ரியா உக்காரு” என்ற பிறகுதான் மதியும் ரிலாக்ஸாக அமர்ந்தான்.

“சொல்லுடா, டீலிங் பேசிட வா” என்றவனுக்குத் தலையசைத்து மறுத்தான்.

“நான் த்ரூவுக்கு நான் பட்ட கஷ்டத்தைக் காட்டணும் தான் இப்படி பண்ணேணே தவிர , அவனை நிரந்தரமா ஜெயிலுக்கு அனுப்ப யோசிக்கல டா”

என்றவனை முறைத்துப் பார்த்தவன், “அப்போ… அவன இப்பவும் உன் நண்பனா தான் பாக்குறல?” என்றவனுக்குத் தலையை அசைத்து மறுத்தாவன்.

“இல்லடா, என்னை எப்போ பொய் கேஸ் போட்டு போலீஸ்ல சிக்க வைக்கப் பார்த்தானோ, அன்னைக்கே எல்லாம் முடிஞ்சது டா”

“அப்பறம் ஏன்டா இந்த முடிவு?”

“அது அவன் நடத்துற டிரஸ்ட் காக, அதை நம்பி பல பொண்ணுங்க இருக்காங்க டா, இவன் இல்லனா அவங்களாம் எங்க போவாங்க டா?” என்றவனை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தவன்.

“அப்போ இப்போ ஆன்லைன்ல டேட்டாவ ரிலிஸ் பண்ணது எதுக்கு”

“எப்படியும் அவன் அத ரிமுவ் பண்ணிடுவான்னு தெரியும். என்ன ஒரு நாள் முழுக்க அரஸ்ட் பண்ணி ஜெயில்ல வச்சான்ல  அதான் ஒரு ஒன்டே அவது டென்ஷனா  சுத்தனும்னு பண்ண “

என்று சொன்னவனை தலையை அசைத்து பார்த்த வினோ எழுந்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக, அங்கிருந்த அலமாரியில் மது பாட்டில் ஒன்றை எடுத்து ஆட்டி காட்டி,

“நம்ம வெற்றியை கொண்டாடலாமா?” என்று இவன் சிரிக்கவும், மதியும் சிரித்தபடி தலையசைக்க, அப்போது உள்நுழைந்த சாதிக்.

“டேய், என்ன விட்டுட்டு நீங்க மட்டும் தனியா என்ஜாய் பண்றிங்கலாடா” என்று வந்து அமர்ந்தவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மதி.

“டேய், நீ ஹனிமூன் தான போயிருந்த…”

“ஹனிமூன் செம போர் டா, அங்க போய்யும் அவ வர்க், மீட்டிங்னு சீரியஸா இருக்கா, அதான் நான் இங்க வந்துட்டேன்.”

என்றவன் கண்ணாடி கிளாஸுடன் வந்து அமரவும், மதி “என்னடா இப்படி அசால்டா சொல்ற? ”

“நானே ரிலாக்ஸா தான இருக்கேன், நீ ஏன் ஷாக் ஆகுற?”

“அதான்ன,  ஒரு பொண்ணு கூட மட்டும் கல்யாணம் பண்ணி இருந்தா தான அது ஹனி மூன், உனக்கு இது எத்தனாவது மூனோ “ என்று நினைத்து கோண்டான்.

சாதிக் பாட்டிலை திறந்து மூவருக்கும் மதுவை ஊற்ற, சியர்ஸ் சொல்லி சந்தோஷமாக குடித்தனர்.

எப்போதும் பாட்டில் பாட்டீலாக குடித்தாலும், பொருமையாக ஏறும் போதை இன்று இரண்டு கிளாஸ்க்கே கண்கள் சொருக, போதை தலைக்கு ஏறியது போல இருக்க, தலையை பிடித்துக் கொண்ட மதி.

“இது…. என்ன… சர்க்கு டா…” என்று வாய் இவனுக்கு உளறவும், சிரித்தபடி எழுந்த வினோ.

“என்னடா மதி….. தலை சுறுசுறுன்னு இருக்கு போல?” என்றவனைப் புரியாமல் மதி பார்த்து,

“வினோ…. “ என்று அவன் கையை பிடிக்க, அதைத் தட்டிவிட்ட வினோ, அவனிடம் இருந்த பென்ட்ரைவை பிடுங்கி,

“நானும் நண்பன் ஆச்சேன்னு விட்டா, நீ அந்தத் த்ருவ் பின்னாடியே சுத்துற. அன அவன ஒன்னும் பண்ண மாட்டிக்கிற, அதான் நானே நீ ஆரம்பிச்சு வச்சத முடிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

என்று எழுந்து நின்றவனை பிடித்து நிருத்த இவனும் எழ முயன்று அதில் தோற்று மீண்டும் அமர்ந்து விடவும்.

“பயப்படாத டா, விஷம்லாம் தரல, கொஞ்சம் எங்கோலோட ப்ராடக்ட் தான் தந்தேன்….. என்ன ப்ராடக்ட்டுன்னு யோசிக்கிறியா டா?” என்று சாதிக்கைப் பார்த்து கண் காட்டவும், அவன் எழுந்து கீழே சென்றான்.

“இத நீ எடுத்தா உன் உடம்பு உன் பேச்சயே கேக்காம இன்பத்தைத் அள்ளி தரும் மதி, என்ன இன்பம்னு பார்க்கிறியா? என்னும் கொஞ்சம் நேரத்துல உனக்கே புரியும்.”

என்றவன் சிரித்தபடி கீழே சென்று விட்டான்.

வினோ சென்ற பிறகு, இவன் உடல் எங்கோ பறப்பது போலத் தோன்ற, அவனைக்கட்டுப்படுத்த முடியாது சிரிப்பு வந்தது. அவனை நினைத்து சிரித்தானா இல்லை நண்பனாக நினைத்தவன் செய்த காரியத்தை நினைத்து சிரித்தான என்று அவனுக்கே புரியவில்லை.

சிரித்து முடித்தவன் மெல்ல எழுந்து அந்த ரூமை விட்டு செல்ல முயன்றான், எழுந்து நின்றவனின் கால் பின்னிக் மீண்டும் கீழே விழுந்து விட்டான்.

 விழுந்தும் முயற்சியைக் கைவிடாது எழுந்தவன், அங்கிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து அந்தப் போதையைத் துரத்த முயன்றான்.

“என்ன கருமத்தடா கொடுத்த வினோ..” என்று நினைத்தவன் அங்கேயே தான் உருண்டு கொண்டு இருந்தானே தவிர நகர முடியவில்லை.

வினோ சொன்னது போல அவனுக்குள் எதேதோ மாற்றம் தொன்ற  இன்பத்தில் தான் மிதந்தான்.

அறை மணிநேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்டது. யார் என்று திறக்க முடியாத கண்களைத் திறந்து பார்த்தான்.

ஒரு பெண் அரைக் குறை ஆடையில் சிரித்தபடி வந்தாள். உள்ளே நுழைந்தவள் இவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு,

 “அவனுங்க சொன்னது சரிதான் …., நல்லா அம்சமா தான் இருக்க” என்று பேசியபடி அவன் முகத்தைத் தொட வர,

மதி முகத்தை பின்னால் இழுத்து, அவள் கை இவன் மீது படாமல் தள்ளிச் சென்றான்; அதில் வாய்விட்டுச் சிரித்தவள்.

“ஓ…. சார் க்கு, நான் தொடக் கூடாத….. அப்போ சரி…” என்றவள்,  போட்டிருந்த  குறை உடையையும் கழற்றி அரை நிர்வாணமாகச் சென்று சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவள்.

“அவங்க கோடுத்த மாத்திரைக்கு ஒரு பொண்ண இப்படி எதிரில்ல வச்சிட்டு நீயே நினைச்சாலும் தள்ளி நிக்க முடியாது டா, அஞ்சு நிமிஷத்துல நீயா எப்படி வருவ பாரு”

என்று நக்கலாக சிரித்தவளைக் காண முடியாது முகத்தைத் திருப்பி எழ முயன்றான். ம்ஹூம்…. அவனால் எழ முடியாமல் தவழ்ந்த படி அவள்  சொன்னது போல அவன் உடல் தானாக அவளை நோக்கி நகர்ந்தது.

இல்லை இது தவறு என்று இவன் என்ன தான் தடுத்தாலும் உடல் இவன் பேச்சை கேட்காது போக கண்களை மூடியவன் “இல்லை… வேணாம் ப்ளீஸ்….” என்று குலறலாகப் பேசி என்று என்ன செய்தும் முடியவில்லை.

அதில் இவன்  கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, தடுமாறி இவளை நோக்கி வந்தவனைப் பார்த்து சிரித்தபடி,

“என்ன மேன், ஏதோ பொண்ணு மாதிரி அழுற? என்ன மாதிரி பொண்ணு கூட இருக்க நீ சந்தோஷமா தான் இருக்கணும் ”

என்றவளுக்கு என்ன தெரியும், பெண்களுக்கு மட்டும் இல்ல சில ஆண்களும் அவர்கள் கர்ப்பை உயிர் கொடுத்து காப்பாற்றுவார்கள் என்று.

அவள் அருகில் நடந்து சென்றவன் காதில் “மதி…. என்டி பங்காரு….” என்றவளின் குரலில் கண்களைத் திறந்தவன், வெறி பிடித்தவன் போல அவன் உதட்டை அவனே கடித்து ரத்தம் வர வைத்தவன் அவனை சிறிது அவன் கட்டுபாட்டில் கொண்டு வந்தான்.

அருகில் வருசையாக இருந்த கண்ணாடி குவளைகளைக் அவன் கையோடு சேர்ந்து தரையில் அடித்தவன், அதை கொண்டு இரு கைகளிலும் கிழித்துக்கொள்ள, அதை பார்த்த அந்தப் பெண் எங்கே அவளை குத்தி விடுவானோ என்று பயந்து அலறிக்கொண்டு வெளியே ஓடவும்.