ஸ்டெல்லாவை பின்னால் இருந்து அணைத்தபடி நின்ற த்ரூவ், அவள் காதில் மீசை முடி உறச அழுத்தி அவன் கொடுத்த முத்தத்தில் அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது, அதை பார்த்து உதடு விரிய சிரித்தவன்
“அம்மு…. ஸ்டெல்லா….. என் பொண்டாட்டி…. பிடிச்சிருக்கா…..டி…” என்று இவன் உதடு அவள் காது மடலில் உறச பேசியவன் மூச்சுக் காற்று பட்டு உடல் முழுக்க சிவந்து நின்றவள்
அவனுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து என்று அசைய தோன்றாது, கிறங்கிப் போய் நின்றாள் ஸ்டெல்லா.
“மை லவ்…. அழகா… இருக்கடி…. நீ சிரிச்சா இன்னும் அழகா இருப்ப….” என்று அவளை மேலும் அவனோடு இருக்கி பிடித்தவன்,
“பூ மாதிரி இருக்க அம்மு…” என்று அவளை வாசம் பிடித்தவன் அவள் காதை நறுக்கென்று கடித்து விட, அதில் வலி தாங்காது “ஆ….” என்று கத்தியபடி அவனைத் தள்ளிவிட்டு அவள் காதைத் தேய்த்தவள்,
“என்ன த்ரூவ் பண்றீங்க, எனக்கு வலிக்குது…” என்றவளின் முகம் வலியில் சுருங்க
“அச்சோ….. சாரிடா அம்மு….. வலி கொடுத்துட்டேனா… சாரிடா…” என்று கைகளை விரித்து த்ரூவ் அவளை அணைக்க வரவும் , உஷாரான ஸ்டெல்லா, அவன் கைக்குள் சிக்காமல் நகர்ந்து
“எதுவா இருந்தாலும் அங்க இருந்தே பேசு த்ரூவ், இங்க வராத” என்று பின்னால் நகர்ந்து நின்றவள், வையின் இருந்த மேஜையில் மோதி அந்த வைன் பாட்டிலை கீழே தட்டிவிட்டாள்
கீழே சிந்திய வைனைப் பார்த்தவளுக்கு விசியம் பிடி பட,
“இது குடிக்கிறதுக்கு முன்னாடி வரை த்ரூவ் நல்லா தான இருந்தான், அப்போ இதுல தான் தப்பு இருக்கு. கீழ மாத்தி ஆல்கஹால் இருக்குறத கொடுத்துட்டாங்க போலயே, அதை குடிச்சிட்டு தான் இப்படி ஒலறிட்டு இருக்கானா இவன்..” என்று தலையில் கை வைத்து நின்றுவிட்டாள் ஸ்டெல்லா
இங்கு த்ரூவோ முகம் முழுதும் சிவந்து போய் தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தவன், உடல் சுடுவது போல இருக்கவும் அவன் டி-சர்ட்டை அவிழ்த்துத் தூக்கிப் போட்டு, அங்கிருந்த தண்ணீரை முகத்தில் அடித்துத் தெளிவாக முயன்றான்.
போதையில் இருந்தவனுக்கு அவன் உடல் அவன் பேச்சை கேட்காமல் அது செய்ய துடிக்கும் செயலையும் தடுக்க முடியாது; தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு நின்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள். த்ரூவோ ஏதேதோ புலம்பிக் கொண்டே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
என்று பிதற்றியவனை நிமிர்ந்து பார்த்தவள், “இப்படியே நம்ம இங்க இருந்தா பிரச்சனை பெருசா ஆயிடும், சோ இங்க இருந்து கிளம்பிடு ஸ்டெல்லா. போய் முதல்ல இந்த ரூம் கீ கார்டைத் தேடு”
என்று அவளுக்கு அவளே பேசியவள் கீ கார்டை அனைத்து இடமும் தேடினாள். ஸ்டெல்லா எதையோ தேடுவதை பார்த்த த்ரூவ்
“அம்மு…. என்னடி தேடுற…. உன் த்ரூவ் நான் இங்க இருக்கேன், என்ன அங்க தேடாத…” என்றபடி அவள் பின்னாலேயே தள்ளாடிக்கொண்டே வந்தவன் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் தள்ளிவிட்டு ஹோட்டலையே ஒரு போர்க்களமாகச் மாற்றி கொண்டிருந்தான்.
கடைசியாக கட்டில் கீழே விழுந்து கிடந்த கார்டை எடுத்தவள், சுற்றிய தலையைப் பிடித்துக் கொண்டு கதவை நோக்கிச் சென்றவளின் கையைப் பிடித்திருந்தான் த்ரூவ்.
“அம்மு…… எங்க போற….” என்று அவளை இழுக்க, அவன் இழுத்த இழுப்பில் அவன் மீது மோதி நின்றவளை இறுக அணைத்துக்கொண்டான் த்ரூவ்.
த்ரூவிடம் இருந்து வெளிவர போரடிய ஸ்டெல்லாவை மேலும் அவனுடன் இறுக அணைத்து
“ஸ்டெல்லா….. இங்க என்னைப் பாருடி “ என்று அவள் தாடையைப் பிடித்து அவனைப் பார்க்க வைத்தவன்,
“ஐ லவ் யூ ஸ்டெல்லா….” என்றபடி அவள் நெற்றியில் உதடுகளைக் குவித்து முத்தம் ஒன்று வைத்தான்
அதில் அதிர்ந்து கண்கள் கலங்கி அவனைப் பார்த்தவள் “த்ரூவ்…..” என்று கத்தவே செய்தாள்.
இந்த வார்த்தையை இவன் சொன்னால் என்னவெல்லாம் சொல்லி அவனை விட்டு விலகலாம் என்று ஏத்தனை எண்ணி வைத்திருக்க, அவன் இப்படி இந்த நிலையில் சொல்வான் என்று அவள் நினைக்கவே இல்லை.
அவள் நினைத்து வைத்த எதையும் சொல்லாமல் உணர்ச்சி வசத்தில் அவன் பேரை அழைத்திருந்தாள் ஸ்டெல்லா.
ஸ்டெல்லா கத்தியதை எதையும் கண்டு கோள்ளாதவன் போல
“சொல்லுடா அம்மு…” என்று அவள் கண்களில் முத்தம் பதிக்கவும், அவள் கண்ணில் இருந்த கண்ணீர் கன்னத்தில் பட்டு உருண்டு ஓடவும், அதை பெருவிரல் கொண்டு துடைத்தவன்
“உன் உதடு என்னோடு பேசுறதை விட உன் கண்ணு தான் டி… என்னோட ரொம்பப் பேசும் அம்மு… இப்போ பேசுற மாதிரி ” என்றபடி மறு கண்ணிற்கும் முத்தம் வைத்தவன்.
“நீ கோபமாக இருக்கும் போது இந்த மூக்கு சிவக்கும் பாரு, அழகு டி…” என்று கொஞ்சியவன் அதற்கும் முத்தம் வைத்துவிட்டு, அடுத்து அவள் உதட்டைப் பார்த்தவன்.
அதை விரலால் வருடி, “எப்பவும் என் கிட்ட பொய் மட்டும் சொல்ற, இதை என்ன செய்யலாம்?” என்றவன், உதட்டைப் பார்த்துவிட்டு அவள் கண்களைப் பார்க்க,
ஸ்டெல்லா உடல் எங்கும் மின்சாரம் பாய்ந்து, அடி வயிற்றில் மின் மினி பறப்பது போல இருக்க, அவளுக்குள் எழும் உணர்ச்சிகள் அனைத்தயும் கண்களில் படித்தவனாக த்ரூவ் சிரிக்கவும்,
அவனிடம் அனைத்தயும் வெளிபடுத்தும் கண்களை இறுக மூடிக்கொண்டு இவன் முத்தத்தை வாங்கத் தயாராக நிற்பது போல நின்றவளை ரசனையாகப் பார்த்தவன்
“உனக்கு என்ன பிடிக்கும் தான ஸ்டெல்லா, அப்புறம் ஏன் என்ன விட்டுத் தள்ளிப் போற?”
என்றவனின் கேள்வியில், மூளையில் இரும்பைக் கொண்டு அடித்தது போல தன் இருக்கும் நிலையை உணர்ந்தவள் , அவளின் நிலமையை கண் முன் கோண்டு வந்து , த்ரூவை அவள் முழு சக்தி கொண்டு தள்ளிவிட்டவள் வேகமாகத் கதவை நோக்கி சென்றுவிட்டாள்.
மறு நாள் காலை அறையின் கதவைத் தட்டும் சத்தத்தில் தான் எழுந்து அமர்ந்தான் த்ரூவ்; தலையை யாரோ ஆணி வைத்து அடிப்பது போல இருக்க, கண்களைக் கஷ்டப்பட்டுத் திறந்தான்.
கண்களைத் திறந்து ரூமின் நிலையைப் பார்த்தவனுக்கு அத்தனை அதிர்ச்சி; ரூம் முழுக்கப் பொருட்கள் உடைந்து போய் அங்குலமாக கிடக்க. அறையைப் பார்த்து அதிர்ந்தவன்.
“என்ன ஆச்சு! ரூம் ஏன் இப்படி இருக்கு?” என்று இரவு நடந்ததை நினைவுபடுத்தப் பார்க்க, அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்டு வேகமாக எழுந்து
அருகில் இருந்த உடையை அணிந்து கொண்டு வேகமாக கதவைத் திறந்தான்.
ஆதிஷ் தான் நின்று கொண்டிருந்தான். அவனின் பதட்டமான முகத்தைப் பார்த்தவன்,
“வாட் ஆப்பன் ஆதிஷ்…” என்று கேட்கவும், ஆதிஷ் அவனிடம் அவன் போனை கொடுத்து
“அது…. தருண் தான் லைன்ல இருக்கான் சார், நீங்களே என்னென்னனு கேளுங்க” என்றதும், போனை வாங்கி காதில் வைத்தவன், தருண் சொன்ன செய்தியைக் கேட்டு கோபமடைந்தவனாக, வேகமாக அறைக்குள் சென்று வேறு உடை அணிந்து வந்தவன் ஆதிஷ் இடம்
“நான் இப்போவே சென்னைக்கு கிளம்புறேன் ஆதிஷ், நீங்க வொர்க் எல்லாம் முடிச்சிட்டு ஸ்டெல்லா கூட ஈவினிங் பிளைட்ல வந்துருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான்.
த்ரூவ் சென்றதும் ஆதிஷ் தலையில் கை வைத்தபடி,
“போச்சு, தேவையில்லாம அவர் போனை வாங்கி வச்சிடோம் போல” என்று புலம்பியபடி அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
இங்கு சென்னையில் விமான நிலையத்தில் பதட்டமாக நின்று கொண்டிருந்தான் தருண்.
“போச்சு போச்சு, டூ டேஸ் தான் என்ன நம்பி விட்டுட்டு போனாங்க, அதுக்குள்ள கம்பெனிக்கு இந்த நிலைமை என்னடா தருண்?” என்று பதட்டத்தில் இருந்தவனுக்கு, சிங்கப்பூர் விமானம் தரையிறங்கி விட்டதாக அறிவிப்பு வரவும்,
“அச்சோ சார் வந்துட்டாரு, போச்சு உன் வேலை போயி, எல்லாம் போயி நடுரோட்ல தான் நிக்கப் போற” என்று புலம்பியபடி த்ரூவை அழைத்து சென்றான்.
த்ரூவ் பிளைட்டில் இருந்து வரும் போதே அவன் முகத்தில் இருந்த கடுமையைக் கண்டு மிகவும் பயந்துவிட்டான் தருண். அந்தப் பயத்துடனேயே அவனை அழைத்துக்கொண்டு காரில் ஏறியவன் தலையைக் குனிந்தபடி,
“சாரி சார்…. சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார், எப்படி டேட்டா லீக் ஆச்சின்னு உண்மையா தெரியாது சார்” என்று பயத்தோடு பேசியவன், அடுத்து த்ரூவ் இவனை என்ன செய்யப் போகிறான் என்று யோசித்தே நடுங்கிக் கொண்டிருந்தான்.
நேற்று வரை அலுவலகத்தில் அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. கம்பெனிக்கு த்ரூவ் திரும்பி வரும் வரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சீதாவுடன் சேர்ந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது திடீரென்று இரவு இவனுக்குக் கிடைத்த தகவலில் பயந்து தான் போனான். இவர்களுடன் டீலில் இருந்த ஒரு பெரிய கம்பெனியின், டேட்டா வளைய தளத்தில் கசிந்திருந்தது. அதை அவர்களின் கம்பெனி ரகசியம் என்று கூடச் சொல்லலாம்.
அந்த நிறுவனம் அடுத்து செய்யப் போகும் ப்ராஜெக்ட், வெப்சைட் என்று அனைத்தின் டிசைனும் ஆன்லைனில் வெளியாகியிருந்தது.
இது இவர்கள் பக்கம் இருந்த டேட்டாவைக் கொண்டே வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து அதிர்ந்த தருண், வேகமாகத் த்ரூவிற்கு இரவு அழைக்க, அது ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.
உடனே ஞாபகம் வந்தவனாக ஸ்டெல்லாவிற்கு அழைக்க, அவளும் போனை எடுக்கவில்லை; அதில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் முழித்தவன் பின்,
முதலில் அந்தத் டேட்டாவைக் நெட்டில் இருந்து எடுக்க வேண்டும் என்று டெக்னிக்கல் டீமைத் திரட்டி அதை அகற்றப் போராடியவன், இரவு முழுக்கத் தூங்கவில்லை
எப்படியோ போராடி விடியல் குள் அதை அகற்றியவன், மீண்டும் இருவரையும் அழைத்து பார்த்துவிட்டு, பின் நினைவு வந்தவனாக ஆதிஷ்க்கு அழைத்திருந்தான்.
இந்த டேட்டாவைக் வெளியிட்டதால் த்ரூவ் மீது கேஸ் போடக் கூட வாய்ப்பு இருக்கிறது. அதை நினைத்தே அத்தனை பயந்தான் அவன்.
இதில் அந்த கம்பெனி வேறு தொடர்ந்து இவனுக்கு அழைத்து, ‘த்ரூவிடம் பேச வேண்டும், கம்பலைண்ட் போட கோர்ட் போக போறோம்’ என்று கத்திப் கொண்டு இருந்தனர்.
இவைகளை எல்லாம் நினைத்து பயந்தவனாக த்ரூவை நிமிர்ந்து பார்க்க, அவனும் இவனைத்தான் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
த்ரூவின் பார்வையில் அவன் கையைப்பிடித்து, “ரியலி சாரி சார், எப்படி எங்க லீக் ஆச்சு ன்னு சுத்தமா ஐடியா இல்ல சார், நான் கேர்ஃபுல்லா தான் சார் இருந்தேன்” என்றவனின் தோளில் தட்டிய த்ரூவ்.
“இட் ஓகே தருண், இதை இதக்கு மேல நான் பாத்துக்கிறேன்.”
“அன சார், கோர்ட் வர்ற இஸ்யூ போய்டுச்சுனா, நான் இன்னும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துக்கணும் சார்.”
“நீ இவ்வளவு தூரம் பார்த்துக் கிட்டதே போதும் தருண். நைட் விஷயம் தெரிஞ்ச உடனே ஆக்ஷன் எடுத்த பாரு, தட்ஸ் குட் திங் தருண். இதுக்கு அப்புறம் நான் பாத்துக்கிறேன்”
என்றவனை நன்றியுடன் பார்த்தவனை பார்த்து, கோபம் போய் சிரித்த முகமாக,
“டெக் டீம்க்கு மட்டும் தான் சார் இருக்கு” என்றதும் ஏதோ யோசித்த த்ரூவ், “உனக்கும் அந்த ரூம்க்கு ஆக்ஸஸ் இருக்கு தான தருண்.”
“சார் என்ன சந்தேகப்படுறீங்களா?” என்று நெஞ்சில் கைவைத்தவனை சலிப்பாகப் பார்த்த த்ரூவ்.
“உன்ன சந்தேகப்பட்டிருந்தா உன்ன இப்படி நேர்ல உக்கார வச்சிட்டு கேள்வி கேட்டுருக்க மாட்டேன் டா.” என்றவனை புன்னகை முகமாக பார்த்தவன்
“ ஆமா சார் எனக்கும் ஆக்ஸஸ் இருக்கு” என்றதும் யோசைனையான த்ரூவ் அவனுக்கு வந்த சந்தேகத்தை உறுதி படுத்த
“மெயின் ஆபீஸ்க்கு போ தருண்” என்றவன் அதன் பின் போனை எடுத்து யாருக்கோ அழைத்து பேசத் தொடங்கிவிட்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் தருண் த்ரூவை அலுவலகம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.
காரை விட்டு இறங்கிய த்ரூவ் வேகமாக அவன் அறைக்குச் சென்று, “தருண், சீதாவ வரச் சொல்லுங்க”
என்றவன் அவன் சேரில் அமர்ந்தான். தருணும் சீதாவைத் தேடி அவளை காணாது
“ என்ன அவுங்க என்னும் ஆபிஸ்க்கு வரலையா” என்று அவள் போனிற்கு அழைத்துப் பார்த்தபோது அது சுவிட்ச் ஆஃப் என்றுதான் வந்தது.
“சார் அவங்க என்னும் இங்க வரல, கால் பண்ணாலும் போன் எடுக்கல” என்றவனை மௌனமாகப் பார்த்தவன், கையில் இருந்த போனைப் பார்த்துவிட்டு,
“இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுவா” என்று சொல்லிவிட்டு சேரில் சாய்ந்தவனுக்கு அத்தனை கோபம்; அவை அனைத்தையும் கட்டுப்படுத்தியபடி அமர்ந்திருந்தான் த்ரூவ்.
அவன் சொன்னபடியே அடுத்த பத்து நிமிடத்தில் அவன் முன் பேண்ட் மற்றும் சட்டை அணிந்து மிகவும் நாகரிகமாக வந்து நின்ற சீதாவை சலனம் இன்றிப் பார்த்த த்ரூவ்.
“வாங்க சிந்து, இதுதான் ஆபீஸ்க்கு வர டைமா?” என்று பல்லை கடித்துக்கொண்டு பேசியவனை அதிர்ச்சியாகப் பார்த்த தருண்.
“என்னது சிந்துவா? இந்த பொண்ணு பேரு சீதா தானா? ஆமா, இந்த பொண்ணு என்ன இப்படி மாடர்னா வந்து நிக்குது? எப்பவும் புடவையில தான வரும்? அப்போ எல்லாமே நடிப்பா?” என்று வாயைப் பிளக்க,
சிந்துவோ இவர்களை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, “என்ன வேணுமோ பண்ணிக்கோ” என்பது போலத்தான் நின்று கொண்டிருந்தாள்.