அனல் – 15

கலர் கலராக மது பாட்டில்கள் டேபிளில் அடுக்கப்பட்டிருக்க, அதை இறுகிய முகத்துடன் பார்த்து அமர்ந்திருந்தான் மதி. அவன் இருபுறமும் வினோ மற்றும் சாதிக் அமர்ந்திருக்க

“அவனை சும்மா விடக்கூடாதுடா மதி, இப்படி கேவலமா இறங்கிப் போனவனைச் சும்மா விடாதடா!”

“ஆமா மதி, சாதிக் சொல்றது சரிதான். இத்தனை நாள் பிரண்டு ன்னு பார்த்து அவனை விட்டதுக்குத்தான் உன்னையே தூக்கி ஜெயில்ல போட்டான் பாரு!. இதுக்கு மேலேயும் அவனை நண்பனாப் பார்க்கப் போறியாடா?”

என்று மாற்றி மாற்றி இருவரும் அவனை ட்யூன் செய்து கொண்டிருக்க, மதி இறுகிய முகத்துடன் கண்கள் சிவந்து போய் அமர்ந்திருந்தான்.

ஒரு நாள் முழுவதும் ஸ்டேஷனில் இருந்துவிட்டு பெயிலில் வெளியே வந்திருக்கிறான், என்னும் கேஸ் முடியவில்லை, இவனை எப்போது அழைத்தாலும் இவன் போக வேண்டும்.

இவன் ஹோட்டலில் போதைப்பொருள் வைத்திருந்தான் என்ற செய்தியிலேயே திகைத்து போய்விட்டான். குடிப்பான் தான், ஆனால் போதைப் பொருள் அதை ஒரு பொதும் தொட மாட்டான்.

இவனே தொடாது தள்ளி வைக்கும் ஒரு பொருள் இவன் ஹோட்டலில் எப்படி வந்தது என்று யோசிக்கும் முன் அரெஸ்ட் செய்து விட்டனர்.

அவர்களிடம் அதை பற்றி விளக்கம் சொல்லும் முன் பெயிலும் கிடைத்துவிட்டது. சரி, எப்படி வந்தது என்று விசாரிக்கலாம் என்று நினைத்தாள் இவன் பதவி, இவன் தங்கைக்குச் சென்றுவிட்டது.

இப்படி வரிசையாக அடிக்கு மேல் அடி என்று வாங்கியவன் வினோ சொன்ன செய்தியில் இறுகிப் போய் அமர்ந்துவிட்டான்.

“த்ரூவ் ஆளுங்க தான் ஹோட்டல்ல ட்ரக்ஸ் வச்சி எப்.டி.ஏ-வுக்கு கால் பண்ணிருக்காங்க.”

என்று அவன் கூறியதை முதலில் மதி நம்ப மறுத்து,

“அவனை இழுக்காத வினோ, அவன் இப்படியெல்லாம் செய்ய மாட்டான்”

என்றவனுக்கு, அவன் தான் எப்.டி.ஏ-விற்கு இன்பர்மேஷன் கொடுத்ததாகத் தெரிய வரவும் இப்படி இறுகிப் போய் அமர்ந்துவிட்டான்.

மதியின் முகத்தைப் பார்த்து வினோ மற்றும் சாதிக் கண்களாலேயே பேசிக்கொண்டு, அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள்.

“இதோ பாரு மதி, இப்போ நீ உன் வீட்ட விட்டு, உன் வேலைய விட்டு யாரும் இல்லாம இருக்கக் காரணமானவனைச் சும்மா விடப் போறியா?”

“ஆமாடா, அவனைப் பாவம் பார்த்து நீ இத்தனை நாள் விட்டது போதும்டா. பாம்புக்குப் பாவம் பார்க்கிறத நிறுத்துடா மதி” என்ற சாதிக்கை, மதி அமைதியாக ஒரு பார்வை பார்க்க, வினோ

“உன்னை இப்படி நிக்க வச்சவனை நீயும் நிக்க வைக்க வேண்டாமாடா? உன்னை மாதிரி அவனையும் அவமானப்படுத்தி நிறுத்த வேணாம்”

என்றதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன், அவன் முன் இருந்த அந்த வண்ணக் கோப்பையை எடுத்து வாயில் ஒரே மடக்கில் சரித்துவிட்டான்.

அதைப் பார்த்து வண்மமாக  சிரித்த வினோ, அவன் தோள் மீது கை போட்டு

“ப்ளேன் போட்டுருவோமாடா…” என்று, அவனும் ஒரு கோப்பையை எடுக்க, மதியும் அவனுக்குச் சம்மதம் சொல்லும் விதமாக இன்னொரு கோப்பையை எடுத்து அவனோடு மோதி அதை குடிக்க தொடங்கினான்.

குடி என்பது வீட்டிற்கு மட்டும் அல்ல, நட்பிற்கும் கேடு தான் என்பதை இவன் எப்போது அறிவான்.

ஸ்டெல்லா காரில் வந்து அலுவலகத்தில் இறங்கியவள், எப்போதும் போல இறுக்கமான முகத்துடன் தன் இடத்தை நோக்கிச் சென்றாள்.

இனி த்ரூவுடன் வேலையைத் தவிர வேறு எதுவும் பேசக்கூடாது; முடிந்த அளவு அவன் இவளை இங்கே பார்க்க வந்தால், அவன் வருவதற்கு முன்னால் நாம் போய் விட வேண்டும்.

“ஹூம்…. இதுக்கு அப்பறம் அவன் வருவானா?தெரியல்லை, வர வாய்ப்பும் குறைவுதான் “

என்று அவள் எண்ணங்களில் சுழன்றபடி அலுவலகக் கதவைத் திறந்தாள்; அங்கே சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தான் த்ரூவ்.

அங்கு அவனை எதிர் பார்க்காத ஸ்டெல்லா, ஒரு நிமிடம் அதிர்ந்து, தன்னை மீறி ‘ஹா…’ என்று பார்த்து நின்றுவிட்டாள்.

அவள் முகத்தில் காட்டிய அதிர்ச்சியை, கண் இமைக்கும் நேரத்தில் இது உண்மையா என்று த்ரூவ் பார்க்க, அதற்குள் அவள் பார்வையை மாற்றிய ஸ்டெல்லா,

“குட் மார்னிங் சார்! சொல்லுங்க சார், ஏதாவது எமர்ஜென்சியா? மார்னிங்கே வந்திருக்கிங்க”

என்று கதவு அருகிலேயே நின்று இவள் பேச, எழுந்து அவள் அருகில் வந்த த்ரூவ்,

அவன் உள்ளங்கையைக் கொண்டு அவள் நெற்றியில் கை வைத்துச் சூடு பார்த்து

“இப்போ ஓகேவா உனக்கு? உடம்பு என்ன இப்பவும் சூடா இருக்க மாதிரி இருக்கு. டேப்லெட் ஏதாவது போட்டியா ஸ்டெல்லா?”

என்றவனின் கைகளைப் பார்த்தவள், பின் அவன் கண்களைப் பார்த்தாள்; அதில் இவளுக்காக அவன் காட்டிய தவிப்பை உணர்ந்து அனைத்தையும் சுகமாக உள்வாங்கியவள், அவளையும் மீறி அவனிடம் அவளை வெளிப்படுத்தியிருந்தாள்.

“ஏன் அன்னைக்கு நைட் இங்க ஆபிஸ் வரல?” என்றவளின் கேள்வியைக் கேட்டு, கண்கள் பளிச்சிட அவள் முகத்தைப் பார்த்தவன்,

“என்ன தேடினியா ஸ்டெல்லா?” என்று புன்னகை முகத்துடன் கேட்டு நின்றவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவளின் கருவிழிகள் பதில் சொல்லாது

அவனது கண், மூக்கு, உதடு என்று பார்த்தவள், கடைசியாக அந்த கன்ன குழியில்  பார்வையை நிலைக்கவிட்டு; புருவத்தைச் சுருக்கி ஏதோ யோசித்து, பின் அவளே தலையசைத்து அதை மறுத்துவிட்டு,

மீண்டும் அவன் கண்களைக் கண்டாள்; அதில் கொட்டி கிடந்த குறும்பைக் கண்டு திடுக்கிட்டு நினைவுக்கு வந்தவள் அதிர்ந்து தான் போனாள்.

எப்போது த்ரூவின் கைகள் இவள் கன்னதிற்கு  இடம் மாறியது என்று தெரியாமல் திகைத்தவள், பதறி பின்னே வேகமாகச் சென்று, பட் என்று தலையை கதவில் மோதிக்கொண்டாள்.

“அ…” என்று கத்தியவள் தலையைத் தேய்த்துக் கொள்ள, அவள் கையைத் தட்டிவிட்டு அவள் தலையைத் தேய்த்த த்ரூவ்,

“நான் என்ன பண்ணியிருவேன்னு இவ்வளவு பதட்டம் ஸ்டெல்லா! உன்னைக் கடிச்சா சாப்பிடப் போறேன்”

என்று கோபமாக கத்தியவன், அவளைச் சேரில் அமர வைத்து அவள் பின் தலையைப் பார்த்து அங்கு வீக்கம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியவன்.

“ரொம்ப வலிக்குதா?” என்று அவள் முகத்தைப் பார்க்க, அதில் உஷாரான ஸ்டெல்லா அவன் நெஞ்சில் கை வைத்து அவனைத் தள்ளி நிறுத்தி,

“ஸ்டூபிட் ஸ்டெல்லா…… என்னடி பண்ற? இப்படியா அவனை அ…. ன்னு பார்த்துட்டு நிப்ப?” என்று மனதுக்குள் அவளைத் திட்டித் தீர்த்தவள், வெளியில் மிக நிதானமாக.

“சிங்கப்பூர் கம்பெனி ப்ராஜெக்ட் மெயில் பத்தி பேசணும்னு இருந்தேன், நீங்க எப்பவும் ஈவினிங் வருவீங்களே அன்னைக்கு வரல ன்னதும் கேட்டேன்.”

என்று ஒரு வழியாக உண்மை பாதி பொய் பாதி என்று சமாளித்து வைத்தாள்,

“அதான்ன பாத்தேன்! நீ யாவது என்ன மிஸ் பண்றன்னு உன் வாயைத் திறந்து சொல்றது ஆவது?” என்று முணுமுணுத்தபடி நொந்து கொண்டவன்.

இடுப்பில் கை வைத்து நின்று அவளை நன்றாக முறைத்து பார்த்து, காற்றை இழுத்து வாய் வழியாகப் ‘ப்பூ…’ என்று ஊதியவன்.

“சரி வா, அந்த ப்ராஜெக்ட்ல என்ன பிரச்சனை?” என்று சேரில் சென்று அமர்ந்தான்.

“இந்த ப்ராஜெக்ட் இந்த கம்பெனிக்கு கிடைச்சது, சோ மெயில்ல நேர்ல டிசைனை எக்ஸ்பிளைன் பண்ணும் போது நானும் இருக்கணும்னு மென்ஷன் பண்ணிருக்காங்க.”

“ஓ… ஏன் நேர்ல தான் அவங்களுக்கு டிசைன் காட்டணுமா ஸ்டெல்லா?”

“எஸ் சார், நேர்ல வந்து அவங்க டிசைனர் டீமோட சேர்ந்து பண்ணி தர சொல்லிருக்காங்க.”

என்றதைக் கேட்டு நெற்றியைத் தேய்த்தவன்,

“எப்போ அண்ட் எத்தனை நாள் சிங்கப்பூர்ல ஸ்டே பண்ணணும்?”

“நெக்ஸ்ட் வீக் சார்  அண்ட் த்ரீ டேஸ் டூ நைட் ஸ்டே பண்ற மாதிரி இருக்கும் சார்.”

“டிசைனரா யாரை செலக்ட் பண்ணிருக்கீங்க ஸ்டெல்லா?”

“மீனா டிசைனிங் டீம் ஹெட் சார். என்னும் ஒருத்தர் வேணும் உங்களுக்கு, ஃபைல் அனுப்பி வச்சிருக்கன், அந்த ஃபைலைப் பார்த்துட்டு யாருன்னு சொல்லுங்க சார்.”

“மெயின் பிரான்ச்ல ஆதிஷ்னு ஒருத்தன் டிசைனிங் டீம்ல வொர்க் பண்றான், அவன் ஓகே. அவன் டீடைல்ஸ உனக்கு அனுப்பி வைக்கிறேன், செக் பண்ணிக்கோ.”

“ஓகே சார், அப்போ மொத்தம் மூணு பேருக்கு டிக்கெட் அண்ட் ஹோட்டல் ரூம் புக் பண்ணிறேன்.”

“மூணு இல்ல, நாளு நானும் வரேன் சிங்கப்பூர்—”

என்று ஒற்றைக் கண்ணை அடித்து விட்டு சிரித்தவன் அங்கிருந்து கிளம்பி சென்றான், அவன் செல்லும் வரை அவனை பார்த்தவள்.

அவன் சென்றதும் நெஞ்சில் கை வைத்து தலையை டேபிள்ல சாய்த்துக்கொண்டாள்.

“ஸ்டெல்லா…..” என்று அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

 இதயம் படபடக்க, கைகள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. ஒரு வித உணர்வின் பிடியில் சிக்கிக் கொண்டவள் போல் கண்களைக் கை கொண்டு மூடிக்கொண்டாள்.

இதுவரை தோன்றாத ஒரு உணர்வு, உடலெல்லாம் ஜில்லென்று இருக்க, நூறு நிலவைப் பார்ப்பது போல பளிச்சென்று கண்முன் வந்து நின்றான் த்ரூவ்.

அதில் வேகமாகத் தலையை உலுக்கிக் கொண்டு எழுந்து, ஜன்னல் அருகே சென்று கீழே த்ரூவ் கார் ஏறுவதைப் பார்த்தாள்.

“அம்மா…….. நான் இன்னைக்கு ஒரு நாள் உன் கூட தூங்கிக்கவ….” என்ற சத்தம் காதில் கேட்கவும், கண்களை இறுக மூடித் திறந்தவள்.

அவள் சேரில் சென்று சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

நம்பிக்கை இன்றி உறவு அமையாது. அப்படி நம்பிக்கை இல்லா உருவாகும் உறவு நிலைத்தும் நிற்காது.

அப்படி இருக்க, நம்பிக்கை என்று ஒன்றை அவள் தங்கையைத் தவிர வேறு யார் மீதும் வைக்கத் தயராகாத ஒருவளுக்கு வரும் காதல், அனலில் பட்ட மெழுகாக உருகித்தான் போகும்.

இவற்றை உணர்ந்தே, இவளின் காதல் எங்கு அவனை காயப்படுத்தி விடுமோ என்று அவனோடு அவளையும் சேர்த்து வலிக்க வைக்கிறாள்.

கீழே காரில் த்ரூவ் ஏறி அமர்ந்ததும், காரை எடுத்த தருண் வாய்க்குள் புலம்பியபடியேதான் காரை ஓட்டினான்.

“ஏற்கெனவே அந்த ஹோட்டல் ஓனர் எப்போ எப்போன்னு இருக்காரு, இதுல அது பத்தாதுன்னு இவர் வேற ட்ரக் கேஸ்ல மாட்டி விட்டார்.

இதுக்கு அப்புறம் எப்போ என்ன பண்ணி வைப்பாரோன்னு நம்ம பயந்து இருந்த இவரு லவ் பண்ணிட்டு ஜாலியா இருக்காரு.

எப்போ எவன் எங்க இருந்து அட்டாக் பண்ணி வைப்பானு வேற தெரியல, ஒரு பாடி கார்டு ஆவது போடலாம்ல?” என்று கண்ணாடி வழியே த்ரூவை பார்க்க, இவன் பார்த்ததை பார்த்த த்ரூவ்,

“என்ன தருண், பயமா இருக்கா?” என்று அவன் முகத்தில் இருந்த பயத்தைப் பார்த்து இவன் கேட்க,

அதை கேட்டு பேய் போல முழித்த தருண், “இல்லை சார்…” என்று தலையை ஆட்டினான்.

“இல்லை, பார்க்க ஒரு மாதிரி இருந்தியா அதான் கேட்டேன், சரி அப்போ அந்த எஃப்.எம் அ கொஞ்சம் ஆன் பண்ணு” என்றதும் அவனும் அதை ஆன் செய்தான்.

“காதலிக்க ஆசை இல்லை கனவில் உன்னை காணும் வரை….” என்ற பாடல் ஓட, அதை முறைத்து பார்த்த தருண்.

“இப்போ இந்த பாட்டு ஒன்னு தான் குறை, இவங்களுக்கு என்ன? அந்த ஹோட்டல் சார் இவர பலிவாங்க என்ன தான தூக்குறார்?”

என்று பயந்தவனுக்கு முன்னால், ஒரு முறை ஒரு டெண்டர் விஷயமாக இவனை ஆள் வைத்து கடத்தி அடித்திருக்க, பின் த்ரூவ் தான் இவனை தேடி காப்பாற்றினான் அந்த நினைவுகள் வந்து தலையை உலுக்கிக் கொண்டவன்.

“அப்ப மாட்டுன மாதிரி தனியா எங்கயும் சிக்கிட கூடாது, முடிஞ்ச அளவு சார் கூடவே ஒட்டிட்டு திரியணும்”

என்று ஒரு நல்ல முடிவு எடுத்தவனுக்கு, அந்த சார் அடுத்த வாரம் இவனை அம்போ என்று விட்டு விட்டு சிங்கப்பூர் செல்வ போவது தெரிந்தாள் என்ன செய்வான்?

இப்படியே ஒரு மணி நேரம் புலம்பியபடி அந்த ட்ராப்பிக்கில்  அலுவலகத்திற்கு வந்தவனுக்கு தலை வலிப்பது போல இருந்ததால், நேராக கேபிட்டேரியாவுக்கு சென்றான்.

அங்கே ஆதிஷ் ஏதோ யோசித்தபடி தனியாக டீ குடித்துக் கொண்டிருப்பதை பார்த்தவன், இவனுக்கு ஒரு காபி பிடித்துக்கொண்டு அவன் அருகே சென்று அமர்ந்தான்.

“ஹே… ஆதிஷ், எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்றவனது பேச்சில் யோசனையில் இருந்து மீண்டவன்,

“என்ன சொல்றியா தருண் பார்த்து ரோம்ப நாள் ஆச்சுன்னு, நான் இங்கயே தான் இருக்கேன். உன்ன தான் பார்க்கவே முடியல, அவ்வளவு பிசியா  இருக்கிங்க “

என்றதும், பூட்டி வைத்திருந்த ஆதங்கத்தை அவனிடம் கொட்டத் தொடங்கினான் தருண்.

“என்ன சொல்ல ஆதிஷ், இந்த கம்பெனிக்கும் அந்த ஸ்டெல்லா மேம் கம்பெனிக்கும் அழையவே எனக்கு நேரம் சரியா இருக்கு, இதுல எங்கன்னு ப்ரியா இருக்கா?”

“ரெண்டு கம்பெனிக்கும் டய்யப் னா கொஞ்சம் கஷ்டம் தான்ல தருண்?”

“கம்பெனி டையப்னு எல்லாம் இல்ல ஆதிஷ், எல்லாம் சார் லவ்-க்காக தான்”

என்றவனை ஷாக் ஆக ஆதிஷ் பார்க்க, “என்ன இவ்வளவு ஷாக் ஆகுற ஆதிஷ்? ஏன் உனக்கு மேட்டர் தெரியாதா?”

“ம்ஹூம்… தெரியாது தருண், சார் லவ் பண்றாரா என்ன?”

“அடப்பாவி, எதுவுமே தெரியாத…. நீ ஆபீஸ்ல தானே இருக்க, இங்க இருக்க வாட்ச்மேன் வரைக்கும் மேட்டர் தெரியும், உனக்கு தெரியாதது நம்பவே முடியலையே…” என்று தருண் அவனை சந்தேகமாகப் பார்த்தான்.

“ப்ச்…. ட்ரஸ்ட் மீ தருண், நான் இந்த மாதிரி விஷயம் பேச ஸ்டார்ட் பண்ணாலே எழுந்து போய்டுவேன். ஏன் உனக்கு தெரியும் தானே?”

“ஹா… தெரியும் தெரியும்…. சரி அப்போ நானே சார் லவ் யார்னு சொல்றேன், கேட்டு தெரிஞ்சுக்கோ,”

“நம்ம ஆபீஸ் இல்லன்னு மட்டும் கெஸ் பண்ண முடியுது,”

“எஸ், நம்ம ஆபீஸ் இல்ல, அந்த புது ஆபீஸை பார்த்துக்குறாங்கல ஸ்டெல்லா, அவங்கல தான் லவ் பண்றாங்க சார் ஒன் சைடா” என்றதை கேட்டு அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டான் ஆதிஷ்.

“என்னது, ஸ்டெல்லாவையா…?” என்று சத்தமாக வேறு இவன் கேட்டு வைக்க இவர்களை சுற்றி இருந்த அனைவரும் இவனை தான் பார்த்தார்கள்.