நாடகம் ஆனதும் விலகிச் செல்ல…
ஓடையைப் போலே உறவும் அல்ல…. பாதைகள் மாறியே
பயணம் செல்ல…..
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு… நீ…. வந்தால்
என்ன வா…
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே… என் அன்பே….”
என்ற பாடலுக்கு ஏற்ப கைகள் ஸ்டியரிங்கில் தாளம் போட்டாலும், மனம் என்னவோ பாடலின் ஓவ்வோரு வரிக்கும் அவளிடம் தான் சென்று வந்தது.
காரின் ஜன்னல் வழியே வீசும் காற்றை சுகமாக உள்வாங்கி யவன் இரவின் அமைதியை குலைக்காமல், அந்த நெடுஞ்சாலையில் கார் மெல்ல ஊர்ந்து சென்றது.
அலுவலகத்தில் இருந்தே தருணை அணுப்பி விட்டவன் இன்று ஸ்டெல்லாவை பார்க்க அவள் அலுவலகத்திற்கு செல்லவே இல்லை. அதில் தருணுக்கே அதிர்ச்சி தான்.
“நம்ம பாஸா இது….” என்று அதிர்ந்து திரும்பி திரும்பி பார்த்தபடி தான் வீட்டுக்கு சென்றான்.
ஏனோ இன்று அவளை கான அங்கே சென்றால் அவளிடம் அவனை மீறி திருமணம் பற்றி கேட்டு விடுவோமோ என்று யோசித்தே அவளை பார்க்க செல்லாது, ஒரு வித மன குழப்பத்தில் தனியாக காரை ஓட்டி கொண்டு அவன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
அந்த நெடுஞ்சாலையை சுற்றி நோட்டம் விட்டபடி கார் ஓட்டிக்கொண்டிருந்தவன் கண்ணில், யாரோ இருவர் ஒரு பெண்ணை வாயை மூடி ஆட்டோவில் இழுத்து போட்டு கொண்டு செல்வதை பார்த்தவன்
“ஓ… சிட்…” என்று காரின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அந்த ஆட்டோ அருகே மின்னல் வேகத்தில் சென்றான்.
ஆட்டோ அருகே செல்லச் செல்ல பெண்ணின் முனகல் சத்தம் கேட்கவும், காரின் ஆக்சிலேட்டரை போட்டு ஆட்டோவின் முன் காரை மறைத்து நிறுத்த,
ஆட்டோ நேராக காரை மோதி நின்றது. காரை மோதியதில் ஏற்கெனவே போதையில் இருந்த அந்த டிரைவருக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வர முழு மயக்கத்திற்கு சென்றிருந்தான்.
காரை விட்டு சட்டையை மடக்கியபடி கீழே இறங்கியவன், ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனின் கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டு, பின்னே அந்த பெண்ணின் வாயை மூடியபடி அமர்ந்திருந்தவனையும் வெளியே இழுத்து போட்டு,
“என்ன பண்ணடா அவங்கள தூக்கினீங்க….” என்று போட்டு அவர்கள் முகத்தில் குத்து குத்து என்று குத்திக்கொண்டே இருக்க, ஆட்டோவின் உள்ளே அமர்ந்திருந்த அந்த பெண் அவனில் செயலில் பயந்து உள்ளேயே ஒடுங்கி அமர்ந்திருந்தார்.
அத்தனை ஆக்ரோஷமாக இருவரையும் அடி வெளுத்து கொண்டிருந்தான். அப்போது அந்த சாலை வழியாக சென்று கொண்டிருந்த போலீஸ் ஜீப் இவர்கள் அருகே வந்து நின்றது
அதிலிருந்து இறங்கிய காவல் துறை அதிகாரி த்ரூவை பிடித்து இழுத்து,
“அவன ஏன் அடிக்கிற? அடிக்கிறத நிறுத்துப்பா…. “
“என்ன விடுங்க சார், இவன் மாதிரி மிருகங்கள சும்மா விட கூடாது, என்ன தைரியம் இருந்தா பொண்ணு மேல கை வைப்பான்” என்று மீண்டும் எகிறியவனை எப்படியோ ஒரு வழியாக தடுத்து நிறுத்தியவர்.
“என்ன ஆச்சு? எதுக்காக இப்படி இவனுங்கள அடிச்சிங்க?”
“ரோட்ல நடந்து போயிட்டு இருந்த இவங்கள இவனுங்க ஆட்டோல வந்து கடத்திட்டு போனாங்க, அத பாத்துட்டு தான் இவனுங்கள அடிச்சேன்.”
“என்னது? கடத்த முயற்சி பண்ணாங்களா?”
“முயற்ச்சிலாம் இல்ல, கடத்திட்டாங்க, நான் தான் ஹெல்ப் பண்ண…”
“இவர் சொல்றது உண்மையாம்மா? இவங்க உங்கள கடத்துனானுங்களா?” என்று கேட்க, அந்த பெண்ணும் அழுதபடி ஆமாம் என்று தலையட்டவும், அந்த அதிகாரி இருவரையும் கைது செய்து வண்டியில் ஏற்றியவர்.
காலை வந்து ஸ்டேஷனில் கம்பலெயின்ட் கொடுக்க சொல்லி விட்டு சென்று விடவும்.
த்ரூவ் திரும்பி அவளை பார்த்தான். அவளுக்கு வயது நாற்பது இருக்கும்; தலை கலைந்து, முகம் சோர்ந்து, கையில் இருந்த பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நின்றவள்
“ரொம்ப நன்றிங்க…” என்று கை கூப்பி வணக்கம் வைத்துவிட்டுச் செல்லத் திரும்ப
“ஒரு நிமிஷம்…. உங்க வீடு எங்கன்னு சொல்லுங்க, நான் ட்ராப் பண்றேன்.” அதற்கு அந்த பெண் தலையசைத்து மறுத்து
“இல்ல வேணாம், நானே பார்த்துக்கிறேன்ங்க, வீடு பக்கத்துல தான் இருக்கு.”
“இல்ல, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, வாங்க நானே ட்ராப் பண்றேன், கார்ல ஏறுங்க” என்று அவளை காரில் ஏற்றியவன், அவர் சொல்லிய அட்ரெஸ்ஸிற்கு அவளை அழைத்துச் சென்றான்.
அந்தப் பெண் சொன்னது போல அவர் வீடு ஒன்றும் அருகில் இல்லை; கொஞ்சம் தூரமாகத்தான் இருந்தது.
“இவ்வளவு தூரம் இந்த நைட் நடந்து வருவீங்களா?” என்று கேள்வியாகத் த்ரூவ் அவரைப் பார்க்க,
“இல்லங்க, இன்னைக்கு வேலையில கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. டைமிங் பஸ் மிஸ் ஆகிடுச்சு அதான் நடந்து போயிடலாம்னு வந்தேன்.”
“இவ்வளவு லேட்னா ஏதாவது கேப் புக் பண்ணிப் போக வேண்டியதுதானே?” என்றவனுக்கு என்ன சொல்வது என்று அவர் கைபிசைந்தபடி இருக்க, அவளின் மௌனத்தில் திரும்பி மேலிருந்து ஒரு அளவிடும் பார்வை பார்த்தான்.
பழைய சாயம் போன காட்டன் புடவைதான் உடுத்தியிருந்தாள் என்னதான் அயர்ன் செய்து போட்டிருந்தாலும், அதன் நிறம் அதை மங்கலாகக் காட்டியது.
நெற்றியில் கருப்புப் பொட்டு மட்டும் இருக்க, கழுத்தில் தாலி இல்லை, கையில் மோதிரம் எதுவும் இல்லை.
“ஹஸ்பண்ட் இல்ல போல, இவங்கதான் தனியா வொர்க் போய் ஃபேமிலியப் பார்த்துக்கிறாங்க போல. ஃபைனான்சியலா பிரச்சனை இருக்கும் நினைக்கிறேன்” என்று யூகித்தவனாகப் போச்சு கொடுக்கத் தொடங்கினான்.
“எங்க வொர்க் பண்றீங்க?”
“இங்க தான் ஒரு ஹாஸ்பிட்டல்ல ரிஷப்ஷனிஸ்டா வொர்க் பண்றேன். எப்பவும் லேட் ஆகாது, இன்னைக்குத்தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.”
“ஓ….” என்றுவிட்டு அதன் பின் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக காரை ஓட்டியவன், அந்தப் பெண் சொன்ன சாலைக்குள் காரைச் செலுத்தினான்.
அந்தத் தெருவே ஒரு கார் உள்ளே செல்லும் அளவுதான் இருந்தது.
அந்தத் தெருவில் அனைத்து வீட்டிலும் லைட் அணைக்கப்பட்டு மூடியிருக்க, கடைக்கோடியில் இருந்த ஒரு ஓட்டு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.
“அந்த லைட் எரியும் வீடு தான், அங்க நிறுத்துங்க”
என்றதும் காரை அங்கே நிறுத்த, காரின் சத்தம் கேட்டு அந்த வீட்டின் வாசலில் இருந்து இரண்டு தலைகள் எட்டிப் பார்த்தன; ஒரு சிறு பெண் மற்றும் ஒரு சிறுவன் தலைதான் அது.
அந்த இரு தலையும் இந்த பெண் காரில் இருந்து இறங்குவதைப் பார்த்துவிட்டு, வேகமாக வந்து இவளை அணைத்துக் கொள்ள.
அவர்கள் தலையைத் தடவி விட்டவள்,
“அம்மா வந்து கதவைத் திறக்குற வரை வெளிய வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கன் தான?”
“அது நீ வர லேட் ஆச்சா…, அதான்ம்மா…”
“அது ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகம், அதான்டா. சரி, சாப்பிட்டீங்களா?”
“ம்ம்ம்….” என்று இருவரும் தலையசைக்க, த்ரூவ் புறம் திரும்பியவள்.
என்று இரு கை கூப்பி நின்றவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், அந்த இரு பிள்ளைகளையும் பார்த்தான்.
ஏழை வீட்டுப் பிள்ளைகள் என்று சொல்லாமல் சொன்னது அவர்களின் தொற்றம். இவற்றையெல்லாம் பார்த்தவன்,
“உங்க பேர் என்ன?” என்று கேட்கவும், அவர் அதற்கு ஒரு நிமிடம் தயங்கி பின் தயக்கம் தெளிந்து,
“சீதா…” என்று சொல்ல, அதற்கு தலையசைத்து அங்கிருந்து சென்றுவிட்டான்.
வீட்டிற்குச் சென்ற த்ரூவ் தருணுக்கு போனில் இந்த பெண்ணின் பெயர், விலாசத்தைப் போட்டு அனுப்பியவன்,
“நம்ம ட்ரஸ்ட் மெம்பர்ஸ் மூலம் இவங்களோட பேக்ரவுண்ட் செக் பண்ணி, ஏதாவது பினான்சியலா நம்மலால முடிஞ்ச ஹெல்ப் பண்ணிடுங்க”
என்று மெசேஜ் அனுப்பியவன், அன்று ஒரு வித நிம்மதியுடன் படுத்து உறங்கினான்.
ஒருவளின் உறக்கத்தை கெடுத்து விட்டது தெரியாது இவன் இங்கு நன்றாக உறங்கி போக
இங்கு ஸ்டெல்லா வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தாள். எப்போதும் ஒரு வித அமைதியுடன் இருக்கும் அவள் முகம் இன்று ஏதோ யோசனையாகவே இருந்தது.
புருவம் சுருக்கி ஏதோ யோசித்தபடி காரின் சீட்டில் சாய்ந்து வந்தவள், அவள் வீடு வந்தது கூட தெரியாத அளவிற்கு ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தாள்.
“மேடம்…. மேடம் வீடு வந்திருச்சிங்க” என்ற ட்ரைவரின் குரல் தான் நினைவுக்கு வந்து “ஹா…..” என்று முழித்து இருக்க
“என்ன மேம் ஆச்சு? உடம்புக்கு ஏதாவது முடியலையா?” என்று கேட்டவருக்கு,
“ஒன்னும் இல்ல…” என்று கூறி காரை விட்டு இறங்கியவள், நேராக யாரையும் கவனிக்காமல் வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள்.
ஹாலில் இருந்த மணியம்மாளையும் கவனிக்கவில்லை; அவர் அருகே போனில் சிரித்த முகமாக மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்த ரூத்தையும் கவனிக்கவில்லை; நேராக அறைக்குச் சென்றவள்,
அறையில் நடந்த படி போனை எடுத்துப் பார்ப்பதும், பின் வைப்பதும் என்று இருந்தாள்.
இங்கு ஹாலில் அமர்ந்திருந்த மணியம்மாள்,
“இவ எப்படி வந்தா? வந்திட்டு என்ன அமைதியா ரூம் உள்ள போயிட்டா? எப்பவும் என்ன பார்த்தா ஒரு முறை முறைச்சிட்டு தான போவா இவ”
என்று கூறியவர், ரூத்தின் சத்தம் கேட்காததால் திரும்பிப் பார்க்க, அங்கே ரூத் ஆதிஷுடன் போனில் கடலை வருத்திக்கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து கடுப்பான மணியம்மாள் பட் என்று ரூத்தின் தொடையில் ஒன்றை வைத்து,
“ஏ…. சில்லாட்ட! நான் பேசுறதக் கூட கவனிக்காம போன்ல என்னடி இழிப்பு?”
“ஏன்…. பாட்டி, இப்போ அடிக்கிற வலிக்கிது… பிரண்டு கூட தான் பேசிட்டு இருந்தேன்,”
“நான் உங்க அக்கா அமைதியா ரூமுக்குள்ள போனதப் பத்தி பேசிட்டு இருக்கேன், அதை கவனிக்காம என்ன பிரண்டு கேக்குது உனக்கு?”
“என்னது, ஸ்டெல்லா வந்துட்டாளா?” என்று அதிர்ந்து போய் ரூத் எழுந்து நிற்க,
“உன் அக்கா வீட்டுக்கு வந்தது கூட தெரியாம என்ன போன் உனக்கு? வர வர உன் போக்கே சரியில்ல சில்லாட்ட!”
“பாட்டி சும்மா பேசிட்டு தான் இருந்தேன். சரி ஸ்டெல்லா எப்போ வந்தா? வந்திட்டு ஏன் என் கூட பேசவே இல்ல.”
“அதை தான் நானும் யோசிக்கிறேன், உன்கூட பேசாம உன் அக்கா உள்ள போக மாட்டாளே.”
“ஒருவேள வேலை இன்னைக்கு அதிகமோ, அதான் டயர்ட்ல போயிட்டாளோ?”
“அப்படி தான் இருக்கும்டி. அப்போ சரி, நீ போய் நைட்டுக்கு ஏதாவது செஞ்சி அவளுக்குக் கொஞ்சம் பாலும் கலந்து கொடு பாவம் புள்ள கலச்சி போய் வந்திருக்கு,”
என்றதும் இவளும் வேகமாக சமையலறை சென்று சமைக்கத் தொடங்கிவிட, மணியம்மாள் ரூமை எட்டிப் பார்த்து விட்டு அவர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இங்கு ரூமில் யோசனையாக நடந்து கொண்டிருந்த ஸ்டெல்லாவின் முகம் சிறிது சிறிதாகக் கோபத்திற்கு மாற,
“என்ன யோசிச்சிட்டு இருக்க? இப்போ அவன் பாக்க வரலன்னா உனக்கு என்ன? அவன் கம்பெனி ஓனர், ஆயிரம் வேலை இருக்கும், அதெல்லாம் பாக்க வேணாம்?” என்று அவள் தலையைத் அவளே தட்டிக்கொண்டாள்.
“இருந்தாலும் ஒரு மெசேஜ் ஆவது பண்ணிருக்கலாம்,” என்ற அவள் ஆழ்மன ஆசை கேட்டு அவளுக்கே அதிர்ச்சி தான்.
“அவன் மெசேஜுக்காக நான் ஆசைப்படுறேனா? ஸ்டெல்லா…..இது என்ன ஆசை? நோ, இல்ல…., இது தப்பு …. உனக்கு உன் ரூத் இருக்கா, அவ போதும், வேற யாரும் வேணாம். வேற யாருக்காகவும் ஏங்காத,”
மனிதர்கள் சுயநலமானவர்கள், அவர்களுக்கு ஒன்று வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற கூற்றை உறுதியாக நம்பிக் கொண்டு இருப்பவளால், இவள் ஒருவனின் மெசேஜிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள் என்பதை நம்பவே முடியவில்லை.
கறைப்பார் கறைத்தால் கல்லும் கறையுமாம் என்பது போல தான் ஸ்டெல்லாவும்; அவளே அறியாது அவள் மனதில் புதிதாக ஒருவன் வந்து இருப்பதை ஒத்துக்கொள்ள முடியாது தவித்துக் கொண்டு இருக்கிறாள் இவள்.
இப்படி பலவகை எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவள் ரூத்தின் குரல் கேட்டு அமைதியாக அவளிடம் சென்றாள்.
ரூத் உணவு உண்ணும் போது எப்போதும் போல கதை பேசியபடி அவள் இருந்தாளும், அதை எப்போதும் போல கேட்கும் நிலையில் தான் ஸ்டெல்லா இல்லை.
எப்போதும் நான்கு தோசை சாப்பிடும் ஸ்டெல்லாவிற்கு, ஒரு தோசையே எனோ இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்க, உண்ண முடியாமல் சேரில் இருந்து எழுந்து நின்றுவிட்டாள்.
திடீரென்று எழுந்து நின்ற ஸ்டெல்லாவை புரியாமல் பார்த்த ரூத், “ஸ்டெல்லா என்ன ஆச்சு…?” என,
“ஒன்னும் இல்ல ஜோசப்… நீ சாப்பிடு, எனக்கு வயிறு ஒரு மாதிரி இருக்கு, நான் போய் கொஞ்சம் யோகா பண்ணிட்டு வந்துறேன்,” என்று வேகமாகச் சென்றவளைக் குழப்பத்துடன் ரூத் பார்த்து,
என்று இவள் யோசனையாக இருக்கும் போது ஆதிஷின் மெசேஜ் வரவும், அக்காவை மறந்து அவனுடன் பேசியபடி இவள் உண்ணத் தொடங்கி விட்டாள்.
இப்போதெல்லாம் ரூத், ஸ்டெல்லா, மணியம்மாள் இவர்களுடன் பேசுவதை விட அதிகமாக ஆதிஷுடன் தான் பேசுகிறாள்.
முதலில் அவன் நடனத்தில் மயங்கி பேசத் தொடங்கியவள், இப்போது அவன் பேச்சிலும் மயங்கிப் போயிருந்தாள்.
ஆதிஷும் அதைத்தான் எதிர்பார்த்து, அவளுக்குப் பிடித்தது போலப் பேசிப் பேசி அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டிருந்தான்.
இருந்தும் அவனுக்கு இது போதாது; எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரூத்தை இவன் அருகே கொண்டு வர வேண்டும் என்று தீவிரமாக யோசித்தவனுக்கு ஒரு யோசனை கிடைத்தது.
ஸ்டெல்லாவை ரூத்திடம் இருந்து பிரிக்க அவனுக்குக் கிடைத்த ஆயுதம் தான் காதல். ஆம், காதல் தான்! ஸ்டெல்லாவை யாரையாவது காதலிக்க வைப்பதும், அவளுக்கு என்று ஒரு குடும்பத்தை உருவாக்குவதும் தான் அது.
அப்படிக் கோர்த்துவிட்டாள்; அடுத்து ரூத் மட்டுமே இருப்பாள். அவளைச் சுலபமாகத் தன் பாட்டியை வைத்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசித்தவன்.
ஸ்டெல்லாவின் திருமணத்தைப் பற்றிப் பாட்டியுடன் நாளை பேச வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான்.
இங்கு கண்களை மூடி, மூச்சை உள் இழுத்து வெளியே விட்டுப் பத்மாசனம் செய்து கொண்டிருந்தவள், அவளின் மனதை அடக்கித் த்ரூவின் எண்ணத்தை விரட்ட முயன்று கொண்டிருந்தாள் .
கன்னத்தில் கைவைத்து, இரு கண்களையும் சிமிட்டிக் கொண்டு இவள் முன்னே அமர்ந்திருக்கும் த்ரூவே எண்ணம் முழுக்க நிறைந்து இருக்க, சோர்ந்து தான் போனாள் இவள்.
“ப்ஸீஸ் டா, எனக்கு நீ வேணாம்… என் தலைய வீட்டு போடா…” என்று பிதற்றியவள், நெற்றியைப் பிடித்தபடி அமர்ந்துவிட,
கண்ணில் காதலைத் தேக்கி, சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு த்ரூவ் இவளைப் பார்த்து நின்றது கண்ணுக்குள் வந்து செல்ல,
ஸ்டெல்லாவின் கைகள் நடுங்க, கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது.
“ஏன்டா… இன்னைக்கு என்னப் பார்க்க நீ வரல ஏன்… வந்திருக்கலாம்ல… நான் உனக்கு ஓகே சொல்லலனா வர மாட்டியா டா….பாரு இப்போ எனக்குப் பயமா இருக்கு” என்று சத்தம் இன்றி கண்ணீர் வடித்தாள் ஸ்டெல்லா.
என்னது, ஸ்டெல்லாவிற்குப் பயமா? ஆம், பயம் தான். ஒரு நாள் த்ரூவ் இவளைப் பார்க்க வரவில்லை என்பதையே இவளால் தாங்க முடியாத போது, அவன் இவளை விட்டு வேறு ஒருத்தியைக் கல்யாணம் செய்தான் என்றாள்.
அந்தப் பயம் தான்; அவன் காதலை ஏற்று அவனுடன் வாழவும் முடியாது, அவன் காதல் இன்றி அவன் இன்றி இருக்கவும் முடியாது என்று தவித்துக் கொண்டிருக்கிறாள்.
அந்தத் தவிப்புடன் உண்ணாது கீழே சென்று உறங்கியும் போனாள் ஸ்டெல்லா. ஸ்டெல்லா தூங்கியதை பார்த்த ரூத் சமையலறை யை சுத்தம் செய்து விட்டு
எப்பொதும் போல ஸ்டெல்லா கை பிடித்து உறங்கி போனால். நெஞ்சு முழுக்க வலியும் பயமும் கலந்து ஒருத்தி உறங்கினாள் என்றாள் இன்னொரு த்தி நெஞ்சு முழுக்க காதல் , ஆர்வம் மகிழ்ச்சி என்று சந்தோஷமாக உறங்கி போனாள்.