ஹாசினி அகாடமி என்ற பெயர் பலகை முன் ஸ்கூட்டியை நிறுத்திய ரூத், போனில் ஆதிஷை அழைக்க, அவன் போனை எடுக்காமல் இவளை கையோடு அழைத்து செல்ல நேராகவே கீழே இறங்கி வந்திருந்தான்.
வேகமாக வந்தவனை சிரித்த முகத்துடன் கை ஆட்டி வரவேற்று நின்றவளை, அவன் கையைப் பிடித்து இழுத்து கொண்டு உள்ளே நடந்தபடி
“சூப்பர், சரியான டைம்க்கு தான் வந்திருக்க, வா… உள்ளே போகலாம்.”
“என்னது, நான் உள்ள வரணுமா? அதுவும் உங்க க்ளாஸ்க்கா? ஆதி……., நான் ஏன் வரணும்? கைய விடுங்க, நான் வரல”
என்று அவன் கையை அவனிடம் இருந்து இழுக்க இவள் போறட, அதை அவன் கவனிக்காது போல அவன் பாட்டுக்கு உள்ளே இழுத்து வந்து, இவன் அமரும் இடத்தில் அவளை அமர வைத்துவிட்டு
“ இங்கேயே இரு இதோ வந்துறேன்….” என்று கண்ணம் தட்டி சென்று விட்டான்.
ஆதிஷ் சென்றதும் அனைவரும் இவளையே பார்ப்பது போல இருக்க, பயத்தில் தலையைத் தாழ்த்தி குனிந்து கொண்டவள்
“அய்யோ… இங்க என்ன தனியா விட்டுப் போயிட்டாரே! இங்க வேற எல்லாம் ஏதோ பிச்சி தின்ற மாதிரி பாக்குறாங்க, இவங்கள நம்பி வந்திருக்கக் கூடாதோ!”
என்று மனம் ஏதேதோ பிதற்றத் தொடங்க, மடியில் கைகளை மூடித் திறந்தபடி, ‘எழுந்து போயிடலாமா’ என்று நினைக்கும் போதே அவளை சுற்றி ஏற்பட்ட திடீர் அமைதியால் என்ன என்று நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே சிரித்த முகத்துடன் ஆடத் தயாராக இவள் முன் நின்ற ஆதிஷைப் பார்த்தவள், புருவத்தை உயர்த்தி நிமிர்ந்து அமர, இசை ஒலிக்கப் பட்டது.
முதலில் ஒலிக்க பட்ட இசைக்கு க்ளேசிகல் முறையில் கைகளை ஆட்டி, கால்களை வளைத்து ஆடத் தொடங்கியவன், நடுவில் மாறிய இசைக்கு ஏற்ப வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆடி அனைவரையும் எப்போதும் போல கட்டிப்போட்டு வைத்திருந்தான்.
இசையோடு அவன் கண்களும் சேர்ந்து ஆட, இவன் அசையும் போது அவனுடன் சேர்ந்து அசையும் கார் குழல் என்று அவனில் தொலைந்து போனவள், கண் இமைக்க மறந்து அவனையே பார்த்துத் துளித் துளியாய் ரசிக்கத் தொடங்கினாள் அவனை அவள் அறியாமலேயே.
ஆதிஷ் வேர்வை துளிர்க்க ஆடி முடித்தவன், மூச்சு வாங்க ரூத்தைப் பார்த்து புருவத்தை உயர்த்தி ‘எப்படி?’ என்று கேட்க, அதற்கு அவள் வேகமாக தலை ஆட்டியதைக் கண்டு இவன் புருவத்தைச் சுருக்கிப் பார்த்துவிட்டு மாஸ்டர் அழைக்கவும் அங்கு சென்றுவிட்டான்.
“என்ன இப்படி ஆடுறாங்க? பரதம் எல்லாம் தெரியுமா இவங்களுக்கு?”
என்று அதிர்ந்து அமர்ந்து இருந்தவளின் தோளை யாரோ தட்டவும், திரும்பிப் பார்க்க அங்கே ஆதிஷ் தான் நின்று கொண்டிருந்தான்.
“என்ன அப்படிப் பார்க்கிற வா… டைம் ஆச்சி போலாம்”
என்று மீண்டும் கைபிடித்து இவன் அழைத்துச் செல்லவும்,இவள்
“ஆதி, சூப்பரா ஆடுறீங்க! பரதம் எத்தனை வருஷமா கத்துக்கிட்டீங்க?” என்று ஓர் ஆர்வத்துடன் பேச தொடங்கினாள்
“ஒரு பதினஞ்சு வருஷம் இருக்கும் ரூத்.”
“அவ்வளவு வருஷமா ஆடுறீங்களா? சூப்பர் ஆதிஷ்! எனக்கு நீங்க இங்க ஆட வருவீங்கன்னு தெரியவே தெரியாது.”
என்றவளின் முகத்தைத் திரும்பி ஒரு நிமிடம் பார்த்தவன்.
“அதான் இப்போ தெரிஞ்சிருச்சிலா? என்ன பண்ணப் போற ரூத் ? என் கூட சேர்ந்து ஆடுறியா?” என்று சிரித்தவனின் சிரிப்பில் ஏதோ கள்ளம் இருப்பது போலத் தோன்றவும்.
என்று கிஃப்டை அனைத்து நின்றவளைப் பார்த்துச் சிரித்து
“ஹேப்பியா ரூத்…?”
“எஸ், ரொம்ப ஹாப்பி ஆதி, தேங்க்ஸ் என்ன இங்க கூட்டிட்டு வந்ததுக்கு! ” என்று கண்கள் விரிய சிரித்து நின்றவளின் கண்களை உற்று பார்த்து
“அனா…. எனக்கு தேங்க்ஸ் மட்டும் போதாது ரூத்” என்றவனை கேள்வியாகப் இவள் பார்த்து நிற்க,
“என்ன இவ்வளவு யோசனை ரூத்? ஒரு ஜூஸ் கூடக் கிடையாதா? உன் கூட இவ்வளவு தூரம் வந்து ஹெல்ப் பண்ணிருக்கேன், ட்ரிட் இல்லனா எப்படி”
“ஓ… அதுவா… எனக்கு இங்க எந்தக் கடையும் பழக்கம் இல்லை, நீங்களே வேணா ஒரு நல்ல கடையைப் பார்த்துச் சொல்லுங்களேன் ஜீஸ் குடிக்க,”
“நான் சொல்ற கடைன்னா நான் தான் பே பண்ணுவேன், ஓகேவா ரூத்?”
“அச்சோ, அது எப்படி ஆதி? நான் தான் உங்களை கூட்டிட்டு வந்தேன், அப்போ நான் தான பே பண்ணணும்” என்றவளிடம் பணம் சுத்தமாகத் தீர்ந்து போயிருந்தது.
வைத்திருந்த அத்தனை காசையும் சேர்த்துத்தான் ஸ்டெல்லா விற்கு கிப்ட் வாங்கியிருந்தாள்.
இருந்தும், இவளுக்காகக் கடைக்கு வந்தவனுக்கு இது கூட வாங்கித் தராமல் எப்படி? ‘ஜூஸ் தானே, அக்காவிடம் போன் செய்து காசு வாங்கிக்கொள்ளலாம்’ என்று நினைத்துத்தான் இவள் கேட்டாள்.
“அப்படிலாம் ஒன்னும் இல்லை, வேணும்னா இன்னொரு நாள் நீ தனியா வாங்கி கொடு, இன்னைக்கு நீ இவ்வளவு செலவு பண்ணது போதும் ஜூஸ் நான் பாத்துக்குறேன் ”
என்றபடி கடைக்கு அழைத்துச் செல்ல, மீண்டும் ரூத்தின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
“என் கிட்ட மணி இல்லன்னு தான் இப்படிச் சொன்னாங்களா?”
என்று மனதில் சிரித்துக் கொண்டே, அருகில் இருந்த கடையில் ஜூஸ் குடித்துவிட்டு ரூத் இவனைப் அக்கடமியில் இறக்கிவிட்டு வீடு சென்றுவிட்டாள்.
ஆதிஷும் பார்க்கிங்கில் பைக்கை எடுத்து கோண்டு இருக்கும் போது அவனுடன் கிளாஸில் நடனமாடும் பாலா
“ஆதி… யார்டா அந்த பொண்ணு இன்னைக்கு கிளாஸ்க்குலாம் கூட்டிட்டு வந்திருக்க? இன்னைக்கு கிளாஸ் முழுக்க உன் கதை தான் ஓடிடுச்சுடா! யாரா இருக்கும் அந்த பொண்ணுன்னு ” அதற்கு
“ஓ…” என்று ஒற்றை வரியில் பதில் கொடுத்தவன் வண்டியை எடுப்பதிலயே குறியாக இருக்க, அவனைச் சலிப்பாகப் பார்த்த பாலா,
“சரி, யார் அந்தப் பொண்ணுன்னு ஆவது சொல்லிட்டுப் போடா, இல்ல நியூ ஸ்டூடண்டா? புது பொண்ணு ன்னா கொஞ்சம் எனக்கு இன்ட்ரோ கொடுடா” என்று தலையைச் சொறிந்தவனைப் பார்த்து நன்றாக முறைத்தவன்
“அவ ஸ்டூடண்ட் இல்லை, என் லவ்வர், சோ டோன்ட் க்ராஸ் த லிமிட்… ஓகே”
என்று கோபமாக அழுத்தி கூறியவன், பாலா நகரும் முன் அவனை இடித்துவிட்டு அத்தனை வேகமாக பைக்கை எடுத்துச் சென்றுவிட்டான்.
“இன்ட்ரோ தானடா தரச் சொன்ன, அதுக்கே இப்படி இடிச்சிட்டுப் போற!” என்று புலம்பிக்கொண்டே கிளாஸ் முழுக்க இவர்களைப் பற்றிப் பேசச் சென்றுவிட்டான் அவன்.
பைக்கில் வந்த ஆதிஷுக்கு அத்தனை கோபம்; சாதாரண அறிமுகம் தான் கேட்டான், அதில் தப்பில்லை தான். இருந்தும் அவனே அறியாது கோபம் வந்துவிட, நேராக வீட்டிற்கு சென்றவன் அறைக்குச் சென்று குளிக்க சென்று விட்டான்.
நீர் பட்டால் அவனது அந்த எரிச்சல் தீருமா என்று தண்ணீர் அடியிலேயே நின்று விட்டான்.
கண்களை மூடி தண்ணீர் அடியில் நின்றவனுக்கு, சின்னப் பாதங்களால் கை கால்களை ஆட்டி, கொண்டும் அவள் கால்களை வாயில் வைத்து “ச்ச…ச்ச…” என்று சத்தம் எழுப்பியவாறு வாயில் வைத்து சப்பி கோண்டு ஹாலில் தனியாகப் படுத்துக் கிடந்த ரூத்தே கண்ணுக்குள் விழுந்தாள்.
இவன் முதல் முறையாக ரூத்தை பார்த்தது, இரண்டு மாதக் குழந்தையாக அவளை இங்கே அழைத்து வந்த பொழுது தான். அன்றிலிருந்து இன்றுவரை அவள் அவனுக்கு மட்டும் தான் என்று மனம் கூச்சலிட்டு கொண்டே இருக்கிறது.
வேறு ஒருவர் அவளிடம் நெருங்கிப் பேசினாலும் கோபம் வந்துவிடுகிறது. இது தவறு என்று புத்தி சொன்னாலும் மனம் ஏற்கத் தயராக இல்லை.
சிறு வயதில் பாசத்தோடு அவளைத் தூரத்தில் இருந்து ரசித்தவனுக்கு எப்போது அது காதலாக மாறியது என்று தெரியவில்லை. நாள் போக்கில் அவள் மீது இவன் கொண்ட காதல் வளர்ந்து வளர்ந்து ஒரு வித தீவிரத்தை தான் கொண்டு வந்திருந்தது.
முதலில் எல்லாம் அவள் சிரிப்புச் சத்தம் கேட்டு சந்தோஷம் அடைந்தவன், இப்போதெல்லாம் இவனை விட்டு வேறு யார் முன்போ சிரிக்கிறாளே என்று கோபம் தான் வருகிறது.
ஏன் அவளின் அக்கா ஸ்டெல்லா அவளிடம் இவள் நெருக்கமாக இருப்பதையே இவனால் பார்க்க முடியாமல் போய்விட்டது.
அவளை எப்படியாவது இவனுக்கே இவனுக்கென்று வைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு முதலில் அவள் மனதை வென்று பின் அவனுள் அவளை ஒளித்து வைக்க வேண்டும். அதற்கு இப்போது தடையாக இருப்பது அவளின் அக்கா ஸ்டெல்லா மட்டும் தான்.
அவள் ஒருவளை எப்படியாவது ரூத்திடம் இருந்து முதலில் பிரிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தவன்.
அதற்கான திட்டத்தை தீட்டியபடி ஒரு வழியாக குளியலை முடித்து வெளியே வந்தவன், படுக்கையில் தொப் என்று விழுந்து போனை எடுத்துப் பார்க்க, கண்கள் பெரிதாக விரிய வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவனுக்கு அத்தனை அதிர்ச்சி.
இங்கு வீட்டிற்கு வந்த ரூத் பரிசைச் சரியாக ஸ்டெல்லாவுக்குத் தெரியாது; ஒளித்து வைத்துவிட்டு அமர்ந்தவளின் நினைவில், இன்று கண்டிப்பாக அவள் அக்கா இல்லை.
சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் என்றாள் அத்தனை ஆர்வம் ரூத்திற்கு, முதன் முறை ஸ்டெல்லா வரைந்த படத்தில் அவள் அம்மாவை பரத உடையில் பார்த்து அதில் ஆசை கொண்டவள்.
அந்த ஆர்வத்தில் அவள் பாட்டியிடம், இவளின் பத்தாம் வயதில் க்ளாஸிற்குச் சேர்த்து விடச் சொல்ல, அவரும் சேர்த்து விட்டார்.
ஒரு பத்து நாள் அவள் அக்காவிற்கு தெரியாது சென்றிருப்பாள்; அடுத்து மறு நாள் ஸ்டெல்லா க்கு தெரிந்து ஒரு ஆட்டமே ஆடித் தீர்த்து விட்டாள்.
பரதம் கற்க ரூத்தை அனுப்பவே கூடாது என்று பாத்திரங்களை எல்லாம் போட்டு உடைத்தவள், அங்கு பயந்து போய் ஒளிந்திருந்த ரூத்தின் கையைப் பிடித்து இழுத்து,
“போக மாட்டேன்னு சொல்லு, க்ளாஸ்க்குப் போக மாட்டேன்னு சொல்லு”
என்று அவள் மிரட்டியது இப்போதும் வரை காதில் கேட்பது போல தலையை உலுக்கிக் கொண்டாள்.
ஒரு விஷயம் கிடைத்திருந்தால் கூட அதன் மேல் இருந்த ஈர்ப்பு நாள் போக போகக் குறைந்து மறைந்து போயிருக்கும்; ஆனால் கிடைக்காமல் மறுக்கப் படுவது, எத்தனை வருடம் கடந்தாலும் அதன் மீது உள்ள ஆர்வம் குறையாது உள்ளே முள்ளாக தைத்து கோண்டே இருக்கும்.
அதுபோலத்தான் ரூத்தின் நிலையும்; என்னதான் ஸ்டெல்லா நடனத்திற்குப் பதில் பாட்டு க்ளாஸ் சேர்த்து விட்டாலும், இன்று அளவிலும் அந்த பாரதத்தின் மீது ஒரு ஏக்கம் இவளுக்கு இருக்க தான் செய்கிறது.
அதன் விளைவு, இன்று நேரில் ஆதிஷின் நடனத்தில் மெய்மறந்தவள், வீட்டுக்கு வந்தும் அவன் நினைவில் அவனுக்குப் போனில் ஹாய் என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
ரூத்தின் மெசேஜைப் பார்த்தவன் கட்டிலின் மீது ஏறி நின்று “ஏ….. பொம்மை….” என்று கத்தியபடி குதித்துக் கொண்டிருக்க,
“டேய் கட்டில் உடையச் போது டா, மேதுவா….” என்று அவன் அம்மா கத்தவும், பகிர் என்று தூக்கிப் போட, வேகமாக குதிப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
அவன் அம்மா தான் காப்பியோடு வந்து நின்று கொண்டிருந்தார்.
எப்போது வீட்டுக்கு வந்தாலும் எதையாவது குடிக்க எடுத்து வரச் சொல்லி செல்பவன் இன்று அமைதியாக மாடி ஏறுவதைப் பார்த்த வாணி,
“தலைவலியில இருக்கான் போல பையன், அவன் எதுவும் பேசாம மாடி ஏறிட்டான் ” என்று நினைத்துக்கொண்டு காப்பியுடன் இவர் மாடி ஏறி விட்டார்.
இவர் வரது தெரியாது, இவன் வேறு குதித்துக் கொண்டே இருக்க, வாணிக்கு ஒன்றும் புரியாது
“தலைவலியின்னு தான மேல வந்த… தூங்காம என்ன குதிச்சிட்டு இருக்க?”
“நான் எப்போம்மா எனக்கு தலைவலியின்னு சொன்னேன்?”
“அப்போ உனக்கு தலைவலியே இல்லையா?” என்று கேட்பவரிடம் என்ன சொல்வது என்று தயங்கி நின்றவன்.
“இல்லை, இப்போ எனக்கு தலைவலிக்குது தான், அந்த காப்பியை கொடு” என்று கீழே இறங்கி காப்பியை எடுத்துக்கொள்ளவும்
“இப்பவும் பொம்மைய கட்டிட்டு தான் தூங்குறியாடா?” என்று கேட்டவரின் கேள்வியில், இவனுக்கு புரையேற தலையைத் தட்டவும்
“பாத்துடா….. மெல்ல குடி…” என்று அவரும் அவன் தலையைத் தட்ட
“என்னம்மா சொல்ற? என்ன பொம்மைய பிடிச்சிட்டு தூங்குறியான்னு கேக்குற புரியல”
“இல்ல ஏதோ… பொம்மைன்னு கத்திட்டு குதிச்சிட்டு இருக்க, திரும்பவும் தொடங்கிட்டியோன்னு நினைச்சேன்”
“அது பிரான்ஸ் கூட விளையாட்டா பேசிட்டு கத்துனம்மா” என்று அவரைச் சமாளித்து அனுப்பி வைத்தவன், வேகமாக ரூத்திற்கு மெசேஜ் டைப் செய்து அனுப்பினான்.
“ஹாய்….. என்ன பண்ற?” என்ற மெசேஜை அனுப்பியவன், நெஞ்சம் படபடக்க அவளது ரிப்ளையாகக் காத்திருந்தான்.
ரூத்தும் ஆதிஷின் மெசேஜை உடனே பார்த்துவிட்டு, “சும்மா தான் இருக்கேன், நீங்க என்ன? பண்றிங்க ” என்று மெல்ல பேசத் தொடங்கி இருவரும் காதல் என்ற பயிரில் கால்வைத்தனர்.
இப்படி இவர்களது காதல் நன்றாக வளரத் தொடங்கியிருக்க, த்ரூவின் நிலை தான் பரிதாபமாக இருந்தது.
பாவமாக முகத்தை வைத்தபடி அமுதா முன் அமர்ந்திருந்தவன், அவர் சொன்னதைக் கேட்டு சந்தோஷப்படவா அல்லது வருத்தப்படவா என்று புரியாமல் அமர்ந்திருந்தான்.
“எப்போ வந்து என்ன சொல்றீங்கம்மா? இப்போ கல்யாணம்னா நான் எப்படி பண்ணிக்க ம்மா”
“ஏன்டா…. இப்போ சொன்னா அதுல என்ன ? பண்ணிக்க வேண்டியது தான. நான் தான் கிறுக்காச்சி, முடிஞ்சதையே நினைச்சு இத்தனை நாளா உன்னைப் பத்தியே யோசிக்கல. காலங்காலத்துல நான் தெளிவா இருந்து யோசிச்சிருந்தேன்னா, உன் கல்யாணமே இன்னேரம் முடிஞ்சிருக்கும்டா”
“அம்மா….. முடிஞ்சதப் பத்தி பேசாதம்மா… சரி, இப்போ உனக்கு என்ன நான் கல்யாணம் தான பண்ணிக்கணும்?”
“ஆமா த்ரூவ்… உனக்குன்னு ஒரு குடும்பத்தோட சந்தோஷமா நீ இருக்குறத நான் பாக்கணும்டா”
என்று அவர் பேசியதை கண்களை மூடி திறந்து கேட்டவன்.
“சரி பண்ணிக்கிறேன், அன ஒரு வருஷம் டைம் கொடுங்கம்மா”
“ப்ளீஸ்ம்மா… எனக்கும் என் மைண்ட் செட் ஆக டைம் வேணும் தான ம்மா”
என்று சொல்லிச் சென்றவனைப் பாவமாகப் பார்த்தவர்.
“என் புள்ள பாவம்… எனக்குப் பையன பிறந்த பாவத்துக்கு என்னும் எத்தனை கஷ்டப் படணுமோ” என்றவர் சோபாவில் தலையைச் சாய்த்துப் படுத்துக்கொண்டார்.
இங்கு அறைக்கு வந்து த்ரூவுக்கு ஒன்றும் புரியாத நிலைதான், அம்மா திருமணத்தைப் பற்றிச் சுலபமாக பேசிச் சென்றுவிட்டார்.
இதுவரை திருமணத்தைப் பற்றி யோசிக்காதவன், இப்போது அதைப்பற்றி அமுதா பேசவும் பயந்து தான் நின்றான்.
ஆம் பயம் தான்; இவன் காதலைப் பற்றித் தெரிந்தும் கல்லு போல இருக்கும் ஸ்டெல்லாவிடம் இப்போது திருமணத்தைப் பற்றிச் சொன்னால், அவள் அதற்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றுவிடுவாள் என்பது நிச்சயமே.
இப்படி இருப்பவளை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று மூளையைச் போட்டு குழப்பிக்கொண்டிருந்தான் த்ரூவ்.