அனல் – 11

இளஞ்சிவப்பு  பூசிய  தளிர் விரலை வாயில் வைத்து கடித்துக் கொண்டு, மற்றொரு கையால் போனில் ஏதோ சீரியஸாகப் பார்த்துக்கொண்டிருந்தவள் மீது இருந்து கண்ணை அகற்ற முடியாமல் போனது ஆதிஷ்க்கு

அந்த விரல்களைப் பிடித்து உலகம் எல்லை வரை நடந்து செல்லும் கனவில் பறந்து கொண்டிருந்தவனை கீழே இறக்கி விடுவது போல

திடீரென்று வந்த மெசேஜ் வைப்ரேஷனில் அதிர்ந்து அவள் மயக்கத்தில் இருந்து வெளிவந்தவன்.

யாரென்று போனை எடுத்துப் பார்த்துவிட்டு, நேரத்தைப் பார்த்தவன்

“என்ன இவ்வளவு நேரமா சமைக்கப் போகாம வெளிய உட்கார்ந்துட்டு இருக்க? இந்த பாட்டி வந்து கூப்பிட்டும் போகாம அப்படி என்னத்த போன்ல பாக்குறா?”

என்று யோசித்தபடி அந்த கண்ணாடி முன் இருந்த இருக்கையை விட்டு எழுந்து, பால்கனி கைப்பிடியைப் பிடித்தபடி ரூத்தை யோசனையாகப் பார்த்து நிற்க

திடீரென்று ஏதோ தோன்ற, அதே நேரம் ரூத்தும் இவன் பக்கம் திரும்பி இவன் நிற்பதைப் பார்த்தவள், சிரித்த முகமாக அங்கிருந்தே இவனுக்குக் கைகாட்ட

இவனை இப்படிப் பார்த்து கைகாட்டுவாள் என்று நினைக்காமல், நின்றிருந்தவன். முதலில் திகைத்து நின்றாலும் மறு நிமிடமே யூகித்து சிரித்த முகமாகப் பதிலுக்குக் கை அசைத்தவன்

“என்ன பண்ற ரூத்?” என்று கை அசைத்து கேட்க

ஆதிஷ் சொல்ல வருவது புரியாது பேந்த பேந்த முழித்த ரூத்தை பார்த்து மென்மையாகச் சிரித்தவன், அவன் போனை அசைத்துக் காட்டிவிட்டு அவளுக்கு அழைத்தான்.

ரூத்திற்கு இவன் நம்பரை கொடுத்து இரண்டு நாட்கள் ஆகிறது, இன்னும் ஒரு ‘ஹாய்’ மெசேஜ் கூட இவள் அனுப்பவில்லை. இவனுக்கும் தானாகச் சென்று மெசேஜ் செய்தாள், எங்கு தவறாக எண்ணி விடுவாளோ என்று பயம் வேறு

அதனாலயே இரண்டு நாட்களாக ஒரு மெசேஜ் ஆவது அனுப்ப மாட்டாளா என்று தவிப்பாக இவன் இருக்க, வரம் அதுவாகத் தேடி கையில் வந்து விழுந்தது  போல வந்த வாய்ப்பை விட்டு விடுவானா அவன்?

போனில் ‘பொம்மை’ என்று சேவ் பண்ணி வைத்திருந்த நம்பரை அழைத்து விட்டு, அவள் எடுக்கத் தாமதமான அந்த ஒரு நொடியிலும் அவன் இதயமோ ஆயிரம் முறை துடித்து நின்று விட்ட பிரம்மை.

கடைசியாக ரூத்தும் போனை எடுத்துவிட

“ஹே…. ரூத் எப்படி இருக்க?” என்று இயல்பாகப் பேசுவது போலக் காட்டிக்கொண்டு பேசத் தொடங்கினான்.

இவனிடம் இருந்த அளவு பதற்றம், பயம் எல்லாம் ரூத்திடம் இல்லை. அவள் சாதரணமாக, ஒரு புன்னகையுடன் பேசுவது போலத்தான் பேசத் தொடங்கினாள்.

“ம்ம்ம்…. நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?”

“ம்ம்ம் நான் ஓகே தான், ஆமா….போன்ல அவ்ளோ சீரியஸா என்ன பார்த்துட்டு இருக்க?”

“ஓ… அதுவா, அக்காவுக்கு பர்த்டே வருது த்ரீ டேஸ்ல, அதான் கிப்ட் பார்த்துட்டு இருக்கேன் ஆன்லைன்ல, ஆனா எதுவும் கிடைக்கவே இல்ல.”

“மூணு நாளா வச்சுட்டு தேடுனா எப்படி ரூத்? ஒரு டென் டேஸ் முன்னாடியே பார்க்க வேண்டாமா?”

“ப்ச்…. நீங்க வேற கடுப்பு ஏத்தாதீங்க ஆதி. நான் போன வாரமே ஆர்டர் போட்டேன் தெரியுமா?”

“போன வாரமா…. அது என்னுமா  டெலிவரி ஆகல ரூத்?”

“அது பாட்டி நம்பர் கொடுத்து வச்சிருந்தா, பாட்டி டெலிவரிக்கு கால் பண்ணும் போது கால் எடுக்காம விட்டுட்டாங்க, அதான் டெலிவரி கேன்சல் ஆகிடுச்சு.”

“எங்க பாட்டிய….நம்பி அவங்க நம்பர் கொடுத்திருக்க, அவங்க பாதி நேரம் அந்த போனை எங்கயாவது வச்சிட்டு தான் சுத்தி வருவாங்க.”

“ப்ச்…. இப்போ என்ன பண்ணறதுன்னு தெரியல ஆதி” என்று உதட்டைப் பிதுக்கி குழந்தையாக நின்றவளைக் கொஞ்சித் தீர்க்க, பரபரத்த கைகளைத் பால்கனி திண்டில் தட்டி அமைதி படுத்தியவன்.

அவள் மீது இருந்த பார்வையை விளக்காமல், ‘இதுதான் நமக்குக் கிடைச்ச வாய்ப்பு, விட்டுறாத ஆதிஷ்’ என்று எண்ணியவன்

“நீ ஏன் நேர்ல கடையில போய் வாங்கக்கூடாது ரூத்? நேர்லனா குவாலிட்டி பார்த்து நல்லா வாங்கலாம்ல?”

அவள் தனியாக எங்கும் செல்ல மாட்டாள் என்று தெரிந்தே தூண்டிலை கிப்ட் போட்டு விரித்தான்.

“என்னது நேர்லயா? நான் போணுமா? அய்யோ ஆதி, தனியா நான் கடைக்கு போய் பலக்கமே இல்ல!”

“அப்போ எங்க பாட்டிய கூட்டிட்டு போ..”

“பாட்டி…. சரியான ஓட்ட வாயி ஊரு புல்ல சொல்லி அடுத்த நாள் நீயுஸ்லயே வந்திடும். அது அக்கா காதுக்கு வந்து அவ கண்டு பிடிச்சுடுவா. சோ  நோ!.”

“ம்ம்ம்…… அப்போ என்ன பண்ணலாம்? அ……” என்று யோசிப்பது போல ஒற்றை கண்ணை மூடி அவளின் ஆர்வமான முகத்தை பார்த்தவன்

“அப்போ என் கூட வாயேன், நான் கூட்டிட்டு போறேன், எனக்கு நிறைய ஷாப்ஸ் தெரியும்.”

என்றதை கேட்டு நெஞ்சில் கை வைத்து நின்றவள்

“என்னது… உங்க கூடவா…?” என்று ரூத் வாயை பிளக்க,

“அட வாயை மூடு, கொசு போயிடப் போகுது…. நான் அப்படி என்ன சொல்லிடன்னு இத்தனை ஷாக் ரூத்?”

“அது… அது… வந்து எப்படி கூடன்னு யோசிச்சேன்.”

“எப்படினா பைக்ல தான்,” என்று பற்களைக் காட்டி நின்றவனைப் பார்த்து முறைத்த ரூத்.

“பைக்ல பின்னாடி உக்காந்து போய்லாம், எனக்கு பழக்கம் இல்ல .”

“உன்ன யாரு பின்னாடி உக்காரச் சொன்னா? முன்னாடி உக்காந்து ஓட்ட வேண்டியது தான?”

“என்னது உங்க பைக்க நான் ஓட்டவா? அதைத் தூக்கி நிறுத்தவே எனக்கு அசிஸ்டன்ட் தேவைப்படுமே!”

இதை கேட்டதும் தலையில் தட்டி சிரித்தவன், “நான் உன்ன ஓட்டச் சொன்னது உன் ஸ்கூட்டியை என் பைக்க இல்ல. ”

என்றதும் நாக்கை கடித்துக் கொண்டு முழித்தவள்

“அச்சோ…. என் ஸ்கூட்டிய வா… சொன்னீங்களா? அப்போ ஓகே, எப்போ எந்த ஷாப்னு சொல்லுங்க, இன்னும் மூணு நாள் தான் இருக்கு அக்கா பர்த்டேக்கு.”

“நாளைக்கே போலாம்! ஈவினிங் அகாடமில வந்து என்ன பிக் பண்ணிக்கோ.”

“அ… அகாடமியா? அது எங்க இருக்கு?”

“அடியே… ரூத், உனக்கு நான் போற அகாடமி தெரியாதா?” என்று நிஜமாக அதிர்ந்து தான் போனான் ஆதிஷ்

பின்ன எத்தனை அகாடமியில் இவளை நின்று சைட் அடித்தி இருப்பான் ஒரு முறை கூடவா என்னை இவ பாக்கல ? என்ற ஷாக் தான் இது.

இவனுக்கு யார் சொல்லி புரிய வைக்க இவளை பார்த்து தினமும் சைட் அடிக்கும் ஆண்களில் இவனும் ஒருவன் அவ்வளவே இவளுக்கு அவர்களின் முகத்தை  எப்பொதும் தலைக்குள் ஏற்ற மாட்டாள் .

“ம்ஹூம்… தெரியாது, நீங்க ஏதோ பில்டிங் கட்டுற மேசரியா வேலை பாக்குறீங்கன்னு பாட்டி சொல்லி கேட்டிருக்கேன் அவ்ளோ தான் எனக்கு உங்கள பத்தி தெரியும்.”

“வாட்… மேசரியா?” என்று அதிர்ந்து மீண்டும் நெஞ்சில் கைவைத்தவன், “எவ்ளோ பெரிய கம்பெனில பில்டிங் டிஸைனரா இருக்க, என்ன போய் மேசிரின்னு சொல்லி வச்சிருக்கே இந்த பாட்டி!” என்று பல்லை கடித்தவன்

“எங்க பாட்டி சொன்னதும் நீயும் அத நம்பிட்ட?”

“அஹான்… ஆதி, நான் நம்பல, எனக்கு தெரியும் நீங்க பாக்குற வேலைய பாட்டிக்கு சொல்லத் தெரியாம சொல்லி வச்சிருக்காங்க ன்னு. காலேஜ் படிச்சிட்டு யாராவது மேசரியா வேலை பாப்பாங்களா என்ன .”

பரவலா நம்ம பொம்மை கொஞ்சம் அறிவாளி தான் போல!

“சரி, உங்க அக்காக்கு என்ன மாதிரி கிப்ட் பண்ணப் போற?”

“கேன்வாஸ் அன்ட் ட்ராயிங் பிரஷ், பெயிண்ட்னு எல்லாம் சேர்த்து கிப்ட் பண்ணப் போறேன்.”

“என்ன ஸ்டெல்லா பெயிண்ட் பண்ணுவால!”

என்று ஆதி அதிர்ந்ததில், “ஏன், எங்க அக்கா பெயிண்ட் பண்ணக் கூடாதா என்ன?”

“இல்ல, உங்க அக்காவப் பார்த்தா… அப்படி தெரியல, அதான் ஒரு டவுட்.”

“அதெல்லாம் சூப்பரா பெயிண்ட் பண்ணுவா, அவ பெயிண்டிங்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனா அதை எல்லாம் ஷோ பண்ற மாதிரி வீட்டுல மாட்டவே மாட்டா. கேட்டா பெர்ஃபெக்ட் இல்லன்னு சொல்லிடுவா.”

“அதான் உங்க அக்காவே சொல்றாங்களே பெர்ஃபெக்ட் இல்லன்னு, அப்புறம் ஏன் கம்பல் பண்ற?”

“நீங்க அவ பெயிண்ட் பண்ணத ஒரு வாட்டி பார்த்தா தெரியும், அது பெர்ஃபெக்ட்டா இல்லையான்னு. லைன்லயே இருங்க, நான் உங்களுக்கு போட்டோ அனுப்புறேன்.”

என்று வருசையாக ஆறு படங்களை அனுப்பி வைக்க, அனைத்தையும் ஒன்று ஒன்றாக பார்த்தான் ஆதிஷ்.

ஸ்டெல்லா வரைந்ததை பார்த்தவனின் புருவம் தானாக உயர்ந்து ஒரு மெச்சும் பார்வையைத் தந்தவன், வாய் “வாவ்…. நைஸ்,” என்று அவனை மீறி பாராட்டியது.

ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கால நிலையை குறித்து வரைந்திருந்தாள். அத்தனை கால நிலையிலும் யாரோ ஒரு பெண் உள்ளே ஒளிந்திருப்பது போல ஒரு வின்பம்  இவனுக்குத் தோன்ற, அவற்றை ரசித்து பார்த்தான்.

ரூத் அனுப்பிய ஒவ்வொரு ஓவியத்தையும் பார்த்தவன், கடைசி ஓவியத்தில் அதிர்ந்து நின்று விட்டான்.

பரத உடையில் முழு அலங்காரத்துடன் அபிநயம் பிடித்து, கண்ணில் மின்னும் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த ரூத்தை பார்த்து, கண்கள் விரிய

“ஏ…. ரூத், இது நீயா…?” என்று கத்தியிருந்தான் ஆதிஷ்.

“அய்யோ ஆதி…. ஏன் இப்படி கத்துறீங்க… காது வலிக்குது, மெல்ல பேசுங்க!”  என்று அவன் கத்தியதில் இவள் ஒரு பதறி சுற்றி பார்த்து விட்டு

“ப்ச்… சரி…. மெதுவா பேசுறேன். இது யாரு? நீயா? உன்னையா ஸ்டெல்லா இப்படி வரஞ்சிருக்கா?”

“அட இந்த டிராயிங்கயும் சேர்த்து சென்ட் பண்ணிடனா… ப்ச்… அச்சோ… அது நான் இல்ல, ஆதி. அவுங்க என் அம்மா ஜோசப்பின்.”

“என்னது உங்க அம்மாவா இது? அப்படியே உன்ன மாதிரியே இருக்காங்க ரூத்!”

“ம்ம்ம் அக்காவும் அப்படி தான் சொல்லுவா. இதுவும் எங்க அக்கா தான் வரைஞ்சது, அவளோட பதினெட்டு வயசுல வரைஞ்சது இது.”

“உண்மையிலேயே உங்க அக்கா நல்லா வரையறாங்க.”

“அதான் அவளுக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் தரமான பெயிண்டிங் டூல்ஸ் வாங்கி தரலாம்னு பிளான் போட்டேன்.”

“நீ பிளான் போட்ட மாதிரியே எல்லாத்தையும் வாங்கிடலாம், நீ மறக்காம நாளைக்கு என் அக்கடமிக்கு வந்துடு.”

“என்னும் உங்க அக்கடமி எங்கன்னு சொல்லல ஆதி.”

இவளுக்கு என்ன பத்தி  எதுவுமே தெரியாதா? இவளை வச்சு என்ன செய்யப் போறானோ என்று நோத்தவன்.

“ஷிவானி ஆர்ட்ஸ் அகாடமி…. இது போதுமா? இல்ல அட்ரஸும் சொல்லணுமா?”

“என்னது ஷிவானி அகாடமியா? அங்க தான் நானும் பாட்டு கத்துக்கிட்டேன். அங்க என்ன கிளாஸ்க்குப் போறீங்க?”

“நாளைக்கு அங்க வா சொல்றேன். இப்போ சமைக்கிற வேலையைப் பாரு, உங்க அக்கா வர்ற நேரம் ஆகிடுச்சு பாரு,” என்று ஆதிஷ் போனை வைத்துவிட்டான்.

“என்னது அக்கா வர்ற டைம் ஆகிடுச்சா?” என்று போனை எடுத்துப் பார்த்தவள்.

“அச்சச்சோ… இவ்ளோ நேரமா வா போன் பார்த்துட்டு இருக்கேன். போச்சு போச்சு….” என்று கையை ஆட்டி பதறியவள் வேகமாக வீட்டின் உள்ளே ஓடிச் சென்றுவிட்டாள்.

ரூத் ஓடியதைப் பார்த்து கண்களை மூடி சிரித்தவன்,

“என்னும் எலி குட்டி மாதிரி தான் ஓடிட்டு இருக்க,” என்று அவனும் உள்ளே சென்றுவிட்டான்.

இங்கு சமையல் அறையில் உப்புமா கிண்டிக் கொண்டிருந்தபடி ரூத், “நம்ம அக்கடமில இவங்க என்ன பண்றாங்க? கிளாஸ் ஏதாவது போறாங்களா?”

“அப்படி போறதா இருந்தா என்ன கிளாஸ்? இந்த பாட்டி ஒரு வாட்டி கூட ஆதி போறத பத்தி சொன்னதே இல்லையே. ஊர் கதையெல்லாம் முதல் ஆளா வந்து சொல்ற பாட்டி, அவங்க வீட்டு கதைன்னா போதும் வாயை பூட்டு போட்டு வச்சிக்கும் ”

என்று புலம்பியபடி ஹாலை எட்டிப் பார்க்க, மணியம்மா நாடகத்தை தான் மூழ்கிப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

“சும்மா போய் கேட்டுப் பாப்போமா அங்க என்ன பண்றாங்கன்னு? அப்புறம் பாட்டி ஏன் அத கேக்குறீங்கன்னு கேட்டா என்ன சொல்லி சமாளிக்க?”

என்று இவள் யோசித்து கொண்டிருக்கும் போதே ஸ்டெல்லா வந்துவிட, மணியம்மாளும் சத்தம் இல்லாமல் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

ஸ்டெல்லா வந்ததும் இவள் யோசனையும் அக்கா பக்கம் திரும்பிவிட, ஆதியை பற்றி யோசிப்பதை மறந்து அக்காவுடன் கதை பேசத் தொடங்கி விட்டாள்.

இது தெரியாத ஆதிஷ், நாளை எப்படி ரூத்தை மடக்கலாம் என்று பல கனவுகளுடன் ரூத்தை நினைத்து படுத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் வேலையில் பாதி நாள் லீவ் சொல்லிவிட்டு அவன் அக்கடமிக்குச் சென்றவன் ரூத்திற்காகக் காத்திருந்தான்.

அக்கடமியில் ஒரு நிகழ்ச்சிக்காக அனைவரும் மஸ்டர் முன் ரிஹர்சல் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆதியும் இதில் சோலோவாக ஆடுகிறான் .

ரூத் இங்கு வந்தாள்; அவள் முன் ஆடி காட்ட வேண்டும் என்ற ஆசையிலேயே இன்று இவளை சரியாக இந்த நேரம் வரச் சொல்லி காத்திருந்தான் ஆதிஷ்.

வரிசையாக அனைவரும் அவர்களின் திறமையைக் காட்டித் கொண்டிருக்க, ஆதிஷ் இவன் நடனம் ஆடும் நேரம் நெருங்க நெருங்க பதற்றமாகவே இருந்தவன், நேரத்தைப் பார்ப்பது, பின் போனைப் பார்ப்பது என்று அவள் வருகைக்காகக் காத்திருந்த அதே நேரத்தில், இவன் போன் வைப்ரேட் ஆக ஆர்வத்துடன் போனை எடுத்தான்.

ரூத் தான் அழைத்திருந்தாள். அவள் நம்பரை பார்த்து துள்ளாத குறையாக எழுந்து, யாருடைய கவனத்தையும் இழுக்காமல் வெளியே சென்றவன்.

திரும்பி வரும் போது ரூத்தின் கையை பிடித்துக் கொண்டு தான் உள்ளே வந்தான்.

ரூத்தும் ஒரு வித பயம் கலந்த ஆர்வத்துடன் அந்த இடத்தையே சுற்றிப் பார்த்தபடி வந்தவளை அனைவருடனும் அமர வைத்தவன்.

அவள் கன்னம் தட்டி, “ஒன் மினிட் ரூத், இதோ வந்துறேன்” என்று சொல்லி செல்லப் போனவனின் கையை பிடித்து நிறுத்திய ரூத்.

“ஆதி…. எங்க போற…. இங்க தனியா விட்டு போகாத…” என்று மிரண்டு முழித்தவளின் நெற்றியில் விரல் கொண்டு லேசாகச் சுண்டி விட்டவன்.

“ஷூ…. சத்தம் போடாதடி… ஒரு பைவ் மினிட்ஸ் தான் வந்திரன்” என்ற அஹ்கி குறளில் பேசியவன் சென்றவன்

நேராக மாஸ்டன் அருகே சென்று ஏதோ பேசுவதை பார்த்தவள், அப்போது தான் தன்னைச் சுற்றிப் பார்த்தாள்.

பெண்கள், ஆண்கள் என்று அனைவரும் இவளைத்தான் உற்று உற்றுப் பார்த்து, சிலர் அவர்களுக்குள் ஏதோ பேசியும் கொண்டிருப்பதை பார்த்தவள், மேலும் பயந்து கைகளை பிசைந்தபடி தலையை குனிந்து அமர்ந்து விட்டாள்.

அவளின் சிறையாக இருந்த கூட்டை தாண்டிப் பறக்க பயந்து அதிலயே ஒளிந்து இருக்கும் சின்னச் பறவையாக இவள் இருக்க.

இவளை சிறையெடுத்து இவன் கூட்டில் அடைக்க வந்த காவலனாக இவன் இருப்பானா? இல்லை இறக்கை விரித்து உலகைக் காட்ட வந்த ரட்சகனாக இவன் இருப்பானா ?