வீட்டில் சைந்தவியை பெண்பார்க்க வந்தவர்கள் பெண் பிடித்திருப்பதாகவும் இறுபது நாட்களில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைக்கலாம் என்றும் பேசி முடிவெடுக்க அனைவருக்கும் மகிழ்ந்து போயினர்.
மாலை வீட்டிற்கு வந்த சூர்யாவிடம் ராதிகா திருமண விஷயத்தைப் பற்றி சொல்ல, அவன் அதை கேட்டுக் கொண்டானே ஒழிய வேறு எதுவும் பேசவில்லை.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே என்ற நிலையில் சைந்தவி மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.அவள் அறைக்கு வந்த மஞ்சு மகள் கிளம்பி இருப்பதை பார்த்து கடுப்பாகி “சைந்து என்ன ஹாஸ்பிடல்க்கா கிளம்பிட்ட”என்று கேட்க, அவளும் “ஆமாம்மா….” என்றாள்.
மஞ்சு, “என்ன சைந்து கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு.ஏன் இன்னும் லீவ் போடாம இருக்க”.
சைந்து, “என்னம்மா. அதான் இன்னும் பத்து நாள் இருக்குல்ல. அதுக்குள்ள எதுக்கு லீவு போட சொல்றீங்க.நாலு நாள் முன்னாடி லீவ் போட்டா போதாதா”என்று கேட்க,மஞ்சுவோ இடுப்பில் கை வைத்து மகளை முறைத்தவர் “சொன்னா கேளு சைந்து. லீவ் போடு”என்க,அவளோ “மா ப்ளீஸ்மா.என்னோட சீனியர் முக்கியமான ஆப்ரேஷன் ஒன்னு பண்றாரு.நான் அவர் அசிஸ்டன்ட்டா கூட இருக்கணும்மா.ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.கண்டிப்பா மேரேஜ்க்கு அஞ்சு நாள் முன்னாடி லீவ் போட்டுடுறேன்” என்று சொல்ல மஞ்சுவோ பிடிவாதமாக “முடியாது….”என்றார்.
பவி பேசியும் மஞ்சு முடியாது என்றுவிட,மகள்கள் இருவரும் அப்பாவிடம் வந்து நின்றனர்.குமார் மனைவியிடம் பேசி சமாளிக்க அவரும் மனமே இல்லாமல் சம்மதித்தார்.
திருமணத்திற்கு ஐந்து நாட்கள் என்ற நிலையில் சைந்தவி வெள்ளை நிற புடவையில் தேவதையாக கிளம்பி வந்தாள். அவளிடம் வந்த மஞ்சு “ஒழுங்கா ஒரு மாசம் லீவ் சொல்லிட்டு வா”என்று முறைப்பாக சொல்ல, அவரை அதிர்ச்சியாக பார்த்த சைந்து “ம்மா….. ஒரு மாசமா”என்க,”அவள் கையில் வாட்டர் கேனை திணித்தவர் “நான் சொன்னா சொன்னதுதான். லீவ் சொல்லிட்டு வா”என்றுவிட்டு போய்விட்டார்.
சைந்தவி திருமணத்திற்கு முன் ஹாஸ்பிடல்க்கு செல்லும் கடைசி நாள் அன்றுதான் என்பதால் அனைவரிடமும் சொல்லிவிட்டு சீக்கிரம் வந்துவிடுவதாக தாயிடம் சொல்லியவள் பவியிடம் தான் இன்று ஸ்கூட்டியை எடுத்து செல்வதாக சொல்ல, அவளும் ‘சரி’என்றுவிட்டு,கோபிக்கு போன் செய்து அவன் வண்டியை எடுத்து வர சொல்லி அவனுடன் ஆபீசுக்கு கிளம்பி விட்டாள்.
வீட்டுக்கு சீக்கிரம் வந்துவிடலாம் என்று கிளம்பிய சைந்தவியின் நேரமோ என்னமோ,அன்று ஒரு பேருந்து விபத்து என்பதால் அவர்கள் அனைவரையும் சைந்து இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அவர்களுக்கு மணிகணக்காக சிகிச்சை அளித்துவிட்டு,களைப்பாக ஓய்ந்து போய் தன் இருக்கையில் அமர்ந்தவள் மணியை பார்க்க அது இரவு ஏழு என்று காட்டியது.
‘அட கடவுளே….. இவ்ளோ நேரம் ஆகிடுச்சா’ என்று தலையில் அடித்து கொண்டவள் தன் போனை எடுத்துப் பார்க்க, அதில் தாயிடமிருந்து இறுபதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து தவறி இருந்தது.”ஹோ…சிட்….” என்று தலையில் அடித்துக் கொண்டவள் உடனே அவருக்கு அழைக்க, போனை எடுத்தவுடன் மஞ்சு பொறிய துவங்கினார்.
“ம்மா…. ப்ளீஸ்…கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க”என்றவள் நடந்ததை சொல்ல முயற்சிக்க, அவள் அம்மாவோ அதற்கு இடம் தராமல் திட்டி கொண்டிருந்தார். ஓரளவுக்கு மேல் பொறுமை இல்லாத சைந்து “ம்மா…இன்னும் அரை மணி நேரத்துல வீட்ல இருப்பேன்”என்று போனை கட் செய்துவிட்டு,தன் பேகை எடுத்து கொண்டு வண்டியை வீட்டை நோக்கி செலுத்த துவங்கினாள்.
சூர்யா அன்று மப்டியில் சிட்டியை ரவுண்ட்ஸ் வந்து விட்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான ஒரு இடத்தில் தன் ஜீப்பை நிறுத்திவிட்டுஓய்வாக நின்றிருந்தான்.அப்போது ஒரு ஸ்கூட்டி வேகமாக அவனை கடந்து போக,அதை பார்த்தவன் ‘யார் இவ்ளோ வேகமா போறது’என்று அந்த வண்டியை நின்ற இடத்தில் இருந்தே கவனிக்க துவங்கினான்.
ஸ்கூட்டியில் இருந்த பெண் வெள்ளை நிற சேரி அணிந்திருக்க, இருட்டில் நின்றிருந்தவன் ‘நல்லா பேய் மாதிரி வெள்ளை சீலகட்டிட்டு இருக்கு பாரு இந்த பொண்ணு’என்று நினைத்து கொண்டு இருக்கும்போதே அவள் அங்கு ஓரமாக வண்டியை நிறுத்தினாள்.
‘இங்க ஏன் இவ நிறுத்தியிருக்கா’என்றவன் பார்த்து கொண்டிருக்கும்போதே பத்து வயது பெண் குழந்தை ஒன்று கையில் பூங்கொத்துடன் வந்தது.அதனிடம் இருந்து அனைத்து பூவையும் வாங்கியவள் அதற்கான காசை கொடுத்து கொண்டிருக்கும்போது சூர்யாவிற்கும் அந்த ஸ்கூட்டிக்கு இடையில் ஒரு மாருதி வேன் வந்து நின்றது.அடுத்த நிமிடம் புயல் போல் கிளம்பிவிட்டது.
சூர்யா பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த வேன் சென்றுவிட,அந்த இடத்தில் அவளும் இல்லை வண்டியும் இல்லை.உடனே சந்தேகமான சூர்யா சுற்றும் முற்றும் பார்க்க, அவள் போன தடயமே இல்லை. உடனே அவன் போலீஸ் மூளை சுறுசுறுப்பாக வேகமாக தன் முன்னால் சென்ற மாருதி வேனை பின் தொடர தொடங்கினான்.
மாருதி வேன் சிட்டியை கடந்து வெளியில் செல்ல, தன் சந்தேகம் ஊர்ஜிதமாக அந்த வண்டியை தொடர்ந்தான் சூர்யா.அவர்கள் வண்டி சிட்டிக்கு வெளியில் இருக்கும் காட்டிற்குள் செல்ல இவனும் உள்ளே சென்றான்.வேனில் இருந்தவர்கள் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சைந்துவை இழுத்து கொண்டு இறங்கினர்.தன்னை இழுத்து கொண்டு சென்ற நால்வரையும் மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தாள் சைந்தவி.
சூர்யா காட்டுக்குள் செல்லும் வண்டியை தவறவிட்டுவிட, கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் தேடியவன் ஒரு இடத்தில் மாருதி வேன் நிற்பதை பார்த்து அதன் அருகில் தன் வண்டியை நிறுத்திவிட்டு, தன் முதுகில் இருக்கும் துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு கூர் பார்வையுடன் நாலா புறமும் கண்களை செலுத்தி கொண்டே நடக்க துவங்கினான்.
சைந்தவிக்கு இவர்கள் யார்? எதற்கு நம்மை கடத்தி செல்கிறார்கள் என்று எதுவும் புரியவில்லை.அவர்களிடமே அதை கேட்க எண்ணி “யார் நீங்க. எதுக்கு என்னை இப்படி இழுத்துட்டு போறீங்க.விடுங்க என்னை”என்று கத்தினாள்.
அவளை இழுத்து வந்த நால்வரில் ஒருவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்து “ஹேய் என்னடி. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா,எங்க பாஸைபத்தி பத்திரிகையில் எழுதுவ. அவர் என்ன பிஸ்னஸ் பண்ணுனா உனக்கு என்னடி”என்று சொல்லி மீண்டும் ஒரு அடி அடிக்க,அப்பொழுதுதான் சைந்துவிற்கு புரிந்தது அவர்கள் தன்னை தேடி வரவில்லை தங்கையை தேடி வந்துள்ளார்கள் என்று.எதுக்கு அவள் பயந்து கொண்டு இருந்தாளோ அதுவே நடந்து விட்டது.
தங்கையை காட்டிக் கொடுக்க விரும்பாதவள் அவர்களை சமாளிக்கும் பொருட்டு “இல்லை…இல்ல சார் நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.நான் ரிப்போர்ட்டர்லாம் இல்ல டாக்டர்” என்றவள் மேலும் “நீங்க வேணா என்னுடைய பையில் பாருங்க ஐடி கார்டு இருக்கு”என்று சொல்ல,நால்வரும் திகைத்து போயினர்.
ஒருவன் உடனே மற்றொருவனுக்கு சைகைகாட்ட,அவனும் அவளது பையை எடுத்து திறந்து பார்க்க, அதில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோர்ட் அவளது ஐடி கார்டு என்று அனைத்தும் இருந்தது. அதை கண்டு திகைத்தவன் தன்னிடம் சைகை காட்டியவனிடம் ‘ஆமாம்..’ என்பது போல் கண் காட்ட,அவனோ தலையில் அடித்துக் கொண்டு “லூசுங்களா ஒரு பொண்ணை ஒழுங்கா தூக்க தெரியுதாடா”என்றொருவன் சொல்ல, மற்றொருவனோ “நீயும்தானே கூட வந்த, ஏன் உனக்கு தெரியாதா”என்று சொல்ல,அவர்களுக்குள் சண்டை இட துவங்கினர். அதை கண்டு சைந்து பயந்து போய் நின்றிருந்தாள்.
“சரி விடுங்கடா. எல்லாரு மேலயும்தான் தப்பு.அடுத்து என்ன பண்ணலாம்னு நம்ம பாஸ்க்கு போன்பண்ணி கேளு”என்று சொல்ல,”மற்றவன் உடனே அவன் பாஸ்க்கு போன் போட்டு நடந்த அனைத்தையும் சொல்ல, பாஸ் என்றவன் அந்த பக்கம் வண்ண வண்ணமாக திட்ட துவங்கினான். இறுதியில் அவன் “சரி அவள அப்படியேவிட்டுட்டீங்கன்னா வெளிய போய் போலீஸ்கிட்ட போனாலும் போவா, அவ வாயை மூட என்ன பண்ணணுமோ பண்ணுங்க”என்றுவிட, அதைக் கேட்டு அவர்களும் “சரி பாஸ்”என்று சொல்லி போனை கட் செய்துவிட்டனர்.
சைந்து மூவரையும் கலவரமாக பார்த்து கொண்டிருக்க போன் பேசியவனோ மற்றவர்களுக்கு சைகை காட்டினான். “டேய் பாஸ் இவ வாயை மூட வைக்க, எதாவது பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு. பொண்ணுங்க விஷயத்துல அவளும் சரி, அவ குடும்பமும் சரி அமைதியா இருக்கணும்னா ஒரே வழி அவள அலங்கோலாமா ஆக்கறதுதான், என்னடா எல்லாரும் ரெடியா……” என்று கேவலமான பார்வையுடன் சைந்தவியை நெருங்க, அவளோ தன் முழு பலம் கொண்டு தன்னை பிடித்திருந்தவர்களை உதறி தள்ளிவிட்டு ஓட அவளை மற்றவர்கள் துரத்தி கொண்டு சென்றனர்.
உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக ஓடிய சைந்துவின் புடவை ஒருவன் கையில் சிக்க அதை பிடித்து இழுக்க, அவளோ தடுமாறி கீழே விழுந்தாள். அதற்குள் மற்றவர்களும் வந்துவிட, அவளை சுற்றி நின்றவர்கள் “என்ன இவ்ளோதான் உன் ஓட்டமா”என்று மூச்சு வாங்கியவாறு நிற்க,தன் கை கொண்டு மேனியை மறைத்து அவர்களை மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தவள், அவர்கள் அசந்த நேரம் பார்த்து மீண்டும் எழுந்து ஓட, இருட்டில் எங்கு போகிறோம், எந்த பக்கம் போகிறோம் என்று எதுவும் புரியாமல் பின் பக்கம் பார்த்து கொண்டே ஓடியவள் எதிரில் வந்த உருவம் மீது மோத, இருவரும் கீழே விழுந்து காட்டின் இறக்கத்தில் உருண்டனர்.