சைந்து அதிர்ந்து போய் நிற்க, அவளிடம் இருந்து விலகிய சூர்யா “உன் தங்கச்சி உன்னைவிட்டு ஊருக்கு போறான்னு நீ கோவமா இருக்கல்ல. அதான் உன்னை கூல்பண்ண இப்படி பண்ணுனேன்”என்றவன் “சரி வா உன்னை ஹாஸ்பிடலவிட்டுட்டு நானும் ஆபிஸ் போகணும்”என்று சொல்ல,
சைந்தவியோ ‘எதே நான் கோவமா இருந்தேனா. எனக்கே தெரியாம எப்படிடா நான் கோவமா இருக்க முடியும்’என்று குழம்பியவள் பின் அவள் பேசிய வார்த்தைகளை யோசித்து ‘ஒரு வேலை அப்படி இருக்குமோ’என்று நினைத்தவளுக்கு இப்போது சிரிப்புதான் வந்தது.’இந்த போலிஸ்கார்க்கு நான் வேற யாரையும் பெருமையா பேசுனா பிடிக்கலப்பா…பொறாமை.அத நேரா சொல்லாம என்னென்ன காரணம் சொல்றாரு பாரு’என்று நினைத்தவள் தனக்குள் சிரித்து கொண்டாள்.அப்போது அவள் போன் மணி அடிக்க எடுத்து பார்த்தாள் பவிதான் அழைத்தாள்.போனை எடுத்து காதில் வைக்க “எங்க சைந்து போன” என்க,
சைந்து,“இதோ வரேன். அவரு பிரண்டு ஒருத்தர் பேசிட்டே இந்த பக்கம் கூட்டி வந்துட்டாரு”என்று பொயை அவிழ்த்துவிட்டவள், முன்னால் செல்லும் கணவன் கை பிடித்து பவி இருக்கும் பக்கம் சென்றாள். செக் இன் செய்து நின்று கொண்டிருந்தவள் இருவரிடமும் சொல்லி கொண்டு வர இருந்த கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு கிளம்பிவிட்டாள்.
தங்கை சென்ற பின் சைந்துவிற்கு மனம் ஏனோ கவலையாகவே இருந்தது.அவள் கண்கள் கலங்க பவி சென்ற பாதையையே பார்த்து கொண்டிருக்க “என்ன போலி டாக்டர் இன்னும் எவ்ளோ நேரம் இங்க நிற்க போறீங்க. கடமையை செய்ய போறது இல்லையா. வா போகலாம்”என்று அவள் மனம் அறிந்து ஆறுதலாக அவள் தோள் மேல் கை போட்டு அழைத்து சென்றான்.
சைந்து, “என்னை வீட்லவிடுங்க. ஹாஸ்பிடல் போனா என்னால முழு மனசா வேலை செய்ய முடியும்னு தோணல. மனசு ஒரு மாதிரி இருக்கு”என்று சொல்ல, அமைதியாக வண்டியை செலுத்தியவன் ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் முன் வண்டியை நிறுத்தி உள்ளே சென்று இரண்டு கோன் வாங்கி வந்தவன் அவளிடம் கொடுக்க அவனை ஆச்சர்யமாக பார்த்தவள் பின் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.
“உன் தங்கச்சி நம்ம நாட்டுக்குள்ளதான் இருக்கா. எப்போ வேணா நீ போய் பார்க்கலாம். போக முடியாத இடம் ஒன்னும் இல்ல. அப்புறமும் இப்போ வீடியோ கால்ல டேய்லி பார்த்து பேசிக்கலாம்”என்று சொல்ல, அவன் தோளில் தலை சாய்த்து கொண்டவளுக்கு கணவன் தன் மனதை சொல்லாமலே புரிந்து கொண்டான் என்ற நிம்மதி.
மனைவியை வீட்டில் விட்டவன் தனக்கு வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டான். ராதிகாவும் வரவேற்புக்கு அனைவரையும் அழைத்துவிட்டு வந்துவிட மஞ்சு, ராதிகா குமார் என அனைவரும் வேலையில் மூழ்கி போக, சைந்து தனிமையில் இருந்தாள். அவள் வீட்டில் இருக்கும் சமயம் எல்லாம் பவி எப்போதும் உடன் இருப்பாள். இருவரும் வீட்டில் வம்பலந்து கொண்டு இருப்பர். இல்லை போர் அடிப்பது போல் இருந்தால் வண்டியை எடுத்து கொண்டு வெளியே சென்றுவிடுவர். ஆனால் இன்று தங்கை இல்லாமல் அவள் மனம் வாடியது.
பவியைப்பற்றி அவள் நினைத்து கொண்டிருக்கும் போதுதான் அவள் டைரி நினைவு வர,’அட ச்ச…. அவ யாரை லவ் பண்ணுனான்னு நாம தெரிஞ்சுக்கவே இல்லையே. அவகிட்ட பேசலாம்னு பார்த்தா மேடம இப்போ எல்லாம் கைல பிடிக்கவே முடியறது இல்ல. சரி போய் அந்த டைரிலயே எழுதி இருக்காளான்னு பார்க்கலாம்’என்று பார்க்க சென்றவளை, கண்டு அவ்ளோ சீக்கிரம் உன் கண்ணுக்கு எல்லாத்தையும் காட்டுவேனா என்பது போல் விதி நக்கலாக சிரித்தது.
சைந்துவை தேடி வந்த ராதிகா ரிசப்சன் உடை எடுத்து வரலாம் வா என்று அழைத்து சென்றுவிட, அந்த டைரியில் இருக்கும் பூகம்பத்தை அவள் பார்க்கும் நாள் என்றோ…..
அதோ…. இதோ…. என்று நாட்கள் ஓட ரிசப்சன் நாளும் அழகாக விடிந்தது. வீடு முழுக்க விருந்தினர்கள் நிறைத்திருக்க சூர்யாவோ “உன்னோட போனை சார்ஜ் போட்டு வச்சேன். அதனால எனக்கு தேங்க்ஸ் சொல்லு”என்று அவனவளை தன் கை வளைவில் வைத்திருந்தான். இத்தனை நாட்களில் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டு இருந்தது.அழகான அணைப்பு,அன்பான முத்தம்,விளையாட்டானா சீண்டல்கள் எல்லாம் அவர்களுக்குள் சாதாரணம் ஆகி போய் இருந்தது.
சைந்தவியின் பயம் கூட குறைந்து இருந்தது. திடீர் மாற்றம் எப்போதும் ஏற்படுவது இல்லை. இதுதான் வாழ்க்கை என்று சூர்யாவை ஏற்று கொண்டவள் அவன் வேலையையும் புரிந்து ஏற்று கொள்ள துவங்கியிருந்தாள்.
கணவனின் சேட்டையை கண்டு மனதுள் சிரித்தவள் வெளியே “போங்க போலிஸ்கார். இது ரொம்ப அநியாயம். நான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டனா. எதுக்கு நீங்களா பண்ணிட்டு அப்புறம் வந்து நன்றி சொல்லுன்னு சொல்றீங்க. நீங்களா செய்யறது எல்லாம் காந்தி கணக்குதான், நான் குடுக்க மாட்டேன்”என்று வீம்பாக நின்றவளை, தடாலடியாக தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இதழ்களை வன்மையாக சிறை செய்தான்.
கணவது திடீர் செய்கையை எதிர்பாராதவள் முதலில் திகைத்து பின் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க துவங்கினாள். மனைவியின் இசைவில் தன்னை மறந்தவனின் கைகள் தன்னவளின் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க சென்றது. இடையில் ஊர்ந்த அவன் கரங்கள் பெண்மையின் மென்மையில் பதிய, உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தவள், அவன் கைகளுக்கு தடை போட முனைய,அவனோ அவள் முயற்சியை எளிதாக முறியடித்து நினைத்ததை சாதித்து கொண்டே விலகினான்.
சைந்தவி முகம் வெட்கத்தில் சிவக்க அவனை பார்க்கும் திராணி அற்றவளாக முகம் சிவக்க தலை குனிந்து நின்றாள்.மனைவியின் முக சிவப்பு ஆணவனின் இளமை பசியை தூண்டி விட,’ப்பூ….…”இதுக்கு மேல இங்க இருந்தா. நடக்கற எதுக்கும் நான் பொறுப்புல்லடி டாக்டரே….. ஓடிரு”என்றவன் திரும்பி நின்று கொண்டு, தன் பின் கேசத்தை கோதி சமாளிக்க, சைந்தவியோ அவன் வார்த்தைகளில் மேலும் நாணமுற்றவள் அறையைவிட்டு வெளியில் ஓடிவிட்டாள்.
ராதிகா வந்து மகனை கிளம்புடா நேரம் ஆகுது என்று திட்டும் வரை மனையாளைபற்றிய நினைவுகளில் இருந்தவன் வேகமாக தயாரானான்.
சந்தன நிற ஷர்ட்டும் அதற்கு மேல் ராயல் புளு கோட்டும் போட்டு ஆணழகனாக வந்தவன் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க, மனமோ “ஹேய் டாக்டரே எங்கடி போன. இன்னும் எவ்வளவு நேரம் உன்னை பார்க்க வெயிட் பண்றது. சீக்கிரம் வாடி”என்று புலம்பி கொண்டு இருந்தது.
தன்னுடன் வேலை செய்பவர்களுடன் பேசி கொண்டிருந்தவன் இதயம் வேகமாக துடிக்க, அவனவளின் மனம் காற்றில் மிதந்து வர,அவள் வந்துவிட்டாள் என்பதை உணர்ந்தவன் டக்கென்று திரும்பி பார்க்க அப்படியே நின்றுவிட்டான்.
சந்தன நிற லெஹங்காவில் தங்க ஆபரணங்கள் மின்ன சந்தன சிலையாக வந்தவளின் அழகு அவன் சித்தத்தை தடுமாற செய்தது.
தன்னை மறந்து அவள் அருகில் சூர்யா செல்ல,ஆணவனின் வருகை உணர்ந்தவள் மனதில் உணர்வுகள் ஆழி பேரலையாய் எழுந்து ஆர்ப்பாட்டம் செய்ய அதில் தடுமாறியவள் பின்னால் நகற, அதற்குள் அவன் தேவதையின் அருகில் வந்திருந்தவன் அவள் இடையில் கையிட்டு தன் அருகில் இழுத்து மேடை நோக்கி அழைத்து செல்ல,அனைவரும் அவர்கள் ஜோடி பொருத்தம் கண்டு வியந்து போயினர்.
பரிசு கொடுக்க வரும் விருந்தினர்களிடம் சூர்யா பேசி, சிரித்தாலும் நிமிடத்திற்கு ஒரு முறை அவன் பார்வை அவளை தீண்டி சென்றது. அதை உணர்ந்தே இருந்தவளின் மனதுள் பூகம்பம் எழுந்தது. இருவரும் ஒருவர் மற்றொருவரின் அருகாமையை ரசிக்கவே செய்தனர்.
பிரச்சனை இல்லாத விழாவா என்பது போல்,அங்கு கலகம் செய்யவென்றே ஒரு கும்பல் சைந்தவி திருமணம் நின்னதற்கான காரணத்தை சொல்லி,யாருடனோ ஒரு இரவு முழுதும் இருந்து வந்தாள் என்ற பேச்சை பரவ விட,மேடையில் நின்ற சூர்யாவிடமே ஓரிருவர் வந்து கேட்டு “ஏன் இந்த பொண்ண கல்யாணம் செய்துக்கிட்ட”என்று கேட்க, சைந்து முகம் வாடி போனாள்.
மஞ்சுளா குமார் இருவரும் கூட இந்த பேச்சில் மனமுடைந்துதான் போனார்கள்,பெண்ணின் வாழ்வை நினைத்து. சூர்யாவும் சரி ராதிகாவும் சரி இப்போது அமைதியாக இருந்துவிட்டு எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் இதை சொல்லிகாட்டினாள் என்ன ஆவது என்று தங்களுக்குள் மறுகி கொண்டிருக்க,அவர்களின் எண்ணத்தை கலைக்கும் வண்ணம் கம்பீரமாக கேட்டது சூர்யாவின் குரல்.
“என்னோட திருமண வரவேற்புக்கு வந்த அனைவருக்கும் மிக்க நன்றி.என்னோட பொண்டாட்டிபற்றிய நிறைய வதந்தி இங்க பரவிட்டு இருக்கு. அது எங்க ஜோடி பொருத்தத்த பார்த்து வயித்தெரிச்சல சொல்றீங்கன்னு, நான் நினைக்கவே மாட்டேன். இல்ல என் பொண்டாட்டி அழகு மேல பொறாமையோன்னும் நான் நினைக்க மாட்டேன். என் வாழ்க்கை மேல நீங்க கொண்ட அக்கறைனுதான் நான் எடுத்துப்பேன். அதுக்கு உங்க எல்லாருக்கும் நன்றி. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அன்னைக்கு என் பொண்டாட்டி யாரு கூடவோ இருந்தான்னு சொல்றீங்களே….. அந்த யாரோ நான்தான். அன்னைக்கு நைட் முழுக்க அவ என்கூடதான் இருந்தா, அதுமட்டும் இல்லாம அவ போட்டுட்டு வந்த ஷர்ட் என்னோடதுதான். இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது. அந்த கடவுளே வந்து நீங்க ரெண்டு பேரும்தான் சரியான ஜோடி. ஒழுங்கா நீங்க ரெண்டு பேரும் சேருங்க, இல்லை என்னோட தூதுவர்கள அனுப்பி உங்களை சேர்த்து வைப்பேன்னு சொல்ற மாதிரி இல்ல”என்று கேட்க, அவன் பேச்சில் சைந்தவி வாயடைத்துதான் போனாள்.
‘என்ன ட்ரிக்கா பேசுறான்யா’என்றவள் வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்க, யாரும் அறியாமல் அவள் இடையில் ஒரு கிள்ளு கிள்ளியவன் “என்ன டாக்டரே என்ன முழுங்கற மாதிரி பாக்குற. எதா இருந்தாலும் நைட் பார்த்துக்கலாம், இப்போ நார்மலா நில்லு, இப்படி முயலுக்குட்டி பார்வையை உருட்டி உருட்டி என்னை டெம்ப்ட் பண்ணாத”என்று சொல்ல, அவளுக்கு ஏனோ அந்த வார்த்தை மனதில் பயத்தை உண்டாக்கியது. ஆனால் அது ஏன் என்றுதான் அவளுக்கு புரியவில்லை.
சூர்யா சொல்வதை கேட்டு மஞ்சு, குமார் இருவரும் சைந்தவியை அப்படியா என்பது போல் பார்க்க, அவளும் கண்ணீரோடு ‘ஆமாம்’ என்று தலையசைத்தாள்.பெற்றோருக்கு அப்போதுதான் ‘ஹப்பாடா’என்ற உணர்வு. ராதிகாவிற்கு இந்த விஷயம் புதிது என்றாலும் அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
உலாவிய ரூமர் சூர்யாவால் அடக்கப்பட, அதன்பின் அனைத்தும் சுமூகமாக நடந்தது. பங்சன் ஒருவழியாக முடிய, அனைத்தையும் சுத்தம் செய்ய ஆட்களை ஏவிவிட்டு, மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தனர் ராதிகாவும், மஞ்சுவும் அவர்களிடம் பேச வந்த சைந்தவியை கண்டு “இன்னைக்கு புல்லா நின்னுட்டு இருந்தது கால் வலிக்கும். நீ போய் ரெஸ்ட் எடுடா. நாங்க பார்த்துக்கறோம்”என்று ராதிகா சொல்லிவிட, அதை மறுத்து சொன்னவளை பேசி சமாளித்து அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
சைந்தவிக்கு அறைக்குள் செல்லவே பயமாக இருந்தது. இதயம் வேகமாக துடிக்க,கைகள் சில்லிட்டு போக அறை வாயிலில் நின்றவள் பின் பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து தன்னை சமாளித்து கொண்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
ஏசி ஓடி கொண்டிருக்க அவள் கணவன் அங்கு இல்லை. இவர் எங்க போனார் என்று யோசிக்க,அவள் காது மடலை சூடான மூச்சு காற்று தழுவியது. அவனவளின் வருகையை உணர்ந்தவளுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது.படபடப்புடன் அப்படியே நின்றிருந்தவளை பின்னால் இருந்தவாறே நெருங்கி நின்றான் அவள் கணவன்.
இரு தேகங்களும் உரசி கொண்டு நின்றதில் இருவர் மனதிலும் தீ பற்றியது.மென்மையாக அவள் இடையில் கை பதித்தவனுள் ஏதேதோ உணர்வுகள் எழுந்தது.இதுநாள் வரை இது போன்ற உணர்வுகளை அவன் அனுபவித்தது இல்லை.உணர்வுகளின் தாக்கத்தில் இருந்தவன் அவள் இடையை இறுக்கி பிடிக்க, பெண்ணவளுக்கோ அது வலியை ஏற்படுத்தியது. அதில் அவளையும் மீறி “ஷ்…ஷ்….”என்று சத்தம் வர,
அப்போதுதான் அவளின் வலியை உணர்ந்தவன் “சாரிடி ஏதோ வேகத்துல….”என்றவன் பின் “என்ன டாக்டரே…பிராக்டிகல் கிளாஸ் ஆரம்பிக்கலாமா”என்று கேட்டவாறு அவள் தோளில் முகம் புதைத்து வாசனையை நுகற, அவளுக்கோ உடல் நடுங்க துவங்கியது.
அவளது உடல் நடுக்கம் அவனுக்கு புரிய, அவளை குழப்பமாக பார்த்தவன் அவளை தன்னை நோக்கி திருப்பி நிற்க வைத்து “என்னாச்சு” என்று கேட்க, அவளோ ஒன்றும் இல்லை என்பது தலையசைத்தாள்.
“ஹைய்யோ…. இல்ல…. இல்ல போலிஸ்கார் என்னை யாரும் எதுவும் சொல்லல”என்றவளை கண்டு புருவம் சுருக்கியவன், அவளை அழைத்து சென்று சோபாவில் அமர வைத்து “என்னதான் பிரச்சனை சொன்னாதானே தெரியும். எதா இருந்தாலும் சொல்லு”என்று கேட்க, அவள் கைகள் அவனை நோக்கி நீண்டது தயக்கமாக,
“என்ன…நானா…”என்று கேட்டவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாதவளாக “அ…அ…ம்கூம்…அது வந்து போலிஸ்கார்…எ.. எனக்கு பயமா இருக்கு” என்று மென்மையான குரலில் கூறியவளை கண்டு அவனுக்கு சிரிப்பு வர சத்தம் போட்டு சிரிக்க துவங்கினான்.
கணவனின் சிரிப்பை தன்னை மறந்து ரசித்து பார்த்தாள் நாயகி. அவள் பார்வையை புரிந்து கொண்டவன், அவளை நெருங்கி அமர்ந்து “போலி டாக்டரே என்ன பார்க்கறப்ப எல்லாம் முழுங்கற மாதிரி பார்க்கற. இப்போகூட பாரு. எப்படி பார்க்கறேன்னு அப்படிப்பட்ட உனக்கு பயம்.அதை நான் நம்பனும்….ம்ம்…”என்றவன் கேட்க, அவளோ அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
அவளது பரிதவித்த விழிகளையும் பயம் நிறைந்த முகத்தையும் கண்டவன் என்ன உணர்ந்தானோ சைந்தவியை ஆழ்ந்து பார்த்துவிட்டு “இன்னும் என்னை பார்த்து, என் வேலையை பார்த்து உனக்கு பயமா. அதனாலதான்….”என்று கேட்டவனிடம் வேகமாக “இல்லை” என்றவள்.
“இல்ல போலிஸ்கார். அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. ஆனா…ஏனோ இன்னைக்கு….”என்று இழுத்தவளை கண்டு பெரு மூச்சுவிட்டவன் “சரி தூங்கு”என்றுவிட்டு எழுந்து செல்ல, அவன் கையை பிடித்தவள் “உங்களை கஷ்டப்படுத்தணும்னு நான் நினைக்கல. உங்களுக்கு வேணும்னா….”என்று கூறியவளின் உணர்வை புரிந்து கொண்டவன் அவளை நார்மலாக்கும் பொருட்டு “அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஏன் இன்னையோட உலகம் அழிய போகுதா என்ன.அப்புறம் பார்த்துக்கலாம்”என்றவன் அவளை பார்த்து வசீகரமாக சிரித்து கண்ணடித்தான். அப்போதும் அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்டு “உனக்கு விருப்பம் இல்லைனா எனக்கும் வேண்டாம். இரண்டு பேரோட விருப்பத்தோடதான் இது நடக்கணும்”என்று பெட்டை காட்டியவன் பின் “இன்னைக்கு எல்லா சாப்பாடு நல்லா இருந்துச்சுல்ல”என்று பேச்சை மாற்ற, அவளும் தயக்கம் விடுத்து அவனுடன் பேச, அப்படியே இருவரும் அன்று நடந்த சம்பவங்களைபற்றி பேசி பேசியே உறங்கி போயினர்.
நாட்கள் அழகாக செல்ல துவங்கியது அந்த இளம் ஜோடிகளுக்கு.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப துவங்கினர். காதல் என்ற நிலையை தாண்டி அடுத்த நிலைக்கு அவர்கள் செல்லவில்லை.அது எல்லாம் தானாக நடக்க வேண்டும், பிளான் செய்து நடப்பதில்லை என்று நினைத்தவர்கள் காதலை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பவி தினமும் போன் செய்து பேசிவிடுவாள்.அங்கு அவளது வேலைப்பற்றி தன்னை சுற்றி இருக்கும் சூழ்நிலைபற்றி என்று அனைத்தையும் பேசுவாள். சைந்தவியிடமும் நன்றாக பேச துவங்கியிருந்தாள்.பவி காஷ்மிர் சென்று ஒரு மாதம் கடந்தநிலையில் வேலை சிறப்பாகதான் போய் கொண்டு இருந்தது.இப்போது பவி மனம் சூர்யாவை சாதாரணமாக எதிர் கொள்ள தயாராகி இருந்தது.
சைந்தவி, சூர்யா வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருக்க, இது போன்ற நிலையில்தான் சூர்யாவிற்கு மும்பை செல்லும் வேலை வந்தது. திரும்பி வர பத்து நாட்கள் ஆகும் என்று சொல்லி கிளம்பியவனை சிரிப்புடன் அனுப்பி வைத்தாலும் சைந்து மனம் வருந்தி கொண்டு இருந்தாள்.
சூர்யா இல்லாமல் சைந்து நாட்கள் சோகமாக செல்ல துவங்கியது. ஒவ்வொரு முறை போன் பேசும்போதும் எப்போ வருவீங்க எப்போ வருவீங்க என்ற கேள்வியே அவளிடம் இருந்து வந்தது. சூர்யாவிற்கும் தன்னவளை பிரிந்து இருப்பது சிரமமாகதான் இருந்தது.ஆனாலும் வேலை அவனை முழுவதுமாக இழுத்து கொள்ள, ஒரு சில நாட்கள் சைந்தவிக்கு போன் பேச கூட அவனால் முடியாமல் போனது.மறு நாள் போன் பேசும்போது மனைவியின் செல்ல கோபத்தையும், எப்போ வருவீங்க என்ற சிணுங்கல்களையும் கேட்பவனுக்கு எப்போதடா தன்னவளை பார்ப்போம் என்ற எண்ணம் வர துவங்கினான். வேலையை ஒருவழியாக சீக்கிரம் முடித்தவன் அடுத்த நாள் கிளம்பலாம் என்ற அவர்கள் குழுவிடம் மறுத்து அன்றைய இரவே பிளைட் பிடித்து சென்னை வந்து இறங்கிவிட்டான்.
இரவு பதினோரு மணிக்கு மேல் ஆக இன்னும் சூர்யா மனைவிக்கு அழைக்காமல் இருக்க,சைந்தவிக்கு கோபம் கவலை இரண்டும் மாறி மாறி வந்தது. சரி நாமே அழைக்கலாம் என்று நினைத்து அவன் போனுக்கு அழைக்க அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக சொல்லியது, ஏனோ கணவனை நினைத்து பயம் அவள் மனதை கவ்வி கொள்ள,அவனுக்கு எதுவும் ஆகிவிட்டதோ என்ற பயத்தில் அவள் கண்கள் கூட கலங்கிவிட்டது.
நூறு முறைக்கும் மேல் அவனுக்கு அழைத்து பார்த்து சோர்ந்து போனவள் முகம் அழுது அழுது சிவந்து போய்விட்டது.அப்போது என்று பார்த்து சிறிய வயதில் தன் தோழி சொன்ன விஷயம், தொலைக்காட்சி செய்திகள், படங்கள் என அனைத்திலும் பார்த்த விஷயங்கள் அவள் நினைவிற்கு வர அவனுக்கு எதுவும் ஆகிவிட்டதோ என்று உள்ளூர நடுங்கி போனாள்.
அதே பயத்தோடு ‘எங்கடா போன. உனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கேங்கற நினைப்பு கொஞ்சமாவது இருக்கா. ஒரு போன்பண்ணி பேச எவ்வளவு நேரம் ஆக போகுது. நீ ஊருக்கு வா கோவத்துல சிவக்கற அந்த மூக்க பிடிச்சு கடிச்சு வைக்கறேன். என்னை அழ வச்சுட்டல்ல’என்று திட்டி கொண்டே இருந்தாள்.
சூர்யாவிற்கு என்ன ஆகியிருக்கும் அடுத்த எபியில் பார்க்கலாம்.