அடுத்த நாள் காலை சூரியாவிற்கு சைந்தவி காபி கொண்டு வந்து கொடுக்க,அதை வாங்கியவன் அவளது விழிகளை ரசித்துக்கொண்டே குடித்தான். அவளை எதாவது வம்பிழுக்க வேண்டுமே என்றவன் யோசித்த நேரம்,அவள் சுடிதாரை கண்டு புருவம் சுருக்கி “வெளிய போறியா என்ன? ரெடி ஆகியிருக்க”.
“அ…அது….. வந்து போலிஸ்கார் நான் ஹாஸ்பிடல் போலாம்னு இருக்கேன். அத்தைக்கிட்ட கூட சொல்லிட்டேன்”என்று சொல்ல, அவளை வம்பிலுக்க வாய்ப்பு கிடைத்தது என்று எண்ணி சந்தோஷப்பட்டவன் “அய்யயோ……நான் ஒன்னுமே பண்ணலையே அப்புறம்….. எப்படி…. அதுவும் ரெண்டு நாள்ல, மாச கணக்கு ஆகும்னு சொல்லுவாங்க. நீ என்ன குந்தி தேவியா என்ன. நான் பார்த்தவுடனே…….”என்றவன் பேசி கொண்டே போக, சைந்தவிக்கு கோபமும், வெட்கமும் போட்டி போட்டு கொண்டு எழுந்தது. அதில் அவள் முகம் சிவக்க “நிறுத்துங்க போலிஸ்கார். நான் என்ன சொன்னேன். நீங்க என்ன சொல்றீங்க. நான் பிராக்டிஸ் பண்ற ஹாஸ்பிடல்க்கு போறேன்னு சொன்னேன். நீங்க ரொம்ப டர்ட்டியா யோசிக்கறீங்க” என்று முகத்தை சுளித்தாள்.
மனையாளின் முக சிவப்பை கண்டு குதூகளித்தவன் “தெளிவா சொல்லும்மா. சின்ன பையன் மனசு பதறுதா இல்லையா. நான் கூட பயந்துட்டேன்.சரி… சரி போய் வேலைய பாரு”என்றுவிட்டு வழக்கம் போல் வீட்டை சுற்றி ஓட சென்றான்.
சைந்தவி தன் வீட்டிற்கு சென்று ஹாஸ்பிடல் செல்ல தேவையானதை எடுக்க, மஞ்சு அவளை திட்ட துவங்கினர். “கல்யாணம் ஆகி மூணு நாள்தான் ஆகுது அதுக்குள்ள எதுக்கு ஹாஸ்பிடல் போற. இன்னும் ஒரு வாரம் லீவ் போடு” என்ற தாயிடம் “அவருதான் சொன்னாரும்மா. அவருக்கு லீவ் கிடைக்கும்போது லீவ் போட்டு வெளிய எங்கயாவது போகலாம்,இப்போ வீட்ல இருக்க எதுக்கு லீவுனு கேட்கறாரு. நீ எதாவது சொல்லனும்னா அவர்கிட்ட கேளு”. என்று சூர்யாவை கை காட்டிவிட அதற்கு மேல் மஞ்சு வாய் திறக்கவில்லை.
சூர்யா குளித்துவிட்டு வெளியில் வர அவனது யூனிபார்ம் அழகாக அயன் செய்து மடித்து வைக்கப்பட்டிருந்தது.அதை கண்டு புருவம் உயர்த்தியவன் ‘பரவால்லையே முயல்குட்டி சொன்ன வேலைய கரெக்ட்டா செஞ்சிட்டாளே’என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது,அவனை சாப்பிட அழைப்பதற்காக சைந்து உள்ளே வந்தாள். அங்கு அவன் துண்டுடன் நிற்பதை கண்டு பதறி திரும்பி கொண்டவள் “சா…சா…. சாரி நீங்க கிளம்பியிருப்பீங்கன்னு நினைச்சேன்”என்றாள் தடுமாற்றத்துடன்.
இளம் மஞ்சள் நிற புடவையில் இருந்தவளின் அழகை கண்களால் பருகியவன் “ம்ம்…. வரேன். திரும்பி நிக்கற அளவு எல்லாம் இல்லை. நான் டவல் கட்டியிருக்கேன். போ வரேன்” முகத்தில் சிரிப்பும் குரலில் அதட்டலுமாக அவன் சொல்ல, திரும்பி நின்றிருந்தவள் மனதில் ‘ஆமா மனசுல பெரிய ஹிட்லர்னு நினைப்பு,எப்ப பாத்தாலும் வெறப்பா பேசிட்டு இருக்கறார்.இப்படியெல்லாம் பேசுனா நாங்க பயந்துருவோமா’ என்றவள் நினைக்க, அவள் காதோரம் சூடான மூச்சு காற்று வீசியது.
‘என்ன காத்து சூடா வருது என்று திரும்பியவள் சூர்யாவை அவ்வளவு நெருக்கத்தில் எதிர்பார்க்கவில்லை, அதில் பயந்து நகற போனவள் சேரியை மிதித்து கொண்டு விழ போக, அவள் இடையில் கை வைத்து அழுத்தமாக பிடித்தவனின் முகம் அவள் முகத்தை நோக்கி குனிந்தது, அதில் பயந்து போனவள் கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.
சிறிது நேரம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை என்பதை புரிந்து கொண்டவள் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவனை பார்க்க, அவனோ அவளைதான் நக்கலாக பார்த்து சிரித்து கொண்டிருந்தான். அதில் வெட்கம் கொண்டவள் அவனிடன் இருந்து விலக முனைய முடியவில்லை, அவன்தான் அவள் இடையை அழுத்தமாக பிடித்திருந்தானே.அவனை நேராக பார்க்க முடியாமல் வெட்கம் பிடிங்கி திண்ண எலும்பாத குரலில் “நான் போகணும் என்னை விடுங்க”என்றாள். அவனோ அவளை மேலும் சீண்ட வேண்டுமென்று “நீ வெளிய அப்பாவி மாதிரி முகத்தை வச்சுட்டு, மனசுக்குள்ள என்ன திட்டிட்டே இருக்கதானே”என்று கேட்க, அவளோ அவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.
“அது எப்படி போலீஸ்கார் கண்டுபிடிச்சிங்க”என்று ஆர்வக்கோளாறில் கேட்டவள், பின் அவன் முறைப்பை கண்டு,’உளறிட்டியேடி என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள் வெளியே அவனை பாவமாக பார்க்க, சூர்யாவோ “இதுக்கும் சேர்த்து உனக்கு தண்டனை இருக்கு”என்றவனின் பார்வை அவள் இதழ்களில் அழுத்தமாக படிந்தது.
மிரண்ட விழிகளும், துடித்த இதழுமாக நின்றிருந்தவளின் நிலை அவனுள் இருக்கும் உணர்வுகளை தட்டி எழுப்ப, அவன் உடல் சிலிர்த்தது. இதற்கு மேல் அவள் தன் அருகில் இருந்தாள் எதாவது செய்துவிடுவோம் என்று பயந்தவன். அவள் இடையில் இருந்து கையை எடுத்து பின் கேசத்தை கோதியவன் திரும்பி நின்று கொண்டு “போ வரேன்”என்றான் கரகரப்பான குரலில். அவளும் விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள். அவள் சென்றவுடன் நேராக பெட்டில் குப்புற விழுந்தவன் ‘ஹைய்யோ படுத்தறாளே…. ஏதேதோ….பண்ண தோணுதே…இவ இப்படி பார்த்தே என்னை மயக்கிட்டா போலையே. நான் யாரு…. எப்படி பட்டவன்…. ஒரே பார்வைல சாச்சுப்புட்டாளே. நான் அவ்ளோ வீக்கா இருக்கனா என்ன’என்று புலம்பியவன் பெட்டில் உருண்டு புரண்டு ஒருவழியாக தன்னை சமாளித்து கொண்டு கிளம்பி கீழே சென்றான்.
கீழே டைனிங் ரூமில் ராதிகா உணவுகளை எடுத்து வைத்து கொண்டு இருக்க அவருக்கு உதவி கொண்டு இருந்தாள் சைந்தவி.கணவனை யூனிஃபார்மில் பார்த்த சைந்தவிக்கு பயம் வந்து ஒட்டி கொண்டது.எனவே வேறு பக்கம் பார்வையை திருப்பி கொண்டாள்.
சூர்யா மனையளின் மிரட்சியை பார்த்து ,’இவள் பயத்தை எப்போ நான் போக்கி, எப்போ கரெக்ட் பண்ணி…எப்போ……’என்று பெரு மூச்சுவிட்டு சாப்பிட அமர்ந்தான். ராதிகா சைந்தவியை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல சொல்லி மகனிடம் சொல்ல,சைந்தவியோ வேகமாக “இல்லத்தமா பவி கூட தானே எப்பவும் போவேன்,அவ கூடவே போய்கிறேன்”என்றவள் பையை எடுத்து கொண்டு ஓடிவிட்டாள்.
ராதிகா அவள் செல்வதை கவலையாக பார்த்து “என்ன கண்ணா இந்த பொண்ணு இப்படி பயப்படுது உன்னை கண்டாலே ஓடுது. அம்மா அவசரப்பட்டுட்டனா கண்ணா. என் விருப்பத்துக்கு உன் வாழ்க்கைய வீணாகிட்டேனா” என்று கேட்க, அவர் கை மீது தன் கை வைத்தவன் “அது எல்லாம் ஒன்னும் இல்லம்மா. எனக்கு சரியான துணையதான் நீங்க செலக்ட் பண்ணியிருக்கீங்க. எல்லாத்தையும் நான் சரி பண்றேன்”என்றவன் நம்பிக்கையாக சொல்ல, மகனை பார்த்தவர் அவன் முகத்தில் என்ன உணர்ந்தாரோ பெரு மூச்சுடன் சரி என்னும்விதமாக தலையாட்ட, அவரிடம் விடைபெற்று தானும் கிளம்பி சென்றான்.
சைந்தவி வீட்டிற்குள் செல்லும் பொழுது மஞ்சுளா கத்திக்கொண்டு இருந்தார் “என்ன தாண்டி நெனச்சுக்கிட்டு இருக்க, வயசு பிள்ளையே அவ்வளவு தூரம் எப்படி அனுப்ப முடியும்.அதுவும் தனியா…கொஞ்சமாவது யோசிச்சு பேசு”என்க, வாசலிலேயே சைந்து நின்றுவிட்டாள்.
குமாரும் மகள் தலையில் கை வைத்து மென்மையாக “எதுக்குமா அவ்ளோ தூரம் போகணும்னு சொல்ற. இங்கயே இவ்ளோ நாள் இருந்த மாதிரி இறேன். அக்காக்கு கல்யாணம் முடிஞ்சுது.நீயும் எங்கள தனியாவிட்டுட்டு போறேன்னு சொல்றியேடா”என்றார்
பவியோ பிடிவாதமாக கைகளை கட்டிக்கொண்டு “இல்ல.இது என்னோட வேலை சம்பந்தப்பட்டது.நான் போய் தான் ஆகணும். என்னோட கேரியர்ல முன்னேற எனக்கு இது ரொம்ப முக்கியம்ப்பா. ஜஸ்ட் த்ரீ மந்த்ஸ்தான்ப்பா. புரிஞ்சுக்கோங்க”என்று சொல்ல, சைந்தவி புரியாமல் மூவரையும் பார்த்துக் கொண்டே உள்ள வந்தாள்.
சைந்து, “என்னப்பா. என்ன ஆச்சு? பவி எங்க போறேன்னு சொல்லிட்டு இருக்கா? அம்மா ஏன் கோவமா இருக்காங்க?
பவி, “அது ஒன்னும் இல்ல சைந்து. மூணு மாசம் காஷ்மிர் போய் அங்க இருக்க நீயூஸ கலெக்ட்பண்ண யாரும் இன்ட்ரெஸ்ட்டா இருக்கீங்களான்னு ஆபிஸ்ல கேட்டாங்க. ஏற்கனவே இருந்தவரோட அம்மா இறந்துட்டாங்கலாம். அவரு ரிட்டர்ன் வர வரை அங்க வேலை பார்க்கனும். நான் ஓகே சொல்லிட்டேன். இரண்டு நாள்ல கிளம்பனும்.இவங்க வேண்டான்னு சொல்றாங்க”.என்று விஷயத்தை சொல்ல, அவளோ திகைத்து போய் தங்கையைப் பார்த்தாள்.
“பவி என்ன பண்ணி வச்சிருக்க. உன்னை யாரு எங்ககிட்ட கேட்காம ஓகே சொல்ல சொன்னது. இது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல.காஷ்மிர் ஒன்னும் சாதாரண இடம் இல்ல. உனக்கும் உன்னோட உயிருக்கே கூட ஆபத்து இருக்கும். இதையெல்லாம் யோசிக்காம என்ன இது எல்லாம்” என்று கோபமாக கேட்டாள்.
“என்ன சும்மா இதையே சொல்றீங்க. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். தற்காப்பு கலையும் கத்து வச்சிருக்கேன். அப்புறம் என்ன . இந்த வேலைல என்னென்ன பிரச்சனை வரும்னு தெரிஞ்சு, பிடிச்சுதான் செலக்ட் பண்ணுன்னேன்.எனக்கு பிடிச்ச வேலைல முன்னேற இது ஒரு நல்ல ஆப்போர்ச்சுனிட்டி. நான் இதை மிஸ் பண்ண விரும்பல. நான் போய்தான் ஆவேன் டாட்”என்றவள் வெளியில் செல்ல, சைந்து தாய், தந்தை முகத்தில் இருக்கும் கவலையை கண்டு தானும் வருத்தமுற்றாள்.
பவி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து ஹார்ன் அடிக்க, சைந்து வேகமாக ஓடி சென்று தங்கையுடன் அமர்ந்தாள். வண்டி செல்ல துவங்க இருவரும் அமைதியாகவே வந்தனர்.
பவிதான் முதலில் பேச்சை துவங்கினாள். “என்ன சைந்து ஏன் டல்லா இருக்க”
“ஒன்னும் இல்ல”.
“ஒன்னும் இல்லைனு வாய்தான் சொல்லுது. மனசுல ஏதோ போட்டு குழப்பிட்டு இருக்க அது என்னன்னு சொல்லு”
“பவி நீ கண்டிப்பா காஷ்மீர் போய்தான் ஆகணுமா. எனக்கு பயமா இருக்குடி” என்று சொல்ல, பவியின் முகமும் வேதனையை வெளிப்படுத்தியது.’நான் போகணும் சைந்து.போய்தான் ஆகணும்.என்னோட மனசு மாற தனிமை வேணும்.கண்ணு முன்னாடி அவரை பார்த்துக்கிட்டே விலகி இருக்க என்னால முடியாம போய்டுமோ, உன்னோட வாழ்க்கைக்கு நானே ஆபத்தா வந்துருவனோனு பயமா இருக்கு. நான் கொஞ்ச நாள் விலகி இருந்து உண்மைய ஏத்துக்க பழகறேன். உங்களை எல்லாம் விட்டுட்டு போறது எனக்கும் கஷ்டம்தான் ஆனா நான் இங்க இருந்தா பேயா அலையர என் மனச கட்டுப்படுத்த முடியாம போய்டுமோனு தோணுது. காலம் எல்லாத்தையும் மறக்க வைக்கும் தன்மை கொண்டது. என்னோட கவலையையும் காதலையும் மறக்க வைக்கும்னு நம்பறேன்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவள் அக்காவின் மனநிலை அறிய எண்ணி அருகில் இருந்த ஒரு பார்க்கில் வண்டியை நிறுத்தினாள்.
ஏனென்றால் அவர்கள் வீட்டிற்கு சூர்யா வந்த போது சைந்துவின் நடவடிக்கைகளை அவளும் கவனித்திருந்தாள். அதனாலேயே அவளுடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டாள். வண்டி பார்க்கில் நிற்கவும் அவளை புரியாமல் பார்த்தவள் தங்கையிடம் “இங்க எதுக்குடி”என்று கேட்க, அவளோ “உன்கிட்ட பேசணும் வா” என்று உள்ளே அழைத்து சென்றாள்.
இருவரும் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தனர். பவி என்ன சொல்ல போகிறாள் என்று சைந்து அவளையே பார்க்க, அவளோ எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் யோசனையில் மூழ்கி இருந்தாள். தங்கையின் கரத்தில் தன் கையை வைத்தவள் “என்னாச்சு பவி. எதாவது பிரச்னையா. எதா இருந்தாலும் சொல்லு சரி பண்ணிக்கலாம். ஏன் காஷ்மீர் போற திடீர் முடிவு. என்கிட்டகூட சொல்ல மாட்டியா. மூணு நாளா நீ சரியில்ல என்னன்னு சொல்லுடா”என்று கேட்க, அவளை வலியோடு பார்த்த பவி “ஒன்னும் இல்ல சைந்து இது என்னோட வேலை முன்னேற்றத்துக்கு உதவும். அதுமட்டும் இல்லாம பீல்ட் ஒர்க் மாதிரிதானே இதுவும். நீயாவது எனக்கு சப்போர்ட் பண்ணு”என்று போலியாக குரலில் உற்சாகத்தை வர வைத்து கேட்க, அவளோ தங்கையை ஆழ்ந்து பார்த்தவள் பின் அமைதியாகிவிட்டாள்.
பவிக்கு அக்காவின் கோபம் புரிந்தாலும் பேச வேண்டிய விஷயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து மெதுவாக ஆரம்பித்தாள் “கா…. ம்கூம்…. அ…அவர்…உன்கிட்ட நல்லா பேசறாரா. நீ ஏன் ஒரு மாதிரியாவே இருக்க”
“ஒன்னும் இல்ல”
“இங்க பாரு சைந்து என்கிட்ட உண்மைய மறைக்க ட்ரைபண்ணாத, உன் முகத்தை வச்சே நான் கண்டுபிடிச்சுடுவேன். மதியம் அவரை பார்த்த உடனே உன் முகத்துல பயம்தான் வந்தது. உனக்கு…. உ…. உனக்கு அ…. அவ
…அவர பிடிக்கலையா இல்ல. உன்னை திட்டினாரா, இல்ல.. மிரட்டுனாரா ஏன் பயப்படுற” என்று கேட்க,
தங்கை எந்த அளவு தங்களை கவனித்திருக்கிறாள் என்று எண்ணி கொண்ட சைந்து பெரு மூச்சுடன் “அது வந்து….. பவி எனக்கு அவரை பார்த்து பயம் இல்ல. அவரோட வேலைய நினைச்சுதான் பயம். நான் எட்டாவது படிக்கும்போது கூட படிக்கற பொண்ணு நல்லா படிப்பா திடீர்னு ஒரு மாசம் வரல, அப்புறம் வந்தா ரொம்ப கவலையா இளச்சு போய். என்ன ஆச்சுனு நாங்க கேட்டப்போ அவங்க அப்பா போலீஸ் நேர்மையா இருந்ததால, அவரை பிளாக் மெயில்பண்ண இவளை கடத்திட்டு போய்ட்டாங்க, அப்புறம் ஒரு வழியா கஷ்டப்பட்டு காப்பாத்தி கூட்டி வந்தாங்கன்னு.அப்போ கூட இருந்த பிரண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க போலீஸ் வேலைனா இப்படிதான் எப்போவும் கலவரமா இருக்கும்னு. அது அப்போவே என் மனசுல பதிஞ்சு போய்டுச்சு போல, அதனாலதான் நான் விரும்பற அமைதியான வாழ்க்கைக்கு போலீஸ் வேண்டான்னு சொன்னேன். ஆனா விதி போலீசையே என் வாழ்க்கையோட சேர்த்து வச்சுடுச்சு, அவரை நார்மலா பார்க்கும்போது எல்லாம் ஒன்னும் தோணறது இல்ல, ஆனா….அந்த யூனிபார்மோட பார்க்கும்போது ரொம்ப பயமா இருக்கு. என்னோட மீதி வாழ்க்கை பயத்துலயே போய்டுமோனு தோணுது.என்ன பண்றதுனே தெரியல.இந்த ரெண்டு நாள் அவர் கூட பழகுனதுல நல்லவரு மாதிரிதான் தெரியுது. இந்த பயம் போகாமயே இருந்துடுமோ எங்க கல்யாண வாழ்க்கை என்ன ஆகுமோனு நினைச்சா கவலையா இருக்கு”என்ற அக்காவை கூர்ந்து பார்த்தவள் அந்த வார்த்தையை சொன்னாள்.
“என்ன சொன்ன மறுபடி சொல்லு”என்று கோபமாக கேட்டவளிடம் “இவ்ளோ பயம் இருந்தா பேசாம டைவர்ஸ் பண்ணிட்டு வேற பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன். உனக்குதான் அவரை பிடிக்கலல்ல” என்றுஅழுத்தமாக சொன்னவளை எரித்து விடுவது போல் பார்த்த சைந்து உடனே எழுந்து கொண்டாள்.
அக்கா எழவும் அவளை புரியாமல் பார்த்த பவி “என்ன ஆச்சு. ஏன் எழுந்துட்ட”
சைந்து, “நீ சின்ன புள்ளதான்னு காட்டிட்ட. இது எங்க வாழ்க்கை. நானும் என் புருஷனும் பேசி சரி பண்ணிக்குவோம். கல்யாணம்ங்கறது ஒன்னும் விளையாட்டு இல்ல. இவருதான் இனி என் வாழ்க்கைனு முடிவுபண்ணிதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இன்னொரு வாழ்க்கைங்கற பேச்சுக்கே இனி இடம் இல்ல.அப்புறம் முக்கியமான விஷயம் நான் அவர் வேலைய பார்த்து பயப்படுறேன்னு தான் சொன்னேன். அவரை பிடிக்கலைனோ, அவர் வேலைய பிடிக்கலைனோ சொல்லல. என்னோட பயம் அது போக வைக்க கொஞ்சம் டைம் ஆகும். ஆனா கண்டிப்பா மத்தவங்க மாதிரி நாங்களும் நல்ல கணவன் மனைவியா வாழ்வோம். அதுக்கான முயற்சிய நான் எடுக்க ஆரம்பிச்சுட்டேன்.இனி இது மாதிரி என்கிட்ட பேசாத. போலாம் டைம் ஆச்சு”என்றவள் முன்னால் செல்ல, கலங்கிய கண்களுடன் சிரித்த பவி தன் போனில் ரெகார்டை ஆப் செய்து சைந்துவின் கணவனுக்கு வாட்சப்பில் அனுப்பிவிட்டாள்.
ஆம், சைந்துவின் கணவன்தான். அக்காவின் மனம் அறிய அவள் போட்ட விதை நல்ல விருச்சமாக அவள் முன் நிற்க, அதை கண்டு மகிழ்ந்து போனவள் தானும் சென்று வண்டியை எடுத்தாள்.
பவி செல்லும் வழியில் “சாரி சைந்து உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் சொல்லல”என்றவளிடம் “பரவால்ல விடு”என்றவள் சொன்னாலும் அவள் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.
சூர்யா ஆபிசில் இருந்தவன் பவி எண்ணில் இருந்து வாய்ஸ் மெசேஜ் வரவும் புருவம் சுருக்கி யோசித்தான் ‘இவ என்ன அனுப்பி இருக்கா. அதுவும் இந்த நேரத்துல. ஓபன் பண்ணலாமா வேண்டாமா’என்று யோசனையில் இருந்தவன் பின் ‘இதுவரை மெசேஜ் அனுப்புனதே இல்லையே, இந்த நம்பர் கூட அவளே ஒரு முறை அவனிடம் வந்து தன் போனை காணவில்லை என்று நாடகமாடி அவன் போனில் இருந்து அவள் போனுக்கு கால் செய்து, கடைசியில் அவள் பையில் இருந்து வந்த போன் சத்தத்தை கேட்டு சூர்யா அவளை முறைக்க, அவளோ இதுதான் என் நம்பர் சேவ் பண்ணி வைக்கறேன். உங்க நம்பரும் சேவ்பண்ணிக்கறேன்’ என்றுவிட்டு ஓடினாள். அதை நினைத்து பார்த்தவன் பின் அவள் அனுப்பிய மெசேஜை ஓபன் செய்ய அதில் அவனவள் கூறிய வார்த்தைகளை கேட்டு உள்ளம் குளிர்ந்து போனான். மனையாளின் மனதை தெரிந்து கொண்டவன் இனி அவள் பயத்தை போக்கும் வேலையில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டான்.
பவிக்கு நன்றி என்ற மெசேஜை அனுப்பியவன் வேலையில் மூழ்கி போக, பவி முதல் முறை அவனிடம் இருந்து வந்த மெசேஜை கண்டு மகிழ்ந்து அதை தடவி பார்த்தவள். முதல் முதல்ல உங்ககிட்ட இருந்து வர்ற மெசேஜ் என்று தனக்குள் சொல்லி கொண்டவள் இதழில் வலி நிறைந்த புன்னகை. பின் போனை தன் பையில் போட்டவள் காஷ்மிர் செல்வதற்கான வேலையில் இறங்கினாள்.
பவித்ரா சைந்தவி மனதை தெரிந்து கொள்ள சொன்ன வார்த்தைகள் அவளுக்கே எதிராக திரும்பும் என்றோ….. தன் காதலை மறக்க செல்லும் இடத்தில் எழவே முடியாத துன்பத்தில் சிக்க போகிறாள் என்றோ முன்பே தெரிந்திருந்தாள் என்ன செய்திருப்பாள்……பார்ப்போம்….