கண்ணாடி முன் முழு அலங்காரத்துடன் அழகியாக அமர்ந்திருந்தவள் அதே கண்ணாடி வழியே அவள் பின், கட்டிலில் அமர்ந்திருந்த தன் அக்கா ஓவியாவைப் பார்த்து
“ அக்கா எப்படி இருக்கேன் ” என்று கண்கள் மின்ன கேட்டவளுக்கு முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்தவளாக
“அழகா இருக்க செல்லம் ” என்றவள் அவளின் தலையில் பூ இல்லாததை அப்போது தான் கவத்தவளாக “ பூ வைக்கலயா செல்லம் ” என்ற கேள்விக்கு, செல்லம் அவளின் நகைகளை அணிந்தபடி
“ அம்மா ஏதாவது வேலையா இருப்பாங்க, நான் போய் எடுத்து வரேன் ” என்று எழப் போனவளை “ வேணா அக்கா, நீ போகாத ” என்று தடுத்தும் அவள் கேட்காமல் எழுந்து வெளியே செல்ல, அந்நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே பூவுடன் நுழைந்த இலக்கியா
இவள் நின்று கொண்டிருப்பதை கவணித்து விட்டு
“எங்கடி போற? உன்ன எங்கயும் அங்க இங்கன்னு அலைய வேணாம்னு சொன்னதானடி ” என்று அதட்டி அவளை மெதுவாக அமர வைக்கவும், சலித்தபடி அமர்ந்த ஓவியா
“ பூ எடுக்கத்தான் ம்மா எழுந்தேன் ”
“அதான் நான் எடுத்து வரேன்னு சொல்லித்தான போன, அப்பறம் என்ன அவசரம் செல்லம் உனக்கு ” என்று செல்லத்தை அவர் திட்டவும், அவளின் முகம் வாடி போவதை பார்த்த ஓவியா
“ நான் என்ன வேணும்னேவா திட்டுறேன்? என் கவலை எனக்கு. உனக்கே மொத புள்ள போய் மூணு வருஷம் கழிச்சி இப்போதான் திரும்ப மாசமா ஆகிருக்க, இந்தப் புள்ள ஆவுது, நல்லபடியா பிறக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா டி? ”
என்றபடி அவள் தலையை வருடவும்
அதற்குச் சிறு புன்னகையை உதிர்த்தபடி ஓவியா “ அதெல்லாம் ஒன்னும் ஆகாது, இந்த வாட்டி, என் பாப்பா என் கிட்ட பத்திரமா வருவாங்க ” என்று இலக்கியாவைப் பார்த்து நன்றாகப் புன்னகைத்துவிட்டு, செல்லம் புறம் திரும்பி
“ நீ ஃபீல் பண்ணாதடி, அம்மாதான ஏதோ ஒரு பயத்துல சொல்லிட்டாங்க, அதுக்கு போய் முகத்தை இப்படி வச்சிப்பியா டி ” என்று அவளைச் சமாதானம் செய்து பூவை வைத்துவிட்டாள் ஓவியா.
தன் இளைய மகளை நன்றாகப் பார்த்து அவளை ரசித்த இலக்கியா, கையை வைத்து நெட்டி முறித்துவிட்டு
“அழகு செல்லம்! டி, மாப்பிள்ளை வீடு போனதும் ரெண்டு பேருக்கும் சுத்திப் போடணும், ஊர் கண்ணே இங்கதான் இருக்கு ” என்று பேசியவர் நினைவு வந்தவராக
என்றதற்கு, இங்கு சரி சரி என்று நன்றாகத் தலையை ஆட்டியவள், அங்கு சபையில் அப்பா கேட்டதும் எதுவும் யோசிக்காமல் உடனே சம்மதமாக மண்டையை உருட்டிவிட்டாள்.
அதில் இலக்கியா கடுப்பாகி அவளைத் தீயாக முறைத்து வைத்தார். பின் மாப்பிள்ளை முறையில் இருந்து இரு பெண்கள் வந்து பூ வைத்து செல்லத்தை உறுதி செய்தனர்.
அந்த சம்பிரதாயம் முடிந்ததும் இலக்கியா செல்லத்தை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல போகச்,
“எங்க பொண்ண கூட்டிட்டு போறீங்க? அதான் உறுதி பண்ணிட்டோம்ல, இப்போ வாது மாப்பிள்ளையும் பெண்ணையும் சேர்ந்து நிக்க வையுங்க, கொஞ்சம் ஜோடியா பார்த்துக்குறோம் ”
என்று மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒருவர் சொல்லவும், முத்துக்குமாரும் தலையை அசைத்து இருக்கச் சொல்ல, இலக்கியா விருப்பமே இன்றி செல்லத்தை மாப்பிள்ளை அருகே ஒரு தனி நாற்காலி எடுத்துப் போட்டு அமர வைத்தார்.
அவருக்கு என்னமோ மாப்பிள்ளையை பிடிக்கவே இல்லை வந்ததில் இருந்து சிரித்த படியே சுற்றி பார்க்கும் அவனை ஏனோ இவருக்கு பிடிக்கவில்லை
ஆனால் இவரால் என்ன செய்ய இயலும் அங்கு முடிவு எடுக்கும் உரிமை இவருக்கு எங்க உள்ளது என்று பெருமூச்சி விட்டவராக மனதில்
“ என்ன இது, பூ தானே வச்சிருக்காங்க, அதுக்கே இப்படி பேசுறாங்க “ என்று எண்ணியபடி சென்றார்.
மாப்பிள்ளை சேகர் உடன் செல்லத்தை அமர வைத்ததும் அனைவரது கண்ணும் அவளையே குறுகுறுவென பார்த்தனர், பின் மாப்பிள்ளை வீட்டாரில் இருந்து ஒரு பெண்
“ எங்க பையன் உசரத்துக்கு சரியாதான் இருக்கு, கலரும் நல்லாதான் இருக்கு, என்ன பொண்ணு கொஞ்சம் வெயிட் அதிகம் போலயே “
என்று அவர் பேசியதில் அங்கிருந்த அனைவரின் முகமும் மாறிப்போக, முத்துக்குமார் “என்ன இது?” என்று மாப்பிள்ளை வீட்டாரை பார்த்தார்.
செல்லம் அவர் சொல்லியதுபோல அதிக எடை உள்ளவள் எல்லாம் இல்லை, அதற்கென்று ஒல்லியாகவும் இன்றி, சரியான அளவில்தான் இருந்தாள்.
ஆனால் அவள் கட்டியிருந்த பட்டு அவளை அப்படிக் காட்டியிருக்க, அதுவும் நன்றாகதான் இருந்தது. இருந்தும் அந்தப் பெண் இப்படி எடையை பற்றி பேசியதும் அது முத்துக்குமாருக்குப் பிடிக்கவில்லை. அவர் எதோ பேச போக, அதற்குள் பையனின் அம்மா
“அடி யாருடி இவ, இப்படியா பேசுறது “ என்று அந்தப் பெண்ணைத் திட்டிவிட்டு,
“ பொண்ணு எத்தனை அழகா, லட்சணமா இருக்கு. இவளுக குறை கண்டுபிடிக்கணும்னா உலக அழகி கிட்டயே கண்டுபிடிப்பாளுக “
என்று அந்தப் பேச்சை அப்படியே மாற்றி வேறு பேச தொடங்கிவிட, இங்கு செல்லத்தின் கை எல்லாம் அதற்குள் வேர்த்துப் போய்விட்டது.
ஒரு வித பதட்டமாக அமர்ந்திருந்தவளைப் பார்த்த ஓவியா, அங்கிருந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டாள்.
உள்ளே சென்றும் ஒருவிதமான பதட்டத்தில் இருந்தவளின் அருகே அமர்ந்த ஓவியா,
“என்ன செல்லம், ஏன் ஒரு மாதிரி இருக்க? அவங்க பேசுனது உனக்கு பிடிக்கலையா டி? “
“அது வந்து க்கா…. நான் ரொம்ப குண்டா வா இருக்கேன் “ என்று தலையைக் குனிந்தபடியே பேசியவளை அதிர்ந்து போய்ப் பார்த்தாள் ஓவியா.
எப்போதும் வெளி தோற்றத்தை பற்றி கவலை படாத அவள் தங்கை வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்ததை கேட்டு திகைத்தவளாக
என்று அவள் தலையை நிமிர்த்தவும், செல்லத்தின் கண்கள் கலங்கியிருந்தன.
அதைப் பார்த்து அவளை அதட்டி, அவள் கண்களை ஓவியா துடைத்துவிட்டபடி, “ நான் வேணா அப்பா கிட்ட பேசவா டி, இந்த மாப்பிள்ளை வேணாம்னு? “
அதை கேட்டு வேகமாகக் கண்களைத் துடைத்தவள், “ இல்ல அக்கா, அந்த ஒருத்தவங்களுக்காக நிறுத்தணுமா? அப்பா எப்படி இருந்தாலும் நல்லா விசாரிச்சுதானே பார்த்திருப்பாங்க “
என்று எப்பவும்போல அவளின் அப்பா மீது இருந்த நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி மறுத்து பேசினாள் செல்லம்.
இவற்றைக் கேட்டபடி உள்ளே வந்த இலக்கியா, “அப்பா ஆட்டுகுட்டின்னு சொல்லாம உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா இல்லையா ன்னு சொல்லு டி? “
என்ற கேள்வியில் சேகரின் உருவத்தைக் கண்முன் கொண்டுவர பார்த்தாள் செல்லம்.
என்ன முயன்றும் சுத்தமாக முகம் நினைவுக்கு வரவில்லை. “ என்ன இது, இப்போதான பார்த்தோம், ஆனா அவர் எப்படி இருப்பாருன்னு நினைவே இல்லையே “
என்று இவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இலக்கியா, “ என்னடி, அங்க உங்க அப்பா கேக்கும்போது மட்டும் ஒடனே மண்டைய ஆட்டிட்டு, இப்போ இப்படி யோசிக்கிற? “ என்றவருக்கு உடனே தலையை அசைத்து
அவர் சென்றதும் பெருமூச்சு இழுத்துவிட்ட செல்லம், அமைதியாக எதோ யோசித்தபடி சோர்ந்து இருந்த ஓவியாவை உலுக்கி,
“ என்ன ஆச்சு அக்கா? என்ன யோசிக்கிற? மாமா வர முடியாம போனத நினைச்சு ஃபீல் பண்றியா? “
என்றதற்கு மறுப்பாக தலையசைத்த ஓவியா, “ அவரு நாளைக்கு ஏதோ ஸ்பெஷல் ஸ்கேனிங்னு கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு டி, அதான் அத பத்தி யோசிச்சிட்டு இருக்கேன் “
“ஸ்பெஷல் ஸ்கேனா? என்ன க்கா…” என்று செல்லம் புரியாமல் கேட்க, “ அது பாப்பா, அசைவ இவுங்களும் பக்கத்துல இருந்து பாக்கலாமா அந்த மாதிரி ஒரு பிரைவேட் ஸ்கேன் சென்டர் டி.
முன்னாடி அந்த பாப்பாக்கும் இங்க பாத்துருக்கேன் “
“ஓ… சரி, நல்ல விஷயம் தான அக்கா, இதுக்கு ஏன் இப்படி யோசிக்கிற?”
“அது அது… வந்து டி, எனக்கு என்னமோ ஒரு மாதிரி பயமா இருக்கு. இப்போ தான் ஒரு ஸ்கேன் பாத்தோம், உடனே என்னென்னு எதுக்கு, அதுனால பாப்பாக்கு ஏதவது ஆகிடுமோன்னு ஏதோ தோணிட்டே இருக்கு டி
முன்னாடி அங்க போய் வந்து ஒரு வாரத்துல தான் அந்த பாப்பா என்ன விட்டு போச்சி டி “
என்று பரிதவித்து செல்லம் முகத்தை பார்த்த தன் அக்காவின் கையை கெட்டியாக பிடித்த செல்லம்
“ இதுக்கா அக்கா இத்தன யோசன? நான் அப்பா கிட்ட பேசி மாமா கிட்ட பேச சொல்றன், இப்போ ஸ்கேன் வேணான்னு, ஓகேவா?” என்றதும் தான் ஓவியா முகமே தெளிவானது.
அதன் பின் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கிளம்பிவிட, அடுத்தடுத்து திருமண வேலைகள் வேகமாகத் தொடங்கின.
ஏனோ இயல்பாக அவனிடம் பேசவே வராமல் போனது; எதோ தெரியாத நபரிடம் பேசுவது போலவே தான் இருந்தது, ஒரு மாதம் அவனிடம் பேசத் தொடங்கியும்.
சிறு வயதில் இருந்து பள்ளி முதல் கல்லூரி வரை பெண்கள் மட்டுமே என்பதால் கூட இப்படித் தோன்றலாம் என்று எண்ணியவள், எப்போது சேகர் போனை வைப்பான் என்று தான் அவனிடம் பேசவே தொடங்குவாள்.
முத்துக்குமரன் இரு பெண்களின் பாதுகாப்பு என்று சொல்லியே அவர்களை வெளி உலகு மட்டுமின்றி ஆண்கள் பற்றியும் அறியாமல் தான் வளர்த்து வந்தார்.
இவர்கள் வாழ்க்கையில் இவர்கள் நன்றாகப் பேசிய ஆண்கள் என்றால் அவர்களின் அப்பாவும், தமையனும் மட்டுமே. உறவு விசேஷத்தில் கூட இவர்களுக்குக் அரணாகக் கூடவே நின்று யாரிடமும் பேச விடமாட்டார்.
கூண்டுக் கிளியாகவே வளர்த்து, கூண்டுக் கிளியாகவே ஒரு இடத்தில் விட்டு வந்த நிலை தான் இருவரின் வாழ்க்கையும்.
பாதுகாப்புடன் வவளர்ப்பது ல்லது தான்; அதற்காக சுயகாலில் நிற்பதைப் பற்றி அறியவிடாமல் இருப்பது தவறு. பெண் என்றால் யாரையும் நம்பி தனியாக வாழ தைரியம் இருக்க வேண்டும்.
எப்போது என்ன வாழ்க்கை அவர்களுக்கு வைத்திருக்கும் என்று தெரியாது; அதை எதிர்கொண்டு வாழும் அளவு தைரியம் ஒவ்வோரு பெண்ணிற்கும் இருக்க வேண்டும்.
ஆனால் முத்துக்குமாரன் அந்தத் தைரியத்தை அவர் பெண்களுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. அவரின் சிறகினிலே யே வைத்து இப்போது திருமணம் என்ற கூண்டில் அடைக்க போகிறார்.
இப்படியே திருமணத்திற்கு உடைகள் எடுக்கும் நாளும் வந்தது. சென்னையிலேயே மிகப் பெரிய பட்டுக் கடைக்கு தான் சென்றிருந்தனர்.
அங்கு செல்லத்தை பார்த்த சேகர் ஒரு சிரிப்புடன் வரவேற்றது மட்டும் இன்றி அடிக்கடி அவளைப் பார்த்து ரசிப்பது என்று இருக்க, அவளுக்கு அந்தப் பார்வை ஏனோ சங்கடத்தைத் தான் தந்தது.
அந்த நிமிடம் பயந்து தான் போனாள்; இவனின் பார்வையையே சகித்துக் கொள்ள இப்படிக் கஷ்டப்படுகிறோமே, திருமணத்திற்குப் பின் எப்படி ஒரே வீட்டில் ஒரே அறையில் இருப்பது என்று பயந்து தான் போனாள்.
அந்தப் பயம் எதுவும் முகத்தில் காட்டாதபடி சிரித்துச் சமாளித்தவள், முகூர்த்தப் புடவையைப் பார்க்கத் தொடங்கினாள்.
ஒரு புறம் இலக்கியா, ஒரு புறம் சேகர் அம்மா என்று மாற்றி மாற்றிப் புடவையை இவள் மீது வைத்து, “இது பாரு… இது அழகா இருக்கா பாரு” என்று வைத்துக் காட்ட, எதிலும் இவளுக்கு மனம் போகவில்லை.
அப்படியே சுற்றி கண்களை அலைய விட்டவளுக்கு அங்கு ரேக்கில் இருந்த அந்தப் பட்டு கண்ணை உறுத்த, “அக்கா அந்தச் சேலை காட்டுங்க” என்று அவள் காட்டிய புடவையை அந்தப் பெண்ணும் எடுத்து விரித்துக் காட்டினாள்.
அடர் ஊதா நிறத்தில் மயில் பச்சை வண்ணம், அதோடு தங்கப் பூக்களால் புடவை முழுக்க இருக்க, மயில் தோகை போல பல வர்ணங்களால் அந்தப் புடவை ஜோலிக்கவே செய்தது; அதைக் கைகளால் வருடியவள்
“இந்தப் புடவை எப்படி இருக்கு ம்மா” என்று ஆசையாக அம்மாவைப் பார்க்க, அவரோ
“முகூர்த்துக்கு இந்த கலர்ல போட மாட்டாங்க ம்மா” என்று சேகர் அம்மாவிடமிருந்து அதற்கு பதில் வரவும், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு இலக்கியாவைப் பார்க்க,
அவரும் “என்னடி நான் பண்ண” என்பது போல அவளைப் பார்த்து வைத்தார், அப்போது அங்கு துணி எடுத்துப் போடும் பெண்,
“இது வரவேற்புக்குப் போட்டா சூப்பரா இருக்கும் ங்க. இப்போதைய ட்ரெண்டிங் டபுள் கலர் சேலை. நான் வேணா சும்மா கட்டிக் காட்டுறேன் பொண்ணுக்கு, நீங்க பாருங்க”
என்று விட்டு அங்கிருந்த கண்ணாடி முன் செல்லத்தை நிற்க வைத்து, அவள் போட்டிருந்த சுடிதார் மேல் அந்தப் புடவையைக் கட்டிக் காட்டினார்.
அவளுக்கென்றே நெய்தது போல அழகாக இருந்தது புடவை. அதைக் கண்ணாடியில் ரசித்துச் செல்லம் பார்ப்பதை, அவள் ரசனைக்கு இணையாக என்னொருவன் அவளை ரசிப்பது அறியாது, தன் வாழ்க்கை தடம் மாறிப் போகும் அந்த நொடிக்குள் நுழைந்தாள் செல்லம்.