“என்ன டாக்டர்  டியூட்டி டைம் முடிஞ்சுதா..? வீட்டுக்கு கிளம்பிட்டிங்க போல..” வழியில் டாக்டர் ரமேஷ் கேட்க

ஆமா டாக்டர், முடிஞ்சது..”  விஷ்ணு நின்று அவரிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டு தலைமை மருத்துவர் அறைக்குள் சென்றான்

வாங்க.. வாங்க விஷ்ணு.. ஹாஸ்பிடல் செட் ஆயிடுச்சா..?” SK ஹாஸ்பிடலின் உரிமையாளரும், சீப் டாக்டருமான  சங்கரன் கேட்டார்

எஸ் டாக்டர்.. கோயிங் குட்..”  விஷ்ணு அவர் கை காட்டிய இருக்கையில் அமர்ந்தான்

“இன்னையோட  உங்க ட்ரெயினிங் பீரியட் முடிஞ்சது, இனி   நீங்க தனியாவே  பேஷண்ட் பார்க்கலாம்.. உங்களுக்கான ரூம் ரெடியாகிடும்..”  சங்கரன் சொல்ல

தேங்க் யூ டாக்டர்..” என்றான் விஷ்ணு

அப்பறம் எப்படி இருந்தது டாக்டர் சூரஜ் ட்ரைனிங்..?”

அமேஸிங் டாக்டர்என்னோட மானசீக குரு போல அவர், அவரோட ஆர்டிக்கலஸ் எல்லாம் விடாம படிப்பேன்.. இன்பேக்ட் அவருக்காக தான் நான் இந்த ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணதே..”

சூப்பர் விஷ்ணு.. அப்புறம் லாஸ்ட் வீக் உங்களை JR ஹாஸ்பிடல்ல பார்த்தேன், கூட இருந்தது உங்க தம்பியா..?”

எஸ் டாக்டர்.. அவனுக்கு தான்  செக் அப்..”

ஓஹ்.. என்ன ஆச்சு அவருக்கு..? காலுக்கு ஏதும்..”

நோ டாக்டர்.. அவனோட ஹார்ட் பிளாக்குக்கு லாஸ்ட் இயர் ஆப்பரேஷன் பண்ணோம், அதுக்கான ரொட்டின் செக் அப்..”

எங்க ஆப்பரேஷன் பண்ணீங்க..?” விஷ்ணு விவரம் சொன்னான்.   

ஓகே.. JR தான் உங்க தம்பிக்கு பார்க்கிறாரா..?”

நோ டாக்டர் பிரதாப் தான் பார்த்தார், அவர் இப்போ லண்டன்ல இருக்கார், சோ அவர் சஜஸ்ட் பண்ணினார்..”

உங்களுக்கு ஓகேன்னா நம்ம திலக் டாக்டர்கிட்டயே பாருங்க விஷ்ணு, நம்ம ஹாஸ்பிட்டல்லன்னா உங்களுக்கும் கம்பார்ட்டபிளா இருக்கும்..” அவர் சொல்ல விஷ்ணு யோசித்தான். திலக்கும் இதய நிபுணர் தான். ஆனாலும்.. 

என்ன ஆச்சு விஷ்ணு..?”

அடுத்த செக் அப்க்கு இன்னும் நாள் இருக்கு டாக்டர்.. பாப்போம்..” முடித்துவிட்டான்

ஓகே.. விஷ்ணு பாருங்கபெஸ்ட் ஆப் லக்.. உங்க சேலரி டீடெயில்ஸ் மெயில் வரும்..”

தேங்க்  யூ டாக்டர்..”  விஷ்ணு அவருக்கு கை கொடுத்து கிளம்பினான்

மதிய நேர வெயில் சுள்ளென்று அடிக்க, ஹெல்மெட் போட்டு கொண்டு பைக்கை கிளப்பினான். வழியில் ஐஸ் கிரீம் கடை தெரிய, சின்னுவிற்காக ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு வீடு சென்றவன், முதலில் அதை  பிரிட்ஜில் வைத்தான்

தம்பி வந்துட்டீங்களா.. சாப்பாடு வைக்கவா..?” ருக்கு கேட்டார்.

“சின்னு சாப்பிட்டானாக்கா..?” கேட்டு சாப்பிட்டு முடித்தவன், தம்பிய பார்த்துவிட்டு ரூம் சென்றான். மாலை போல கீழே வந்தவன், ஐஸ்கிரீம் எடுத்து கொண்டு துருவ் ரூம் சென்றான்

என்னடா அதிசயமா நீயே படிச்சுட்டு இருக்க..?” சின்னு படித்து கொண்டிருந்தவன் அண்ணன் கையில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்க்கவும் புக்கை மூடி வைத்தான்

நானே தான் உன்னை படிக்க விடாம பண்ணிட்டேன் போல..”  கேலியுடன் அவனுக்கு கொடுத்து, தானும் அவனுடன் சாப்பிட்டான்

ண்ணா.. நாளைக்கு லீவ் தானே, படத்துக்கு போலாமா..?” ஐஸ்கிரீம் முடித்து ஈர துணியால் வாய் துடைத்தவன் கேட்க, விஷ்ணுவும் போலாம் என்றுவிட்டான்

மகாவும் வருவா.. அவளுக்கும் டிக்கெட் புக் பண்ணுண்ணா..”

க்கும்.. எங்க போனாலும் அவ வரணுமாடா உனக்கு..?” சலித்து கொண்டே அவளுக்கும் சேர்த்து புக் செய்தவன், மகாவிற்கு இப்படி என்று மெசேஜ் செய்துவிட்டான்

மறுநாள் மதிய உணவு முடித்து இருவரும் மாலில் உள்ள தியேட்டர் செல்ல, மகா நேரே தியேட்டர் வந்தாள். நடந்து வரும் அவளையே விஷ்ணு பார்த்திருந்தான். மகா கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை

மகா வந்திட்டியா..? உனக்கு என்ன வேணும்..?”  சின்னு கேட்டு அண்ணனுக்கு லிஸ்ட் சொன்னவன், மகாவுடன் உள்ளே சென்றுவிட்டான். இவங்களோட வந்தா இதே வேலை.. கையில் ஸ்நேக்ஸ்சுடன் உள்ளே சென்றவன், இருவருக்கும் கொடுத்து அமர்ந்தான்

சின்னு இடையில் இருக்க, மகா, விஷ்ணு மறுபுறம் அமர்ந்திருந்தனர்படம் முடியவும் மூவரும் வெளியே வர, சற்று தூரத்தில் அபிதா நின்றிருந்தாள். விஷ்ணு அவளை புருவம் சுருக்கி பார்த்தவன், எதோ தோன்ற டக்கென திரும்பி மகாவை பார்த்தான்

அவள் வேடிக்கை பார்ப்பது போல முகம் திருப்ப, விஷ்ணு பல்லை படித்தான். “உங்களோட கொஞ்சம் பேசணும்..”  அவர்கள் அருகில் வந்த அபிதா சின்னு பார்த்து தயங்கி சொன்னாள்

அவள் யாரென்று புரிந்து கொண்ட சின்னு திரும்பி மகாவை பார்க்க  அவள் சிரிப்புடன் கண் அடித்தவள்,    “சின்னு.. புக்ஸ் வேணும் கேட்டிருந்த இல்லை.. வா நாம போலாம்..”  அவன் வீல் சேரில் கை வைத்தாள்

நீ இந்த மேடத்தோட புட் கோர்ட்ல  இரு.. நான் அவனை கொண்டு போய் விட்டுட்டு வரேன்..” விஷ்ணு அவள் கையை தட்டிவிட்டு தம்பியுடன் லிப்டிற்கு சென்றான்

ண்ணா.. அது தான் என் அண்ணியா..?” சின்னு முகம் சுருக்கி கேட்டான்

அந்த அரைவேக்காடு அப்படி சொல்லுச்சா..?”

ஆமா.. அவங்க தான் என் அண்ணியாம்.. தினமும் சொல்லி என்னை கடுபடுக்கிறா..”

அவளுக்கு எங்க என்னை அவ தலையில கட்டிடுவாங்களோன்னு கவலை, அதான் யார்கிட்டேயாவது என்னை கோர்த்து விட்டுடலாம் பார்க்கிறா.. நீ கண்டுக்காத.. புக் பாரு, படி, நான் வந்துடுறேன்..”  அவனை ஷாப்பில் விட்டு, இவன் மேலே வந்தான்

மகா ஏதோ மிகவும் சீரியசாக பேசி கொண்டிருந்தவள் இவன் வரவும் வாய் மூடி கொண்டாள். விஷ்ணு வந்தவன் மிகவும் சாவகாசமாக மகா பக்கத்தில் உள்ள சேரில் அமர்ந்தவன், “சொல்லுங்க டாக்டர்..” என்றான் அபிதாவிடம். அவள் முகம் சுருங்கி போயிருந்தது

நீங்க பேசிட்டு இருங்க, நான் போய் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன்..” மகா எழவும், அவள் கை பிடித்தவன்

உட்காரு..”   என்றான் கொஞ்சம் அதட்டலாகவே. மகா அவன் கோவம் புரிந்து அமர, அபிதா கண்களோ பிடித்திருந்த கைகள் மேலே இருந்தது

சொல்லுங்க.. என்ன பேசணும்..”  விஷ்ணு  மீண்டும் அபிதாவிடம் கேட்க

உங்ககிட்ட  முன்னாடி சொன்னது தான்..”   என்றாள்

நானும் அப்போவே உங்ககிட்ட சொல்லிட்டேன், நமக்குள்ள சரி வராதுன்னு..”

அதான் ஏன்..?”

ஏன்னா..? எனக்கு சரிவரும்ன்னு தோணல..”

அதெப்படி என்கிட்ட  பேசி பழகாமலே  சொல்றீங்க..?” 

ஓகே.. இப்போ என்ன உங்ககிட்ட பேசணும்.. சரி சொல்லுங்க, உங்களுக்கு எதனால என்னை பிடிச்சது..?”

எதனாலன்னா..? இது என்ன கேள்வி..?”

ஏன் பதில் தெரியாதா..?”

அது நம்ம MBBS செகண்ட் இயர்ல என்னை டிஸ்டர்ப் பண்ண சீனியர்கிட்ட எனக்காக சண்டை போட்டீங்க இல்லை அதனால..”

ஓஹ்..”

நீங்க மட்டும் தான் எந்த பிரச்சனையிலும் தைரியமா பேசுறீங்க, முன்னாடி நிக்கிறீங்க, நல்லா படிக்கவும் செய்றீங்க, பார்க்கவும் ரொம்ப மேன்லியா இருக்கீங்க..”

ஹாஹா..”  விஷ்ணு சிரித்துவிட்டான்

எதுக்கு சிரிக்கிறீங்க..?” அபிதா புரியாமல் கேட்க

இல்லை மேன்லியா இருக்கேன் சொன்னீங்க  இல்லை..”

இதுல சிரிக்க என்ன இருக்கு, ஏன் நீங்க கண்ணாடி பார்க்கிறதில்லையா..?”

சரி இருங்க  மகாகிட்ட கேட்போம், என்ன மகா, இவங்க சொல்றது உண்மையா..?” அவள் முகம் பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டான்

அவள் முகத்தை சாதாரணமாக வைக்க போராடி கொண்டிருந்தாள். “என்ன மகா பதில் சொல்லு..”  விஷ்ணு மீண்டும் கேட்க

.. ஆமாம்..” என்றாள் கடுப்பை மறைத்து

என்ன இப்படி போனா போகுதுன்னு சொல்ற..? அபிதா இவளுக்கு நான் அப்படி தெரியல போல.. நீங்களே கேளுங்க..”

என்ன மகா..?”  அபிதா அவளிடம் கண் சுருக்கி கேட்டாள்

இல்.. இல்லை சீனியர்..”

என்ன இல்லையா..? பாருங்களேன் மகா நான் மேன்லியா இல்லைன்னு சொல்லிட்டா..” விஷ்ணு பாவமாக முகம் வைத்து சொன்னான். மகா திரும்பி அவனை முறைக்க

வாட் ஈஸ் திஸ் மகா, அவர் மேன்லி இல்லைன்னு சொல்றியா..?”

பாருங்க அபிதா சொந்த மாமா பொண்ணு கண்ணுக்கே நான் மேன்லியா தெரியல, உங்களுக்கு எப்படி என்னை பிடிச்சது..? டூ பேட்..”

ஐயோ நீங்க ஆணழகன் தான் போதுமா..? அங்க பேசுங்க..” மகா விஷ்ணுவிடம் எரிச்சலாக  சொல்ல, அவன் முகத்தில் இன்னும் சிரிப்பு.

“விஷ்ணு.. உங்களுக்கு என்னை  MBBS இருந்து தெரியும், என்னோட பேமிலி தெரியும்நாம ரெண்டு பேரும் டாக்டர்ஸ்என்னை வேண்டாம்னு சொல்ல என்ன இருக்குன்னு எனக்கு தெரியல..”  அபிதா சொல்ல, விஷ்ணு நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.  

எங்க வீட்ல மேரேஜுக்கு பார்க்கிறாங்க, உங்ககிட்ட பேசிட்டு சொல்லலாம்ன்னு..”

என்ன சொல்வீங்க உங்க வீட்ல..?” விஷ்ணு தீர்க்கமாக கேட்டான்

என்ன சொல்வேன், விஷ்ணு MD, SK ஹாஸ்பிடல்ல..”

ம்ஹூம்.. அது மட்டும் நான் இல்லை  அபிதா, இது என்னோட தகுதி மட்டும் தான் இந்த உலகத்துல இப்படி தலை தூக்கி வாழுறதுக்கு.. இதை தவிர விஷ்ணுன்னு ஒருத்தன் இருக்கான்.. அவனை என்னன்னு சொல்வீங்க..?”

எனக்கு புரியல..”

“இது தான் புரியாத புதிர், ஒருத்தரோட படிப்பு, வேலை தகுதி மட்டும் போதுமா கல்யாணத்துக்கு, அவங்க கேரக்டர் முக்கியமில்லையா..?” ஆச்சரியமாக கேட்டான். 

“ஏன் உங்களுக்கு என்ன..?”

“நீங்க முன்னாடி சொன்னீங்க இல்லை உங்களுக்காக நான் சீனியர்கிட்ட சண்டை போட்டேன்னு, அது போதுமா என்னை உங்க லைப் பார்ட்னரா நினைக்க வைக்க..?”

என்னை ப்ரொடெக்ட் பண்றீங்களே அது போதாதா..?”

ம்ஹூம்.. போதாதுங்க, அதுக்கு அப்பறம்ன்னு ஒரு  செயின் ஆப் ரியாக்ஷன் இருக்கு, அன்னைக்கு உங்களுக்காக அந்த சீனியரை அடிச்சது மட்டும் தான் உங்களுக்கு தெரியும், அதுக்கு அப்பறம் என்ன ஆச்சுன்னு என் பேமிலிக்கு மட்டும் தான் தெரியும்.. புரியலையா.. இதோ இவளை கேளுங்க, சொல்லுவா..”  மகா பக்கம் கை காட்டினான்

அபிதா அவளை பார்க்க, மகா இப்போ இது தேவையா என்றாள்.

சொல்லு மகா அவங்களுக்கு தெரியணும் இல்லை..”

அத்தையை வர சொல்லி சஸ்பெண்ட் பண்ணாங்க..” என்றாள்

இதுல என்ன இருக்கு, உங்க சஸ்பென்க்ஷன் பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே..?”

பாருங்க இது தான் சொல்றேன், உங்களால அதை உணர முடியல, நான் சஸ்பெண்ட் ஆகுறது, சண்டை போடுறது, முன்னாடி நிக்கிறது இது எல்லாம்  என்மேல உங்களுக்கு ஒரு ஹீரோ இமேஜ் கொடுக்கும், வாட் மேன்னு பார்க்க தோணும்..”

ஆனா ஆக்சுவல் உண்மை என்னன்னா என்னை  எல்லாம் தூரத்துல இருந்து ரசிக்க மட்டுமே முடியும், பக்கத்துல ருசிக்க மாட்டேன்..” என்றான் பட்டென

அபிதா முழிக்க, “உண்மைங்க, உங்க பேச்சிலே உங்களுக்கு தெரிய வேண்டாமா..? என் மேல ஜஸ்ட் ஒரு ஹீரோ இமேஜ் மட்டும் தான் உங்களுக்கு, அது எப்போ வேணும்னாலும் சரியலாம், உங்களால என்னை ரசிக்க மட்டும் தான் முடியும், கூட சேர்ந்து  வாழ முடியாது..”

என்னால் என்னென்ன கஷ்டம்ன்னு என் குடும்பத்துக்கு மட்டும் தான் தெரியும், அவங்களுக்கு என்னோட எந்த செயலும் பிடிக்காது, அதனால எனக்கு என்னென்ன பிரச்சனை வரும்ன்னு மட்டும் தான் யோசிப்பாங்க..” 

அப்போ நான் உங்களுக்காக கவலைப்பட மாட்டேன் சொல்றீங்களா..? எனக்கும் உங்க மேல அக்கறை இருக்கு..” அபிதா விடாப்பிடியாக சொன்னாள்.

ஓகே.. சிம்பிள் இப்போவே பார்த்துடலாம்..”  என்றவன், என்ன செய்கிறான் என்று புரியும் முன்னே பின் டேபிளில் இருந்தவன் தலையை பிடித்து டேபிளில் அடித்துவிட்டான்

அவனுடன் இருந்த நண்பர்கள் ஏய் என்று விஷ்ணு மேல் பாயஅடி கொடுத்து அடி வாங்கி  கொண்டான். அந்த இடமே கலவரம் போலானது. மால் ஆட்கள் வேகமாக வந்து தடுக்கவிஷ்ணு நெற்றியில்  ரத்த கீறலுடன் நெஞ்சு ஏறி இறங்க நின்றிருந்தான்

மகா என்ன செய்வார்களோ என்று  பயத்துடன் அவன் பக்கத்தில்  நின்றிருந்தாள் என்றால் அபிதா அரண்டு போய் தூரம் நின்றிருந்தாள்

எதுக்கு அந்த பையனை அடிச்சேங்க..”   மால் ஆபிசர் வந்து விசாரிக்க, விஷ்ணு வாயை திறந்தான் இல்லை

போலீசுக்கு சொல்லியாச்சு, வருவாங்க..”  சத்தமாக ஒரு குரல். மகா உடனே போன் எடுத்து சக்ரவர்த்தி, நரசிம்மனுக்கு அழைக்க, விஷ்ணு கண்களில் சிரிப்புடன் அபிதாவை பார்த்தான்

செக்கியூரிட்டி இவர்கள் எங்கும் போகாமல் இருக்க, அவர்களை தனியாக உட்கார வைக்க, எல்லோரும் ஒரு மாதிரி பார்த்து சென்றனர்போலீஸ் வந்து விஷ்ணுவை விசாரிக்க, அவன் கீழே விழுந்தவன் மொபைல் எடுத்து போலீசிடம் நீட்டினான்

அவர் வாங்கி பார்த்தவர், விஷ்ணுவை வார்ன் செய்துவிட்டு அவர்களை கூட்டி சென்றனர். விஷ்ணு அபிதாவின்  அருகில் வர, அவளின் முகம் ஒரு மாதிரி ஆனது. தலை கலைந்து, உடை கசங்கி, அவளுக்கு இந்த விஷ்ணு எப்படியோ இருந்தான்

இப்போ புரியுதா நான் என்ன சொல்றேன்னு.. என்னை எல்லாம் இப்படி தூரத்தில் இருந்து பார்க்க தான் முடியும், கூட வர முடியாது, உங்களுக்கு எல்லாம் வைட் காலர் ஆளு தான் சரியா வருவாங்க, நான் எல்லாம் எப்போ எப்படி இருப்பேன்னு எனக்கே தெரியாது.. புரியும்ன்னு நினைக்கிறேன்..”

பெஸ்ட் விஷஸ் பார் யுவர் மேரேஜ் லைப்..” வாழ்த்தியவன்,   மகா கை பிடித்து  சின்னு இருக்கும் இடத்திற்கு சென்றான்