அடங்காத நாடோடி காற்றல்லவோ 3 1 15933 அடங்காத நாடோடி காற்றல்லவோ 3 “வந்தாச்சா.. இன்னிக்கு என்ன பண்ணான்..?” வந்து நின்ற விஷ்ணுவை பார்த்து டீன் சலிப்புடன் பிரசாத்தை பார்த்தார். “நான் கிளாஸ் எடுக்கும் போது மரியாதை இல்லாம பேசுறார், வெளியே போறார்.. இது என்ன கைன்ட் ஆப் ஆட்டியூட்..?” பிரசாத் விஷ்ணு மேல் வன்மத்துடன் சொல்ல, “என்ன விஷ்ணு இது..?” டீன் எரிச்சலாக கேட்டார். “அவர் தான் இன்சேன் சைலம் இருக்கிறவங்க கிட்ட இருந்து தள்ளி இருக்க சொன்னார், சோ ஐ வாக்ட் அவுட்..” மிகவும் அலட்சியமாக தோளை குலுக்க, அங்கிருந்த யாருமே அவனின் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. \ ஏன் பிரசாத்துமே தன் தவறை மறைத்து பேசி கொண்டிருக்க, விஷ்ணு நேரேவே பேசிவிட்டான். “வாட்.. விஷ்ணு என்ன பேசுற நீ..?” டீன் கோபத்துடன் அதட்ட, “டாக்டர் அவர் எனக்கு கொடுக்க நினைச்சதை நான் திருப்பு கொடுத்தேன் தட்ஸ் இட்..” உதட்டை பிதுக்கினான். “விஷ்ணு அகைன் அண்ட் அகைன் நீ இதையே தான் செய்ற மேன்.. உனக்கு என்ன தான் பிரச்சனை..? உன்னோட எனக்கு முடியலடா, உன் பஞ்சாயத்துக்கே நான் தினமும் நேரம் ஒதுக்குனும் போல..” டீன் பொரிய ஆரம்பித்துவிட்டார். இவன் கை கட்டி, கால் விரித்து நின்றிருந்தவன் அவர் பேசி முடிக்கவும், “ஐ திங் யூ நீட் வாட்டர் டாக்டர்..” என்றானே பார்க்கலாம், அவர் அந்த பாட்டிலை எடுத்து கீழே எறிந்தார். “ஏதோ நீ டாப்பர் ஸ்டூடன்ட்ன்னு பொறுத்த போனால் யூ கிராஸிங் யுவர் லிமிட்ஸ்.. இனி உன்கிட்ட பேசி பிரயோஜனமில்லை, மாலா.. இவனோட அம்மாவை வர சொல்லு..” என்று கத்த, இவன் சாதாரணமாக, “அம்மா வேண்டாம், ஷீ இஸ் இன் சம் எனர்ஜன்சி கேஸ், எங்க அப்பா லீவ்ல வீட்டுக்கு தான் வந்துருக்கார், அவரை வர சொல்லுங்க..” என்று வெளியே சென்றுவிட, டீன் அவர் தலையை தடவ ஆரம்பித்துவிட்டார். “என்ன ஆச்சு..?” மகா, சுப்பிரமணி, இஷான் வாசலிலே நின்றிருந்தவர்கள் இவன் வெளியே வரவும் பதட்டத்துடன் கேட்டனர். “என்ன ஆகும்..? ACPயை வர சொல்லிருக்காங்க..” என்று நிற்காமல் நடக்க, மூவரும் அவன் பின்னால் ஓடி தான் சென்றனர். “சரிடா இவ்வளவு வேகமா இப்போ எங்க போற..? திரும்ப ஏதும் பிரச்சனையை கூட்டிடாத..? அவன் பின்னால் செல்ல, “இங்க தான், நீங்களும் வரீங்களா..” ரெஸ்ட் ரூம் வாசலில் நின்று மூவரையும் நக்கலாக கேட்க, பல்லை கடித்து முறைத்து தள்ளி வந்தனர். தண்ணீரால் முகம் அடித்து வந்தவன், மகா கையில் இருந்த கர்சீப் பிடுங்கி முகம் துடைத்தான். “கேட்டா நானே கொடுத்திருப்பேன்..” மகா கடுப்பாக சொன்னாள். அவனோ கர்சீப்பை அவள் கையில் வைத்தவன், “நீங்க கிளாஸ்க்கு போகல, இது தான் சேன்ஸ்ன்னு ஓபி அடிச்சிட்டீங்களா..” மூவரையும் பார்த்து கேலியாக கேட்டான். மகாவிற்கு அவன் தலையில் கொட்ட கைகள் துறுதுறுத்தது. “இஷான்.. உன்னை டாக்டர் ஷைலஜா வர சொன்னாங்க..” என்று அவன் வகுப்பு மாணவன் வர, அவன் கிளம்பிவிட, சுப்பிரமணி, மகா மட்டும் விஷ்ணுவுடன் கேன்டீன் சென்றனர். அவன் மொபைல் அடிக்க, பார்த்தவன் மகாவிடம் கொடுத்துவிட்டான். யார் என்று பார்த்தால் துர்கா. “சொல்லுங்கத்தை.. ஒன்னும் பிரச்சனையில்லை அத்தை, மாமா வந்திட்டு இருக்காரா.. ஓகேத்தை..” அவள் பேசி வைக்க, விஷ்ணு கையில் உணவுடன் வந்தான். “சாப்பிடுங்க..” சுப்ரமணி, மகா முன் வைத்தவன், அவனுக்கு ஜுஸ் வாங்கி வந்தான். இருவருக்கும் பசி என்பதால் அமைதியாகவே சாப்பிட்டு முடிக்க, சக்ரவர்த்தி எங்கே என்று கேட்டு வந்துவிட்டார். “மகா.. எப்படிடா இருக்க..” சக்ரவர்த்தி அவளிடம் நலம் விசாரிக்க, விஷ்ணு மொபைலில் மூழ்கியிருந்தான். சுப்ரமணி சென்று அவருக்கு ஜுஸ் வாங்கி வந்து கொடுக்க, சக்கரவர்த்தி மகனை பார்த்தார் ஏதாவது சொல்வானா என்று. ம்ஹூம்.. திரும்பி மகா, சுப்ரமணியை பார்க்க, சுப்ரமணி எல்லாம் சொல்லி முடித்தான். “ஓகே..” என்று கேட்டு கொண்டவர், மகனுடன் டீன் ரூம் சென்றார். இவரை பார்த்தவுடன் டீன் கொஞ்சம் உதட்டு வளைப்பான சிரிப்புடன் கூப்பிட்டு அமர வைத்தார். பார்த்த அப்பா, மகன் இருவருக்கும் உள்ளுக்குள் வெடித்தது நிச்சயம். “அப்பறம் சொல்லுங்க ACP இப்போ எந்த ஊர்..? எத்தனையாவது டிரான்ஸ்பர்..?” டீன் கேட்க, சக்ரவர்த்தி நன்றாக சாய்ந்து அமர்ந்தவர், “ஓஹ்.. என்னோட இன்டர்வியூ வேணுமா உங்களுக்கு, சாரி.. இப்போ டைம் இல்லை..” என்றார் கால் மேல் கால் போட்டு நக்கலாக. டீன் கடுப்பானாலும், “உங்க மகன் மேல் எடுக்க போற டிசிப்பிலினரி ஆக்சன் பத்தி பேசணுமே..” என்றவர், தொடர்ந்து, “ம்ம்.. ACP மகன் மேலே ஒழுக்க கேட்டுக்கான ஆக்ஷன் கேட்கவே நல்லா இருக்கு இல்லை..” என்றார் எகத்தாளமாக. விஷ்ணு பேச வந்தவன் சக்கரவர்த்தி முன்னால் வரவும் விட்டுவிட்டான். “டிசிப்பிலினரி ஆக்ஷ்ன்.. எதுக்கு..?” தந்தை மிகவும் நிதானமாக கேட்டார். “ஒண்ணா.. ரெண்டா சார், அது இருக்கு நிறைய.. படிப்புல எந்தளவு கோல்டு மெடல் வாங்குறாரோ அதை விட அதிகம் சஸ்பென்க்ஷன் வாங்குறார்..” என்றார் டீன் கேலியாக. “அது தான் எனக்கும் புரியல டாக்டர், ஒரு கோல்டு மெடல் வாங்குற ஸ்டூடன்ட் சஸ்பென்ஸன் எப்படி வாங்க முடியும்..?” சக்ரவர்த்தி புரியாமல் கேட்டார். “எப்படின்னா ஹாஸ்பிட்டல் விஷயத்துல தலையிடுறது, ஸ்டாப்கிட்ட மரியாதை இல்லாமல் நடந்துகிறது..” “கொஞ்சம் இருங்க சார்.. ஹாஸ்பிடல் விஷயத்துல எனக்கு புரியல..” சக்கரவர்த்தி நிதானமாக கேட்டார். “நாங்க எந்த பேஷண்டுக்கு எந்த ஆப்பரேஷன் பண்ணனும்ன்னு உங்க மகன் சொல்லுவாரா எங்களுக்கு..?” “இது என்ன சார் அவன் ஏன் சொல்ல கூடாது, அவனும் உங்களை மாதிரி டாக்டர் தானே..?” “என்ன பேசுறீங்க நீங்க..? இவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் உள்ள எங்களுக்கு தெரியாதா யாருக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்ன்னு..” “தெரிஞ்சிருந்தா ஏன் சார் ஒரு ஸ்டூடன்ட் வந்து சொல்ல போறான்..” “சக்ரவர்த்தி நீங்க உங்க மகனுக்கு சப்போர்ட் பண்றதுக்காக பேசுறீங்க..” “நோ நோ டாக்டர்.. உங்ககிட்ட ஆப்பரேஷன் செஞ்ச பேஷண்ட் இப்போ என் வைப் ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க.. மறந்துட வேண்டாம்..” “ஞாபகம் வச்சிருந்தாலும் நோ யூஸ் சார்.. ஆப்பரேஷன் பண்றதுக்கான அவங்களோட சைன் இருக்கு, ரிப்போர்ட்டும் எங்ககிட்ட தான் இருக்கு..” “ரிப்போர்ட்.. எது இந்த ரிப்போர்ட்டா..” விஷ்ணு அவன் முதுகில் சொருகியிருந்த பைல் எடுத்து நீட்டினான். “இது உன்கிட்ட எப்படி வந்துச்சு.. இந்த வேலை வேற செய்றியா நீ.. இதுக்கே உன்னை டிஸ்மிஸ் பண்றேன் இரு..” டீன் கொதித்தார். “ஹாஹா.. என் மகனை நீங்க டிஸ்மிஸ் செய்வீங்களா..? எங்க செய்ங்க பாப்போம்..” சக்ரவர்த்தி மீண்டும் நன்றாக சாய்ந்து அமர்ந்தவர் பார்வை டீன் மேல் மிகவும் தீவிரமாக படிந்தது. “சார் நீங்க ஒரு ACP, இப்படி உங்க மகனுக்கு சப்போர்ட் பண்றது சரியில்லை, நான் இதை மீடியால சொல்வேன்..” அதுவரை அமைதியாக இருந்த நீரஜா பேச, சக்கரவர்த்தி திரும்பி அவரை பார்த்தவர், “இந்த பிரச்சனைக்கு நீங்க தான் காரணம் ரைட்..” மிகவும் கூர்மையாக கேட்டார். “உங்க மகனோட மிஞ்சின தனம் தான் காரணம்..” அவர் விஷ்ணு மேல் குறி வைத்தார். “டாக்டர்.. என் மகன் எப்படின்னு எனக்கு தெரியும், நீங்க எனக்கு சொல்ல வேண்டாம், முதல்ல நீங்க உங்களை காப்பாத்திக்க வழியை பாருங்க..” “என்னை என்ன மிரட்டுறீங்களா..?” “ச்சே.. உண்மையை சொல்றேன், நீங்க ஆப்ரேஷனை பண்ண அந்த பேஷண்ட் இப்போ ரொம்ப கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்காங்க, அவங்களுக்கு ஏதாவது ஆனா.. அப்பறம்.. நான் சொல்ல வேண்டியதில்லை..” “அதெப்படி என் பொறுப்பாகும், அவங்க இப்போ உங்க ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க..” உள்ளுக்குள் கிலி பிடித்தாலும் வெளியே தைரியமாக பேசினார் நீரஜா. “ஹாஹா.. இங்கிருந்து போயிட்டா நீங்க பண்ண ஆப்பரேஷன் இல்லன்னு ஆகிடுமா..? டோன்ட் பி சில்லி டாக்டர்.. உண்மையை சொல்லணும்ன்னா என் கையில எல்லா எவிடென்ஸ் இருக்கு, நான் உங்கிட்ட இப்படி பேசிட்டு இருக்க அவசியமே இல்லை..” “மேடம் வேற இந்த வயசுல யூட்ரஸ் எதுக்குன்னு வேற பேசியிருக்கீங்க, இதுக்கே உங்களை உள்ள தள்ளி இந்த கோட்டை கழட்டனும்..” போலீஸாக அரட்ட, நீரஜா கொஞ்சம் நடுங்கி தான் போனார். “என்ன சக்ரவர்த்தி பழசை மறந்திட்டீங்க போல..” டீன் திமிராக கேட்டார். “போலீஸை எப்போவும் சீண்ட கூடாது டாக்டர், என்னிக்கு இருந்தாலும் கட்டம் கட்டாம விட மாட்டோம்.. உங்க மகன் கூட எதோ ஒரு பொண்ணை மிரட்டி ஸ்டேஷன்ல இருக்கிறதா கேள்விப்பட்டேன்.. என் ஜுனியர் கண்ட்ரோல்ல தான் இருக்கான், இப்போ ஹாயா பிரியாணி சாப்பிட்டிட்டு இருக்கான், ஆனா ஒரு போன் பண்ணா என்னன்னு தோணுது..” சக்ரவர்த்தி பார்வையில் டீன்க்கு வேர்க்கத்தான் செய்தது. “இட்ஸ் நாட் பேர் சக்ரவர்த்தி..” “அதை நீங்க சொல்ல கூடாது, இன்னொரு முறை இப்படி என் மகனை கட்டம் கட்றதா கேள்விப்பட்டேன் அவ்வளவுதான், என்ன என்னை பழைய சக்ரவர்த்தி நினச்சீங்களா.. வரேன் இருங்க உங்களுக்காகவே இங்க வந்து உட்காருறேன் இருங்க..” விரல் நீட்டி எச்சரித்தார். “சக்ரவர்த்தி விஷ்ணு பண்றதுமே சரியில்லை..” “இனி நான் சொல்லி வைக்கிறேன், நம்மை சுத்தி கூவம் ஓடினா நாமளும் அதுல குத்திக்கணும்ன்னு அவசியம் இல்லைன்னு சொல்லி வைக்கிறேன்.” முகத்துக்கு நேரே சொன்னவர், எழுந்து மகனுடன் நடந்தபடி, “என் மகனுக்கே கட்டம் கட்டுற ஆளுங்களை பாரு..” சத்தமாக சொல்லி வெளியே வந்தார். “மாமா என்ன ஆச்சு..?” மகா அவர் முகத்தை பார்த்து கேட்டாள். “ஒன்னுமில்லைடா, ஒரு ரைட் விட்டு வந்திருக்கேன்.. இனி விஷ்ணுவை சீண்ட மாட்டாங்க..” “விஷ்ணு நீயும் படிக்கிற வழிய மட்டும் பாருடா, நம்மால எல்லாம் இவங்களை மாத்த முடியாது.. வேஸ்ட் ஆப் டைம், இந்த நேரத்தில எதாவது உபயோகமா செய்யலாம்..” மகனுக்கு சொல்லி கிளம்பிவிட்டார். விஷ்ணுவிற்கும் அதை புரியாமல் இல்லையே. முடிந்தவரை எதையும் பார்க்க கூடாது, கேள்வி கேட்க கூடாது, கண்டு கொள்ள கூடாது.. தனக்கு தானே கடிவாளம் சுற்றி கொள்ள ஆரம்பித்தான். அதனாலே அந்த வருடம் கொஞ்சம் அமைதியாகவே சென்றது. சில சில உரசல்கள் இருந்தாலும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. இப்படியே அந்த வருடம் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்பித்தது. சின்னு ப்ளஸ் டூ முடித்து, கரஸ் தான் படிப்பேன் என்று அடம் பிடித்து டிகிரி படித்து கொண்டிருக்க, நாட்கள் இயல்பாக சென்றது.