அப்பா நான் பேசினதை கேட்டுட்டார்..” ஈஷ்வர் சொல்ல, நரசிம்மனுக்கு வருத்தம் வந்துவிட்டது. அவரும் மகளிடம் முன்போல இருக்க தான் நினைக்கிறார் ஆனால் என்னமோ எங்கேயோ சொதப்பிவிடுவார் இப்போது போல, அவருக்கு மகள் இது போல எல்லாம் தனியாக செல்வாள் என்று தெரிந்தும் கேட்டுவிட்டார்.

ஏன் மகா உனக்கு நாங்க எதுவும் செய்ய கூடாதா..? உன் கோவம் எனக்கு புரியுது, இதுவரை இல்லை இப்போ என்னன்னு..? ஆனா அப்படி உன்னை கவனிக்காம நாங்க இருந்ததில்லைம்மா..”

ப்பா.. ப்ளீஸ், ஏன் இப்படி..? நீங்க என்னை கவனிக்காம  விட்டுடீங்கன்னு நான் எப்போ சொன்னேன்..? நீங்க உங்க பிரச்சனையில எங்களை கவனிக்கல, கேர் பண்ணலை தான் கோவம், மத்தபடி இப்படி சொல்ல நான் சின்ன பிள்ளை கிடையாது.. அண்ட் என்னை நான் பார்த்துகிற அளவு என்னை வளர்த்ததும் நீங்க தான்.. என்னால தனியா போக முடியும்.. விடுங்க..”  முடித்துவிட்டாள்

தங்கையின் பேச்சில், விஷ்ணுவிற்கு மகா சரியா..?  மகாவிற்கு விஷ்ணு சரியா..? அந்த நொடி ஈஷ்வர் குழம்பி தான் போனான்

சரிம்மா..”  நரசிம்மன் முகம் வாடி சொல்ல, அவர் கை பிடித்து கொண்ட மகள்

ப்பா.. எனக்கு தெரியும் உங்களுக்கு எங்கமேல நிறைய பாசம், அக்கறை உண்டுன்னு, என்ன உங்க ஈஷ்வர் மேல கொஞ்சம் அதிகம், அவ்வளவுதான், அதுக்காக நான் கோவிக்க எல்லாம் இல்லை, குறையா நினைக்கிற அளவு என்னை நீங்க வளர்க்கவும் இல்லை..”

என்னோட அப்போ கோவம் அது போயே போச்சு, இப்போ நான் ஆல்ரைட், என்னை நினைச்சு நீங்க கஷ்டப்பட வேண்டாம்..”  தோளில் சாய்ந்து  கொண்டாள் மகள். அதில் நரசிம்மனுக்கு அவ்வளவு நெகிழ்ச்சி. மகள் தலையை தடவினார்

ஈஷ்வரும் டிக்கெட் பார்க்க, மகா விருப்பப்படி அன்று முன் மாலை பொழுதிலே  டிக்கெட் கிடைக்க, மகா உடனே கிளம்ப ஆரம்பித்தாள். சக்ரவர்த்தி போனில் பேச, துர்கா, கங்கா, பல்லவி, அனு என்று மொத்த குடும்பமும் வழியனுப்ப, பிளைட் ஏறினாள்

விஷ்ணுவிற்கு தெரிய கூடாது என்பதால் யாரும் அவனிடம் சொல்லவில்லை. மகா தூங்க போறேன் என்று விஷ்ணுவிடம் பேசிவிட்டு வைத்தாள். அவனும் இனி அவளாக கூப்பிடும் வரை அழைக்க மாட்டான்

திருவனந்தபுரம் சென்று இறங்க, கார் தயாராக இருந்தது. நேரே சின்னு இருக்கும் சென்டர் சென்றாள். இரவு ஆகிவிட்டது. காரை விட்டு இறங்கி விஷ்ணு இருக்கும் குடிலுக்கு சென்றபடிவிஷ்ணுவிற்கு அழைக்க, “ஹாஸ்பிடல் போயிட்டியா..?” என்றான் எடுத்ததும்

சாப்பிட என்ன இருக்கு..?” கேட்டாள் இவள்

சாப்பிடவா..?” விஷ்ணு ஒரு நொடி குழம்பியவன், புரிந்து வேகமாக கதவை திறக்க, வாசலில்  அவனின்  மகாலக்ஷ்மி. ஜீன்ஸ் போட்ட அவனின் மகாலக்ஷ்மிகை கட்டி அப்படியே கதவில்  சாய்ந்து நின்றான்

மகாவிற்கும் நீண்ட நாள் சென்று கணவனை பார்க்க, முகத்தில் ஒரு பரவசம், மகிழ்ச்சி. விஷ்ணுவின் பார்வையிலே அவன் இவளை தேடிய அளவு தெரிய, ஷோல்டர் பேக்கை பிடித்தபடி,  “உள்ளே வரதா இல்லை கிளம்பிடவா..?” என்றாள் சிரிப்பாக

சிரிக்காதடி..” விஷ்ணு அவனின் அடிக்குரலில் சொல்ல

ஆரம்பிச்சுட்டிங்களா..? தள்ளி போங்க..” மகா அவனை இடித்தபடி உள்ளே வந்தவள், “சின்னு எங்க..?”  அவனை தேடினாள்

ரூம்ல.. வா..” என்று தம்பியிடம் கூட்டி சென்றான். அவன் ஏதோ படித்து கொண்டிருந்தவன், “சர்ப்ரைஸ்..”  என்று கதவை திறந்த மகாவை பார்த்ததும்

ஹேய்  மகா..”  என்று கை நீட்டி ஆர்பரித்தான்

பாருங்க இப்படி வெல்கம் பண்ணனும்..?” மகா கணவனை பார்த்து நொடித்தவள், சின்னுவின் கைகளை பிடித்து கொண்டாள்

வரேன்னு சொல்லவே இல்லை..” சின்னு மகிழ்ச்சியுடன் கேட்க

சொன்னா எப்படிடா சர்ப்ரைஸ் கொடுக்க மக்கு மச்சினரே..” மகா அவனை கலாய்க்க

மகா வந்தவுடனே ஆரம்பிச்சுட்டியா..?” காண்டாகி போனான் சின்னு

இதெல்லாம் நமக்கு என்ன புதுசா..? அப்பறம் என்ன ஒரே பளபளப்பா இருக்க..?” அவனை ஆராய்ந்தபடி கேட்டாள்

எல்லாம் இங்க கொடுக்கிற ட்ரீட்மெண்ட் தான் மகா..”

உனக்கு பிடிச்சிருக்கா..? ஏதாவது கஷ்டமா இருக்கா..?”

போனிலே சொல்லிட்டேன் அப்படி எல்லாம் ஒன்னுமில்லைன்னு..”

ஏன் நேர்ல சொன்னா குறைஞ்சு போயிடுவியா..?” இருவரும் எப்போதும் போல பேசி கொண்டிருக்க

ரிப்ரெஷ் பண்ணிட்டு வா.. சாப்பிடுவ..” என்று வந்தான் விஷ்ணு

சூப்பர், நல்ல பசி..” மகா வேகமாக சென்று குளித்து வர, சின்னு ரூமிலே பேசியபடி சாப்பிட்டாள். அடுத்து மூவரும் பால் குடித்து முடிக்க, “போதும் பேசினது, சின்னு நல்லா தூங்கணும், காலையில பேசலாம்..” விஷ்ணு சொல்ல, சின்னு குட் நைட்டுடன் தூங்கி போனான்

நாம எங்க தூங்க..?” மகா ஹாலுக்கு வரவும் கேட்க

தூங்க தான் இங்க வந்தியா..?” என்றான் கணவன்.

“அப்போ நாம தூங்கவே போறதில்லயா..? டையர்ட் ஆகிடுவோமே..”   மகா குறும்பாக கண் அடித்தாள்

உன்னை..” விஷ்ணு பொறுத்தது போதும் என்று அவளை பிடித்து கொண்டான். அவன் அணைப்பு அவ்வளவு இறுக்கமாக இருக்க, மகாவும் கணவனை கட்டி கொண்டாள். அணைப்பிலே சில நிமிடங்கள். அவள் அவனின் நெஞ்சில் வாசம் பிடிக்க, அவனோ அவளின் கழுத்தில் வாசம் பிடித்தான்

முடியலடி சிங்காரி..” விஷ்ணு குரல் கரகரப்புடன் சொன்னவன், அவள் முகம் நிமிர்ந்து இன்ச் விடாமல் முத்தம் வைத்தான்.

“உன்னை தேட வச்சுட்ட இல்லை..” அவள் கன்னம் பிடித்து கேட்டான்.

“நானும் தான் உங்களை தேடினேன்..?” மகா சொல்ல

அப்படியா.. ?” என்றான் அவன்.  

நீங்க சொன்னதை நான் நம்பினேன் தானே..”

பின்ன இங்க வரவே அவ்வளவு பிகு பண்ண..”

எனக்கு லீவ் கிடைக்கணும் இல்லை..”

ம்ம்..” திரும்பவும் அவளை அணைத்து கொண்டான்

எனக்கு கால் வலிக்குது..” என்றாள் மகா

என்ன..? கொஞ்சமாவது ரொமேன்டிகா பீல் பண்றியாடி..? ரொமேன்ஸ் எங்கன்னு கேட்க மட்டும் தெரியுது இல்லை..” அவள் தலையில் லேசாக கொட்டினான்

இதுல என்ன ரொமேன்டிக் இருக்கு..? எவ்வளவு நேரம் தான் நிக்கிறது..?”

ஏண்டி சும்மாவா நிக்கிற..? என்னை கட்டிபிடிச்சுட்டு தானே நிக்கிற..?”

அதான் ஏன் நின்னுட்டே கட்டி பிடிக்கணும்..?”  மகா கண் அடிக்க, ஹாஹா.. வா.. கை பிடித்து பின்னாலிருந்த ரூமுக்கு கூட்டி சென்றான்

கால் வலிக்குதுன்னு சொல்லியும் நடக்க வச்சு கூட்டி போறது பாரு பாய்லர்..” மகா வேண்டும் என்றே சத்தமாக முணுமுணுத்து வர, விஷ்ணு சிரிப்புடன் ரூமிற்கு கூட்டி சென்றான்

மகா அசதியில் பெட்டில் விழுக, விஷ்ணு இரவு உடைக்கு மாறினான்.  “நல்லா இருக்குங்க சில்லுனு..” மகா  சொல்ல

இது தான் எனக்கு பிரச்சனை..?” என்றான் விஷ்ணு

இதுல என்ன பிரச்சனை..?” மகா படுத்தபடி கேட்க

குளிருக்கு என் பொண்டாடி பக்கத்தில இல்லையே..?”

அப்போ பாலைவனம் போயிருந்தா என்னை தேடியிருக்க மாட்டீங்க..” மகா நொடிப்பாக கேட்டாள்

இப்படி எல்லாம் கேட்க உனக்கு தாண்டி தோணும்..?” விஷ்ணு சொன்னபடி கதவை மூடி பெட்டிற்கு வர, மகா காதோரம் சூடானது.

“லைட் இருக்கட்டும்..” என்றவன்  என்றவன், பெட்டிற்கு வர, மகா அவனுக்கு இடம் விட்டு தள்ளி படுத்தாள். கணவனோ அவள் மேலே படுக்க, மகா அவனை அணைத்து கொண்டாள்

ரொம்ப வெய்ட்டா இருக்கும் போது சொல்லு..” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான். மகா அவன் முதுகு, தலை முடி வருட, அப்படியே சில நொடிகள்

பின் தானே விலகி படுத்தவன், மனைவியை இழுத்து தன் மேல் போட்டு கொண்டு, “என்ன திடீர்ன்னு..?” கேட்டான்.

இங்க ஒரு பாய்லர் கொதிச்சுட்டே இருந்துச்சு, எங்க வெடிச்சிடுமோன்னு வந்தேன்..”  என்றாள் கிண்டலாக

கண்டிப்பா வெடிச்சிருப்பேன் தாண்டி..”   உண்மையாக உணர்ந்து சொன்னவன், அவளை இன்னும் வாகாக அணைத்து படுத்தான்

“சின்னுக்கு ஓகேவா..?” மகா கேட்க

ம்ம்.. சரியாகிடுவான்னு நம்பிக்கை இருக்கு பாப்போம்..” என்ற விஷ்ணு  அமைதியாகவே இருக்க, மகா நிமிர்ந்து கணவனை கேள்வியாக பார்த்தவள்,  “தூக்கம் வருதா..?” கேட்டாள். 

“ம்ம்..” விஷ்ணு ஆமாம் என்று சொல்ல, மகாவிற்கு உண்மையிலே ஆச்சரியம் தான். உடன்  சிரிப்பும். 

“எதுக்குடி சிரிக்கிற..?” விஷ்ணு அவள் கன்னம் பிடித்து கேட்டான். அவள் சிரிப்பாக தலையாட்ட, அவள் கன்னம் வருடியவன், 

“எனக்கு உன்கூட இருந்தா போதும்டி, என்னவோ நீ என்கூட இல்லாம நான் என்னையே மிஸ் பண்ணேன்..” என்றான் ஆத்மார்த்தமாக

மகா கண் விரித்து பார்க்க, “உண்மைடி.. நமக்குள்ள இருக்கிற இந்த பாண்ட் எப்படிஎன்னன்னு எனக்கு தெரியல, எங்கேயும் நாம ஒரே மாதிரி இருந்து நான் உணர்ந்ததே இல்லை, அவ்வளவு கருத்து வேறுபாடு உண்டு..”

ஆனாலும் நீ இல்லாம எனக்கு இருக்க முடியல.. ம்ம்.. இந்த மகான்ற சிங்காரிக்கு நான் அடிமை தான் ஆயிட்டேன் போல..” விஷ்ணு உணர்ந்து சொல்ல, மகா எதுவும் பேசாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். விஷ்ணுவும் அவளிடம்  எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை.

அப்படியே அணைத்து படுத்திருக்க, “குளிருதா..? பிளாங்கெட் எடுக்கிறேன் இரு..”  மகா அவனிடம் மேலும் ஒன்றவும் கேட்டான்வேண்டாம்  என்றுவிட்டவள், எழுந்து கணவனை பார்த்தாள்

என்னடி..”  விஷ்ணு கேட்க, மகாவோ அவன் டீஷர்ட்டை தூக்கி உள்ளே நுழைந்து படுத்துவிட்டாள்

ஏய் என்னடி செய்ற..?” விஷ்ணு ஹஸ்கி குரலில் அதிர்ந்து கேட்க, மகா இன்னும் நன்றாக படுத்தாள்.

சிங்காரி என்னடி பண்ற..?”  விஷ்ணுவிற்கு ஏதோ செய்தது

“பெருசா ஒன்னும் செய்யல, பயப்படாதீங்க..” மகா கண் சிமிட்டி சொன்னாள்

நான் ஏன் பயப்படணும்..? இன்னும் சொல்ல போனால் நீ எனக்கு செய்றேன்னு சொன்னதே இன்னும் பெண்டிங் இருக்கு, இப்போ வரை நான் தான் உனக்கு..” மகா வேகமாக அவன் வாய் மூடியவள்

இதெல்லம் இப்போ சொல்லனுமா..?” என்றாள் வெட்க முறைப்புடன்

சரி சொல்லலை.. எப்போன்னு சொல்லு..”

உங்களுக்கு தான் தூக்கம் வருதே..”

எனக்கு இப்போ தூக்கம் போச்சு, சோ..” அவன் குறும்பாக பார்க்க

எனக்கு தூக்கம் வருது..” மகா வேகமாக அவன் டீஷர்ட்டில் இருந்து வெளியே வர

எங்க ஓடுற..? என்கிட்ட வந்துட்டா அவ்வளவு ஈஸியா விட மாட்டேன்டி..”   இன்னும் மனைவியை இறுக்கமாக சேர்த்தணைத்து கொண்டான்.