ம்ம்.. அவங்க அம்மா தான் சித்ரா ஆன்ட்டியா..?”

ஆமாடா தெரிஞ்சப்போ அவ்வளவு கோவம் எனக்கு, ஆனா சின்னு அதை ஈஸியா அக்சப்ட் பண்ணிட்டான்..”  விஷ்ணு வார்த்தையில் நிச்சயம் பெருமை தான்

சின்னு  நல்ல மெச்சூரிட்டி தான் விஷ்ணு, பாரேன் இப்போ கூட எப்படி எல்லாம் யோசிக்கிறான்னு.. நாம பார்க்கிற குட்டி சின்னு இல்லை இது..” ஈஷ்வர் ஆச்சரியத்துடன் சொன்னான்.

எனக்குமே அன்னைக்கு போன் ஆன் பண்ணனுமா கேட்டான் பாரு, ஸ்டன் ஆயிட்டேன், அப்போ தான் புரிஞ்சது என் தம்பி வளர்ந்துட்டான்னு, அதுலயும் அவன் இப்போ பேசினதை கேட்டதுக்கு அப்புறம்.. ம்ம்.. எனக்கு நம்பிக்கை இருக்கு ஈஷ்வர், அவன் லைபை அவன் பெஸ்ட்டா  வாழுவான்னு..” விஷ்ணு முகம் மின்ன சொன்னவாறே திரும்பி தம்பியை பார்க்க, அவன் காவ்யாவுடன் ஏதோ பேசி கொண்டிருந்தான்

ஈஷ்வரும் திரும்பி சின்னுவை பார்த்து  விஷ்ணுவை பார்க்க, அவன் அவனை பார்த்து புன்னைகைத்தான். அந்த மலர்வில் தெரிந்த திருப்தி, மகிழ்ச்சி, நிம்மதி, பெருமை.. ஈஷ்வரையும் புன்னகைக்க வைக்க, விஷ்ணு ஈஷ்வர் தோளில் கை போட்டு சென்றான்

அந்த வீட்டின் பெரிய பிள்ளை அல்லவா விஷ்ணு..? ஈஷ்வர், சின்னு, மகா யாரும் சோடை போகவில்லை என்ற கர்வம் பெரிய பிள்ளைக்கு வர, நடை தெம்பாக தான் இருந்தது

அங்கு சின்னு, காவ்யாவை பார்த்து இருந்தான் பதிலுக்காகஅவளோ அமைதியாக இருக்க, பெருமூச்சு விட்டவன்,  “நான் இவ்வளவு நேரம்  சொன்னது தான், நம்ம லைப் ஈஸி இல்லை, டேக் இட் பார் கிரண்டட் இல்லை.. எப்படி வேணா முடிவெடுக்க..? பொறுமையா இருங்க, நிதானமா யோசிங்க.. தெளிவு கிடைக்கும்..”  என, காவ்யா அதே அமைதி.

உங்களுக்கு எப்படின்னு தெரியல, எனக்கு என்னோட இத்தனை வருஷ லைப் போராட்டமா தான் இருந்திருக்கு, ஒவ்வொரு ஸ்டேஜிலும் நான் உள்ளுக்குள்ள நிறைய கஷ்டப்பட்டிருக்கேன், எந்தளவுன்னா எனக்கு இந்த வாழ்க்கை போதும்ன்னு நினைக்கிற அளவு, இத்தனைக்கும் எனக்கு கிடைச்ச பேமிலி தி பெஸ்ட், அப்படியும் இப்படி நினைச்சேன்னா என்ன காரணம் சொல்லுங்க பார்ப்போம்..”  காவ்யாவிடம் கேட்க, அவள் நீங்களே சொல்லுங்க.. என்றாள்

என்னோட பேமிலிக்காகவும், எனக்காகவும் தான்..” என்றான்காவ்யா கண் விரித்து பார்க்க

உண்மை தான், என்னால  அவங்களுக்கு எவ்வளவு வேதனை  தெரியுமா..? அம்மாக்கும் எப்போதும் என்னை நினச்சு குற்ற உணர்ச்சி, அழுகை, அப்பாக்கு மகன் இப்படி ஆகிட்டானேன்னு வலி, அண்ணா.. ம்ப்ச்..அவரை என்ன சொல்ல, அவரை விட நான் குட்டிங்கிங்கிறதால எப்போதும் என்மேல ஒரு ஸ்பெஷல் கேர்..”

அதுவும் நான் இப்படி ஆனதுல இருந்து அவரோட லைப் என்னோட அவரை கட்டி போட்டுடுச்சு.. மோஸ்ட்லி என்கூட தான் இருப்பார்என்னை விட்டு எங்கேயும் தூரம் போக மாட்டார், அவர் வயசுக்கு எல்லாம் எப்படி எப்படியோ வாழ்கையை அனுபவிச்சு வாழ, அவர் என்னோட ஹாஸ்பிடல்  ஹாஸ்பிட்டலா தான் சுத்துவார்..”

உள்ளுக்குள்ள அவ்வளவு கஷ்டமா இருக்கும்பிடிக்கல, என்னோட வலியும் எனக்கு தாங்கல, போதும்டா சாமி இந்த வாழ்க்கைன்னு தோணிடுச்சு, யார்கிட்டேயும் இதை நான் சொல்லலை, மகாகிட்ட தான் சொன்னேன், நான் போறேன், எனக்கு  விடுதலை கொடுங்கன்னு, அவ்வளவு கோவம் அவளுக்கு, அண்ணாகிட்ட சொல்லி அவர் ரொம்ப வேதனை பட்டுட்டார்.. கடைசில அவருக்காக தான் திரும்பி வரணும் தோணுச்சு.. இல்லைன்னா நான் அப்படியே போயிருப்பேன்..”  அவன் சொல்லி கொண்டே போக

என்ன பேசுறீங்க நீங்க..” என்று காவ்யா பதறிவிட்டாள்

ஈஸி காவ்யா..  வந்துட்டேன் இல்லை, இது அப்போ  தோணிச்சு, அதை சொல்றேன் உன்கிட்ட, நம்ம வாழ்க்கை எவ்வளவு பெரிய வரம்ன்னு உனக்கு புரியதில்லை, எது எதுக்கோ நம்ம வாழ்க்கையை நாம ஏன் பணயம் வைக்கணும்..?”

“ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கு, நீயும் அப்படி ஒரு லைபை டிசர்வ் பண்ற.. இந்த இரக்கம், குற்ற உணர்ச்சி, பரிதாபம் எல்லாம் விட்டு ப்ரீயா இரு..”

இந்த வீல்சேர்லே என் லைப் முடியலாம், எனக்கு அது ஓரளவு பழகியும் போச்சு, உனக்கு இந்த கமிட்மென்ட் வேண்டாம்.. எல்லாத்தையும் மறந்துடு, என்னை இங்கேயே விட்டுட்டு வீட்டுக்கு போ..  ஹாப்பியா இரு.. ஆல் தி பெஸ்ட்..”  என்று முடிக்க, காவ்யாவிடம் சில நொடி மௌனம். 

“என்ன காவ்யா..?” சின்னு கேட்க, ஒரு முடிவுடன்  நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவள்,  

நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியுது, உங்க மேல எனக்கு இருக்கிறது இரக்கம், குற்ற உணர்ச்சி, பரிதாபம் என்ன வேணா இருக்கட்டும், ஆனா அது கூட ஒரு ஸ்பெஷல் பீலும் எனக்கு உங்க மேல  இருக்கு..”

என்னால உங்களை கடக்க முடியல, நான் உங்ககிட்ட ஸ்டிக் ஆகிட்டேன், மீளுவேன்னு எனக்கு தோணல.. இருங்க நான் பேசி முடிச்சுடுறேன், அதுக்காக உங்களை நான் வற்புறுத்த மாட்டேன்..”

அண்ட் என் லைப் எவ்வளவு முக்கியம்ன்னு எனக்கு தெரியும், எனக்கான சந்தோசம், வரம் எதுன்னும் எனக்கு தெரியும்.. நீங்க சொல்றது போல நான் இன்னும் யோசிக்கணும், டைம் வேணும்ன்னு இல்லை, ஆனா உங்களுக்காக அந்த டைம்மை நான் எடுத்துகிறேன்..”

அதே போல நீங்களும் உங்க காலு சரியாகணும்ன்னு கேரளா போற இந்த நாட்களை  உங்களுக்கான நேரமா நீங்க எடுத்துக்கோங்க, என்மேல உங்களுக்கு எதாவது ஸ்பெஷல் பீல் இருந்தா சொல்லுங்க நாம மீட் பண்ணுவோம்..”

நீங்க அப்போ வீல்சேர்ல வந்தா உங்க பின்னாடி வருவேன், நடந்து வந்தா உங்ககூட வருவேன்.. அவ்வளுதான்.. உங்களை பார்த்துக்கோங்க, நான் வரேன்..” என்று எழுந்து நடக்க

சின்னுவிற்கு என்ன தோன்றியதோ, “காவ்யா..”  என்றான் அழைப்பாக. அவள் நின்று திரும்பி பார்க்க, அவனுக்கு என்ன பேச என்று தெரியவில்லை. அழைத்துவிட்டான்

டேக் கேர்..” என்றான்

ம்ம்.. வரேன்.. மகாக்கா கிட்ட சொல்லிடுங்க..”  என்று கிளம்பிவிட்டாள். அவள் செல்வதை பார்த்த மகாவிற்கு அவளின் முகத்தில் இருந்த உறுதி புரிய, திரும்பி சின்னுவை பார்த்தாள்

அவன் அவள் சென்ற வழியை பார்த்து கொண்டிருக்க, “யார் மகா அந்த பொண்ணு..?” என்று வந்தார் துர்கா காரில் இருந்து இறங்கி

உங்க ரெண்டாவது மருமகளா இருக்க வாய்ப்புகள் அதிகம்த்தை..” என்றுவிட்டாள். துர்காவிற்கு அவள் விளையாடுகிறாளோ என்று தோன்ற, “என்ன மகா இது..?”  என்று தோட்டத்தில் இருக்கும் சின்ன மகனிடம்  சென்றுவிட்டார்.

“அந்த பொண்ணு போய் ரொம்ப நேரம் ஆச்சு, வீட்டுக்குள்ள வரது..” என்று வந்தான் விஷ்ணு. க்கும்.. அவனை பார்த்து முறைத்து சென்றாள் மனைவி

இப்போ எதுக்கு இந்த முறைப்பு..?” விஷ்ணு மனைவி பின்னால் ரூமிற்கு வர

பின்ன..? எப்போ பார்த்தாலும் முட்டு கட்டை போடுறது போல பேசினா..?” என்றாள் கடுப்பாக

திரும்பவும் அந்த பொண்ணுக்காக என்கிட்ட சண்டைக்கு நிக்கிற..?” என்றான் அவனும் புகைச்சலாக

அதென்ன அந்த பொண்ணு, இந்த பொண்ணு.. காவ்யான்னு சொல்லி பழகுங்க, பிற்காலத்தில் தம்பி பொண்டாட்டி, பார்த்துக்கோங்க..” என்றாள் கண்டிப்புடன்

அது நடக்கும் போது பார்த்துக்கலாம்..”

அதெல்லாம் கண்டிப்பா நடக்கும், முன்ன சின்னு மேல தான் எனக்கு டவுட்டா இருந்தது, இப்போ அவனும் ஓகே.. நீங்க வேணா பாருங்க, ண்ணா எனக்கு காவ்யா வேணும், கட்டி வைங்கன்னு  வந்து நிக்க போறான்..” என்றாள் நிச்சயமாக

அப்படி அவன் கேட்டா எனக்கு சந்தோசம் தான் மகா, ஆனா அப்போ என் தம்பி எப்படி இருக்கணும்ன்னு இருக்கு இல்லை, அந்த பொண்ணு. ஓகே.. காவ்யா வாழ்க்கையும் நாம பார்க்கணும் இல்லை..”

எனக்கு நம்பிக்கை இருக்கு, சின்னு காவ்யாவோட நடந்தே மணமேடைய சுத்துவான்னு..”  மகா அடித்து சொன்னாள். அவள் உறுதியில்  விஷ்ணுவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி, நம்பிக்கை தான். 

“ம்ம்..” என்று அவன் உடைய எடுக்க, மகா ட்ராலி எடுத்து எல்லாம் அடுக்கினாள்.

“உனக்கு எப்போவாது லீவ் கிடைச்சா கேரளா வா..”விஷ்ணு சொல்ல

பார்க்கிறேன்..” என்றாள் மனைவி. அதில் உர்ரென்றான கணவன்

என்ன பார்க்கிறியா..? லீவ் கிடைக்கலன்னாலும் லீவ் எடுத்து வரேன் சொல்றியா பாரு..?” என்று காய்ந்தான்

உங்க தொல்லை இல்லாமல் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்ன்னா விடுறீங்களா..?” மகா உதட்டை சுளிக்க, அதை பட்டென்று பிடித்தவன்

அப்படியாடி தொல்லை கொடுக்கிறேன் உன்னை..?” என்றான் உதட்டை அழுத்தமாக பிடித்து

இல்லையா பின்ன..? எப்போ பாரு சிங்காரி போதை கொடுடின்னு நின்னா..”  மகா அவன் விரல்களை  எடுத்து நொடித்தாள்

நான் என்ன பண்ணுவேன், இந்த சிங்காரி என்னை போதைக்கு அடிமையாக்கி வச்சிருக்கா..?” விஷ்ணு அவளை இடையோடு வளைத்து தன்னை நோக்கி இழுத்தான்

பட்டென்று அவன் நெஞ்சின் மீது மோதி நின்றவள், “ஸ்ஸ்.. உங்களை இப்படியா இழுக்கிறது..” என்று அவன் நெஞ்சில் அடித்தாள்

அப்படியாடி வலிச்சிடுச்சு.. இரு பார்க்கிறேன்..” என்று அவள் உடையில் கை வைக்க, கையை தட்டிவிட்டவள்

நானே பார்த்துகிறேன்.. நீங்க கிளம்புங்க..”  என்றாள்

என்ன நீயே பார்த்துக்கிறியா..? ச்சீ.. அதெல்லாம் தப்பு, புருஷன் தான் பார்க்கணும்..” என்றான் கண் சிமிட்டி

நீங்க பார்த்தவரைக்கும் போதும்.. விடுங்க..” மகா திமிர

இருடி.. புருஷன் கிளம்புறானேன்னு வருத்தம் இருக்கா பாரு.. எப்போ பாரு விடுங்க விடுங்கன்னு..” இன்னும் இறுக்கமாக பிடித்தான்

சரி ஓகே விடுங்க சொல்லலை..” என, விஷ்ணு சந்தேகத்துடன் பார்க்க, குறும்பாக சிரித்தவள், “விடுடா விஷ்ணு..” என்றாள் சிரிப்புடன்

அடியேய்.. உனக்கு உதட்டுல கொழுப்பு கூடி போச்சு, கரைச்சிடுறேன் இரு..”  என்றவன் அவள் வாயை மூடி கிளம்பினான்.