அடங்காத நாடோடி காற்றல்லவோ 24

எல்லாம் முடிஞ்சுதா விஷ்ணு..?  ஆல் செட்..?” என்று வந்தான் ஈஷ்வர்

ம்ம்.. பேக்கிங் ஓவர், அங்க ஸ்டே பண்ற இடத்திலும் பேசிட்டேன்.. ஈவினிங் பிளைட் ஏற வேண்டியது தான்..”  ட்ராலிகளை ஓரம் தள்ளி வைத்தான்

ஓகே சின்னு எங்க..?”  ஈஷ்வர் அவன் ரூமில் இல்லாததால் கேட்டான்

மகாவோட தோட்டத்துல இருக்கான்.. ஏதோ ரகசியம் பேசிக்கிறாங்க போல..” விஷ்ணு கர்ட்டன்ஸ் விலக்கி தோட்டத்தை காட்டினான்அங்கு மகா தோட்டத்து பெஞ்சில் அமர்ந்திருக்க, சின்னு வீல்சேரில் என்று தீவிரமாக பேசி கொண்டிருந்தனர்

அப்படியென்ன டிஸ்கஷன்..?” ஈஷ்வர் கேட்க

தெரியல, நானும் போனேன், என்னை பார்த்ததும் இரண்டு பேரும் வாயை மூடிக்கிட்டாங்க, வந்துட்டேன்..” என்றான் விஷ்ணு தோள் குலுக்கி

ம்ம்..” ஈஷ்வர் தங்கையை பார்த்து கொண்டிருக்க,  “என்னடா..?” என்றான்  விஷ்ணு கேள்வியாய்

என்கிட்ட மகா இப்படி பேசி பல வருஷம் ஆச்சுடா..” அண்ணன் குரலில் தங்கையை மிஸ்  செய்யும்  வருத்தம்  இருந்தது

ஈஷ்வர் எதுவுமே லேட் ஆகிடல.. உனக்கு அவகிட்ட பேசணும்ன்னா பேசு..” 

ம்ஹூம்.. நான் பேசுறேன் பட் முன்ன இருந்த குளோஸ் வரல..”

அதுக்காக பேசாமலே இருப்பியா..? நீ பேச பேச மகா தானாவே பேச ஆரம்பிச்சுடுவா..? அவ கண்ணாடி மாதிரிடா நாம என்ன செய்றோமா அதை தான் காட்டுவா..”  விஷ்ணு மனைவியை பார்த்து சொல்ல, ஈஷ்வருக்கு புரிந்தது

ம்ம்.. இனி மகாகிட்ட  நிறைய பேசணும், மீட் பண்ணனும்..” என்றான்

குட்.. எப்படியும் சில மாசத்துக்கு  நாங்க இங்க  இருக்க மாட்டோம், அவ கொஞ்சம் போரா தான் பீல் பண்ணுவா.. நீங்க எல்லாம் அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணா முன்ன இருந்த மகாவை பார்க்கலாம்..” விஷ்ணு சொல்ல

தேங்க்ஸ்டா.. உன்கிட்ட புடிச்சதே இப்படி பட்டுன்னு வழி காமிச்சு முடிச்சிடுறது தான்..” ஈஷ்வர் அவனை அணைத்து கொள்ள, அவன் முதுகை தட்டினான் விஷ்ணு.


“சரி வா ஜுஸ் குடிக்க போலாம்..”   விஷ்ணு அவனுடன் ஹாலுக்கு வந்தவன், ருக்குவிடம் சொல்லிவிட்டு வந்தான்.  

ஏண்டா யூனிபார்ம்லே இருக்க, சேன்ஜ் பண்ணிக்கிறியா..?” விஷ்ணு கேட்க

இல்லைடா, நீங்க கிளம்புறதால நேரா இங்க வந்துட்டேன், வீட்லயும் கிளம்பிட்டாங்க..”  என்று சோபாவில் அமர்ந்தான். இருவரும் பொதுவாக பேசி கொண்டிருக்க, ருக்கு ஜுஸ் எடுத்து வந்தார்

வா தோட்டத்துக்கு போலாம்..”  விஷ்ணு கையில் டிரே எடுத்து கொள்ள, இருவரும் மகா இருக்கும் இடம் சென்றனர்

ஹாய் மகா.. ஹாய் சின்னு..” ஈஷ்வர் சொல்ல

ஹாய்ண்ணா.. எப்போ வந்த..?”   மகா கணவன் கொடுத்த ஜுஸ் எடுத்து கேட்டாள்

இப்போதான்..” என்றவன், “அப்பறம் என்ன சீரியஸ் டிஸ்கஸ் போய்ட்டு இருக்கு.. நாங்களும் உள்ள வரவா..?”  சின்னுவை குறுகுறுவென பார்த்து கேட்டான்

நோ தேங்க்ஸ் மாமா..”   சின்னு வேகமாக சொல்ல

டேய் நான் அனுபவஸ்தன்டா, காதல் கல்யாணம் எல்லாம் பண்ணியிருக்கேன்.. பார்த்துக்கோ..” ஈஷ்வர்  சிரிப்புடன் சொல்ல

மாமா.. இப்போ எதுக்கு இதை என்கிட்ட சொல்றீங்க..?”  சின்னு சிணுங்கலாக கேட்டான்

இல்லை உனக்கு தேவைப்படும் தோணுச்சு சொன்னேன், அப்பறம் எப்படி இருக்காங்க உன்னோட புக் ப்ரண்ட்..?” குறும்பாக கண் சிமிட்டி கேட்டான்

மாமாமா..”

ஏண்டா கத்துற..? சரி சொல்லு  போன் ஆன் பண்ணிட்டியா..?” ஈஷ்வர் விடாது அவனை ஓட்ட

ஈஷ்வர்..”  என்று ஒரு அதட்டல் விஷ்ணுவிடம் இருந்து. அதில் ஈஷ்வர் புரியாமல் விஷ்ணுவை பார்க்க, சின்னு சங்கடத்துடன் அண்ணனை பார்த்தான். மகாவோ கணவனை உர்ரென்று பார்க்க, மூவரையும் கண்டிப்புடன் பார்த்த விஷ்ணு

இது ஜோக் கிடையாது..” என்றான் அழுத்தமாக

இல்லை விஷ்ணு..”

ஈஷ்வர்.. எனக்கு இப்போ சின்னு சரியாகிறது தான் முக்கியம், தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம்..” தம்பியை பார்த்தே சொன்னான்

ண்ணா.. காவ்யா ஏதோ டிஸ்டர்ப்பா இருந்தாங்கன்னு தான் நான் பேசினேன், ஆனா அவங்க.. ஓகே, இனி அவங்ககிட்ட பேச மாட்டேன்..” சின்னு அண்ணன் சொல்வதை புரிந்து  சொல்ல, அவனை முறைத்த மகா

ஏன் பேசமாட்ட..?”  என்று வேகமாக கேட்டாள்

ம்ப்ச் இப்போதான் மகா சொன்னேன், எனக்கு அவங்க பேசுறது புரியல..” சின்னு சொல்ல

என்ன புரியல உனக்கு, காவ்யாவுக்கு உன்மேல ஒரு ஸ்பெஷல் பீல் இருக்கிறது உனக்கு புரியல..?” கண் சுருக்கி கேட்டாள்

எனக்கு புரியுது மகா, ஆனா.. உனக்கு எப்படி சொல்லன்னு எனக்கு தெரியல..” சின்னு தடுமாறினான்

நீ என்ன நினைக்கிறியோ அதை சொல்லு, நான் புரிஞ்சுக்கிறேன்..” மகா விடாப்பிடியாக கேட்டாள்

மகா இப்போ எதுக்கு அவனை போர்ஸ் பண்ற..? இதை விடவே மாட்டியா நீ..?” விஷ்ணு ஆயாசத்துடன்  கேட்டான்

இருங்க எல்லாம் இப்போவே பேசி முடிச்சிடலாம், தேவையில்லாம காவ்யா மனசையும் கஷ்டப்படுத்த கூடாது இல்லை.. நீ சொல்லுடா..” மகாவிற்கு இதை நீட்டிப்பதில் விருப்பமில்லை

ஓகே.. அவங்க அம்மா தான் எனக்கு இப்படி ஆனதுக்கு காரணம்ன்னு ரொம்ப கில்ட்டா பீல் பண்றாங்க, அது தான் அவங்க என்கிட்ட பேசி பழக காரணமும், எனக்கு இது  பிடிக்கல..”  என, அவன் மனது எல்லோருக்கும் புரிந்தது. சின்னு எனும் மனிதனுக்காக காவ்யா பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்

ஆனா அது எப்படி முடியும் சின்னு..? அந்த பாயிண்ட்ல தானே நீங்க பேசி பழக ஆரம்பிச்சீங்க…?”  மகா வெளிப்படையாக பட்டென கேட்டாள்

மகா.. என்னை பொறுத்தவரை நான் அவங்களை என் புக் ப்ரண்டா தான் நினைக்கிறேன், எனக்கு இப்படி நடந்தது என் விதிஇதுக்காக யாரையும் நான் பிளேம் பண்ணனும் நினைக்கல, யாரும் அதுக்கான பொறுப்பேத்துகிறதும் எனக்கு பிடிக்கல..”

ஓகே.. இதை நீ காவ்யாகிட்ட கிளியரா சொல்லிடு..”

நான் சொன்னேன், ஆனா அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க..சலிப்புடன் சொன்னான்.

“சின்னு.. இது மட்டும் தானா..? நீ இன்னும் உன் மனசுல என்ன இருக்குன்னு  தெளிவா சொல்லலை..”  மகா கூர்மையாக கேட்டாள்

ம்ப்ச்.. மகா புரிஞ்சுக்கோ, நான் வேண்டாம் அவங்களுக்கு, என்னால.. என்னோட அவங்க என்ன லைப் லீட் பண்ண முடியும்..?”

அதுக்கு தான் இப்போ ட்ரீட்மெண்ட் போறோமே..?”

அது சக்ஸஸ் ஆனா ஓகே, ஆகலன்னா.. அவங்க வாழ்க்கையும் இந்த வீல் சேரோட போகணுமா..? யாரையும் தெரிஞ்சே சிக்க வைக்க கூடாது மகா..” சின்னு சொல்ல, விஷ்ணு தம்பி தலையை வயிற்றோடு அணைத்து கொண்டான்

எனக்கு தெரியும் என் தம்பி என்னன்னு, மகா இதுவும் ஒரு ரீசன் நான் இதை என்கரேஜ் பண்ண வேண்டாம்ன்னு சொல்றதுக்குஇவங்க ரெண்டு பேர்கிட்ட ஸ்ட்ராங்கானா பீல் இருந்தா ஓகே, அவங்களால எப்படியும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியும், ஆனா இவங்ககிட்ட அது இல்லை.. விட்டுடு..”  என, மகாவிற்கும் புரிந்தது

ஓகே.. நீ என்ன நினைக்கிறியோ அதை காவ்யாகிட்ட சொல்லிடு, இன்னும் கொஞ்ச நேரத்துல  வந்துடுவா..” என்று நேரம் பார்த்து திரும்ப, காவ்யா சில அடி தூரத்தில் நின்றிருந்தாள்

பர்ஸை இறுக்கமாக பிடித்தபடி, நின்றிருந்தாள் பெண். “காவ்யா.. வா.. ஏன் அங்கேயே நின்னுட்ட..?” மகா பார்த்து கூப்பிட, ஆண்கள் மூவரும் திரும்பி பார்த்தனர். காவ்யா அவர்கள் அருகில் வர, முகத்திலே தாங்கள் பேசினதை கேட்டுவிட்டாள் என்று புரிந்தது.

“உட்காரு..” தன் அருகில் பெஞ்சில் இடம் கொடுக்க, காவ்யா அமர்ந்தாள். “இரு ஜுஸ் எடுத்துட்டு வரேன்..” மகா எழுந்து உள்ளே செல்ல

நாம நடப்போம்..” என்று விஷ்ணு, ஈஷ்வரும் அங்கிருந்து நகர்ந்தனர்

சாரி விஷ்ணு.. நான் இதை எல்லாம் யோசிக்கல..”  ஈஷ்வர் சற்று தூரம் செல்லவும் வருத்தத்துடன் சொன்னான்

இப்போ எதுக்கு சாரி எல்லாம், எனக்கு என் தம்பி இன்னும் சின்ன பையனா தான் இருக்கான், எனக்கு இதெல்லம் ஏத்துக்க முடியல, அதோட அந்த பொண்ணையும் நாம பார்க்கணும் இல்லை..”