அடங்காத நாடோடி காற்றல்லவோ 22 1 14759 அடங்காத நாடோடி காற்றல்லவோ 22 “இரு நீ.. நீ..” விஷ்ணு அவள் ஜாடையில் முகம் இறுக கேட்க, “ஆமா நான் உங்க அம்மா ப்ரண்ட் சித்ரா மகள் காவ்யா தான்..” என்றுவிட்டாள். அவர் தான் சின்னவின் கால் இழக்க காரணமாக இருந்தவர். அவ்வளவு தான் “முதல்ல வெளியே போ கெட் அவுட்..” அப்படி ஒரு கர்ஜனை. அவனின் கோவத்தில் பெண்களுக்கு பயத்தில் தூக்கி போட, “ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க பேசலாம்..” விஷ்ணு கை பிடித்து மகா கெஞ்சலாக கேட்டாள். “மகா.. முதல்ல இந்த பொண்ணை வெளியே அனுப்பிட்டு வா.. அப்பறம் பேசலாம்.. போ..” என்றான் கை விடுத்து தீவிரமாக. காவ்யாவிற்கு இது நடக்கும் என்று தெரியும் தான். ஆனால் நடக்கும் போது அழுகை வந்தது. வாய் திறந்து பேச முடியவில்லை. பேசும் தைரியமும் அவளுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். “அவ போக தான் போறா.. அதுக்கு முன்னாடி சின்னுவை பார்க்கட்டும்.. விடுங்க..” மகா சொல்ல, விஷ்ணுவின் கோவம் மனைவி மேல் திரும்பியது. “என்ன பேசிட்டு இருக்க நீ..? இந்த பொண்ணோட மூச்சு காத்து கூட என் தம்பி மேல படக்கூடாது சொல்லிட்டிருக்கேன், நீ அவ பார்க்கட்டும் சொல்ற..” அவள் மேல் பாய்ந்தான். “இப்படி போ போன்னு துரத்துற அளவு அவ எந்த தப்பும் பண்ணல..” என்றுவிட்டாள் மகா. காவ்யாவை கணவன் இப்படி விரட்டுவது பிடிக்கவில்லை மனைவிக்கு. “மகா.. நீ என்னை இன்னும் இன்னும் கோவப்படுத்துற..? இந்த பொண்ணை இப்போ வெளியே அனுப்ப முடியுமா முடியாதா..?” “ஏன் அனுப்பனும் தான் நானும் கேட்கிறேன், இவ அம்மா பண்ண தப்புக்கு இவ என்ன பண்ணுவா..?” “யார் தப்பு பண்ணதுன்னாலும் பாதிக்கப்பட்டது என் தம்பி மகா..” “அவளுக்கும் அந்த வேதனை இருக்கு..” “யாருக்கு இந்த பொண்ணுக்கா..? இவனை இப்படி படுக்க வைச்சதே இவங்க அம்மா தானே..?” “அதுக்காக எங்க அம்மா அழாத நாள் இல்லை.. ப்ளீஸ் அவங்களை மன்னிச்சிடுங்க..” காவ்யா கை குவித்து அழுகையுடன் மன்னிப்பு வேண்டினாள். “யாருக்கு வேணும் உன் மன்னிப்பு, அன்னைக்கு உங்க அம்மா பண்ணதுல ஆரம்பிச்சது என் தம்பி பிரச்சனை, இப்போ வரை கஷ்டப்பட்டுட்டு இருக்கான்..” விஷ்ணு அடக்க முடியா கோவத்தில் பேச, “ப்ளீஸ்.. அவளை பேச விடுங்க.. ஒரு பைவ் மினிட்ஸ்.. அவளுக்கும் ஏதாவது இருக்கும் இல்லை பேச..” மகா விடாமல் கேட்க, மூச்சை இழுத்துவிட்ட விஷ்ணு, “ஓகே.. பைவ் மினிட்ஸ் மட்டும் தான், என்ன சொல்லணுமோ சொல்லிட்டு போக சொல்லு..” விஷ்ணு வேண்டா வெறுப்பாக நிற்க, மகா காவ்யாவை பார்த்தாள். அவள் தொண்டையை செருமிவள், “அம்மாவோட தவறால தான் இவருக்கு கால் வராம போகவும், அவங்களுக்கு ரொம்ப வேதனை. நீங்களும் அவங்க மேல எந்த கம்பளைண்ட்டும் கொடுக்காம, போங்கன்னு சொல்லிட்டிங்க.. அதுல அம்மாக்கு இன்னும் குற்ற உணர்ச்சி..” “அது எங்க அம்மா பண்ணது, உங்க அம்மா அவங்க ப்ரண்ட் ஆச்சே, அவங்களை நம்பினது அவங்க தப்புன்னு நினைச்சுட்டாங்க போல..” விஷ்ணு வார்த்தைகளால் குத்தினான். “அம்மாவும் இதை நினச்சு தான் அழுவாங்க, நான் டாக்டர் தான், மனசுல கடவுள்ன்னு நினைச்சுட்டேன் போல.. அந்த சின்ன பையனுக்கு ஒழுங்கா பார்க்காம, மேல மேல ஊசி போட்டு இப்படி பண்ணிட்டேன்னு அழுவாங்க..” “ம்ஹா.. உங்க அம்மா அழுறதால என் தம்பிக்கு சரியாகிடுமா..? அன்னைக்கு உங்க அம்மாகிட்ட ஆன்ட்டி எங்க அம்மாகிட்ட போலாம், என் தம்பிக்கு ஜுரம் குறையலன்னு அப்படி கெஞ்சினேன், ஆனா உங்க அம்மா முடியாதுன்னு சொல்லி..” விஷ்ணு நிறுத்தி பல்லை கடித்தான். “மன்னிக்க முடியாதது தான், அதனாலே எங்க அம்மா கொஞ்ச நாள் பிராக்டிஸ் பண்ணாம கூட இருந்தாங்க, அப்பறம் கவுன்சிலிங் போய் தான் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சாங்க..” “அப்பறம் ரொம்ப வருஷம் கழிச்சு நாங்க ஒரு நாள் உங்களை மால்ல வச்சு பார்த்தோம், நீங்க, மகாக்கா, இவர்.. மூணு பேரும் படம் பார்க்க வந்தீங்க, அங்க தான் நாங்களும் வந்தோம், உங்களை பார்க்கவும் அம்மா இவங்க தான்னு காட்டினாங்க..” “அப்போ தான் நான் இவரை பர்ஸ்ட் பார்த்தேன், படம் முடியவும் நீங்களும் மகாக்காவும் யாரோ ஒருத்தர்கிட்ட பேச போக, இவர் மட்டும் தனியா ஒரு புக் ஷாப்ல இருந்தார்..” காவ்யா அந்த நாளை சொன்னாள். அன்று மாலில் மகாவும், விஷ்ணுவும் அபிதாவிடம் பேசி கொண்டிருக்க, சின்னு தனியே புக் படித்து கொண்டிருந்தான். காவ்யாவிற்கும் அவனிடம் பேச வேண்டும் என்று உந்துதல். அம்மாவிடம் சொல்லிவிட்டு சின்னுவை பார்க்க சென்றவள், என்ன பேச, எப்படி பேச என்ற தயக்கத்துடன் தான் சின்னு பக்கத்தில் சென்றாள். சின்னு அவளை உணர்ந்தவன், “எஸ் சொல்லுங்க..” என்றான் தானே நிமிர்ந்து. “ஹா.. ஹாய் நான் காவ்யா..” அவள் கை நீட்ட, சின்னு அவளையும் நீட்டிய கையையும் பார்த்தவன், “நான் துருவ் சக்ரவர்த்தி..” என்று மட்டும் சொன்னான். காவ்யா தானே கையை இறக்கி கொண்டவள், “நீங்க படிச்சிட்டு இருக்க புக் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு..” மெல்ல ஆரம்பித்தாள். ஓஹ்.. சின்னுவிற்கு மிகவும் பிடித்த புத்தகம் என்பதால் அதன் பற்றி சொல்ல, காவ்யாவும் இடையிடையே சந்தேகம் கேட்க, பேச்சு சிறிது நேரம் சரளமாக சென்றது. “அப்பறம்..” சின்னு கேட்க, “நீங்க என்ன படிக்கிறீங்க..?” கேட்டாள் காவ்யா. “டிகிரி.. நீங்க..?”இவன் கேட்க, “நான் விஸ்காம்..” படிக்கும் காலேஜ் பேர் சொன்னவள் அவனை பார்க்க, “நான் ஹோம் டியூட்டர் வச்சு படிக்கிறேன்..” என்றான். “ஏன்..?” காவ்யா கேட்டுவிட, சின்னு கண்கள் தன்னாலே அவன் காலுக்கு சென்றுவிட, காவ்யா கண்களும் காலில் நிலைத்தது. “இது.. இப்படி..?” “என் விதி.. நான் பிறக்கும் போதே எழுதினது..” லேசான சிரிப்புடன் தோள் குலுக்கி சொல்ல, காவ்யாவிற்கு ஏதோ செய்தது. “மன்னிச்சிடுங்க..” உள்ளிருந்து உணர்ந்து சொல்ல, “ஹேய்.. இதுக்கெதுக்கு மன்னிப்பு..? விடுங்க, இந்த வாழ்க்கையும் கொஞ்சம் சுவாரசியமா தான் இருக்கு..” சின்னு இயல்பாக சொன்னவன், திரும்ப படிக்க ஆரம்பித்துவிட, காவ்யா அங்கிருந்து நகரவே இல்லை. அவளால் நகர முடியவில்லை. சின்னுவின் அந்த சிரிப்பு அதில் இருக்கும் அவன் வலி பெண் உணர்ந்து கொண்டாலோ..? அவள் இன்னும் நிற்பதை பார்த்து சின்னு என்ன என்று பார்த்தான். “எனக்கு கொஞ்சம் கைட் பண்ணுங்க.. எந்த புக் நல்லா இருக்கும்ன்னு.. இப்போ தான் இப்படி புக் படிக்க ஸ்டார்ட் பண்றேன்..” திரும்ப பேச்சு கொடுத்தவள், இறுதியில் அவன் நம்பரையும் வாங்கியே அங்கிருந்து கிளம்பினாள். வாரத்தில் இரு முறை சந்தேகம் வராதது போல புக் சம்மந்தமாக அவனிடம் பேசவும் செய்தாள். சின்னுவும் அவளிடம் சாதாரணமாக பேசியவன், ஒரு நாள் திடிரென போன் எடுக்காமல் போனான். காவ்யா முயன்று பார்த்தவள், என்னவோ ஏதொன்று பதறி போனாள். அவன் ஏதோ ட்ரீட்மெண்ட் எடுப்பது பேச்சு வாக்கில் சொல்லியிருக்க, பயந்து போனவள், அவளின் அம்மாவிடம் அட்ரஸ் கேட்டு நின்றுவிட்டாள். அவளின் தீவிரத்தில் அம்மாவாக சித்ரா கலங்கி போனார். ஆனால் என்ன நினைத்தாரோ விசாரித்தவர், சின்னுவிற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சொல்லி ஆப்பரேஷனுக்காக மருத்துவமனையில் இருப்பதை சொன்னார். நல்ல படியாக மீண்டு வருவான் என்று நம்பி வேண்டி கொண்டிருக்க, அவனோ கோமாவிற்கு சென்றுவிட்டான். அன்று அவள் அழுத அழுகை. அதற்கு காரணம் என்ன என்று அவளுக்கு இன்று வரை தெரியவில்லை. மாதங்கள் செல்ல செல்ல, அவளுக்கு சின்னுவை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதற்கு அவள் உதவி கேட்டு நின்றது மகாவிடம் தான். நான் இன்னார், இப்படி என்று முழு விவரமும் சொல்லி உதவி கேட்டாள் பெண். மகா முதலில் மறுத்தவள், அவள் தொடர் படையெடுப்பில், அழுகையில், கெஞ்சலில் அவளுக்கு உதவ முன் வந்தாள். அதனாலே இன்று அவளை வீட்டிற்கும் வரவழைக்க, விஷ்ணு பார்த்துவிட்டான். எல்லாம் சொல்லி முடிக்க, விஷ்ணு கை கட்டி அவளை நேராக பார்த்தவன், “இப்போ நீ என்ன சொல்ல வர..? எதுக்கு என் தம்பியை பார்க்க நினைச்ச நீ..?” கூர்மையாக கேட்டான். “எனக்கும் தெரியல, ஆனா என்னால இவரை கடந்து வர முடியல..” காவ்யா சின்னுவை பார்த்து தவிப்புடன் சொன்னாள். “இது சரிவராது, இது தான் கடைசி முறை நீ சின்னுவை பார்க்கிறது.. கிளம்பு..” என்றுவிட்டான். “ப்ளீஸ்.. அப்படி சொல்லாதீங்க.. எனக்கு.. இவர்.. நான் இவரை..” சொல்ல முடியாமல் திணறி விஷ்ணுவை கெஞ்சலுடன் பார்த்தாள். “என்ன இரக்கப்படுறியா என் தம்பிய பார்த்து..? இல்லை உன் அம்மா பண்ண தப்புக்கு பரிகாரம் பண்ண பார்க்கிறியா..?” வெறுப்புடன் கேட்டான். “இல்லை.. அப்படி இல்லை..” “பொய் சொல்ல கூடாது, நீ இரக்கத்துல என் தம்பியை பார்க்கலை..” “பார்த்தேன் முதல்ல, ஆனா இப்போ அப்படி இல்லை..” “ஓகே.. அப்படியே இருக்கட்டும், அதான் என் தம்பிய பார்த்துட்டு இல்லை.. கிளம்பு இனி நீ இந்த பக்கம் வரக்கூடாது..” “அப்படி சொல்லாதீங்க.. எனக்கு இவர் வேணும்..” என்றுவிட்டாள். “இது இது தான் எனக்கு கோவம் வருது, உனக்கே முதல்ல ஒரு தெளிவு இல்லை, அவன் வேணும் சொல்ற, என் தம்பி என்ன விளையாட்டு பொம்மையா நீ வேணும்ன்னு வந்து நின்னவுடன் உன் கால்ல விழுந்து தூக்கி கொடுக்க..? அவன் மனுஷன், அவனுக்கு லைப் இருக்கு, அதுல யார் வேணும், வேணாம்ன்னு அவன் முடிவு பண்ணட்டும்.. இப்போ நீ போ..” விஷ்ணு முடிவாக சொல்ல, மகா அதுவரை அமைதியாக நின்றவள், “நீங்க சொல்றது தான் சரி, ஏதா இருந்தாலும் சின்னு முடிவெடுக்கட்டும் அவனுக்கு யார் வேணும், வேணாம்ன்னு.. நாம இல்லை..” என்றாள் நேராக கணவனை பார்த்து.