இனியும் இந்த பேச்சு வீட்ல இருக்க கூடாது, அதுவும் நீ விஷ்ணு இந்த பணம் கொடுக்கிற பேச்சு பேசவே கூடாது, உங்களுக்கு பார்க்கிற அளவு எனக்கு தெம்பு இருக்கு, சம்பாத்தியம் இருக்கு, கடமையும் இருக்கு, எல்லாத்துக்கும் மேல  பாசம் இருக்கு.. அம்மாவும் மகனும் இப்படி பேசி என்னை கஷ்டப்படுத்த கூடாது..” குடும்ப தலைவராக கண்டிப்புடன் சொல்லி கிளம்பிவிட, மற்றவர்கள் அமைதியாகிவிட்டனர்.

மகா தூங்க ரூம் போக, விஷ்ணு மொபைலில் ஏதோ தீவிரமாக பார்த்து கொண்டிருக்க, “உங்கிட்ட பேசணும்..” என்றாள் கணவனிடம்

ச்சு.. இப்போ நீயா..? என்ன சொல்லு..”  அவன் மொபைலில் பார்த்து கொண்டே

முதல்ல என்னை பார்க்கணும்..” மகா மொபைலை கை வைத்து மறைத்தாள்

மகா..முக்கியமா பார்த்துட்டு இருக்கேண்டி.. என்ன சொல்லு..”  அவன் அவள் கை எடுக்க

சரி அதையே பாருங்க..” என்று நகர்ந்தாள்

உடனே முறுக்கல்..”  அவளை இழுத்து தன் மடி மேல் அமர வைத்தவன், “என்ன சொல்லணும்..? டேபிள்ல நான் பேசினது தப்புன்னு தானே..?” அவள் காதை உரசி கேட்டான்

அது கண்டிப்பா தப்பு தானே..? அதுவும் எங்க அப்பாவை எதுக்கு இழுக்குறீங்க..? நீங்க சும்மா சுத்துறதுக்கு எல்லாம் வீட்டு பெரியவங்களை பேசணுமா..?”  முறைப்பாக கேட்டாள்

என்னடி நீயும் அவங்களை மாதிரி பேசுற.. யார் இங்க சும்மா சுத்துறா..? ஈஷ்வர் அவன் வேலையை தான் பார்த்தான், நானும் என் தம்பிய தானே பார்க்கிறேன்..”  அவளின் கன்னத்தை லேசாக கடித்து சொன்னான்

ஸ்ஸ்.. உங்களை..” அவள் தோளில் அடிக்க

அடியேய் ராங்கி.. இப்படி பேசினா தான் அமைதியாவங்க, அதான்.. மத்தபடி எனக்கு தெரியாத என் அப்பா, அம்மாவை..”  கண் அடித்து சொல்ல

பிராடு..” என்று இன்னும் ஜோராக அடித்தாள்

அவனோ அவள் அடியை கண்டு கொள்ளாமல், “சிங்காரி செம வாசனையா இருக்கடி..?” கழுத்தில் முகம் புதைத்து வாசம் இழுத்தான்.   “இந்த சரக்கை உள்ள இழுத்தாலே போதை ஏறுதே..” என்று முத்தம் வைக்க, மகாவிற்கு சிலிர்த்து போனது

பார்த்த விஷ்ணு அவளை இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டவன், “நீ எப்போவும் கேட்கிறதை செய்யணும் போல இருக்கு..” என்றான் அடிக்குரலில்

என்.. என்ன..?” மகா அவன் நெருக்கத்தில் திணற

என் வாயை உனக்கு கொடுக்கிறது.. கொடுக்கட்டா..?”  அவளின் உதடு உரசி கேட்டவன், கொடுத்தும்விட்டான். மகா கண்களை விரித்து பார்க்க, விஷ்ணு அவளை பார்த்தபடி, இன்னும் ஆழமாக அவளின் உதடுகளை நலம் விசாரிக்க, மகா அவனின் பின்னந்தலையை பிடித்து கண் மூடி கொண்டாள்

விஷ்ணுவோ கண்களை சிறிதும் மூடாமல் அவனின் மகாவை  ரசித்து கொண்டே முத்தமிட்டவன், கிறக்கத்தில் லேசாக கடித்தும் வைத்தான். ஸ்ஸ்.. மகா முனகி விலக, விஷ்ணு அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து பிரித்தான்

மகா விரலை கொண்டு உதட்டை வருடியவள், “உங்களை..  இப்படியா பண்ணுவீங்க..?” என்றாள் வெட்க சிணுங்கலுடன்

கல்யாணம் ஆகி ஒரு மாசம் கழிச்சு இப்போ தான் வாயோடு வாய் சேர்ந்திருக்கு, அதான் கொஞ்சம் மயங்கிட்டேன்..” விஷ்ணு கண் அடித்து  அவள் உதடுகளை வருடியவன், திரும்பவும் பிடித்து கொண்டான்

மிக நீண்ட முத்தம் தான். விஷ்ணுவின் போன் அடித்து தான் அவர்களின் முத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. அவன் போன் எடுக்கவும், மகா வேகமாக சென்று படுத்துகொண்டாள். விஷ்ணு அவளை பார்த்தபடி பேசி வைத்தவன், சிரிப்புடன் அவளை தூக்கி தன் மேல் போட்டு படுத்து கொண்டான்

எனக்கு தூங்கணும்..”  மகா அவன் நெஞ்சில் முகம் மறைத்து சொல்ல

இப்படியே தூங்கு..  எனக்கு என் பொண்டாட்டிய கட்டி பிடிச்சுக்கணும் போல இருக்கு, நீ தூங்கினதுக்கு அப்புறம் நானே எழுந்து போயிடுவேன்..” என்றவன், அவள் நெற்றியில் முத்தம் வைக்க

இப்படி எப்படி தூங்குறது..”    என்று சிணுங்கியபடியே படுத்தவள், இரவு கண் முழித்த அசதியில் சில நிமிடங்களில் தூங்கிவிட்டாள்

ஆனால் பேச வந்த விஷயத்தை பேச மறந்துவிட்டாள். அதன் பிரதிபலிப்பு அடுத்த வாரத்தில் தெரிந்தது. கணவனும், மனைவியும் முட்டி கொண்டனர்.

அன்று சின்னுவின் பிறந்த நாள். எல்லோரும் அவனுக்கு விஷ் செய்து, விஷேஷ பூஜை செய்து, கோவிலில் அன்னதானமும் செய்தனர். அடுத்த வருட பிறந்தநாளிற்கு அவன் எப்படி இருக்க வேண்டு என்று எல்லோருக்கும் பல வேண்டுதல்

நரசிம்மன் குடும்பம் காலையிலே வந்து செல்ல, சக்கரவர்த்தியும், துர்காவும் வேலைக்கு கிளம்பிவிட, வீட்டில் மகா மட்டும் தான். விஷ்ணுவும் மாதேஷை பார்க்க கிளம்பிவிட, மகா போன் செய்து காவ்யாவை வீட்டிற்கு வர சொன்னாள்

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்க்கா.. இங்க பக்கத்துல தான் இருக்கேன்.. இதோ வந்துட்டேன்..”  அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருந்தாள் காவ்யா

மகா அவளை வாசலிலே எதிர் கொள்ள,   “எப்படியாவது இன்னைக்கு அவரை பார்த்திடனும்ன்னு வேண்டிட்டே இருந்தேன்க்கா, கூப்பிட்டுடீங்க..” மகா கை பிடித்து காவ்யா நன்றி சொல்ல, 

“சரி வா உள்ள போலாம்..”  என்று அழைத்து செல்ல, அவள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தாள்.   பார்த்த மகா சிரிக்க, அவள் வெட்கத்துடன் முகம் திருப்பி எதையோ தேடினாள்

இந்த பக்கம் வா.. சேணிடைஸ்  பண்ணிக்கோ..” அவள் கை பிடித்து சின்னு ரூம் கூட்டி செல்ல, காவ்யாவிற்கு இப்போதே கண்கள் கலங்கிவிட்டது

ஷ்ஷ்.. என்ன இது காவ்யா, பி ஸ்ட்ராங்..”  மகா அவள் தோளோடு அணைத்து உள்ளே கூட்டி செல்ல, கணேஷ் யார் இந்த பெண் என்று பார்த்து வெளியே சென்றார்

சின்னு பெட்டில் படுத்திருக்க, காவ்யாவிற்கு கண்கள் மீண்டும் கலங்கி போனது. “எத்தனை வருடம் இவரை பார்க்க..?” கிட்டத்தட்ட ஒரு தவம் போலல்லவா இருந்தது அவளின் நாட்கள்

இறுதியாக இன்று அவளின் தவம் நிறைவேற, கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய, நடுங்கிய கால்களுடன் துருவ் அருகில் சென்றாள். கண்கள் பரிதவிப்புடன் அவனை முழுதும் பார்த்து முகத்தில் நிலைத்தது

சில வருடங்களுக்கு முன் அவள் பார்த்த துருவிற்கும், இப்போது இருப்பவனுக்கு நிறைய வித்தியாசம். வாலிபனாக வளர்ந்திருந்தான். முகம் முதிர்ச்சி அடைந்திருக்க, காவ்யா கைகள் அவனை அள்ளி அணைக்க துடித்தது

மகா என்ன நினைத்தாளோ வெளியே வந்துவிட, காவ்யா முதலில் அவன் கை பிடித்து முத்தம் வைத்தவள், அதிலே முகம் புதைத்து கதறிவிட்டாள்வெளியே வந்த  மகாவிற்கு கேட்க, அவளை நினைத்து இப்போதும் ஆச்சரியம் தான்

எப்படி இப்படி..?”  நினைத்து சோபாவில் அமர்ந்திருக்க, “மகா..” என்று வந்தான் விஷ்ணு. பார்த்த மகாவிற்கு தூக்கி போட்டது

என்ன மகா..?” அவள் முகம் பார்த்து கேட்டான்

ஒன்னும்.. ஒன்னும் இல்லை..  நீங்க இங்க..”  மகா திணற

சின்னு பழைய பைல் வேணும்..” என்று அவன் ரூம் செல்ல

எங்க போறீங்க..? இருங்க..” மகா வேகமாக சென்று வழி மறைத்தாள்

மகா.. வழி விடு என்ன இது..?” விஷ்ணு புரியாமல் கேட்க

உங்களுக்கு என்ன பைல் தானே, நான் எடுத்து வரேன் இருங்க..” என்றாள் வழி விடாமல் மறைத்தபடி.

மகா.. எனக்கு தான் அந்த பைல் எதுன்னு தெரியும், வழி விடு..”  அவளை விலக்கி உள்ளே சென்றுவிட, மகாவும் பதட்டத்துடன் பின்னே ஓடி வந்தாள்

கதவை திறந்த விஷ்ணு சின்னு கை பிடித்திருந்த காவ்யா பார்த்துஏய் யார் நீ..?”  என்று  அதட்டலுடன் கேட்டான்.

காவ்யா துருவ் கைய விட்டு அச்சத்துடன் எழுந்து நிற்க, “கேட்கிறேன் இல்லை யார் நீ..? இங்க என்ன பண்ற..?” விஷ்ணு சந்தேகத்துடன் கேட்டபடி வேகமாக சென்று சின்னுவை ஆராய்ந்தான். அதில் காவ்யாவிற்கு அப்படி ஒரு அழுகை.

“என்னங்க..  இது காவ்யா.. என் ப்ரண்ட்..” மகா அவள் கை பிடித்து அவசரமாக சொன்னாள்

இந்த பொண்ணு உனக்கு ப்ரண்டா..? மகா உண்மையை சொல்லு, யார் இது, சின்னு ரூம்ல இந்த பொண்ணுக்கு  தனியா என்ன வேலை..?” 

அதான் சொல்றேன் இல்லை.. இவ என் ப்ரண்ட்..”

சரி உன் ப்ரண்டா இருந்தா எதுக்கு இவளை தனியே விட்டு நீ ஹால்ல  இருந்த..? என்ன நடக்குது இங்க..?”

அவ சின்னுவை பார்க்கணும் சொன்னா அதான்..”

இந்த பொண்ணு எதுக்கு சின்னுவை பார்க்கணும், இரு உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..”  அவள் முகத்தை நன்றாக பார்த்தவனுக்கு முகம் லேசாக இறுக ஆரம்பித்தது

நீ..”  கை நீட்டி கேட்க

ஆமாம்.. நான்..”   என்று காவ்யா அவள் யாரென்று சொல்லிவிட

அவ்வளவு தான். விஷ்ணு கோவத்தில் கொதிக்க, “வெளியே போ.. கெட் அவுட்..” அப்படி ஒரு கர்ஜனை. மகா, காவ்யா இருவருக்கும் பயத்தில் தூக்கி போட்டது.