சக்கரவர்த்தி அப்போது சின்னு ரூமில் இருந்து வெளியே வந்தவர், விஷ்ணு பின் வந்தார். அவன் பைக் கிளப்பவும், சக்ரவர்த்தி பின்னால் ஏறிக்கொண்டார். தந்தை மகன் இருவரும் அமைதியாக பீச் சென்றனர்.
சக்ரவர்த்தி கண்கள் எப்போதும் போல முதலில் சுற்று புறத்தை ஆராய, விஷ்ணு குளிர் காற்றை அனுபவித்தபடி நடந்தான். “அப்பறம்..” சக்ரவர்த்தி ஆரம்பித்தார்.
“காலையிலே அட்வைஸ் பண்ணாதீங்க ACP, ஐயம் நாட் இன் குட் மூட்..” விஷ்ணு முகம் திருப்பினான்.
“ஹாஹா.. உனக்கு அட்வைஸ் பண்ணிட்டாலும், இது ஜஸ்ட் ஒரு சஜஷன் தான்..”
“ஓஹ் அப்படி..” விஷ்ணு கிண்டலாக கேட்டான்.
“கமான் விஷ்ணு, உனக்கு நல்லா தெரியும் நான் என்ன சொல்ல போறேன்னு, விட்டுடு, லீவ் இட்.. எதையும் மாத்துறதுக்கு நாம கடவுள் இல்லை, நான் காவல் காக்கணும், நீ காப்பாத்தணும், அவ்வளவுதான் நம்ம வேலை..”
“அதை கூட நம்மால சரியா செய்ய முடியலையே..?”
“சரி தான்.. உனக்கு ஒன்னு தெரியுமா நான் இங்க சென்னையில டியூட்டி பார்த்துட்டு இருந்தப்போ உங்க ஹாஸ்பிடல்ல மாத்தி ஆப்பரேஷன் பண்ண கேஸ்ல ஒரு பொண்ணு இறந்து போச்சு, டிவில கூட வந்து பெரிய பிரச்சனை, நானும் அந்த டாக்டரை அரெஸ்ட் வரை பண்ணேன், ஆனா அடுத்த ஒரு வாரத்துல அந்த டாக்டர் வெளியே வந்திட்டார், கேட்ட என்னையும் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.. எல்லாம் முடிஞ்சிடுச்சு..” சக்ரவர்த்தி சாதாரணமாக சொன்னாலும் உள்ளுக்குள் எரிந்தது நிச்சயம்.
“ஓஹ் அதனால தான் டீன் அவ்வளவு திமிரா பேசினாங்களா..?” புரிந்த விஷ்ணுவிற்கு இன்னும் வெறுப்பு.
“விஷ்ணு இளரத்தம்டா உனக்கு, அதான் இப்படி, போக போக நீயும் சரியாகிடுவ, அதுவரை பெரிய பிரச்சனையை இழுத்து விட்டுக்காத..” மகன் தோளை தட்டி முடித்து கொண்டார்.
முன்னர் என்றால் இருவருக்கும் சண்டையே வரும், சக்ரவர்த்தி தன்னை மாற்றி கொண்டார். மகன் கோவம் புரிந்தது. அவரும், அவரை போல பல ஆட்களும் இப்படி இருந்தவர்கள் தானே..?
அடுத்து இருவரும் ஒன்றாகவே ஜிம் சென்று வீட்டிற்கு வந்தனர். “விஷ்ணு அம்மாவை பேசாத, அவ ரொம்ப ஹர்ட் ஆகுறா..?” விஷ்ணு பைக் நிறுத்தவும் சக்கரவர்த்தி சொன்னார்.
விஷ்ணு பதில் ஏதும் சொல்லாமல் ஜிம் பேக்குடன் ரூம் சென்றுவிட்டான். குளித்து கிளம்பி வர, அவன் குடும்பம் டைனிங் டேபிளில் இருந்தது துர்கா தவிர, அவர் எமெர்ஜன்சி என்று ஹாஸ்பிடல் கிளம்பியிருந்தார்.
விஷ்ணு டேபிளில் அமர்ந்தவன் எப்போதும் போல முதலில் தம்பிக்கு ஊட்டினான். “விஷ்ணு துருவ் தானா சாப்பிடட்டும்..” சக்ரவர்த்தி மகனை கண்டிக்க, நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், முழுதும் ஊட்டி முடித்து, தண்ணீர் நிறைய குடிக்க வைத்து ஹாலில் கிளாஸிற்கு உட்கார வைத்து வந்தான்.
“என்னடா புதுசா இது..?” சக்ரவர்த்தி மீண்டும் கேட்க,
“சின்னு அவன் புட் இன்டேக்கை குறைக்கிறான்..” என்றான்.
“ஏன்..?” சக்கரவர்த்தி புரியமால் கேட்க, திரும்பி தம்பிய பார்த்தவன்,
“அடிக்கடி பாத்ரூம் போக கூடாதுன்னு..” என்றான்.
“என்னடா சொல்ற..” தந்தைக்கு மனம் பிசைந்தது.
“டீனேஜ்ல நிக்கிறான், சங்கடபடுறான், சரியாகிடுவான், இதையும் அவன் அக்சப்ட் பண்ணிக்க தான் வேணும்..” விஷ்ணு சொன்னவன், சின்னுவின் ஹோம் டியூட்டர் வந்த பிறகே காலேஜ் கிளம்பினான்.
அவனை பார்த்ததும் சுப்ரமணி அவன் அருகில் வந்தவன், “கடைசி பென்ச் போலாம் வா..” என்று கூட்டி கொண்டு சென்றான்.
“சொல்லு.. என்ன ஆச்சு..?” விஷ்ணு கேட்க,
“நேத்து நீ சண்டை போட்ட அந்த பேஷண்டை உங்க அம்மா அவங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனதுக்கு கொஞ்சம் பிரச்னையாகிடுச்சு.. நீரஜா செம காண்டுல இருக்காங்க, உன்னை கட்டம் கட்ட ஸ்டெப் எடுக்குது போல, எதுக்கும் உஷாரா இரு..” சுப்பிரமணி கவலையாக சொல்ல,
“பார்த்துக்கலாம் விடுடா..” என்றான் விஷ்ணு.
“ம்ப்ச்.. உன்னை யாருடா அந்தம்மா பேஷண்ட் பத்தி எல்லாம் பேச சொன்னது, அவங்களுக்கு ஓவர் ஈகோடா..”
“ஈகோ மட்டுமில்லை ஓவர் ஆட்டிடியூட் கூட..”
“தெரியுது இல்லை, நீ எதுக்கு இதை எல்லாம் கண்டுக்கற, எங்களை மாதிரி இருக்க வேண்டியது தானே..?” நண்பனாக பொரிந்து கொண்டிருக்க, விஷ்ணு நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.
விஷ்ணுவை பொறுத்தவரை ஏதும் செய்ய முடியாத இயலாமை, கோவம் தான் இன்னும். ஆனால் வெளியே காட்டி கொள்ளவில்லை. எல்லாம் இவனுக்கு தான் அட்வைஸ் செய்வார்கள். இந்த வயதிற்கே அதிக அட்வைஸ் வாங்கி வெறுப்பு கொண்டவன் ஆயிற்றே.
கிளாஸ் ஆரம்பித்தது. அவன் படிப்பது ‘MD சைக்கியாரிடிஸ்ட்..’ அன்று பிராக்டிகல் மெண்டல் அசைலம்ஸில் ட்ரைனிங் கிளாஸ். ட்ரைனிங் சீனியர் மாணவன் ஆரம்பித்தான் . முதலில் பாடம் சம்மந்தமான கிளாஸ் செல்ல, விஷ்ணு சாதாரணமாக இருந்தான்.
சிறிது நேரத்தில், “இங்க நிறைய பேருக்கு இன்சேன் சைலம் இருக்கு, அதாவது மனநோய். அவங்களுக்கு எல்லாம் அவங்க சொல்றது தான் சரி, நாம தான் இந்த நாட்டை காப்பாத்த வந்த ஹீரோன்னு நினைப்பு..” நேராக விஷ்ணு பார்த்து சொல்ல, மொத்த வகுப்பும் விஷ்ணுவை ஓரக்கண்ணால் பார்த்தது.
விஷ்ணு நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான். “விஷ்ணு ரியாக்ட் பண்ணாத, இவர் நீரஜாவோட பேவரைட் ஸ்டூடன்ட்..” சுப்பிரமணி அவன் கையை பிடித்தான்.
“பார்க்க நல்லா இருப்பாங்க, அவங்களை பார்த்தா இப்படியொரு நோய் இருக்குன்னு யாராலும் கண்டு பிடிக்க முடியாது, ஆனா அவங்க ரொம்ப டேஞ்சூரஸ், இவங்களை எல்லாம் திருத்த முடியாது, கொண்டு போய் மெண்டல் சென்டர்ல தான் விடணும்..” அவர் வேண்டும் என்றே பாடத்தை பற்றி பேசாமல் விஷ்ணுவை பார்த்து நக்கலாக பேசி கொண்டே போக, விஷ்ணு பென்ச்சை தட்டி எழுந்து நின்றான்.
எல்லோருக்கும் திக் திக் நிமிடங்கள். விஷ்ணுவை பார்க்க அவனோ மிக கூலாக இருந்தான்.
“டாக்டர் பிரசாத் சொல்றது ஹண்ட்ரட் பர்சன்ட் கரெக்ட்டான்னு எனக்கு தெரியல, இன்சேன் சைலம் இருக்கிறவங்க ரொம்ப டேஞ்சூரஸ் தான், பட் எனக்கு ஏனோ அவங்களை பார்த்தா காமெடி பீஸா தான் தோணும், எதிர்ல இருக்கிறவனுக்கு தான் மனநோய் இருக்குன்னு நினைச்சு பேசிட்டு இருப்பாங்க, ஆனா ஆக்ச்சுவல் மனநோய் அவங்களுக்கு தான் இருக்கும்..” மிகவும் கூலாக சொல்ல, பிரசாத் முகம் கோவத்தில் சிவந்தது.
“அண்ட் டாக்டர் சொல்றது போல அவங்களை எல்லாம் தள்ளி தான் வைக்கணும், சோ நான் இந்த கிளாஸ் விட்டு போறேன்..” ஸ்டெத்தை சுழற்றி கழுத்தில் மாட்டியவன், கோட் எடுத்து கையில் போட்டு கொண்டு கிளாஸ் விட்டு கிளம்பிவிட்டான்.
பிரசாத் முகம் கறுத்து போக, அன்று முழுதும் காலேஜில் அது தான் ஹாட் டாபிக்காக மாறிபோனது.
“இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.. இவரோட..” மகா புலம்பி கொண்டே கேண்டினில் அமர்ந்திருக்க,
“எனக்கு என்னமோ திரும்பவும் சீனியர் சஸ்பெண்ட் ஆக வாய்ப்பிருக்குன்னு தோணுது..” இஷான் எல்லாம் சொல்லி முடிக்க, சரியாக விஷ்ணு வந்தான்.
வந்தவன் மகா பக்கத்தில் அமர்ந்து, அவளின் பிரிக்க கூடப்படாத லன்ச் எடுத்து சாப்பிட செய்தான். “இவரால நான் சாப்பிட கூட முடியாம பயந்திட்டு இருந்தா இவர் கூலா சாப்பிட்டுட்டு இருக்கார்..” மகா வாய் திறந்து மூச்சு விட்டாள்.
“என்னை பார்த்தது போதும், போய் காபி வாங்கிட்டு வா..” தன்னை பார்த்து கண் விரித்து அமர்ந்திருந்த இஷானிடம் விஷ்ணு சொல்ல, அவனோ இவன் என்ன டிசைன் என்று யோசித்து கொண்டே காபி வாங்க சென்றான்.
“நாளைக்கு அத்தைகிட்ட சொல்லி பிரியாணி எடுத்துட்டு வா..” முழுதும் சாப்பிட்டு முடித்தவன் சொல்ல, மகா முறைத்தாள்.
“சீனியர் காபி..” இஷான் கொடுக்க, வாங்கி நிதானமாக குடித்தவனை வருவோர் போவோர் எல்லாம் பார்த்து சென்றனர்.
“உங்க அவங்க வந்திருக்காங்க..” மகா கிண்டலாக சொல்ல, விஷ்ணு திரும்பி பக்கத்து டேபிள் பார்த்தான். அங்கு அவள் இவனையே தவிப்புடன் பார்த்து அமர்ந்திருந்தாள். அவள் அபிதா. MBBSல் இருந்து விஷ்ணுவை பார்த்து கொண்டிருப்பவள். அவளும் இங்கேயே MD கைனகாலஜி எடுத்திருந்தாள்.
“உங்களுக்கு எல்லாம் இந்த அக்கா ரொம்ப அதிகம்..” மகா வாய் திறந்து சொல்லியேவிட்டாள்.
“ஆமாம் இல்லை..” விஷ்ணு உண்மையாகவே கேட்டான்.
“உங்களை..” மகா கடுப்பாக பல்லை கடித்தாள்.
“அவகிட்ட பேசுவோமா..? எப்படியும் இன்னிக்கு நான் கிளாஸ் போக மாட்டேன், நேரம் போகட்டும்..” மகாவிடம் மேலும் கேட்க,
“அது எதுக்கு உங்களை கூப்பிட ஆள் வந்திருச்சு..” என்றாள் மகா லேசான பயத்துடன்.
“ப்ச் நானும் பேசிடனும் பார்க்கிறேன் எதாவது ஒரு தடங்கல்..” விஷ்ணு சலித்து கொள்ள,
“போலாமா..” என்றனர் வந்த அட்டண்டர்.
மகா இவனுடன் வர, திரும்பி பார்த்த விஷ்ணு லேசான சிரிப்புடன் டீனை பார்க்க சென்றான்.