நீங்க கார்லே இருங்க.. நாங்க சொல்லும் போது வாங்க..”  விஷ்ணு போனில் சொல்ல, மகா, ஈஷ்வர் புரிந்து கொண்டனர். நீரஜா, டீன் எல்லாம் வந்தவர்கள், விஷ்ணு, மகா, ஈஷ்வரை பார்க்கவும் முதலில் அதிர்ந்தனர். இப்படி திருமணம் முடிந்த மறுநாளே வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பின்பு  கொஞ்சம் அலட்சியத்துடனே கடந்தனர்.  

நமக்கு எல்லா விஷயமும் தெரியும்ன்னு இவங்களுக்கு தெரியாது, அதான் இப்படி, நமக்கும் இது தானே வேணும்..”  விஷ்ணு சொல்ல, மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

நீரஜா மேல் மெடிக்கல் கவுன்சலில் விசராணை ஆரம்பிக்க, நீரஜா, அந்த பெண்ணின் கணவர் கேட்டதாலே ஆப்பரேஷன் செய்ததாகவும், அதை முன் இருமுறை நடந்த விசாரணையில் நிரூபித்துவிட்டதாகவும்  சொன்னார். கம்பளைண்ட் கொடுத்தவன் என்ற முறையில், அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக பேச விஷ்ணு அனுமதி வாங்கி எழுந்தான்.

எனக்கு இதில டாக்டர் நீரஜாகிட்ட பல கேள்வி இருக்கு, முதல் பேஷண்டோட பனிக்குடம் உடைஞ்சாலும் குழந்தைக்கு போதுமான தண்ணீர் உள்ள இருக்குன்னு ஏன் பேஷண்டோட உறவினருக்கு சொல்லலை..?  ஏன் இப்படியே விட்டா குழந்தைக்கு ஆபத்துன்னு பயமுறுத்தணும்..? ஏன் சுகப்பிரசவத்துக்கு முயற்சி கூட செய்யல..?” கேட்டான்.  

நான் இதுக்கு முதல்லே பதில் சொல்லிட்டேன், ஒரு பேஷண்டோட நிலைமையை அவங்க ரிலேட்டிவ்ஸ்க்கு சொல்ல வேண்டியது என் கடமை, அதோட அந்த பேஷண்டுக்கு வலியும் சுத்தமா இல்லை, யூட்ரசும் ஒரு பிங்கர் அளவுக்கு கூட ஓபன் ஆகல..”  நீரஜா வேகமாக சொன்னார்

அதுக்காக உடனே ‘C’ செக்ஷன் போயிடணுமா என்ன..? வலிக்கு மருந்து கொடுத்திருக்கலாமே..? அதான் குழந்தைக்கு போதுமான தண்ணீர் இருந்துச்சு இல்லை..” விஷ்ணு கேட்க, நீரஜா ஏதேதோ சமாதானம் சொல்ல, விஷ்ணு பேஷன்டின் மெடிக்கல் ஹிஸ்டரி ரிப்போர்ட்டை எடுத்தவன்

நான் முன்னமே உங்களுக்கு சப்மிட் பண்ண ரிப்போர்ட்ல செக் பண்ணா நாட் ஈவன் ஒருமுறை கூட அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் செய்ய எந்த முயற்சியும் எடுக்காதது தெரியும்..” என்றான்

இப்போ எல்லாம் C செக்ஷன் ரொம்ப சாதாரணமா போயிடுச்சு, நான் மட்டும் இல்லை இப்போ இந்தியாவிலே ஆப்பரேஷன் பண்ற சதவீதம் அதிகரிச்சிருக்கு, நார்மல் டெலிவரி விட இது தான் அதிகம், இதை ஒரு குத்தமா பேச முடியாது, அதுவும் அந்த பேஷண்டோட கணவர் செய்ங்கன்னு நிக்கும் போது நான் என்ன செய்யட்டும்..?” என்றார் நீரஜா திமிராக

இது தான்.. இது தான் இப்போ பிரச்சனையே, ஏன் நார்மல் டெலிவரி விட ஆப்பரேஷன் அதிகம், இவங்களை போல சில டாக்டரஸ், ஹாஸ்பிடலால தானே..? இவங்க சுயலாபத்துக்காக இப்படி செய்யலாமா..?” விஷ்ணு கொதிக்க

டாக்டர் விஷ்ணு.. இதை பத்தி பேச நாம இங்க இல்லை, நீங்க டாக்டர் நீரஜா மேல இருக்கிற குற்றத்தை நிரூபிக்க இன்னையோட கடைசி வாய்ப்பு..” என்றனர் கவுன்சில் மெம்பர்கள்

அதானே நீங்க மட்டும் இதுக்கு விதிவிலக்கா என்ன..? அதுவும் சர்ஜரி ஸ்பெஷலிஸ்ட்ஸ் எல்லாம்..”  உள்ளுக்குள் வெந்து போனவன்

ஓகே.. நான் இப்போ அந்த  வார்டோட ஹெட் நர்ஸ் செல்வியை வர சொல்றேன்.. அவங்க தான் அன்னைக்கு அங்க தியேட்டர்ல இருந்தது..” என, நீரஜா கேங்கிற்கு வேர்த்து போனது. அப்போ இவங்களுக்கு நடந்தது தெரியுமா..? உச்சகட்ட பயம் எல்லார் முகத்திலும் டீன் அங்கிருந்து நைசாக நழுவ

எங்க போறீங்க டாக்டர்.. உட்காருங்க இன்னும் விசாரணை முடியல..” ஈஷ்வர் அவரை பிடித்து உட்கார வைத்தான். விஷ்ணு சொன்ன செல்வி என்பவர் வந்தவர், அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்

அந்த பேஷண்டுக்கு ஆப்பரேஷன் கொண்டு போறதுக்கு முன்னாடி பிபி செக் பண்ணப்போ பிபி லெவல் அதிகமா இருந்தது. டாக்டர்க்கு சொன்னேன், அவங்க பரவாயில்லை, நாளைக்கு எனக்கு ஒரு பங்க்ஷன் இருக்கு, இன்னைக்கே முடிச்சிடலாம், ஒரு டேப்லெட் மட்டும் கொடுத்துடு.. யாருக்கும் சொல்லாதன்னு சொல்லிட்டாங்க..”

நானும் வேற வழி இல்லாமல் கொடுத்தேன், ஆனா ஆப்பரேஷன் நடக்கும் போதே அந்த பேஷண்டுக்கு வலிப்பு வந்துடுச்சு, ரொம்ப கஷ்டப்பட்டு தான் குழந்தையை வெளியே எடுத்தோம், அப்போவும் அந்த பேஷண்டுக்கு பல்ஸ் நார்மலுக்கு வரல, குழந்தையை இன்குபேட்டரில் வச்சுட்டோம், அவங்க ரிலேட்டிவ்ஸ்க்கு நடந்ததை சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா நான் மனசு கேட்காம டாக்டர் மகாலக்ஷ்மிக்கு சொல்லிட்டேன்..” என்று முடித்தார்

டாக்டர் மகாலக்ஷ்மி இவங்க கொடுத்த மெடிசன் குறிப்பை  மறைச்சு சார்ட்ல வேற எழுதவும் தான் நான் கண்டுபிடிச்சு கேட்டேன், அவங்க பேஷண்டோட அம்மாகிட்ட சொல்லும் போதும் அவங்க  பயந்துட கூடாதுன்னு இதை சொல்லலை, அண்ட் தியேட்டர்குள்ள நடந்தது எல்லாம் எங்களுக்கு தெரியும்ன்னு இவங்களுக்கும் தெரிய கூடாதுன்னு நினைச்சோம்..” விஷ்ணு முடித்தவன், ஹாஸ்பிடல் பேடில் நீரஜா எழுதியிருந்த குறிப்பு மெடிசனை கொடுத்தான்

அதோடு இவங்க மேல இன்னொரு கம்பளைண்ட்டும் இருக்கு, சாதாரண கட்டிக்கு ஆப்பரேஷன் செஞ்சு யூட்ரஸ் எடுத்தது, அதுவும் பேஷண்ட்கிட்ட உண்மையை சொல்லாமல் மறைச்சு செஞ்சது, அவங்க பாவம் வயசானவங்க..” விஷ்ணு வெறுப்புடன் சொன்னவன், அன்றே அதையும் நிரூபிக்க, நீரஜாவின் டாக்டர் பட்டம் பறிக்கப்பட்டது

வாழ்நாள் முழுதும் அவர் டாக்டராக சர்வீஸ் செய்ய கூடாதென்று அவர் கோட் கழட்டபட்டது. மீடியாவில் இந்த செய்தி பரவ, விஷ்ணு அதோடு விடாமல் அந்த ஹாஸ்பிடல் மேலும் விசாரணை வைக்க கோரிக்கை வைத்தான். டீன் அரண்டு போனார்

விஷயம் கேள்விப்பட்ட சக்கரவர்த்திக்கு அவ்வளவு மகிழ்ச்சி. மகன், மருமகள், ஈஷ்வர் வீட்டிற்கு வரவும் மூவரையும் அணைத்து கொண்டார்.   “என்னால அன்னைக்கு சாதிக்க முடியாததை நீங்க சாதிச்சுட்டிங்க..” என்றார் பெருமையுடன்

நரசிம்மனும் வீட்டிற்கு வந்துவிட்டவர், நெஞ்சை நிமிர்த்தி கொண்டே தான் திரிந்தார் மனிதர். “என் மகன், என் மகள், என் மருமகன்..” பெருமையில் போனும் கையுமாக தான் இருந்தார். அரசியல்வாதியின் பிள்ளைகளை பாருங்க என்று பூரித்து போனார்

அவர் வேண்டியதும், போராடியதும்  இதற்கு தானே..? அவர் வாழ்நாளில் கண்ட கனவு பலிக்க வேறென்ன வேண்டும் அவருக்கு..? இளையவர்களை ஜோடியாக நிற்க வைத்து  திருஷ்டி சுற்றி போடவும் வைத்தார் நரசிம்மன்

இரவு உணவு அங்கேயே முடிய, விஷ்ணு, மகாவை நாளை வீட்டிற்கு வர முறையாக அழைத்து பெரியவர்கள் கிளம்ப, ஈஷ்வர் பல்லவி தம்பதி மணமக்களை கூட்டி போக தங்கிவிட்டனர்

ஈஷ்வர் விஷ்ணுவிடம் பேசிவிட்டு ரூமிற்க்கு வரவும், அனுவை தூங்க வைத்திருந்த பல்லவி அவனையே பார்த்திருந்தாள். “என்னடி பார்வை பலமா இருக்கு..?” ஈஷ்வர் அவளை உரசி கொண்டு அமர்ந்தான்

இதுக்கு தானே இவ்வளவு போராட்டம் நம்ம வாழ்க்கையில..” பல்லவி கேட்க, ஈஷ்வர் அவளை அணைத்து கொண்டான்

மாமா முகத்துல ஹப்பா.. அவ்வளவு சந்தோசம்.. இதுக்கு தானே அவர் இவ்வளுவும் செஞ்சது, அன்னைக்கு அவர் மேல கோவம் இருந்துச்சு, இங்க வந்தப்போ அவர் பாசம் புரிஞ்சது, இன்னைக்கு மனசே  நிறைவா இருக்கு..” பல்லவி சொல்ல

இந்த வேலையில இவ்வளவு நல்ல விஷயங்கள் செய்யும் போது தான் எனக்கும் இதோட அருமை புரியுது, அப்பா சொன்ன அந்த அதிகாரமும் புரியுது, நம்மால பலருக்கு நன்மை செய்யும் போது வர திருப்தி.. கோடி கொடுத்தா கூட கிடைக்காது இல்லை..”  ஈஷ்வரும் நெகிழ்வுடன் சொன்னான்

ம்ம்..” பல்லவி அவனை அணைத்து அவனின் டாலரில் முத்தம் வைக்க, ஈஷ்வர் தூங்கும் மகளை பார்த்து மனைவியின் உதட்டை வருடினான்

அவனின் சமிக்சை புரிந்தவள், “தூங்கலாமா ஈஷ்வர்..?” மறைத்து வைத்த சிரிப்புடன்  விலகி தூங்க சென்றாள்

அடியேய் உனக்கு இதே வேலையா போச்சு, முத்தம் கொடுத்து சீண்டி விட்டுட்டு தூங்க போற..?” அப்படியே மனைவியை தூக்கி கொண்டான்

விடுங்க ஈஷ்வர்..” அவள் சிணுங்கலுடன்  கால் உதைத்து கீழிறங்க

ம்ஹூம்.. வாய்ப்பே இல்லைடி..”  அவனின் லவி பைத்தியத்தை காட்டினான் திகம்பரன்.

******

சின்னவை பார்த்து விஷ்ணு ரூம் செல்ல, மகா மொபைலில் இருந்தாள். “தூங்கலையா..?” விஷ்ணு கேட்டு கட்டிலில் அமர

தூங்கணும்.. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்..” என்றாள் அவனை பார்த்து அமர்ந்து

என்ன கேட்கணும்..?” விஷ்ணு கால் நீட்டி வசதியாக சாய்ந்து  அமர்ந்தான்

உங்களுக்கு தான் முன்னமே கேரளா போக வேண்டி இல்லை தெரியும் தானே, அதை வச்சு தானே இந்த கல்யாண ஏற்பாடும், நிறுத்திட வேண்டியது தானே..?” கேட்டாள்

ஏன் உனக்கு வருத்தமா இருக்கா என்ன..?” கண் சுருக்கி கேட்டான்

எனக்கு என்ன வருத்தம், இந்த பாய்லர் தான் எனக்குன்னு தெரிஞ்சு போச்சே, அது எப்போ நடந்தா என்ன..?” விட்டேத்தியாக சொன்னாள்

என்கிட்ட  மாட்டிக்க கூடாதுன்னு தானே மேட்ச் மேக்கிங் வேலை எல்லாம் பார்த்த, ஐயோ பாவம்..” கிண்டலாக உச்சு கொட்டினான்

நல்ல வேலை அந்த கொடுமையை நான் செய்யல, அந்த அபிதாக்காக்கு நல்ல லைப் பார்ட்னர் கிடைக்கட்டும்..” சொன்ன மகா என்கிட்டேயேவா பார்வை பார்த்தாள்

கடுப்பான விஷ்ணு, “உனக்கு ஏத்தம் கூடி போச்சுடி அகங்காரி..” என்றான்

நீங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம தேவையில்லாம பேசினா இப்படி தான்.. இப்போ சொல்லுங்க..?”

என்ன சொல்ல..? இந்த சிங்காரி எனக்கு வேணும்ன்னு தோணுச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..”

அதை கொஞ்சம் சிரிச்சுகிட்டே ரொமேன்டிக்கா சொன்னா என்னவாம்..?”

ரொமேன்டிக்கா.. உன்கிட்ட.. சொல்லி நான் பல்பு வாங்கவா..?”

சொன்னா தானே தெரியும்..?” மகா சொல்ல, அவள் கை பிடித்தவன்

எனக்கு நீயும் வேணும், சின்னுவும் வேணும், அவனுக்காக உன்னையும், உனக்காக அவனையும் வருத்தகூடாதுன்னு தோணுச்சு, அதோடு அவன் முழிச்சு பார்க்கும் போது நீ அவனுக்கு அண்ணியா இருந்தாலே போதும், அவன் சந்தோஷமாகிடுவான்..” என

இதுல என்ன ரொமேன்டிக்கா சொல்லிட்டிங்க..” என்றாள்  நொடிப்பாய் மனைவி

என்ன ரொமென்ஸ் வேணும் சொல்லு.. செஞ்சு அசத்திடுறேன்..”

உண்மையாவா..?”

சொல்லுடி முதல்ல..”

ம்ம்ம்.. நீல் டவுன் பண்ணி ப்ரொபோஸ் பண்ணுங்க..”

அதுக்கு நான் உன்னை லவ் பண்ணனும் தானே..?”

அப்போ இல்லை..?”

சரி நீ ப்ரொபோஸ் பண்ணுடி..”

நானா..?”

என்ன நானா..?”

பண்ணுடி..”

ம்ம்.. இப்போ பாருங்க எப்படி அசத்துறேன்னு..” என்றவள்,

இந்த தந்தூரி அடுப்புல சிக்கனா வந்து விழுந்துட்டேன்.. கருகாம பார்த்துக்கோங்க..” என்றாள்  குறும்பான சிரிப்புடன். 

இவளை பல்லை கடித்த விஷ்ணு, “நான் ஏண்டி உன்னை கருக வைக்க போறேன், பார்த்து பதமா உன்னை வேக வச்சு முழுங்கிடுறேன் இரு..” என்றான் அவளை இழுத்து தன் மேல் போட்டு

நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க பாஸ்..” மகா சிரிக்க

ஒருநாள் உன்னை முழுசா முழுங்கிற நாள் வரும், அன்னைக்கு பார்க்கிறேன் இந்த வாயை..” அவள் உதட்டை பிடித்தவன்

ஆனாலும் நீ செமயான சிங்காரி சரக்கு தாண்டி.. கிக்கா தான் இருக்க..”  என்றவன் கைகள் என்னமோ அவளின் பளீர் முதுகை வருடி கொண்டிருந்தது

மகா இதை எதிர்பார்க்காமல் நெளிந்தவள்,  “தூங்கலாமா..? எனக்கு தூக்கம் வருது..” என்று வேகமாக  விலகி படுத்து விட்டாள்

வாய் மட்டும் தாண்டி உனக்கு.. இதுக்கே ஓடுற..?”  சிரிப்புடன் சீண்ட, மகா கண்களை இறுக்க மூடி கொண்டாள். எட்டி பார்த்த விஷ்ணு சிரித்தபடி தானும் படுத்தான்