அவன்அமைதியாகபடுத்திருக்க, விஷ்ணுமகாவுடன்தம்பிகைபிடித்துபக்கம்அமர்ந்தான். சில நொடி கனமான மௌனம். மகா, விஷ்ணு இருவர் பார்வையும் சின்னு முகத்திலே நிலைத்திருக்க, மகிழ்ச்சி, துக்கம், எதிர்பார்ப்பு, வேண்டுதல் என்று உள்ளுக்குள் கலவையான உணர்வுகள்.
விஷ்ணு தொண்டையை செறுமியவன், “சின்னு.. நான்பேசினதைநீகேட்டுட்டுதானேஇருந்த.. நான்சொல்லியிருந்தேன்இல்லை, நீரொம்பஆசைப்பட்டபடிமகாஉன்அண்ணியாவந்துட்டா.. காலையிலதான்எங்ககல்யாணம்முடிஞ்சது, உன்அண்ணியைகூட்டிட்டுநம்மவீட்டுக்குவந்துட்டேன்..”
விஷ்ணு, மகாபார்க்கும்நொடிக்குள்நின்றுவிட, அவர்கள்கவனிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. “இதுவே நீ என் தம்பிக்கு சரியானதுக்கு அப்பறம் பேசி பாரு, அவன் உன்னை என்ன பண்றான்னு..” விஷ்ணு மிரட்ட,
“அடேங்கப்பா.. அப்படியாடா.. நீ என்னை பேசுவியா..? பேசி பாரேன்..” என்று இவள் சின்னுவை மிரட்ட, வெகு மாதங்களுக்கு பிறகு அவ்வீட்டில் சின்னு எதிர்பார்த்த நிமிடங்கள்.
“தம்பி.. நேரம் ஆயிடுச்சு..” கணேஷ், ருக்குவுடன் வர, அதன் பிறகே இருவரும் ரூம் ஏறினர்.
“என்னடி சும்மா வர, கையில பால் எதுவும் இல்லையா..?” விஷ்ணு கதவடைத்து கிண்டலாக கேட்க,
“அச்சோ மறந்துட்டேன்.. கிச்சன்ல அண்ணி பிளாஸ்க் வச்சாங்க..” என்றாள் தலையில் கை வைத்து.
“ஆமா இது என்ன உன் மூணு அடி முடில பூ எல்லாம், எப்படி அதுல வச்சாங்க..?” கேலியாக கேட்டு பெட்டில் அமர, மகா கண் சுருக்கி முறைத்தாள்.
“சரி ஆரம்பி.. பார்த்தது போதும்..” விஷ்ணு குறும்புடன் சொல்ல,
“என்ன ஆரம்பிக்கட்டும்..?” மகா சந்தேகமாக கேட்டாள்.
“அதான்.. அது..” விஷ்ணு அடக்கி வைத்த சிரிப்புடன் கேட்க, எதை கேட்கிறார் இவர்..? அன்னைக்கு நான் தான் எல்லாம் பண்ணனுமா சொன்னதையா..? கொஞ்சம் அரண்டு தான் போனாள்.
“என்னடி வீட்ல சொல்லி கொடுக்கலையா..? ரூமுக்கு போனவுடன் என்ன செய்யணும்ன்னு.. இந்தா..” என்று அமர்ந்தபடி காலை மட்டும் நீட்டி சிரிக்க, மகா கோவத்துடன் சிரித்தாள்.
“நீ என்ன நினைச்ச..? அதையா..? எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை..” மேலும் சீண்டினான்.
“உங்களை.. போங்க.. போங்க.. நான் தூங்க போறேன்..” வேகமாக பெட்டிற்கு செல்ல, எட்டி கை பிடித்து முன்னால் நிற்க வைத்தவன்,
“எங்க போற..? அன்னைக்கு என்ன கேட்ட நான் தான் எல்லாம் பண்ணனுமா கேட்ட இல்லை..? அந்த எல்லாம் என்னன்னு எனக்கு சொல்லு..” என்றான் வம்பாக.