அடங்காத நாடோடி காற்றல்லவோ 18

அவள் பேச்சில் ஒரு நொடி ஜெர்க் ஆன விஷ்ணு, அடுத்த நொடி, “ஹாஹா..” என்று சத்தமாக சிரித்துவிட்டான். அங்கு மகாவும் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தாள்

ஹேய்.. நான் என்ன கேட்டா நீ என்ன கேட்கிற..?” மேலும் சிரித்தவன், “ஏன் பர்ஸ்ட்  நைட்ல நீ எதுவும் பண்ண மாட்டியா என்ன..?” குறும்புடன் வம்பிழுத்தான்

மகா கண் மூடி ஒற்றை கண்ணை திறந்து சிரித்தவள், “எங்க இருக்கீங்க..? சின்னு எப்படி இருக்கான்..?” கேட்டாள் பேச்சை மாற்றும் விதமாக

சின்னு ரூம்ல தான், ஓகே தான்..” விஷ்ணு சொன்னவன், “இப்போ நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..?” என்றான் சிரிப்புடன்.

“இப்போ என்ன சொல்லணும் உங்களுக்கு..? நீங்க பேச வந்த விஷயத்தை பேசுங்க..” மகா சிணுங்க, விஷ்ணுவிற்கு முகம் முழுக்க ரசிப்பான புன்னகை தான்

ஓகே ஓகே.. இன்னொரு நாள் கேட்டுக்கிறேன், இப்போ சொல்லு என்ன பண்ணலாம்..?” முன் போல் டென்சன் இல்லாமல் ரிலாக்ஸாகாவே கேட்டான்

எனக்கும் தெரியல, உங்களுக்கு ஓகே, வீட்லயும் ஓகேன்னா எனக்கும் ஓகே தான்..” என்றாள்.  

இல்லைடி சின்னு.. அவன் நம்ம மேரேஜ் பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன்..” என

ஆசையா..? ஆசைபட்டீங்களா..?” மகா நிதானமாக கேட்க, விஷ்ணுவிற்கும் புரிந்தது. ஒரு நொடி அமைதி

நீ என்கூட கேரளா வரது எனக்கும் வேணும் தான், ஆனா அதுக்காக மேரேஜ்ங்கிறது தான் பிடிக்கல, பட்.. ம்ம்..  வீட்ல ஓகே  சொல்லிடலாம்..” என்றான்.

உங்களுக்கு வேண்டாம்ன்னா சொல்லுங்க நான்  வேண்டாம் சொல்லிடுறேன்.. இதுல கம்பல்ஷன் சரிவராது..” என்றாள் மகா

ம்ப்ச்.. கம்பல்ஷன் இல்லை, என்னை கார்னர் பண்றங்களாமா நம்ம வீட்டு ஆளுங்க, அதான் லைட்டா கடுப்பாகுது.” விஷ்ணு  சொல்ல, மகா லேசாக சிரித்தவள்

அவங்களுக்கு பயம் எங்க நீங்க சின்னுக்கு நினைவு வர வரை மேரேஜ் பண்ண மாட்டீங்களோன்னு..” என்றாள்

ம்ம்.. அது எனக்கும் புரியுது, நான் நினைச்சதும் அது தானே..?” விஷ்ணு சொல்ல

அப்போ முன்ன மட்டும் நாம மேரேஜ் பண்ணிக்கலாம் சொன்னீங்க..?  சின்னுவை நேர்ல பார்க்கிற வரை  என் சப்போர்ட் வேணும், இப்போ நான் வேண்டாமா..?” மகா நொடிப்பாக கேட்டாள்

உண்மையிலே அப்போ எனக்கு சின்னுவை பேஸ் பண்ண முடியல, அத்தனை மாசம் கழிச்சு அவனை பார்த்தேன் இல்லை..” இப்போதும் திரும்பி பெட்டில் படுத்திருக்கும் தம்பியை வாஞ்சையாக பார்த்தான்

அதான் பார்த்தேனே  கை கால் எல்லாம் நடுங்கினதை..” மகா சிரிப்புடன் சொல்ல, விஷ்ணுவும் உதடு விரித்தவன்

ரொம்ப நடுங்கிட்டேன் அவனை கண்ணுல பார்க்கிற வரை..” சின்னுவையே பார்த்தவன்

அவன் என்னை  பழையபடி  அண்ணான்னு கூப்பிடுற வரைக்கும் விட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் மகா, இப்போ ரீசண்ட்டா கோமால இருந்து வெளியே வந்தவங்க ஆர்டிக்கல் எல்லாம் படிச்சப்போ, டாக்டர் மாதேஷ் பத்தி பார்த்தேன்..”

அவர் அமெரிக்கால இருந்தப்போ அவர் பார்த்துட்டு இருந்த ஒரு பேஷன்ட் கோமால இருந்து வெளியே வந்திருக்காங்க, தேடி பிடிச்சி பேசிட்டேன், இப்போ அவர் கேரளால தான் இருக்காராம், அதான் சின்னுவை கூட்டிட்டு வரலாமான்னு கேட்டிருக்கேன், அவர் ஒன் வீக் டைம் கேட்டிருக்கார் பார்த்துட்டு சொல்றேன்னு.. அவர் பதிலுக்கு  தான் வெயிட்டிங்..” என்று முழுதும் சொல்ல, மகா கவனமாக கேட்டு கொண்டாள்

எனக்கு நம்பிக்கை இருக்கு மகா, சின்னு சீக்கிரம் சரியாகிடுவான்.. கொஞ்ச நாளா நல்ல பாசிட்டிவ் பீல்.. பார்ப்போம்..” விஷ்ணு நம்பிக்கையுடன் சொல்ல, மகாவிற்கும் மகிழ்ச்சி

எனக்கு தான்  சின்னு சீக்கிரம் சரியாகிடுவான்னு முன்னமே தெரியுமே..” என்றாள்

எப்படி சொல்ற..?”  விஷ்ணு கேட்க

நீங்க தான் அவன்கிட்ட வந்துட்டீங்களே..? உங்களை விட யார் அவனை காப்பாத்திட போறாங்க..” மகா சொல்லவும், விஷ்ணு கண்கள் கலங்காமல் இல்லை

இந்த வார்த்தை.. இதுக்கு நான் தகுதியான்னு தெரியலடி, ஆனா இனி என் தம்பி எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க விட மாட்டேன், யாரையும்.. யாரையும் நம்ப போறதில்லை என்னையும் சேர்த்து தான்..” இறுக்கமாக சொல்லி வைத்துவிட்டான். அங்கு மகா வருத்தத்துடன்  போனை வைத்து படுத்தாள்.

டாக்டர்..”  கடவுளுக்கு அடுத்து மனிதன் நம்பும் ஒரு ஆத்மா  டாக்டர் அல்லவா..?  அவர்களிடமும் தவறு இருக்கும் என்று யார் நினைப்பார் முதலில்..? 

நம்பிக்கை தானே அவர்கள் போட்டிருக்கும் அந்த வெள்ளை கோட்டின் மேல். வெள்ளை நிறம்.. தூய நெஞ்சத்தின் நிறம் அல்லவா..? தேவதைகளின் நிறம் அல்லவா..? அதில் கறை படியும் என்று யார் கண்டார்..? பணம் என்ற கறை வெகு சிலரிடத்தில் படிகிறதே..? மகா பெரு மூச்சுடன் கண் மூடினாள்.

அன்றே மகாவிடம் சொல்லியபடி விஷ்ணு வீட்டில், “ரிஜிஸ்டர் மேரேஜ்” என்ற இடைச்சொருகலோடு  திருமணத்திற்கு சரி என்று சொல்லிவிட்டிருக்க, அதற்காகவே காத்திருந்த வீட்டினர், உடனே திருமண வேலைகளை ஆரம்பித்தனர்

கங்காவிற்கு தான் அவ்வளவு ஆவல், பதட்டம். ஒரே மகளின் திருமணம், அவள் வளர வளர உடன் வளர்ந்த பல ஆசைகள், கனவுகள்.   மகனின் திருமணம் தான் பார்க்கவே முடிய வில்லையே

விஷ்ணுவை மீறி  மகளின் திருமணத்தை பெரிதாக எடுத்து செய்ய முடியாத நிலை என்றாலும் குறையாகவும் செய்ய கூடாது என்று அம்மாவாக முடிவெடுத்தார். அதற்கு அவர் பிடித்த ஆள் ஈஷ்வர்

மகா எப்போதும் போல நைட் டியூட்டிக்கு கிளம்ப, அவன் ரூம் சென்றவரை  ஆச்சரியமாக பார்த்த மகன், ““சொல்லுங்கம்மா..”  என்றான்  சோபாவில்  அமர வைத்து

அனு தூங்கிட்டாளா..?” பேத்தி தூங்கியிருக்க பார்த்தவர், “பல்லவி நீயும் உட்காரும்மா..” நின்ற மருமகளை தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டார்

ஈஷ்வர்.. எனக்கு உன்கிட்ட ஒரு உதவி..” மகனிடம் கேட்க

என்னம்மா உதவின்னு எல்லாம் சொல்லிக்கிட்டு.. என்ன செய்யணும் சொல்லுங்க..” மகன் உள்ளுக்குள்  வாடி தான் போனான்

இல்லைடா.. விஷ்ணுகிட்ட கொஞ்சம் பேசேன், ரெஜிஸ்டர் ஆபிஸ்ல மேரேஜ் வச்சா போதும்ன்னு சொல்லியிருக்கான், எனக்கு என் பொண்ணு கல்யாணத்தை அண்ணியோட குல தெய்வ கோவில்ல வைக்கணும்..” என்றார்

ஒரு நொடி கண் சுருக்கிய ஈஷ்வர் புரிந்து சிரிக்கவே செய்தான். “பயங்கரமா யோசிக்கிறீங்கம்மா..” என்றான்

புரிஞ்சிடுச்சா..? நீயே சொல்லு ஈஷ்வர் என் ஒரு பொண்ணு கல்யாணத்துல வாழ்த்த நாலு பேர் இல்லாமகல்யாண விருந்தும் இல்லாம எப்படி கல்யாணம் செய்ய..? உன் கல்யாணத்தை தான் பார்க்க கூட முடியல.. அவளுக்காவது நல்லா செய்யணும் ஆசைப்படுறது தப்பா..?”  அவர் அம்மாவாக ஆதங்கத்துடன் சொல்ல, ஈஷ்வர்பல்லவிக்கு வருத்தமாகி போனது

அதனால தான் நாங்களும் இவ்வளவு பட்டுட்டோம் போலம்மா..”  என்றுவிட்டான் ஈஷ்வர். பல்லவி கண்கள் கலங்க  குனிந்துவிட்டாள்

ஈஷ்வர் நான் அப்படி சொல்லடா..”  கங்கா பதட்டமாக சொல்ல

எனக்கு புரியுதும்மா.. அப்போ  பெத்தவங்க ஆசீர்வாதம் கூட இல்லாம நாங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை, நான்  இன்னும் கொஞ்சம் கூட பொறுமையா இருந்திருக்கலாம்.. என்னால எல்லோருக்கும் மனவருத்தம் தான் மிச்சம்..”  மகனின் வேதனை அம்மாவிற்கு தாங்குமா..? 

ஈஷ்வர்.. விடு உன் நேரம் எப்படி இருந்துச்சோ அப்போ, நீ என்ன செய்வ..?”  என்றார் அவனுக்கு ஆதரவாக

இல்லைம்மா.. நான் அப்போ எதையும், யாரையும் யோசிக்கிற நிலையில இல்லை போல. அப்பாகிட்ட சண்டை போடுறேன்னு உங்களையும், மகாவையும் கஷ்டப்படுத்திட்டேன்.. எனக்கே என்னை நினைச்சா பிடிக்கலம்மா, உங்களை இப்படி வருத்த பட வச்சிருக்கேன்னு  மகாவே சொல்ற வரை  எனக்கு தெரிய  கூட இல்லை..” ஈஷ்வர் சோர்ந்த குரலில் சொன்னான்

பல்லவிக்கும் மகாவின் பேச்சு நிச்சயம் வருத்தப்பட வைத்திருந்தது. ஏன் ஓரிடத்தில்தன்னால் தானோ.. ஈஷ்வர் என்மேல் வைத்த காதலினால் தானோ இவ்வளவு பிரச்சனை, மனவருத்தங்கள்..” என்று தோன்றவும் செய்தது

கங்கா இருவரையும் பார்த்தவர், “மகா பேசினதை நினச்சு வருத்தப்படுறீங்களா..? அவ அன்னைக்கு ஏதோ கோவத்துல பேசிட்டா, அப்படி எல்லாம் இல்லை, விடுங்க..” என்றார்

“ம்மா.. அவ பேசினான்னு இல்லைஎன்னால  நீங்க நிறைய கஷ்டப்படுறீங்கன்னு அப்போ எனக்கு புரியும், ஆனா என்னமோ அப்போ அதை நான் கவனிக்கல, அப்பா மேல உள்ள கோவம், ஐபிஸ் படிப்பு, சின்னுக்கான மிஷன், பல்லவின்னு இருந்துட்டேன்..”

நீங்களும், மகாவும் நம்ம வீட்ல தானே இருக்கீங்கன்னு ஒரு அசட்டை.. ம்ம்ம்.. இப்போ என்ன சொன்னாலும் அப்போ நான் அப்படி இருந்திருக்க கூடாது   என்னை மன்னிச்சிடுங்கம்மா..” அவர் முன் மண்டியிட்டு கை பிடித்து கேட்டான் மகன். கங்காவின் கண்களில் கண்ணீர் தேங்க திரும்பி மருமகளை பார்த்தவர், மகனின் கையை பிடித்து கொண்டார்

இத்தனை நாள் உங்களை பார்த்து இந்த மன்னிப்பு கேட்க முடியாம  இருந்தேன்ம்மா, தெரியாம செஞ்சா ஓகே, நான் தெரிஞ்சே செஞ்சுட்டு சாரி கேட்க எனக்கு முடியல..”  ஈஷ்வர் மேலும் சொல்ல

நானும் இதுக்கு ஒரு காரணம் அத்தை.. என்னையும்..” பல்லவி சொல்ல வர,

பல்லவி..” ஒரே நேரத்தில் அவளை நிறுத்தினர் அம்மாவும், மகனும்

நீ ஏன் மன்னிப்பு கேட்கிற பல்லவி, அவசியமே இல்லை..” கங்கா சொல்ல, ஈஷ்வர் ஏதோ சொல்ல வந்தவன், கங்கா இருப்பதால் அமைதியாகிவிட்டான்

உன்னை காதலிக்கிறேன்னு பின்னாடி வந்தது இவன் தானே, இவனால தான் உனக்கு அம்மா வீடும் இல்லாம, எங்கேயோ போய் கஷ்டப்பட்டுட்டு இருந்த, அதுவும் பிள்ளையை பெத்து வளர்த்து, எவ்வளவு கஷ்டம்..”  கங்கா ஆறுதலாக சொன்னார்

மூவரும் சில நிமிடங்கள் தங்கள் கடந்த காலத்தை பேசி காயப்பட்ட மனதை ஆற்றி கொண்டனர். “ஒரு காபி குடிக்கலாமா..?” ஈஷ்வர் கேட்க

நான் போய் போட்டுட்டு வரேன்..” பல்லவி கிட்சன் வந்தாள். நரசிம்மன் மனைவி இன்னும் வராததில் ஹாலில் அமர்ந்திருந்தவர் மருமகள் கிட்சன் செல்லவும் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார்

பல்லவி கையில் காபியுடன் படியேற சென்றவள், நரசிம்மன் ஹாலில் இருப்பதை அப்போது தான் பார்த்தாள். இன்னும் அவரிடம் சகஜமாக பேச்சில்லை. ஒரே வீட்டில் இருந்தாலும் பேசிய வார்த்தைகள் ஒன்றிரண்டு கூட இல்லை

சில நொடி தயங்கியவள், “மாமா..”  என்று முன் சென்றாள்

அவள் வந்து நிற்கவும் நரசிம்மன், “சொல்லும்மா..” என்றார் சோபாவில் சாய்ந்திருந்தவர் முன்னால் வந்து

காபி..” டிரே நீட்ட

எனக்கு வேண்டாம்மா..” என்றவர், “உங்க அத்தைக்கா காபி..?” என்றார்

உங்க மகனுக்கும், அத்தைக்கும் மாமா..” பல்லவி சொல்ல

சரி.. சரிம்மா.. நீங்க போங்க.. அவங்க காத்திருப்பாங்க..” வேகமாக சொன்னார் மகன் என்றதும். எப்போதும் போல இப்போதும் மகன் மீதான அவர் பாசம் அவளை பிரமிக்க வைத்தது. மேலேறி வந்தவள், கணவனிடமும், மாமியாரிடமும் இப்படி என்று சொன்னாள்

அப்பா தனியா இருக்காரா..?” ஈஷ்வர் காபியை கூட எடுக்காமல் கீழிறங்கிவிட்டான்

இவன் ஒருத்தன், அடிச்சுகிட்டாலும் அதிகம், கொஞ்சிக்கிட்டாலும் அதிகம்.. நீயும் வாம்மா கீழே போலாம்.. அப்பா, மகன்கிட்ட மகா கல்யாணம் பத்தி பேசிடலாம்..” என்றார் மருமகளிடம்

இல்லை அத்தை.. நீங்க போங்க, அனு தனியா..?” அவர்கள் குடும்பமாக பேச தயங்கினாள். கங்கா அனுவிற்கு இரு புறமும் தலையணை வைத்தவர், “இப்போ வா..” என்று அவள் கை பிடித்து கீழே கூட்டி சென்றார்.

ஹாலில்  வேகமாக வந்த ஈஷ்வர் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, நரசிம்மன் தனியே அமர்ந்திருக்கஇருவரிடமும் முழு மௌனம். அவர்களிடமும் இன்னும் அந்த சகஜம் திரும்பவில்லை. மனம் திறந்து பேசிவிட்டாலும் அந்த இடைவெளியை கடப்பது உறவுகளுக்கு இடையில் கடினம் தான் போல

மெல்ல மெல்ல தான் கடக்கவும் செய்ய வேண்டும் என்ற நிதானத்தை இப்போது ஏற்றனர் நரசிம்மனும், ஈஷ்வரும். கங்கா கணவர் பக்கத்தில் அமர்ந்தவர், மருமகளையும்  அமர சொன்னார்

அவள் காபி கொடுத்துநரசிம்மனை பார்த்து தயங்கி நிற்கவும், பார்த்த நரசிம்மன்,   “உட்காரும்மா..”  என்றார் மகன் பக்கத்தில் கை நீட்டி. பல்லவி மறுக்காமல் அமர, கங்கா, ஈஷ்வர் காபி குடித்து முடித்தனர்.  

ஏங்க.. மகா கல்யாணம் பத்தி பேசணும்..” கங்கா  ஆரம்பிக்க

சொல்லு கங்கா என்ன செய்யணும்..?” என்றார் தந்தை

இதை உங்க பொண்ணு கேட்கணும்..” கங்கா சொல்லி சிரிக்க, நரசிம்மன் புரியாமல் பார்த்தார்