அடங்காத நாடோடி காற்றல்லவோ 17 2 16816 “விஷ்ணு.. சின்னுக்காக தான் இப்போ இந்த மேரேஜும்..” என்றார் சக்ரவர்த்தி நிதானமாக. “இது என்ன கதை..?” “கதை இல்லை விஷ்ணு, உண்மையை தான் சொல்றோம், நீ இன்னும் ரெண்டு வாரத்துல கேரளா போகணும் சொல்ற, அப்போ மகா உன்னோட இருந்தா சரியா இருக்கும்ன்னு யோசிச்சிருக்கோம்..” “அப்போ உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லை..” விஷ்ணு வலியுடன் கேட்டான். “விஷ்ணு என்னை கோவப்படுத்த கூடாது, நாங்க என் மகனை நம்ப மாட்டோமா..? நீ இப்போ உன் பேச்சுல எங்களை கஷ்டப்படுத்துற..” சக்ரவர்த்தி அதிருப்தியுடன் சொல்ல, விஷ்ணு கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவன், “அப்போ ஏன் மகா..?” கேட்டான். “இரண்டு விஷயம், பர்ஸ்ட் அவளுக்கு சின்னு பத்தி எல்லாம் தெரியும், இத்தனை மாசம் அவ கூடவே இருந்திருக்கா, அவ உங்களோட வந்தா நல்லா இருக்கும்ன்னு நினைச்சோம்..” “அப்படி மகாக்கு எல்லாம் தெரிஞ்சா கூட எதுக்கு கல்யாணம்..?” “விஷ்ணு சொல்லி முடிக்கிற வரை பொறுடா.. அந்த ரெண்டாவது விஷயம் இது தான் மகா உன்னோட தனியா வரது..? அண்ணா, அண்ணி ஏன் ஈஷ்வர் கூட ஒத்துப்பானா தெரியாது..” “ம்ஹூம்.. மாமா, அத்தை பத்தி மட்டும் பேசுங்க, ஈஷ்வர் என்ன சொல்வான் எனக்கு தெரியும்..” என்றான் பட்டென. “ஓகே.. அண்ணா, அண்ணி அப்படி பொண்ணை தனியா அனுப்ப மாட்டாங்க, நாங்க பேசிட்டோம், அவங்க கல்யாணம் முடிச்சிட்டு கூட்டிட்டு போகட்டும் சொல்லிட்டாங்க..” துர்கா முடிக்க, விஷ்ணு ஆயாசத்துடன் தலை ஆட்டி கொண்டவன், “எல்லாம் பக்கா பிளான், யார் போட்டது இதை..? ம்மா, நீங்க, அத்தை கண்டிப்பா இல்லை, நீங்க இல்லை மாமா.. யாரு..?” சக்ரவர்த்தி பார்த்து கேட்டான். அவரோ மெலிதாக சிரிக்க மட்டும் செய்தார். “சிரிச்சா என்ன அர்த்தம் கமிஷனர், சொல்லுங்க.. யாரோட ஐடியா இது..?” விஷ்ணு கடுப்பாக கேட்டான். துர்கா, சக்ரவர்த்தி இருவரும் அதற்கு பதில் சொல்லாமல், “விஷ்ணு நாங்க சொல்றதை யோசி, அதைவிட்டு இந்த ஆராய்ச்சி எல்லாம் எதுக்கு..?” என, விஷ்ணு முகத்தில் மறுப்பு தான். “எனக்கு தெரிஞ்சு மகா வேண்டாம்..” என்றான். “விஷ்ணு நீ மட்டும் போய் என்ன செய்வ..? கூட இன்னொரு ஆள் கண்டிப்பா வேணும்.. எங்க யாராலும் அவ்வளவு நாள் லீவ் எடுக்க முடியாது, அமெரிக்கா போனப்போ ஈஷ்வர் இருந்தான், இப்போ அவனுக்கும் டியூட்டி இருக்கும் இல்லை..” “அப்படி பார்த்தா மகாக்கு மட்டும் எப்படி லீவ் கிடைக்கும்..?” “மகா இதுவரை ஒரு நாள் தான் லீவே எடுத்திருக்கா அதுவும் ஈஷ்வர் ரிசப்ஷனுக்கு, சோ கல்யாணம் சொல்லி ஒரு டென் டேஸ் லீவ் கேட்கலாம்..” “என்ன பத்து நாளைக்காக கல்யாணமா..? அப்படி ஒன்னும் அவ வரணும் இல்லை..” “விஷ்ணு அடம்பிடிக்காத, அவளுக்கு சின்னு பத்தி எல்லாம் தெரியுங்கும் போது கூட்டிட்டு போறதுல என்ன பிரச்சனை உனக்கு..?” “ம்மா.. உங்களுக்கு அப்படி அவளை கூட்டிட்டு போயே ஆகணும்ன்னா நான் மாமா, அத்தைகிட்ட பேசுறேன்..” என்றான். “விஷ்ணு நீயே யோசி, அப்படி எப்படி விடுவாங்க, அங்க எத்தனை நாள் ஆகும்ன்னு தெரியாது.. தங்குற வசதி எப்படி இருக்கும்ன்னு அவங்களுக்கு ஒரு ஐடியா கூட கிடையாது, எப்படி ஒரு வயசு பொண்ணை அவ்வளவு தூரம் அனுப்புவாங்க..?” “ம்மா.. எல்லாம் பயங்கரமா யோசிச்சு தான் முடிவு பண்ணியிருக்கீங்க போல, எங்களோட கல்யாணம் சின்னு கண் முன்னாடி நடக்கணும் ஆசைப்படுறேன், அதுல என்ன தப்பு இருக்கு சொல்லுங்க பார்ப்போம்..” “விஷ்ணு சின்னுக்காக தான் நாங்களும் இந்த கல்யாணம் சொல்றோம், என்னதான் அவனுக்காக நீங்க காத்திருந்தாலும் இப்போ அவனுக்கு குணமாகிறது தான் முக்கியம், அதை முதல்ல பாரு, வேணும்ன்னா சின்னு கண் முழிச்சதுக்கு அப்புறம் ஒரு கிராண்ட் ரிசப்ஷன் போல வச்சுக்கலாம்..” சக்ரவர்த்தி சொல்ல, “யோசி விஷ்ணு, அப்பா சொல்றது நாங்க சொல்றதும், சின்னுக்கு சரியாகிறது தான் இப்போ நாம பார்க்க வேண்டியது, உங்க மேரேஜ் கூட அதுக்காக தான்னும் நீ மறுக்கிறது கூட சரியில்லைன்னு சொல்வோம்..” துர்கா சொல்ல, “விட்டா இந்த கல்யாணம் செய்யலன்னா நான் சின்னுக்கு அண்ணனே இல்லைன்னு சொல்லிடுவீங்க போல..” விஷ்ணு கடுப்பாக சொன்னான். “விஷ்ணு ஏன் இவ்வளவு பிடிவாதம், இப்படி யோசிச்சு பாரேன் சின்னு கண் முழுச்சு பார்க்கும் போது மகா அவனுக்கு அண்ணியா இங்க இருக்காங்கிறதே அவனுக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும்..? அவனோட ஆசையே மகா அண்ணியா இருக்கிறது தானே, உங்க மேரேஜ் இல்லையில்லை..” மேலும் பேசி கொண்டே போக, விஷ்ணுவிற்கு தலைக்குள் உருண்டது. “ம்மா.. நான் மகாகிட்ட பேசிட்டு சொல்றேன், இதுக்கு என்னோட சம்மதம் மட்டும் முக்கியம் இல்லை.. அவளையும் கேட்கணும்..” எழுந்து ரூமிற்க்கு சென்றுவிட்டான். “என்னங்க இப்படி சொல்றான், இதை வச்சு கல்யாணம் முடிச்சிடலாம்ன்னு அண்ணி சொல்றாங்க, இவன் இப்படி பண்றான்..?” துர்கா சொல்ல, “நடக்கும், கங்கா சொன்னது போல இதை நடத்திடுவோம், விட்டா இவன் சின்னுக்கு நினைவு திரும்புற வரை இப்படியே தான் இருப்பான்.. அதுவரை அவங்களை காத்திருக்க சொல்ல நமக்குமே முடியாது, அப்படி சொல்லவும் கூடாது..” சக்ரவர்த்தி சொல்ல, துர்காவிற்கு கொஞ்சம் நம்பிக்கையும் இருந்தது. விஷ்ணு அவன் ரூமில் சென்று குளித்து தம்பி ரூமிற்கு வந்து அவனை பார்த்தவன், மகாவிற்கு அழைத்தான். அவளும் அப்போது தான் குளித்து, சாப்பிட்டு தூங்க ஆயத்தமானாள். இவன் போன் வரவும், மகாவிற்கு புரிந்தது. அவளுக்கும் இப்படி என்று சாப்பிடும் போது கங்கா சொல்லியிருந்தாரே..? “சொல்லுங்க..” என்றாள் போன் எடுத்து. “என்ன சொல்ல..? நான் என்கேஜ்மென்டுக்கு ஓகே சொன்னா இவங்க கல்யாணத்துக்கு கேட்டு நிக்கிறாங்க.. என்ன பண்ணலாம்..?” அவளிடமே கேட்டான். கேட்க வைத்தாள். பின்னே காலையிலே அப்படி பேசியவள் ஆயிற்றே. மகா பெட்டில் சம்மனம் இட்டு அமர்ந்தவள், “இரண்டுக்கும் என்ன வித்தியசாம்..? மோதிரத்துக்கு பதில் தாலி, அவ்வளவு தானே..” “ம்ப்ச்.. மகா நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்..” “நானும் சீரியஸா தான் சொல்றேன்.. மோதிரம் போடுறதுக்கு பதில் தாலி கட்டுங்க அவ்வளவு தான்..” “அவ்வளவு தானா..? நல்லா யோசிச்சு சொல்லு.. மேரேஜுக்கு அப்பறம் நாம ஹஸ்பண்ட், வைப்..” விஷ்ணு சீண்டலாக கேட்டான். “ஏன் உங்களுக்கு அப்படி ஏதும் ஐடியா இருக்கா..? அப்போ கேரளா ட்ரிப்பை ஹனிமூனா மாத்திடலாமா..?” அவளும் சீண்டினாள். “ஏய் சிங்காரி தம்பிய கூட்டிட்டு போகும் போது இதென்ன பேச்சு..?” “அய்யடா.. ஏன் நாம ஹனிமூன் போகவே மாட்டோமா..?” “ஹேய் அப்போ ஹனிமூன் வேணுமா உனக்கு..?” “கண்டிப்பா வேணும்..? அதுவும் ஹில் ஸ்டேஷன், ஏன் சொல்லுங்க..?” “என்னை கேட்டா எனக்கு ஏக்கு மாக்கா தான் தோணுது, நீயே சொல்லிடு..” “ஏக்கு மாக்கா தோணுதா.. அதிசயம் தான்..” கிண்டலாக சொன்னாள். “அதை நீ சொல்லதடி, அன்னைக்கு உன் உதட்டை பிடிச்சதுக்கே அப்படி அரண்டு போய் நிக்கிற..?” விஷ்ணு சிரிப்புடன் கேட்டான். “பின்ன ஒரு பாய்லர் திடீர்ன்னு கூலான உறைய மாட்டேனா..? “ “தொட்டாவேவா..? அப்போ பர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணலாம் இருக்க..?” “நானும் சார்ஜ் ஏத்திக்க வேண்டியது தான்.. அதான் நீங்க சொல்லியிருக்கீங்க இல்லை பீர்.. அதை ஒரு கல்ப் அடிச்சுக்கலாம்..” “வாடி நானே கேட்கணும் இருந்தேன், அதென்ன அப்படி பேசுற..? உனக்கும் பீர் வேணுமா..? ஏத்தம் தான் உனக்கு..?” “இதை நீங்க கேட்கலாமா..?” “எனக்கு அந்த தகுதி இல்லைன்னு சொல்ற அப்படி தானே..?” “நீங்க ஷார்ப்ன்னு தான் எனக்கு தெரியுமே..?” “நான் ஷார்ப்ங்கிறது இருக்கட்டும், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, பர்ஸ்ட் நைட்டுல என்ன பண்ணுவ..?” “அப்போ நான் தான் எல்லாம்ம்ம் பண்ணனுமா..?” கண் விரித்து கேட்டாள்.