அடங்காத நாடோடி காற்றல்லவோ 17

“இப்போ என்ன கேட்டுட்டேன்னு  இப்படி பேசிட்டிருக்க நீ..? அதுவும் என்னை ஓடுங்க சொல்ற..? நான் ஓடிட்டா வேறெந்த மாப்பிள்ளை கிடைப்பான் உனக்கு..?” மகாவின் பேச்சில் விஷ்ணுவும் கொதித்து விட்டான்

மகாவோ அலட்சியமாக முகம் திருப்பியவள், “எனக்கு யாரும் வேண்டாம், யாரை நம்பியும் நான் இல்லை, என்னை  பெத்த அப்பா, அண்ணாவே என்னை இத்தனை வருஷம் கண்டுக்காம தான் விட்டிருந்தாங்க, அதுக்காக நான் என்ன  இல்லாமலா போயிட்டேன்..?” என்றுவிட

மகா..” ஈஷ்வர், விஷ்ணு இருவரும் ஒரு சேர அதட்டினர். அஹா.. மகா ரியாக்ஷன் அவ்வளவு தான்

அகங்காரி.. என்னடி பேசிட்டிருக்க நீ..? வாய் கூடி போச்சு உனக்கு.. திமிரெடுத்தவ..”  விஷ்ணு பல்லை கடிக்க

ஈஷ்வரோ, “ஏன் மகா இப்படி..? எங்களை என்ன வேணும்னாலும் பேசு, உன்னை இப்படி பேசாத..” என்றான் வருத்தத்துடன்

நீ சொல்லாட்டியும் நான் பேசத்தான் செய்வேன்.. ஏன் இல்லாததையா நான் பேசுறேன், நீங்க அப்படித்தானே இருந்திங்க..?” மகா விடாமல் பேசினாள்.

“மகா.. போதும்ம்ம்..”  விஷ்ணு அவளை கண்டிக்க

ஏன் போதும்..? நான் பேசுவேன், இவன் என் அண்ணா தானே, இதுகூட நான் கேட்க கூடாதா..? என்னடா உன்கிட்ட நான் எதுவும் பேச கூடாதா..? இவர் என்ன ஒவ்வொரு முறையும் என்னை கண்ட்ரோல் பண்ணிட்டே இருக்கார்..”  விஷ்ணுவை கை காட்டி மகா அண்ணனிடம் பாய்ந்தாள்

நீ கேளு மகா, நீ கேட்காம..?  விஷ்ணு விடு அவளை, பேசட்டும், கேட்கட்டும்..”  என்றான் ஈஷ்வர் இருவரிடமும்

சும்மாவே அவ கேட்பா..? நீ வேற கேளுன்னு சொல்ற.. ஏண்டா..?”  விஷ்ணு அவனை பார்த்து  தலை ஆட்டி கொண்டான்

ஏன் உங்களுக்கு அவ்வளவு வலிக்குதா..? அவன் எங்களை விட்டுட்டு இருந்தப்போ எல்லாம் எங்க போயிருந்தீங்க நீங்க..? எடுத்து சொல்ல வேண்டியது தானே..? இப்போ என்னை மட்டும் கண்ட்ரோல் பண்ண தெரியுதில்லை, அவனுக்கும் சொல்லியிருக்கணும் இல்லை..”  விஷ்ணுவை பார்த்து கேட்டாள் மகா

அவன் இவளை முறைக்க, “மகா.. ப்ளீஸ், என்னை என்ன வேணும்ன்னாலும் பேசு, ஆனா இந்த விஷயத்துல விஷ்ணுவை எதுவும் சொல்லாத, அவன் எனக்கு சொல்லிகிட்டே தான் இருந்தான், நான் தான் கேட்கல..” ஈஷ்வர் இடையிட்டு சொன்னான்

மகா கை கட்டி  முகம் திருப்பி கொண்டாள். “விடுடா.. அவளுக்கு மப்பு ஓவராகிடுச்சு, அதான் சலம்பிட்டு இருக்கா..”  விஷ்ணு கோபத்துடன் நக்கலடித்தான்

ஆமா நான்தான் தினம் ஒரு பப்க்கு போய் சரக்கு அடிச்சு கும்மாளம் போட்டுட்டு இருந்தேன், என்ன சொல்ற நீங்க ரொம்ப நல்லவர் தான்..”  மகா கேலியாக சொன்னாள்

அடிங்க.. நான் பீர் மட்டும் தான் குடிப்பேன், ஈஷ்வர் அதுகூட கிடையாது, தெரியாம பேசாத..” விஷ்ணு பேச

ஓஹோ பீர் எப்போ ஆல்கஹால் இல்லைன்னு சொன்னாங்க, எனக்கு தெரியாம போச்சே, அப்போ இனி நான் கூட பீர் குடிக்கலாம் இல்லை..” என்றாள் மகா கிண்டலாக

உன்னை..” விஷ்ணு துறுதுறுத்த வாயை அடக்கி கொண்டான் ஈஷ்வர் இருப்பதால்

விஷ்ணு விடு இப்போ ஏன் இவ்வளவு டென்சன், நாம பேச வந்த விஷயத்தை பேசுவோம்..? வீட்ல பெரியவங்க ஆசைப்படுறது போல ஒரு என்கேஜ்மெண்ட் மட்டும் வச்சுக்கலாம் இல்லை..”  ஈஷ்வர் கேட்டான்.

“ம்ப்ச்.. விடுடா, இப்போ இதை பேச வேண்டாம்..” விஷ்ணு எழுந்தேவிட்டான். மகா அவனையே பார்த்திருக்க, ஈஷ்வர் இருவரையும் புரியாமல் பார்த்து அமர்ந்திருந்தான்

நேற்று இருவர் அப்படி இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் ஆயிரத்தெட்டு வித்தியாசம். “படுத்துறாங்களே..”  நொந்து தான் போனான்

என்னடா கிளம்பலையா..?” ஈஷ்வரை பார்த்து மட்டும் கேட்டான் விஷ்ணு. அவன் திரும்பி மகாவை பார்க்க, விஷ்ணுவும் அவளை பார்த்தவன்

இப்போ எதுக்கு என்னை இப்படி பார்க்கிற..?” கேட்டான். மகா பதில் ஏதும் சொல்லாமல் பார்வையையும் மாற்றாமல் இருக்க, விஷ்ணு வாயாலே மூச்சு விட்டான்

இப்போ என்ன பண்ணனும் நான்..?” அவளிடமே கேட்டான். அதற்கும் மகா பதில் சொல்லவில்லை

ஈஷ்வர் பார்த்தவன், “சரி நான் கிளம்புறேன், நீங்க பேசிட்டு கிளம்புங்க..” எழுந்தான்

ச்சு இருடா.. நீ வேற..” அவனிடம் காய்ந்த விஷ்ணு, “மகா.. என்னை படுத்த கூடாது, வாய் திறந்து பேசு.. என்ன பண்ணலாம்..?”  திரும்ப கேட்டான்

இதை நீங்க வந்தவுடனே கேட்டிருந்தா நான் பதில் சொல்லியிருப்பேன், இப்போ நோ.. நீங்களாச்சு.. இவங்காளச்சு..”  ஈஷ்வரை கை காட்டி கிளம்பியும் விட்டாள்.

மகா..”  ஈஷ்வர் கூப்பிட நிற்கவே இல்லை. “ராங்கி.. என் உயிரை வாங்குறா..?” விஷ்ணு பல்லை கடித்தான்

விஷ்ணு.. முதல்ல கொஞ்சம் பொறுமையா உட்காரு பேசலாம்..”  ஈஷ்வர் சொல்ல

இன்னொரு காபி சொல்லு..”  என்றபடி அமர்ந்தான் விஷ்ணு.

“ஏன் மேரேஜ் வேண்டாம்  சொல்ற..?”  ஈஷ்வர் பொறுமையாக கேட்டான்

சின்னுக்கு எப்போ நினைவு திரும்பும்ன்னு தெரியாம நான் எதுவும் செய்ய விரும்பலடா..”  விஷ்ணு சொல்ல, ஈஷ்வருக்கு புரிந்தது அவன் மனம். அதை சொல்லவும் செய்தான்.

எனக்கு உன்னை புரியுதுடா, ஆனா வீட்ல எதிர்பார்க்கிறதும் தப்பில்லை தானே..? உனக்கும் சரி மகாக்கும் சரி இது சரியான வயசு கல்யாணத்துக்கு, ஏன் தள்ளி போடணும் நினைக்கிறாங்க..”

ஈஷ்வர்.. இது சரியான வயசுங்கிறதுக்காக எல்லாம்   நாங்க கல்யாணம் செஞ்சுக்க முடியாதுடா, என்னோட கவனம் முழுக்க இப்போ சின்னு மட்டும் தான், அவனை இப்படி படுக்க வைச்சுக்கிட்டு நான் மணமேடையில் உட்கார மாட்டேன்..”

உனக்கு தெரியாதுடா மகாவை நான் கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு உங்களை விடஏன் எங்களை விட ரொம்ப ஆசைப்பட்டது அவன் தான்அவனுக்கு இப்படி இருக்கும் போது எப்படிடா..?”  வேதனையுடன் கேட்டான் அண்ணன்

ஈஷ்வருக்கு என்ன சொல்ல முடியும்..? அவனாலும் சின்னுவின் விருப்பத்தை மறுக்க முடியாதே..? ஈஷ்வர் அமைதியாகிவிட, காபியும் வந்தது. அமைதியாக குடிக்க, விஷ்ணுவிற்கோ மகாவின் கோவமான பேச்சே ஓடி கொண்டிருந்தது

வீட்ல என்ன சொல்லலாம் விஷ்ணு..?”  ஈஷ்வர் கேட்க

இப்போ என்கேஜ்மெண்ட் வேணும்ன்னா வச்சுக்கலாம்..”  என்றுவிட்டான். மகாவின் கோவம் ஏதோ ஒரு இடத்தில் இந்த முடிவை எடுக்க வைத்தது போல அவனை

உண்மையாவா..? உனக்கு ஓகே வா..?”  ஈஷ்வர் ஆச்சரியத்துடன் கேட்டான். மகாக்காக தான் இது என்பது புரிய, அண்ணனுக்கு  மகிழ்ச்சியே.  

ஓகே தான்..” என்ற விஷ்ணு காபி குடிக்க, உள்ளே சூடாக இறங்கியது என்னமோ மகா தான்.  

அந்த அரைவேக்காடு தான் என் தலையில எழுதி இருக்குன்னும் போது இந்த நிச்சயம் போய் என்ன செய்யும்.. உண்மையான சம்பவமே அவ தான்..” விஷ்ணு நினைத்தபடி காபி குடித்து முடிக்க

வீட்ல சொல்லிடுறேன்..”   என்று ஈஷ்வரும் எழுந்தான். ஆனால் அங்கு இரு வீட்டிலும் முகூர்த்த தேதியே குறித்து விட்டனர் என்பது தெரியாமல்.

வா விஷ்ணு உனக்கு தான் வெயிட்டிங்..” இவன் வீட்டிற்குள் செல்லவும் துர்கா சொல்ல, சக்கரவர்த்தியும் உடன் இருந்தார்.

என்ன சொல்லுங்க..” விஷ்ணு நிற்க

முதல்ல உட்காரு.. இது கொஞ்சம் பொறுமையா பேச வேண்டிய விஷயம்..” என்றார் சக்ரவர்த்தி

விஷ்ணு அமர்ந்தவன், “அப்படியென்ன முக்கியமான விஷயம், என் கல்யாணம் பத்தி தானே.. நீங்க எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன், இப்போ என்கேஜ்மெண்ட் வேணும்ன்னா வச்சுக்கலாம்..”  என்றான்

இல்லை விஷ்ணு என்கேஜ்மெண்ட் மட்டுமில்லை உங்க மேரேஜும் இப்போ வச்சுக்கலாம்..” என்றார் துர்கா

என்ன விளையாடுறீங்களா..? நான் என்கேஜ்மென்டுக்கு ஓகே சொன்னதே மகாக்காக மட்டும் தான், இல்லைன்னா அது கூட இல்லை..” விஷ்ணு வேகமாக சொல்லி எழ

உட்காரு விஷ்ணு, இப்போத்தானே சொன்னோம் பொறுமையா பேச வேண்டிய விஷயம்ன்னு..” சக்ரவர்த்தி தந்தையின் கண்டிப்புடன் சொன்னார்

ப்பா.. நீங்களுமா..? திரும்ப திரும்ப என்னை சொல்ல வைக்காதீங்க, சின்னு சரியானதுக்கு அப்புறம் எல்லாம் பார்த்துக்கலாம் விடுங்க..” என்றான் எரிச்சலாக