அடங்காத நாடோடி காற்றல்லவோ 14 2 15669 “என்னடி..?” விஷ்ணு புரியமால் கேட்க, “உங்க ஆப்ஷனுக்கு நான் ஆளில்லைன்னு முதல்லே சொல்லிட்டேன்..” என்றாள் மூக்கு விடைக்க. “மகா.. நான்..” “சமாளிக்க பார்க்காதீங்க, சின்னுக்காக தானே கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்றீங்க..?” “இல்லை.. எனக்காக..” என்றான் விஷ்ணு அழுத்தமாக. “நான் நம்ப மாட்டேன்..” மகா அவனிடம் இருந்த கையை வலுவாக பிடுங்கி கட்டி கொண்டாள். “ஏன் நம்ப மாட்ட..? எனக்கு நீ வேணும்ன்னு நான் நினைக்க மாட்டேனா..?” “வேணுங்கிறது வேற, கல்யாணம் முடிச்சிட்டு வாழறது வேற.. அவ்வளவு சீக்கிரம் நாம அடாப்ட் ஆக மாட்டோம்.. உங்களுக்கு இன்னும் கூட டைம் தேவைப்படும்..” “அதை நான் பார்த்துகிறேன், என் பொண்டாட்டிகூட எப்படி வாழனும்ன்னு எனக்கு தெரியும்..” “அஹா..” மகா முகம் திருப்பினாள். “என்னடி அவ்வளவு அலட்சியமா மூஞ்சை திருப்பிற..?” விஷ்ணு அவள் கன்னம் பிடித்து திருப்பினான். “பின்ன உங்க டைலாக் நல்லா இருக்குனு கை தட்டணுமா..?” மகா அவன் கை தட்டிவிட்டாள். “டைலாக்கா..? மகா என்ன ஆச்சு உனக்கு..?” விஷ்ணு நிதானத்துடன் கேட்டான். “இத்தனை மாசம் இது செட் ஆகாது, வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்திட்டு இப்போ மட்டும் என்ன..?” பட்டென கேட்டாள். “உனக்காக தான் நான் சொன்னேன், நீ பெஸ்ட் லைப் பார்ட்னரை டிசர்வ் பண்ற.. நான் அப்படி இருப்பேனான்னு எனக்கு இப்போவும் தெரியல..” “ஹேய் இது நல்ல டேட்டிக்ஸ், இப்போ நான் அப்படி இல்லைன்னு சண்டை பிடிக்க முடியாதே..?” என்றாள் மீண்டு விட்ட குறும்புடன். “பின்ன அதுக்கு தான் இப்படி சொல்றதே..” அவள் சிரிப்பில் இவனும் இலகுவானான். “உன்கூட இருந்தா நான் ரொம்ப பாசிட்டிவ்வா பீல் பண்றேன் மகா.. தேங்ஸ்..” மனதார சொன்னான். “ஏன் உங்க ஈஷ்வர் கூட இருந்தா அப்படி இல்லையாக்கும்..?” “எதிர்பார்த்தேன்டி.. நீ அங்க தான் வருவேன்னு.. என் ஈஷ்வர் கூட எல்லாம் கம்பேரிசனே இல்லை.. அவனும், நானும் வேற மகா..” “இருந்துட்டு போங்க எனக்கென்ன..?” “ஏய் உனக்கு பொறாமை வருதா..?” “ஆசை தான்..” உதட்டை சுளித்தாள். “பொறாமை கூட அழகு தாண்டி.. அதுவும் உனக்கு அது வரும் போது பேரானந்தமா இருக்கு..” “இருக்கும் இருக்கும்.. நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா நான் இஷான் கிட்ட பேச வேண்டியிருக்கும் பார்த்துக்கோங்க..” “இதுக்கு நீ சொன்னது தான் உனக்கும்..” என்றான் விஷ்ணு குறுஞ்சிரிப்புடன். “நான் என்ன சொன்னேன்..?” மகா புருவம் சுருக்க, விஷ்ணு அக்கம் பக்கம் பார்த்தான். நடு இரவு நேரம் என்பதால் அந்த பார்க்கிங் காலியாக இருக்க, வெளிச்சமும் குறைவாக இருக்க, எட்டி அவள் கை பிடித்து பக்கத்தில் இழுத்தான். “என்ன செய்றீங்க..?” மகா தடுமாற்றத்துடன் கேட்டாள். “சொல்றேன் வா..” என்றவன் அவன் மூச்சு காற்று உரசும் அளவு நிறுத்தி அவள் கீழ் உதடை இரு விரல்களால் பிடித்தான். மகா அவன் செயலில் கண் விரித்து பார்க்க, அவள் உதட்டை லேசாக தன்னை நோக்கி இழுத்தவன், “நீ யார்கிட்ட பேசினாலும் இந்த உதடு இருக்கே இந்த உதடு இது என்கூட மட்டும் தான் ஒட்டும், உரசும், கடிக்கும், உறிஞ்சும்.. ம்ம்.. இன்னும் இருக்கு.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் சொல்றேன்..ம்ஹூம்.. எதுக்கு சொல்லணும், செஞ்சே பார்த்துடலாம்.. என்ன ஓகேவா..?” அவள் கண்களை பார்த்து அடிக்குரலில் வசியம் செய்தான் அத்தான். மகாவிற்கு அவன் முகத்தை விட்டு கண்கள் அகலவில்லை. அவனின் புது அவதாரத்தை அதிசயமாக, ஆச்சரியமாக, அதிர்ச்சியாக, திகைப்பாக, சிலையாகவே பார்த்து நின்றாள். அவளின் மருண்ட பார்வை விஷ்ணுவிற்கும் புதுவித உணர்ச்சியை தூண்டி விட்டது போல. அதுவரை அவளை சீண்ட பேசி கொண்டிருந்தவன், அவள் பார்வையில் விரல்கள் தன்னை போல அழுத்தம் கொடுத்தது அவளின் உதட்டிற்கு. “ஸ்ஸ்..” மகா லேசாக முனக, விஷ்ணு விரல்கள் அவள் உதட்டை வருடி கொடுக்க ஆரம்பித்தது. “நீ சிங்காரி சரக்கு தாண்டி, சும்மா கும்முன்னு உள்ள இறங்குற.. நல்லா இருக்கு..” ஹஸ்கி குரலில் அவளை கரைத்து, அவனும் அவளுடனே கரைந்து கொண்டிருந்தான். அவனின் வார்த்தையில் மகாவிற்கு அவளின் நிலை புரிய, பட்டென தள்ளி நின்றவள், அவனை பார்க்க முடியாமல் தவிப்புடன் எங்கோ பார்த்து நின்றாள். விஷ்ணுவும் தலை கோதி கொண்டான். ஆனால் இருவர் முகத்திலும் மின்னல் கூடிதான் இருந்தது. அந்நேரம் மகாவின் போன் சத்தத்துடன் ஒலிக்க, வேகமாக எடுத்தாள். ஈஷ்வர், நிமிர்ந்து விஷ்ணுவை பார்த்து எடுத்தாள். “எங்க இருக்கீங்க..?” ஈஷ்வர் குரல் விஷ்ணுவிற்கும் கேட்டது. “இங்க பார்க்கிங்க்ல..” மகா சொல்ல, இதோ வரேன்.. என்று வைத்தவன், அடுத்த சில நொடிகளில் வந்தான். “இங்க தான் இருக்கீங்களா..? இவ்வளவு நேரம் தேடினேன்..” இருவருக்கும் பொதுவாக சொன்னவன், “உன் போன் ஏன் சுவிட்ச் ஆப்ல இருக்கு..?” என்றான் விஷ்ணுவை பார்த்து கோவமாக. அப்போது தான் விஷ்ணுவும் எடுத்து பார்க்க, சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. “ம்ப்ச்.. பார்க்கல..” என்றவன், மகாவை பார்க்க, அவள் முகத்தின் மறையாத சிவப்பு இப்போது கண்ணில் பட்டது. அவனின் மனது கொஞ்சம் குறுகுறுத்ததோ. அவளையே பார்க்க, ஈஷ்வர் இருவரையும் புருவம் சுருக்கி பார்த்தவன், “என்ன திரும்பவும் சண்டை போட்டீங்களா..?” என்றான். மகா என்ன சொல்ல என்று விஷ்ணுவை பார்க்க, அவனோ அவளை குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தானே..!! “அப். அப்படி எல்லாம் இல்லை..” என்றாள் தானே சமாளித்து அண்ணனிடம். “நம்பிட்டேன், சரி கிளம்பிட்டியா..?” என்றான் விஷ்ணுவை பார்த்து. “ம்ம்..” என்ற விஷ்ணு அப்போது தான் யோசித்தவனாக, “ஆமா நீ எப்படி இங்க வந்த..?” என்று சந்தேகமாக கேட்டான். “உன் போன் சுவிட்ச் ஆப், அதான் டிராக் பண்ணேன்..” ஈஷ்வர் தோளை குலுக்கினான். “உன் போலீஸ் வேலையை என்கிட்டேயே காட்டுற போல..” என்றான் கோபத்துடன். “ஆமா இப்போ என்ன..? நீ கோவமா கிளம்பி வந்திட்ட, போனும் ஸ்விச் ஆப், அதான் பண்ணேன், இனியும் நீ இப்படி செஞ்சா நானும் இதை தான் பண்ணுவேன்..” என்றான் அவனும் நேராக. “நான் உன்னை வீட்டுக்கு தானே போக சொன்னேன்..”விஷ்ணு கேட்க, “நான் போவேன்னு நீ எப்படி எதிர்பார்த்த..” ஈஷ்வர் பாய்ந்தான். “அப்போ நீ இங்கேயே இரு.. நான் கிளம்புறேன்..” என்ற விஷ்ணு மகாவை பார்க்க சட்டென்று ஒரு இளக்கம். “நான் வரேன்..” என்றவன் குரலும் சற்று வித்தியாசமாக தான் ஒலித்ததோ..? மகாவிற்கும் அது புரிந்தது போல, அவளுக்கும் அவனை நேராக பார்க்க முடியாமல் எது தடுத்ததோ..? ம்ம்.. என்று தலை மட்டும் ஆட்டினாள். விஷ்ணு அவளிடம் இருந்து பார்வையை திருப்ப முடியாமல் அவன் பைக்கில் ஏற, “பை மகா.. நான் உனக்கு பேசுறேன்..” என்று ஈஷ்வரும் விஷ்ணு பைக்கில் ஏறினான். அதில் விஷ்ணு பழைய படி உர்ரென்ரானவன், “நீ எங்க வர.. இறங்குடா..” என்றான். “முடியாது.. நீ எடு, இல்லை இறங்கு நான் ஓட்டுறேன்..” ஈஷ்வர் சட்டமாக அமர்ந்தான். மகா தலை ஆட்டி கொண்டவள், “ நீங்க ஒரு முடிவுக்கு வந்து கிளம்புங்க.. எனக்கு டியூட்டி இருக்கு, நான் கிளம்புறேன்..” என்று கிளம்பிவிட்டாள். விஷ்ணுவும் பைக்கை கிளப்ப, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ஈஷ்வர் அன்றும் அங்கேயே தூங்கி எழுந்து வீடு சென்றான். அன்றிரவு வீட்டிற்கு வந்த ஈஷ்வர், “உன்கிட்ட பேசணும் விஷ்ணு..” என்றான் சீரியசாக. விஷ்ணு கேள்வியாக பார்க்க, “என்னன்னு வாய் திறந்து கேட்க மாட்டியா..? பல்லவியையும், அனுவையும் எல்லோருக்கும் காட்ட ஒரு பங்க்ஷன் வைக்கணும்ன்னு அம்மா கேட்டுட்டு இருக்காங்க, என்ன பண்ணலாம்..?” என்றான். “என்ன பண்றதுன்னா வைக்கிறது தானே சரி..” என்றான் விஷ்ணு புரியாமல். “வைக்கலாம், ஆனா நீ என்ன முடிவு எடுத்திருக்கன்னு சொல்லு..” கேட்டான் ஈஷ்வர். “இதுக்கும் எனக்கும் என்னடா சம்மந்தம்..?” “எனக்கு உன்னை இப்படி விட்டு எந்த பன்க்ஷனும் செய்ய முடியாது, நீ வீட்டுக்கு போ, எல்லோர் கூடவும் இரு, இப்படி உன்னை தனியா விட முடியாது..” என, விஷ்ணுவிற்கு அவன் மனது புரிந்தது. “நான் வீட்டுக்கு போறேன்..” என்றுவிட்டான். “உண்மையாவா..?” ஈஷ்வர் சந்தேகமாக கேட்க, “வேணும்ன்னா நீயே என்னைகொண்டு போய் வீட்ல விடு..” என்றான் நக்கலாக. “எனக்கு ஓகே தான், இப்போவே போவோமா..?” “ஏன் நீ வீட்டுக்கு போகணுமாக்கும்..” “ச்சு..போடா, நீ மனசு மாறிட கூடாதுன்னு தான் கேட்டேன்..” “அப்பறம் ஏண்டா மூஞ்சு மின்னுது.. போடா.. போடா..” ரூமிற்கு சென்றுவிட்டான். மறுநாள் ஈஷ்வர் வரும் போதே கையில் ஒரு பார்சலுடன் வந்தவன், அதை விஷ்ணுவிடம் கொடுத்தான். விஷ்ணு அதை பக்கத்தில் போட்டு டிவி பார்க்க, “ஓவரா பண்ணாதடா, இது உன்னோட ட்ரெஸ் பங்க்ஷன்க்கு போட்டு வர.. அப்புறம் வரும் போது இந்த தாடி, முடி எல்லாம் எடுத்துட்டு கொஞ்சம் நீட்டா வா..” என, விஷ்ணு அவன் சொன்னதற்காகவே அந்த உடையையும் போடாமல், தாடி, முடியுடனே பங்க்ஷனிற்கு சென்றான். அவன் அங்கு சென்ற நேரம் அனு பல்லவியை தேடி அழுது கொண்டிருக்க, மகாவுடன் மேடைக்கு சென்றான். கூட்டம் நெருக்க, மகாவை அணைவாக பிடித்தவன், அவள் புடவை விலகியதில் உரிமையாக கோவம் கொண்டு அதட்டி சரி செய்ய சொன்னான். அனுவுடன் மேடைக்கு சென்றவன், ஈஷ்வரின் முறைப்பை சட்டை செய்யாமல் மகாவுடன் இறங்கிவிட்டான். “விஷ்ணு எப்போ வீட்டுக்கு வர..?” துர்கா கேட்க, “இப்போவே உங்களோடே வரேன்..” என்றான் மகாவை பார்த்து. அவள் ஆச்சரியமாக கண் விரிக்க, துர்காவும், “உண்மையாவா விஷ்ணு..?” என்றார். “உண்மைம்மா..” என, கங்கா உடனே, “அப்போ மகாவை வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டா அண்ணி..” என்றார் துர்காவிடம். மகா, விஷ்ணு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். துர்காவிற்கு மறுக்க முடியவில்லை. இத்தனை நாள் அவர் விட்டதே பெரிதல்லவா..? “சரி.. சரிங்க அண்ணி.. இப்போ எங்களோடு வீட்டுக்கு வரட்டும், நாளைக்கு கூப்பிட்டுக்கோங்க..” என்றார். கங்காவும் மறுக்க முடியாமல், சரிங்க அண்ணி.. என, எல்லோரும் உணவுண்ண சென்றனர். இரவு வெகு நேரம் சென்று பங்க்ஷன் முடிய, ஈஷ்வர், பல்லவி உணவுண்ண அமர்ந்தனர். அவர்களுக்கு விஷ்ணு முன் நின்று பரிமாற, சக்ரவர்த்தி வந்தார். விஷ்ணுவிற்கு என்னமோ அவரை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. எவ்வளவு கெஞ்சி இருப்பார் வீட்டிற்கு வர சொல்லி.. மகாவை கூப்பிட்டு சொன்னவன், வெளியே வந்துவிட்டான். எல்லாம் முடிய, “கிளம்பலாமா விஷ்ணு..?” என்றார் துர்கா. அவன் திரும்பி ஈஷ்வரை பார்க்க, அவன் மனைவி, கையில் மகளுடன், யாரிடமோ பேசி கொண்டிருந்தான். “ம்ம்.. போலாம்மா..” என்று துர்கா, மகாவுடன் காருக்கு சென்றான். ஈஷ்வர் பார்த்து கொண்டவன் மனம் நிம்மதி ஆனது. அன்றிரவு அவனும் நரசிம்மன், பல்லவியிடம் மனம் விட்டு பேசினான். அங்கு விஷ்ணு வீட்டிற்குள் சென்றவுடன், கால்கள் சற்றே நடுக்கம் கொண்டது. நீண்ட மாதங்கள் சென்று தம்பிய பார்க்க போகிறானே. துர்கா முன்னால் மகனை பார்க்க சென்றுவிட, மகா அவன் நிலை புரிந்து அவனுடன் நின்றவள், “வாங்க..” என்று அவன் கை பிடித்து முன்னால் நடக்க, விஷ்ணு அவள் பின்னால் தன்னை போல சென்றான். ரூம் கதவு திறந்திருக்க, துர்கா மகனை பார்த்து கொண்டிருக்க, விஷ்ணு கண்கள் படுத்திருந்த தம்பி மேலே நிலைத்தது. சில நொடிகளில் பார்வை மங்கியது. இமை சிமிட்ட, கண்ணீர் துளி மார்பில் விழ, இப்போது தம்பி நன்றாக தெரிந்தான். அடுத்த சில நொடிகளில் திரும்பவும் மங்கலாக தெரிந்தான். மகா விஷ்ணுவை சின்னு பக்கத்தில் நிற்க வைத்தாள். மருத்துவ உபகரணங்களுடன் தூங்குவது போல படுத்திருந்தான் சின்னு. முன்பை விட முகம் இன்னும் முதிர்ச்சி அடைந்திருக்க, உடலும் அப்படி ஒன்றும் மெலியவில்லை. துர்காவின் ஆரோக்யமான கவனிப்பில் பார்வைக்கு நன்றாகவே தெரிந்தான் தம்பி. “இவனை பார்க்கவா இத்தனை மாதம் ஓடி ஒளிந்தேன்..?” அவன் பக்கத்தில் அமர்ந்து கை பிடித்தான். துர்கா பெரிய மகன் வந்துவிட்ட மகிழ்ச்சியில் அவன் தலை முடி வருட, விஷ்ணு தம்பி கை பிடித்து அமர்ந்தவன், அவனை பார்க்க பார்க்க தாங்க முடியாதவனாக அவன் கையிலே முகம் புதைத்து கதறிவிட்டான். மகா, துர்கா இருவரும் கண்ணிலும் கண்ணீர் வழிய நின்றிருந்தனர். சக்ரவர்த்தி வெளியே சென்று வந்தவர், பெரிய மகனின் அழுகையில் நம்ப முடியாதவராக உள்ளே வந்து பார்த்தார். விஷ்ணு தம்பி கையை பிடித்து அழுது கொண்டிருக்க, அவருக்கும் கண்ணீர் வழிந்தாலும் இனி எல்லாம் சரியாகிடும் என்ற நம்பிக்கை பிரகாசமாக தெரிந்தது.