அடங்காத நாடோடி காற்றல்லவோ 14 1 14594 அடங்காத நாடோடி காற்றல்லவோ 14 “இப்போ எல்லாம் லிவிங் டூகெதர் கூட சாதாரணம் ஆயிடுச்சு, அதுக்காக அப்படி இருக்க முடியுமா..?” விஷ்ணு கிண்டலாக கேட்க, “உங்களுக்கு ஆசை இருக்கும் போலயே.. இருப்போமா..?” என்றாள் மகாவோ கண்ணடித்து. அவள் பேச்சை எப்போதும் போல ரசித்து சிரித்த விஷ்ணு, “உனக்கு ஏத்தம் கூடி போச்சுடி.. நான் கிளம்புறேன்..” எழுந்து நடக்க ஆரம்பித்தான். தானும் எழுந்து உடன் நடந்த மகா, “எங்க போவீங்க..?” என்றாள் புருவம் தூக்கி. “வேறெங்க வீட்டுக்கு தான்..” விஷ்ணு நடந்தபடியே அவளை திரும்பி பார்த்து சொன்னான். “அங்க எப்படி போவீங்க..? அதான் உங்க ஈஷ்வர் கூட லடாய் ஆச்சே மறந்துட்டீங்களா..?” என்றாள் கேலியாக. “விட்டா நீயே எங்களுக்குள்ள சண்டை வர வச்சிடுவ போலயே, அது ஜஸ்ட் ஆர்கியூமென்ட் தான்..” என்றான் விஷ்ணு வீம்பாக. “அது தெரியுது..” மகா கிண்டலாக சிரிக்க, விஷ்ணு அவள் தலையை பிடித்து ஆட்டினான். “ச்சு.. முடியை கலைக்காதீங்க..” மகா அவளின் முடிய ஒரு பக்கமாக கோதி விட்டு சரி செய்தாள். “க்கும் என்னமோ பத்தடி முடியை வாடி பின்னியிருக்கிற மாதிரி அலுத்துகிற, அதுவே கலைஞ்ச மாதிரி தான் இருக்கு..” என்றான் விஷ்ணு கேலியாக. “டாக்டருக்கு அந்த ஆசை வேற இருக்கா..? அச்சோ பாவம் உங்களுக்கு இந்த மூணு அடி முடிகாரி தான் எழுதியிருக்கு..” மகா அவளின் ப்ரீ ஏர் பறக்க சிலுப்பினாள். “அவர் எழுதினாரோ இல்லையோ நீயே எழுதிகிட்ட.. உண்மையை சொல்லணும்ன்னா நீ தான்டி பாவம்..” சீண்டலாக சொன்ன விஷ்ணு பார்க்கிங்கில் நின்ற அவன் பைக்கின் மேல் சாய்ந்து நின்றான். “யார் பாவம்ன்னு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராதீங்க மிஸ்டர் பாய்லர்..” மகா கெத்தாக சொல்ல, விஷ்ணு அவளை கொஞ்சம் உரிமையுடன் தான் பார்த்தான். “என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு.. விட்டா இப்போவே வீட்டுக்கு போன் போட்டு நாளைக்கே நம்ம கல்யாணத்தை வைக்க சொல்லிடுவீங்க போலயே..” குறும்புடன் சொன்னாள். “அது ஏன் நாளைக்கு, இப்போவே பண்ணிப்போமா..?” விஷ்ணுவும் கண்ணடித்து கேட்க, மகா புருவம் தூக்கி ஆச்சரியம் காட்டியவள், “டாக்டருக்கு ப்ரண்ட் கூட சண்டை போட்டதுல மூளை நல்லா வேலை செய்யுது போலயே.. நல்லது தான், இனி அவன் கூட சேராதீங்க..” கலாய்க்க, விஷ்ணு அவள் தலையில் கொட்டினான். “உனக்கென்ன அவ்வளவு ஆசை எங்க சண்டையில.. ம்ம்..” உர்ரென்னு கேட்டான். “பின்ன என் ஒரே அண்ணன் என்னை சுத்தமா கண்டுக்கிறதில்லை, உங்க பின்னாடியே சுத்துறான், என் வருங்காலம் நீங்களும் என்னை கண்டுக்க மாட்டேங்கிறீங்க, அவன் நினைப்புலே சோக கீதம் வாசிக்கிறீங்க..” “அதான் நீங்க ரெண்டு பேரும் இப்படியே அடிச்சுகிட்டு பிரிச்சிஞ்சுட்டா எனக்கு சந்தோசம் தானே, அண்ணனும் கிடைப்பான், அத்தான் பார்வையும் இந்த மகா பக்கம் திரும்பும்..” கிண்டலாக சொன்னாலும் அதில் உள்ள உண்மையும் விஷ்ணுவிற்கு புரிந்தது. முன்னமே ஈஷ்வரை நினைத்து அழுதவள் ஆயிற்றே. “சாரிடி.. ஈஷ்வர் உன்னை கவனிக்காம எல்லாம் இல்லை, அவனுக்கு நேரம் இல்லை அவ்வளவு தான்..” என்றான் நண்பன் பக்கம் சமாதானமாக. “அவனுக்கு என்னை கவனிக்க நேரம் இருக்காதுன்னு எனக்கு தான் முதல்லே தெரியும் இல்லை.. விடுங்க..” மகா கொஞ்சம் விரக்தியாகவே சொன்னாள். “ஏய் என்னடி அவன் தான் சின்னு கேஸ்க்காக ஓடிட்டு இருந்தான்னு தெரியும் இல்லை.. அன்னிக்கு நீ கூட அண்ணனை பாய்ஞ்சு கட்டிக்கிட்டு அப்படி அழுத.. இப்போ என்ன..?” என்றான் விஷ்ணு. ஈஷ்வர் என்கவுண்டர் செய்த அன்று நியூஸ் பார்த்து அண்ணனை பார்க்க அடித்து பிடித்து வந்ததை சொன்னான். “அவனை கட்டிப்பிடிச்சு அழுதேன் தான், ஆனா அது சின்னுக்கு நியாயம் செய்தாங்கிறதுக்காக மட்டும் தான்..” கோவமாக சொன்னவள், “ஆமா நீங்க என்ன அவனுக்கு மவுத் பீஸா, உங்க ரெண்டு பேருக்குள்ள நாங்க யாராவது பேசிட்டா மட்டும் என்ன கோவத்துக்கு வரீங்க, அப்புறம் நீங்க மட்டும் எதுக்கு எனக்கும், அவனுக்கும் இடையில பேசுறீங்க, முதல்ல நீங்க என்னை கண்டுக்கல சொன்னேன் இல்லை அதுக்கு பதில் சொல்லுங்க, அவனுக்கு ஏத்துக்கிட்டு என்கிட்ட பேசாதீங்க, அப்பறம் மகா கோவத்தை நீங்க பார்க்க வேண்டியிருக்கும்..” என்றாள் மிரட்டலாக. “யப்பா.. என்னா கோவம்..? விடு இனி உங்க விஷயத்துல பேச மாட்டேன்..” என்றான் கை தூக்கி சரண்டராக. “அது..” என்று கெத்தாக முகம் தூக்கியவள், “இன்னும் நான் உங்களை சொன்னதுக்கு பதில் வரல..” என்றாள் அதிலே கண்ணாக. “விட மாட்டியே.. என்னடி பதில் சொல்ல அதுக்கு..?” என்றான் கண் சுருக்கி. “முடிஞ்சது முடிஞ்சு போச்சு என் மாமன் மகளே, இனி உன்னை பார்ப்பேன், கண்டுப்பேன் சொல்றீங்களா பாருங்க..” கழுத்தை வெட்டினாள். “கண்டிப்பா உன்னை தான் பார்க்கணுமா என்ன..?” விஷ்ணு வம்பாக கேட்டான். “அவ்வளவு கஷ்டப்பட்டு என்னை யாரும் பார்க்க வேண்டாம், போங்க..” மகா நொடித்து கொண்டு கிளம்ப அடி எடுத்து வைக்க, அவள் கை பிடித்தவன், “இருடி.. என்ன அவசரம்.. இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு போ..” என்றான் கை விடாமல். “அதான் வீட்டுக்கு கிளம்புறேன்னு தானே வந்திங்க.. கிளம்புங்க..” என்றாள் கையை இழுத்து. “வீட்டுக்கு போக பிடிக்கல..” விஷ்ணு அவள் கையை தன் கையுடன் பிணைத்து கொண்டான். “ஏன்..? அப்படியென்ன அண்ணாகூட சண்டை.. ஓகே ஓகே சண்டை இல்லை.. ஆர்கியூமென்ட்..” அவன் முறைப்பில் மாற்றி கேட்டாள். “ம்ப்ச்.. வீட்டுக்கு போக சொல்றான்..” என்றான். “அவன் சொல்றதும் சரி தானே..?” “நீயுமா மகா..?” “எல்லோரும் இதை தான் சொல்வோம், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும் சொல்லுங்க..?” “அது எனக்கும் புரியுது, நானும் வீட்டுக்கு வர யோசிச்சிட்டு தான் இருக்கேன்.. ஆனாலும் சின்னுவை அப்படி பார்க்க என் மனசுக்கு இன்னும் தைரியம் இல்லடி..” “வர வைங்க.. தைரியம் இல்லை, தைரியம் இல்லைன்னு இப்படியே தள்ளி இருக்க முடியுமா..? பாவம் அத்தை தனியாளா மகனை மீட்க போராடிட்டு இருக்காங்க.. நீங்களும் வந்து அவங்களுக்கு உதவலாம் இல்லை..” “அதான் நீ இருக்கியே..” “நான் இருந்தா நான் நீங்களாகிட முடியுமா..?” “என்ன சொல்ற மகா..?” “ஆமா சின்னு கூட நீங்க இருந்தா உங்க பிரசன்ஸ் அவனை சீக்கிரம் மீட்டு கொண்டு வர வாய்ப்பிருக்கு..” மகா உறுதியாக சொன்னாள். “உண்மையாவாடி.. நான் அவன்கூட இருந்தா அவன் கோமாவுல இருந்து வர வாய்ப்பிருக்கா..” விஷ்ணு அவ்வளவு எதிர்பார்ப்புட னும், சந்தேகத்துடனும் கேட்டான். “நிச்சயமா இருக்கு, சின்னுக்கு அத்தை, மாமாவை விட உங்களோட தான் எமோஷனல் அட்டேச்மெண்ட் அதிகம்.. அவன் மனசும், உணர்வும் உங்களை உணரும், தேடும்..” “ஆமாடி எனக்கு ஏன் இது புரியாம போச்சு, என் சின்னு என்னை புரிஞ்சுப்பான் இல்லை.. நான் அவன் கூட இருந்தா அவன் என்னை உணர்வான் இல்லை..” விஷ்ணுவிற்கு இப்போதே தம்பியிடம் செல்லும் வேகம். “கண்டிப்பா அவனும் உங்களை மிஸ் பண்ணிட்டு தான் இருப்பான், சீக்கிரம் அவனை வந்து பாருங்க..” என்றாள் அவன் கையில் இருந்த தன் கையில் அழுத்தம் கொடுத்து. விஷ்ணு முகத்தில் இப்போது தான் ஜீவன் மீள ஆரம்பித்தது. “இப்படி நான் யோசிக்கவே இல்லைடி..” ஆழ்ந்த வேதனையுடன் சொன்னான். “யோசிக்க முடியாதுங்க, மைண்ட் பிளாங்காகிடும்.. இதுல வேதனைப்பட எதுவும் இல்லை.. எனக்குமே இது காலையில தான் தோணிச்சு..” “ஏன் அப்படி உனக்கு தோணுச்சு..?” “அவன் ஆப்பரேஷன் தியேட்டர் போறதுக்கு முன்னாடி என்கிட்ட சொன்ன வார்த்தை தான் அதுக்கு காரணம்..” “என்ன சொன்னான்..?” விஷ்ணுவிற்கு உள்ளுக்குள் நடுக்கம் எழுந்தது. “என் அண்ணனுக்காக நான் கண்டிப்பா வருவேன் சொன்னான்..” மகா சொன்ன நொடி விஷ்ணு கண்களில் கண்ணீர் தேங்கிவிட்டது. “இந்த வாழ்க்கை எதுக்குன்னு நினைச்சிட்டு இருந்தவன், கடைசில உங்களுக்காக மீண்டு வரணும் நினைச்சான், அதனால தான் சொல்றேன் வீட்டுக்கு வாங்க, அவனோட இருங்க.. கண்டிப்பா அவன் கோமாவில இருந்து எழுந்திடுவான்..” “ம்ம்..” விஷ்ணு அவள் கைகளை தன் கைகளுக்குள் இறுக்கமாக பிடித்து நின்றான். மகாவிற்கு அவன் உணர்வுகள் புரிந்தது. “பாஸ்ட்டை விடுங்க, எப்போ வீட்டுக்கு வர போறீங்க..?” கேட்டாள். “சீக்கிரமே..” விஷ்ணுவிடம் கொஞ்சம் உறுதி தெரிந்தது. “வாங்க.. வாங்க.. அப்போ தான் நான் எங்க வீட்டுக்கு போக முடியும், அம்மா புலம்பிட்டே இருக்காங்க..” என்றாள் மகா பேச்சை மாற்ற. “ஏன்.. நீ ஏன் வீட்டுக்கு போற..? அதெல்லாம் வேண்டாம், நம்ம வீட்லே இரு..” என்றான் விஷ்ணு வேகமாக. “என்ன எனக்கு ஒரே ஆச்சரியமா கொடுக்கிறீங்க.. நான் எப்படி அங்க இருக்க முடியும்..? இப்போதான் நீங்க இல்லை, அத்தைக்கு உதவியா சின்னுவை பார்த்துக்க இருக்கேன், இனி நீங்க வந்துடுவீங்க இல்லை, அம்மா என்னை விட மாட்டாங்க” “நான் வந்துட்டா..? சரி விடு நான் அத்தைகிட்டே பேசிக்கிறேன்..” “பேசினா உங்களுக்கு தான் கஷ்டம் பார்த்துக்கோங்க..” “எனக்கென்ன கஷ்டம்..?” “பின்ன உங்களோட என்னை ஒரே வீட்ல எப்படி தங்க விடுவாங்க..? அப்படி நீங்க கேட்டா கல்யாணம் முடிச்சிட்டு இருங்கன்னு தான் சொல்லுவாங்க..” “கல்யாணம் தானே பண்ணிப்போம்..” என்றான் விஷ்ணு நொடியும் தாமதிக்காமல். மகா பதில் சொல்லாமல் அவனை தீர்க்கமாக பார்த்தாள்.