அடங்காத நாடோடி காற்றல்லவோ 13 2 15129 “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளிய முடியும் விஷ்ணு, ஏன் இவ்வளவு பயம் உனக்கு சின்னுவை பார்க்க..? ஒரு அண்ணனா உன்னோட கடமைன்னு ஒன்னும் இல்லையா..? அவனை இப்படி படுக்கையிலே வச்சிட்டு இருக்க போறியா..? பக்கத்துல இருந்து அவனை சரி பண்ண எதுவும் செய்ய மாட்டியா..?” “ஈஷ்வர்.. போதும்டா பேசாத..” “ஏன் பேச கூடாது, நான் பேசுவேன், கேட்பேன், நீ பதில் சொல்லு, எப்போ வீட்டுக்கு போற, எப்போ ஒரு பொறுப்பான அண்ணனா உன் கடமையை செய்வ..?” ஈஷ்வர் படபடவென பொரிந்து தள்ள, “போதும்டா.. நான் பொறுப்பில்லாத அண்ணன் தான், ஓடி ஒளியறேன் தான், ஏன் நாளைக்கு நானும் ஜடமா படுத்துட்டா..” “விஷ்ணு..” ஈஷ்வர் தாங்காமல் அவன் மேல் கையை ஓங்கிவிட்டான். “ஏண்டா கோவப்படுற, நான் உண்மையை தான் சொல்றேன், நாளைக்கு நானும் அப்படி படுத்துட்டா நீயும் என்னை மாதிரி தாண்டா ஓடி ஒளிவ..” “விஷ்ணு எனாப், இதுக்கு மேல பேசாத..” ஈஷ்வர் குரல் நடுங்கி தான் வந்தது. “வலிக்குது இல்லை சொன்னதுக்கே துடிக்குது இல்லை.. எனக்கும் அப்படித்தான் இருக்கு.. போடா..” வெளியே வந்து பைக் எடுத்தான். “விஷ்ணு.. நில்லுடா..” ஈஷ்வர் பின்னால் வர, “நீ என்கூட வராத, வீட்டுக்கு கிளம்பு, நான் நைட்டுக்கு வரமாட்டேன்..” கிளம்பிவிட்டான். இரண்டு நாட்களாக அவனுக்கும் ஈஷ்வருக்கும் முட்டுவது வேறு வருத்தத்தை கொடுத்தது. மகா, சின்னு என்று இருவருகாக அடித்து கொள்கின்றனர். அந்த இருவரும் இவர்கள் இருவருக்கும் மிகவும் முக்கியமானவர்கள் ஆயிற்றே. பைக்கை ஓட்ட முடியாமல் ஓரிடத்தில் நிறுத்தி பைக்கின் மேலே அமர்ந்துவிட்டான். ஈஷ்வரிடம் திரும்பி போக நினைத்தான். ஆனால் இப்படியே விட்டால் அவன் இவனோடே இருந்து விடுவான், போகட்டும், அவன் வீட்டுக்கு போகட்டும் என்று நினைத்து அங்கேயே இருந்தவன் போன் அடிக்க ஈஷ்வரோ என்று பார்த்தால் மகா. எடுத்தவன், “எங்க இருக்க..?” கேட்டான். “கேம்பஸ்ல தான்.. நைட் டியூட்டி..” என்றாள் மகா. “ஓகே நான் வரேன்..” என்று அவளை பார்க்க கிளம்பிவிட்டான். “என்ன திடீர்ன்னு..?” விஷ்ணு வந்து நிற்கவும், மகா ஆச்சரியத்துடன் கேட்டாள். “ம்ம்.. அபிதாவை பார்க்க வந்தேன்..” என்றான் கிண்டலாக. “அச்சோ சாரி.. அதுக்கான வழியை அடைச்சாச்சே..” என்றாள் மகா உச்சு கொட்டி பாவமாக. “யார் அது என் வழிய அடைச்சது..?” விஷ்ணு கேட்டபடி அவள் ஸீட்டில் அமர்ந்தான். “தி கிரேட் மகாலக்ஷ்மி நரசிம்மன்..” என்றாள் கோட்டை தூக்கிவிட்டபடி. “பெரிய பந்தா தான்..” என்றவன் அவள் ஸ்டெத் எடுத்தான். நீண்ட மாதங்கள் கழித்து ஸ்டெத்தை கையில் எடுக்கிறான். உள்ளுக்குள் அவ்வளவு ஒரு குளிச்சி, நிறைவு தான். மறுப்பதற்கில்லை. கண் முன் நீட்டி பார்த்தவன், அதை கழுத்தில் மாட்டி கொண்டான். “டாக்டர் பேஷண்ட் பார்க்க ரெடியாயிட்டார் போல.. ஆனா இங்க இப்போதைக்கு ஒரே ஒரு பேஷண்ட் தான் இருக்கார்..” என்றாள் மகா போலி வருத்தத்துடன். “நீதானே அந்த பேஷண்ட்.. உட்காரு..” அவள் கேலி புரிந்து நக்கலாக சொன்னான். “டாக்டர் நீங்க சைக்கிரியாட்டிரிஸ்ட், எனக்கு இப்போதைக்கு அந்த பிரச்சனை இல்லை, இன் பியூச்சர் கண்டிப்பா வரும், ஏன்னா என் லைப் பார்ட்னர் அப்படி, பட் இப்போ நீங்க பார்க்க வேண்டிய பேஷண்ட் நேம் விஷ்ணு சக்கரவர்த்தி..” என்றாள் உதட்டோர சிரிப்புடன். “ஏன் அவனுக்கு என்ன பிரச்சனையாம்..?” “என்ன பிரச்சனை இல்லைன்னு கேளுங்க.. சரியான பாய்லர், எந்நேரமும் கொதிச்சிட்டு தான் இருப்பார்.. பாருங்க இப்போ கூட எங்கேயோ வம்பிழுத்துட்டு தான் வந்திருக்கார்..” என, “ஏய் எப்படிடி கண்டுபிடிச்ச..?” விஷ்ணுவிற்கு ஆச்சர்யம் தான். “நம்ம முன்னாடி ஒரு ஜீவன் வித்தியாசமா சுத்துனா என்னன்னு கவனிச்சு பார்க்க மாட்டோமா..? அதுவும் அத்தை பையனா வேற இருக்க, பாவப்பட்டு பார்த்தேன்.. சரி சொல்லுங்க, யார் கூட சண்டை..?” ‘பாவப்பட்டு பார்த்த நீ என்னை..’ அவளை மேலும் கீழும் பார்த்தவன், “சண்டை எல்லாம் இல்லை, ஜஸ்ட் ஆர்கியூமென்ட்..” என்றான். “யார் கூட..?” மகா சந்தேகமாக கேட்டாள். “ஈஷ்வர் கூட தான்..” “உலக அதிசயம் தான்.. என்ன..” “ டாக்டர்..” என்று அழைப்பு வர, திரும்பி பார்த்தாள். அவள் வார்டுக்குள் நர்ஸ், “எமர்ஜென்சி கேஸ்..” என்று ஸ்டெரச்சரில் கர்ப்பிணி பெண் வலியுடன் வந்தார். “என்ன ஆச்சு..?” மகா கேட்டபடி அவரை நெருங்க, “கீழே விழுந்துட்டாங்க போல, ப்ளீடிங் ஆகுது..” நர்ஸ் சொல்ல, உடனே முதலுதவி செய்தவள், போன் எடுத்து நீரஜாவை அழைத்து இப்படி என்று சொன்னாள். “அவரோ மாஸ்டர் தானே படிக்கிற, நீயே பாரு.. வரேன்..” என்றார் சுள்ளென்று. மகாவிற்கு சுர்ரென்று ஏறியது. “இதென்ன என்னை பழிவாங்க பேஷண்டை காக்க வைக்கிறது..?” மருத்துவராக கோவம் கொண்டவள், “நான் சுசீலா மேடமை கூப்பிட்டுகிறேன் டாக்டர், நீங்க பொறுமையா வாங்க..” என்று பட்டென வைத்துவிட்டாள். “என்ன ஆச்சு டாக்டர் வராங்களா..? கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுங்க..” நர்ஸ் சொல்ல, “வருவாங்க..” என்றவள், பேஷண்டிடம் எப்படி என்ன ஆச்சு என்று விசாரிக்க, அவரோ பதில் சொல்லாமல் அழுதார். “இங்க பாருங்கம்மா.. அழுகாதீங்க, நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க, எங்க வலிக்குது, பேபி மூமென்ட் தெரியுதா..?” என்று கேட்க, அவரோ இன்னும் அழுதார். “ம்மா.. நீங்க அழுதுகிட்டே இருந்தா எப்படி வைத்தியம் பார்க்க, டாக்டர் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க..” என்று நர்ஸ் அதட்ட, “அடி ஏதும் பட்டிருக்கா.. சொல்லுங்க..” என்று மகா திரும்ப கேட்க, எந்த பதிலும் இல்லை. “மகா.. அவங்க பயத்துல கத்துறாங்க, அவங்க வீட்ல யாரையாவது வர சொல்லி பேசு..” விஷ்ணு கவனித்து சொல்லி வெளியே வர, நீரஜா எதிரில் வந்தவர் இவனை பார்த்து, “உனக்கு இங்க என்ன வேலை..” என்றார் அதிகாரமாக. “என்னை கேள்வி கேட்கறதை விட்டு நீங்க உங்க வேலையை ஒழுங்கா பாருங்க போங்க.. இன்னும் கூட திருந்தலை, திருந்தவும் போறதில்லை போல..” விஷ்ணு வெறுப்புடன் சொல்லி கேன்டீன் சென்றுவிட்டான். ஒரு மணி நேரம் சென்று மகா போன் செய்ய, கேன்டீன் வர சொன்னான். “என்ன ஆச்சு அவங்களுக்கு..? இப்போ ஓகேவா..?” கேட்டான். “ஆப்பரேஷன் தியேட்டர் கொண்டு போயிருக்காங்க..” என்றவள் அமர, “ஏன் நீ போகல..?” புருவம் சுருக்கி கேட்டான். “என்னை வேண்டாம் சொல்லிட்டாங்க..” சோர்வுடன் சொல்ல, புரிந்து கொண்ட விஷ்ணு எழுந்து சென்று காபி வாங்கி வந்து கொடுத்தான். “ரொம்ப படுத்துறாங்களா நீரஜா..?” அவள் காபி குடித்து முடிக்கவும் கேட்டான். “அது அவங்க நேச்சர், என்ன செய்ய..?” “நீ பேசாம உன் இன்டென்ஷிப் டாக்டரை மாத்திக்க வேண்டியது தானே..?” “தேவையில்லை, நான் ஏன் மாத்தணும்..? அவங்க வேணா என்னை மாத்திகட்டும்..” தோளை குலுக்கினாள். “சரிதான்..” விஷ்ணு சிரிப்புடன் சாய்ந்து அமர்ந்தான். “அப்புறம் சொல்லுங்க.. பொண்டாட்டிகிட்ட கோவிச்சிக்கிட்டு வீட்டை விட்டு வர புருஷன் மாதிரி வந்திருக்கீங்க போல..” மகா கிண்டலாக கேட்டாள். “உனக்கு வாய் அதிகம்டி..” விஷ்ணு கடுப்படித்தான். “இதுக்கு பதில் இந்த கோட்டை கழட்டி வச்சிட்டு தான் சொல்ல முடியும்..” என்றாள் மகா கண்களில் மின்னும் குறும்புடன். “அப்படியென்ன சொல்ல போற..? இப்போவே கழட்டி வச்சுட்டு சொல்லு..” விஷ்ணு குரலில் அந்த ஆர்வம் இருக்க தான் செய்தது. “ரொம்ப எதிர்பார்க்கிறீங்க போல.. அப்பறம் என்ன நல்ல பிள்ளை மாதிரி ஓவர் நடிப்பு..” மகா சொல்லமால் சீண்டினாள். “ம்ப்ச்.. சொல்லுடி..” என, மகா அவள் கோட்டை கழட்டி வைத்தவள், டேபிளுக்கு முன்னால் வர, விஷ்ணுவும் தன்னை போல அவளின் முகத்துக்கு அருகில் சென்றான். “இல்லை.. இன்னும் என் வாயோடு வாய் வைக்கலையே, அப்பறம் எப்படி கண்டிபிடிச்சீங்கன்னு கேட்க நினச்சேன்.. ஆனா பாருங்க இது ஹாஸ்ப்பிடலா போயிடுச்சு..” ஹஸ்கி குரலில் சொல்லி சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். “அடியே.. உன்னை..” விஷ்ணு சத்தமாக சிரித்து விட்டான். “நீ அப்படியே என் ஈஷ்வர் போலடி, என்னை அப்படியே கூலாக்கிடுற..” என, மகா முகம் சுருங்கிவிட்டது. “என்ன ஆச்சு..?” விஷ்ணு கேட்க, “அப்போ நீங்க உங்க ஈஷ்வரை என்கிட்ட தேடுறீங்க, அவன் இல்லாத நேரத்துல அவனுக்கான சப்ஸ்டியூட்டா என்னை பார்க்கிறீங்க அப்படி தானே..?” என்றாள் கோவம் தெரிய. விஷ்ணுவிற்கும் அப்போது தான் புரிந்தது போல. மறுக்கவில்லை. யோசித்தால் ஈஷ்வர் இல்லாத நேரங்களில், அவனுடன் இருக்க நினைக்கும் நேரங்களில் எல்லாம் இவளிடம் தான் வர நினைத்திருக்கிறான். அதனால தான் இப்போதும் இவள் போன் செய்த உடன் வந்துவிட்டேனோ..? “என்ன உண்மை தானே..?” மகா தீர்க்கமாக கேட்க, “அது தப்பா..?” கேட்டான் விஷ்ணு சீரியசாக. அவனுக்கு புரியவில்லை. “தப்பு தான்..” மகா அழுத்தமாக சொன்னாள். “அவன் உன் அண்ணன் தானே..? அப்பறம் என்ன..?” “என் அண்ணனா இருந்தா நான் அவனாகிட முடியுமா இல்லை அவன் என்னை போலாகிடுவானா..?” “என்ன சொல்ற நீ..?” “என்ன சொல்றேன், இந்த வாயோடு வாய் வைக்கிறதெல்லாம் அவன்கிட்ட பேச முடியுமா உங்களால..?” “ஏய்.. ச்சீ..” “தெரியுது இல்லை அப்பறம் என்ன..?” “அதுக்காக இதை தான் சொல்வியா நீ..?” “வேறெதை சொல்லணும்..? அவனை போல நானும் உங்களோட பார் பாரா சுத்த முடியுமான்னா..?” “வாய் மூடுடி அகங்காரி.. பேச்சை பாரு..” “ஏன்..? இப்போ எல்லாம் சோஷியல் ட்ரிங்கிங் சர்வ சதாராணம் ஆகிடுச்சு தெரியும் இல்லை..” “லிவிங் டூ கெதர் கூட தான் சாதாரணம் ஆகிடுச்சு அதுக்காக அப்படி இருக்க முடியுமா என்ன..?” கிண்டலாக கேட்டான். “உங்களுக்கு ஆசை இருக்கு போலயே..? இருப்போமா..?” என்றாள் கண்ணடித்து.