அடங்காத நாடோடி காற்றல்லவோ 13

இரவு வார்த்தையால் அடித்து கொண்ட இருவரும் ஆளுக்கொரு ரூமில் தூங்கி எழுந்து வந்தனர். விஷ்ணு முகம் துடைத்து வெளியே வர, ஈஷ்வர் கையில் காபி கப்புடன் அமர்ந்திருந்தான்

அவனை  பார்த்த விஷ்ணு, ஈஷ்வர் அவனுக்காக வைத்திருந்த காபியை எடுத்து கொள்ளாமல் தனக்கென அவனே காபி போட்டு கொண்டு வந்தான். “ரொம்பதான்..” ஈஷ்வர் சத்தமாக முணுமுணுத்தவன், அந்த காபியையும் தானே குடிக்க

பார்த்த விஷ்ணு, “காபிக்கு செத்தவன்..” என்று  சத்தமாக நக்கலடித்த படி, காபியை காலி செய்து, பீச்சிற்கு கிளம்பினான். ஈஷ்வரும்  அவன் பின்னால் பைக்கில்  ஏற, விஷ்ணு பைக்கை நிறுத்திவிட்டான். 

 

“விஷ்ணு பைக்கை எடுடா..” ஈஷ்வர் அவன் தோளை தட்ட, 

அவனோ கை கட்டி அமர்ந்தவன்,  “இம்மாம் பெரிய சிட்டி டிஸ்பி எல்லாம் என்கூட சரிக்கு சமமா  பைக்ல  வர அளவு நான் வொர்த் இல்லைங்க, இறங்குங்க..” என்றான் உர்ரென்று

அட கிளம்புடா.. நேரம் ஆச்சு.. டியூட்டிக்கு போகணும்.. நான் என்ன உன்னை மாதிரி சுதந்திர பறவையா..? யூ நோ என்னை நம்பி நிறைய பேர் இருக்காங்க.. அவங்களுக்கான  என்னோட கடமையை ஒழுங்கா செய்யணும்ன்னு முடிவு பண்ணிட்டேன், சிலரை மாதிரியா உயிரை காக்குற டாக்டர்க்கு  படிச்சிட்டு யாரையும் காப்பாத்த மாட்டேன்னு அடம் பிடிக்க..” ஈஷ்வர் கேலியாக உண்மையை   பேசினான்.  

அட பார்றா திடீர் நல்லவனை.. பொண்டாட்டி வரலைன்னா இவனும் என்னை மாதிரி சுத்திட்டு இருந்திருப்பான், இப்போ என்னமோ கிளாஸ் எடுக்கிறான், திருந்திருவங்க மெதுவா திருந்துங்கடா, நாடு தாங்காது..”   விஷ்ணு பதிலுக்கு காலை வாரி பைக் எடுத்தான்

இருவரும் பீச்சில் ஓடி முடிக்க, விஷ்ணு கரையோரம் அமர்ந்தான். ஈஷ்வர் ஒரு ரவுண்ட் சுற்றி வந்தவன், தானும் விஷ்ணு பக்கத்தில் அமர்ந்தான். சூரியன் உதிக்க ஆரம்பித்திருக்க, ஆட்கள் அதிகம் வர ஆரம்பித்தனர்.

கிளம்பலாமா..?” ஈஷ்வர் எழ

நான் வர லேட் ஆகும்.. நீ கிளம்பு..” என்றான் விஷ்ணு

ம்ப்ச்.. வாடா, எனக்கு லேட் ஆகிடும்..” ஈஷ்வர் அவன் கை பிடித்து இழுத்தான்

டேய் நான் இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன பண்ண போறேன் விடுடா..” விஷ்ணு மறுக்க மறுக்க இழுத்து கொண்டு பைக் நிறுத்தும் இடம் சென்றான்

கீ கொடு..” வாங்கி அவனே பைக் எடுத்தான். விஷ்ணு முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்திருக்க, ஈஷ்வர் பைக்கை ஒட்டியபடி வர  ஓபன் பார்க்கில்   இரு மாணவர்கள்  இருக்க, அவர்களை கவனித்து பார்த்தான்

ஸ்கூல் யூனிபார்மில் ஒரு ஆண், ஒரு பெண் என்று பார்க் பெஞ்சில் அமர்ந்திருக்க, பைக்கை  நிறுத்தியவன், ஹார்ன் அடித்து அவர்களை கூப்பிட்டான். இருவரும் எழுந்து வர, “இங்க என்ன வேலை, எந்த ஸ்கூல் நீங்க..?” என்று அதட்டலாக கேட்டான்

அவன் போலீஸ் கட்டில் பம்மிய மாணவன், “அது சும்மா.. நோட்ஸ் கேட்டுட்டு இருந்தேன் சார்..” என்றான்

எது கேட்கிறதா இருந்தாலும் ஸ்கூல் வச்சு கேளு, ஆமா அதென்ன பொம்பளை பிள்ளைகிட்ட தான் நோட்ஸ் கேட்பியா, அதுவும் முன்னாடியே பார்க் வர சொல்லி.. ம்ம்..”  என்று  அதட்ட, அந்த பெண் முகத்தில் கலவரம்

அவன் வர சொன்னா நீ வந்துடுவியா, எந்த ஸ்டாண்டர்ட்..?” என்று கேட்க

டவல்த் சார்..” என்றாள் அவள் அச்சத்துடன்

படிக்கிற வேலையை மட்டும் பாரு.. இதுக்கு எல்லாம் இன்னும்  வயசு இருக்கு.. இனி இப்படி வர கூடாது.. ஸ்கூல்க்கு ஓடு..”  என, அந்த பெண் வேகமாக ஓடிவிட்டாள்

அடுத்த முறை உன்னை இப்படி வெளியே பார்த்தேன் தூக்கிட்டு போய் ஸ்டேஷன்ல வச்சுட்டு உங்க அப்பா, அம்மாவை தான் கூப்பிடுவேன் சரியா.. ஓடு ஸ்கூலுக்கு..” அந்த மாணவனை மிரட்டி பைக் எடுத்தான்

வீடு வரவும் பைக்கை நிறுத்தி ஈஷ்வர் வீட்டிற்குள் செல்ல, “காலம் மாறுது இல்லை டிஸ்பி..” என்றான் விஷ்ணு பைக்கில் சாய்ந்து நின்று நிதானமாக. ஈஷ்வர் புரிந்து அவனை பார்த்து நிற்க

அந்த பசங்களை கண்டிக்கிற அளவு உனக்கு தெளிவு வந்தது சந்தோஷம் தான், ஆனா இன்னும் பல்லவி, மாமாகிட்ட கோவப்பட்டு சுத்துறது தான் ஆச்சரியமா இருக்கு..” என்று தோளை குலுக்கினான். ஈஷ்வர் தன் இரு பேக்கெட்டிலும் கை விட்டு நிமிர்ந்து நின்றவன்

தவறி போறது தான் தவறு விஷ்ணு, நம்மளோட தவறுகளை சரி செஞ்சுகிறது தப்பு இல்லைநானும் சரி செஞ்சுகிட்டு தான் இருக்கேன்..”  என்றான் அழுத்தமாக

அப்புறம் ஏன் இன்னும் வீட்டுக்கு போக மாட்டேங்கிற ஈஷ்வர்..?  நரசிம்மன் மாமாகிட்ட ஏன் பேசாம இருக்க..? அவர் பல்லவி விஷயத்துல செஞ்ச தப்பை உணர்ந்தும் ஏன் தண்டிக்கிற..? அந்த ஒரு விஷயத்தை தவிர அவரை விட பெஸ்ட் அப்பா உனக்கு கிடைச்சிடுவாரா என்ன..?” 

“இல்லை நீ தான் வேணும்ன்னு அந்த நைட்ல அவங்க அப்பாகிட்ட சண்டை போட்டு வீட்டை வெளியே வந்த பல்லவியை விடவா உன் காதல் இருக்க போகுது..?” விஷ்ணு கூர்மையாக கேட்டான்

நிச்சயமா என் அப்பா எனக்கு பெஸ்ட் தான், பல்லவி காதல்ல கேள்வியே இல்லைஆனா பல்லவிக்கு என் அப்பா நியாயம் செய்யல, அஃப்கோர்ஸ் நானும் அவளுக்கு நியாயம் செய்யல, அவளும் என்னை நம்பாம எனக்கு நியாயம் செய்யல..”

இப்போ நாங்க மூணு பேருமே எங்க தப்பை உணர்ந்து சரி செய்ய முயற்சி எடுத்திட்டு தான் இருக்கோம், கண்டிப்பா சரி செஞ்சு நல்ல படியா வாழவும் செய்வோம்..”

அண்ட் என் வாழ்க்கையில நான் செஞ்ச தப்பை மத்த பசங்களும் செய்யும் போது என்னால எப்படி கண்டுக்காம போக முடியும் விஷ்ணு..? அந்த வயசுல எனக்கு வந்த  காதல், அதை பொறுமையா கொண்டு போகாம, அவசர அவசரமா அடைஞ்சதின் பலன் தான்  எனக்கும் அப்பாக்கும் வந்த பிரச்சனை, பல்லவிக்கு அம்மா வீடு இல்லாமல் போனது, எங்களோட இத்தனை வருஷ பிரிவு எல்லாத்துக்கும் காரணமா இருந்துச்சு..”

அதை நான் இப்போ உணர்ந்துட்டும் இருக்கேன், அப்பா, பல்லவிகிட்ட மன்னிப்பும் கேட்பேன், ஆனா உன் விஷயத்துல நீ என்ன தப்பு செஞ்சன்னு இப்படி இருக்க விஷ்ணு..?” ஈஷ்வர் ஆதங்கத்துடன் கேட்டான்

ஈஷ்வர் என்னை பத்தி பேசாத, நீ டியூட்டிக்கு கிளம்பு.. போ..”  விஷ்ணு பதில் சொல்லமால் உள்ளே செல்ல போக,  

“நீ ஏன் இப்படி இருக்க விஷ்ணு..? மத்தவங்க செஞ்ச பாவத்துக்கு நீ ஏன் விலகி நிக்கிற, குற்ற உணர்ச்சியை இன்னும் தூக்கி சுமக்கிற, அதுவும் அவங்களுக்கு அதுக்கான தண்டனை கிடைச்சதுக்கு அப்புறமும்..”  ஈஷ்வர் வருத்தத்துடன் கேட்டான்

நானும் மன்னிக்க முடியாத தப்பை செஞ்சிருக்கேன் ஈஷ்வர் அது உனக்கும் தெரியும்..”

சின்னு உன்னை நம்பி ட்ரீட்மெண்ட் எடுத்தான், நீ மருத்துவத்தை நம்பின, இதுல உன்னோட தப்பு எங்க இருக்கு.. எல்லோரும் இதை தானே செய்றோம்..”

ஈஷ்வர் இதுக்கு மேல பேசாத.. நீ கிளம்பு..” விஷ்ணு ரூமிற்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்.  

ஈஷ்வர் வீட்டிற்கு கிளம்பியிருக்க, விஷ்ணு அன்று முழுதும் எங்கும் செல்லவில்லை. ரூமிலே இருந்து கொண்டான். அவனுக்கே முடியவில்லை சின்னுவை பார்க்காமல் இருப்பது. வீட்டிற்கு போக வேண்டும், தம்பிய பார்க்க வேண்டும் என்று அவனை அவன் தயார் செய்து கொண்டு தான் இருக்கிறான்.  

என்றாலும்  இன்னும் அந்த பயம், கலக்கம், குற்ற உணர்ச்சி எல்லாம் நீங்காமல்  திணறி கொண்டிருக்கிறான் அண்ணன்காரன்

கங்கா வேறு ஈஷ்வரை கேட்க ஆரம்பித்திருந்தார் ரிசப்ஷன் வைக்க வேண்டும் என்றுஅவனுக்கும் மனைவி, மகளை ஊர் உலகிற்கு காட்ட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்காக இப்படி விஷ்ணுவை இப்படி தனியே விட்டு எந்த பங்க்ஷனும் செய்ய  முடியவில்லை

அன்றிரவு டியூட்டி முடியவும் நேரே விஷ்ணுவை பார்க்க வீட்டிற்கு வர, விஷ்ணு ரூம் கதவு மூடி தான் இருந்தது. காலையில இருந்து வெளியே வரவே இல்லையா இவன்..? வேகமாக சென்று கதவை தட்டினான். சத்தமே இல்லை

இப்போ நீ திறக்கலைன்னா நான் கதவை உடைச்சிடுவேன் விஷ்ணு..” ஈஷ்வர் சொல்ல, பதிலே இல்லை. ஈஷ்வர்க்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. என்ன பண்றான் இவன்..? மீண்டும் மீண்டும் தட்ட, சில நொடிகள் சென்றே கதவை திறந்தான் விஷ்ணு

டேய் எவ்வளவு நேரம் கதவு தட்டுறது என்ன பண்ணிட்டு இருந்த..?”  படபடவென பொரிந்தான்

ச்சு.. நீ எதுக்கு தினமும் ராத்திரி வீட்டுக்கு வர, அக்கம் பக்கம் பார்க்கிறவன் கூட என்ன நினைப்பான்..” கேலியாக கேட்டபடி சோபாவில் சென்று விழுந்தான் விஷ்ணு

ஈஷ்வர் அவனை முறைத்தவன், கிட்சன் சென்று பார்க்க, சமைத்து வைத்த உணவு அப்படியே இருந்தது. “சாப்பிட கூட இல்லையா நீ..?” அங்கிருந்தே கத்த, விஷ்ணு சோபாவில் படுத்தான்

விஷ்ணு உன்னை தான் கேட்கிறேன்..” ஈஷ்வர்  வர

பசிக்கல.. சாப்பிடல.. அதுக்கெதுக்கு கத்துற..? வர வர நீ அநியாயத்துக்கு போலீஸா இருக்க..? இதுக்கு தான் சொல்றது கமிஷனர் கூட சேராதுன்னு..” படுத்து கிண்டலாக சொன்னான்

ஈஷ்வர் அவனை முறைத்து பார்த்தே நிற்க, “இப்போ எதுக்கு ராத்திரில என்னை ரொமேன்டிக் லுக் விடுற..? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுடா மறந்துட்டியா..?”  மேலும் கிண்டலாக சொல்லி சிரிக்க, ஈஷ்வர் எதுவும் பேசவே இல்லை

இப்போ என்ன சாப்பிடணுமா..? சாப்பிடுறேன்..”  என்று எழுந்து சென்று முகம் கழுவி வந்தான்

வாடா.. அதான் சாப்பிட வந்துட்டேன் இல்ல.. இன்னும் ஏன் இந்த லுக்..?”  விஷ்ணு சேரை இழுத்து போட்டு சாப்பிட அமர்ந்தான். ஈஷ்வர் பெரு மூச்சுடன் அவன் ரூம் சென்று ரிப்ரெஷ் செய்து வர, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்

ஈஷ்வர் போன் ஒலிக்க பார்த்தால் பல்லவி. எடுத்தவன், “நான் இங்க விஷ்ணுகிட்ட வந்துட்டேன், காலையில வரேன்..” என்று வைத்துவிட்டான்

நீ நாளையில இருந்து இங்க வராத, வீட்டுக்கு போ..”  விஷ்ணு சாப்பிட்டு முடித்து சொல்ல, ஈஷ்வர் பதில் சொல்லாமல் இன்னும் சப்பாத்தி எடுத்து வைத்து சாப்பிட்டான்

உன்கிட்ட தான் சொல்றேன் ஈஷ்வர், இது சரியில்லை, இத்தனை வருஷம் கழிச்சு இப்போதான் நீங்க சேர்ந்து இருக்கீங்க, பல்லவி, அனு கூட டைம் ஸ்பென்ட் பண்ணு..”  அவன் மீண்டும் சொல்ல, ஈஷ்வர் சாப்பிட்டு எழுந்து சென்றான்

ஈஷ்வர்.. நீயும் ஏண்டா என்னை படுத்துற..?”  விஷ்ணு ஆயாசத்துடன் கேட்டான்

யார் நீயா நானா..? உன்னை இப்படி விட்டு நான் போவேன்னு நீ எப்படி எதிர்பார்க்கிற..?”  ஈஷ்வர் நிதானமாக கேட்டான்

எனக்கு என்ன..? நான் நல்லா தான் இருக்கேன்.. நீ உன் பேமிலிய பாரு..”

நானும் என் பேமிலியை தான் பார்த்திட்டு இருக்கேன்..”

ஈஷ்வர்.. புரிஞ்சுக்கோடா, என்னை விட்டுடு, நான் கண்டிப்பா சரியாகிக்குவேன்..”

விஷ்ணு நீ முதல்ல என்னை புரிஞ்சுக்கோ, நான் பிறந்ததுல இருந்து அதிகம் பார்த்து வளர்ந்தது உன்னை தான், நீ நார்மலா இருந்தா நானும் நார்மலா இருப்பேன், இல்லை நானும் இப்படி தான் இருப்பேன்..”

நீயும் என்னை கில்ட்டா பீல் பண்ண வைக்கிற ஈஷ்வர்..”

கில்ட் இல்லை விஷ்ணு நான் உன்னை கார்னர் பண்றேன், அதை நான் ஓத்துக்கவும் செய்றேன், நீ வீட்டுக்கு போ, நானும் வீட்டுக்கு போறேன் அவ்வளவு தான்..”

டேய் என்னால சின்னுவை அப்படி பார்க்க முடியலடா புரிஞ்சுக்கோ..” விஷ்ணு கலக்கத்துடன் சொன்னான்