அடங்காத நாடோடி காற்றல்லவோ 12

முடிந்தது ஒரு வாரம், இன்னும் ஈஷ்வர் இருக்கும் இடம் தெரியவில்லை. நரசிம்மன் தன் அதிகாரத்தை, பதவியை, செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தியும் பயனில்லை. எங்கு சென்றான் மகன் என்று தெரியாமல் திண்டாடி போனார் மனிதர்

எப்போதும் உதவி என்று கேட்காத தங்கை கணவர் சக்ரவர்த்தியிடமும் கேட்டு விட்டார். அவர் அபிஷியலா கம்பளைண்ட் கொடுங்க மச்சான் என, இவர் விட்டுவிட்டார். வேலையில் அவர் நேர்மை தெரிந்தவர் என்பதால் அவரிடமும் கோவிக்க முடியவில்லை

எப்படியும் மனைவி, மகளுக்காவாவது வருவான் என்று தெரியும், இருந்தாலும் மனதில் ஓரத்தில் ஒரு பயம், அவன் பாதுகாப்பு பற்றி கவலை விஷ்ணு போலவே

விஷ்ணுவும் அந்த ஒன்றை நினைத்து தான் கவலை கொண்டான். வீட்டை விட்டு வெளியேவும் செல்ல முடியவில்லை. ஈஷ்வர் சொன்னதை மறுக்க முடியவில்லை. அவன் குடும்பத்திற்கு காவலாக தன்னை நினைக்கிறான் என்று புரியாமல் இல்லையே, எப்படி செல்ல முடியும்..? போனிலே அறிந்தவர், தெரிந்தவர்களிடம் விசாரித்து பார்த்தான்யாருக்கும் தெரியவில்லை

சுப்ரமணி தான் அவனிடம் படாத பாடுபட்டான். “ஈஷ்வரை தேடு, நாம போன பாருக்கு எல்லாம் போ..” என்று விரட்டினான். அவனும் தேடி பார்க்க, அங்கு எங்கும் இல்லை

எங்க போய் தொலைந்தான்..?” ரூமிலே நடந்தான். வெளியே சென்றால் பல்லவி, நரசிம்மன் பார்க்க கோவம் தான் வரும். கங்கா தான் நேரத்திற்கு உணவு கொண்டு வந்தார்அனுவை பார்க்க நினைத்தால் கங்காவிடம் தூக்கி வர சொல்லி பார்ப்பான். அவளை தன்னிடம் பழக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மற்றபடி ரூமில் தான் இருந்தான்.  

சின்னு வேதனையில் ஈஷ்வர் கவலையும் சேர்ந்து கொண்டது. மகா  அடிக்கடி போன் செய்து பேச, கொஞ்சம் நிதானத்திலே இருந்தான். அவள் இருக்க வைத்தாள். இவன் கோவத்தில் கத்தினால் அவளும் கத்தினால் தான் ஆனால் இறுதியில் எப்படியாவது அமைதி படுத்தி விடுவாள்

சில நேரங்களில் சிரிக்கவும் வைத்து விடுவாள். மனம் லேசாகும், நம்பிக்கையும் வரும். நேர்மறையான எண்ணங்களை விதைத்தாள் அவனின் மகாலட்ஷ்மி. அதனாலே அவள் போனை எதிர்பார்க்க தொடங்கி இருந்தான். அப்போதும் இவனாக அவளை கூப்பிடவில்லை. அந்த கெத்தை காட்டுகிறானாமாம். மகா புரிந்தாலும் சிரிப்புடன் விட்டுவிட்டாள்

மற்ற நேரமாக இருந்தால் அதை வைத்து வம்பிழுத்து இருப்பாள். இப்போது அவளுக்குள்ளும் ஈஷ்வர், சின்னு இருவரும் ஓடி கொண்டிருக்கின்றனரே. இதில் சக்கரவர்த்தி வேறு ஏதோ போல இருக்க, அது வேறு துர்கா, இவளுக்கு அச்சத்தை கொடுத்தது

வேலையில ஏதும் பிரச்சனையா..?”  என்று துர்கா விசாரித்து பார்க்க, அவரிடம் எந்த பதிலும் இல்லை. ஒரு மாநிலத்து  தலைநகரின் கமிஷனர் ஆயிற்றே. அந்த பொறுப்பு, அதன் சவால்கள் இருக்க தானே செய்யும். அதில் ஏதோ ஒன்று தான் என்று அத்தையும், மருமகளும் நினைக்க, நடப்பதோ அவர்கள் குடும்பம் சம்மந்தப்பட்டது என்று தெரியாமல் போனது

ஏன் அரசதிகாரத்தில் முக்கிய அமைச்சராக இருக்கும் நரசிம்மனுக்கே தெரியவில்லை எனும் போது இவர்களுக்கு அது போல எண்ணம் கூட வர வாய்ப்பில்லையே. அந்தளவுவிற்கு ஆப்பரேஷனை மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு கொண்டிருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் ஈஷ்வர் அதில் மிகவும் கவனமாக இருந்தான்

அவனை நினைத்து அவன் வீட்டு ஆட்கள் கவலையில் இருக்க, ஈஷ்வரோ  அந்த நடு இரவில் நிதானமாக டீ குடித்து சிரித்து கொண்டிருந்தான். சென்னை தொழில் நகரமான சிப் காட்டில் இரவு நேர ஷிப்ட்டில் இருந்தவனை சுற்றி ஒரு கூட்டம் இருக்க, டார்க் ப்ளூ யூனிபார்மில் படிய வாரிய முடி, ட்ரிம் செய்ய பட்ட தாடி, பெரிய கருப்பு கண்ணாடி என்று கையில் டீ கப்புடன் நின்றிருந்தான்.  

அவனுடன் நின்ற முருகேசு, “அட ஆமாம்ப்பா.. நான் இந்த பக்கம் மெஷினை ஆன் பண்ணிட்டு திரும்பினா படக்குன்னு  ஆப் ஆயிடுச்சு.. இந்த கோபாலு வேற, ண்ணா ஏதோ வெள்ளையா போச்சுண்ணான்னு நடுங்குறான்.. எனக்கும் வேர்த்துடுச்சு, பக்கத்துல பார்த்தா இவனுங்க மெஷின் ஓடிட்டு இருக்கு.. எங்க மெஷின் மட்டும் நிக்குது.. அப்புறம் என்ன எடுத்தோம் பாரு ஓட்டம்..”  என்று  சொல்ல, சிரிப்பு சத்தம் அங்கு நிறைத்தது

அட தம்பி மெஷின்  வையர் அறுந்து விழுந்தா ஆப் ஆகாத, அதை கவனிக்காம ஓட்டமா ஓடி வந்தா எங்களுக்கு என்னமோ ஏதோன்னு ஆகி போச்சு, விசாரிச்சா இப்படிங்குறாங்க.. பயந்தாங்கொலிங்க..” மற்றவர் கிண்டலாக சொன்னார்

ஆமாம் இவனுங்க பெரிய வீரனுங்க, நாங்க சொன்னதுக்கு ஒருத்தன் கூட மெஷின் கிட்ட தைரியமா வரல, அவனவன் பம்முறான், செக்ஷன் எஞ்சியனர் தான் மாட்டினார்..”

பின்ன என்ன தம்பி அப்போதான் இந்த கம்பெனி ஆரம்பிச்ச புதுசு, காம்பவுண்ட் செவரும் இந்த உசரத்துக்கு இல்லை, ஷிப்ட்ல இருக்கிறதே பத்து பேர் தான், சுத்தி காடு மாதிரி இடம், அந்த மெஷின் வேற கடைசி மூலையில இருக்கு, நடு ராத்திரி, பயம் வராம இருக்குமா..? அதிலயும் இந்த கோபாலு வேற வெள்ளையா பார்த்தேன், மல்லிகை பூ வாசனை வருது, கொலுசு சத்தம் கேட்குதுன்னு  குலுங்கி குலுங்கி அழுறான்..”

ஏன்ண்ணே அவ்வளவு பயமா..?”  ஈஷ்வர் அவரிடம் சிரிப்புடன் கேட்டான்

தம்பி அப்போதான் எனக்கு கல்யாணம் ஆன புதுசு, எங்க ஊர்ல எல்லாம் எங்களை தான் சீக்கிரம் பேய் பிடிக்கும்ன்னு காப்பு கட்டி விடுவாங்க, அதான் லேசா பயந்துட்டேன்..” அவர் இப்போதும் லேசான வெட்கத்துடன் தலை சொரிந்தார்.

ஏதே அதுவே லேசா, அப்போ நீ அதிகமா பயந்தா ஊர் தாங்காது போல உன் அழுவாச்சில..” மற்றவர் கேலியாக சொல்ல, மீண்டும் ஒரு சிரிப்புடன் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்

அப்பறம் தம்பி வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆயிடுச்சு, வேலை பிடிச்சிருக்கா..?” கோபால் மெஷினை இயக்கி கொண்டே ஈஷ்வரிடம் கேட்டார். அவனும் அவருக்கு உதவியாக மெஷினை இயக்கி கொண்டிருந்தவன்

பிடிக்காகட்டியும் செஞ்சு தானேண்ணா ஆகணும், நல்ல சம்பளம், தங்குற இடம், சாப்பாடு எல்லாம் கிடைக்குதே.. என் குடும்ப கஷ்டத்துக்கு ஏத்த வேலைண்ணே..” மிகவும் பவ்யமான குரலில்  சொன்னன். அவன் முதுகு லேசாக கூன் விழுந்து, உடல் கம்பீரத்தை மறைத்திருந்தது

அதென்னமோ சரி தான் தம்பி, நம்ம முதலாளி ரொம்ப நல்ல மனசு காரர் ஆச்சே, பின்ன சும்மாவா அவருக்கு தாராள மனசு தயாளன் பேர் வந்துச்சு, இந்த வயசிலே எவ்வளவு தொண்டு மனப்பாண்மை, நம்மளை மாதிரி எத்தனை குடும்பத்தை வாழ வைக்கிறாரு, எத்தனை அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், மனநோய் ஆஸ்பத்திரி, கை கால் வராதவங்களுக்கு வைத்தியம்ன்னு நீண்டுகிட்டே போகுதே அவர் பெருமை..”

ஆமாமாம்ண்ணே.. அவரை போல யாரும் இந்த உலகத்துல இல்லை, இனி இருக்கவும் மாட்டாங்க..” உள்ளுக்குள் அவ்வளவு தீவிரத்துடன் சொன்னவன், ரகசிய போன் வைப்பிரேட் ஆகி கொண்டே இருந்தது

ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடறேண்ணே..” என்றவன், செல்லும் போதே அவன் டீம் ஒருவனுக்கு கண் காட்ட, அவனும் இவனை தொடர்ந்து வந்தவன், ஈஷ்வர் உள்ளே செல்லவும், சிகரட் பற்றவைத்து வெளியே நின்று கொண்டான்.  

ஈஷ்வர் கதவை மூடி  போனை எடுக்க, சக்ரவர்த்தி தான் கூப்பிட்டு கொண்டிருந்தார். இவன் எடுக்கவும், சக்கரவர்த்தி,  “ஏன் ஈஷ்வர் புரிஞ்சுக்க மாட்டேங்கிற, அவன் எங்க இருக்கான்னு தெரியல, நைட்டோட நமக்கு கொடுத்த நேரம் முடிய போகுது, அதுக்குள்ள அவனை எப்படி கண்டுபிடிக்க..? பேசாம சிம் தரேன் சொன்ன போர்ஸ் எடுத்துப்போம்..”  என்றார் நேற்று போல. 

“ஈஷ்வரோ, நோ.. வேண்டாம் சார், என்னால் அவனை பிடிக்க முடியும், என்மேல நம்பிக்கை வைங்க..”  என்றான்

ம்ப்ச்.. புரிஞ்சுக்கோடாஇப்போ அவனை விட்டா அப்பறம் கேஸ் கை மாறிடும், அப்பறம் அது எப்படி போகும்ன்னு வர ஆபிசருக்கு மட்டும் தான் தெரியும், நாம இத்தனை வருஷம் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிடும்.. நேரம் போயிட்டே இருக்கு..”

மாமா.. முதல்ல கொஞ்சம் பொறுமையா இருங்க, ஏன் இவ்வளவு டென்ஷன்..? நாளைக்கு காலையில விடியலை பார்க்க அவன் இருக்க மாட்டான், இதை மட்டும் மனசில வச்சிட்டு தூங்க போங்க..”

என்ன தூங்குறதா..? தூக்கம் வருமா ஈஷ்வர்..? நான் சிம் தரேன் சொன்ன போர்ஸை அக்சப்ட் பண்ணிக்க  போறேன்..”

மாமா.. அவரப்படாதீங்க, பொறுமையா இருங்க..”

முடியாது ஈஷ்வர் நான் அவனை விட மாட்டேன், என் புல்லட் தான் அவன் நெஞ்சுல இறங்கணும், எவ்வளவு கொடூரமா இருந்திருக்கான் அவன், சின்ன பிள்ளைங்க, வயசானவங்கன்னு எல்லோருக்கும் ஆசிரமம் நடத்தி அவங்களை போய் பரிசோதனை எலியா பயன் படுத்தி இருக்கான், எவ்வளவு கொடுமையா இருந்துச்சு அவங்களை பார்க்க, கை கால் போயி, மனநலம் இல்லாமச்சே.. அவனுக்கு பேர் வெளியே தாராள மனது தயாளன். ராஸ்கல்..”

மாமா.. அவன் தப்பிக்க முடியாது, ப்ளீஸ் நீங்க கொஞ்சம் நிதானமா இருங்க..”

நோ ஈஷ்வர் கேள்விப்பட்டதில் இருந்து எனக்கு தூக்கமே இல்லை, சிம் மே ஷாக் ஆகிட்டார் தெரியுமா..? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவன் கதையை முடிக்க சொல்லி பிரஷர், போர்ஸ் வேணுமான்னு இப்போ கூட கேட்டார், நான் சரி சொல்ல போறேன்..”

மாமா ஓகே நான் சொல்லிடுறேன் நான் இப்போ அவன் வர போற   இடத்தில தான் இருக்கேன்..”

என்ன..? இவ்வளவு நேரம் ஏன் சொல்லலை, சரி  இப்போ  நீ எங்க இருக்கன்னு மட்டும் சொல்லு, நான் வரேன்..”

மாமா.. நீங்க வேண்டாம், இங்க சேப் இல்லை, நான்..”

ஈஷ்வர் நான் கமிஷனாரா பேசுறேன்.. நீ இடத்தை சொல்லு..”  இடையிட்டு  அதிகாரமாக அதட்ட, வேறு வழி இல்லாமல் இடத்தை சொன்னவன் வேறு சிலுதும் சொல்லி வைத்து விட்டான்