ம்ப்ச்.. ஈஷ்வர் புரிஞ்சுக்கோ நமக்கு சிம் கொடுத்த டைம் முடிய போகுது, அதுக்குள்ள முடிக்கணும், ஏன்  JR, திலக் ரெண்டு டாக்டர்ஸையும் ரகசியமா கஸ்டடில எடுத்து விசாரிச்சு கேஸ் பைல் பண்ணலாம் இல்லை..”

“சார்.. அதுல JR மட்டும் தான் தெரிஞ்சு ட்ரீட்மெண்ட் கொடுத்தது, ஆனா திலக் அவருக்கே தெரியாம நடந்தது, மீன் அதுல  இன்வால்வ் ஆனது அவங்க டீன்.. அதாவது விஷ்ணுவோட சீப் டாக்டர்..” என, சக்ரவர்த்தி புருவங்கள் சுருங்கியது

எஸ் ஈஷ்வர் அவர் தான் சின்னுவை அவர் ஹாஸ்பிடல்ல வச்சு பார்க்க சொல்லி விஷ்ணுகிட்ட கேட்டது..”

ஆமாம் சார்.. அவருக்கும் இதுல பங்கு இருக்கு, அவரை போல பலரும் இருக்காங்க, நம்மளோட எயிம் அவங்க இல்லை, அவங்களுக்கு அந்த மெடிசன் கொடுக்கிற அந்த கல்பிரிட் தான். ஆனா அவ்வளவு சீக்கிரம் அவனை நாம நெருங்க முடியாது. பணக்காரன், நிறைய நல்ல காரியங்கள் செய்ற உத்தமர்ன்னு நல்ல பேர் எடுத்து வச்சிருக்கான், சோ ஸ்ட்ராங் எவிடென்ஸ் வேணும்..”

ம்ம்.. அந்த கம்பெனிகளுக்கு  ரெய்டு போலாம் இல்லை ஈஷ்வர் ஏதாவது சிக்கும்..”

சார்.. நீங்க நாள் நெருங்கவும் அவரப்படறீங்க, அங்க ஒன்னும் கிடைக்காது, ஏன்னா அந்த கம்பனி அவன் பேர்லே இல்லை, பினாமி மூலமா தான் ரன் பண்றான்..”

எப்படி இத்தனை வருஷமா மாட்டாம இருந்திருக்கான்.. எவ்வளவு பேர் பாதிக்க பட்டிருக்காங்களோ..?”

அதை நாம கணக்கெடுக்க முடியாது சார், இப்போ நீங்களும் அந்த மெடிசன் எடுத்திருப்பீங்க, ஆனா உங்களுக்கு அந்த பாதிப்பு இருக்காது, இருந்தாலும் ஒரு  பர்சன்ட் தான் இருக்கும்.. ஆனா அதுவே சின்னு போல ஆட்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும்.. அதனால தான் நிறைய கண்ட்ரிஸ்ல இந்த மெடிஸன்ஸ் எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கு..”

என்ன சார் சொல்றீங்க..?” அவர் டீமில் உள்ளவர் கேட்டார்

உண்மை  சார் நம்மை போல ஆட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கம்பேர் டூ சின்னு, அதோட நாம அந்த மெடிசன் அடிக்கடி எடுக்க மாட்டோம், ஏதாவது பெயின், உடம்பு முடியலன்னா மட்டும் தான் எடுப்போம், ஆனா அதுவே இவங்க ஹெல்த் இஸுஸ்க்காக அடிக்கடி எடுக்க வேண்டியிருக்கும், அப்போ அந்த மெடிசன் கொஞ்சம் கொஞ்சமா அவங்க உடல் உள் உறுப்புகளை பாதிக்க ஆரம்பிச்சிடும்..”

கொஞ்சம் வருஷம் கழிச்சு ஒவ்வொரு உறுப்பா செயலிழக்க ஆரம்பிச்சிடும், அது தான் எங்க சின்னுக்கு நடந்தது. அவனுக்கு அந்த ஆப்பரேஷன் பண்ணதை வச்சு தான் அந்த மெடிசன் கொடுத்திருக்காங்க.. நாள் நாள் ஆக ஆக அது அதோட வேலையை காண்பிச்சிடுச்சு..” என, சக்கரவர்த்திக்கு இப்போதும் வேதனை தான்

உங்க வீட்ல டாக்டர்ஸ் இருந்தும் இப்படின்னா, எங்க வீடுங்கள்ல நினைச்சாலே பயமா இருக்கு சார்..” மற்றவர் சொன்னார்

சார் நம்மளோட இந்த பயம் தான் அவங்களுக்கு லாபம். உங்க உயிர் மேல உங்களுக்கு ஆசைன்னா உங்க உடல், பணம் மேல அவங்களுக்கு  ஆசை..” என்றான் ஈஷ்வர் வெறுப்புடன்

இது தான் விஷ்ணு தவர விட்ட இடமும். சின்னுவிற்கு திரும்பமும் ஒரு பிரச்சனை வந்தவுடன் தம்பியின் உயிர் நினைத்து பதட்டபட்டுவிட்டான். அவன்  வேலை செய்யும் ஹாஸ்பிடல், பிரதாப் சொன்ன டாக்டர் என்ற நம்பிக்கையும் அவனுக்கே விலையாக.. ம்ஹூம்.. சின்னுவிற்கு வலியாக  வந்துவிட்டது

சில நொடி கனத்த அமைதி. “ஓகே முடிஞ்சதை விடுவோம், சார் நாங்க அவருக்கு எதிரான ஆதாரத்திற்கு ரெடி பண்ணிட்டோம், நீங்க சந்தேக பட்டது போல குணாக்கு பிளான்ட் ஆக்சிடென்ட் தான், ஆனா அதுவே அவங்களுக்கு இப்போ எதிரா அமைய போகுது, அதுக்கான ஏற்பாட்டை நான் தொடங்கிட்டேன், இன்னும் ஒரு வாரம், அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும்..”  ஈஷ்வர் உறுதியாக சொல்ல, சக்கரவர்த்திக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.  

அங்கிருந்து கிளம்பிய ஈஷ்வர் அவன் நினைத்த வேலையை முடித்துவிட்டு நேரே பல்லவியை பார்க்க சென்றான். அவள் மேல் உள்ள கோபத்தையும் மறக்காமல் அவன் மேல் ட்ரிங்ஸ் தெளித்து கொண்டே சென்றான். அன்றிரவு இருவருக்கும் மோதல்கள் முட்டியது.  

மறுநாள் கங்கா, நரசிம்மன் வேறு அங்கு வந்துவிட, பிரச்சனை வெடித்தத்தோடு பல்லவி, மகளுடன் ஈஷ்வர் அபார்ட்மென்டுக்கு வந்துவிட்டாள்

விஷ்ணுவிற்கு எல்லாம் சீக்கிரம் சரியாக வேண்டும் என்று இருக்கமாமனார், மருமகள் மாற்றி மாற்றி பேசியதில் ஈஷ்வர் காயப்பட்டு போனான். விஷ்ணுவிற்கு இருவர் பேசியதும் பிடிக்கவில்லை

அதென்ன இவங்க சரியா என் ஈஷ்வரை மட்டும் பேச..” உள்ளுக்குள் கடுப்புடன் பார்த்திருந்தான். அவர்கள் பேச்சில் ஈஷ்வர் காயப்பட்டு, பேசியவன் வெளியே செல்ல, விஷ்ணுவும் அவனுடன் செல்ல கிளம்பினான்

ஈஷ்வரோ நீ இங்கு இரு..” என்று தான் மட்டும் கிளம்பிவிட்டான். அன்று நாள் முழுதும் வராமல் இருக்க, விஷ்ணு போன் செய்தான். ஈஷ்வர் எடுக்கவே இல்லை


என்ன ஆச்சு ஏன் போன் எடுக்க மாட்டேங்கிறான்..?”  விடாமல் கூப்பிட, அவனோநானே உன்னை கூப்பிடுறேன், அதுவரைக்கும் அவங்களோடே இரு..”  என்று மெசேஜ் மட்டும் அனுப்பிவைக்க, விஷ்ணுவிற்கு ஒன்றும் புரியவில்லை

அடிக்கடி இவன் எங்க போய்டுறான்..?” முதல் முறையாக ஒரு சந்தேகம். அவன் பாதுகாப்பு பற்றி கவலை கொண்டான்

ஈஷ்வர் எங்க விஷ்ணு, இன்னும் வீட்டுக்கு வரல, போனும் எடுக்கல..”  கங்கா அவனிடம் வந்து கேட்க, பின்னால் நரசிம்மன், பல்லவி இருவரும் நின்றிருந்தனர். அவர்களை பார்க்க பார்க்க தன் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை

விஷ்ணு.. எங்கப்பா அவர்..?” நரசிம்மன் கேட்க

நீங்க எதுக்கு அவனை கேட்கிறீங்க..?” அவர் மேல் பாய்ந்தான்

நீங்க எல்லாம் பேசி பேசித்தான் என் ஈஷ்வரை வெளியே அனுப்பிட்டீங்க, இப்போ திரும்ப எதுக்கு அவனை கேட்கிறீங்க, ஏன் பேசினது போதாதா, இன்னும் பேசணுமா உங்களுக்கு..”   அப்படி ஒரு கத்தல்

விஷ்ணு நாங்க எங்க பக்க நியாத்தை..”

பேசாதீங்க.. பேசவே பேசாதீங்க, என்ன பெரிய நியாயம், உங்களுக்கு அவன் ஐபிஸ் ஆகணும் அவ்வளவு தான், இதுல என்ன பெரிய நியாயம் இருக்கு, முழு சுயநலம மட்டும் தான் இருக்கு.. அவன் உங்களை நம்பினான், நீங்க ரெண்டு பேரும் அவனை நம்பலை.. இவ்வளவு தான் விஷயம்..”  கதவை அடித்து சாத்திவிட்டான்.  

மனமே ஆறவில்லை. “இவங்க ரெண்டு பேராலும் தான் அவன் அவ்வளவு கஷ்டப்பட்டான், திரும்பவும் இவங்களே பேசி அவனை கொல்றாங்க, கேட்டா பாசம், காதல்ன்னு கதை அடிப்பாங்க..”  ஈஷ்வர் மேல் அவன் வைத்துள்ள பந்தம் அவனை கோவப்படுத்தி விட்டது

சரியாக அந்த நேரம் மகா அவனுக்கு கூப்பிட, எடுக்கவில்லை. அவள் விடாமல் கூப்பிட, எடுத்துவிட்டவன், “இப்போ எதுக்கு விடாம கூப்பிடுற..?” என்றான் அதட்டலாக

நீங்க என்ன பேசுனீங்க என் அப்பா, அம்மாவை..” அவனுக்கு மேல் பாய்ந்தாள் அவள்

ஏன் உன் அண்ணியை கேட்கல..?” அவன் பல்லவியை கேட்டான்.  

உங்களுக்கு இப்போவும் உங்க ஈஷ்வர் தான் முக்கியம் இல்லை..”

இப்போ மட்டும் இல்லை  என் கடைசி மூச்சு வரை, அதை விட்டு  நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உங்க அப்பா, அம்மாவை பேசினதை மட்டும்  கேட்கிற, நான் பல்லவியை கூட தான் பேசினேன்.. அதை ஏன் கேட்கல..” விஷ்ணு விடாமல் கேட்டான்.

உங்க ஈஷ்வருக்கு பல்லவி உயிர், அதனால தான் இந்த கேள்வி இல்லை..”  மகா புரிந்து கொண்டாள்.

கண்டிப்பா.. அவனுக்கு முக்கியமானவங்க எனக்கும் முக்கிமானவங்க தான்..”

அதுல நாங்க எல்லாம் இல்லை.. அப்படி தானே..?” மகா நிதானமாக கேட்டாள்

யார் சொன்னா..? அப்படி இருந்தா நான் இப்போ இங்க இருக்கவும் மாட்டேன், உன்கிட்ட பேசிட்டும் இருக்க மாட்டேன்..”

பேசாதீங்க, வச்சுடுங்க.. அப்படி ஒன்னும் அவனுக்காக நீங்க என்கிட்ட பேசணும்ன்னு இல்லை..” மகாவிற்கு உரிமை கோவம் வந்தது.

அதை நீ சொல்லாதடி அகங்காரி.. இப்போ எதுக்கு போன் பண்ணன்னு மட்டும் சொல்லு..” விஷ்ணு புரிந்து கொஞ்சம் அமைதியான மனதுடன் கேட்டான்.

நீங்க என் அப்பா, அம்மாவை பேச கூடாதுன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்..”

அவங்க என் ஈஷ்வரை பேசினாங்க, நான் பேசினேன்..”

அவன் ஒன்னும் ஒழுங்கு இல்லை, எங்களுக்கு தெரியாம கல்யாணம் செஞ்சுக்கிட்டான், படிச்ச ஐபிஸ் விட்டான், அதை கூட என் அப்பா கேட்க கூடாது இல்லை.. கேட்டா நீங்க பேசுவீங்களா அவரை.. அன்னிக்கே சொன்னேன் என் அப்பாக்கு நான் இருக்கேன்னு.. திரும்ப என்ன..?”

உனக்கு நடந்தா தாண்டி அவன் வலி உனக்கு தெரியும்..”

அப்போ அவன் செஞ்சது எல்லாம் சரின்னு சொல்றீங்களா, அப்போ நானும் அவனை போல யாரையாவது வீட்டுக்கு தெரியாம கல்யாணம் செஞ்சுக்கிட்டா ஒத்துப்பீங்களா.. ஏன் பல்லவி அண்ணி வீட்லே அவங்களை ஏத்துக்கல தானே..”

அது அவங்க குடும்ப விஷயம் நீ நம்மை மட்டும் பேசு..”  விஷ்ணு கண்டிப்புடன் சொன்னான்

நான் ஒரு எக்ஸாம்பிளுக்கு தான் சொன்னேன், இங்க நம்மை மட்டும் பேச என்ன இருக்கு..? உங்க ஈஷ்வரை போல நாமும்  ஓடி போய் கல்யாணம் செஞ்சுக்கிறதை தவிர.. என்ன ஓடுவோமா..?” சீண்டலாக  கேட்டாள்

ஆஹான் வாடி என் சிங்காரி  நீ ஈஷ்வரை இவ்வளவு பேசினத்துக்கு அப்புறம் நான் உன்கூட ஓடி வருவேன்னு கனவுல கூட நினைக்காத..”

அதுக்கு என்ன அவசியம், எங்க அப்பா, மாமாவே நம்ம கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க..”

நான் உன்னை கட்டிக்க மாட்டேன்..”  விஷ்ணு உர்ரென்று சொல்ல, ‘

“ஒன்னும் பிரச்சனையில்லை நானே உங்களை கட்டிக்கிறேன்..”  என்றாள் அவள் சாதாரணமாக

என் சம்மதம் இல்லாம எப்படிடி  கட்டிக்க முடியும்..?”

ம்ம்.. என் கையால தான்.. அப்புறம் காலால கூட கட்டிக்கலாம்..”

அடிங்க.. உன்னை நேர்ல வந்தேன் பேசுற வாய..”

என்ன கடிச்சு வச்சிடுவீங்களா..? எனக்கு ஓகே தான்..”

ஒழுங்கா போனை வச்சிட்டு ஓடிடு.. எப்போ பாரு குதர்க்கமா பேசிகிட்டு..”

நீங்க ஒரு மார்க்கமா இருந்தா நான் ஏன் குதர்க்கமா பேச போறேன்..”  மகா நொடிப்புடன் சொல்ல,   விஷ்ணு உதடுகள் இறுக்கத்தை விட்டு தளர்ந்து விரிந்தது.

நீ என்கிட்ட சண்டை போட போன் பண்ண, மறந்திட்டியா..?” என்றான் சிரிப்பை மறைக்காமல்

இப்படியே சிரிச்சிட்டு அமைதியா இருங்க, உங்க ஈஷ்வர் கண்டிப்பா வந்துடுவான், அவனக்கு நீங்க, பல்லவி எல்லாம் உயிர், உங்களுக்காகவே வருவான்..”  என்று வைத்துவிட்டாள்