என்ன விஷ்ணு இப்படி சொல்லிட்ட..? ச்சு.. எனக்கும் உனக்கு தான் மகாவை கொடுக்கணும்ன்னு தான் ஆசையா இருந்துச்சு, ஆனா நீயே வேண்டாம் சொல்லும் போது. விடுடா என் தங்கச்சிக்கு ஏத்த வரனை பார்த்துகிறேன், மாமா சொன்னது கூட ஓகே தான், விசாரிக்கணும்..”

டேய்.. நான் எங்கடா வேண்டாம் சொன்னேன், நீங்க தானே சொல்ல வச்சிங்க..?”   மனதில் குமுறிய விஷ்ணுவிற்கு  அவ்வளவு ஏமாற்றம்

மனதின் ஏதோ ஒரு இடத்தில மகா தான் அவன் வருங்காலம் என்ற எண்ணம் உடைந்ததில் மீண்டும் ஒரு பீர் பாட்டிலை காலி செய்தான்

ஈஷ்வருக்கு அவனின் ரகசிய போன் வைபிரேட் ஆக, “ரெஸ்ட் ரூம் போறேன்..” என்று உள்ளே சென்று பேசிவிட்டு  வந்தவன் முகம் சுருங்கி ஒளிர்ந்தது. இங்கு விஷ்ணு உர்ரென்று அமர்ந்திருக்க, அவன் பக்கத்தில் அமர்ந்த ஈஷ்வர்,  

ஏன் விஷ்ணு உனக்கு மாமா சொன்ன மாப்பிள்ளை தெரியும் இல்லை, ஆள் எப்படி இருப்பார்..?” கேட்டான்

அவன் எப்படி இருந்தா என்ன வேலையை பாருடா..”  என்றவன், “சுப்பு எனக்கு சரக்கு வாங்கிட்டு வா..” என்றான் பக்கத்தில் நொந்து போய் அமர்ந்திருந்தவனிடம்

அவனோ, “டேய்.. இங்க சரக்கு  எல்லாம் இல்லைடா..” வேகமாக சொன்னான்

அப்போ போய் பக்கத்துல இருக்க டாஸ்மார்க்குல வாங்கிட்டு வா.. போ..”  அவனை தள்ளவிட்டான். ஈஷ்வர்க்கு அவன் நிலை புரிய, அப்படி ஒரு சிரிப்பு

என்கிட்டேயே உன்னை மறைச்சு வைக்கிறயே விஷ்ணு, “ம்ம்.. இப்போ என் லவி இருந்தா இன்னும் நல்லா இருக்கும், பாரு நம்ம வீட்ல மகாக்கு கல்யாணம் பேசுறாங்க, அண்ணியா அவ இல்லை.. ஒருவேளை மினிஸ்டர் இதை வச்சு கூட என் பொண்டாட்டிய வர வச்சுடலாம் இல்லை..” என

டேய்.. பேசாம ஓடிடு..”  கத்திய விஷ்ணு, “விட்டா நாளைக்கே அந்த சிங்காரிக்கு கல்யாணம் வச்சுடுவாங்க போல..”  உள்ளுக்குள் கடுப்படித்தான்

என்ன விஷ்ணு இப்படி சொல்லிட்ட..? அப்போ என் கஷ்டத்தை யார் கேட்பா..?”  அழுவது போல சொன்னவன் முன் ஒரு பாட்டிலை வைத்தான் சுப்ரமணி.  

பாரு என் சுப்பு செல்லத்துக்கு கூட என் கஷ்டம்  தெரியுது..”  என்றவன் குடிப்பது போல முழுதும் மேலே ஊத்தி கொண்டான்

டேய் டேய்..” விஷ்ணு பதற, ஈஷ்வர் இங்கு காலி செய்துவிட்டான்

அது எனக்கு வாங்கிட்டு வர சொன்னதுடா..”

இப்போ என்ன சுப்பு தங்கம் திரும்ப வாங்கிட்டு வருவார்.. போ சுப்பு குட்டி..”  திரும்ப அவனை வாங்கி வர செய்து அலப்பறை கூட்டினர். இரவு பனிரெண்டு மணி வரை அவர்கள் சத்தம் ஓயவில்லை. 

{இது திகம்பரனின் திகம்பரி முதல் எபி ப்ரண்ட்ஸ்..} 

“சுப்பு.. சுப்பு..”  என்று அவனை ராகம் இழுத்தே பாடாக படுத்தினர். 

“எங்களுக்கு இன்னும் ஒரு புல் வேணும்..”  என்று ரவுசு விட, 

“டேய்.. இன்னும் என்னடா வேணும்..? அதான் பப்பே காலியாகிருச்சு இல்லை, கிளம்புங்கடா போலாம்..” என்றான் சுப்ரமணி  நொந்து போய். 

“என்ன அதுக்குள்ள கிளம்புறதா..? வாய்ப்பே இல்லை மச்சி, இன்னும் ஒரு ஹாப் சொல்லு..”  டேபிளில் தாளம் போட்டான் விஷ்ணு. 

“அநியாயம் பண்றீங்கடா, நேரம் இப்போ நைட் பன்னிரண்டு மணி. இன்னும் எவ்வளவு நேரம்டா..”

“இப்போதான் பன்னிரண்டு மணியா..? ச்சு.. அப்போ ஒரு புல்லே சொல்லு மச்சி..” ராகம் இழுத்தான் ஈஷ்வர். 

“கொஞ்சமாவது என் நிலைமையை புரிஞ்சுக்கோங்கடா.. இங்க பப்ல அதெல்லாம் அலோவ்டே இல்லை, உங்களுக்காக நான் பக்கத்து டாஸ்மார்க்ல வாங்கி வந்து கொடுத்துட்டு இருக்கேன்டா, அவனும் கடைய மூடிட்டு ஓடியிருப்பான், இப்போ உங்க புல்லுக்கு நான் எங்க போகட்டும்..?”

“என்ன அதுக்குள்ள கடைய மூடிட்டானா..? என்ன தைரியம் அவனுக்கு.. வா மச்சி போய் அவனை என்னன்னு கேட்போம்..” இருவரும் எழுந்து பப்பை விட்டு வெளியே வந்தவர்கள்,  ரோடை கிராஸ் செய்ய,  வேகமாக வந்த காரில் மோதி நின்றனர். சென்னை மவுண்ட் ரோட், நடுஇரவு நேரம்.

“எவண்டா அது.. எங்க கார்ல வந்து மோதுறது, கொஞ்சம் விட்டிருந்தா உங்களை அடிச்சு தூக்கியிருப்போம்..” காரில் இருந்து மூவர் இறங்கி வந்தனர். 

 அவர்களுடன் மல்லுக்கட்டியதில் போலீஸ் வந்துவிட, அந்த மூவரையும் அரெஸ்ட் செய்தனர், சக்கரவர்த்தி சரியாக அந்த நேரத்துக்கு வர, ஈஷ்வர் கண்கள் அவரிடம் என்ன சொன்னதோ, அவர் உடனே அங்கு இவர்களை வீடியோ எடுத்து கொண்டிருந்தவர்கள் போனை வாங்கி கொண்டார். 

விஷ்ணு அவரை பார்க்கவும் போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி சென்றுவிட, ஈஷ்வரும் கைது செய்தவர்களை கண் காட்டிவிட்டு விஷ்ணு பின் ஓடினான். அப்போது நரசிம்மன் அனுப்பிய ஆள் வர சொல்லி கூப்பிட, ஈஷ்வர் அவரை கத்திவிட்டு விஷ்ணுவுடன் சென்றான். 

சுப்ரமணி கார் எடுத்து வர, வீடு சென்றனர். மறுநாள் முழுதும் தூங்கி, அடுத்த நாள் ஈஷ்வர் பல்லவி குடும்பத்துடன் திருப்பதி கிளம்பிவிட, விஷ்ணு ரூமில் படுத்திருந்தான்.

அப்போது அவன் போன் ஒலிக்க, பார்த்தால் துர்கா. எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் செய்ய, ஒரு கட்டத்தில் எடுத்தவன், “எதுக்கு விடாம  போன் பண்றீங்க..? நான் வீட்டுக்கு எல்லாம் வர மாட்டேன்..” என்றான்

நீ வராத, ஆனா ஹாஸ்பிடல்க்கு வர வழிய பாரு..”  என்றார் அதட்டலாக

அதுவும் முடியாது..”

விஷ்ணு.. உனக்கு புரியலையா நீ என்ன செஞ்சிட்டு இருக்கன்னு, நீ இப்படி இருக்கிறதால தான் அப்பா மகாக்கு உன்ன கேட்க மாட்டேங்குறார்..”

கேட்க வேண்டாம் விடுங்க..”

அதை நீ சொல்லாத, எனக்கு மகா தான் மருமகளா வரணும்..”

ம்மா.. யோசிச்சு பார்த்ததுல  அப்பா சொல்றதும் சரி தான்..”  என்றான் விஷ்ணு. ஈஷ்வர் சொல்லும் போது இருந்த கோவம் இப்போது இல்லை, ஏமாற்றம் உண்டு தான். ஆனால் மகாவின் வாழ்க்கை எனும் இடத்தில நிதர்சனம் புரிந்தது.

என்னடா சொல்ற..?”

உண்மை தான்ம்மா..  நான் மகாக்கு நல்ல மேட்ச் கிடையாது, இதை விட்டுடுங்க..”   என்று வைத்துவிட்டான்

துர்கா மூலம் இந்த விஷயம் மகாவிற்கு தெரிய வர, அவள் உடனே போன் எடுத்து கங்காவிற்கு அழைத்துவிட்டாள். “என்ன மகா..” கேட்க,  

ம்மா.. எனக்கு விஷ்ணு மாமா தான் வேணும், இந்த வரன் பேசுறது எல்லாம் நிறுத்துங்க..”  என்றாள் உறுதியாக

கங்காவிற்கும் மகள் வார்த்தைகள் மகிழ்ச்சி தான். நான் அப்பாக்கு சொல்லிடுறேன்.. என, நரசிம்மனும் மகள் மௌனத்தில் குழப்பத்தில் இருந்தவர், இதை கேட்கவும் உடனே சக்கரவர்த்திக்கு அழைத்து சொல்லிவிட்டார்.

விஷயம் கேள்விபட்ட விஷ்ணு உடனே பைக் எடுத்து மகாவை பார்க்க கேம்பஸ் சென்றான். அவள் இவன் வருவான் என்று தெரிந்து தயாராக தான் இருந்தாள் போல. இவன் போன் செய்யவும்  வந்தவள், “கெஸ்ட் அவுஸ்க்கு  போலாம்..”   என்று அவன் பைக்கில் ஏறி கொள்ள, விஷ்ணு பைக் எடுத்தான்

அண்ணா இல்லையா..?” மகா வீட்டிற்குள் வந்து பார்த்து கேட்க

இல்லை.. நீ ஏன் இப்படி பண்ற..?”  கேட்டான்

என்ன பண்ணேன்..?”

மகா.. உனக்கு தெரியும், நீ அத்தைகிட்ட சொன்னதை தான் கேட்கிறேன்.. ஏன் இந்த ரிஸ்க், உண்மையை சொல்ல போனால் நீ  ஆசைப்பட்ட படி என்கிட்ட இருந்து நீ தப்பிக்க இது ஒரு பெஸ்ட் சேன்ஸ் தான்..”

நீங்க சொல்றது சரி தான், ஆனா இப்போ எனக்கு அப்படி தப்பிக்க  தோணல..”

ஏன்..?”

ம்ம்.. என் அத்தை மகனுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்..” 

அடிங்.. நீ என்னடி எனக்கு வாழ்க்கை கொடுக்க..? ஒன்னும் தேவையில்லை, அந்த மேஸ்திரிக்கு ஓகே சொல்லிடு..”

எனக்கு இந்த பாய்லர் தான் வேணும்..” என்றாள் நேர்பார்வையாக.

மகா நான் சீரியஸா சொல்லிட்டிருக்கேன்.. உன் வாழ்க்கையை பாரு..”

நான் என் வாழ்க்கையை தான் பார்த்திட்டே இருக்கேன்..” அவனை பார்த்து சொன்னாள்.

மகா..” அதட்டல் இட்டான்

சொல்றதை புரிஞ்சுக்கோ மகா, நீயே பார்க்கிற இல்லை சின்னுக்கு இப்படி ஆனதுக்கே நான் தாங்கல, அவனை பார்க்க கூட முடியாம ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கேன், நான் அவ்வளவு ஸ்ட்ராங் கிடையாது போலடி.. எனக்கு பெரிய அடி விழுற வரைக்கும் தான் என் தைரியம் போல, விழுந்தா எழவே மாட்டேன் போல.. எனக்கே என்னை நினைச்சா பிடிக்கல..”

ஆனா எனக்கு இப்போ தான் ரொம்ப பிடிக்குதே..” விஷ்ணு அவளை கூர்மையாக பார்க்க

மீன் இட்..” என்றாள் உறுதியாக

ஏன் நான் இப்படி இருந்திருந்தா நீங்க என்னை கல்யாணம் செஞ்சிருக்க மாட்டிங்களா..?” மகா கேட்க,

ச்சு என்ன பேசுற நீ..?”  என்றான் விஷ்ணு. 

நான் கேட்டதுக்கு சரியான பதில் சொல்லுங்க, நான் உங்களை மாதிரி இப்படி மனசளவுல உடைஞ்சு போயிருந்தா என்னை விட்டிருப்பீங்களா..?”

அது வேற இது வேற..”

ஏன் நீங்க மட்டும் தான் எங்களுக்கு வாழ்க்கை கொடுக்கணுமா..? அதே நாங்க கொடுத்தா வாழ மாட்டிங்களா..?”

உனக்கு என்னதாண்டி ஆச்சு, முதல்ல எல்லாம் என்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்ன்னு இருப்ப, இப்போ என்ன தானா வந்து இந்த பாய்லர்ல விழ நினைக்கிற..?”

நீங்க தான் சொல்வீங்க இல்லை நான் அரைவேக்காடுன்னு, அதான் பாய்லர்ல விழுந்து முழு வேக்காடா மாறனும்ன்னு முடிவு பண்ணிட்டேன்..”

கண்டிப்பா என்னை நீ தாங்க முடியும்ன்னு எனக்கு தோணல..”

என்ன ஒரு செவண்டி பைப் இருப்பீங்களா.. தாங்கிப்பேன்..” என்றுவிட்டாள்.

ஹேய் என்னடி பேசுற நீ..?” விஷ்ணு முகம் சிவந்துவிட்டது

நான் என்ன சொன்னேன்..?” அவள் வெளியே சாதாரணமாக கேட்டாலும், காது மடல் சிவந்துவிட்டது.

“இது சரி வராது நீ கிளம்பு..”  விஷ்ணு பைக் கீ எடுத்து நடக்க, பின்னால் வந்த மகா தன்னை தானே தலையில் தட்டி கொண்டாள்

இருவர் முகமும் அவர்களுக்கே தெரியாமல் மின்னி கொண்டு தான் இருந்தது. முழு மௌனத்தில் அவளை கேம்பஸில் விட்டு கிளம்பிவிட்டான்.