“என்ன சொல்றீங்க டாக்டர்.. அதெப்படி..?” விஷ்ணு அதிர்ந்து கேட்டான்.
“நீங்களே பாருங்க விஷ்ணு ரிப்போர்ட் தான் சொல்லுது, அவரோட கிட்னி அபெக்ட் ஆகி இருக்கு, ரத்த ஓட்டம் சீரா இல்லை, அவரோட ஹெல்த் ஸ்டேபிள் ஸ்டேஜ்ல இல்லை..” என்றார் மீண்டும்.
“டாக்டர் நான் தினமும் அவனை பார்க்கிறேன். அவன் நார்மலா தான் இருக்கான்..” விஷ்ணு நம்பாமல் சொன்னான்.
“உங்களுக்கு அப்படி தெரியலாம் விஷ்ணு.. பட் அவருக்கு இன்னும் கேர் தேவை..”
“முன்னாடி அவனுக்கு பார்த்த டாக்டர் பிரதாப்பும், JRம் அவன் நார்மலா தான் இருக்கான் சொன்னாங்க..”
“நீங்க அவருக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்து ஒன் இயர்கிட்ட ஆயிடுச்சு விஷ்ணு சோ அவங்களுக்கு தெரியாம இருக்கலாம், இப்படியே விட்டா அவரோட ஹெல்த் இன்னும் மோசமாகிடும், JR கொடுத்த டேப்ளெட்ஸ் நிறுத்திடுங்க, இன்பெக்ட் அது கொஞ்சம் பவர் புல்லான டேப்ளெட்ஸ், உங்களுக்கு தெரியாதா.. அந்த பெயின் டேப்ளெட்ஸ் எல்லாம் எடுக்கவே கூடாது..”
“டாக்டர் அது அப்போ ஆப்ரேஷன் பண்ணப்போ பெயினுக்காக எடுத்தது..”
“அது கூட தப்பு தான் விஷ்ணு, அந்த வீரியம் எல்லாம் சின்னு உடலை அரிச்சிடும், இன்னர் பார்ட்ஸ் எல்லாம் பலவீனமாகிடும்..”
“டாக்டர்.. நீங்க என்னென்னவோ சொல்றீங்க.. நான் பார்த்து பார்த்து தான் செய்றேன்..” விஷ்ணுவால் ஏற்று கொள்ள முடியவில்லை.
“விஷ்ணு உங்களுக்கு சந்தேகம்ன்னா ரிப்போர்ட் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. நானா எதுவும் சொல்லலை, அவரோட ரிப்போர்ட் சொல்றதை தான் நான் சொல்றேன்..” திலக் சொல்ல, விஷ்ணு மீண்டும் மீண்டும் ரிப்போர்ட்ஸ் பார்த்தான்.
“நாளை துருவ் கூட்டிட்டு வாங்க.. ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என, விஷ்ணு திரும்ப ரிப்போர்ட் ஆராய்ந்தபடி அவன் ரூம் சென்றான். பேஷண்ட் நேரம் முடியவும், வீட்டிற்கு சென்றான்.
துர்காவும் விஷ்ணு போன் செய்ததால் வந்திருக்க, ரிப்போர்ட் கொடுத்தான். வாங்கி பார்த்தவர் திலக் சொல்வது உண்மை தான் என்றார். ஆனால் எப்படி.. என்று அம்மா, மகன் இருவரும் யோசிக்கவே செய்தனர்.
வேறு வழி இல்லை. ட்ரீட்மெண்ட் எடுத்து தான் ஆக வேண்டும் என்று புரிய, சின்னு, திலக் அப்சர்வேஷன் கீழ் இருந்தான். அவர் கொடுத்த மாத்திரைகள், உணவு முறைகளை பாலோவ் செய்தான்.
அவர் சொன்னதை சின்னு செய்தான். ஏன் என்று கேட்கவில்லை. விஷ்ணுவிற்கு தம்பியிடம் ஏதோ மாற்றம் தெரிய என்ன என்று கேட்க, சரியான பதிலே இல்லை. ஐம் ஓகே.. இது தான் அவன் பதில். ஆனால் ஏதோ தவறாக நடப்பது போல உறுத்தல் அண்ணனுக்கு.
இப்படியே மாதங்கள் செல்ல சின்னு உடல் கொஞ்சம் இளைத்தது தவிர வேறெந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல இருந்தான். விஷ்ணுவிற்கு தான் குழப்பம். அன்றிரவு விஷ்ணு உணவு கொடுக்க, சின்னு சாப்பிட்டு கொண்டு இருந்தவன், திடிரென இரும ஆரம்பித்தான்.
“மெல்லடா..” விஷ்ணு தண்ணீர் கொடுக்க, குடித்த பிறகு கொஞ்சம் ஆசுவாசமானான். தூங்கும் முன் பால் கொடுக்க, தலைக்கு ஏறியது.
“என்னடா பண்ணுது..” விஷ்ணு கண்கள் சுருங்கியது.
“ஒன்னும் இல்லைண்ணா..” சின்னு குடித்து படுக்க, விஷ்ணுவும் அவனுடன் படுத்தான். நடு இரவு போல சின்னுவின் கண்கள் விழித்து கொள்ள, மூச்சு காற்று பற்றவில்லை. காற்றுக்கு தவித்து போனவன், கைகளை பெட்டில் அடிக்க, விஷ்ணு முழித்து தம்பிய பார்த்தவன், அவன் நிலை உணர்ந்து உடனே முதுலுதவி செய்தவன், துர்கா ஹாஸ்பிடல் கூட்டி சென்றான்.
துர்கா ஒரு எமெர்ஜென்சி என்று ஹாஸ்பிடலில் இருந்தவர், விஷ்ணு போன் செய்யவும் ஸ்ட்ரெச்சருடன் தயாராக வாசலிலே இருந்தார். கணேஷ் கார் நிறுத்தவும், விஷ்ணு தம்பிய கையில் தூக்கி கொண்டு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்க, அன்றிரவு முழுதும் அவனுக்கான ட்ரீட்மெண்ட் நடந்தது.
விடியற்காலையில் கண் முழித்தான் சின்னு. விஷ்ணு மிகவும் சோர்ந்து போனான். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. துர்கா உடனே பிரதாப்பை வர சொன்னார். அவரும் மகனுடன் லண்டனில் இருந்தவர், துர்கா அழைப்பை ஏற்று உடனே கிளம்பி இந்தியா வந்தார்.
சின்னுவை பரிசோதித்தவர், முழு செக் அப் எடுத்தார். “என்ன ஆச்சு டாக்டர்..?” துர்கா தான் கேட்டார். விஷ்ணு மிக மிக அமைதி.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல டாக்டர்.. கிட்னி, லங்ஸ் எல்லாம் ஹைய்லி அபெக்டட்.. ரத்த ஓட்டம் சீரா இல்லை, ஆக்சிஜன் லெவல் லோ, ரொம்ப கிரிட்டிகள் ஸ்டேஜ்..” என, மொத்த குடும்பத்திற்கும் இடியாக விழுந்தது.
சின்னுவை பார்த்த திலக், JR இருவரும் வரவைக்க பட்டனர். “எதனால இப்படி..? அவனுக்கு ஆப்பரேஷன் நடந்தப்போ கூட அவனுக்கு இந்த பிரச்சனை இல்லை. நல்லா தான் இருந்தான்..” பிரதாப் கேட்க, இருவரும் நாங்க சரியா தான் பார்த்தோம் என்றனர்.
“என்கிட்ட வரும் போதே சின்னுக்கு கிட்னி அபெக்ட் இருந்தது. நான் சொல்லி தான் ட்ரீட்மென்ட் கொடுத்தேன் என்றார் திலக்..”
“சரி நீங்க ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் ஏன் இப்படி ஆச்சு..?” பிரதாப் கேட்டால் அவர் ஏதேதோ சொன்னார். JR டாக்டரை கை காட்டினார்.
“அவரோ.. நான் சின்னுவுக்கு பெயின் டேப்ளெட்ஸ் அளவா தான் கொடுத்தேன், மீதி எல்லாம் விட்டமின் மட்டும் தான்..” என்று வாதாடினார். இருவரையும் கூர்மையாக பார்த்து நின்றான் விஷ்ணு.
சக்ரவர்த்தி கண்கள் சுருங்கியிருக்க, உடனே வீட்டிற்கு கிளம்பினார். சில மணி நேரங்கள் சென்று திரும்ப ஹாஸ்பிடல் வந்தவர் முகம் ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை.
“அடிக்கடி பெயின் இருக்கும், ஆனா நான் சொல்லலை, திரும்பகடவுள்எனக்குஏதோகிப்ட்கொடுத்துஇருக்கார்ன்னு புரிஞ்சது, அது என்னன்னு நீங்க தான் சொல்லணும்..”லேசானசிரிப்புடன்கேட்க, மகாதொண்டைவலித்ததுஅழுகையில்.