இதுக்காக நான் யார் மேல சத்தியம்  வைக்கட்டும்..? நம்பும்மா.. இப்போ வரை எங்களுக்குள்ள ஒன்னும் இல்லை, அப்படி இருந்தா கண்டிப்பா பர்ஸ்ட் உன்கிட்ட தான் சொல்வேன்..” அவரை தோளோடு அணைத்து கொண்டாள்.

“ஈஷ்வர் ஏன் என்கிட்ட  இப்படி இல்லாமல் போனா..? ஒருவேளை நான் அவன்கிட்ட சரியா நடந்துக்கலையோ..?” எப்போதும் போல இப்போதும் மகனை நினைத்து வருந்திய கங்காஅவனுக்கு அழைத்துவிட்டார்

சொல்லுங்கம்மா..” அவன் எடுக்க

எப்படி இருக்க ஈஷ்வர்..?” கேட்டார் கங்கா

ஓகேம்மா.. நீங்க, மகா எப்படி இருக்கீங்க..?”

ம்ம்.. இருக்கோம் ஈஷ்வர்..” அவர் ஏதோ போல சொன்னார். ஈஷ்வர் ஏன் என்று கேட்கவில்லை. கேட்டால் எங்கு வரும் என்று தெரியும். சில நொடி அமைதி

சரியாகிடும்மா.. பார்த்துக்கோங்க..”  வைத்துவிட்டவன்,  எழுந்து பால்கனி சென்றான். இரவின் குளிர் முகத்தில் அடித்தது. நாள் முழுதும் ட்ரைனிங், இரவுகள் தான் அவனுக்கு மிகவும் நீளம்

நரசிம்மன் மேல் உள்ள அளவுக்கு அதிகமான கோவம். அம்மா, தங்கை நினைத்து குற்ற உணர்ச்சி, பல்லவி நினைத்து கவலை. ஏதேதோ நினைவுகள்தூக்கம் தன்னை மீறி வரும் வரை மனம் நிற்காமல் ஓடி கொண்டிருக்கும். கட்டுப்படுத்த விரும்பவில்லை

லவி..”  அவளை நினைத்து விழித்திருப்பது, அந்த வலி, அவளுடன் வாழ்ந்த சொர்க்கம், அவளின் பிரிவு.. எல்லாவற்றையும் முழு மனதோடு ஏற்றான். சுகத்தையும், வேதனையும், கண்ணீரையும் விரும்பினான்

அவள் இந்நேரம் எங்கு இருப்பாள்..?” கண்ணுக்கு தெரிந்த இடம் வரை பார்ப்பான். நிச்சயமாக நன்றாக தான் இருப்பாள்.. அந்த நம்பிக்கை  இருந்தது தந்தை மேல்

ஆனால் குடும்பத்தையும் பிரிந்து, தன்னையும் பிரிந்து சந்தோஷமாக இருக்க மாட்டாள், என்னை போல அவளும் தவித்து கொண்டு தான் இருப்பாள்.. எப்போதும் போல இப்போதும் அவளை நினைத்து இருட்டில் அவளை தேடி கொண்டிருந்தவன் போன் ஒலித்தது. கண்டிப்பாக விஷ்ணு தான்.. பார்க்காமலே போனை காதுக்கு கொடுத்து படுத்தான்.

“சாப்பிட்டியா..?”  விஷ்ணு கேட்க

ம்ம்.. சாப்பிட்டேன்.. சொல்லுடா..”

என்ன சொல்ல..? நீ தான் சொல்லணும் வீட்டுக்கு பேசுனியா..?”

அம்மா பேசினாங்க..”

ஓகே.. மகா பேசலையா..?”

இல்லை.. ஏன்..?”

சும்மா தான் கேட்டேன்..”

விஷ்ணு சொல்லு ஏன் மகா பேசல கேட்கிற..?”

இன்னைக்கு படத்துக்கு போனப்போ  கொஞ்சம் டல்லா இருந்த மாதிரி தெரிஞ்சா அதான் கேட்டேன்..”  என

புருவம் சுருக்கிய ஈஷ்வர்நான் வரேன் இரு..” கட் செய்துவிட்டு உடனே தங்கைக்கு அழைத்தான். மகா போனை எடுக்கவே இல்லை

நிச்சயம் விஷ்ணு வேலை தான். முழு ரிங் முடியவும், இவள் எடுத்து விஷ்ணுவிற்கு அழைத்தாள். “சொல்லு முறை பொண்ணே..”  அவன் கிண்டலாக கேட்க

என்ன சொன்னீங்க அண்ணாகிட்ட..” கோவத்துடன் கேட்டாள்

நீ டல்லா இருக்கேன்னு மட்டும் தான் சொன்னேன்..” 

அது கூட   எதுக்கு சொன்னீங்க..? உங்களுக்கு என்ன மனசுல என்ன பெரிய சமாதான புறான்னு நினைப்பா..?”

உனக்கு கூட தான் மேரேஜ் மேக்கர்ன்னு நினைப்பு நான் கேட்டேனா..?”

எதுக்கு எதை பேசுறீங்க..? இந்த முறை நான் அந்த அபிதா அக்காகிட்ட வேண்டாம் தான் சொன்னேன் அவங்க தான் உங்ககிட்ட பேசியே ஆகணும்ன்னு என்னை தொல்லை பண்ணாங்க..”

அதை நீ என்கிட்ட தான் முதல்ல சொல்லியிருக்கணும்..?”

ஏன் சொல்லணும்..? நல்லா மாட்டிகிட்டு முழிங்க தான்னு செஞ்சேன்..”

என்கிட்ட மாட்டிட்டு முழிக்க தான் நீ இருக்கியே சண்டைக்கோழி..”

நான் சண்டைக்கோழியா..? அதை நீங்க சொல்றது தான் கொடுமை.. இன்னைக்கு கூட அடிதடி.. ஆமா எதுக்கு அவனை அடிச்சீங்க..?”

ம்ப்ச்.. நம்ம பக்கத்து டேபிள்ல ஒரு அம்மா அவங்க பேபிக்கு  சாப்பாடு கொடுத்திட்டு இருந்தாங்க, இவன் அவங்க போட்டோ எடுத்து, உடனே மார்பிங் செய்றான்..”

ஐயோ.. என்ன சொல்றீங்க..?”

இப்படி செஞ்சு சில சைட்ல போட்டா நல்லா பணம் பார்க்கலாம்..”

ஓஹ்.. அதனால தான் போலீஸ் அவங்களை பிடிச்சுட்டு போனாங்களா..?”

ஆமா.. பப்லிக்ல உட்கார்ந்து தைரியமா பண்றான், பெரிய ஸ்க்ரீங்குறதால எனக்கு தெரிஞ்சது அவன் பண்றது, பார்க்கவும் கண்ட்ரோல் பண்ண முடியல.. தலையிலே போட்டேன்..”

சரி நீங்க செப்டிக் போட்டீங்களா..?”

ஏன் நீதான் வந்து அத்தானுக்கு போட்டுட்டு போறது..?”

அத்தானா.. உவ்வே..”

ஏய் என்னடி உவ்வே சொல்ற..? இதுக்காகவே உன்னை கட்டிக்கிட்டு அத்தான் கூப்பிட வைக்குறேன் இரு..”

அதுக்கு வேற ஆளை பாருங்க..”

என் சிங்காரி நீ இருக்கும் போது நான் எதுக்கு வேற ஆளை பார்க்கணும்..?”

சிங்காரியா..?” மகா முகம் சுருக்கி கேட்டாள்.

ஆமா சிங்காரி, அகங்காரி, சண்டைக்காரி.. எல்லாம் நீ தான்..”

ச்சு.. உங்ககிட்ட பேசுறதே வேஸ்ட்..”

அது தான் நானும் சொல்றேன், உன் அண்ணன்கிட்ட பேசு, அவன் பாவம், ஏற்கனவே நிறைய கஷ்டத்துல இருக்கான், நீயும் அவனை கஷ்டப்படுத்தாத, பாரு உனக்கு செகண்ட் லைன் வந்துட்டே தான் இருக்கு, எடுத்து பேசு..”

அதானே எப்போவும் உங்களுக்கு அவன் தானே முக்கியம்.. அவன் பொண்ணா பிறந்திருந்தா உங்க ரெண்டு பேருக்கும் இந்நேரம் கல்யாணமே முடிஞ்சிருக்கும்..”

அதுக்கு தான் பிறக்கல, நாங்க வேற..”

உங்களுக்கு அவன் கஷ்டம் மட்டும் தான் தெரியுது இல்லை..”

உங்க வருத்தமும் தெரியுது, பட் அவன் அளவுக்கு உங்க கஷ்டம் இல்லை.. அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அவன் கையில இப்போ இல்லை, அதை பிடுங்கினது உன் அப்பா.. அப்போ அவன் கோவம் நியாயம் தானே..?”

அதுக்காக என்னையும், அம்மாவையும் தள்ளி வைக்கணுமா..?”

உனக்கு தெரியுமா..? அவன் உங்களை நினைச்சும் கவலை படுறான், என்ன சொல்றது இல்லை.. பேசு..”

முடியாது..”

மகா.. அவன் பாவம், தெரியாத இடத்துல தவிச்சிட்டு இருப்பான்..”

இருக்கட்டும்..”

மகா.. இதை உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல..”

ஆமா நான் இப்படி தான்..”

ஹேய்  பேசுடி.. எத்தனை கால் வந்துடுச்சு..”

முடியாது.. நைட் கூட அம்மா சரியா சாப்பிடல, அவங்க சண்டையில எங்களை தள்ளி வச்சுட்டான், நானும், என் அம்மாவும் யார் கண்ணுக்கும் தெரியறது இல்லை.. எங்க கஷ்டம் உங்களுக்கெல்லாம் ஒன்னுமில்லை, நீங்க, அவன், என் அப்பா எல்லாம் இப்படித்தான் இருக்கீங்க.. உங்க யார்கிட்டேயும் பேசுறது வேஸ்ட்.. நான் ஸ்விட்ச் ஆப் பண்றேன்..”   வைத்தவள், சொன்னது போல ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாள்.

விஷ்ணு கொஞ்சம் அதிர்ந்து தான் போனான். உடனே ஈஷ்வருக்கு அழைத்தான். “மகா எடுக்கல.. செகண்ட் லைன் போய் ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டா..”  ஈஷ்வர் வருத்தத்துடன் சொன்னான்

விடுடா.. நாளைக்கு பேசிக்கலாம்.. நீ தூங்கு.. நாளைக்கு டிரெக்கிங் இருக்கு இல்லை.. ரெஸ்ட் எடு..” பேசி வைத்தான்.

மகா மன  அழுத்ததில் இருப்பது புரிந்தது. “முன்னமே கவனிக்காம போயிட்டோமே.. அப்போ இந்த பிரச்சனை நடந்த இத்தனை மாசமா இப்படி தான் இருக்கா போல..” அவளை நினைத்தபடி தூங்கி போனான். மறுநாள் அவளுக்கு அழைக்க, எடுக்கவே இல்லை

சின்னுவிடம் பேசுவது புரிந்தது. தம்பியிடம் மேலோட்டமாக சொல்லி அவளுடன் நிறைய நேரம் செலவழிக்க வைத்தான். அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றாள். தம்பி மூலம் நிறைய புத்தகங்கள் கொடுத்து படிக்க வைத்தான்

டேய் என் சப்ஜெக்ட்ஸ் புக்ஸே  நிறைய இருக்கு, இது வேற படிக்கணுமா..?”   சலித்து கொண்டாலும் சின்னுவிற்காக படித்து டிஸ்கஸ் செய்தாள். கொஞ்சம் முகம் தெளிய ஆரம்பித்தது. ஆனாலும் இவனிடமும், ஈஷ்வரிடமும் பேசுவதில்லை

ஈஷ்வர் அவளை நினைத்து கவலைபட, விஷ்ணு நான் பார்த்துகிறேன் சொல்லிவிட்டான். விஷ்ணுவிற்கும்  தனியே பேஷண்ட்  பார்ப்பதால் நாட்கள் கொஞ்சம் பிசியாக சென்றது. அந்த மாத சின்னு செக் அப் வந்தது

எங்க போலாம்..?” கொஞ்சம் குழப்பம். துர்காவிடம் சென்றான். “உங்க ஹாஸ்பிடல் ஓகேன்னா அங்கேயே பார்க்கலாம் விஷ்ணு..” அவர் சொல்ல, விஷ்ணுவிற்கு ஏற்கவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை. என்னவோ ஒரு உறுத்தல்.

சின்னுவிற்கு தெரிய, “எனக்கு உங்க ஹாஸ்பிடல் தான் போகணும்..” என்றான். “இருடா அவசரப்படாதே..” விஷ்ணு சொல்ல

ஏன்.. நீ ஒர்க் பண்ற ஹாஸ்பிடல் தானே அண்ணா, எனக்கு ஓகே..” என, சக்கரவர்த்தியும்,  “ஏன் இவ்வளவு குழப்பிக்கிற விஷ்ணு.. பார்த்துக்கோ, உனக்கு தெரியும் இல்லை..”  என்று முடித்துவிட்டார்

விஷ்ணு குழப்பத்திலே அவன் வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டலே கூட்டி சென்றான். “வாங்க.. வாங்க விஷ்ணு.. சீப் டாக்டர் சொன்னார்.. ஹாய் யங் மேன்..”  சின்னுவிடம்  பேசினார்டாக்டர் திலக்

அவர் அணுகுமுறை சின்னுவுக்கு பிடித்துவிட, விஷ்ணு அவன் குழப்பத்தை தள்ளி வைத்துவிட்டு ரிப்போர்ட் கொடுத்தான். அவரும் பார்த்து, சின்னுவை செக் செய்தார்

விஷ்ணு ஒரு மாஸ்டர் செக் அப் போயிடலாம் தானே..?”  கேட்க, இந்த வருடம் எடுக்க வேண்டியது தானே என்று விஷ்ணுவும் ஒத்து கொள்ள அன்றே சின்னுவிற்கான முழு செக் அப் முடிந்தது

ரிசல்ட் நாளை பார்க்கலாம்..” திலக் சொல்ல, இருவரும் வீட்டிற்கு திரும்பிவிட்டனர். துர்காவிடம் சொல்ல, அவர் கேட்டு கொண்டவர், “ரிப்போர்ட் வந்ததும்  எனக்கு காட்டு விஷ்ணு..”  என, சரி என்றுவிட்டான்

மறுநாள் காலை நேரே திலக்கை பார்க்க சென்றான்ரிப்போர்ட் கையில் வைத்திருந்தவர் முகம் சுருங்கி இருந்தது. “என்ன ஆச்சு டாக்டர்..?” விஷ்ணு கேட்க, அவர் சொன்னது விஷ்ணுவை அதிர்ச்சியடைய வைத்தது.