அடங்காத நாடோடி காற்றல்லவோ 6

“இந்தாங்க..”  மகா ஹாண்ட் பேக்கில் இருந்த கர்சீப் எடுத்து நீட்ட, விஷ்ணு  வாங்கி அவன் நெற்றி ரத்தத்தை துடைத்து கொண்டான்கீறல்  இவன் துடைக்கவும், பளிச்சென்று தெரிந்தது

எதுக்கும் ஒரு செப்டிக் இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க, பீங்கான் கப்ல கீறிட்டாங்க..” மகா சொல்ல, விஷ்ணு திரும்பி சிரிப்புடன் பார்த்தான்

என்ன சிரிப்பு..?” மகா எரிச்சலாக கேட்டாள்

டாக்டர்ன்னு ப்ரூப் பண்றீங்களே மேடம்..” கிண்டலாக சொன்னவன், “சின்னுகிட்ட போ, நா வரேன்..” என்று வாஷ் ரூம் சென்று அந்த கர்சீப்பை வாஷ் செய்து அங்கிருந்த டஸ்ட்பினில் போட்டு வந்தான்

ஏன் இவ்வளவு லேட் மகா, ஏதோ பிரச்சனைன்னு போன்ல சொன்ன..? என்ன ஆச்சு..?”  மகா வரவும் சின்னு படித்து கொண்டிருந்த புக்கை வைத்து கேட்டான்

ச்சு.. வேற யாராலா..? எல்லாம் உன் அருமை உடன் பிறப்பால தான்..” மகா சலித்து அவன் வீல் சேரை தள்ளி கொண்டு பில்லிங் கவுண்டருக்கு வந்தாள். சின்னு வாங்கியவற்றுக்கு பணம் கட்டி வெளியே வர, விஷ்ணு வந்தான்

ண்ணா.. நெத்தியில அடிபட்டிருக்கு..” சின்னு வேகமாக கேட்க

பெருசா இல்லைடா.. போலாமா..?” வீல் சேரை தள்ளி கொண்டு லிப்டிற்கு சென்றனர். “நீ எப்படி வந்த கார்லியா..?”  மகாவை கேட்டு கார் பார்க்கிங் வந்தனர்

மகா.. வீட்டுக்கு வா, உன்கிட்ட பேசணும்..”  விஷ்ணு சொல்லி அவன் கார் இருக்கும் இடம் செல்ல

நான் வரல..” என்றாள் மகா நின்ற இடத்திலே சத்தமாக. விஷ்ணு அவன் கார் ஸ்டார்ட் செய்தவன், அப்படியே இருந்தான்

இதென்ன அராஜகம்..” மகா கார் எடுத்தவள், நேரே அவள் வீட்டிற்கு வந்துவிட்டாள். திரும்பி பார்க்க கூட இல்லை. இவள் கார் நிறுத்தி இறங்க, அவளுக்கு முன் விஷ்ணு கார் அங்கு நின்றிருந்தது

ஆயாசத்துடன் தலை ஆட்டி கொண்டவள், உள்ளே செல்ல கங்கா அண்ணன்தம்பிக்கு உபசரித்து கொண்டிருந்தவர்,   “வா மகா.. உனக்கும் டீ கொடுக்கவா..?”   மகளிடம் கேட்டு அவளுக்கும் எடுத்து வந்தார்

அவள் டீ குடித்து முடிக்கவும், “உன்கிட்ட பேசணும், வா தோட்டத்துக்கு போலாம்..” என்றான் விஷ்ணு. கங்கா இருவரையும் கேள்வியாக பார்க்க, மகா பல்லை கடித்தாள்

“அத்தை நீங்க சின்னு கூட இருங்க.. வந்துடறோம்..” விஷ்ணு முன்னால் நடக்க, மகா அம்மாவை பார்த்து தயக்கத்துடன் தலை ஆட்டி அவன் பின்னால் வந்தவள்

அப்படியென்ன பேசணும் உங்களுக்கு வீடு வரை துரத்திட்டு வந்திருக்கீங்க..”  கடுப்பாக கேட்டாள்

அவனோ  “என்ன ஆச்சு உனக்கு..?” என்றான்.

எனக்கு என்ன..?”  தலை தூக்கி கேட்டாள்

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, என்ன பிரச்சனை உனக்கு சொல்லு..?”  மீண்டும் கேட்டான்

ம்ப்ச்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை, நான் ரொம்ப நல்லா இருக்கேன்..”

இப்போ நீ சொல்லலை நான் ஈஷ்வர்கிட்ட பேசுவேன்..”

ம்ஹ்ம்.. அவனுக்கு எங்களை  பத்தி என்ன இருக்கு..?” என்றாள் தோள் குலுக்கி

என்ன பேசுற நீ..?”

நான் உண்மையை தான் சொல்றேன், எங்களை  பத்தி யாருக்கும் ஒன்னும் இல்லை..” சொல்லும் போதே அவள் தொண்டை அடைத்தது

மகா..”

என்னை உங்க முன்னாடி அழ வைக்காதீங்க..”

சரி நான் திரும்பிக்கிறேன்..” என, மகா அவனை முறைத்தாள்

பின்ன வேறென்ன செய்யட்டும்..? சரி கண்ணை விரிக்காம  சொல்லு.. ஏன் இப்படி இருக்க..? உன்கிட்ட அந்த உயிர்ப்பே இல்லை.. அத்தை, மாமா ஏதாவது சொன்னாங்களா..? சொல்லு நான் கேக்கிறேன்..”

அதான் சொன்னேனே என்னை பத்தி யாருக்கு ஒன்னும் இல்லைன்னு..”

மகா.. இதென்ன திரும்ப திரும்ப அதையே சொல்ற.. நான் அத்தைகிட்ட போய் கேட்கிறேன் இரு..”  விஷ்ணு உள்ளே செல்ல போக

ம்ப்ச்.. ஒன்னும் வேண்டாம்..” அவன் கை பிடித்து நிறுத்தினாள்.  

அப்போ நீ சொல்லு..” விடமாட்டேன் என்று நின்றான். மகா சில நொடிகள் எங்கோ பார்த்தவள்

இஷான் வீட்ல சொல்லி பொண்ணு கேட்டு வரேன்னு நிக்கிறான்..” என்றாள்.

“இதுக்கா இப்படி இருக்க..? நம்பமுடியல, பட் உனக்கு பிடிச்சு இருந்தா வர சொல்லு, நான் மாமாகிட்ட பேசுறேன்..”

ம்ப்ச்.. எனக்கு பிடிக்கல, அவர் என்னோட ரொம்ப நல்ல ப்ரண்ட்.. நல்ல பர்சன், பட் மேரேஜ் விருப்பமில்லை..”

ஓகே சிம்பிள்.. இதை அவன்கிட்டேயே சொல்லிடு..”

சொன்னா கேட்க மாட்டேங்குறான்.. எனக்கு ப்ரொபோஸ் பண்ண நாள்ல இருந்து சொல்லிட்டு இருக்கேன், நல்லா தான் இருப்பார், சில நேரம் இப்படி தொல்லை பண்றார்..”  அவள் சொன்ன நொடி அவன் போன் எடுத்து அவனுக்கு அழைத்துவிட்டான்

இஷான் எடுக்கவும், “ஏன் மகாவை தொல்லை பண்ற..?” அதட்டி கேட்டான்

இல்லை சீனியர்.. மேரேஜ் பண்ணிக்க தான்..”

அது தான் அவளுக்கு வேண்டாம் சொல்றா இல்லை..”

மகாக்கு என்னை பிரண்டா பிடிக்கும், மேரேஜ் பண்ணிக்கிட்டா..”

மேரேஜ் பண்ணிக்கிட்டா பிடிச்சுடுமோ, அப்படி இருந்தா இத்தனை வருஷத்திலே அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கணும், ஒரு கயிறு கட்டி பிடிக்க வைக்க கூடாது..”

சீனியர் லவ்ஸ்  ஹர் லாட்.. ஷீ ஈஸ் மை ஏஞ்சல்..”

ஏஞ்சல் சொல்லாத இஷான்..” என்றான் பட்டென

சீனியர்..”

அவளுக்கு வேண்டாம் சொல்லியும் போர்ஸ் பண்ற நீ அவளை ஏஞ்சல் சொல்றது நாட் அக்சப்ட்டிபிள்..  லிசன் டூ மீ.. இனி மகாக்கிட்ட இப்படி பேசாத, அவளை டிஸ்டர்ப் பண்ணாத, எதோ நீ ஒரு நல்ல ப்ரண்ட்ன்னு தான் நான் இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன், இல்லன்னா என்னை பத்தி தெரியும் இல்லை, நான் எதை பத்தியும், யாரை பத்தியும் கவலை பட மாட்டேன்.. இட்ஸ் மை வார்னிங் மேன்..”  விஷ்ணு அப்படியே கட் செய்து மகாவை பார்த்தான்

அவள் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். “இதுக்கு தான் நானும், ஈஷ்வரும் முதல்ல இருந்தே சொன்னோம், கேட்கிறது இல்லை..”  அவள் முன் நின்று கடிந்து கொண்டான்

உங்க ஈஷ்வரை பத்தி என் முன்னாடி பேசாதீங்க..” மகா காய்ந்தாள்

ஏன் அவன் என்ன செஞ்சான்.. உண்மையை சொல்லு, உனக்கு இஷான் எல்லாம் பெரிய பிரச்னையே இல்லை..” விஷ்ணு கூர்மையாக கேட்டான்

அண்ணா என்கிட்ட பேசுறது இல்லை..”

ஏன்..? நீ என்ன செஞ்ச..?”

நான் ஒன்னும் செய்லன்னு தான் பேசுறது இல்லை..”

புரியுற மாதிரி சொல்லுடி..”

பல்லவி..”

அண்ணி சொல்லு..” விஷ்ணு கடிந்து கொண்டான்

ஓகே அண்ணியை போய் பார்த்துக்க சொல்லி கேட்டான், நான் போகல..”

தப்பு தானே, ஏன் போகல..?”

எனக்கு என்னமோ போக பிடிக்கல, அவங்க காதலால தான் வீட்ல அவ்வளவு பிரச்சனை..”

ஈஷ்வர் காதல் தான் பல்லவிக்கு பிரச்சனை..”

ம்ப்ச்.. நான் ரெண்டு பேரையும் தான் சொல்றேன்..”

அது அவங்க பெர்சனல் மகா..”

ஆனா அது என்னை பாதிக்குதே, அன்னிக்கு என்னவெல்லாம் பேசிட்டான் தெரியுமா..? அவங்களுக்காக என்னை..” கண்கள் கலங்க நிறுத்திவிட்டாள். தங்கையாக காயப்பட்டு போயிருந்தாள்

ஈஷ்வர் அப்போ இருந்த நிலைமையில பேசி இருப்பான், அதுக்கு போய் இவ்வளவு வருத்தப்படணுமா..?”

புரியுது.. இத்தனை வருஷம் என் அண்ணான்னு இருந்துட்டேன், அவன் அண்ணிக்காக என்கிட்ட கோவமா பேசவும் ரொம்ப ஹர்ட் ஆயிட்டேன்..” கண்ணீர் சிந்திவிட்டாள்

ஹேய்..” நின்ற படி குனிந்திருந்தவளின் தலையை தடவி விட்டான். கண்டிப்பாக ஈஷ்வரிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டான். அவள் கண் துடைத்து நிமிர, பக்கத்தில் அமர்ந்து கொண்டவன்,   

ஈஷ்வர் நிலமையை புரிஞ்சுக்கோ மகா, அவனை நம்பி வந்த பொண்ணை தொலைச்சுட்டோம்ன்னு வலியில இருக்கான்.. டைம் கொடு சரியாகிடுவான்.. அதுக்காக உன்மேல அவனுக்கு  அட்டேச்மென்ட் இல்லைன்னு ஆகிடாது..” என்றான் ஆறுதலாக

மகா பதில் சொல்லாமல் நேரே பார்க்க, “அவன் பேசலைன்னா நீ போன் பண்ணி சண்டை போட வேண்டியது தானே..?” கேட்டான்

அப்படி ஒன்னும் எனக்கு அவன்கிட்ட பேச வேண்டாம்..” என்றாள் பட்டென

ஏன் உன் அண்ணா தானே..? அவன்கிட்ட என்ன ஈகோ வேண்டி கிடக்கு..?”

இது ஈகோவா..?” மகா திரும்பி கோபத்துடன் கேட்டாள்

சரி விடு.. அதுக்கு எதுக்கு முகத்தை கிட்ட காமிச்சு பயமுறுத்துற..”

எந்திரிச்சு போங்க முதல்ல..” அவனை பிடித்து தள்ள, சிரித்து எழுந்து நின்றான்

“நீங்க  இதைப்பத்தி அவன்கிட்ட பேச கூடாது..”  மகா தானும் எழுந்து நின்று சொல்ல, விஷ்ணு சிரிப்பாக பார்த்தான்

அப்போ பேசுவீங்களா..? நான் உங்ககிட்ட ஷேர் மட்டும் தான்  பண்ணேன்.. புறாவா பறக்க  சொல்லலை..” விஷ்ணு பதில் சொல்லாமல் முன்னால்  நடக்க, மகா அங்கேயே நின்றாள்

நான் மால்ல உனக்காக நின்னப்போ கார் எடுத்துட்டு எப்படி பறந்த..?”   கேட்டு கொண்டே நடந்தான். அப்போதும் மகா அங்கேயே நின்று அவனை பார்க்க

சரி பேச மாட்டேன் வா.. ஏற்கனவே அத்தை மூணு முறை வந்து பார்த்திட்டு போயிட்டாங்க, அநேகமா அடுத்த முகூர்த்தத்தில நமக்கு கல்யாணம் நடக்கும் நினைக்கிறேன்..” நின்று திரும்பி கண்ணடித்தான்

அப்போ தெரிஞ்சே தான் பேசுனீங்களா..?” மகா இவனை  நோக்கி பாய்ந்து வர

இதுக்கு தான் நான் உன்னை எங்க வீட்டுக்கு கூப்பிட்டேன், இது நீயா இழுத்துகிட்டது தான்..” சொன்னபடி விஷ்ணு வீட்டிற்குள் ஓடினான். இருவரும் மூச்சு வாங்க வந்து நிற்க, கங்கா மகளை தான் ஏமாற்றத்துடன் பார்த்தார்

அத்தை.. நாங்க கிளம்புறோம்.. மகா வரேன்.. ஹெல்த்தை பார்த்துக்கோ, நைட் பேசுறேன்..” குறும்பாக சொல்ல, சின்னு இருவரையும் குறுகுறுவென பார்த்தான்

இருங்க நைட் சாப்பிட்டு கிளம்பலாம்..” கங்கா சொல்ல

இல்லை வேண்டாம் அத்தை.. ருக்கு செஞ்சிருப்பாங்க.. பை.. மகா பை..” மீண்டும் சொல்லி தம்பியின் வீல் சேரை எடுத்தான்

சின்னு இந்தா உனக்காக..”  கங்கா அவனுக்கு பிடித்த ஸ்வீட் கொடுக்க, “தேங்ஸ் அத்தை.. பை.. மகா பை..”  இருவருக்கும் சொல்லி அண்னனுடன் கிளம்பினான்

கங்கா மகளை ஒரு பார்வை பார்த்து  ரூம்  செல்ல, மகா அவருடனே  சென்றவள், “ம்மா.. அது.. நான் கொஞ்சம் அப்செட்டா இருக்கேன்னு பேசினாங்க வேற ஒன்னும் இல்லை..” என்றாள் சமாதானமாக.

இருந்தாலும் சந்தோசம் தான் மகா, எப்படியும் உனக்கு தெரிஞ்சிருக்கும்  விஷ்ணுவுக்கு உன்னை  கொடுக்க எங்க எல்லோருக்கும் ஆசைன்னு, அப்பறம் என்ன..?”

ம்மா..”

விடு மகா, என்னவோ உங்க யாருக்கும் நான் முக்கியம் இல்லன்னு தோணுது, உன் அண்ணா தான் என்கிட்ட ஒன்னும் சொல்லலைன்னா நீயும் சொல்லலை..”

ம்மா.. இருந்தா தானே சொல்ல..?”

உண்மையாவா..?” சந்தேகமாக கேட்டார்.