Advertisement

உன் நினைவு – 30

எதிர் பாரா நேரத்தில்

எதிர் கொண்டு தாக்குகிறாய்..

எதிர் பார்க்கும் நேரத்தில்

ஏமாற்றுவதேனோ ????

 

ஏனோ அவளுக்கு இந்த சூழல் புதிதாக தெரிந்தது.. அவன் படுத்துக்கொண்டு தன்னை பார்ப்பதும், தான் அமர்ந்து கொண்டு அவனிடம் குழைவதும் முற்றிலும் புதிதாக இருந்தது அவளுக்கு.. இதை உணர்ந்தபின் ஏனோ அவனது பார்வையை அவளால் நேராக பார்க்க முடியவில்லை.. மீண்டும் படுத்து கொண்டாள்.. அவள் படுக்கவும் அவன் எழுந்து அமரவும் சரியாக இருந்தது..

“ அய்யோ !! இவன் படுத்தே பேச வேண்டியது தானே.. “ என்று எண்ணியவள் இப்பொழுது தன் கண்களை மூடி கொண்டாள்…

அவனோ இதை எல்லாம் கவனித்தும் கவனிக்காதது போல “ ஏன் மதி  உனக்கு இங்க இருக்க பிடிக்கவில்லையா ?? ”                                     

“ அப்படி எல்லாம் இல்ல.. வந்து நாள் ஆனதே அதான் அப்புறோ அங்க போனா உங்களுக்கு தான் வேலை நிறைய வந்துவிடும்.. இங்க சும்மா தானே இருக்கோம்.. பாவம் அங்கு  அழகு அண்ணா வேற தனியா எல்லா அலைவாங்க  “ என்றாள்  மிக அக்கறையாக. அவன் [பதில் கூறாமல்  அமைதியாக அமர்ந்து இருந்தான்..

அவனிடம் இருந்து பதில் வரும் என்று காத்து இருந்தவள் அவன் அமைதியாக இருக்கவும் கண்களை திறந்து பார்த்தாள்.. அவனது யோசனையை பார்த்து “ ஆகா இவனை யோசிக்க விட கூடாதே.. “ என்று எண்ணியவள்.. ” என்ன பதில் சொல்லாமல்  இருக்கீங்க ?? ” என்றாள்..

“ ஒரு தடவையாது அத்தான் என்று  சொல்றாளா பாரு “ என்று மனதிற்குள் திட்டியவன் முகம் ஒரு நிமிடத்தில் குறும்பாக மாறியது.. அதன் பிறகு மெல்ல புன்னகை புரிந்தபடி “ இப்படி கேட்டா நான் பதில் சொல்ல மாட்டேன்..” என்றான்

அவள் திகைத்து முழித்தாள் ” ஏன் நான் கேட்டதில் என்ன தப்பு இருக்கு ?? சரியா தானே கேட்டேன்..?” என்று பட படபடத்தாள்..

“ ம்ச்ச் நீ கேட்டது எல்லாம் சரி தான் மதி.. ஆனால் எனக்கு நீ கேட்ட விதம் திருப்பதி குடுக்கவில்லை…” என்றான் அவளது இரு புறமும் கைகள் வைத்து அவளது கண்களையே பார்த்து..

“ என்ன சொல்கிறான் இவன் “ என்று யோசித்தவள் அவன் முகம் தனக்கு மிக அருகில் தெரியவும் தடுமாறி தான் போனாள்..” என்.. என்ன.. பண்றீங்க….” என்று திக்கி திணறினாள்..

“ நான் எதுவும் பண்ணவில்லையே…” என்றான் அப்பாவியாக..

“ முதலில் கைய எடுங்க.. “ என்று கூறி அவனது கைகளை தட்டி விட்டாள்.. அவனும் சரி “ நானும் எதுவும் பதில் சொல்ல மாட்டேன்.. போ..” என்றும் படுக்க எத்தனித்தான்..

“ இல்லை இல்லை.. சொல்லுங்க நம்ம நாளைக்கு ஊருக்கு போகலாமா ?? ப்ளீஸ் ப்ளீஸ்..” என்று அவனது கைகளை பிடித்தாள்..

“ அப்படி வா மதி வழிக்கு “ என்று எண்ணியவன் “ ஹ்ம்ம் நீ கேட்கிற விதத்தில் கேட்டால் நான் பதில் சொல்வேன் “ அவளது கைகளை பிடித்தபடி..

ஏற்கனவே அவனது பார்வையை தாங்க முடியாமல் தான் அவள் கண்கள் மூடி படுத்ததே.. ஆனால் இவனோ இப்படி நெருங்கவும் அவள் என்னதான் செய்வாள்.. தவித்து விட்டாள்.. முகம் சிவந்து அவனது முகத்தை பார்க்க முடியாமல் தவிப்பவளை கதிரவனோ ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்..

 “ வே … வேறு … எப்… எப்படி கேக்கம வேண்டும்…” என்று மென்று விழுங்கினாள்.. அவளுக்கோ உள்ளே நடுங்கியது.. “ என்ன இது இத்தனை நாள் இப்படி இல்லையே இவன்.. இன்னிக்கு என்ன இப்படி சேட்டை பண்ணுகிறான்..“

 “ என்னை அத்தான் என்று கூப்பிடு நான் ஊருக்கு போவதை பற்றி சொல்கிறேன் “ என்றான் அவளது முகத்தை வருடியபடி..

அவனது தீண்டலும் பார்வையும் அவனது குரலும் வசுமதியை மேலும் அவனிடம் இழக வைத்தன… அவன் பேசுவது என்ன என்றும் புரியவில்லை.. அதற்கு தான் என்ன பதில் கூறினாள் என்றும் தெரியவில்லை.. ஏதோ ஒரு ஏகாந்தமான மோன நிலையில் இருப்பது போல உணர்ந்தாள்.. ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவளை அறியாது அவள் கதிரவனை “அத்தான்” என்று கூறிவிட்டாள் என்று…..

கதிரவன் அவளை நெருங்க நெருங்க அவளது இதயம் வேகமாக துடித்தது.. ஏனோ அவனை தடுக்கவும் அவளால் முடியவில்லை… அவனிடம் இருந்த கோவம் எல்லாம் அவளுக்கு மறந்தே விட்டது போல.. மூளை வேலை நிறுத்தம் செய்து வெகு நேரம் ஆகிவிட்டது.. அவனோ அவளது முகத்தையே பார்த்தபடி அவளிடம் மேலும் நெருங்கினான்..

 “ அத்தான்… ப்ளீஸ் “ என்று முனுமுனுத்தாள்…

அவனோ குறும்பாக நகைத்துகொண்டு அவளது காதருகில் சென்று “ நாளைக்கு ஊருக்கு போகலாம் மதி “ என்று கூறி கண் இமைக்கும் நேரத்தில் அவளை விட்டு விலகி படுத்துகொண்டான்…

வேறு எதையோ எதிர்பார்த்து இருந்தவளுக்கு முதலில் இவனது வார்தைகள் எதுவும் மூலையில் பதியவில்லை.. ஒரு நிமிடம் அவன் தன்னை விட்டு விலகி படுத்தது கூட அவள் உணர வில்லை.. கண்கள் மூடி அதே மோன நிலையில் இருந்தாள்..

ஒரு சில வினாடிகள் கழித்து கண்கள் திறந்தவள் மனதில் எதுவோ ஏமாற்றமாக உணர்ந்தாள்.. ” ச்சே என்ன இது…  “ என்று திரும்பி பார்த்தவள் அருகில் இப்பொழுது எதுவுமே நடக்காதது போல படுத்து இருக்கும் அவளது கதிரவன் தான் கண்ணில் பட்டான்..

அவளுக்கு மேலும் குழப்பக இருந்தது “ ஒரு வேலை நம்ம கனவு எதுவும் கண்டோமோ ??? இல்லையே.. ஆனால்  நிஜமாவே நான்.. எனக்கு.. ஒரு மாதிரி இருந்ததே ஆனால்  இவன் என்ன இப்படி கம்முனு படுத்து இருக்கான் “ என்று அவனது முகத்தையே குழப்பமுடன் பார்த்தாள்..

அவனோ அமைதியாக படுத்து இருப்பது போல நடித்துக்கொண்டு உள்ளே சிரித்து கொண்டு இருந்தான் “ குட்டச்சி நல்லா குழம்பு.. என்னை இப்படி தானே டி தவிக்க விட்ட.. இனிமே பாரு உன்னை நான் எப்படி பழைய மதியாய் மாற்றுகிறேன் என்று உள்ள இவ்வளோ ஆசையை  வைத்துகொண்டு தான் இப்படி பிடிவாதமா இருக்கியா… இரு டி நீ போடிக்கு வா.. அப்புறோம் தெரியும் இந்த கதிரவன் யாரு என்று   ” என்று எண்ணியவாறு படுத்து இருந்தான்..

வசுமதியோ குழப்பமாய் அமர்ந்து இருந்தாள்.

அவனோ உள்ளே சிரித்தபடி “ அதான் நாளைக்கு சாயங்காலமா ஊருக்கு போகலாம் என்று  சொல்லிவிட்டேனே.. எவ்வளோ நேரமா இப்படி உக்காந்துகிட்டு இருப்ப மதி.. நான் ஒரு தூக்கம் கூட தூங்கி முடித்தே விட்டேன்.. நீயும் படு.. “ என்று தூக்கத்திலேயே பேசுவது போல பேசினான் கதிரவன்.

ஆனால் வசுமதிக்கோ மேலும் மண்டை குழம்பியது “ என்ன நான் அப்ப இருந்து உட்கார்ந்து இருக்கேனா ?? இல்லையே படுத்த மாதிரி இருந்தது நோ.. நோ.. மதி உன்னை நீயே நல்லா குழப்பிக்கிற.. தூங்கு பேசாமல்” என்று தன்னையே அதட்டிவிட்டு கண்கள் மூடினாள்..

ஒரு வழியாக மறுவீடு முடிந்து இருவரும் போடி வந்து சேர்ந்தனர்.. சென்னைக்கு சென்று வந்த பிறகு கதிரவனிடம் பேரும் மாற்றத்தை உணர்ந்தால் வசுமதி.. எப்பொழுதும் ஒரு வலி நிறைந்த பார்வை பார்ப்பவன். இப்பொழுது யார் இருந்தாலும் பரவாயில்லை என்று அவளை ரசிக்க ஆரம்பித்தான்.. அவள் பேசாமல் சென்றாலும் அவளை இழுத்து வைத்து பேசினான்..

 “ நான் அவளோ பேசியும் இவனுக்கு புத்தி வருகிறதா ?? ச்சேய்… என்ன தான் மனிதனோ” என்று மனதிற்குள் கருவ மட்டும் தான் முடியும்.. வீட்டில் இருப்பவர்கள் முன்னால் முகத்தில் கூட எதுவும் அவளால் காட்ட முடியவில்லை.. இரவின் தனிமையில் தான் அவளிடம் நன்றாக மாட்டிக்கொள்வான் கதிரவன்.

ஆனால் கதிரவனோ “ நீ எவ்வளோ வேண்டும் என்றாலும் திட்டு நான் இப்படி தான் இருப்பேன்..” என்பது  போல மறுநாள் விடியவும் தன் வேலையை காட்டுவான்..

அன்றும் அப்படி தான் கீழே காமாட்சி உடன் சேர்ந்து சமையல் அறையில் இருந்தாள் வசுமதி..” மதி” என்று அவன் அழைக்கும் குரல் கேட்டது… முதலில் காதில் விழுகாதது போல இருந்தாள்..

மீண்டும் “ மதி… மதி “ என்று அவன் கத்த ஆரம்பித்தான்.. ” அய்யோ இவன் எதற்கு இப்ப என்னை ஏலம் போடுகிறான் “ என்று எண்ணியவள் தன் அத்தையின் முகத்தை பார்த்தாள்.. அவரோ  சிரித்தபடி “வசும்மா.. போ, என்ன என்று கேட்டு வா “ என்று அனுப்பி வைத்தார்..

“ ச்சே அத்தை என்ன நினைப்பாங்க “ என்று புலம்பிக்கொண்டே தங்கள் அறைக்கு சென்றாள்..

அவனோ இடுப்பில் துண்டு மட்டும் கட்டி உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து நின்று இருந்தான் இருந்தான்.. வேகமா அறைக்குள் நுழைந்தவள் அவன் இருக்கும் நிலை கண்டு வேகமாக முகம் திருப்பி நின்று கொண்டாள்.. ” இவனுக்கு வெக்கமே இருக்காத ??  இப்படி நிற்கிறான் “ என்று எண்ணியவள் “ என்ன .. எதற்கு இப்படி என் பேரை ஏலம் விட்டிங்க ?? ” என்றாள்  கோவமாக..

அவனோ “ இல்லையே… நான் மதி என்றுமட்டும் தானே கூப்பிட்டேன்.. ஒரு தரம் இரண்டு தரம் எல்லாம் சொல்லவில்லையே..” என்றன் நக்கலாக..

“ ஆ !!! இப்ப இந்த நக்கலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.. அது சரி எதற்கு கூப்பிடிங்க ?” என்றால் பற்களை கடித்தபடி..

“ எனக்கு குளிக்க துண்டு எடுத்து போடு “ என்றான் கூலாக.. அவன் கூறியதை கேட்டதும் ஒரு வேகத்தில் திரும்பி விட்டாள் அவன் பக்கம்.. அப்பொழுது தான் உணர்ந்தாள் அவன் தனக்கு மிக அருகில் வந்து நிற்பதை… வேகமாக பின்னே நகர்ந்தவள் “ என்ன.. இப்ப எதற்கு இப்படி வந்து நிக்கிறீங்க .. ஏன் உங்களுக்கு கை இல்லையா ?? ” என்று பொரிந்தாள்..

“ கை எல்லாம் இருக்கு உனக்கு தான் கண் தெரியவில்லை போல” என்றான் அவளை நெருங்கியபடி.. வசுமதியோ இவன் முன்னே ஒரு எட்டு எடுத்து வைக்க வைக்க அவள் பின்னே நகர்ந்து கொண்டு இருந்தவள் சுவரில் இடித்து நின்று விட்டாள்.. இனி நகர இடமில்லை.. கண்களோ அவனை விட்டு விலக மறந்தது… வார்த்தைகள் வர மறுத்தது.. நாவெல்லாம் வரண்டது போல உணர்ந்தாள்.. பின் ஒரு வாறு தன்னை திடப்படுத்திக்கொண்டு “ என்ன ?? ” என்றாள் அழுத்தமாக..

“ பார்த்தால் தெரியாவில்லை.. உடம்பெல்லாம் எண்ணெய்.. சோ துண்டு நீ தான் எடுத்து போடவேண்டும்  “ என்று கூறினான் சிரித்தபடி…

 “ இந்த சிரிப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை” என்று அவனை திட்டியவாறே துண்டை எடுத்து பாத்ரூமில் போட்டு விட்டு வேகமாக படி இறங்கிவிட்டாள்..

ஒரு இருபது நிமிடம் சென்று இருக்கும் மீண்டும் மதி என்று அவன் அழைக்கும் குரல் கேட்டது… வசுமதிக்கு  கடுப்பாக வந்தது.. “ என்ன இது புதிதாய் இப்படிசெய்கிறான் ?? இத்தனை நாளா இப்படி எல்லாம் இல்லையே..” என்று யோசனையுடன் அன்னபூரணி உடன் நின்று இருந்தாள்…

மீண்டும் “ மதி …. மதி இங்க வா..” என்று அவன் உரக்க கத்தினான்.. அன்னபூரணி மெல்ல நகைத்துக்கொண்டே “ போ கண்ணம்மா.. பக்கதில் இருந்து அவனுக்கு கவனி.”  என்று அவளை பார்த்து கிண்டலாக சிரித்தார்..

கதிரவன் தான் குளித்து விட்டு அவள் எடுத்து போட்ட துண்டை மட்டும் இடுப்பில் சுற்றி நின்று இருந்தான்.. ” ச்சே என்ன பெரிய மாடல் என்று நினைப்பா.  இப்படி எப்ப பாரு துண்டோட நிற்கிறான்“ என்று எண்ணியவளோ தன் பார்வை தன்னவனிடம் சிக்கி கொண்டதை அறியவில்லை..

கதிரவனோ “ ஹே ஏன் டி அப்படி ஒரு பார்வை மிகவும் சைட் அடிக்காத..” என்றான் நகைத்தபடி..

அவனிடம் இருந்து பார்வையை திருப்பி “ என்ன வேண்டும் எதற்கு சும்மா சும்மா கூப்பிடுறிங்க ?? எனக்கு வேலை இருக்கு” என்றாள்..

ஆனால் அவளது இந்த கடுப்புக்கெல்லாம் அவன் அசருவானா என்ன ??? “ நான் என்ன வேண்டும் என்று  சொல்லிவிடுவேன்.. ஆனால்  நீ திட்ட கூடாது..” என்றான் அவளிடம் வந்து அவளது முகத்தை பார்த்து..

அவனது அருகாமையும் அவனது வாசமும் அவளை திண்டாட செய்தது.. “ கடவுளே ஏன் இவன் இப்படி பேசுகிறான்.. ஏதா ஏடாகூடமா கேட்கபோகிறனோ “ என்று லேசாக பயந்தவாறே அவன் முகம் பார்த்தாள்..

 “ நான்… நான்.. எதுக்கு… கூப்பிட்டு..” என்று திக்கி திணறினாள்.. அவளுக்கு மூச்சு வாங்குவது போல இருந்தது.. “ அதுவா…” என்று இழுத்தவாரே அவளை தன் கைக்குள் கொண்டு வந்தான் கதிரவன்…

“ ம்ம்ம் ….”

அவள் கண்கள் சொருகி நிற்கும் வேலையில் அவள் காதருகில் சென்று “ எனக்கு பீரோல இருந்து டிரஸ் எடுத்து குடு மதி.. உடம்பெல்லாம் ஈரமா இருக்குல “ என்றான் மெதுவாக…

அவனிடம் என்ன எதிர்பார்த்தாலோ தெரியவில்லை.. அவனது இந்த பதில் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது..” என்ன??? “ என்று திகைத்து விழித்தாள்..

“ என்ன மதி.. உன்கிட்ட நான் என்ன தப்பா கேட்டேன்.. உடம்பெல்லாம் ஈரமா இருக்கு டிரஸ் எடுத்து குடு என்று தானே கேட்டேன்..” என்றான் நகைத்தபடி..

அவனை முறைத்துகொண்டே வேகமாக அவனது உடையை எடுத்து கட்டிலில் போட்டாள்.. ” ஹே மதி கையில குடுக்கமாட்டியா ?? ” என்று அவளது கைகளை பிடித்து இழுத்தான்.. இதை எதிர்பாராததால் அவன் மீதே அவள் மோதி நிற்கும்படி நேர்ந்தது.. அவளுக்கோ அவனது செய்கைகள் மேலும் மேலும் கோவத்தை தூண்டின..

“ இங்க பாருங்க முதலில் இப்படி கையை பிடிக்கிறதை எல்லாம் விடுங்க.. எனக்கு…” என்று அவள் கூறி முடிக்கும் முன்னே அவளை பிடித்து சுவரில் சாய்த்து தன் இரு கைகளையும் அவளது இருபுறம் வைத்து,

“ என்ன உனக்கு.. உனக்கு என்ன ???  நான் கை பிடித்தால் உனக்கு அருவருப்பா இருக்கா ?? கம்பிளி புழு ஊருகிற மாதிரி இருக்கா…” என்று கூறி அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்..

அவ்வளோ கோவத்தின் உச்சியில் “ ஆமா … அப்படி தான் இருக்கு “ என்றாள்..

கதிரவனோ “ என்ன மதி அப்படி பார்க்கிற ?? ஹ ஹ ஹ ஹ !!! இந்த டயலாக் எல்லாம் ஏற்கனவே ரேவதி மௌன ராகம் படத்தில் மோகன் கிட்ட சொல்லிட்டாங்க.. சோ நீ வேறு தான் யோசிக்க வேண்டும் .. ” என்றான் மீண்டும் சிரித்தபடி..               

அவனிடம் இப்படி எதுவும் செய்ய முடியாமல் நிற்பதும், தன் மனமே அவனிடம் மயங்குவதும் , அவனது சிரிப்பும் அவளை மேலும் கோவப்பட செய்தது..   “ இங்க பாருங்க.. என்ன இது புதுசா.. இத்தனை நாள் சும்மா தான இருந்திங்க.. இப்ப என்ன.. நான் சொன்னது எல்லாம் மறந்து போனதா??” என்றாள் கோவமாக…

“ அட அட அட…. என்ன கோவம் என் மதிக்கு… ஏன் டி எந்த மனுசனுக்காவது பஸ்ட் நைட்டில் பேசினது மறக்குமா…??? நல்லா நியாபகம் இருக்கு “ என்றான் அவளது கண்களையே பார்த்து..        

“ என்ன எகத்தாளம்..” என்று எண்ணியவள் “ ச்சி.. இப்படி. இப்படி பேசுறதுக்கும் உங்களுக்கு வெட்கமா இல்லை “

“ வெட்கமா.. அய்யோ மதி… ஏன் இப்படி எல்லாம் நீ ஜோக் அடிக்கிற.. நீ யார் டி என் பொண்டாட்டி.. உன் கிட்ட எனக்கு எதற்கு வெட்கம்..” என்று கூறி மீண்டும் அவளிடம் நெருங்கினான்..

 “ ஏன்.. என் பொண்டாட்டி டி நீ.. ஒரு தடவைக்கு இரண்டு தடவ தாலி கட்டி இருக்கேன்.. அப்படி என்ன மா நான் உலக மகா தப்பு பண்ணிவிட்டேன்?? “ என்றான் அவனும் வேகமாக.. இதற்கு என்ன பதில் பேசுவாள் வசுமதி.. அவனுக்கும் இது தெரிந்தது தானே.. ஒரு அளவுக்கு மீறி அவளால் பதிலுக்கு பதில் பேச முடியாது.. முடியாது என்று இல்லை அவளுக்கு தெரியாது..

அவளது முகத்தை நிமிர்த்தி “உன் காதலை நீ உள்ளே வைத்து பூட்டிக்க..  ஆனால்  நான் அப்படி எல்லாம் இருக்க முடியாது…  ஐம் வெரி ஓபன் ஹார்ட் மா.. “ என்று கூறியவன் அவளை மேலும் தன் புறம் இழுத்தான் இன்னும் நெருக்கமாக.. அவளோ செய்வது அறியாது திகைத்து நின்றாள்…

“ நான் எப்படி என் காதலை வெளிப்படுதுவதாம் என் பொண்டாட்டி கிட்ட.. இனிமேல்  தினமும் இப்படி தான்.. என் காதலை இப்படி தான் எனக்கு புரிய வைக்க தெரியும் ஆனால் உன் காதலையும் எப்படி வெளிய கொண்டு வர என்று எனக்கு தெரியும் டி… மதி ” என்று கூறி அவளது இதழை சிறை செய்தான்..

 “ மதி…. மதி எங்க  இருக்க ??? ”

“ மதி இங்கு வா ….”

“ மதி கிளம்பு வெளிய போகலாம்….”

“ மதி என் டிரஸ் எங்க???”

“ மதி வா சினிமாக்கு போகலாம்..”

“ மதி என்னதான் பண்ணுற???? காது கேட்காதா ??? ”

“மதி நீ மிகவும் அழகா இருக்க.. “

இப்படி எல்லாம் மதி மதி என்று அவள் பெயரை கூவி கூவி அழைப்பது வேறு யாரும் இல்லை கதிரவன் தான்.. அவன் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் இப்படி தான் அவளை கடுப்பேற்றிகொண்டு இருந்தான்..

 “ என்ன சொன்னாலும் இவன் அடங்கவில்லையே “ என்று எண்ணியவள் “ இங்க பாருங்க இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிவிட்டேன்.. இப்படியே நீங்க செய்தால்  பின்ன “ என்று அவள் கூறி முடிக்கவில்லை

“பின்ன பின்ன என்ன டி.. செய்வ?? சொல்லு என்ன செய்வ ??? நீ எது செய்தாலும் எனக்கு ஓகே தான் டி என் அத்தை மகளே “ என்று கூறி அவள் நெற்றியில் முட்டினான்…   

“ச்சேய்… நீங்க எல்லாம் “ என்று எதுவோ கூற வந்தவள் பின் என்ன கூறுவது என்று தெரியாமல் கையை உதறிவிட்டு கீழே சென்று விட்டாள்.. இவனை கூட சமாளித்து விடலாம் போல.. கதிரவன் ஒரு தரம் அழைத்து அவள் மேலே சென்று விட்டு மறுபடியும் கீழே செல்லும் பொழுது அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை இருக்கும்..

ஆனாலும் இப்பொழுது எல்லாம் வசுமதியின் மனம் கதிரவன் பக்கம் சாயத்தான் செய்தது.. அவன் வேலையாக அமைதியாக இருந்தாலும் “ என்ன இது ஏன் இப்படி அமைதியா இருக்கான் ?? ஒரு வேலை உடம்பு சரி இல்லையோ” என்று அவள் சித்திக்க ஆரம்பித்து விடுவாள்…

அன்றும் அப்படிதான் மாலை வேலை அனைவரும் அமர்ந்து டீ குடித்து கொண்டு இருந்தனர்… இவள் வாசல் பக்கம் பார்க்க பின் தன் பாட்டி அத்தையுடன் பேச என்று மாறி மாறி செய்து கொண்டு இருந்தாள்..

“ இன்னும் என்ன வேலை வேண்டி இருக்கு இவனுக்கு.. ஏன் இவ்வளோ நேரம் பண்ணுகிறான்” என்று யோசனை ஓடிகொண்டே இருந்தது மனதில்..

அவளது முகத்தையும் அதில் தெரியும் தவிப்பையும் பார்த்துகொண்டு தான் இருந்தனர் அந்த வீட்டின் பெண்ணரசிகள்… ஒரு வழியாக அவளை ஒரு இருபது நிமிடம் காத்திருக்க வைத்துவிட்டு வந்து சேர்ந்தான் கதிரவன்.. மிகவும் வேலை போல .. முகம் எல்லாம் வாடி தெரிந்தது…

 

                        உன் நினைவு – 31

 

நீ விலகி செல்லும் வேலையில்

நான் விரும்பி தவிக்கிறேன்…

தவிப்பை தீர்க்க வாராயோ ??

என் மனம் உன்னை தேடுகிறது..

என் உயிர் உன்னை நாடுகிறது..

என் உள்ளம் புரியவில்லையா ??

 

அவனை கண்டதுமே வசுமதி புரிந்து கொண்டாள்… அவன் வந்து அமரவும் வேகமாக சென்று சூடாக டீ எடுத்து கொண்டு வந்து குடுத்தாள்.. கதிரவனுக்கு இது முற்றிலும் ஆச்சர்யமாக இருந்தது.. ஒரு நொடி திகைத்து அவள் முகம் பார்த்தான்.. ஆனால் வசுமதியோ “ மேல் ஹீட்டர் போட்டு வைக்கிறேன்..வந்து குளிங்க “ என்று கூறி அவன் பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டாள்..

அவளுக்கு தெரியவில்லை இவளது இந்த ஒற்றை வார்த்தையும் செய்கையும் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி தருகிறது என்று.. அவள் போவதையே பார்த்துகொண்டு இருந்தான்… ஆனால் இதை எல்லாம் அறியாத காமாட்சி

“ கதிரவா கொஞ்ச நாளைக்கு நீ சீக்கிரம் வாப்பா.. பாவம் நீ வர நேரம் ஆகவும் மிகவும் தேடினால்..” என்று கூறவும் அவனுக்கு புரையேறிவிட்டது..

லேசாக இருமிக்கொண்டே “ எண்ணமா சொல்லறிங்க ??? “ என்றான் கதிரவன்..

அவரோ சிரித்தபடி “ ஆ !! உன் பொண்டாட்டி நீ வரதுக்கு நேரமாகவும் உன்னை எதிர்பாத்து எதிர்பாத்து மிகவும் தவித்து போயிட்டா என்று  சொன்னேன் “ என்றார்..

அன்னபூரனியோ “ ஏன் கண்ணப்பா கல்யாணம் ஆகி மறு வீடு போய்விட்டு வந்ததுதான்.. இரண்டு பேரும் எங்கயாது வெளிய போய்விட்டு வரலாமே.. இல்லை நம்ம எஸ்டேட்க்கு கூடபோய் தங்கிட்டு வாங்க…”      

சும்மா இருக்கும் பொழுதே அவன் அவளை சீண்டுவான்.. இதில் வசுமதி உன்னை எதிர்பார்த்தாள், உன்னை தேடினாள் என்று கூறினாள் அவனுக்கு இன்னும் ஏறத்தானே செய்யும்..

“ மதி என்னை தேடினையா ?? ” என்று கேட்டுவிட்டான் அனைவரின் முன்னும்..

அவளோ ஒரு நிமிடம் திகைத்து விழித்தாள்..” என் …என்ன கேட்டிங்க ?? ” என்றாள்

“ இல்லை நீ என்னை மிகவும் எதிர்பார்த்த எட்ன்று அம்மா அப்பத்தா எல்லாம்  சொன்னாங்க அதான்.. எதுக்கு என்று கேட்டேன் “ என்றான் உள்ளே நகைத்து கொண்டு..

  “ நான் நான் .. ஒன்றும் உங்களை தேடவில்லையே …” என்றாள் வேகமாக வசுமதி..

“ அப்படியா ?? இல்லை நீ வாசாலையே பார்த்தியாம்.. முகம் எல்லாம் வாடி போனதாம்  அதான் அப்பத்தா உன்னையும் என்னையும் வெளிய எங்கயாது போய்விட்டு வர சொன்னங்க ” என்றான் சிரித்தபடி..

“ எரும எரும… அம்மாவையும் பாட்டியையும் முன்னால வைத்துகொண்டு என்ன பேச்சு பேசுகிறான்.. இதில் தனியா வேறு இவன் கூட போனா அவ்வளோ தான்..” என்று எண்ணியவள்

“ ஹி ஹி !!! என்ன அத்தான் இப்படி சொல்றிங்க.. உங்களுக்கு நேரம் இருந்தால்  என்னை கூட்டி போகமாட்டிங்களா என்ன ??? பாவம் உங்களுக்கே உட்கார  கூட நேரம் இல்லை.. முதலில் வேலை எல்லாம் முடிங்க பின்ன நம்ம ரிலாக்ஸ்டாக போகலாம்..” என்றாள் மிகவும் பவ்வியமாக..

“ யப்பா என்ன பசப்பு பசப்புறா.. “ என்று ஒரு நிமிடம் வியந்தவன் “ இரு டி உனக்கு இருக்கு “ என்று நினைத்து கொண்டு “ பாத்தியா அப்பத்தா.. நீ என்னவோ என்னை சொன்ன.. இப்ப பாரு உன் பேத்தி என்ன சொல்கிறா என்று … அவள் தான் என்னை நல்லா புரிந்து வைத்து இருக்கா… நீ வா டி செல்லம் அத்தானுக்கு குளிக்க துண்டு எடுத்து போடு “ என்று தன் அப்பத்தாவிடம் ஆரம்பித்து வசுமதி எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கை பற்றி இழுத்து சென்றான்..

அவளுக்கு தெரியவில்லை அவளது மனம் அவன் செய்யும் குறும்புகளையும் சீண்டல்களையும் ரசிக்க ஆரம்பித்து விட்டது என்றும் இன்னும் அவள் உணரவில்லை.. வேண்டும் என்றே அவனை சீண்டுகிறேன் என்று இவள் வேலை இருப்பது போல பாசாங்கு செய்ய ஆரம்பித்தாள்.. கதிரவன் வீட்டிற்கு வரும் நேரம் வீட்டை சுற்றி உள்ள தோட்டத்தில் எதுவோ வேலை இருப்பது போல சென்று விடுவாள்.. அப்படி இல்லை என்றால் மீனாட்சியை பார்க்க போகிறேன் என்று சென்று விடுவாள்..

இப்படி அவளும் பல விதமாக அவனுக்கு திருப்பி கொடுத்து கொண்டு தான் இருந்தாள்.. இருந்தாலும் அவன் செய்யும் அனைத்தையும் அவளது மனம் ஏற்றுகொண்டது.. இப்படியே நாட்கள் செல்ல செல்ல கதிரவனுக்கும் வேலை நிறைய இருந்தது.. அவன் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது..

முதலில் இதை எல்லாம் வசுமதி உணரவில்லை… ஆனால் ஒரு இரண்டு நாள் சென்ற பின் தான் “ஏன் இப்படி அமைதியாகவே இருக்கான்..?? ” என்று யோசிக்க தொடங்கினாள்… அன்றும் அப்படி தான் வசுமதி கீழே வேலையாக இருந்தாள்..

அவளது மனமோ “ இப்பத்தான் கீழ வந்து இருக்கிறேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் மதி மதி என்று கத்துவான் “ என்று எண்ணிக்கொண்டே தன் காதுகளை தீட்டியபடி வேலை செய்து கொண்டு இருந்தாள்.. ஆனால் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை..

“ என்ன பண்ணுகிறான்… இன்னும் கூப்பிடவில்லை “ என்று யோசித்தவள் “ சரி போகட்டும் வேலையாய் இருக்கும் “ என்று தன் மனதை சரிப்படுத்தி கொண்டாள்.. ஆனால் இதுவே தினமும் தொடரவும் அவளால் ஒரு அளவுக்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை.. வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதே மேலே ஏறி வந்து அறையில் எட்டி பார்த்தாள்.. கதிரவன் யாருடனோ போனில் சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தாள்..

“ எப்படி இளிச்சு இளிச்சு பேசிட்டு இருக்கான்.. அப்படி யாரிடம் பேசுகிறான்.. என் கிட்ட பேச மட்டும் நேரம் இருக்காது “ என்று பொறுமியபடி தன் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.. அவளுக்கு தெரியவில்லை கதிரவன் அவளையும் அவளது முக மாற்றத்தையும் கண்டு தனக்குள் மெல்ல சிரித்து கொண்டான் என்று.

“ அடியே மதி… ஹ்ம்ம் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா என் வழிக்கு வர… இன்னும் கொஞ்ச நாள் தான் “ என்று எண்ணி கொண்டான்.. அவனும் வேலையில் மூழ்கி விட வசுமதி தான் தவித்து போனாள்.. ஒரு மனதாக வீட்டு வேலையை அவளால் செய்ய முடியவில்லை… “ ம்ம்ச் இவன் என்ன தான் பண்ணிகிட்டு இருக்கான் “ என்று யோசித்தபடியே மீண்டும் மாடி ஏறினாள்..

அங்கே கதிரவனோ தன்னை சுற்றி நிறைய கோப்புகளுடன் அமர்ந்து இருந்தான்.. இவள் வந்ததை முதலில் கவனிக்கவில்லை… ஆனால் அவளுக்கோ அவனை விட்டு போக மனம் வரவில்லை போல.. உள்ளே சென்று எதையோ தேடுவது போல அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள்.. ஆனால் பார்வை முழுதும் கதிரவன் மீதே இருந்தது..

“ நான் உள்ள வந்ததை கூட கவனிக்காமல் அப்படி என்ன இவனுக்கு வேலை ச்சே.. இவன்பேசினாலும் இல்லை என்றாலும்  எனக்கு தான் கஷ்டமாய் இருக்கு.. ஆனால்  இவனுக்கு அதெல்லாம் எதுவும் இல்லை..” என்று அவனை பொரிந்து கொண்டே அறையில் இருக்கும் பொருட்களை உருட்ட ஆரம்பித்தாள்..

கதிரவன் ஒரு பக்கம் வேலை பளு அதிகம் இருந்தாலும் தன் மனைவியை கவனித்து கொண்டு தான் இருந்தான்.. ஆனாலும் வெளியே காட்டவில்லை..” ம்ம்ச் இங்க என்ன செய்ற?? கீழே வேலை இல்லையா ??? இங்க வந்து என்ன உருட்டிட்டு இருக்க.. எனக்கு டிஸ்டர்ப்பா இருக்கு.. ” என்றான் வேண்டும் என்றே முகத்தை சுளித்து கொண்டு.. ஆனால் அவளோ ஒரு பிடி பிடித்து விட்டாள்..

“ என்ன என்ன ??? என்ன சொன்னிங்க நான் இங்க இருக்குறது உங்களுக்கு தொல்லையா இருக்கா ??? இங்க வந்தது தொல்லையா இருக்கா இல்லை நான் இங்கு இருக்கிறதே உங்களுக்கு தொல்லையா இருக்கா ?? ” என்று அவள் பாட்டிற்க்கு பாட ஆரம்பித்துவிட்டாள்..

“ இங்க பாரு ஏன் இப்படி வந்து கத்திகிட்டு இருக்க ?? எனக்கு நிறைய வேலை இருக்கு.. உனக்கு வேலை இருந்தா பாரு.. இல்லை அமைதியாய் இரு “ என்று பதிலுக்கு அவனும் கத்தினான்..

“ ஆமாமா பெரிய இந்த வேலை.. வெட்டி முறிக்கிற வேலை..”  என்று அவளும் பதிலுக்கு பதில் பேசினாள்.. “ ஆமா டி வெட்டி முறிக்கிற வேலை தான்.. நான் வெட்டி குமிச்சு வைக்கிறேன் நீ வந்து அள்ளி போடு “ என்றான் நக்கலாக..        

அவளுக்கோ தன் கணவனது உதாசீனத்தை தாங்க முடியவில்லை போல.. உதட்டை கடித்து கொண்டு அமைதியாக தலை குனிந்து நின்று விட்டாள்.. அவளது அமைதி அவனை என்ன செய்ததோ “ என்ன மதி என்ன வேண்டும் “ என்று கேட்டபடி அவளிடம் வந்தான்..   

என்னவென்று அவள் கூறுவாள்… என் மனம் உன்னை தேடுகிறது என்று கூற முடியுமா??? அவளோ “ ம்ம் ஒன்றுமில்லை .. சும்மா தான்… “ என்றாள்..

“ சும்மாவா.. இல்லையே.. என் மதியை பார்த்தால் அப்படி தெரியவில்லையே.. உண்மையை சொல்லு டி இந்த அத்தானை தேடுனியா ?? ” என்று கேட்டான் உல்லாசமாக சிரித்தபடி..

“ நானா … ச்சே ச்சே.. நான் ஏன் உங்களை தேட போகிறேன்… இது என்ன லூசு மாதிரி கேள்வி “ என்று அவள் படபடத்தாள்.. “ பொறு பொறு.. நிதானம் மதி.. எதையோ மறைப்பவர்கள் தான் இப்படி படபட என்று  பேசுவாங்க.. சொல் உன் மனசு என்னை தேடுச்சு தானே… நீ தான் அதை மறைக்கிற “ என்றான் அவளிடம் மிகவும் நெருக்கமாக நின்றபடி..

“ அப்படி எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை “ என்று அவனை இடித்து கொண்டு கீழே சென்று விட்டாள்.. “ இனிமேல்  இவன் இருக்கும் பொழுது மேலே போகவே கூடாது..” என்று எண்ணி கொண்டாள்..

நாட்கள் ஆக ஆக வசுமதி என்னவோ மிகவும் தனிமையாய் உணர்ந்தாள்.. வீட்டில் தன்னை சுற்றி அத்தனை பேர் இருந்தும் ஏன் என்று கூற முடியாத ஒரு தவிப்பு உள்ளே தோன்ற ஆரம்பித்தது… அவளுக்கே முதலில் புரியவில்லை ஏன் தான் இப்படி இருக்கிறோம் என்று… கதிரவனோ வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தான்.. காலை இவள் கண் முழிக்கும் முன்னே கிளம்பி சென்று விடுவான்.. அவனுக்கு வேலை அப்படி இருந்தது.. ஆனால் அதெல்லாம் வசுமதியின் காதல் கொண்ட மனதிற்கு புரியவில்லை..

“ ஏன் இப்படி இவன் இருக்கிறான்??  நிஜமாவே அவ்வளோ வேலையா??” என்று யோசித்தவள் மீனாட்சிக்கு போன் செய்தாள்..

“ ஹலோ அண்ணி… நான் தான்.. இல்லை சும்மா தான் பண்ணேன் தூக்கமா ?? ”

…..

“ இல்லை அண்ணி… அண்ணன் வந்துட்டாங்களா.. சாப்டிங்களா ?? “

…..

“ ஹ்ம்ம் சரி அண்ணி.. இல்லை இன்னும் அவரு வரலை….சரி அண்ணி நீ அண்ணன கவனி.. “

இரவில் எப்பொழுதும் அவனோடு சிறு சண்டை போட்டு, ஏதாவது பேசி, சீண்டி, என்றே தூங்கி பழகியவளுக்கு இன்று தனியாக படுத்து இருப்பது அவளால் தாங்க முடியவில்லை.. “ இவ்வளோ நேரமா வீட்டுக்கு வர. அப்படி என்ன வேலை.. “ என்று யோசித்தவள் உறங்கமின்றி தவித்தாள்…

“அழகு அண்ணன் வீட்டுக்கு போய் அறை மணி நேரம் ஆச்சு.. ஆனால் இவங்க என்ன பண்ணுறாங்க இன்னும் ?? ” என்று யோசித்தவளுக்கு பதிலே கிடைக்கவில்லை.. புரண்டு புரண்டு படுத்தாள்.. ஆனால் அவள் கேள்விக்கு விடை தான் கிடைக்கவில்லை..

ஒரு வழியாக தன்னை மறந்து கண்கள் சொருகும் வேலையில் வந்து சேர்ந்தான் வசுமதியின் கதிரவன்… அறையின் கதவு திறக்கும் ஒலி கேட்கவுமே முழித்து விட்டாள் வசுமதி…

“ என்ன மதி இன்னும் தூங்காமல் இருக்க?? ” என்று கேட்டபடி உள்ளே வந்தவன் அவளது பதிலுக்கு கூட காத்திராமல் குளியல் அறைக்குள்  விட்டான்..

அவளுக்கோ அப்படியே அவனது சட்டையை பிடித்து உலுக்க வேண்டும் போல வந்தது.. “இவனை பார்க்காமல் இவ்வளோ நேரமா நான் துடித்து போய் இருக்கேன்.. ஒரு வார்த்தை ஒரு வார்த்தை முகம் குடுத்து பேசுகிறானா ??? “ என்று என்னும் பொழுதே அவளுக்கு அழுகை வேறு வந்தது… அவளை அறியாமல் அவளது மனம் “ ஒரு வேலை என்னை பிடிக்கமால்  போய்விட்டதா ?? ” என்று  நினைக்க தொடங்கியது..

ஒரு நிமிடம் அவள் யோசித்து இருக்கலாம் இப்படி தானே அவனும் உணர்ந்து துடித்து இருப்பான் அவள் ஒவ்வொரு முறையும் அவனை உதசீனபடுத்தும் பொழுதும் கோவமாக பேசும் பொழுதும் என்று.. ஆனால் அவள் காதல் கொண்ட மனம் இதை எல்லாம் யோசிக்க மறுத்து அவன் தன்னை உதாசீனபடுத்துகிறான் என்று மட்டுமே எண்ண தோன்றியது..

அவன் வரும் வரை காத்திருந்தாள்…

“ என்ன மதி தூங்கவில்லையா??? ” என்று கேட்ட படி வந்தான் முகத்தை துடைத்துக்கொண்டு,,

“ தூக்கம் வரவில்லை..” என்றாள் அவனது முகம் பார்க்காமல்..

“ சரி தூங்கு.. இப்படியே உட்கார்ந்து இருந்தால் தூக்கம் வராது ” என்று கூறியபடி மெத்தையில் விழுந்தான்..

“பால் கொண்டு வரட்டுமா “ என்றாள் கம்மி போன குரலில்..

“ இல்லை மதி சாப்பிட்டதே வயிறு திம் என்று  இருக்கு.. நீயும் தூங்கு “ என்று கூறி படுத்து விட்டான்… பாவம் அவனுக்கு அத்தனை அழுப்பு போல..

“ ஏன் இவ்வளோ நேரம்?? ” என்றாள் சற்று காட்டமாக..

“ ம்ம் மதி  என்ன கேட்ட ?? ” என்று கேட்டபடி அவள் பக்கம் திரும்பினான்..

“ ஓ !! நான் பேசுவது கூட காதில் விழவில்லையோ “ என்று முறைத்துகொண்டே “ ஏன் இவ்வளோ நேரம் என்று  கேட்டேன் “ என்றாள்..

“ வேலை மதி.. கணக்கு எல்லாம் பார்க்கிறோம் அதான்..” என்றான் சோம்பல் முறித்து கொண்டே..

“ என்ன வேலை அழகு அண்ணன் எல்லாம் அப்பயே வீட்டுக்கு வந்துட்டாங்க என்று அண்ணி சொன்னங்க “ என்றாள் அவனை குற்றம் சாட்டும்  குரலில்..

ஒரு நிமிடம் அவளது முகத்தையே உற்று பார்த்தவன் “ அழகு மீனாட்சி தனியா இருக்கும் என்று  கொஞ்சம் வேகமா கிளம்பிவிட்டான் “ என்றான் வெற்று குரலில்.. அவளுக்கோ இன்னும் கோவம் வந்தது.. ” அப்ப.. நானும் தானே இங்கு தனியா இருக்கேன்.. நீங்க ஏன் இவ்வளோ நேரம் ?? ” என்று கேட்டேவிட்டாள்..

“ ம்ச் தன்னால இங்க வேகமாய் வந்துவிட்டால் மட்டும் நீ அப்படியே என்னை கொஞ்சிட போகிற “ என்று முனுமுனுத்து “ அங்க மீனாட்சி தனியா வீட்டில் இருப்பதற்கும்  நீ இங்கு ரூமில தனியா இருக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லையா ?? ” என்று கேட்டான் கதிரவன்..

அவள் காதுகளில் அவன் முனுமுனுத்தது மட்டும் கேட்டுவிட்டு பதில் ஏதும் கூறாமல் கண்களை இருக மூடி படுத்து கொண்டாள்..  கதிரவன் தன்னை தவிர்கிறான்.. தன்னிடம் முகம் கொடுத்து பேசுவது இல்லை.. வீட்டில் இருப்பது இல்லை… தன்னிடம் இருந்து சிறுக சிறுக விலகி செல்கிறான்.. இது மட்டுமே அவள் மனதில் ஓடியது… அவள் பதில் எதுவும் கூறாததால் கதிரவனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் படுத்து உறங்கி விட்டான்..

கண்கள் மூடினாலும் உறக்கம் அவளோடு சண்டையிட்டு சென்று விட்டது.. கதிரவன் போனில் இருந்து வெளிச்சம் வரவும் என்ன என்று எடுத்து பார்த்தாள்.. அவன் எப்பொழுதும் இப்படி தான் மிகவும் அயர்ந்து போய் வந்து உறங்கும் சமயம் இரவில் போனை சைலண்டில் போட்டு விடுவான்.. இன்றும் அப்படி தான் செய்து இருந்தான்…

ஆனால் அதெல்லாம் அவளுக்கு மறந்துவிட்டது… போனை எடுத்து பார்த்தவள் ஒரு நிமிடம் திகைத்தாள்.. ஏனென்றால் போன் கீர்த்தி என்ற பெயரில் வந்தது..” கீர்த்தியா ?? யார் இது.. அதும் இந்நேரத்தில்…”  என்று யோசிப்பதற்குள் போன் கட்டாகிவிட்டது…

மீண்டும் ஒரு சிறு இடைவெளி விட்டு அதே கீர்த்தி என்ற பெயரில் இருந்து மிஸ்டு கால் வந்தது… “ யார் இது இந்த நேரத்தில்இப்படி பண்ணுகிறாங்க.. கீர்த்தி  என்று  வருகிறதே.. இது யார் புதுசா ??…” என்று அவள் யோசிக்கும் முன்னே ஒரு மெசேஜ் வந்தது

“உன் பர்ஸ் என் வீட்டுலையே வைத்துவிட்டு போய்விட்ட என் போன்ல பாலன்ஸ் இல்லை.. அதான் மிஸ்டு கால் விட்டேன்.. நீ லேட்டா போனதுக்கு உன் வைப் உன்னை திட்டுனாங்களா??? ” என்று கூறி இருந்தது..

அவ்வளோ தான் வசுமதிக்கு சர்வமும் தப்பாக புரிந்துகொண்டு விட்டாள்..  அவன் மேல் துளியும் அவளுக்கு சந்தேகம் இல்லை.. ஆனாலும் காதல் கொண்ட மனது அல்லவா.. பதறி துடித்தது..  “ யார் இது கீர்த்தி ??? இத்தனை நேரம் இவன் அங்கே தான் இருந்து இருக்கான்.. அதுவும் இந்த நேரத்தில் கீர்த்தி உரிமையா போன் செய்யும் அளவுக்கு என்ன உறவு ??  என்னை பற்றி பேசுகிற அளவுக்கு யார் இந்த அளவுக்கு உரிமை குடுத்தது…” என்று தவித்தாள்..

கண்கள் மூட வில்லை… ஒரு நிமிடம் கூட உறக்கமில்லை… யார் இந்த கீர்த்தி ?? இந்த கீர்த்திக்கும் கதிரவனுக்கும் என்ன சம்பந்தம்..” இந்த கேள்விகளே அவளை துரத்தின..  அவளை அறியாமல் அவள் தூங்கும் பொழுது கடிகாரம் ஐந்து என்று காட்டியது..

அப்பொழுதான் உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பாள் கதிரவன் முழித்து விட்டான்.. மெல்ல அவள் உறக்கம் கலைக்காமல் எழுந்து சென்று குளித்து விட்டு வந்தவன் தன் போனை எடுத்து பார்த்தான்.. அதில் கீர்த்தியிடம் இருந்து மூன்று  மிஸ்டு கால் மற்றும் ஒரு மெசேஜ் வந்து இருந்தது..

வசுமதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீர்த்திக்கு போன் செய்தான்

“ ஹலோ கீர்த்தி போன் செய்து இருந்தியா?? ”

இவன் கீர்த்தி என்று சொல்லவுமே வசுமதி முழித்து விட்டாள் ஆனால் கண்கள் திறக்கவில்லை.. அவளுக்கு தெரியவில்லை கதிரவன் அவளது முகத்தை பார்த்து கொண்டே தான் பேசுகிறான் என்று..

“ ஹ்ம்ம் இப்பதான் எழுந்தேன் நீ என்ன அதுக்குள்ள எந்திருச்சிட்டியா ?? என்ன அவசரம்.. ராத்திரி எவ்வளோ நேரம் முழிச்சு இருந்த.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு..” என்று அவன் கூறி கொண்டு இருக்கும் பொழுதே

“ என்ன கரிசனம்.. இங்கு கட்டின பொண்டாட்டி  குத்து கல்லு மாதிரி பக்கத்தில் படுத்து தூக்கம் வராமல் தவித்துக்கொண்டு இருக்கிறேன் அதெல்லாம் இவன் கண்ணனுக்கு தெரியவில்லை  “ என்று மனதிற்குள் புலம்பினாள்.. அது அவள் முகத்திலும் தெரிந்தது..

அவளது முக மாற்றத்தை எல்லாம் கவனித்து கொண்டு தான் இருந்தான் கதிரவன்.. அவன் முகத்தில் ஒரு திருப்தியான முறுவல் தோன்றியது..

“ ஹே !! கீர்த்தி இல்லை இல்லை சொல்லு லைன்ல தான் இருக்கேன்..”

….

“ இப்பயா ?? இப்பதான் பொழுது விடிந்து இருக்கு.. ஹ்ம்ம் அது சரி நேற்று தூங்கும்  வரைக்கும் உன் கூட தான இருந்தேன்.. சரி சரி கத்தாதா.. தோப்பிற்கு போயிட்டு அப்படியே வருகிறேன் சரியா “ என்று கூறி போனை வைத்தவன் சிறிது நேரத்தில் கிளம்பி சென்று விட்டான்..

வசுமதிகோ மனதில் இன்னது என்று விளக்க முடியாத ஒரு உணர்வு.. யார் இந்த கீர்த்தி?? இதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் போல இருந்தது…  யாரிடம் கேட்பது… கதிரவனிடம் தானே கேட்க முடியும்.. அவன் வரும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்து காத்தும் இருந்தாள்.. ஆனால் ஒரு ஒரு நிமிடத்தையும் நகட்டுவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது..

மாலை நேரம் அவள் தோட்டத்தில் இருந்தாள்… கதிரவன் போன் பேசிக்கொண்டே வந்தான்… அவன் வருவதை கண்ட வசுமதி “ உன்னோடு பேசவேண்டும் “ என்பது போல பார்த்தாள்..

அவனும் அதை புரிந்து கொண்டவன் போல “ என்ன மதி இங்க இருக்க ?? என்ன எதுவம் என்னிடம் பேச வேண்டுமா ?? ” என்றான் வேறு எங்கோ பார்த்தப்படி..

“ என் முகத்தை பார்த்து கூட பேச முடியாதோ ?? “ என்று கருவிக்கொண்டு “ யார் அவள் ?? ” என்றாள் அவன் கண்களையே பார்த்து.. அவனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.. ஒரு நிமிடத்தில் பின் சுதாரித்து கொண்டான்.. உள்ளே அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

“ எவள்?? ” என்றான் புரியாத பாவனையில்..

“ ம்ம்ச் ஒன்றும் புரியாத மாதிரி நடிக்காதிங்க.. அதான் .. அந்த கீர்த்தி.. அவள் யார் ?? ”

“ ஓ !! அவளா !!! அவள் “ என்று கூறும் பொழுதே காமாட்சி அங்கு வந்து சேர்ந்தார்..

“ என்ன இரண்டு பேரும் இங்க பேசிட்டு இருக்கீங்க.. சரி சரி கதிரவா காப்பி கொண்டு வரவா ?? ” என்றார்

“ இல்லை மா.. கீர்த்தி வீட்டில் இப்பதான் குடித்துவிட்டு வந்தேன்.. இப்ப குளித்துவிட்டு மறுபடியும் அங்கதான் போக வேண்டும்… “ என்றான் வசுமதியை ஓராமாக பார்த்துக்கொண்டு..

அவளுக்கோ முகம் அப்படியே இருண்டு விட்டது… ஆனால் இதை எல்லாம் கவனிக்காத காமாட்சி “ ஓ !! கீர்த்தி போடிக்கு வந்தாச்சா ?? பார்த்து எத்தனை நாள் ஆகிறது  உனக்கு தெரியுமா வசும்மா கீர்த்தி சின்ன வயதில் இருந்தே நம்ம கதிர் கூட தான்.. “ என்று கூறி கொண்டே “சரி சரி சீக்கிரம் இரண்டு பேரும் உள்ள வாங்க  “ என்று கூறி கொண்டே உள்ளே சென்று விட்டார்..

“ யார் கீர்த்தி ?? ” என்றாள் மீண்டும்..

“ கீர்த்தியா ??? என் சின்ன வயசு பிரின்ட்… ரொம்ப வருஷம் கழித்து இப்பத்தான் குடும்பத்தோட இங்கு வந்து இருக்காங்க.. நம்ம கணக்கு வழக்கு எல்லாம்  சரி செய்வது கீர்த்தியின் வேலை செம டலேன்ட்.. செம ஸ்மார்ட்..” என்றான்

“ ஓ !! ” என்று கூறிவிட்டு அமைதியாக உள்ளே சென்று விட்டாள்..

வீட்டிற்கு வந்து குளித்து விட்டு உடை மாற்றி சென்றவன் தான்.. இரவு உண்ணவும் வரவில்லை… இவளும் காத்து காத்து இருந்தாள்… வாசல் பக்கம் பார்க்கவும், மணியை பார்க்கவும் இப்படியே பொழுது கழிந்தது… “ அப்படி என்ன தான் வேலையோ.. எனக்கு வேறு பசிகிறது” என்று முனங்கியபடி அமர்ந்து இருந்தாள்..

நேரம் நேரம் ஆக ஆக அவளது பொறுமை குறைந்து போனது தான் மிச்சம்.. முடிவாக அவனுக்கு போன் செய்யலாம் என்று போன் போட்டாள்.. அந்தபக்கம்  “ அய்யோ போதும் போதும்.. இதற்கு  மேல் சாப்பிட்டால்  அவ்வளோ தான்” என்று கதிரவன் கூறிக்கொண்டே “ ஹலோ சொல்லு வசுமதி “ என்றான்..

இது ஒன்றே அவளுக்கு போதாதா முதல் முறையாக வசுமதி என்று அழைக்கிறான்.. “ இதுக்கு என்ன அர்த்தம் ?? அவன் மனசளவுல என்னை விட்டு விலகிட்டான்..”  அப்படியே சிலையென அமர்ந்துவிட்டாள்..

“ ஹலோ மதி… மதி லைன்ல இருக்கியா ?? ”

“ ம்ம் “

“ சரி நான் வரதுக்கு லேட் ஆகும்.. நீ சாப்பிட்டுவிட்டு தூங்கு “ என்று கூறி அவள் பதில் கூறுமுன் வைத்துவிட்டான்..                                                       

இதற்குமேல் வசுமதிக்கு உறக்கம் வருமா என்ன ??? அவ்வளோதான்… என்னென்னவோ நினைவு வந்தது… அய்யோ என்று கத்தி அழ வேண்டும் போல வந்தது.. முகம் தெரியா அந்த கீர்த்தி மீது கோவம் கோவமாக வந்தது.. அப்பொழுதுதான் உணர்ந்தாள் கதிரவனை தான் எவ்வளோ தூரம் நேசிக்கிறோம் என்று.. “ என் கதிர்.. என் கதிர்.. நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம்..” என்று மீண்டும் மீண்டும் கூறி கொண்டாள்..

ஏனோ அவள் அறியாமல் அழுகை வந்தது.. எங்கே கதிரவன் தன்னை விட்டு விலகி விடுவானோ என்று ஆச்சம் தோன்றியது… “ கதிர் ப்ளீஸ் என்னை மன்னித்துவிடுங்கள் இப்படி தானே நீங்களும் துடித்து போய் இருப்பிங்க.. நான் தான் உங்களை புரிந்துகொள்ளவில்லை … கதிர் என்னை விட்டு ஏன் விலகி விலகி போறிங்க??”  என்று அழுது  துடித்தாள்…

அவன் அருகில் இருந்து அன்பு மழை பொழியும் பொழுது எல்லாம் இவள் அவனை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டு இன்று அவனது சிறு விலகலை கூட அவளால் தாங்க முடியவில்லை.. ஏற்கனவே மனதில் சுமை வேறு.. உறக்கம் இல்லாமல் இருந்தது வேறு… அழுது அழுது கறைந்தது, கதிரவன் தன்னை புறக்கணிக்கிறான் என்ற வேதனை என்று  அனைத்தும் சேர்ந்து வசுமதிக்கு காய்ச்சல் வந்து விட்டது…

உடல் தகித்தது.. உள்ளமோ தன்னவனை நாடியது.. எழுந்து நடக்க கூட முடியவில்லை.. கண்கள் கண்ணீரில் நிறைந்தன….

“ கதிர் ஐ லவ் யூ…. “ என்று  வசுமதியின் மனம் கூறி கொண்டே இருந்தது மீண்டும் மீண்டும்…              

 

Advertisement